Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விட்டு விடுதலையாகி...
விட்டு விடுதலையாகி...
விட்டு விடுதலையாகி...
Ebook188 pages1 hour

விட்டு விடுதலையாகி...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனுபமா வீட்டில் மதிய நேரத்து அரட்டைக் கச்சேரி மிக்சரும் உருளைக்கிழங்கு சிப்சும் பக்கத்துணையாக சேர்ந்து கொள்ள களை கட்டியிருந்தது. சினிமா, அரசியல் என்று நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள். சூடாக டீயும், ஜில்லென்று ஆப்பிள் ஜுசும் குடிக்கக் குடிக்கச் சுகமாக இருந்தது.
 திடீரென மணியைப் பார்த்த லைலா, "நான் கிளம்பறேன் அனுபமா. பசங்க வர்றதுக்குள்ள டிபன் பண்ணி வைக்கணும்" என்றபடி எழுந்தாள்.
 "என்னப்பா கிளம்பறே? உட்காரு போகலாம்..." அனுபமா அவளைத் தடுத்தாள்.
 "நான் உட்கார முடியாது அனுபமா உன் பிள்ளைங்க தங்கமாச்சே நான் பெத்து வைச்சிருக்கேனே வானரங்க ரெண்டு வரும் போதே பசிக்குதுன்னு பிரம்ம ராட்சசனுங்க மாதிரி கத்திக்கிட்டு வரும். டிபன் மட்டும் தயாரா இல்லைன்னு வையேன். அவ்வளவுதான்... ரெண்டும் வீட்டையே தும்சம் பண்ணிடும்" லைலா அலுத்துக் கொண்டாள்.
 "எங்க வீட்டுல மட்டும் என்ன வாழுது? அதே கதைதான் அதிலயும். சின்னவன் இருக்கான் பாரு கோபம் வந்திச்சின்னா வீட்டையே கொளுத்திடுவான் படவா..." அலுத்துக்கொள்வது போல பெருமைப்பட்டாள் மாதவி.
 "அப்படியா? என் பிள்ளைங்க நில்லுன்னா நிற்கும்... உட்காருன்னா உட்காரும்... என் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாது. வளர்க்கும் போதே ஆரம்பத்தில் விட்டுக் கொடுத்திடக் கூடாது. அப்பவே நம்ம கைக்குள்ள பிள்ளைங்களை வைச்சிக்கணும். அப்பதான் வளர்ந்து வாலிபராகி கல்யாணம் ஆனாலும் நம்மை மதிப்பான் நாம சொல்றதைக் கேட்டுக்குவான். எல்லாத்திலயுமே பின்னாடி வர்றதைப் பத்தி யோசிக்கணும்." அனுபமா உதிர்த்த அனுபவ மொழிகளைக் கேட்டு சினேகிதிகள் வாயைப் பிளந்தார்கள்அடேயப்பா... என்னமா யோசிக்கறே? - எனக்கு இப்படியெல்லாம் தோணாது. சும்மா வறட்டுத் தவளையாட்டம் கத்திக்கிக்கிட்டு கிடப்பேனே தவிர அறிவு பூர்வமா எதையும் செய்யமாட்டேன்..." என்றாள் மாதவி.
 "உன்கிட்டே நிறைய கத்துக்கணும்னு நினைக்கிறேன். உனக்கு இந்த சாமர்த்தியமெல்லாம் உங்கம்மாக்கிட்டே இருந்துதான் வந்திருக்கணும். நீயே இப்படி இருக்கே... உங்கம்மா எப்படி இருப்பாங்க?" லைலாவின் குரலில் வியப்பு.
 அனுபமா நக்கலாக சிரித்தாள். "யாரு எங்கம்மாவா? அது வெறும் கத்தி தெண்டம்... எங்கண்ணனை வளர்க்கத் தெரியாம வளர்த்திட்டு இன்னிக்கு அவதிபடறா அவனுக்கு அவன் பெண்டாட்டி சொல்றதுதான் வேதம். "போடு தோப்புக்கரணம்னு அவ சொன்னா, இவன் எண்ணிக்கோ அப்படின்னு போடக்கிளம்புவான் மாட்டுப் பெண்ணைப் பார்த்தா எங்கம்மா நடுங்கிடுவா..."
 "உங்கண்ணனாவது - தோப்புக்கரணம் தான் போடறார். உங்க வீட்டுக்காரர் நீ கிழிச்ச கோட்டைத் தாண்டவேமாட்டார் போலிருக்கே..." மாதவி சொன்னாள்.
 "பின்னே? அவரை அப்படி வைச்சிருக்கேனில்லே? நிமிர்ந்து பார்த்தாலே மனுஷன் நடுங்கிடுவாரு. அதுக்கெல்லாம் நிறைய புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் வேணும். உங்களுக்கெல்லாம் அது கிடையாதுன்னு எனக்குத் தெரியும்." அனுபமாவின் குரலில் அலட்சியம்.
 "அது என்னவோ வாஸ்தவம்தான் இல்லைன்னா இப்பவும். மாமியாரையும் - மாமனாரையும் வீட்டுல வைச்சிக்கிட்டிருப்பேனா?" லைலா அலுத்துக் கொண்டாள்.
 "நீ ஏமாளி... இன்னும் எடுபிடி வேலை செய்துக்கிட்டிருக்கே நான் என்ன செய்தேன் தெரியுமா? கல்யாணமான ராத்திரியே தனிக்குடித்தனம் வைக்கணும்னு சொல்லிட்டேன். அவரு கொஞ்சம் தயங்கினப்பா நாளைக்கு மின்ன நமக்குன்னு பசங்க பிறந்தா என்ன பண்றது? அதுங்களுக்கு இப்பவே நாலு காசு சேர்த்தாத்தான் உண்டுன்னு வேப்பிலை அடிச்சிட்டேனில்லே? அப்பறம் என்ன? அவரு ஒத்துக்கிட்டாரு கல்யாணமாகி பத்து வருஷமாகுது. இன்னி வரைக்கும் எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். வருஷத்துக்கு ஒரு தரம்குடும்பமா ஊருக்குப் போவேன். நிறைய ஸ்வீட்டு, பழம்னு வாங்கிட்டுப் போய் குடுப்பேன். புடவை, வேட்டின்னு எடுத்துக்கிட்டு போய் காலில் விழுந்து கையில ரெண்டாயிரம் ரூபாய் குடுத்து நைஸ் பண்ணிட்டு வந்திடுவேன். அவருக்கும் சந்தோஷம் அவங்களுக்கும் இதுவாவது பண்றாளேன்னு திருப்தி..." அனுபமாவின் குரலில் கர்வம்.
 "அடியே உன் காலைக் காட்டுடி... தொட்டுக் கும்பிட்டுக்கறேன். 'அப்பவாவது எனக்கு புத்தி வருதா பார்க்கறேன்..." என்று மாதவிகை கூப்பித் தொழுதாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223325819
விட்டு விடுதலையாகி...

Read more from Megala Chitravel

Related to விட்டு விடுதலையாகி...

Related ebooks

Reviews for விட்டு விடுதலையாகி...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விட்டு விடுதலையாகி... - Megala Chitravel

    1

    விடியற்காலை நாலரை மணிக்கு பின்பக்க அறையிலிருந்து வெளியில் வந்தாள் லலிதா. சிலு சிலுவென குளிர்க்காற்று உடம்பைத் தடவிய போது மெல்லிய குறுகுறுப்பான சுகம் உடலில் பரவியது. நிமிர்ந்து பார்த்தாள். தூரத்தில் மரங்கள் போல நிமிர்ந்து நின்றிருந்த அடுக்கு மாடி வீடுகளில் இன்னும் வெளிச்சப் பூக்கள் பூக்க ஆரம்பிக்கவில்லை. கூப்பிடு தூரத்திலிருந்த பெருமாள் கோவிலிலிருந்து வந்த சுப்ரபாதத்தின் இனிமையில் கொஞ்ச நேரம் மனம் லயித்தது. கொஞ்ச நேரம் நின்றவள் நேரம் ஆகி விடக் கூடாதே என்று குளித்து பூஜை முடித்து சமையலறைக்குள் நுழைந்தாள்.

    ஏழு மணி அடிக்கும் போது காலை பலகாரமும் மதிய சாப்பாடும் தயாராகி விட்டது. மகனுக்கும் பேரன்களுக்கும் ஹாட்கேஸ்களில் சாப்பாட்டை வைத்து மூடும் போது கூடத்திலிருந்து இடியோசை கேட்டது.

    எல்லாரும் எழுந்திரிச்சி கால் மணி நேரமாகுது. இன்னும் டீ வந்த பாட்டைக் காணோம். ஒரு நாளைப் போல இப்படியே நடக்குதே... என்ன ஏதுன்னு உங்கம்மாவைக் கேக்கமாட்டீங்களா?

    அவசரமாக டீ கலந்து எடுத்துக்கொண்டு போன போது, என்னம்மா இது? உங்கக்கூட தினமும் இதே தொல்லையா போச்சே... அவளுக்கு எழுந்திருக்கும் போதே டீ வேணும்னு உங்களுக்குத் தெரியுமில்லே? தினமும் அவ கேட்டதுக்கப்பறம் தான் டீ போட்டுத் தரணும்னு ஏதாவது விரதமா? ஏன் நீங்களா போடமாட்டீங்களா? தினமும் இதே இம்சைதான் எனக்கு என்று மகன் சுகதேவன் கடித்தான்:

    கணவன் அவனுடைய அம்மாவைத் திட்டுவதைக் கேட்டு சந்தோஷப்படுவதைக் காட்டிக்கொள்ளாமல் டீ குடித்துக் கொண்டிருந்தாள் அமலா.

    இனிமே சீக்கிரமே டீ போட்டுடறேன்யா... என்று முணுமுணுத்துக் கொண்டே காலி டம்ளர்களை வாங்கும் போது பெரிய பேரன் குமணன் தன் வேலையைக் காட்டினான்.

    அம்மா... பாருங்கம்மா இந்த பாட்டி பண்றதை... தினமும் பருப்பும் காயும் போட்டு கூட்டுதான் பண்ணித்தரா... பார்த்தாலே குமட்டுதும்மா... வேற பண்ணித் தரச் சொல்லுங்கம்மா...

    அதைக் கேட்டதும் சின்னவன் குகன் சும்மா இருப்பானா?

    அம்மா... சாயங்கால ஸ்னாக்சுக்கு பாட்டி எப்பாபாரு உப்புமாதான் பண்றா. உருளைக்கிழங்கு சிப்ஸ் பண்ணச் சொல்லுங்க வரவர பாட்டி சமையல் நல்லாவே இல்லைம்மா...

    அமலா தன் திருவாயைத் திறந்தாள்.

    "கேட்டீங்களா பசங்க சொல்றதை? பத்து பசங்களா இருக்கு? தனித்தனியா செய்ய முடியலைன்னு - சொல்றதுக்கு? கருவேப்பிலை கொத்து மாதிரி ரெண்டுதானே இருக்கு? பெத்த தகப்பன் மகராசன் நீங்க இருக்கீங்க... வேண்டிய சாமானை மானாவாரியா வாங்கிப் போட்டிருக்கீங்க. அதை அடுப்பில ஏத்தி இறக்கறதுக்கு உங்கம்மாவுக்கு வலிக்குது. இதெல்லாம் நாம சொல்லித்தானா தெரியணும்? எல்லாம் என் தலையெழுத்து உங்களையெல்லாம் சொல்லி என்ன பண்றது?

    இனிமே என் பசங்களுக்கு நானே சமைச்சிக்கறேன். அதுகளுக்காக யாரும் கஷ்டப்பட வேணாம்."

    பொண்டாட்டியின் குரலில் அழுகையின் சாயல் தெரிந்ததுமே சுகதேவன் பதறிப் போனான்.

    இதோ பாரு அமலா சரியான அசடா இருக்கியே நீ? பேச்சு பேச்சா இருக்கும் போதே யாராவது அழுவாங்களா? நீ எந்த வேலையும் செய்ய வேணாம். அம்மா எதுக்கு இருக்காங்க அவங்க பார்த்துக்குவாங்க சும்மாயிரு

    பார்த்துக்குவாங்க அவங்க பார்த்த லட்சணத்தைதான் பார்த்தீங்களே... என்னால முடியலைன்னு நான் சும்மா இருந்ததுக்குதான் என் பிள்ளைகளுக்குப் பிடிக்காததை செய்து கொடுத்து பட்டினி போட்டு கொல்லப் பார்த்திட்டாங்களே... வேணாம் சாமி... வேணாம் முடியுதோ இல்லியோ என் பிள்ளைகளுக்கு இனிமே நானே சமைச்சி குடுத்திடறேன் காலையில எதுக்கு இந்த வாதாட்டம்? விடுங்க... டேய் என்னடா வாயை பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க? எட்டு நாற்பதுக்கு ஸ்கூல் பஸ் வந்திடுமில்லே? போய் குளிங்க...

    அமலா புலம்பிக்கொண்டே உத்தரவிட்டாள்.

    சுகதேவன் பொறுமையிழந்தான். ஏம்மா இவ ரெண்டு சிசேரியன் பண்ணின உடம்புக்காரின்னு உங்களுக்குத் தெரியாதா? கஷ்டமான வேலை செய்து இவளுக்கு ஏதாவது வந்துட்டா என்ன பண்றது? பசங்க இஷ்டப்பட்டதை செய்து குடுத்திட்டுப் போங்களேன். அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்? உங்கக் கூட்டு எனக்கே குமட்டுது. அப்பறம் பசங்களுக்கு எப்படி இருக்கும் நான் என்ன பண்றதுன்னு வேற வழியில்லாம சகிச்சிக்கறேன். என் பிள்ளைங்க எதுக்கு சகிச்சிக்கணும்? ஒழுங்கா, அக்கறையா? சமைக்கப் பாருங்க. டேய்... எழுந்து போய் குளிங்கடா... கிளம்பற நேரத்தில் பையைக் காணோம் சாக்கைக் காணோம்னு கூச்சல் போட்டு எல்லாரையும் டென்ஷனாக்கிடுவீங்க. குளிச்சிட்டு வந்து டிபன் சாப்பிடணும். ஓடுங்க... ஓடுங்க...

    குமணன் உச் கொட்டினான். டிபனு பொல்லாத டிபனு அதே இட்லியும் தேங்காய் சட்னியும் தானே... ஸாரிப்பா... எனக்கு வேணாம்...

    நீ சாப்பிடாம இருந்தா, எனக்கு மட்டும் அந்த இட்லிக் கல்லு வேணுமா? போடா... என்று குகன் சொன்னான்.

    அமலா தலையில் கை வைத்துக் கொண்டாள்.

    அடேய் ஏன் இப்படி ஒரு நாளைப் போல வீட்டை குருட்சேத்திரம் ஆக்கிறீங்க? நல்லா பாக்கிறதைப் பாரு... என்னங்க என்னால உங்கம்மா படுத்தற பாட்டைத் தாங்க முடியலீங்க இனிமே நானே பார்த்துக்கறேன்.

    லலிதா மென்று விழுங்கியபடியே, இன்னிக்கு உருளைக்கிழங்கு குருமாவும் பூரியும் செய்திருக்கேன். என்று சொன்னாள்.

    அதற்கும் அமலா பாய்ந்தாள்.

    இதை முன்னாலயே சொல்லித் தொலைக்கறதுக்கு என்ன கேடு? வாயில கொழுக்கட்டையா வைச்சிருந்தீங்க? சே... உங்களை பாம்புன்னு தாண்டவும் முடியலை... பழுதைன்னு தள்ளி விடவும் முடியலை. டேய்... பூரியாம் இன்னிக்கு ஓடிப்போய் குளிச்சிட்டு வாங்கடா... நான் பையை ரெடி பண்றேன்... என்று கத்திக்கொண்டு தானும் அவர்களோடு உள்ளே ஓடினாள்.

    "ஏம்மா... உங்களுக்கு வயசாகுதேத் தவிர புத்தி வேலையே செய்யறதில்லை. இப்ப சொன்னதை அப்பவே சொல்லியிருந்தா வீண் பிரச்சினை வராது இல்லே? தப்பையெல்லாம் நீங்க பண்ணிட வேண்டியது. அப்பறம் பொண்டாட்டிக்கு பையன் பரிஞ்சிக்கிட்டு பேசறான்னு ஊரெல்லாம் போய் சொல்லிக்கிட்டுத் திரிய வேண்டியது

    அடுத்த ஜென்மத்தில் இப்படி ரெண்டு பக்கமும் உதை வாங்கற மனிதனா பிறக்கக்கூடாது. இதைவிட நாயா பொறந்து நாலு தெரு சுத்தி நாற் சந்தியில தின்னுட்டுப் போய் சேரலாம்." சுகதேவன் கத்தினான்.

    என்னங்க... இங்க கொஞ்சம் வாங்க... இந்த சின்னவன் டையை கட்டிலுக்கு அடியில தூக்கி எறிஞ்சிட்டு சிரிக்கிறான். வந்து எடுத்துக் குடுங்க அப்பறமா போய் உங்கம்மாவை கொஞ்சுங்க...

    அமலா கூப்பிட்டதும் சுகதேவன் ஓடினான்.

    லலிதாவுக்கு அவன் மீது கோபமே வரவில்லை.

    சிரித்துக்கொண்டே சமையலறைக்குப் போய் மற்ற வேலைகளை கவனிக்கலானாள் கூடத்தில் புறப்பட்ட கூச்சல் சாப்பாட்டு மேசையில் முடிந்தது. ஒரு வழியாக பிள்ளைகள் புறப்பட்டுப் போனார்கள். சுகதேவனும், அமலாவும் குளித்து பலகாரம் சாப்பிட்டார்கள். துவைக்க வேண்டிய துணிகள் மலை போல ஒரு பக்கமும், கழுவ வேண்டிய பாத்திரங்கள் மறுபக்கமும் குவிந்து கிடந்தது. எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து துணிகளைத் துவைத்து காய வைத்து நிமிர்ந்த போது மணி மதியம் இரண்டாகி விட்டிருந்தது. காலையில் குடித்த காபி ஆவியாகி விட்டிருந்தது. பசி எடுத்தாலும் சாப்பிடத் தோன்றவில்லை. தட்டில் சோற்றைப் போட்டு ஜில்லென தயிரும் தண்ணீரும் ஊற்றி உப்பு போட்டு இரண்டு கவளம் விழுங்குவதற்குள் அமலா அறையிலிருந்து வெளியே வந்தாள்.

    மிளகாய்த்தூள் அரைக்கணும்னே நினைப்பு வராதா? சாப்பிடறதுக்கு முன்னால மிளகாயையும் கொத்தமல்லியையும் காயப் போட்டிட்டு வந்திருக்கலாமில்லே? எல்லாம் நான் தான் நினைப்பூட்டணுமா? சரி... சரி... சீக்கிரமா சாப்பிட்டுட்டு மாடிக்குப் போங்க...

    அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. எடுத்து - வைத்துவிட்டு எழுந்து மாடிக்குப் போனாள். ஒரு கையில் மிளகாய் பொட்டலம், மறுகையில் கொத்தமல்லி பொட்டலம்... மூச்சிறைத்தது கையோடு கொண்டு போயிருந்த தினத்தாளை விரித்து இரண்டையும் கொட்டிப் பரத்தினாள் மிளகாய் கட்டி வந்திருந்த தாள் கண்ணில்பட்டது. எடுத்துப் பிரித்தாள்.

    யாரோ ஒரு தமிழறிஞரின் பேச்சு அதில் இருந்தது.

    விட்டு விடுதலையாகின்னு பாரதி சொன்னானில்லே? அதுக்கு எத்தனையோ பொருளிருக்கு... இளைஞர்கள் கூடா நட்பை விட்டு விடுதலையாகணும்... ஆண்கள் கோபத்தை விட்டு விடுதலையாகணும்... பெண்கள் பேராசையை விட்டு விடுதலையாகணும் வயதானவர்கள் அலுப்பையும், சலிப்பையும் விட்டு விடுதலையாகணும். இது மேலோட்டமான பொருள். இதனுள் எத்தனையோ உட்பொருள் உள்ளது..." அதற்குமேல் காகிதம் பாதியாக கிழிக்கப்பட்டிருந்தது. லலிதா கொஞ்சநேரம் அதற்கு மேல் என்ன இருந்திருக்கும் என்று யோசித்தாள். அந்த தமிழறிஞர் என்ன சொல்லி இருப்பார் என்பது தெரியவில்லை.

    லலிதா மீண்டும் ஒரு முறை படித்தாள், "விட்டு விடுதலையாகி இதற்கு லலிதாவின் மனதில் வரிவரியாக கவிதை ஓடியது. விட்டு விடுதலையாகி அப்படின்னா,,,? ஜிலுஜிலுப்பான தரையில் கால் பாவாமல் ஓடறதா ரெக்கை ரெண்டையும் விரிச்சி நீல வானத்தில் பறக்கறதா? இல்லைன்னா ஆழ்கடலுக்குள்ள சத்தம் காட்டாம மீனாய் நீந்தறதா? இதுல எதா இருந்தாலும் நினைக்கும் போதே சந்தோஷமாக இருக்கே... லலிதாவின் மனதில் அப்போதே தரையில் ஓடி வானத்தில் பறந்து, நீரில் நீந்துவது போல் இருந்தது. அவளை அமலாவின் குரல் நினைவுலகிற்கு இழுத்து வந்தது.

    இன்னுமா மிளகாய் காயலை? மாடியில் என்ன நிலாவா காயுது கரண்ட் எப்ப இருக்கும்னு சொல்ல முடியலியே... சீக்கிரமா போய் அரைச்சிக்கிட்டு வர்ற வழியைப் பாருங்க... கிழவி என்று அவள் சொன்னதும் காதில் விழுந்தது. எதையும் காட்டிக்கொள்ளாமல் இரண்டு முறை மேலும் கீழும் இறங்கி அரவை நிலையத்துக்குப் போய் மிளகாய் தூள் அரைத்து வந்து ஆறவிட்டு டப்பாவில் கொட்டி மூடி வைத்த போது மீண்டும் அமலா கூப்பிட்டாள்.

    இந்தாங்க... உங்க பொண்ணு உடனே வரச் சொன்னா போ பார்த்திட்டு வாங்க. இல்லைன்னா நான்தான் உங்களை அனுப்பலைன்னு உலகம் பூரா இருக்கிற உங்க சொந்த ஜனம் முழுசுக்கும் போன் பண்ணிடுவா போங்க... போங்க...

    ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு மகள் வீட்டுக்குப் போகக் கிளம்பி வெளியே வந்து கேட்டைத் திறக்கும் போது அமலாவின் தம்பி சிரித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

    2

    அனுபமா வீட்டில் மதிய நேரத்து அரட்டைக் கச்சேரி மிக்சரும் உருளைக்கிழங்கு சிப்சும் பக்கத்துணையாக சேர்ந்து கொள்ள களை கட்டியிருந்தது. சினிமா, அரசியல் என்று நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள். சூடாக டீயும், ஜில்லென்று ஆப்பிள் ஜுசும் குடிக்கக் குடிக்கச் சுகமாக இருந்தது.

    திடீரென மணியைப் பார்த்த லைலா, நான் கிளம்பறேன் அனுபமா. பசங்க வர்றதுக்குள்ள டிபன் பண்ணி வைக்கணும் என்றபடி எழுந்தாள்.

    என்னப்பா கிளம்பறே? உட்காரு போகலாம்... அனுபமா அவளைத் தடுத்தாள்.

    நான் உட்கார முடியாது அனுபமா உன் பிள்ளைங்க தங்கமாச்சே நான் பெத்து வைச்சிருக்கேனே வானரங்க ரெண்டு வரும் போதே பசிக்குதுன்னு பிரம்ம ராட்சசனுங்க மாதிரி கத்திக்கிட்டு வரும். டிபன் மட்டும் தயாரா இல்லைன்னு வையேன். அவ்வளவுதான்... ரெண்டும் வீட்டையே தும்சம் பண்ணிடும் லைலா அலுத்துக் கொண்டாள்.

    எங்க வீட்டுல மட்டும் என்ன வாழுது? அதே கதைதான் அதிலயும். சின்னவன் இருக்கான் பாரு கோபம் வந்திச்சின்னா வீட்டையே கொளுத்திடுவான் படவா... அலுத்துக்கொள்வது போல பெருமைப்பட்டாள் மாதவி.

    "அப்படியா? என் பிள்ளைங்க நில்லுன்னா நிற்கும்... உட்காருன்னா உட்காரும்... என் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாது. வளர்க்கும் போதே

    Enjoying the preview?
    Page 1 of 1