Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jwalai
Jwalai
Jwalai
Ebook151 pages56 minutes

Jwalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பிறவியில் ஒருவர்க்கு தீங்கு செய்தால் மறுபிறவியில் தீங்கு செய்தவர் தண்டனை பெறுவர் என்று மனு தர்மம் கூறுகிறது. ஆனால் ஆசிரியர் இந்நாவலில், அதே பிறவியிலேயே தீங்கு செய்தவர் தண்டனை பெறுவதை தத்ரூபமாக சிவப்பிரகாசம் என்னும் பாத்திரப்படைப்பின் மூலம் தெளிவாக்குகிறார்.

சிவப்பிரகாசத்தால் கொலை செய்யப்பட்ட லஷ்மி, மஞ்சரி என்ற மறு ஜனனம் பெற்று, சிவப்பிரகாசத்தை பழி தீர்த்துக்கொள்ள முனைவது கதையின் கரு. மற்றுமுள்ள பாத்திரப் படைப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803413
Jwalai

Read more from Maharishi

Related to Jwalai

Related ebooks

Reviews for Jwalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jwalai - Maharishi

    http://www.pustaka.co.in

    ஜ்வாலை

    Jwalai

    Author:

    மகரிஷி

    Maharishi
    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    மஞ்சரி எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ஜன்னல் பக்கம் பிரம்புமொடாவை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

    அவள் பார்வை தோட்டத்துப் பக்கம் இருந்தது.

    வேகமாக அடிக்கும் காற்றில் தோட்டத்து மரங்கள் கட்டுப்பாடின்றி ஆடின. மரத்தைச் சுற்றியிருந்த கொடிகள் பிடிப்பைத் தளர்த்திக் கொண்டு தோரணங்களாகத் தொங்கின.

    இரண்டு மூன்று நாட்களாகவே இப்படித்தான் திடீர் திடீரென்று மாலை நேரத்தில் காற்று உக்கிரமாகச் சாடுகிறது.

    மஞ்சரிக்குப் பின்னால் அவள் தாயார் ரத்தினம் வெளியே வீசும் காற்றைவிட வேகமாக மகளைச் சாடிக் கொண்டிருந்தாள்.

    உன் மனதில் நீ என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்... உன் அப்பா இருக்கும் வரையில் நீ ரொம்ப நல்ல பெண்போல இருந்துவிட்டு அவர் போய் இரண்டு வருஷத்தில் என்னை ஏன் இப்படிப் பாடாய் படுத்துகிறாய்?

    மஞ்சரி பேசவில்லை.

    இதுவரையில் மூன்று வரன்கள் வந்து விட்டன. மூன்றும் மிக உயர்ந்த இடங்கள். நல்ல குடும்பப் பின்னணி, பையன்களும் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள். அந்த மூவரில், ஒரு பையனைக் கூட வா உனக்குப் பிடிக்கவில்லை? அத்தனை அழுத்தம் உனக்கு. என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டே.

    முதலில் வந்த பையன் ஒரு பெரிய கம்பெனியில் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் இருந்தான். பெங்களூரில் சொந்த வீடு இருந்தது. குடும்பத்தில் மூத்த பிள்ளை. சிக்கல் அதிகமில்லாத குடும்பம். அவர்களும் அப்படியொன்றும் அதிகமாகக் கேட்டுவிடவில்லை. கெளரவமாக விவாகம் செய்து கொடுத்தால் போதும் என்றார்கள்.

    தாயார் ரத்னா மஞ்சரியிடம் கெஞ்சிப் பார்த்தாள்.

    அதற்கு அவள் பிடிகொடுத்து பதில் ஏதும் சொல்லவில்லை.எனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம். கல்யாணம் செய்து கொள்ளக்கூடிய மன நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டாள்.

    அதற்கடுத்த படியாக வந்த வரன் டெல்லியிலிருந்து வந்தது. பையன் பார்க்க ரொம்பவும் அழகாக இருந்தான். மத்திய அரசின் வெளியுறவுத் துறையில் ஒரு இலாக்காவில் முக்கிய பொறுப்பில் இருந்தான். அவர்களும் ஆடம்பரமான விவாக ஏற்பாடுகள் வேண்டாம் என்றும், குருவாயூர் ஆலயத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டால் போறும். டெல்லியில் தங்கள் செலவில் பெரிய வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்து கொள்வதாக கூறிவிட்டுப் போனார்கள். ஏழைகள் என்று கேவலமாக நினைக்கவில்லை. பெண் அழகாக இருக்கிறாள், படித்திருக்கிறாள் அது போதும் என்று கூறினார்கள்.

    அதற்கும் அவள் பிடி கொடுத்து பதில் சொல்லாமல் தட்டிக் கழித்து விட்டாள்.

    எனக்கு கொஞ்ச நாள் உத்தியோகம் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அதோடு டெல்லி போன்ற இடங்களெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. பையன் ஒட்டகம் போல உயரம்... அது இது என்று சொல்லி வேண்டாம் என்பதை மறைமுகமாகக் கூறிவிட்டாள்.

    ரத்னா அதிகம் எதிர்பார்த்ததும் இந்த வரனைத் தான். எப்படியும் இந்த பையனை அவளுக்குப் பிடித்து விடும் என்று அவள் நம்பினாள்.

    நம்பிக்கை நிறைவேறவில்லை.

    மூன்றாவது!

    ரத்னாவுக்கே பிடிக்கவில்லை. பெண் பார்க்க வருகிறோம் என்று சொன்னவர்களை வேண்டாமென்று தடுக்க முடியவில்லை.

    இரண்டு வரன்களுக்கும் நேர்ந்த கதிதான் இதற்கும் என்பதும் முன்கூட்டியே தெரிந்து விட்டது.

    அது தான் நடந்தது.

    கணவன் இறந்த பின் அவளை வைத்துக் கொண்டு நெருப்புடன் இருப்பதுபோல இருந்தாள் ரத்னா.

    ஒரு சமயம் சாதாரண நீரோடைப்போல காணப்படும் அவள் சில சமயம் கட்டுப்பாடின்றி ஓடும் காட்டாறுபோல இருந்தாள்.

    கணவன் இருந்தவரை தந்தை-மகள் உறவிலே ஒரு இறுக்கமும், அதே நேரத்தில் கட்டுப்பாடும் இருந்தது. அவர் ஒரு சப்தம் போட்டால் போறும்.

    உள்ளே தாயாருடன் வார்த்தைக்கு வார்த்தை வாயாடிக் கொண்டிருப்பவள்… பெட்டிப் பாம்பாகி விடுவாள்.

    ஆனால்,

    இப்பொழுது சில நாட்களாக அவள் ஒரு அடங்காப் பிடாரி போலவே இருந்தாள்.

    மகளிடம் காணப்படும் இந்த குணங்களால் ரத்னா அமைதி குலைந்து போயிருந்தாள்.

    இரவு நேரங்களில் எழுந்து உட்கார்ந்து இருளையே பார்த்துக் கொண்டிருப்பது...

    அறையில் அமைதியின்றி உலவுவது... கண்ணாடி முன் நின்றுகொண்டு அதில் தெரியும் தன் முகத்தையே பார்ப்பது...

    ஒரு முறை

    பீரோ கதவில் பொறுத்தப்பட்டிருக்கும் பெரிய கண்ணாடியில் தன் உருவத்தையே பார்த்த வண்ணம் நின்றிருந்தாள். இதைப்பார்த்துவிட்டு தாயார் கேட்டாள்:

    எத்தனை நேரமா உன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு நிற்பாய்?

    இது என் முகமில்லேம்மா...யாருடைய முகமோ...எனக்கு வந்திருக்கு"- என்றாள்.

    பைத்தியம், பேசாம அந்தண்ட போ...யாராவது கேட்டால் சிரிக்கப் போகிறார்கள்...

    மஞ்சரி சிரிப்பாள்...

    இப்படித்தான் ஏதாவது அடிக்கடி அவர்களிடையே சச்சரவு மூளும். சின்னதாக ஆரம்பிக்கும், பெரிதாக முடியும். சில சமயம்-

    ஒரு தாய், மகள் என்கிற எல்லைகள் எல்லாம் உடைந்து போய்விடும்...உன் வேலையைப் பார்த்துக்கொண்டு நீ போ...நீ யார் எனக்கு புத்தி சொல்ல...நான் என்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரியும்- என்பாள்.

    இப்படி வார்த்தைகள் அதன் கரைகளை உடைத்துக் கொண்டு புறப்படும்போது ரத்னா உடல் குலுங்க அழுதுகொண்டு அறையின் மூலையில் போய் முடங்கி விடுவாள்.

    இப்பொழுது...

    இதோ...அவள் விவாகப் பிரச்னை வந்தபோது வார்த்தைகள் அதன் எல்லைக்கோடுகளை மெதுவாகத் தாண்டிக் கொண்டிருந்தன.

    ஆனால்...

    தாயார் ரத்னா அடங்கிப்போய் விட்டாள்.

    அவர் போனதற்குப் பதிலாக நான் போயிருக்கலாம். இந்த பிசாசோட நீயே இரு என்று என்னைத் தனியே விட்டுவிட்டு அவர் போய்விட்டார்

    உன் இஷ்டம் எதுவோ அதைச்செய். பகவான் விட்ட வழி...

    மஞ்சரி சிரித்துக் கொண்டாள்.

    ரத்னா அழுதாள்.

    2

    காலையில் வீட்டின் முன் ஹாலில் உட்கார்ந்து காபியைக் குடித்துக் கொண்டிருந்தபோது ஆங்கில தினசரி மாயமாய் வந்து விழுந்தது.

    சுவரில் சாய்ந்து நின்று பேப்பரைப் பக்கம் பக்கமாகத் திருப்பியவள் நான்காவது பக்கத்தை பிரித்தபோது அப்படியே பிரமை பிடித்துப் போய் நின்றுவிட்டாள்.

    அவள் உடம்பில் உஷ்ணம் ஜ்வாலையாகப் பரவியது. கண்கள் சிவந்தன... கரங்கள் நடுங்கின.

    பேப்பரை அப்படியே கீழே போட்டுவிட்டு தோட்டத்தில் நடந்தாள் .... காரணமின்றி இரண்டு கைகளையும் மடக்கிக் கொண்டாள். காலில் இடரியதை உதைத்தாள்.

    சிவப்ரகாசம்....சிவப்ரகாசம்...மீண்டும் கீழே கிடந்த தினசரியை எடுத்தாள்.

    அதில் அந்த நான்காவது பக்கத்தில் புகைப்பட மொன்றுடன் அந்த செய்தி:

    'கீழ் திசை நாடுகளுக்கு வியாபார மற்றும் உல்லாச சுற்றுப் பயணம் மேற்கொண்டு விட்டு தாயகம், திரும்பும், சூரியன் மார்க் தீப்பெட்டி தொழிற்சாலை அதிபர் சேலம் சிவப்ரகாசம் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்-அவர் நண்பர்கள்.'

    மார்பு அளவிலான புகைப்படம். கோட்டும் டையும் அணிந்து நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதர். கொஞ்சம் நீள மான முகம், கண்கள் அகலமாக இருந்தன.

    வேகமாக உள்ளே வந்தாள். தனது புத்தக அலமாரியில் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் புத்தகங்களைக் கலைத்தாள். புத்தகங்களுக்கு நடுவே எதையோ தேடினாள்.

    அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடிதங்களைக் கலைத்து எதையோ தேடினாள்.

    தாயார் ரத்னா அவளுடைய தேடலைச் சில நிமிஷங்கள் மெளனமாகப் பார்த்தபடி நின்றாள்.

    என்ன தேடுகிறாய்?

    பதில் இல்லை.

    என்னடி அப்படி தேடுகிறாய்?

    தாயாரைச் சினத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். அந்த கண்களில் ஜ்வாலையின் வீச்சு இருந்தது. திரும்பி நின்றவள்,

    இங்கே நிறைய கல்யாணப் பத்திரிகைகள் அடுக்கி வைத்திருந்தேனே, அவைகளை எங்கே கொண்டுபோய் வைத்தாய்?

    எந்த கல்யாணப் பத்திரிகை?

    எது என்று சொல்ல அவசியமில்லை. இந்த ஒரு வருஷமாக நமக்கு வந்த எல்லா கல்யாண அழைப்பிதழ்களையும் இங்கே அடுக்கி வைத்திருந்தேன்

    Enjoying the preview?
    Page 1 of 1