Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

போய் வா சினேகிதி..!
போய் வா சினேகிதி..!
போய் வா சினேகிதி..!
Ebook149 pages54 minutes

போய் வா சினேகிதி..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏண்டி இத்தனை நேரமாகக் காத்திருக்கிறோம்? எங்கேடி போய் சுத்திட்டு வர்றே? இந்தப் பனிக்காலத்தில் குழந்தையையும் கூட அழைச்சிக்கிட்டு போயிருக்கியே... அறிவு வேணாம் ஒரு பொம்பளைக்கு? போனதரம் பார்த்தது குழந்தை ரொம்ப இளைப்பா தெரியறானே... ஒழுங்கா சாப்பாடு போடறியா இல்லையா?"
 கேட்டைத் திறந்து பத்து அடி நடந்து பூட்டைத் திறந்து முன்னே இத்தனை பேச்சையும் எப்படி பேச முடிகிறது என்று சீதாவுக்கு வியப்பாக இருந்தது.
 "வாயைத் திறந்தாளா பாருங்க... பெரிய மகாராணி. பேசினா முத்து கொட்டிடும்... நம்மகூட குழந்தையையாவது ஒட்ட விடறாளா பாருங்க. நம்மைப் பார்த்ததுமே தாத்தா பாட்டின்னு குழந்தை என்னிக்காவது ஒட்டுதலா கிட்டே ஓடி வருவதா பாருங்க... எதைக் குடுத்தாலும் முதலில் அவ முகத்தையில்ல பாக்குது... வாங்கிக்கன்னு அவ சொன்னதுக்கப்புறம்தானே விரலாலக்கூடத் தொடுது. எல்லாம் நம்ம தலையெழுத்து. கூட வந்து இருடின்னு சொன்னா கேட்டாத்தானே? எட்டு வருஷமா இதையெல்லாம் தாங்கிக்கணும்னு விதியிருக்கு..."
 சீதா எதையும் காதில் வாங்காமல் சமையலறைக்குள் நுழைஞ்சு காபி கலக்கத் தொடங்கினாள்.
 "எங்கேடி போயிட்டே? காபி கலக்கத்தானே? இத்தனை கேள்வி கேட்டேனே... எதுக்காவது பதில் சொன்னியா?"
 "நீங்க எதுவும் கேள்வி கேட்டா மாதிரி இல்லியே எல்லாம் வழக்கமான வெறும் வரட்டு புலம்பல்தானே? இதுக்கு என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க?"
 "என்னடி வாய் ரொம்ப நீளுது?"பேசினாலும் குத்தம். பேசாவிட்டாலும் குத்தம். போன புண்ணியவான் போயிட்டார். எட்டு வருஷமா உங்ககிட்ட இருந்து எனக்கு விடுதலை கிடைக்கல. குழந்தையைப் பார்க்க வர்றவங்க சனி, ஞாயிறுன்னு வரக்கூடாது? இப்படி வேலை நாட்கள்ள வந்து உயிரை வாங்கறீங்களே...?"
 "எங்க பையன் வீட்டுக்கு வர்றதுக்கு நாள் நட்சத்திரம் பார்த்துக்கிட்டு வரணுமா? இப்படி மொட்டை மரமாகியும் உனக்கு திமிர் குறையலியேடி."
 "ஆமா... திமிர் பிடிச்சுதான் திரியறேன். சரி... சரி... தங்கப் போறீங்களா இல்லை கிளம்பறீங்களா? சொன்னா சமையல் செய்வேன்."
 "வெளிய போங்கன்னு சொல்லாம சொல்றா பார்த்தீங்களா? உனக்கு பிரமோஷன் வந்திட்டுதாமே. நாலு மாசமாச்சாம்... ஏண்டி என்கிட்ட சொல்லலை? எங்களுக்கு அதிக பணம் கொடுக்கணும்னு பார்த்திட்டியா? எங்க பையன் வேலையைத்தானடி உனக்கு கொடுத்திருக்கு... அவன் இப்படி அல்பாயுசில சாகலைன்னா உன் முகரக் கட்டைக்கு இப்படி பெரிய வேலை கிடைக்குதா? அந்தப் பணத்தில உன்னைவிட எங்களுக்குத்தான் உரிமை அதிகம். நினைப்பிருக்கட்டும்."
 'என்ன மனிதர்கள்' என்று சீதாவுக்கு வேடிக்கையாக இருந்தது. எத்தனை எடுத்து சொன்னாலும் இவர்கள் புரிந்து கொள்ளாதது போல நடிப்பதில் வல்லவர்கள். இதுகளோடு இனியும் கத்தி மாரடிக்க முடியாது என்று முடிவு செய்தாள்.
 "சரி... உங்களுக்குத்தான் உரிமை அதிகம். இப்ப என்ன வேணும்? அதிகமா பணம்தானே? கொடுத்து தொலைச்சிடறேன். போதுமா?"
 "ஆங்காரமாத்தானே பதில் சொல்றே... இதையே அடக்கமா சொன்னா என்னடி? நாயே... இப்படி நீ தனியா இருக்கறது எங்களுக்கு பிடிக்கலை. எதுக்கு இது வேற தனி செலவு... வெட்டியா... அடுத்த ஒண்ணாம் தேதி மரியாதையா வீட்டுக்கு வந்துசேரு... புரியுதா?"
 "அதெல்லாம் வரமுடியாது. நீங்க சீக்கிரம் போய் சேருங்க. வேலை தலைக்கு மேல இருக்கு...என்னை எதிர்த்துப் பேசறாளே... இவளைக் கேக்க யாருமே இல்லையா? இந்தாங்க உங்களைத்தான் எழுந்து வாங்க... இன்னும் கொஞ்ச நேரமானா செருப்பைக் காட்டுவா. அவனைத்தான் முழுங்கிட்டா. இந்த புள்ளையையாவது இவகிட்டே இருந்து கடவுள்தான் காப்பாத்தணும்."
 கத்திக்கொண்டே வெளியே போகும் மரகதாவை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் முரளி.
 'உலகத்தில் உயிரோடு இல்லாத அப்பாவை சாக்கு வைச்சுக்கிட்டு மாசாமாசம் வந்து சண்டை போட்டு விட்டுப் போகும் இவர்கள் கெட்டவர்கள். என் அம்மாவை அழவைக்கும் ராட்சசர்கள்... நான் என்ன சின்ன பையனா? பொம்மை பிஸ்கெட் வாங்கிட்டு வந்திருக்காங்களே...'
 சட்டென கையிலிருந்த பொட்டலத்தை தூக்கி வெளியே எறிந்தான். சின்ன முகம் கோபத்தில் சிவுசிவுத்தது.
 சத்தம் கேட்டு வெளியே வந்த சீதா நொடியில் விஷயத்தை ஊகித்துவிட்டாள். இப்படிப்பட்ட வெறுப்பு மனதில் வளர்ந்தால் குழந்தையின் குணத்தில் தேவையில்லாத வன்மம் வளரும். இந்த நேரத்தில் இதைக் கண்டித்தால் அவன் எடுத்துக் கொள்ளமாட்டான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223530404
போய் வா சினேகிதி..!

Read more from Megala Chitravel

Related to போய் வா சினேகிதி..!

Related ebooks

Reviews for போய் வா சினேகிதி..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    போய் வா சினேகிதி..! - Megala Chitravel

    1

    வானக் காட்டின் நட்சத்திர மரங்களுக்கிடையே துள்ளி ஓடும் நிலவுப் பெண்ணைப் பிடிக்க, மேகக் குதிரையில் காற்றுக் காதலன் விரைந்து வரும் பின் மாலைப் பொழுது...

    வெளி வராந்தாவில் நின்றிருந்த சீதா விழிகளால் தெருக்கோடியைத் தொட்டாள். இன்னும் முரளியைக் காணவில்லை. ‘நாடக ஒத்திகை இருக்கிறது. அதனால் குழந்தையை அனுப்ப தாமதமாகும்’ என்று நேற்றே பள்ளியின் கையேட்டில் குறிப்பு வந்திருந்தது. அதற்கென்று இத்தனை நேரமா ஆகும்?

    பாவம் குழந்தை... மதியம் சாப்பிட்ட கொஞ்சம் சோறு எத்தனை நேரம் தாங்கும்? போய் வரலாம் என்றால் பள்ளி பக்கத்திலா இருக்கிறது? அப்படியே சென்றாலும் குழந்தை வேறு வழியாக வந்துவிட்டால் என்ன செய்வது? பயத்தில் வயிறு குழைந்தது.

    அம்மா முரளியின் குரலும் கேட்டைத் திறக்கும் சத்தமும் ஒருசேர காதில் அறைந்தது. ஓடிப்போய் அவனை அணைத்துக் கொண்டாள்.

    வந்துட்டியா கண்ணே? அம்மா பயந்திட்டேனே. தினமும் இவ்வளவு நேரமாகும்னா நாடகமெல்லாம் வேணாம். ரிக்ஷாக்காரரைக் கூப்பிடு. நான் சொல்லிடறேன்...

    முரளி அவள் அணைப்பிலிருந்து மெதுவாக விலகிக் கொண்டான். நான் ரிக்ஷாவில் வரலைம்மா...

    பின்னே... இத்தனை தூரம் நடந்தா வந்தே? ஐயோ...

    வாசற்கேட் மென்மையாகத் தட்டும் ஒலி கேட்டது. "நான்தான் குழந்தையைக் கூப்பிட்டுக்கிட்டு வந்தேன். ரிக்ஷா வரலைன்னு அவங்க மிஸ் என்கூட அனுப்பினாங்க.

    குழந்தை பசியோட இருக்கான். சாப்பாடு கொடுங்க... நான் வரேன்..."

    குழந்தை வந்து சேர்ந்தானே என்று நிம்மதியாக வீட்டிற்குள் நுழைந்தாள். சாப்பிடும் போது முரளி சொன்னான், அந்த அங்கிளுக்கு காபி குடுத்திருக்கணும்மா. இவ்வளவு தூரம் கூப்பிட்டுக்கிட்டு வந்தார். நீ ஒரு நன்றிகூட சொல்லலியேம்மா. அவரு எங்க நிம்மி மிஸ்ஸோட அண்ணன்...

    ஆமாம் கண்ணு... உன்னைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடலை... எதுவும் தோணவும் இல்லை. நாளைக்கு மிஸ்கிட்டே சாரி சொல்லிடு...

    சாப்பிட்டதும் முரளி வீட்டுப்பாடம் எழுத உட்கார்ந்தான். சீதா மறுநாள் சமையலுக்கு வேண்டியவைகளை ஒழுங்கு செய்தாள். எழுதிக் கொண்டிருந்ததை பாதியிலேயே நிறுத்திய முரளி, அம்மா... நாடகத்தில் நான் ராஜா வேஷம் போடறேன். எங்க நிம்மி மிஸ் ஜிகினா ஒட்டி கிரீடம் எல்லாம் செய்திருக்காங்க. ரொம்ப சூப்பரா இருக்கும்மா... நெறைய வசனம் பேசணும்மா... சொல்லிக் குடுக்கறியம்மா? குதூகலம் கொப்பளிக்கப் பேசினான்.

    நாளைக்கு நாடகம் வேணாம் என்று சொல்ல நினைத்ததை சீதா மாற்றிக் கொண்டாள். நாளைக்கு அலுவலகத்திலிருந்துதானே நேராகப் போய் குழந்தையைக் கூப்பிட்டுக்கொண்டு வந்தால் போயிற்று... சிரித்த மாதிரி முகத்தை மாற்றிக்கொண்டு, அப்படியா? நீ முதலில் வீட்டுப்பாடம் எழுதி முடிச்சிடு. நான் வசனம் சொல்லித் தரேன். சரியா... சீக்கிரம் எழுது பார்க்கலாம்... என்று சொன்னாள்.

    முரளி அவளை கட்டியணைத்து முத்தமிட்டான்.

    மறுநாள் மாலை, சீதாவை எதிர்பார்க்காத நிம்மி மிஸ் புன்னகையுடன் வரவேற்றாள். வாங்க... முரளி ரொம்ப நல்லா நடிக்கறான். இந்த வருஷம் அவனுக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். நேரமானா நானே முரளியை எங்கண்ணாகூட அனுப்பிடறேன். நீங்க பாவம்... வீணா சிரமப்பட வேணாமே...

    இல்லே பரவாயில்லை எனக்கேதும் சிரமமில்லை. ரொம்ப நேரம் குழந்தை வரலேன்னா எனக்கு பயமா இருக்கு.

    நிம்மி புரிந்து கொண்டு புன்னகைத்தாள்.

    ஒத்திகை முடிந்து வீட்டுக்கு வர மிகவும் தாமதமாகிவிட்டது. தோசை சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டதும் முரளி மெதுவாகக் கேட்டான்.

    உனக்கு கஷ்டமா இருக்காம்மா? பாவம்... நீ ஆபீசும் போயிட்டு வந்து திரும்ப ஸ்கூலுக்கு வர்றே... என்னாலதானம்மா உனக்கு இத்தனை கஷ்டம்? ஸாரிம்மா... எல்லா வீட்டுலயும் இருக்கற மாதிரி நம்ம வீட்டுலயும் அப்பா இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?

    சீதாவுக்கு திக்கென்றது. அப்பா இல்லாதது உனக்கு வருத்தமா இருக்கா முரளி? நான் என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் உனக்கு அது பெரிய குறையா இருக்கு இல்லே முரளி?

    இல்லைம்மா... அப்படியெல்லாம் இல்லை... உன்னை நெனைச்சா எனக்கு கவலையா இருக்கும்மா. நீயே ஆபீஸ் போகணும்... நீயே சமைக்கணும். வீட்டைப் பார்த்துக்கணும். என்னையும் கவனிச்சுக்கணும். உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்காம்மா?

    சீதா கண்ணீர் மல்க அவனை முத்தமிட்டாள். எனக்கு கஷ்டம் எதுவுமில்லைப்பா. உன்னைப்போல ஆதரவான மகன் கெடைச்சதுக்கு நான் புண்ணியம் செய்திருக்கணும் ராஜா. அந்த சுகத்திலேயே இதெல்லாம் எனக்கு பெரிசா தெரியலைப்பா...

    இல்லேம்மா... நீ எனக்காக சொல்றே... அப்பா மேல எனக்கு ரொம்ப கோபமா வருதும்மா... எதுக்காக நம்மை இப்படி விட்டிட்டுப் போனார்? அப்பா சாகும் போது நான் இருந்திருந்தா அவரை விட்டே இருக்கமாட்டேன். எனக்குத்தான் அவர் முகம்கூட தெரியாதேம்மா...

    சீதாவுக்குள் என்னவோ சங்கடம் புரண்டது. முரளி... காலையில் எழுந்திருக்கணுமில்லே? தூங்குடா கண்ணு. எனக்கும் ரொம்ப அலுப்பா இருக்கு...

    அதற்கு மேல் எதுவும் பேசாத முரளி தூங்கிவிட்டான். சீதாவுக்குத்தான் தூக்கம் வரவில்லை. முரளியின் வார்த்தைகள் காதுக்குள் எதிரொலித்தது. மனதை தவிக்க வைத்தது.

    அப்பா முகம் தெரியாதென்று முரளி சொன்னது உண்மைதானே... ஏன்... தனக்கேகூட அப்படித்தானே ஆகிவிட்டது. எட்டு வருடமாக இரவும் பகலும் யந்திரம் போல ஓடிக்கொண்டே இருப்பதால் எல்லாமே மறந்து போய்விடும் போலிருக்கிறது.

    தினமும் காலையில் குளித்துவிட்டு சின்னக் கறுப்புப் பொட்டு வைத்துக் கொண்டு எதிரில் தொங்கும் புகைப்படத்துக்கு பூ வைக்கும் போது பார்ப்பதோடு சரி...

    அதன் பிறகு மீண்டும் நினைக்க முடியாதபடி பகலெல்லாம் வேலை. இரவிலோ எப்போது படுக்கையில் விழலாம் என்றுதான் இருக்கிறது. இதில் ஏங்கவோ இளைக்கவோ நேரம் எங்கே இருக்கிறது?

    உடம்பு யந்திரத்தனமாகிவிட்டதால் உணர்வுகள் உள்ளே பதுங்கிவிட்டன. வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவும் கூட நினைவுகள் மறந்துவிட்டன. மறுநாளைய உழைப்பிற்கு தயாராகத்தான் சரியாக இருக்கிறது.

    முரளிக்காகவே சாப்பிட்டுப் பேசி சிரித்து இயல்பாக இருப்பது போல நடிக்க வேண்டியிருக்கிறது.

    தகப்பனில்லாமல் இருப்பதை வெளிக்காட்டாமல் தன்னோடு இயைந்து வாழும் சின்னஞ்சிறு பிஞ்சுக்காக தான் வாழ வேண்டிய கட்டாயத்தை சீதா உணர்ந்திருக்கிறாள். ஆனால் உறவுக்கு அது புரியவில்லையே... சீதா ஆயாசமாக கண்களை மூடிக் கொண்டாள்.

    2

    "ஏண்டி இத்தனை நேரமாகக் காத்திருக்கிறோம்? எங்கேடி போய் சுத்திட்டு வர்றே? இந்தப் பனிக்காலத்தில் குழந்தையையும் கூட அழைச்சிக்கிட்டு போயிருக்கியே... அறிவு வேணாம் ஒரு பொம்பளைக்கு? போனதரம் பார்த்தது குழந்தை ரொம்ப இளைப்பா தெரியறானே... ஒழுங்கா சாப்பாடு போடறியா இல்லையா?"

    கேட்டைத் திறந்து பத்து அடி நடந்து பூட்டைத் திறந்து முன்னே இத்தனை பேச்சையும் எப்படி பேச முடிகிறது என்று சீதாவுக்கு வியப்பாக இருந்தது.

    வாயைத் திறந்தாளா பாருங்க... பெரிய மகாராணி. பேசினா முத்து கொட்டிடும்... நம்மகூட குழந்தையையாவது ஒட்ட விடறாளா பாருங்க. நம்மைப் பார்த்ததுமே தாத்தா பாட்டின்னு குழந்தை என்னிக்காவது ஒட்டுதலா கிட்டே ஓடி வருவதா பாருங்க... எதைக் குடுத்தாலும் முதலில் அவ முகத்தையில்ல பாக்குது... வாங்கிக்கன்னு அவ சொன்னதுக்கப்புறம்தானே விரலாலக்கூடத் தொடுது. எல்லாம் நம்ம தலையெழுத்து. கூட வந்து இருடின்னு சொன்னா கேட்டாத்தானே? எட்டு வருஷமா இதையெல்லாம் தாங்கிக்கணும்னு விதியிருக்கு...

    சீதா எதையும் காதில் வாங்காமல் சமையலறைக்குள் நுழைஞ்சு காபி கலக்கத் தொடங்கினாள்.

    எங்கேடி போயிட்டே? காபி கலக்கத்தானே? இத்தனை கேள்வி கேட்டேனே... எதுக்காவது பதில் சொன்னியா?

    நீங்க எதுவும் கேள்வி கேட்டா மாதிரி இல்லியே எல்லாம் வழக்கமான வெறும் வரட்டு புலம்பல்தானே? இதுக்கு என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க?

    என்னடி வாய் ரொம்ப நீளுது?

    பேசினாலும் குத்தம். பேசாவிட்டாலும் குத்தம். போன புண்ணியவான் போயிட்டார். எட்டு வருஷமா உங்ககிட்ட இருந்து எனக்கு விடுதலை கிடைக்கல. குழந்தையைப் பார்க்க வர்றவங்க சனி, ஞாயிறுன்னு வரக்கூடாது? இப்படி வேலை நாட்கள்ள வந்து உயிரை வாங்கறீங்களே...?

    எங்க பையன் வீட்டுக்கு வர்றதுக்கு நாள் நட்சத்திரம் பார்த்துக்கிட்டு வரணுமா? இப்படி மொட்டை மரமாகியும் உனக்கு திமிர் குறையலியேடி.

    ஆமா... திமிர் பிடிச்சுதான் திரியறேன். சரி... சரி... தங்கப் போறீங்களா இல்லை கிளம்பறீங்களா? சொன்னா சமையல் செய்வேன்.

    "வெளிய போங்கன்னு சொல்லாம சொல்றா பார்த்தீங்களா? உனக்கு பிரமோஷன் வந்திட்டுதாமே. நாலு மாசமாச்சாம்...

    Enjoying the preview?
    Page 1 of 1