Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எல்லே... இளங்கிளியே!
எல்லே... இளங்கிளியே!
எல்லே... இளங்கிளியே!
Ebook287 pages1 hour

எல்லே... இளங்கிளியே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஹாய்... ரசகுல்லா ..." நிலாவின் குரல் கேட்டதும் வாசலில் காத்திருந்த சஞ்சயின் முகம் மலர்ந்தது. ஓடோடியும் சென்று அவளை வரவேற்றான். உள்ளே முன்பதிவு செய்திருந்த மேசைக்கு அழைத்துச் சென்றான்.
 நிலா சுற்றிலும் பார்த்தாள். அவளைத் தவிர வேறு நண்பர்கள் யாரையும் காணவில்லை . "அட... ரசகுல்லா நீ கஞ்சன்னு தெரியும். ஆனா இப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டின மகாகஞ்சனா இருப்பேன்னு தெரியாதுப்பா பிறந்த நாள் பார்ட்டிக்கு வான்னு வருந்தி வருந்தி கூப்பிட்டியே. குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் பேரையாவது வரச்சொல்லி இருப்பேன்னு பார்த்தா என்னையும் உன்னையும் தவிர யாரையுமே காணோமே. இந்தக் கண்றாவியையா பார்...ர்..ட்...டின்னு சொல்லி அலட்டினே? நீயும் உன் மூஞ்சியும்? சிரிக்காதே... பயமா இருக்கு..."
 முகம் சுளிக்கும் நிலாவை வைத்த விழி வீழ்த்தாமல் பார்த்தான் சஞ்சய். வம்பு தேடி அலையும் துறுதுறு வண்டு விழிகள். படபடவென பேசும் சின்ன செப்பு வாய். பரபரவென மின்னலாய் பாய்ந்து காரியம் முடிக்கும் புத்திசாலித்தனம் பார்க்கப் பார்க்க நெஞ்சை அள்ளியது.
 போன வருட பிறந்தநாளன்று இந்தக் குறும்புக் காரியோடு அவனுக்கு வரப்போகிற காதலைப் பற்றி யாராவது சொல்லி இருந்தால் சஞ்சய் சொன்னவரை கேலி செய்து கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரித்திருப்பான். ஆனால் வாழ்க்கையென்னும் சுவாரசியமான புத்தகத்தில் எந்த பக்கத்தில் ஏது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதே... அப்படி ஏதோ ஒன்று நடந்து தான் இப்படி ஒரு இன்பமான சுவாரசியம் எதிரில் உட்கார்ந்திருக்கிறது!
 மேலே சிந்திக்க முடியாமல் அவனை சொடக்கிட்டு கலைத்தாள் நிலா. "ஏய்... என்ன பே... பே... ன்னு பார்த்துக்கிட்டிருக்கே? பிறந்தநாள் கேக்கு கூட வெட்டமாட்டியா? எங்க உன் கஞ்சத்தனத்துக்கு ஒரு இட்லிகூட வெட்டிடமாட்டே போலிருக்கே. ஒரு வாய் ஐஸ்கிரீமாவது வாங்கித் தருவியா. இல்லை அதுவும் மாட்டியா? நான் கிளம்பறேன்பா ...''"நிலா... உட்காருப்பா.... விருந்தை எந்த தித்திப்போட ஆரம்பிக்கலாம்னு யோசித்தேன். கோவிச்சிக்கறியே. நீ எப்படிப்பட்ட மகாராணி... உனக்கு விருந்துன்னா லேசா?''
 "போதும்.. போதும்... நிறுத்து... இப்படி எதையாவது பேசி என்னை ஏமாத்திடலாம்ன்னு பார்க்கறியா? அது நடக்காது. எங்கம்மாகிட்டே மட்டன் பிரியாணி செய்யச் சொல்லிட்டுதான் வந்திருக்கேன். அரைமணி நேரத்தில் வீட்டுக்குப்போய் சுடச்சுட சாப்பிட்டுத் தூங்கிடுவேன். நீ இங்கேயே கிட...'' என்றபடி திரும்பவும் நிலா எழுந்தாள்.
 ''நிலா ப்ளீஸ்... உட்காரு.. உனக்கு என்ன தித்திப்பு பிடிக்கும்னு சொல்லு. அதையே கொண்டு வரச் சொல்றேன்..." சஞ்சய் கேட்டான்.
 "ஐய்ய... எனக்குப் பிடிச்ச ஸ்வீட்டா? எனக்கு எதுவும் அப்படி இல்லப்பா. நான் டயட்ல இருக்கேன். ஸ்வீட்டெல்லாம் சாப்பிடமாட்டேன். சரி... சரி... பிறந்தநாளும் அதுவும் நீ அழுது வடியாதே. போனால் போகட்டும். உனக்காக ஒரே ஒரு வாய் ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டு வைக்கிறேன். பேமிலி பேக் ஒரு பத்து கொண்டு வரச் சொல்லு...''
 பணியாள் விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே உள்ளே போனார். ஐஸ்கிரீம் வந்ததும் பரபரவெனப் பிரித்து சிட்டுக்குருவி போல வாயைத் திறந்து சாப்பிடக் கிளம்பினாள். தனக்கு எதுவும் சொல்லக்கூட தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.
 "இந்தா... நான் சாப்பிடறதைக் காணாததைக் கண்ட மாதிரி பார்த்துக்கிட்டிருக்காதே. அப்புறம் எனக்கு வயித்தை வலிக்கும். எதையாவது வாங்கித்தின்னுத் தொலை. ஆமாம்... என்னப்பா அதிசயமா இருக்கு? நீ பல்லு விளக்கினாயா? முடிவெட்டிக்கிட்டியா? நகம் வெட்டிக்கிட்டியா? குளிச்சியா? எல்லாத்துக்கும் மேலா லவ்ஸ் விவகாரம் எதிலாவது மாட்டிக்கிட்டியான்னு வேவு பார்க்க வருவாரே உன் ரத்தன மாம். அவரு இந்த மிகச்சிறந்த பிறந்தநாள் விழா பார்ட்டிக்கு வரலியா?"
 குழந்தை போலக் குறும்பு மின்னமின்னக் கையாட்டிப் பேசும் அவள் முகத்தை கையிலேந்தி முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது சஞ்சய்க்கு."மாமா... ரெண்டு நாளைக்கு முன்னாலதான் ஊருக்குப் போனாரு. காலையிலேயே போனில் வாழ்த்தும் சொல்லிட்டாரு. இன்னிக்கு வரமாட்டாரு."
 அந்த நேரம் அவனுடைய கைப்பேசி கூப்பிட்டது. அவன் முகம் போனப்போக்கை பார்த்த நிலா சத்தம் போட்டு சிரித்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223492122
எல்லே... இளங்கிளியே!

Read more from Megala Chitravel

Related to எல்லே... இளங்கிளியே!

Related ebooks

Reviews for எல்லே... இளங்கிளியே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எல்லே... இளங்கிளியே! - Megala Chitravel

    1

    வானக்குளத்தில் நீந்தி விளையாடும் நட்சத்திரக் குழந்தைகளை மேகத்தரைக்கு வரச்சொல்லி நிலவு அம்மா அதட்டும் பின்மாலைப்பொழுது.

    கரும் பச்சை பட்டு சூடிதாரில் தடதடவென மாடிப்படி இறங்கிய நிலா "அம்மா நான் கிளம்பறேன். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்திடறேன். நேரமானா நீ காத்திருக்காம சாப்பிட்டுட்டுத் தூங்கும்மா. இனியும் போகலைன்னா அந்த ரசகுல்லா புலம்பித் தீர்த்திடும்...’’

    ‘‘என்ன நிலா இது? எப்ப பேசினாலும் அவனை ரசகுல்லான்னே சொல்றே? அவனுக்கு சஞ்சய்னு அழகான பெயர் இருக்கில்லே? அடுத்தவங்களுக்கு இப்படிப்பட்ட பெயர் வைச்சுக் கூப்பிடறது கெட்ட பழக்கம்டா... அம்மா சொல்றதைக் கேளுடா. என் தங்கமில்லே ?’’

    நிலா தன் மாவடு கண்களை மலர்த்தி அம்மாவைப் பார்த்தாள். தங்கக்குழம்பில் வடித்தெடுத்த சிலை போல அம்மா நின்றிருந்தாள். ஒரு நிமிடம் நின்று அம்மாவை ரசித்த நிலா ஓடிப்போய் அவள் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் இழைத்தாள்.

    ரொம்ப ஸாரிம்மா. அது மட்டும் என்னால முடியாது. பாக்கறவங்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட பெயர் வைக்கலேன்னா தின்ன ஐஸ்கிரீம் ஒரு ஸ்பூன் கூட செரிக்காது. அம்மா ரொம்ப நாளாவே உன்னை ஒன்று கேட்கணும்னு நினைக்கறேன். ஆனா உன்னைப் பார்த்ததும் உன் அழகில் மயங்கி மறந்திடறேன்.

    நீ இத்தனை செகப்பா ரொம்ப அழகா இருக்கியே ஏம்மா என்ன மட்டும் கறுப்பா பெத்தே?

    "வெள்ளையா இருந்தா வெளையாடும் போது அழுக்காயிடுவேன்னுதாம்மா உன்னை கறுப்பா பெத்தேன்.’’

    "அதெல்லாம் இல்லைம்மா. உன்னைப் பெத்துதே உன்னோட அம்மா நரி... அதைப்போல நான் கறுப்பா பிறந்து தொலைச்சிட்டேன். எனக்கு ரொம்ப நாளா ஒரு ரகசிய சந்தேகம் இருக்கும்மா.’’

    "நீ நிச்சயமா ஏதோ ஒரு சமஸ்தானத்தோட இளவரசியாத்தான் இருக்கணும். ஏன்னா உன் அழகு ராஜ குடும்பத்துக்கு மட்டும் தான் சாத்தியம். உன்னோட மகாராணி அம்மா தூங்கிகிட்டிருந்தப்பா, இப்ப இருக்கே உன் அம்மான்னு சொல்லிக்கிட்டு ஒரு நரிக்கிழவி அது உன்னை திருடிக்கிட்டு வந்திருக்கும்.’’

    "நான் சொல்றேன்னு நீ வேணா பாரேன். திடீர்னு ஒரு நாளைக்கு உன் அரண்மனையிலிருந்து திவான். மந்திரி, தளபதின்னு ஒரு பத்து பேர் சேவகர் கூட்டத்தோட வரப்போறாங்க. கையில இருக்குற கத்தி கபடாவையெல்லாம் உன் காலடியில் வைச்சு வணக்கம் போட்டு கூப்பிட்டுக்கிட்டு போயிடப் போறாங்க. அதுவும் எப்படி தெரியுமா? முத்துப் பல்லக்கில் வைச்சு தூக்கிட்டுப் போகப்போறாங்க...’’ .

    அம்மா தன்னை மீறி சிரித்தாள்.

    "பாத்தியா... பாத்தியா.. உனக்கு சிரிப்பு வருது. ஏன்னா சொன்ன விஷயம் அப்படிப்பட்டது. கேக்கும்போதே சும்மா அதிருதுல. அம்மா உன்கிட்டே பேசிக்கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியறதில்லை. ரசகுல்லா என்னை திட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கும். பை... மா...’’ ஓடின நிலாவை அம்மா கூப்பிட்டாள்.

    "இதென்னது.... இப்படி வெறும் கையை வீசிக்கிட்டுப் போறே? ஏதாவது பரிசு வாங்கிட்டுப்போடா. என்னதான் பிரண்டுன்னாலும் இப்படி சும்மா போகக்கூடாது. இந்தா பணம்...’’ அலமாரியைத் திறந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டும் அம்மாவை விசித்திரமாகப் பார்த்தாள் நிலா.

    "ஐய்ய... அஸ்கு... புஸ்கு... போனாப் போகுதுன்னு நான் போறதே அந்த தத்திக்குப் பெரிசு. ஒரு வயசு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே. அதுக்கு காசு, பணம் வேணுமேன்னு ஏதாவது பயம் இருக்கா உனக்கு? எல்லாத்தையும் நான் தான் சொல்லிக் கொடுக்கணும், உனக்கு. சரி... சரி... வெளியே எடுத்த பணத்தை உள்ளே வைக்கக்கூடாது. இப்படித் தள்ளு. நாளைக்கு ஐஸ்கிரீம் வாங்க உதவும்...’’

    அம்மா சிரித்துக்கொண்டே பணத்தை அவள் கையில் வைத்தாள். "நிலா நெறைய ஐஸ்கிரீம் சாப்பிடறே. உடம்பு குண்டாகிடும் சொல்லிட்டேன்.’’

    ‘‘அது பத்தி கவலைப்படாதே என் அம்மா தங்கமே’’ நிலா மேலே பேசுமுன்னே கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. யாரென்று எட்டிப் பார்த்த நிலா, மேகத்துக்குள் நழுவி மறைவது போல தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

    ‘‘ஆஹா... வந்துட்டாங்கைய்யா... வந்துட்டாங்கைய்யா... உன்னோட அம்மா நரி மீனலோசனியும் அப்பா ஆடு ரத்னசாமியும் வந்துட்டாங்க. இனிமேல் நான் இங்கே இருந்தா சரியா வராது. நான் கிளம்பறேன். விடு ஜுட்...’’ நிலா பாய்ந்தாள்.

    ஓட்டம், கோ கோ. தடைத் தாண்டல், உயரம் தாண்டல், நீளம் தாண்டல், கபடி, நீச்சல் பாய்ச்சல் என்று தான் கற்ற வித்தைகள் அத்தனையும் செய்து மீனலோசனியிடமிருந்து தப்பிக்க முயன்ற நிலா வாசற்படியிலேயே மடக்கப்பட்டாள். பலிபீடத்துக்கு ஓட்டிச் செல்லப்படும் ஆடு போல வீட்டிற்குள் இழுத்து வரப்பட்டாள்.

    "இந்த விளக்கு வச்ச நேரத்தில எங்கடி ஊர் சுத்தக் கிளம்பிட்டே? ரெண்டு கழுதை வயசாகுதேத் தவிர பொறுப்பு இருக்காடி உனக்கு? உனக்கொரு கால்கட்டுப் போட்டாத்தான் நீ சரியா வருவே. ஆனா எதுவும் சரியாக அமையமாட்டேங்குதே. உன்னோட வாயாடித்தனமும் நீ பண்ற குரங்கு சேட்டையும் சொந்தக்காரங்க எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு. யார் பொண்ணு வேணும்னு கேக்கறாங்க? எல்லாரும் பயப்படறாங்க. உன் கவலையே எனக்குப் பெரிசா போச்சு...’’ என்று மீனலோசனி சரப்பட்டாசாய் வெடித்தாள்.

    நிலா அவளைப் பார்த்து பழிப்பு காட்டினாள். "பாத்தியாடி அவ பழிப்பு காட்டறதை? என்னாடி பொண்ணு வளர்த்திருக்கே? பெரியவங்கன்னு மட்டு மரியாதை இருக்கா அவளுக்கு? உன்னை இப்படியே விட்டா சரிப்படாது. முதல்வேலையா என்ன செய்யறேன் பார்...’’

    "கல்யாணமா? யாருக்கு? எனக்கா? அதுவும் நீ பார்க்கற மாப்பிள்ளை கூடவா? சான்சே இல்லை. நீ எங்கம்மாவுக்குப் பார்த்த மாப்பிள்ளை லட்சணம் தெரியாது எனக்கு? இதோ பாரு... உன் பொண்ணை பார்க்க வந்தியா. பாத்தியா... குடுக்கற காபியைக் குடிச்சியா. உடனே கிளம்பற வேலையைப் பாரு. மாப்பிள்ளை பார்க்கற மூஞ்சியைப் பார்க்கலை? சரியான நரிமூஞ்சி. சினிமா வில்லி என்னைப் பிடிப் பார்க்கலாம். கபடி... கபடி... சடுகுடு...’’

    நிலா ஆட்டம் காட்டிவிட்டு வெளியே பாய்ந்து ஓடிவிட்டாள். மீனலோசனிக்கு கோபம் தலைக்கேறியது.

    இந்தாடி நிலா. நில்லுடி அங்க. நில்லுடிங்கறேன். ஓடாதேடி... பிடி... பிடி... இந்தாங்க உங்களைத்தானே... காதில் விழலை? பிடியுங்க அவளை. ஓடிட்டாளா? இப்படி மசமசன்னு நின்னீங்கன்னா அவ எங்க கையில சிக்குவா? அவதான் றெக்கை இல்லாம பறக்கறாளே. உன் பொண்ணுக்கு நல்லாத்தான் பேரு வைச்சே நிலான்னு. நிமிஷ நேரம் நிக்கறாளா பாரு. எந்நேரமும் அந்த நிலா மாதிரியே ஓடிக்கிட்டேத்தானே இருக்கா? கத்திக் கொண்டிருந்த மீனலோசனியின் கையைப் பிடித்தாள் அம்மா.

    "வந்ததும் வராததுமா அவகூட என்னம்மா வம்பு. சின்னபிள்ளை அவள். உன்கூட உரிமையா ஜாலியா விளையாடறா அவ்வளவுதானேம்மா. முதலில் நீ உட்காரும்மா. காபி குடி. ராத்திரிக்கு பலகாரம் இருக்கு. சூடா சாப்பிடு... வாம்மா...’’

    ‘‘என்னை நீ ஒண்ணும் உபசரிக்கவேணாம். என்னடா அம்மாவை மரியாதை இல்லாம பேசாறாளேன்னு கன்னத்தில் ரெண்டு அறை விட்டு அவளைக் கண்டிக்காம என்னை உட்காரச் சொல்றியே., இதோ பாரு சாகம்பரி. எங்க யார் பேச்சையும் கேக்காம நீ இப்ப இவ்வளவு பெரிய வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணு கூட தனியா இருக்கே. இது வெளிஜனத்துக்குத் தெரியுமா? நாங்க என்னமோ உன்மேல அக்கறை இல்லாம இருக்கோம்னு எல்லாரும் பேசக் கிளம்பிட்டாங்க...

    அதுக்குதான் உன் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தைப் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா வைச்சிட்டா யாரும் பல்லு மேல நாக்கைப் போட்டு ஒரு வார்த்தை பேசமாட்டாங்க இல்லே ...?’’

    "மத்தவங்க மனசில நினைச்சதை ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்காகவெல்லாம் கவலைப்பட ஆரம்பிச்சா நாம வாழவே முடியாதும்மா. எனக்கு என் மகள் கூட இப்படித் தனியா இருக்கறதுதான் வசதியா இருக்கு. உங்ககூட வந்து இருந்தா, எங்க பிரைவஸி பாதிக்கப்படும். உங்களுக்கு எங்களால் எரிச்சலா இருக்கும். இப்படி யாருக்குமே வசதிப்படாத அந்த ஏற்பாடெல்லாம் வேணாம்மா. என்னை விட்டிடும்மா...’’

    அதற்கு மேல் பேசும்போதே மீனலோசனியின் முகம் மாறியது. "என்ன பேச்சு பேசறே சாகம்பரி நீ? எது வசதிப்படாது? பிறந்ததிலிருந்து பதினாறு வருஷம் நீ வாழ்ந்த வீடு இப்ப வசதிப்படாதா? அது வேற ஒண்ணுமில்ல. தனியா இருந்தா உங்க இஷ்டப்படி எப்ப வேணும்னாலும் சாப்பிடலாம். தூங்கலாம். இதோ.... உன் வயசுக்கு வந்த பொண்ணு தடிமாடு மாதிரி இப்படி ராத்திரி நேரத்தில் வெளியே ஓடறா. பெத்தவ நீயும் கண்டிக்காம இளிச்சிக்கிட்டு வழியனுப்பறே. எங்கக்கூட இருந்தா இதெல்லாம் முடியாதில்லே? அதுதான் உனக்கு அங்க வரப்பிடிக்கலை...’’

    "ஏம்மா எப்பப் பார்த்தாலும் அவளை கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருக்கே? உன் வாயால என் பொண்ணை தடிமாடுன்னு நீ எப்படி சொல்லலாம்? என்னை நீ திட்டலாம். உனக்கு உரிமை இருக்கு. ஏன்னா நான் உன் பொண்ணு. ஆனா என் பெண்ணைத் திட்ட உனக்கு உரிமையும் இல்லை . அதுக்கான தகுதியும் இல்லை . இப்ப எதுக்கு வந்திருக்கே? அதைச் சொல்லிட்டு கிளம்பு...’’ சாகம்பரியின் குரலில் எரிச்சலும் கோபமும்.

    மீனலோசனி மேலே பேசுமுன்னரே எப்போதும் வீட்டில் உதவிக்கு இருக்கும் சக்கு கையில் பெரிய தட்டுடன் வந்தாள். காபி டம்ளர்களுடன் சின்னத் தட்டுகளில் இருக்கும் இனிப்பையும் எண்ணெயும் கலந்த பலகாரமாகத் தின்னா விடிஞ்சிடும். கொழுப்பு ஏறி வாயில் வார்த்தையாத்தான் வெளிய வரும். இதுதான் உன் பெண்ணும் நீயும் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டிருக்கீங்க. ஏண்டி சக்கு.. மாசத்துக்கு என்ன ஒரு பத்து கிலோ நெய்யும் இருபது கிலோ சர்க்கரையும் வாங்குவீங்களாடி? என்று கிண்டல் செய்தாள்.

    நிலைமை மோசமாகி வருவதைப் பார்த்த ரத்னசாமி குறுக்கிட்டார். இங்க வந்த வேலையை விட்டிட்டு எதுக்கு கண்டதையும் பேசி வாங்கி கட்டிக்கறே? சொன்னா உனக்கு புத்தியிலேயே ஏறாதா?

    ஆமாம்... வந்த வேலையை செய்திடறேன். எனக்கு எதுக்கு பொல்லாப்பு? என்றபடி மீனலோசனி ஒரு கடித உறையைக் கொடுத்தாள்.

    பிரித்துப் பார்த்த சாகம்பரி குழம்பினாள்.

    யாரும்மா இந்தப் பையன்?

    "இவன் தான் உன் மகளுக்கு வரப்போற மாப்பிள்ளை . எப்படி ராஜாவாட்டம் இருக்கான் பாத்தியா? மதுரையில பெரிய டிம்பர் மார்ட் வைச்சிருக்கான். நல்ல குடும்பம். நம்ம அண்ணன் மாமியார் வீட்டு சொந்தம். நம்பி பொண்ணைக் குடுக்கலாம். நாளை மறுநாள் பொண்ணு பார்க்க வரச்சொல்லிட்டேன். அதை சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்...’’

    சாகம்பரிக்கு எரிச்சலும் கோபமும் வந்தது. "எதுக்கும்மா என்னைக் கேட்காம அதிகப்பிரசங்கித்தனம் செய்யறே? என் பெண்ணுக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும். அவளைப் பார்க்க யாரும் வரவேணாம். சொல்லிடு... எனக்கு இஷ்டமில்லை ...’’

    "என்னடி இப்படி ராங்கித்தனமா பேசறே? உன் குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டும் அவங்க பெருந்தன்மையா ஒத்துக்கிட்டு வராங்க. நீ என்னடான்னா காலால எட்டி உதைக்கிறியே. புத்திக்கெட்டத்தனம் பண்ணாதே. உன் நன்மைக்குத்தான் சொல்றேன்’’ மீனலோசனி கத்தினாள்.

    அதற்கு மேல் பொறுமையாக இருக்கமுடியாத சாகம்பரி பதிலுக்கு தானும் கத்தினாள்.

    "அது என்னம்மா. என் குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டும் வராங்கன்னு சொல்ற? நான் இங்க என்ன மானம் கெட்டக் குடும்பமா நடத்திக்கிட்டு இருக்கேன்? பெத்தவ நீயே இப்படிப் பேசி அவமானப்படுத்தும்போது மத்தவங்க என்ன பேசமாட்டாங்க?

    போதும்மா. உன் உறவும் அதை வைச்சுக்கிட்டு, என்னை நீ பண்ற அதிகாரமும், எனக்கு அலுத்துப் போச்சு. இதுவரைக்கும் பெத்தவங்களாச்சேன்னு மரியாதை கொடுத்தேன். இனிமேல் அது முடியாது. ரெண்டு பேரும் தயவு பண்ணி வெளியே போயிடுங்க... இனிமேல் என் வீட்டு வாசற்படியை மிதிக்காதீங்க...’’

    சாகம்பரியின் குரல் உயர்ந்தது.

    மீனலோசனி வாயடைத்துப் போனாள். வாழ்நாள் முழுதும் மற்றவர்களை மிரட்டியே பழக்கப்பட்ட தன்னை முதல் முறையாகத் தான் பெற்ற பெண்ணே எடுத்தெறிந்து பேசுவதாவது? அவளுக்குத் தாங்க முடியவில்லை .

    "என்னடி விட்டா ரொம்ப பேசறே. ‘பெத்த கடமைக்கு ஏதாவது நல்லது செய்து, உன் வீட்டில இருக்கறதை வெளியில் அனுப்பலாம்னு மெனக்கெட்டு இந்த மாப்பிள்ளையை ஏற்பாடு செய்தேன்.

    உனக்குதான் ஆதியில இருந்தே நாங்க செய்யற நல்லதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதே? அப்புறம் நாங்க மட்டும் என்ன செய்ய முடியும்? உன் விதியை நாங்களா தலையில் தாங்க முடியும்? நீ தானே அதை அனுபவிக்கணும்? அனுபவிச்சி சாவு, மானம் கெட்டுப் போய் திரும்பவும் இந்த வீட்டுக்கு வருவேன்னு, நினைச்சியா? இன்னிக்கு நீ குடுத்த மரியாதை இந்த ஜென்மத்துக்குப் போதும். இந்தாங்க உங்களைத்தான்... வாங்க போயிடலாம். இன்னும் கொஞ்சம் நேரமானா இவங்க நம்மை கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் தள்ளிடுவாங்க...’’

    மனைவிக்கும் மகளுக்கும் நடந்துவிட்ட இந்த திடீர் சண்டையினால் ரத்னசாமிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்போதைக்கு மீனலோசனி பேச்சுக்கு அடிபணிவதே நல்லது என்று தோன்றவே எழுந்தார். இல்லையென்றால் வீட்டிலிருக்கும் மகன்கள் மருமகள்களிடம் சொல்வதோடு நிற்காமல், வெளியூர்களில் இருக்கும் பெண்கள் இருவரிடமும் போனிலும் முறையிட்டு இம்சிப்பாள். மீனலோசனி ஏதோ சாபம் கொடுத்துக்கொண்டே காரில் ஏறுவது கேட்டது.

    எண்ணி அரைமணி நேரத்தில் முடிந்துவிட்ட இந்தப் போராட்டத்தில் சக்கு மிகவும் கவலைப்பட்டு விட்டாள்.

    என்னம்மா... அம்மா இப்படி பேசிட்டுப் போறாங்க?

    "அவங்க குணம்தான் தெரியுமே. இதைப்பத்தி நிலாக்கிட்டே எதுவும் சொல்லிக்கிட்டிருக்காதே. அவளுக்குத் தெரிஞ்சா விடவேமாட்டாள். வீட்டுக்கே போய் சண்டை போட்டிட்டு வந்துடுவாள். அது வேற வீண் வம்பாகிவிடும். கவனமா பேசு...’’ என்று சாகம்பரி தண்ணீர் குடித்தாள்.

    சக்கு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.

    வழியெல்லாம் மீனலோசனி புலம்பிக்கொண்டே வந்தாள்.

    "இந்தா வாயை வைச்சிக்கிட்டு சும்மா வரமாட்டே? விடு. உன் பெண்தானே திட்டினா? எல்லாம் வாங்கிக்கலாம். ஒண்ணும் கெட்டுப் போகாது. உன்னைப் போல உன் பொண்ணும் சண்டைப் போடறா. அவ்வளவுதானே?’’

    மீனலோசனி அவரை முறைத்தாள்.

    2

    "ஹாய்... ரசகுல்லா ..." நிலாவின் குரல் கேட்டதும் வாசலில் காத்திருந்த சஞ்சயின் முகம் மலர்ந்தது. ஓடோடியும் சென்று அவளை வரவேற்றான். உள்ளே முன்பதிவு செய்திருந்த மேசைக்கு அழைத்துச் சென்றான்.

    நிலா சுற்றிலும் பார்த்தாள். அவளைத் தவிர வேறு நண்பர்கள் யாரையும் காணவில்லை . அட... ரசகுல்லா நீ கஞ்சன்னு தெரியும். ஆனா இப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டின மகாகஞ்சனா இருப்பேன்னு தெரியாதுப்பா பிறந்த நாள் பார்ட்டிக்கு வான்னு வருந்தி வருந்தி கூப்பிட்டியே. குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் பேரையாவது வரச்சொல்லி இருப்பேன்னு பார்த்தா என்னையும் உன்னையும் தவிர யாரையுமே காணோமே. இந்தக் கண்றாவியையா பார்...ர்..ட்...டின்னு சொல்லி அலட்டினே? நீயும் உன் மூஞ்சியும்? சிரிக்காதே... பயமா இருக்கு...

    முகம் சுளிக்கும் நிலாவை வைத்த விழி வீழ்த்தாமல் பார்த்தான் சஞ்சய். வம்பு தேடி அலையும் துறுதுறு வண்டு விழிகள். படபடவென பேசும் சின்ன செப்பு வாய். பரபரவென மின்னலாய் பாய்ந்து காரியம் முடிக்கும் புத்திசாலித்தனம் பார்க்கப் பார்க்க நெஞ்சை அள்ளியது.

    போன வருட பிறந்தநாளன்று இந்தக் குறும்புக் காரியோடு அவனுக்கு வரப்போகிற காதலைப் பற்றி யாராவது சொல்லி இருந்தால் சஞ்சய் சொன்னவரை கேலி செய்து கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரித்திருப்பான். ஆனால் வாழ்க்கையென்னும் சுவாரசியமான புத்தகத்தில் எந்த பக்கத்தில் ஏது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதே... அப்படி ஏதோ ஒன்று நடந்து தான் இப்படி ஒரு இன்பமான சுவாரசியம் எதிரில் உட்கார்ந்திருக்கிறது!

    மேலே சிந்திக்க முடியாமல் அவனை சொடக்கிட்டு கலைத்தாள் நிலா. "ஏய்... என்ன பே... பே... ன்னு பார்த்துக்கிட்டிருக்கே? பிறந்தநாள் கேக்கு கூட வெட்டமாட்டியா? எங்க உன் கஞ்சத்தனத்துக்கு ஒரு இட்லிகூட வெட்டிடமாட்டே போலிருக்கே. ஒரு வாய் ஐஸ்கிரீமாவது வாங்கித் தருவியா. இல்லை அதுவும் மாட்டியா? நான் கிளம்பறேன்பா ...’’

    "நிலா... உட்காருப்பா.... விருந்தை எந்த தித்திப்போட ஆரம்பிக்கலாம்னு யோசித்தேன். கோவிச்சிக்கறியே. நீ எப்படிப்பட்ட மகாராணி... உனக்கு விருந்துன்னா லேசா?’’

    "போதும்.. போதும்... நிறுத்து... இப்படி எதையாவது பேசி என்னை ஏமாத்திடலாம்ன்னு பார்க்கறியா? அது நடக்காது. எங்கம்மாகிட்டே மட்டன் பிரியாணி செய்யச் சொல்லிட்டுதான் வந்திருக்கேன். அரைமணி நேரத்தில் வீட்டுக்குப்போய் சுடச்சுட சாப்பிட்டுத் தூங்கிடுவேன். நீ இங்கேயே கிட...’’ என்றபடி திரும்பவும் நிலா எழுந்தாள்.

    ‘‘நிலா ப்ளீஸ்... உட்காரு.. உனக்கு என்ன தித்திப்பு பிடிக்கும்னு சொல்லு. அதையே கொண்டு வரச் சொல்றேன்..." சஞ்சய் கேட்டான்.

    "ஐய்ய... எனக்குப் பிடிச்ச ஸ்வீட்டா? எனக்கு எதுவும் அப்படி இல்லப்பா. நான் டயட்ல இருக்கேன். ஸ்வீட்டெல்லாம் சாப்பிடமாட்டேன். சரி... சரி... பிறந்தநாளும் அதுவும் நீ அழுது வடியாதே. போனால் போகட்டும். உனக்காக ஒரே ஒரு வாய் ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டு வைக்கிறேன். பேமிலி பேக் ஒரு பத்து கொண்டு வரச் சொல்லு...’’

    பணியாள் விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே உள்ளே போனார். ஐஸ்கிரீம் வந்ததும் பரபரவெனப் பிரித்து சிட்டுக்குருவி போல வாயைத் திறந்து சாப்பிடக் கிளம்பினாள். தனக்கு எதுவும் சொல்லக்கூட தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

    இந்தா... நான் சாப்பிடறதைக் காணாததைக் கண்ட மாதிரி பார்த்துக்கிட்டிருக்காதே. அப்புறம் எனக்கு வயித்தை வலிக்கும். எதையாவது வாங்கித்தின்னுத் தொலை. ஆமாம்... என்னப்பா அதிசயமா இருக்கு? நீ பல்லு விளக்கினாயா? முடிவெட்டிக்கிட்டியா? நகம் வெட்டிக்கிட்டியா? குளிச்சியா? எல்லாத்துக்கும் மேலா லவ்ஸ் விவகாரம் எதிலாவது மாட்டிக்கிட்டியான்னு வேவு பார்க்க வருவாரே உன் ரத்தன மாம். அவரு இந்த மிகச்சிறந்த பிறந்தநாள் விழா பார்ட்டிக்கு வரலியா?

    குழந்தை போலக் குறும்பு மின்னமின்னக் கையாட்டிப் பேசும் அவள் முகத்தை கையிலேந்தி முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது சஞ்சய்க்கு.

    "மாமா... ரெண்டு நாளைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1