Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiru & Thirumadhi
Thiru & Thirumadhi
Thiru & Thirumadhi
Ebook79 pages1 hour

Thiru & Thirumadhi

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Sudha Suresh
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466503
Thiru & Thirumadhi

Read more from Sudha Suresh

Related to Thiru & Thirumadhi

Related ebooks

Related categories

Reviews for Thiru & Thirumadhi

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiru & Thirumadhi - Sudha Suresh

    18

    1

    எந்த ராஜா எந்த பட்டனம் போனாலும், அவனவன் அவனவன் வேலையைப் பார்த்தால் தான் அவனவனுக்கு சோறு.... இதை யார் புரிந்து கொண்டிருக்கிறார்களோ இல்லையோ வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னை மக்கள் பிறக்கும்போதே அறிந்து புரிந்து தெரிந்து தெளிந்து... இன்னும் எத்தனை ‘ந்து’ உண்டோ அத்தனையும் ‘ந்து’ கொண்டுதான் பிறக்கிறார்கள். இன்னிக்கு நீ இருக்கிற நிலையைவிட நாளைக்கு என்ன எக்ஸ்ட்ரா வசதியோட இருக்க, அப்படி இருந்தால்தான் உனக்கு மதிப்பு என்று, காலில் ஸ்கேடிங் வீல் இல்லாமலே பறந்து கொண்டிருக்கும் சென்னை மாநகரம். எழுபதுகளில் ஒரு க்ரௌண்டிற்கு சொன்ன விலையை பதினெட்டுகளில் ஒரு அடிக்கு சொல்லும் காஸ்ட்லி ஏரியா ஒன்றின் காலைப் பொழுது...

    ம்மா... நா கிளம்பறேன் ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில், கச்சிதமாக பொருந்திய உடையில், கழுத்து டையின் முடிச்சை சரி செய்தபடி கத்தினான் பிரபாகர்.

    பிராபா! இருடா தோ வரேன் கிச்சனில் இருந்து கத்தினாள் கனகம், பிரபாவின் அம்மா.

    ம்மா... வச்ச டிபன்ல ஒரு ஸ்பூன் கூட மிச்சம் வைக்கல... நீ வேணா வந்து பாத்துக்கோ... எனக்கு டையமாச்சு, நாங்கிளம்பறேன்

    அடேய்... இருடா, அது இல்லடா இது வேற விஷயம் என்றவள் தன்

    என்பது கிலோ உடம்பை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு திருக்கோயில் தேர் மாதிரி அசைந்து வந்தாள்...

    ப்ச் சொல்லுமா என்ற பிரபாவின் சலிப்பைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், அவனுக்கு முன் இருந்த டேபிளின் ட்ராயரிலிருந்தே ஒரு கவரை எடுத்து அவன் கையில் திணித்தாள். ரூபாய் கட்டு ஒன்றை வைத்த மாதிரி தடிமனாய் இருந்தது அந்த கவர். கவரை எடை போடுவது போல, தூக்கி தூக்கி பிடித்தபடி கேட்டான் பிரபா...

    என்னம்மா இது

    ம்.... போட்டோஸ் தான் வேறென்ன கனகம் சொன்னதும் அதன் அர்த்தம் மூளையில் உறைக்க, பிரபா கத்தினான்...

    ம்மா... உனக்கு வேற வேலையில்ல... ஆபீஸ் கிளம்பும் போது.... ந்தா புடி... சாய்ந்தரம் வத்து பாக்றேன் என டேபிள் மேலேயே அதை வைத்துவிட்டு நகர முயன்றவனை கையை விரித்து தடுத்த கனகம், அதை எடுத்து அவன் கைகளில் மீண்டும் திணித்தபடி சொன்னாள்...

    ஷ்... பேசப் படாது....

    என்னது பேசப்டாது... அதான் சொன்னனே போ...ம்மா உனக்கு வேற வேலையில்ல

    பிரபா... என்ன கத்த விடாத... சொல்றத கேளு

    உஹும் உஹும்... இப்ப நான் என்னம்மா செய்யனும் சிறுபிள்ளை போல் சிணுங்கினான் பிரபா!

    இப்ப்ப்போ நீ ஒன்னும் செய்ய வேண்டாம்.... நீ என்ன பன்ற... ஆபீஸ்ல போய் உக்காந்து நிதானமா ஒவ்வொன்னா பாக்ற

    ‘கலாட்டா கல்யாணம்’

    சிவாஜி மாதிரி துள்ளினான் பிரபா ம்மா... ஆபீஸ்ல போய் உக்காந்து பாக்ற வேலையாம்மா இது. ஏம்மா படுத்தற... என்ன அழவிடாதம்மா... இன்னிக்கு எம்.டி., மீட்டிங் வேற இருக்கு... நா சீக்கிரம் போகனும்

    நீ எம்டிகிட்ட பேசுவியோ.... எம்டன்கிட்ட பேசுவியோ அதெல்லாம் நான் காதுலையே வாங்கிக்க மாட்டேன்.... இன்னிக்கு இத பாக்ற இதுல நாலைஞ்சு பொண்ணுங்கள செலக்ட் செஞ்சு தர

    நாலைஞ்சா...!?

    அலையாத அப்பன மாதிரி, நீ நாலோ அஞ்சோ செலக்ட் செஞ்சு கொடு., அதுல நமக்கு தோதானது எதுனு நானும் உங்கப்பாவும் சேர்ந்து முடிவு செஞ்சுக்கிறோம்

    எல்லாம் சரிதாம்மா! இதெல்லாம் ஆபீஸ்ல எப்படிம்மா! ஐநூறு பேர்க்கு மேல வேல செய்ற கம்பெனிக்கு ஜி.எம்.,மா! நேத்துதான், புதுசா கல்யாணம் செஞ்ச புது மாப்பிள்ளை ஒருத்தன், அவன் பொண்டாட்டி போட்டோவ போட்டோல பாத்துட்ருந்தான்.... நான் பெரிய ஜபர்திசையா ‘வொர்க் வொயில் யூ வொர்க்’னு பாடம் எடுத்தேன். இன்னிக்கு நான் ‘வரப் போற’ பொண்டாட்டி, அதுவும் இத்தனை பொண்ணுங்க போட்டோவ வச்சு பாத்துட்ருக்கறத யாராவது பாத்தா என் மானம் கப்பலேறிடும்மா! பொழப்பு சிரிப்பா சிரிச்சுரும்

    அப்போ... பாக்க மாட்ட அப்படித்தான

    அச்சோ... பாக்க மாட்டேன்னு யார்மா சொன்னது. நீ இந்த ‘பன்டல’ அப்டியே வப்பியாம்.... நான் சாயந்தரம் சீக்கிரம் வந்து பாப்பனாம்

    "யாரு நீ... சீக்கிரம்.... சீக்கிரம் வர்ற மூஞ்சியப் பாரு! ராத்திரி ஒன்பது மணிக்கு நீ வந்தே மாமாங்கமாச்சு.... பேயோட தோள்ல கையப்

    Enjoying the preview?
    Page 1 of 1