Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sparishangal Puthithu
Sparishangal Puthithu
Sparishangal Puthithu
Ebook361 pages2 hours

Sparishangal Puthithu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் சில நேரம் இதமாகவும்... சில நேரங்களில்... இதயத்தை கனமாக்கும்... பல தருணங்களில்.. குருதியும் சொட்டும்... காதல் அழகானதும் ஆபத்தானதும் கூட... சமயத்தில் கண்ணீரையே பரிசளிக்கும்... அந்த காதலை நாமும் சுவாசிப்போம் ஸ்பரிசங்கள் புதிதாய்...

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580148707538
Sparishangal Puthithu

Read more from Shyam

Related to Sparishangal Puthithu

Related ebooks

Reviews for Sparishangal Puthithu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sparishangal Puthithu - Shyam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஸ்பரிசங்கள் புதிது

    Sparishangal Puthithu

    Author:

    களிகை ஷ்யாம்

    Kaligai Shyam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kaligai-shyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    1

    இருள் விலகாத அதிகாலை பொழுது சிறு ஒலியோடு எழுப்பிய செல்போன் அலாரம் 4.00ஐ காட்டியது. அதை அமைதியாக்கிவிட்டு மெத்தையிலிருந்து சற்று சிரமத்தோடு எழுந்தவர் அறையின் மிதமான வெளிச்சத்தில் நடந்து பக்கத்தில் இருந்த நாற்காலி இடித்து விடாமல் அதை கடந்து அறை விளக்கின் சுவிட்ச்சை போட்டார்.

    அறை பிரகாசமானது.

    எதிரில் கண்ணாடியில் பிம்பம் தெரிந்தது.

    அதை நெருங்கி அதில் தெரிந்த தன்னை பார்த்தார்.

    வயது. 55 வயதை கடந்த முதுமை முகத்தில் ஆங்காங்கே சுருக்கம், கண்கள் உள்வாங்கியிருந்தது.

    தலை முடி உதிரவில்லை என்றாலும் வெள்ளை முடிகள் செழிப்பாக காணப்பட்டது.

    ஒரு வார கருப்பு வெள்ளை கலந்த மீசைதாடி, என்றும் இல்லாது இன்று தன் பிம்பத்தை பார்த்து மெல்லிய மெல்லிய புன்னகை பூத்தார் கண்ணன்

    அங்கிருந்த குளியலறையில் நுழைந்தார்.

    20 நிமிடம் கழித்து வெளியே வந்தவர் சுவற்றில் தொங்கிய கடிகாரத்தை பார்த்தார் 4.30ஐ காட்டியது.

    வேகமாக பேண்ட் சர்ட் போட்டு கொண்டு பர்ஸில் பணம் எடுத்து வைத்தார். தயாராக வைத்திருந்த பேக்ஐ தோளில் மாட்டிக்கொண்டார்.

    அறை வாசலை சத்தம் வராது திறந்து, இருட்டில் மெல்ல நடை நடந்து, அறைகளை கடந்து, ஹாலை கடந்து, போர்டிகோ கேட்டை திறந்து, வெளியே சென்றவர் திரும்பவும் பூட்டிக்கொண்டார்.

    தெருவில் யாரும் இல்லை வெறிச்சோடி கிடந்தது.

    இறங்கி நடந்தார்.

    நடையில் ஒரு புதுதெம்பு.

    மெல்லிய காற்றில் குளிர் இன்னும் மிச்சம் இருந்தது.

    தெருமுனைக்கு வந்து ஒரு முறை தூரத்தில் தெரிந்த தன் வீட்டை பார்த்தார்.

    மனம் கனத்தது.

    முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு நடந்தார்.

    ரோட்டில் பால்காரர், பேப்பர் போடுகிறவர்களும் முழுவீச்சில் சைக்கிளில் கடந்து சென்றனர்.

    வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அவர் அருகில் நின்றது.

    கண்ணன் சார்… என்று தலையை நீட்டி கேட்டான் ரமேஷ்.

    என்ன சார் இவ்ளோ காலையில் ஏறுங்க நான் இறக்கி விடுறேன்.

    இல்லப்பா பக்கத்துல தான் என் சிநேகிதன் வீடு வரைக்கும்…

    பரவாயில்லை சார் நானே கொண்டு விடுறேன்.

    நடந்து போகிற தூரம் தான் ரமேஷ் நீ ராத்திரி முழுவதும் ஆட்டோ ஓட்டுறே நேரத்தில் போய் தூங்கிக்கோ என்றார் புன்னகையோடு.

    சரி சார் பார்த்து போங்க…

    என்ற ரமேஷ் பதில் புன்னகை தந்துவிட்டு போனான்.

    கண்ணன் சற்று நேரம் நடந்தார்.

    தூரத்தில் வந்து கொண்டிருந்த டாக்சியை நிறுத்த சொல்லி கை அசைத்தார்.

    டாக்சி 4, 5 நொடியில் அவர் அருகே வந்து நின்றது.

    எங்கே ஸார் போகணும்…?

    ஏர்போர்ட்

    வாங்க சார்… என்றான் ட்ரைவர்

    வீட்டில் லைட் ஒன்று போடப்பட்டது.

    சற்று நேரத்தில் அனைத்து லைட்டும் எரிந்தது.

    குமுதா பதறியபடி ஓடி வந்தாள்.

    குமுதா, வயது 24 கட்டிலில் புரண்டு படுத்த கணவனை பார்த்தாள்

    கௌதம்… ஹேய்… கௌதம்… அவன் சலித்துக்கொண்டே திரும்பி படுத்து கொண்டான்.

    கௌதம்… எழும்பு ப்ளீஸ்…

    அவன் கண்களை கொஞ்சம் பிரித்து பக்கத்தில் இருந்த செல்போனில் நேரத்தை பார்த்தான்.

    குமுதா… டைம் பாரு 5 தான் ஆகுது இப்போ ஏன் எழுப்புறே…?

    கௌதம்… அப்பாவை காணோம்…?

    வாட்… காணோமா…? இந்நேரம் எங்கே போய்ட போறாரு பால் வாங்க போயிருக்கலாம் வருவாரு இன்னும் 2 மணி நேரம் தூங்கலாம். நீ போ…? பேசிக்கொண்டே தூங்கினான்.

    குமுதா உறங்கி கொண்டிருந்த 2 வயது மகனை பார்த்தாள். விரலை சூப்பி கொண்டிருந்தான்.

    அந்த அறையை விட்டு வெளியே வந்து வீட்டின் முன் வாசலில் நின்று வெளியே பார்த்தாள். வாக்கிங் போகிறவர்கள் அங்கேயும். இங்கேயும் ஓடி கொண்டிருந்தார்கள்.

    பக்கத்தில் அப்பா உட்காரும் சாய்வு நாற்காலி அதன் பக்கத்தில் தினத்தந்தி வீசிவிட்டு போனது போலவே கிடந்தது. குனிந்து அதை எடுத்து நாற்காலியில் மேல் போட்டவள் பயம் கலந்த குழப்பதோடு நெற்றி பகுதியை அழுத்தி தடவினாள்.

    எங்கே அப்பா போய்டீங்க

    அப்பாவின் அறைக்கு நடந்தாள்.

    குளியலறை வாசலில் இன்னும் ஈரம் இருந்தது. உள்ளே போனாள்.

    சோப் ஈரமும், அதில் அப்பாவின் முடியும் இருந்தது.

    வேகமாக கணவனை நோக்கி ஓடினாள்.

    கௌதம்… ஹேய் கௌதம்… ப்ளீஸ் எழும்பு

    என்ன குமுதா உன் ப்ராப்ளம்?

    கௌதம் எனக்கு ஏதோ தப்பாகவே தோணுது?

    அப்படின்னா புரியல?

    அப்பா இவ்வளவு சீக்கிரம் அப்பா குளிக்க மாட்டார்?

    கௌதம் சிரித்தான் குளிக்கிறது ஒரு குற்றமா என்றவன் அவளை தன்னோடு இழுத்தான்.

    இழுத்த வேகத்தில் அவன் வெற்று மார்பில் சரிந்தாள்.

    அவள் கூந்தலில் விரல் கோதினான்.

    குமுதா! மாமா பக்கத்துல எங்காவது போயிருக்கலாம், அந்த நேரம் நாம நல்லா தூங்கிட்டு இருந்திருக்கலாம், இல்ல சொல்லிட்டு போகிற அளவுக்கு முக்கியமில்லாத விஷயமாக இல்லாமல் இருக்கலாம், கதவை திறக்கிற சத்தம் கேட்டாலே நம்ம கார்த்திக் முழிச்சிடுவான். சோ… இப்டி நிறைய காரணம் இருக்கு. என்ற கௌதம் அவளை மெத்தையில் சரித்து அவள் மேல் படர்ந்து…

    அவள் கழுத்துக்குள் மீசை முடி வருட முத்தமிட்டான்.

    சற்றுமுன் பூத்த வியர்வை பூக்கள் காணாமல் போய்ற்று.

    அவன் காது மடல் வருடலில் இதய துடிப்பு சற்று லேசானது.

    அவன் முத்தங்கள் அங்காங்கே முத்திரை பதிக்க.

    கௌதம்… அவள் இதழ் பாட… இதழில் லயித்தான். அவள் மூச்சுக்காற்று மட்டும் சுட்டது.

    கௌதம் அவள் கண்களை பார்த்தான்.

    அதில் ஏதோ இல்லை.

    மெல்லிய குரலில் கேட்டான்.

    யூ… ஓக்கே…?

    அவள் பேசவில்லை. அவன் கண்களையே பார்த்தாள்…

    இட்ஸ் ஓக்கே… குமுதா நெற்றியில் அழுத்தம் குறையாமல் முத்தமிட்டு புன்னகையோடு நகர்ந்தான்.

    ஐ… ஆம்… ஸாரி கௌதம்…

    அவன் பேசாது புன்னகைத்தான்.

    அதில் டன் அளவு காதல்.

    கௌதம் குளியலறைகுள் நுழைய,

    குமுதா ஏதோ நியாபகம் வந்தவளாய் ஓடி சென்று டெலிபோன் அருகே எழுதியிருந்த சில நம்பர்களில் ஒன்றை கண்கள் தேர்வு செய்ய, குமுதா டயல் செய்து ரீசிவரை காதுக்கு குடுத்து காத்திருந்தாள்.

    ஹாய் அங்கிள்… நான் குமுதா பேசுறேன்.

    குட் மார்னிங் மா…

    குட் மார்னிங் அங்கிள்.

    என்னம்மா… இவ்ளோ காலையில் போன்…?

    நத்திங்!. அங்கிள் அப்பா உங்களை பார்க்க வந்தாரா…?

    இல்லையேமா…? அதும் இவ்ளோ காலையில்… என்னை மீட் பண்ண ஒரு காரணமும் இல்லையே…?

    நேற்று…?

    இல்லமா… அங்கே எல்லாம் ஓக்கே தானே…?

    குமுதா நீளமாக மூச்சி வாங்கி கொண்டு…

    அப்பா வீட்ல இல்லை அங்கிள் காணோம் சீக்கிரம் எழும்பி குளிச்சு போயிருக்கார். பட் எங்கேன்னு தெரியல.

    குமுதா நீ ரிலாக்ஸ்சா இரு… நான் விசாரிச்சிட்டு உனக்கு சொல்றேன்…

    சரி அங்கிள்…

    குழந்தை அழ…

    ஓடி சென்று அவனை மார்போடு அணைத்து கொண்டாள்.

    இடுப்பில் டவல் கட்டி வந்தவன்

    அவன் ட்ரெசிங் அறைக்குள் புகுந்தான்.

    குமுதா ஜன்னலுக்கு வெளியே படர்ந்திருந்த வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

    10 நிமிடத்தில் கௌதம் ஆபிஸ்க்கு ரெடி ஆகிருந்தான்

    கௌதம்… நான் எதும் சமைக்கல… ப்ளீஸ் வெளியில் பார்த்துக்க முடியுமா…?

    பரவாயில்லை நான் பார்த்துகிறேன். பட் இப்படியே இருக்காதே பையனுக்கு ஏதாவது ரெடி பண்ணு ஆண்ட் நீயும் சாப்பிடு என்றவன் அவளையும் குழந்தையும் சேர்த்து அணைத்து குமுதாவின் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னான்.

    லவ் யூ… பாய்…

    பாய்… என்றாள் புன்னகைத்து.

    கௌதம் அவன் பைக்கை ஸ்டாட் செய்து டாடா காண்பித்து காற்றில் முத்தம் ஒன்றை அனுப்பி விட்டு போனான்.

    குமுதா குழந்தையை கிடத்தி கையில் பால் குடிக்க குடுத்து விட்டு அப்பாவின் அறைக்கு வந்தாள். உலாவினாள். அப்போது கண்ணில் பட்டது அந்த சிறிய பூட்டு.

    பழைய காலத்து சூட்கேஸில் பூட்டப்படும் பூட்டு.

    அப்பாவின் பூட்டு பரண் மேல் உள்ள அப்பாவின் சூட்கேஸை பார்த்தாள், பூட்டப்படாமல் இருந்தது.

    அருகில் உள்ள நாற்காலியில் மேல் ஏறி அந்த சூட்கேஸை எடுத்து கட்டிலில் வைத்தாள்.

    திறந்து, அதில் புத்தம் புது வேட்டி சட்டைகள்… கொஞ்சம் சில்லறை காசுகள்… அடுத்து கண்ணில் பட்டது அப்பாவின் டைரி.

    வெகு நேர யோசிப்பில் நேரம் கரைந்தது.

    இறுதியாக அதை பிரித்தாள்.

    முத்து முத்தாக எழுத்துக்கள்.

    அப்பாவின் கையெழுத்தின் வயது 25.

    1993ல் தொடங்கிய அந்த டைரியை வாசிக்க ஆரம்பித்தாள் குமுதா.

    2

    மதுரைக்கு பக்கத்தில் சின்ன கிராமம்… பசுமைக்கு பெயர் போன ஊர்…

    காலை 7.45

    "பழமுதிர் சோலை… எனக்காகத்தான்…

    படைத்தவன் படைத்தான் அதற்காக தான்…"

    இளையராஜா பாடல் பழைய ரேடியோவில் கசிந்து கொண்டிருக்க…

    அந்த டீக்கடையில் ஒருவன் மட்டுமே அவனும் பேப்பர் படித்து கொண்டிருக்க, டீ மாஸ்டர் பால் ஆற்றி கொண்டிருந்தான்.

    பக்கத்தில் பெட்டிகடை… ஓலை கூறையில் கை வைத்தபடி காத்திருந்தான் பாண்டி.

    அவன் காத்திருந்த அந்த டவுண் பஸ் வந்து நிற்க… அதிலிருந்து அவள் இறங்கினாள்.

    ஏய் மச்சான்… வந்துட்டாள்டா உன் ஆளு…

    மறைவில் நின்றவன் கடைசியாய் ஒருமுறை புகையை இழுத்து கொண்டான்.

    டேய்… சீக்கிரம் வாடா… போய்ட போறாள்…?

    கண்ணன் வந்தான் மறைவிலிருந்து

    6 அடி உயரம், மாநிறம், மீசை பளிச்சென்று ஷேவ் செய்த கன்னங்கள்.

    சீகரெட் பிடிச்சிட்டு அவா முன்னாடி போய் நின்றால் மூக்கை பொத்திப்பாள்.

    பார்த்துக்கலாம்டா

    2 மாசம் ஆகுது இப்டி மறைஞ்சி நின்று பார்க்கிறது இன்னைக்கு எப்படியாவது சொல்லிடு கண்ணா

    சரிடா…

    கண்ணன் அவனை கடந்து வேகமா முன்னேறினான் அவளை நோக்கி

    மஞ்சள் நிறத்தில் ரோஸ் நிற பூப்போட்ட சேலையில் கச்சிதமாய் இருந்தாள்.

    காலை வெயிலில் கழுத்தில் தங்க செயின் மின்னியது. சிரித்து பேசிக்கொண்டே நடந்தாள் தோழியோடு.

    எஸ்கியூஸ்மீ…

    அவள் திரும்பினாள் கூடவே அவள் தோழியும் இறந்து போன ஷோபா போல் இருந்தாள் அவள்.

    ம்ம்…? விழிகளால் வினா எழுப்பினாள்

    ஸாரி… கொஞ்சம் இந்த அட்ரஸ் எதுன்னு சொல்ல முடியுமா…?

    அவள் அவனை பார்த்தாள்.

    உனக்கு என்னடா வேணும்? அவள் முறைத்தாள் கோபத்தில்

    எ… என்ன…?

    கண்ணன் பயந்து போனான். நினைத்தது போல் இல்லை இவள்.

    சொல்லு உனக்கு என்ன வேணும்? 2 மாசம் என்னை பாலோ பண்றே? இதுகூட தெரியாமல் இருக்க நான் மக்கு இல்ல சொல்லு என்ன வேணும் உனக்கு?

    டீச்சர் நான் போகவா…? என்றவளிடம் திரும்பினாள் அதே கோபத்தோடு

    இருடி போகலாம். நாளைக்கே உன்கிட்ட கூட இப்டி யாராவது வந்து நின்றால் இப்படித்தான் பேசணும் சரியா? என்றவள் கண்ணனிடம் திரும்பினாள்.

    ம்ம்… என்ன சொல்லு…?

    ஸா…ரி ஸாரிங்க…? என்ற கண்ணன் அங்கிருந்து வேக நடை போட்டான்.

    டேய்… பாண்டி ஓடிவா… என்றவன் தன் பைக்கை நோக்கி ஓடினான்.

    பாண்டி மின்னல் வேகத்தில் பைக்கில் அமர்ந்திருந்தான்.

    மறுநாள்.

    காலை 7 மணி.

    பாண்டி வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

    எதிரே கையில் கஞ்சி வாளியோடு இசக்கியின் அப்பா வந்தார் புன்னகையோடு.

    வா… கண்ணா…

    என்னப்பா! தோட்டத்துக்கு கிளம்பியாச்சா…?

    ஆமாபா… இங்க ஓட்ட ரேடியோ ஒண்ணு இருக்கு!. சகிக்க முடியல! அதான் போறேன்.

    புரியல என்ன ரேடியோ…? கண்ணனுக்கு புரியாமல் நிற்க

    ம்ம்ம்…

    என்னை தான் சொல்றார் அந்த அழகன் என்றபடி பாண்டியின் அம்மா வந்தார்.

    கண்ணன் சிரித்தான்.

    ஹேய்… இங்கபாரு எவ்ளோ வயசு ஆகட்டும் நான் அழகன் தான்டீ… என்றவர் பதில் வரும் முன் வேகமாக வெளியறினார்.

    நீ… வா… கண்ணா… அது ஆணவத்தில் பேசுது சாப்டியா?

    இல்ல… உங்க வீட்ல என்ன ஸ்பெஷல்மா?

    இட்லி சட்னி. உங்க வீட்ல…?

    உப்புமா! எனக்கு 2 இட்லி வைங்கமா…

    எங்க பாண்டி காணோமே?

    துரை இன்னும் தூங்கிட்டு தான் இருக்கார் என்றவள் டைனிங் டேபிளில் தட்டை வைத்து

    இரு கண்ணா… நான் சாப்பிட எடுத்துட்டு வாறேன் என்றவர் சமையலறைக்குள் நுழைந்தார்.

    சூடாக இட்லி வைத்து அதன் மேல் சட்னி ஊற்றி பாசமாய் சாப்பிடு கண்ணா… என்றவள் குடிக்க தண்ணீர் எடுக்க போனாள்.

    ஏன் கண்ணா… நீயாவது ஒரு வேலைக்கு போக கூடாதா?

    உன் கூடவே பாண்டியும் வருவானே. முன்னே மாதிரி அவங்க அப்பவால் வேலை செய்ய முடியல

    சீக்கிரமே வேலை கிடைச்சிருக்குமா பாண்டி இல்லாமல் நான் எப்டி?

    இன்னும் 2 இட்லி வைக்கவா?

    போதும்மா… என்றவன் கை கழுவினான்.

    தட்டு இருக்கட்டும்பா… நீ போய் அவனை எழுப்பு குளிக்கிறதே இல்லை, சொல் பேச்சியும் கேட்க மாட்டேன்கிறான். பாண்டி… அம்மாவின் குரல் கடைசி அறை வரை கேட்டது…

    ஜன்னல் வழியே வந்த வெயில் முகத்தில் பட்டும் தூக்கத்தில் இருத்தான்.

    ஏய் பாண்டி… எழும்புடா நேரம் என்ன ஆச்சி பார் இன்னும் தூங்குறே?

    புரண்டு படுத்தவன் நான் என்ன ஆபீஸ்க்கா போக போறேன்?

    டேய் வாடா போகலாம்…

    கண்ணா… போகிறது வேடிக்கை பார்க்க! ஒரு நாள் போகலைனா என்னடா?

    என்னால் ஒரு நாள் கூட முடியலடா அவளை பார்க்காமல்

    பாண்டி எழும்பி அவனெதிரில் அமர்ந்தான்.

    கண்ணா! தினமும் அவளை மறைந்திருந்து பார்த்து ஒன்றும் ஆக போறதில்லை 2ல ஒண்ணு தெரியணும். அவள் ஓக்கே சொல்வான்னு எனக்கு தோணல நேற்று எவ்ளோ திமிரா பேசினாள் பார்த்தியா?

    அந்த திமிர்தாண்டா அவளோட அழகு.

    நான் சொல்கிறேன் என்று தப்பா நினைக்காதே… கண்ணா… என்னால் உன்கூட வர முடியாது.

    டே… டேய்… என்ன பாண்டி இப்டி சொல்றே…?

    வேற என்னடா நீயும் சொல்ல மாட்டேன்ங்கிறே? அவள் உன்னை நாயைவிட கேவலமா பார்க்கிறாள். இதுல நான் வேற?

    சரிடா விடு நீயும் என்னை புரிஞ்சிக்கவே இல்லை… இனிமேல் உன்னை நான் தொந்தரவு பண்ண மாட்டேன்.

    நான் வறேன் உனக்காக… ஆனால்… இதுதான் கடைசி… உனக்கும் என்ன சொல்றே…?

    கண்ணன் பேசவில்லை.

    சரி நீ இரு நான் ரெடி ஆகிட்டு வாறேன்… என்ற பாண்டி குளிக்க கிளம்பினான்…

    கண்ணா… பாண்டியின் அம்மா கூப்பிட

    கண்ணா எழுந்து போனான்.

    என்னம்மா…?

    கண்ணா இந்த மாசம் கடைசியில் எங்க குலசாமிக்கு படையல் வைக்க போறோம் நீ அவசியம் வரணும்.

    சரிம்மா… என்றவன் நடந்து முன் அறைக்கு வந்தான்.

    கண்ணா… நான் சொன்னது உனக்கு ஓக்கே தானே…? குரல் கேட்டு பின்னால் திரும்பினான்.

    பாண்டி ஷர்ட் போட்டுக்கொண்டே வந்துகொண்டிருந்தான்.

    …ம்ம்

    ஏண்டா… ஒரு மாதிரி இருக்கே? நான் சொன்னத நினைச்சி வருத்த படறயா?

    அதெல்லாம் ஒன்றுமில்லை பாண்டி அவளை பார்க்கிற அந்த 2 நொடிகள் தான் 24 மணி நேரத்தையும் கடத்துது. அவளை காணாத ஒரு நாளை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியல…

    என்னடா இப்டி சொல்றே?

    "உனக்கு சொன்னால் புரியாது பாண்டி.

    ஏதோ தெரியல அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்க்கை முழுவதும் கிடைச்சால் அதவிட இந்த உலகத்தில் வேற எதும் சந்தோஷம் இல்லடா!"

    ஹேய் கண்ணா… நான் என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன்டா நேற்று வேற அந்த பொண்ணு உன்கிட்ட உடனே கோபமா பேசிச்சில்ல அதான் கடுப்பாகிடுச்சி நீ இவ்ளோ பீலிங்ல சொல்லும்போது நானும் உன் கூட நிற்பேன்டா பாண்டி அவன் தோள் தட்டி சொல்லும் போது நம்பாத கண்களோடு பார்த்தான் கண்ணன்.

    டேய் மச்சான்… இந்த பாண்டி சொன்னா சொன்ன மாதிரி இருக்கும். நான் இருப்பேன்டா உன்கூட கடைசி வரைக்கும் நீயா துரத்திவிடுற வரை என்று சிரிக்க கண்ணன் அவனைக் கட்டிக்கொண்டான்.

    தேங்க்ஸ்டா… மாப்ள…

    சரி வண்டிய எடு. ம்மா… நான் வந்து சாப்பிடுகிறேன்…

    நான் மார்க்கெட் போறேண்டா நீ எடுத்து வச்சி சாப்பிடு அம்மாவின் குரல் தெரு வரை கேட்டது.

    கண்ணன் தன் யமாஹா பைக் உதைக்க அது கதறிக்கொண்டு ஷார்ட் ஆகியது. பாண்டி தோள் பிடித்து பின்னால் தொற்றிக்கொள்ள, பைக் வேகம் எடுத்தது.

    அதே பெட்டிக்கடை.

    டேய்… கண்ணா… நல்லா புரிஞ்சிக்கோ… அவள் உனக்கு வேணும்… அவ்ளோ தான் வேற எதுமே யோசிக்காதே! போய் தைரியமா பேசு. அவள் மட்டும் சரின்னு சொல்லட்டும் அப்புறம் பார் ஆட்டம் களை கட்டும்.

    கண்ணன் அவன் பேசுவதையே கேட்டு கொண்டிருந்தான்.

    கண்ணா… எல்லோமே நீ பேசுறதில்தான் இருக்கு அவள் உன்னை விரும்புறதும், விரும்பாததும் தோ… பஸ் வருது.

    இதயம் துடிப்பு அந்த நொடி முதல் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

    கண்ணா ஆல் த பெஸ்ட் டா மச்சான்…

    டீ கடை ரேடியோ இளையராஜாவின் அதிரடி பாடல் ஒன்று பாட…

    கண்ணன் முன்னேறினான்.

    பஸ்சில் இருந்து அவள் இறங்கும் போது அவள் கணுக்கால் அழகும், பாத விளிம்பில் கொலுசும் இதயத்தை பிச்சி தின்றது.

    அவள்… அவள் மாணவியோடு நடக்க…

    கண்ணன் அவளை நெருங்கினான்.

    ஹலோ… ஒரு நிமிஷம்…

    அவள் திரும்பினாள்.

    கண்களை மை இட்டு இன்னும் அழகு சேர்த்திருந்தாள்.

    கூடவே நின்ற மாணவி திகில் நிறைந்த கண்களோடு பார்க்க

    சொல்லு… என்றாள் அதே திமிரோடு.

    என் பெயர் கண்ணன்… பக்கத்து ஊர் படிச்சிருக்கேன்… உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாளா உன்னை பின்தொடர்கிறேன். உன்னை காதலிக்கிறேன். உண்மையா… கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன். வேற எந்த தப்பான எண்ணத்தில் உன்னை பின்தொடரவில்லைன்னு உனக்கு புரியனும்…

    அவள் அவனை பார்த்தாள் பேசவில்லை.

    அவள் கண்களில் எதும் புரியவில்லை. பதில் தெரியவில்லை. திமிர் இன்னும் மிச்சமிருந்தது.

    சரி உன் பெயர் என்ன?

    அவசியம் இல்லாதவரிடம் பெயர் சொல்ல விரும்பவில்லை.

    ஓ… அப்படியா…?! என்றவன்

    அவள் மார்போடு அணைத்திருந்த அந்த புத்தகத்தை பார்த்தான். கை நீட்டி அதை இழுக்க, அவள் திமிரவே இல்லை அவன் கண்களையே பார்த்தாள். புத்தகம் கையோடு வந்தது அதை புரட்டி முதல் பக்கத்தில் வலது கோடியில் அழகான கையெழுத்தில் எழுதிருந்தாள். பத்மாசெல்வராஜ்…

    பத்மா… நல்ல பெயர் என்று புன்னகத்தவன்.

    சரி பத்மா… உனக்காக பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு காஃபி ஷாப் இருக்கு… ஈவ்னிங் 4.20க்கு வெய்ட் பண்ணுவேன். நீ வந்தால் சந்தோஷபடுவேன் அடுத்து என்னன்னு பேசலாம் இல்லனா… நாம சந்திக்கிற கடைசி சந்திப்பு இதுவாக கூட இருக்கலாம் இப்போ நீ போகலாம். என்றவன் அந்த புத்தகத்தை அவளை நோக்கி நீட்டினான்.

    அவள் அதை வாங்கி தன்னோடு அணைத்து கொண்டாள்.

    கண்ணன் திரும்பி நடந்தான். பாண்டியை நோக்கி.

    அவன் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பி நடந்தாள்.

    டீச்சர் இவன் ரொம்ப ஓவரா போகிறான். முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உன்னை பிடிக்கலடான்னு போய்டுவான்.

    பத்மா புன்னகையோடு அவளை பார்த்து அவள் கன்னத்தில் மெல்ல தட்டி சொன்னாள். அவனை பிடிக்காதுன்னு எப்போ டீ சொன்னேன். ம்ம்…?

    மாணவி அவளை குறுகுறுவென்று பார்த்தாள் புன்னகையோடு.

    3

    மாலை 6 மணி வரை காத்திருந்து பத்மா வரவில்லை கடைசி நம்பிக்கை கூட இப்போது இல்லை.

    வெகுநேரத்திற்கு பிறகு பேரர்க்கு காசு குடுத்துவிட்டு அங்கிருந்து விரக்தியோடு வெளியேறினான்.

    சூரியன் மறைந்து இருள் பரவியது.

    பைக் ஸ்டார்ட் செய்து வீட்டில் நுழையும் நேரம் மழை ஓவென்று பெய்தது. சற்று நனைந்தவாறு உள்ளே நுழைய…

    எதிரில் அம்மா… ராணி தூர்தர்ஷனில் ஒலியும் ஒளியும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    கண்ணா… மழையில் நினைஞ்சிட்டே வர்றே? உன்னை எவ்ளோ தடவை சொல்லிருக்கேன் நேரத்துக்கு வீட்டுக்கு வான்னு… ம்ம்…?

    அவ்ளோ லேட் ஆகலை மா…

    சரி இங்கே வா… தலை ஈரமா இருக்கு…

    கண்ணன் அருகில் வர அவனை பக்கத்தில் அமர சொல்லி தன் சேலை முனையால் தலை துவட்டினாள்.

    "ம்மா… உங்களுக்கு கிச்சன்ல எதும் வேலை

    Enjoying the preview?
    Page 1 of 1