Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sagiye Snegithiye
Sagiye Snegithiye
Sagiye Snegithiye
Ebook167 pages57 minutes

Sagiye Snegithiye

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்தமானில் வல்கனோலஜிஸ்ட் ஆக(எரிமலைஆராய்ச்சியாளர்) பணிபுரியும் முகுந்தனுக்கு வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. காரணம் அவன் ராஜ பரம்பரையை சேர்ந்தவன்.

தங்கை மேல் உயிரை வைத்திருக்கும் அவன் அவளுக்கு ஆபத்து என்று தெரியவரும் பொழுது எரிமலை போல் கொதிக்கிறான். ஆபத்திற்கு காரணமான மிதுசிகாவை அவன் எளிதில் விட்டு விட்டு விடுவானா என்ன?

கதைக்குள் பயணிப்போமா?

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580140910611
Sagiye Snegithiye

Read more from Lakshmi Sudha

Related to Sagiye Snegithiye

Related ebooks

Reviews for Sagiye Snegithiye

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sagiye Snegithiye - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சகியே ஸ்நேகிதியே

    Sagiye Snegithiye

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 1

    போக

    வேண்டிய

    பாதை

    வெகு தூரம்

    பாதையில்

    மலர்களை

    எதிர்பார்க்கவில்லை

    ஆனால்

    கால் பதிக்கும்

    இடமெல்லாம்

    முட்கள்

    ஏன்.?

    தொலைதூரத்தில்

    வெளிச்சம்

    தெரிகிறது

    அதை

    நோக்கி

    நான்

    பயணிக்கிறேன்

    அருகில்

    வந்த

    பிறகு

    வெளிச்சம்

    தள்ளிப்

    போகிறது

    ஏன்?

    மொபைல் போனில் வந்திருந்த வாட்சப் மெசேஜை மீண்டும் ஒரு தடவை படித்தாள் மிதுசிகா.

    "அக்கா நீங்கள் உடனே அந்தமானிற்கு வரவேண்டும்.

    இட் இஸ் வெரி அர்ஜென்ட்.

    வந்த பின்பு என்னை தொடர்பு கொள்ளுங்கள் அதுவரை தொடர்பு கொள்ள வேண்டாம்."

    சித்தார்த் அனுப்பி இருந்த செய்தி அவளை குழப்பத்தை ஆழ்த்தியது.

    எப்பொழுதும் தம்பி வாட்ஸ்அப்பில் பெரும்பாலும் ஜோக்ஸ் அனுப்புவான்.

    முக்கியமான தகவல்களை அனுப்புவான். ஆனால் இன்று திடீரென்று வந்த ஒரு செய்தி ஏதோ சரி இல்லை என்று அவளுக்கு சொல்லாமல் சொல்லியது.

    ஒரு மாதம் முன்பு தனக்குத் தெரிந்த அந்த தகவல் தம்பிக்கும் தெரிந்திருக்குமா?

    வேண்டாம் தம்பிக்கு தெரிந்தால் மனம் மிகவும் சங்கடப்படும்.

    தெரியாமல் இருப்பது தான் நல்லது.

    ஆனால் தம்பிக்கு ஏதோ ஆபத்து என்று உள்உணர்வு சொல்கிறது. இருவரும் ரெட்டையர் அதனால் திரைப்படங்களில் வருவது போல் மகிழ்ச்சி சம்பவங்கள் இருவர் வாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் நடக்கும்.

    அதேபோல் தான் துயரமான சம்பவங்களும் ஒரே சமயத்தில் நடக்கும்.

    நேற்று அலுவலகத்தில் பெரிய பிரச்சனை. இவள் வேலை பார்த்த கிளைன்ட் கடைசி நிமிஷத்தில் விளம்பரம் நான் நினைத்தது போல் இல்லை என்று சொல்லியதால் மேனேஜரிடம் நன்றாக திட்டு வாங்கும் படி ஆயிற்று.

    வாராவாரம் அந்த கம்பெனிக்கு டெமோ எல்லாம் பிரசண்ட் செய்தபொழுது அப்பொழுது எதுவும் சொல்லாமல் மூன்று மாதங்கள் கழித்து விளம்பர படம் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை அதனால் எங்களுக்கு வேண்டாம் என்று

    கேன்சல் செய்தது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    அவளுடைய மேனேஜர் ராகவன் ஷார்ட் டெம்பர் பர்சன்.

    நாம் செய்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. திடீரென்று கேன்சல் செய்வது அவர்கள்தான் என்று எவ்வளவோ சொல்லி புரிய வைக்க முயன்றாலும் அவன் அதை காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.

    அதற்கு மேல் பேசினால் அதனால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்து பத்து நிமிடத்திற்கு பின்பு பதில் ஏதும் சொல்லாமல் அறையில் இருந்து வெளியே வந்தது அவள் நினைவுக்கு வந்தது.

    நேற்று எனக்கு ஆஃபீஸில் பிரச்சனையிலிருந்து அதேபோல் தம்பிக்கும் ஏதாவது பிரச்சனைனா என்னவென்று புரியவில்லை என்று குழப்பத்தில் ஆழ்ந்தாள் அவள்.

    மித்து என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா வெளுத்து போய் இருக்கு முகம்

    என்றபடியே அவள் தோளில் கைப்பதித்தாள் ராதிகா.

    ஓ சாரி உடம்புக்கு ஒன்றும் இல்லை

    "அப்ப மனதில் குழப்பமா நேற்று ராகவன் சொன்னதை யோசித்துக் கொண்டிருக்கிறாயா?

    கமான் கான்ட்ராக்ட் கேன்சலானதுக்கு நீ பொறுப்பாக முடியாது.அதனால் எல்லா பழியையும் உன் மேல் நீயாக தூக்கிப் போட்டுக் கொள்ளாதே.

    இந்த கில்ட் கான்ஷியஸ் அனாவசியமாக ஸ்ட்ரெஸை உண்டு பண்ணும்"

    என்றாள் பரிவான குரலில் ராதிகா.

    தேங்க்ஸ் ரதி. தம்பி அந்தமானிற்கு phd படிப்பு விஷயத்திற்காக போயிருக்கிறான் என்று உனக்குத் தெரியும்

    எஸ் நீ தான் அதை வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருப்பாயே அதனால் எனக்குத் தெரியும் என்றாள் சிரித்தபடியே ராதிகா.

    ஆமாம்என்றபடியே தம்பி அனுப்பி இருந்த whatsapp மெசேஜ் பற்றி ராதிகாவிடம் சொன்னாள் மிதுசிக்கா.

    "மார்க் ஏதாவது கம்மியாக வாங்கி இருப்பான். அதனால் ஸ்பானக்ஷிப் ஏதாவது கிடைக்காமல் இருந்திருக்கும்.

    சொன்னால் நீ கஷ்டப்படுவாய் என்று தெரிந்த உன்னை நேரில் வர சொல்லி இருக்கலாம் அதனால் உடனே அந்தமான் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்."

    ^நீ சொல்வது போல் இருந்தால் நன்றாக இருக்கும்.ஆனால் ஒரு வாரம் முன்பு தான் இவனுடைய ப்ராஜெக்ட் ஸ்காலர்ஷிப்புக்கு செலக்ட் ஆகி இருக்கிறது என்று சொன்னான் அதனால் மனதில் நெருடல் இருக்கிறது."

    "சில் ரொம்ப யோசிக்காதே மித்து.லீவ்

    சொல்லிவிட்டு உடனே கிளம்புவதற்காக ஏற்பாடுகளை செய்.

    இப்பொழுது புது பிராஜெக்ட் எதுவும் உன் கையில் இல்லை தானே ‘

    "ஆமாம் இப்பொழுது எதுவும் இல்லை.இன்னும் இரண்டு வாரம்

    ஆகும் என்ற நினைக்கிறேன். புதிதாக பிராஜெக்ட் ஒன்று பைப் லைனில் இருப்பதாக ராகவன் சொன்னார் "

    "அது நல்ல விஷயம்தான். உனக்கு லீவ் கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

    நான் வேண்டுமானால் லேட்டஸ்ட் ஃப்ளைட் ஸ்டேட்டஸ் பார்க்கவா."

    "ஆமாம் ரதி.

    பார்த்துவிட்டு உடனே புக் செய்து விடு. நான் லீவ் பற்றி பேசிவிட்டு வருகிறேன்"

    என்று சொல்லிவிட்டு ராகவன் அறையை நோக்கி சென்றாள் மிதுசிக்கா.

    அத்தியாயம் 2

    நான்

    ஏதோ

    ஒரு புதிய

    உலகில்

    இருக்கிறேன்

    என்னை

    சுற்றி

    எங்கும்

    இருள்

    சூழ்ந்து

    இருக்கிறது

    என்ன

    செய்வது

    இந்த

    இடத்தில்

    என்று

    தவித்து

    தயங்கி

    கொண்டு

    இருக்கும்

    பொழுது

    பொழுது

    ஒரே ஒரு

    ஒளி விளக்கு

    என்னை நோக்கி

    அருகே வருகிறது...

    ஒளிவிளக்கு

    சிறிது

    சிறிதாக

    அன்பைப்

    பொழியும் தேவதையாக

    மாறியது...

    சட்டென்று

    கண்

    விழிக்கிறேன்

    நான்...

    போர்ட் பிளேயர் ஏர்போர்ட்டில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

    மிதிசுக்காவின் மனம் ஏனோ படபடத்தது. ராதிகாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். வேகமாக டிராவல் அரேஞ்ச்மென்ட் எல்லாம் அவள் தான் செய்து முடித்தாள்.

    பிளைட் புக்கிங் இங்கு தங்குவதற்கு இடம் என எல்லாமே பார்த்து பார்த்து செய்ததால் ஒருவழியாக இப்பொழுது இங்கே வந்து சேர்ந்து விட்டேன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து யோசித்து விடை தெரியாமல் தவித்தாள் அவள்.

    விமானத்தில் இருந்து இறங்கிய பின்பு தம்பி சித்தார்த்தை

    தொடர்பு கொள்ள முயன்றாள் அவள்.

    நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நம்பர் இப்பொழுது தொடர்பு எல்லையில் இருந்து வெளியே இருக்கிறது என்று தொடர்ந்து

    தமிழிலும் ஆங்கிலத்திலும் ரெக்கார்டர் மெசேஜ் வந்த வண்ணம் இருந்தது.

    ஓ மை காட் இப்பொழுது என்ன செய்வது தம்பி எங்கே இருக்கிறான் என்ன செய்கிறான் எதற்காக என்னை அவசரமாக இங்கே வரச் சொன்னான் எதுவும் புரியவில்லையே என்று குழப்பத்தில் ஆழ்ந்தாள் அவள்.

    "ஹலோ நீங்கள் உங்கள் தம்பி சித்தார்த்தை

    தேடிக் கொண்டுதானே இங்கே வந்திருக்கிறீர்கள்.கெட் இன்சைட்"

    என்று சொல்லியபடியே ஒரு ஆள் அவளை காரினுள் தள்ளினான்.

    யார் நீ உனக்கு எப்படி என்னுடைய தம்பி பெயர் தெரியும். விடு என்று அவள் திமிர முயன்றாள்.

    ஆனால் அதற்குள் கார் அதிவேகமாக அங்கிருந்து புறப்பட்டது.

    கைப்பையில் இருந்து கைபேசியை எடுக்க முயன்றாள் அவள். ஆனால் அதற்குள் அவள் அருகில் இருந்த அந்த முரட்டு உருவம் அவள் வாயை ஏதோ ஒரு துணி கொண்டு மூடியது.

    நாசியில் ஏதோ ஒரு மருந்து நாற்றம் கொஞ்சம் கொஞ்சம் பாகம் பரவ தொடங்கியது. அவள் கண்கள் தானாக மூடிக்கொண்டன.

    அதற்குப் பின்பு நடந்தது எதுவும் அவள் நினைவில் இல்லை. வேறு உலகில் பயணிப்பது போல் மயக்கமாக உணர்ந்தாள் அவள்.

    "சார் நீங்கள் சொன்னபடியே செய்து முடித்து விட்டோம்.

    அந்த அறையில் தான் படுத்து இருக்கிறாள்."

    என்று சூரஜ் சொன்ன செய்தி முகுந்தனின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.

    "தேங்க்யூ நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் அங்கே

    Enjoying the preview?
    Page 1 of 1