Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indrum Varam Tharum Yogini Siddharkal
Indrum Varam Tharum Yogini Siddharkal
Indrum Varam Tharum Yogini Siddharkal
Ebook287 pages7 hours

Indrum Varam Tharum Yogini Siddharkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்திய பூமி இயல்பிலேயே ஞானம் தோய்ந்தது. ஆண்களோடு பெண்களும் ஆன்மீக விளக்குகளாக சுடர்விட்ட தேசம். பக்தி யோகத்தில் தலைசிறந்து விளங்கிய 24 யோகினியரின் புனித சரித்திரம் இங்கே விரிகிறது, பிரபல நாவலாசிரியை திருமதி. இந்துமதியின் அழகு தமிழில்!

இன்று பெண்கள் பல துறைகளிலும் கால்பதித்து ஆக்கபூர்வமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல், விண்வெளி, விளையாட்டு என பல தளங்களைத் தொட்டு வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.இப்படி வெற்றி பெற்ற பெண்களில் ஆன்மிகத்திலும் முன்னேறி அதிலும் உன்னதங்களைத் தொட்ட பல பெண் யோகினிகள் உண்டு; சக்தி இல்லாமல் சிவம் ஏது என்பதை மெய்ப்பித்திருக்கிறார்கள். இவர்கள் தான் இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள். வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580123904231
Indrum Varam Tharum Yogini Siddharkal

Read more from Indhumathi

Related to Indrum Varam Tharum Yogini Siddharkal

Related ebooks

Reviews for Indrum Varam Tharum Yogini Siddharkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indrum Varam Tharum Yogini Siddharkal - Indhumathi

    http://www.pustaka.co.in

    இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள்

    Indrum Varam Tharum Yogini Siddharkal

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காரைக்கால் அம்மையார்

    2. ஷிவம்மா தாயி

    3. ஹஸ்ரத் பாபா ஜான்

    4. பக்த கருமா பாய்

    5. அவ்வையார்

    6. பக்த குபராபாய்

    7. அக்க மஹாதேவி

    8. ஆண்டாள்

    9. பக்த ஜனா பாய்

    10. சாந்த சக்குபாய்

    11. அன்னை சாரதா தேவி

    12. பக்த ராமாபாய்

    13. சபரி

    14. பக்த பிரேமா பாய்

    15. அமிர்தானந்த மயி

    16. பக்த குணவதிபாய்

    17. பக்த சிளாபாய்

    18. ஆனந்த மயிமா

    19. பக்த கோமா பாய்

    20. ஸ்ரீ அரவிந்த அன்னை!

    21. பக்த முக்தா பாய்

    22. கிரிபாலா

    23. மாயம்மா

    24. பக்த மீரா

    1. காரைக்கால் அம்மையார்

    E:\Books mail\rajesh anna\files\may\New folder\1.JPG

    இன்று பெண்கள் பல துறைகளிலும் கால்பதித்து ஆக்கபூர்வமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல், விண்வெளி, விளையாட்டு என பல தளங்களைத் தொட்டு வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

    இப்படி வெற்றி பெற்ற பெண்களில் ஆன்மிகத்திலும் முன்னேறி அதிலும் உன்னதங்களைத் தொட்ட பல பெண் யோகினிகள் உண்டு; சக்தி இல்லாமல் சிவம் ஏது என்பதை மெய்ப்பித்திருக்கிறார்கள்.

    காரைக்கால் அம்மையார், அவ்வை பிராட்டி, முக்தாபாய், பக்தமீரா, ஆண்டாள், ஆனந்தமயிமா, அன்னை ஷிவம்மாதாயி, மாயம்மா, பாபாஜான், சாரதாதேவி போன்றோரும், ஒரு துளி நீரோ, ஒரு பிடி உணவோ கூட உட்கொள்ளாமலே வாழ்ந்த கிரிபாலா போன்ற உயர் ஆன்ம நிலையை எட்டிய யோகினிகள் எத்தனையோ பேர்!

    இந்தப் பட்டியலில் முதலில் வருகிறார் காரைக்கால் அம்மையார்!

    மிக உயர்ந்தவர்களையும், பெரியவர்களையும், நாம் பெயர் சொல்வதில்லை. காந்தியடிகளின் இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆனால், நாம் அழைப்பதோ மகாத்மா காந்தி. பட்டினத்து சுவாமிகளுக்கு அவரின் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர். அழைப்பதோ பட்டினத்து சுவாமிகள். ஜனகரின் திருநாமம் சீரத்துவஜா. ஆனால், அவர் குடும்பப் பெயரான ஜனகர் என்றே அழைக்கப்பட்டார்; அறியவும் பட்டார்.

    அதுபோல் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி. புனிதவதி அம்மையார் என்றுகூட கூறப்படவில்லை. ஊர்ப் பெயரான காரைக்காலைச் சொல்லி காரைக்கால் அம்மையார் என்றே அறியப்படுகிறார்.

    இந்த அம்மையாருக்கு மிகப்பெரும் கவுரவமும் தனிப்பெரும் மகிமையும் உண்டு. சிவாலயங்களில் 63 தனியடியார்களும், 9 தொகையடியார்களும் உண்டு. இந்த 72 வடிவங்களில் காரைக்காலம்மையாருக்கு மட்டுமே அமர்ந்த வடிவம். மற்ற 71 வடிவங்களும் நின்ற வடிவங்கள்தான். காரைக்கால் அம்மையார் புனிதவதி என்ற பெயரோடு வைசிய குலத்தில் பிறந்து காரைக்காலம்மையாராக திருவாலங்காட்டில் முக்தி பெற்றவர். இவர் 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருஞானசம்பந்தரோ ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த அவர் திருவாலங்காட்டிற்கு எழுந்தருளிய போது, ‘இது காரைக்காலம்மையார் முக்தி பெற்ற ஸ்தலம். ‘இந்த மண்ணை நான் கால் வைத்து மிதிக்கமாட்டேன்’ என எல்லைக்குள் நுழையாமல் நின்றவருக்கு ஈசன் எல்லைக்கு வெளியிலேயே காட்சி கொடுத்தாராம்.

    ஞானசம்பந்தரே காரைக்கால் அம்மையாரிடம் அத்தனை பணிவும், பக்தியும் கொண்டிருந்தார் என்றால், அம்மையின் மேன்மையை என்னவென்று கூறுவது?

    காரைக்கால் அம்மையார் பேய் வடிவம் கொண்டு துறவறம் பூண்டு சிவபெருமானும் பிராட்டியும் இருக்கின்ற காரணத்தினால், கைலாய மலையைக் காலால் மிதிக்காமல் தலையினாலேயே நடந்து போகின்றார். அதைக் கண்ட பார்வதி எல்லையற்ற அன்பினால் தவித்துப் போய் பரமசிவனிடம் கேட்டாராம்.

    சுவாமி... தலையினால் நடக்கவும் கூடுமோ? அவ்வாறு நடந்து மெல்ல மெல்ல கைலாயம் ஏறிவரும் இப்பெண்மணி யார்?

    அதற்கு ஈஸ்வரன் இப்படி பதிலளித்தாராம்,

    தலையினால் கைலாயத்தைக் கடந்து நம்மை நெருங்கிவரும் இவள் நம் இருவருக்கும் அம்மையாவாள்… எனக் கூறி தங்களை நெருங்கிவிட்ட காரைக்காலம்மையாரை நோக்கி ‘அம்மையே...’ என்று அழைத்தார்.

    அதைக் கேட்ட அம்மையார் மனமுருகி, நெக்குருகி ‘அப்பா’ என்று கூப்பிட்டு கதறி அழுதாராம். அவர் கால்களில் விழுந்து கண்களால் பாதங்களை ஒற்றி, இமைகளால் வருடி ‘அப்பா... அப்பா... அப்பா!’ என்று கரைந்துத்துவண்டாராம்.

    யாருக்குக் கிட்டும் இப்பாக்கியம்! எம்பெருமான் ஈஸ்வரன் ‘அம்மையே’ என்றழைக்க அம்மையார், ‘அப்பா... அப்பா...’ என்று உருக... மனக்கண்ணினால் அக்காட்சியைக் காணும் நாம் விழிகள் நீராக கரைந்து ஓட நிற்கிறோம்.

    அது மட்டுமா...?

    ஈசன் கேட்கிறார்.

    அம்மையே... என்ன வரம் வேண்டும் கேள்?

    ஐயனே... பிறவா வரம் வேண்டும்! என்கிறார் அம்மையார்.

    ஒரு வேளை மீண்டும் பிறந்தால்...? கொக்கி போட்டு இழுத்துப் பார்க்கிறார் ஈஸ்வரன்.

    உன்னை மறவா வரம் வேண்டும்! என முடித்து வைக்கிறார் அம்மை.

    பக்தர்களிடம் தோற்றுப்போவதில், தோல்வி காணுவதில் இறைவனுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்!

    அந்த ஆனந்தத்தில் அம்மையாரின் பேய் உருவம் மாறி புனிதவதியாகிப் பின்னர் காரைக்காலம்மையாராக உருவெடுக்கிறார்.

    புனிதவதி என்ற அழகும், அந்தஸ்தும், மிகப்பெரும் செல்வமும் கொண்ட இளம்பெண் பேய் உருவம் பூண்டு கைலயங்கிரிக்குத் தலையால் நடந்து சென்று ஈஸ்வரனாலேயே அம்மையே என்றழைக்கப்பட்டு காரைக்காலம்மையாரானது ஏன்? இதற்கு என்ன காரணம்? விதியா? விதியின் விளையாட்டில் சிக்கிய கட்டிய கணவனா... அல்லது மாம்பழ ரூபத்தில் நடைபெற்ற ஈசனின் சங்கல்பமா? திருவிளையாடலா?

    இனி புனிதவதியாரின் வழியாகவே காண்போம்!

    ‘சோழநாடு சோறுடைத்து’ என்பார்கள். யானை கட்டிப் போரடித்தவர்கள் அவர்கள். அவ்வளவு செல்வம், அவ்வளவு செழிப்பு. அப்பேர்ப்பட்ட நாட்டின் கடற்கரை நகரம், துறைமுகப்பட்டினம் காரைக்கால்.

    அந்த காரைக்காலின் வணிககுலத்தில் மிகப்பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். இப்போது வியாபாரிகள் சங்கத் தலைவர் இருக்கிற மாதிரி அப்போது வணிகர் குலத்திற்குத் தலைவர் இருந்தார். அப்பேர்ப்பட்ட செல்வந்தரும், தனவந்தருமான தனதத்தர் என்பவர்தான் வணிககுலத் தலைவர்.

    இந்த தனதத்தர்தான் திலகவதியின் தந்தையார்.

    நீண்டகாலமாக தனதத்தருக்குக் குழந்தை இல்லை. தனக்குக் குழந்தை வேண்டுமென்று தனதத்தர் பெரும்தவம் புரிந்தார். அத்தவத்தின் பலனாக புனிதவதி என்ற பேரழகான பெண் குழந்தை அவருக்குப் பிறந்தது.

    பிறந்த குழந்தையைக் கண்ட பெரியவர்கள், ‘செக்கச் செவேலென்று பொங்கிய பேரழகுப் புனிதவதி’ என்று மகிழ்ந்துவிட்டார்கள். ஆகவே அவர்கள் இட்ட பெயருடனே அக்குழந்தை அறியப்பட்டது.

    மற்ற குழந்தைகளெல்லாம் ஏதேதோ பேசி சிரித்து விளையாடுகின்றபோது புனிதவதி மட்டும் ஈசனது திருநாமத்தைச் சொல்லியவாறுதான் விளையாடுவாள். ஈசனது பெயரின் உச்சரிப்போடு உணவு உண்டாள். ஈசனின் ‘நமச்சிவாய’ நாமத்தை இடைவிடாது ஓதியபடியே படுத்து உறங்குவாள். ‘நின்றால் நடந்தால் உன் நினைவு’ என ஈஸ்வர சங்கல்பமே கதியே துணை என்றிருந்தாள்.

    வளர்ந்தபோதே எல்லாக் கலைகளையும் கற்றுணர்ந்தாள். சிவபுராணங்கள் அனைத்தையும் படித்துணர்ந்தாள். எழுதுவது சிவநாமம், பேசுவது சிவக்கதைகள். படிப்பது சிவபுராணம் என ‘சிவ சிவ சிவனே’ என்றிருந்தவள் பருவமடைந்ததும் மணமகன் வேட்டையில் இறங்கினார் தனதத்தர்.

    காரைக்காலிலிருந்து முப்பது கல் தூரத்தில் உள்ள நாகப்பட்டினத்தில் நிதிபதி என்ற செட்டியாரின் மகன் பரமதத்தனைப் புனிதவதிக்கு மணம் பேசி முடித்தனர். ஐந்து நாள் திருமணம். வெகு சிறப்பாக நடைபெற்றது.

    E:\Books mail\rajesh anna\files\may\New folder\2.JPG

    புனிதவதி புக்ககம் செல்கின்ற நாள் வந்தது. துடித்துப் போனார் தனதத்தர். பெண்ணைப் பிரிந்து வாழ முடியாது என்று நினைத்தார்.

    ஆகவே நிதிபதியிடம் மிகவும் இதமாகப் பேசி பெண்ணையும் மருமகனையும் அவ்வூரிலேயே தனிக்குடித்தனம் வைத்தார். அரண்மனை போன்ற வீடு. சேவகம் புரிய ஆட்கள்.

    மருமகனின் தொழிலுக்குக் கடை, கடைக்கு ஆட்கள் என புனிதவதியின் வாழ்க்கை பிரகாசமாகவே ஆரம்பித்தது. குறை என்பதே இல்லாத வாழ்க்கை. நிறைவிற்கு நிறைவான வாழ்க்கை. பரமதத்தனும் புனிதவதியும் ஈருடல் ஓருயிர் போல அனைவரும் மெச்சும்படி வாழ்ந்தார்கள்.

    இவ்வாறு சீரும் சிறப்புமாக, அன்பும் இன்பமும் பொங்க வாழ்ந்து கொண்டிருந்தபோதுதான் இறைவனின் திருவிளையாடல் மாம்பழ வடிவில் தொடங்கிற்று.

    ஒரு நாள் பரமதத்தன் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது நண்பர் ஒருவர் அருமையான இரு மாம்பழங்களைக் கொண்டுவந்து தந்தார். ‘இவை இரண்டும் மிகச் சிறந்த பழங்கள். உனக்காகவென்றே தனியாக எடுத்துக் கொண்டு வந்தேன் பரமதத்தா...’ என்று கூறி கொடுத்தான்.

    பரமதத்தன் அவ்விரு பழங்களையும் கடையாளிடம் தந்து ‘வீட்டில் அம்மாவிடம் கொண்டுபோய் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்! இரவு நான் வீடு திரும்பியதும் சாப்பிடலாம் எனச் சொன்னேன், என்று சொல்’ எனவும் கூறி அனுப்பினான்.

    அவ்விரு பழங்களையும் பெற்ற புனிதவதி கழுவி வைத்துவிட்டு பாதியில் நின்ற சிவபூஜையைத் தொடரச் சென்றார்.

    அப்போது சிவனடியார் ஒருவர் வீட்டு வாசலில் வந்து ‘பிட்சாந் தேஹி... பவதி பிட்சாந் தேஹி...’ என்று குரல் கொடுத்தார்.

    பாதி பூஜையில் இருந்த புனிதவதி எழுந்து வந்து சிவனடியாரை வணங்கி அவருக்குப் பாதபூஜை செய்து உள்ளே அழைத்து வந்து அமரச் செய்தார்.

    தலைவாழை இலையிட்டு, செம்பில் தண்ணீரும் வைத்த பின்பு ‘இதோ வந்து விடுகிறேன்’ என்று கூறி அடுக்களைக்குச் சென்று பார்த்தார்.

    வெறும் சாதம் மட்டும் வடித்து வைக்கப்பட்டிருந்தது. பருப்பு அடுப்பில் வேக, காய்கறிகளை வெளியே சமையற்காரர் நறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

    ‘ஐயோ... சிவனடியார் உணவிற்கு ஒன்றுமில்லையே... வெறும் அன்னத்தை மட்டும் எவ்வாறு படைப்பது?’ என்று யோசித்தவளுக்கு உள்ளே உறியில் செம்பு நிறைய கெட்டியான பசும்தயிர் இருக்கும் என்பது ஞாபகத்திற்கு வந்தது.

    மடமடவென்று சிவனடியாரின் இலையில் அன்னமிட்டு கெட்டியான பசும் தயிரையும் விட்டாள். இரண்டையும் கலந்த சிவனடியாருக்கு வெஞ்சனமில்லையே என்று வருந்தினாள். உடனே கணவர் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்கள் ஞாபகத்திற்கு வந்தன. அதில் ஒன்றை எடுத்துவந்து அடியாரின் இலையில் இட்டாள்.

    மாம்பழமும் தயிர் சாதமும் தேவாமிர்தமாக இருக்க மிகத் திருப்தியாக உண்டுகளித்த சிவனடியார் அவளை வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கணவர் வியாபார ஸ்தலத்தை விட்டுத் திரும்பினார்.

    ‘புனிதவதி, மிகவும் பசியாக உள்ளது, சாப்பாடு போடு, கூடவே நான் கொடுத்தனுப்பிய மாம்பழங்களில் ஒன்றையும், இலையில் வை’ என்றான் பரமதத்தன்.

    அவ்வாறே செய்தாள் புனிதவதி. உணவோடு மாம்பழத்தை உண்டு பரமதத்தன் அதன் அற்புதமான சுவையில் மயங்கி, ‘புனிதவதி, அந்த இன்னொரு மாம்பழத்தையும் கொண்டுவந்து இலையில் போடு!’ என்றான்.

    அதைக்கேட்ட புனிதவதி நடுங்கிப் போனாள். இன்னொரு மாம்பழம் எங்கே இருக்கிறது? அதைத்தான் சிவனடியாருக்கு தயிர் சாதத்துடன் சமர்ப்பித்து விட்டாளே? சிவனடியார் உண்டு களித்த மாம்பழத்தை எவ்வாறு திரும்பக் கொண்டுவர முடியும்? இப்போது மாம்பழத்திற்கு என்ன செய்வது?

    கைக்கூப்பி புனிதவதி இறைவனை வேண்டிய பொழுதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அதுவே சாதாரண சிவபக்தையான புனிதவதியை காரைக்காலம்மையாராக மாற்றும் வல்லமை பெற்றதாயிற்று!

    புனிதவதி கையேந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது ஈசனருளால் அவள் கையில் மாம்பழம் ஒன்று வந்து விழுந்தது. திகைத்துப் போனாள். ‘ஐயனே... என் மீது இத்தனை கருணையா?’ என நெக்குருகினாள். கரகரவென்று கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டபோது, புனிதவதி... மாம்பழம் கொண்டுவர இவ்வளவு நேரமா? என்று பரமதத்தனின் குரல் கேட்க, ஈசன் தந்த மாம்பழத்துடன் வந்த புனிதவதி அதைக் கணவனின் இலையில் இட்டாள். அதை உண்ணத் தொடங்கிய உடனே அதன் சுவை அது சாதாரண பழமில்லை எனப் புரிந்துவிட்டது பரமதத்தனுக்கு. மனைவியை ஏறிட்டுக் கேட்டான்.

    புனிதவதி... இது நான் கொடுத்து அனுப்பிய மாம்பழமன்று. இதன் சுவை அதிமதுரமாய் இனிக்கிறது. இது தெய்விகப் பழம்போல் இருக்கிறது என்றதும் குறுக்கிட்ட புனிதவதி, ‘அது தெய்விகப் பழமேதான்!’ என்று கூறி நடந்த மொத்த விஷயங்களையும் விவரித்தாள். அதைக் கேட்ட பரமதத்தனுக்கு நம்பிக்கை வரவில்லை.

    என்ன! ஈசன் பழமளித்தாரா? இது நம்பும்படி இல்லையே புனிதவதி. நீ கேட்டதும் ஒரு பழம் அளித்த ஈசன் இன்னொரு பழமும் அளிப்பார் அல்லவா... ஈசனிடம் வேண்டி இன்னொரு பழம் கொண்டு வா பார்க்கிறேன்…

    ஒரு வினாடி புனிதவதி தயங்க, பரமதத்தன் சற்றுக் கேலியாகவே கேட்டான்.

    ஏன் தயங்குகிறாய் புனிதவதி. அப்படியானால் நீ கூறியது உண்மை இல்லையா? இந்த மாம்பழத்தை வேறு எங்கிருந்து பெற்றாய்?

    துடித்துப் போனாள் புனிதவதி.

    இல்லை ஐயனே... நான் கூறியதனைத்தும் மெய்மைதான். ஈசனே மனமிரங்கி எனக்களித்த மாம்பழம்தான் அது...

    அப்படியானால் அந்த ஈசனிடம் இன்னொரு மாம்பழம் கேட்க ஏன் தயங்குகிறாய்? கேட்டு இன்னொன்றைப் பெறு பார்ப்போம்...

    கையேந்திய புனிதவதி ஈசனிடம் மறுபடியும் வேண்ட, அவள் கைகளில் விழுந்த மாம்பழத்தைக் கண்ட பரமதத்தன் அதிர்ந்து போனான். அப்பழத்தைக் கணவனுக்கு அளித்த புனிதவதி, ஈசனுக்கு எவ்வளவு கருணை. மற்றொரு மாம்பழத்தையும் அளித்திருக்கிறார். உண்ணுங்கள்... என்றாள். அவள் குரலில் அன்பும் பிரீதியும் நிறைந்திருந்தது.

    ஆனால், பரமதத்தன்

    Enjoying the preview?
    Page 1 of 1