Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Naan... Naalai Nee...
Indru Naan... Naalai Nee...
Indru Naan... Naalai Nee...
Ebook143 pages46 minutes

Indru Naan... Naalai Nee...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வைஷ்ணவ குலத்தைச் சேர்ந்தவராகிய விஜய ராகவாச்சாரியார், தன் மகள் வைதேகி 'விஸ்காம்' படிக்க வைக்கிறார். எதிர்பாராத விதமாக டைரக்டர் ராஜராஜனை சந்திக்கிறாள் வைதேகி. இவர்களின் இந்த சந்திப்பு வைதேகி பாதகமாக அமைந்ததா? இல்லை சாதகமாக அமைந்ததா? என்பதை, 'இந்துமதி'யின், 'இன்று நான்... நாளை நீ...' இக்கதையில் வாசிப்போம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateMay 27, 2023
ISBN6580123909408
Indru Naan... Naalai Nee...

Read more from Indhumathi

Related to Indru Naan... Naalai Nee...

Related ebooks

Reviews for Indru Naan... Naalai Nee...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Naan... Naalai Nee... - Indhumathi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    இன்று நான்... நாளை நீ...

    Indru Naan... Naalai Nee...

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    1

    துள்ளலும் துடிப்புமாக வீட்டுக்குள் நுழைந்தாள் அவள். அவனைச் சந்தித்த சந்தோஷம் மனசெல்லாம் நிறைந்து கிடந்தது. அவனைச் சந்திப்போம் என அவள் எதிர்பார்க்கவே இல்லை. எப்பேர்ப்பட்ட டைரக்டர். ஒட்டுமொத்தத் திரை உலகையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவன். விருதுகளாக அள்ளிக் குவித்திருப்பவன். இளைஞன். இப்போதுதான் திரைத்துரையில் நுழைந்திருப்பவன். திரைப்படக் கல்லூரியில் படித்தவனோ, யாரிடமாவது உதவியாளனாகப் பணிப்புரிந்தவனோ அல்ல. தானாக முன்னுக்கு வந்தவன். அவனைப் பார்த்ததும் அவள் அசந்து போனாள். அவனே ஒரு ஹீரோ மாதிரித்தான் இருந்தான். நல்ல உயரம். செக்கச் செவேலென்ற நிறம். கண்களும், முகமும் துறுதுறு வென்றிருந்தன. ரோஸ் நிற உதடுகளில் கள்ளமற்ற சிரிப்பு ஓடியது. பார்த்ததும் தன் மனதைப் பறிகொடுத்தாள். நீல நிற ஜீன்ஸ் பாண்ட்டும். மெரூன் கலர் டீ ஷர்ட்டும் அவனை மிகவும் எடுத்துக் காட்டின. கல்லூரி மாணவனைப் போலிருந்தவன், உதவி டைரக்டர் கொடுத்த பேடை வாங்கி ஷாட் பிரித்தான். காமிராமேனைக் கூப்பிட்டு தனக்கு என்ன வேண்டுமென்று சொன்னான். புரொடக்‌ஷன் பையன் கொண்டுவந்த உணவைத் தவிர்த்தான். ‘எல்லாம் ஃபர்ஸ்ட் ஷாட் முடிஞ்சப்புறம்தான்!’ என்றான்.

    ஆர்ட்டிஸ்ட் ரெடியா? என்று கேட்டான்.

    ரெடி சார் என்கிற பவ்வியமான குரலுக்குப் பின்னர், லைட்டிங் முடிச்சுக் கூப்பிடுங்க... என அமைதியாகப் போய் உட்கார்ந்து கொண்டான்.

    அவனருகில் யாரும் போகவில்லை. அவனாகக் கூப்பிட்டால் தவிர யாரும் போகவில்லை. சிந்தனையைக் கலைக்க மாட்டார்கள். ஒட்டுமொத்தத் திரை உலகமும் அந்த இளைஞனிடம் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தது.

    பத்திரிகைகளும், மீடியாக்களும் போற்றிப் புகழ்ந்தன. இரண்டே திரைப்படங்களில் உச்சத்தைத் தொட்டான் அவன். ஒரு முப்பது வயது இளைஞனால் இவ்வளவு சாதிக்க முடியும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

    இத்தனைக்கும் அவன் திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவனில்லை. மிகச் சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவன். சினிமாவை மிக அதிகம் நேசித்தவன். எல்லாரையும் போலவே பாடுபட்டு புரொடியூசருக்குக் கதை சொல்லி டைரக்டரானவன். அவனது மாறுபட்ட அணுகுமுறை காரணமாக படம் அமோக வெற்றி பெற்றது. ஒரே நாளில் அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது.

    இந்த வெற்றி அவனே எதிர்பாராதது. தன் படம் நிச்சயம் பேசப்படும். வெற்றி பெறும் என்று நினைத்தானேதவிர இந்தளவு வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. அந்த வெற்றி தந்த தைரியத்தில் அடுத்த படத்தில் இறங்கினான். மிகப் பெரிய தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் கொட்டத் தயாராக இருந்தார். ஆனால் அவன் மிகக் கவனமாகக் கால எடுத்து வைத்தான். கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் தேவைக்கு மேல் செலவழிக்காதவனாக இருந்தான். பிரம்மாண்டத்தைவிட கதையையும், எடுக்கும் முறைகளையும் விரும்பினான். அதனாலேயே தயாரிப்பாளர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டனர். ஆனாலும் அவன் மிகப் பக்குவமாய் தயாரிப்பாளரைத் தேர்ந்தெடுத்து இந்த மூன்றாவது படத்தில்தான் வெளிப்புறப் படப்பிடிப்பிற்கே வந்திருந்தான். லைட்டிங் பண்ண நேரம் கொடுத்து முதல் ஷாட்டிற்காக காத்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக அவன் கண்களில் பட்டாள் அவள். பளீரென்ற அந்த முகமும், குழந்தை மாதிரியான அழகும், தேவதை போன்ற தோற்றமும் ‘யார் இவள்?’

    2

    சப்பணமிட்டுத் தரையில் உட்கார்ந்து மிகக் கவனமாக விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்த விஜய ராகவாச்சாரியார் துள்ளிக் குதித்துக்கொண்டு உள்ளே வந்த மகளை ஏறிட்டுப் பார்த்தார். அவள் முகம் எல்லையில்லாத ஒரு சந்தோஷத்தைக் காட்டியது. துள்ளலும், துடிப்பும், உற்சாகமும், சந்தோஷமுமாக அவள் வருவது அவருக்குப் புதிதல்ல. வீட்டின் முன் பக்கமிருக்கும் சின்னத் தோட்டத்தின் புல்தரையில் உள்ள பனித்துளிகளைப் பார்த்து மகிழ்வாள். ரோஜா மொட்டுக்கள் பூவாக மலருவதைக் கண்டு குதூகலிப்பாள்.

    இதெல்லாம் எப்போது எப்படி பூவாக மலருதுன்னு பார்க்கணும்பா

    அதெல்லாம் ஈஸ்வர சிருஷ்டிம்மா... பார்க்க முடியாது! ஆனால் அவள் அதைக் கேட்கவில்லை. ஒரு நாள் ராத்திரி முழுதும் கூடை நாற்காலியைப் போட்டுக்கொண்டு ரோஜாச் செடியின் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள். ஆனால் அவளால் அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

    போங்கப்பா... லேசா கண் இழுத்துண்டு போன சமயத்துல டக்குனு மலர்ந்துடுத்துப்பா... பார்க்க முடியல... என்று சிணுங்கினாள்.

    நான்தான் முடியாதுன்னு சொன்னேனேம்மா... என்றார் அவர்.

    ஆனால் அன்று முழுதும் சமாதானமடையாமல் புலம்பிக்கொண்டே இருந்தாள். இருபது வயது முடிந்தும் இன்னும் குழந்தைத்தனம் மாறாமலிருந்த மகளைப் பற்றி பெருமையோடுதான் நினைத்துக் கொள்வார் அவர். தாயற்ற பெண் என்பதால் அதிகச் செல்லம் கொடுத்துதான் வளர்த்தார். அவளை வளர்ப்பதற்கென்றே கணவனற்ற தன் தங்கையை ஸ்ரீரங்கத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார். ஸ்ரீரங்கத்தை விட்டுவர அந்த அம்மாவுக்கு மனசில்லை.

    ரங்கனை விட்டு நான் எங்கண்ணா மெட்ராஸ் வருவது? என்று தவிர்க்கப் பார்த்தாள்.

    ஆனால் அவர் விடவில்லை.

    என் குழந்தை மூஞ்சியைப் பார்த்துட்டு பதில் சொல்லு ரங்கம்மா!

    ‘மாசு மருவற்ற கள்ளம் கபடமில்லாத வெள்ளை முகம் கண்டு உருகிப்போனாள். அந்த எட்டு வயதுச் சிறுமிக்கு முன்பு ரங்கன்கூட இரண்டாம் பட்சமானான். இந்தப் பெண்ணை வைத்துக்கொண்டு அண்ணா மட்டும் என்ன செய்வான் பாவம்? வீட்டைக் கவனிப்பானா, பெண்ணைக் கவனிப்பானா, வேலையைக் கவனிப்பானா? எதைச் செய்வான்? தன்னந்தனி ஆளாக இங்கிருப்பதைவிட அங்கு போய் அவர்களுக்கு உதவி செய்வதுதான் உத்தமம்.’ இரண்டே நார் மடிப் புடவையும், வெள்ளைச் சோளியையும் மடித்து எடுத்துக்கொண்டு அவரோடு கிளம்பிவிட்டாள் ரங்கம்மாள். அன்றிலிருந்து இன்று வரை அந்தப் பெண்ணிற்காகவே

    Enjoying the preview?
    Page 1 of 1