Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanmeega Amudham Part - 3
Aanmeega Amudham Part - 3
Aanmeega Amudham Part - 3
Ebook506 pages3 hours

Aanmeega Amudham Part - 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆன்மிகம் என்பது பல நுண்ணிய அரிய கருத்துக்களை உள்ளடக்கிய பெரிய விருட்சம். ஒரு கருத்தை மட்டும் உள்ளடக்கியவை அல்ல. அன்று சமய சாஸ்த்திரங்கள், புராணக் கதைகள், தத்துவக் கருத்துக்கள், உபநிடதக் கருத்துக்கள் என்று பற்பல விஷயங்களை உடலுக்கும் உள்ளத்துக்கும் பலப்படுத்தும் அருமையான மருந்து என்றும் கூறலாம். அடியார்களின் செம்மை மொழிகள் நம்மை நல்வழிபடுத்துகின்றன. எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதையும் பாடம் புகட்டுக்கின்றன. அமுதம் என்பது சாவா மருந்து. ஆன்மிக அமுதம் நம்மை நீண்ட காலம் வாழ வைக்கும் சாவா மருந்து என்பது உண்மை.

படித்துப் பார்க்கும் வாசகர்கள் இந்த ஆன்மிக அமுதம் அருமையானது என்று உணருவீர்கள். படித்துத் தித்திப்பை உணரும் உங்களுக்கு என் நன்றியைத் தெருவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்

அன்புடன்,
லட்சுமி ராஜரத்னம்.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580115704708
Aanmeega Amudham Part - 3

Read more from Lakshmi Rajarathnam

Related to Aanmeega Amudham Part - 3

Related ebooks

Reviews for Aanmeega Amudham Part - 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanmeega Amudham Part - 3 - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    ஆன்மீக அமுதம் பாகம் – 3

    Aanmeega Amudham Part - 3

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஈசனே அழைத்த காரைக்கால் அம்மையார்

    கனக துர்க்கா

    சோலைமலை குமரன்

    வந்தது வசந்தம்

    தில்லை நடராஜனின் ஆனித் திருமஞ்சன அபிஷேகம்!

    சூரிய நாராயணா போற்றி

    பால்குண உத்திரம்

    வைசாக பவுர்ணமி

    ஆடி விரதங்கள்

    நலம் தரும் நவராத்திரி

    ‘பட்டர் பிரான்’

    பாவையரும் பாவையும்

    குறுமுனிவர்

    தேவி துர்க்கா

    நாச்சியார்

    அபிஷேகப்பிரியர்

    உல்லாச தீபாவளி

    வழித்துணை

    இளவேனிற் விழா

    அற்புத விநாயகர்கள்

    அகிலாண்டேஸ்வரி

    வால்மீகியின் கதை

    கார்த்திகையும் மதிநிறைந்த மார்கழியும்!

    சிவனவன் அனுமன்!

    அறம் செய விரும்பு!

    காரணகர்த்தா கரிமுகர்

    சகல செல்வங்களும் தரும் தாயே!

    தீபாவளியும் கந்தசஷ்டியும்!

    உருவில் ஒன்றானவள்

    மகத்துவ மாசி

    பிட்டுக்கு மண் சுமந்த பித்தன்!

    உலக நாயகி

    இந்தப் ‘பிள்ளை’ யார்?

    மரகத லிங்கத்துக்கு பூஜை நடக்கும் சப்தவிடங்கர்

    கார்த்திகை வைபோகமே

    அம்பலத்து மருந்து

    அம்பிகையை சரண் புகுந்தால்!

    கங்கா ஸ்நானம்!

    வருவாய் வரம் தருவாய்!

    காவிரித்தாயே எங்களை காக்க வா!

    கண்ணா... மணிவண்ணா!

    வித்தகா போற்றி விநாயகா போற்றி!

    நமசிவாய பொருளோனே!

    சித்திரை சிறப்பு

    தர்ம சாஸ்த்ரையனுக்கு ஜெயமங்களம்!

    மாசியில் பிறந்த மன்னர்

    உலகமெங்கும் தீபாவளி...

    வருவாய் அருள்வாய் கலைவாணி...

    ஈசனே அழைத்த காரைக்கால் அம்மையார்

    காரைக்கால் அம்மையார்! இவர் யார்? காரைக்காலுக்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதால் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படுகிறாரா? காரைக்காலில் பிறந்து விட்டதினால் 'காரைக்கால் அப்பன்' என்றோ, 'காரைக்கால் அம்மை' என்றோ அழைக்கப் படுவதில்லை. அப்படி அழைப்பதானால் எல்லோரையுமே அப்படித்தான் அழைக்கப் பட வேண்டும்!

    காரைக்கால் அம்மையாரின் தனிச் சிறப்பு என்ன?

    தேவர்கள், மனிதர்கள் என்று எல்லோருமே ஒரு நாள் அழியக் கூடியவர்கள்தான். பிறப்பும் இறப்பும் இல்லாத ஒருவர் உண்டென்றால் அவர் சிவபெருமான் தான்.

    'அஜம் த்ருவம், அஜாத இத்யேதவம்' என்று சுருதி வாக்கியங்கள் அவரைச் சொல்லுகின்றன.

    'பிறவா யாக்கை பெரியோன் கோயில்' என்று சிலப்பதிகாரம் சிறப்பிக்கிறது.

    ஏதவனூர்? ஏதவன் பேர்? யார் உற்றார்? யார் அயலார்? ஏது அவனைப் பாடும் பரிசு? என்று கேட்கிறார் மாணிக்க வாசகர்.

    இத்தகைய பிறப்பு இறப்பும் இல்லாத - ஆதி அந்தம் கடந்த நித்யானந்தப் பரம்பொருளினால் அம்மையே என்று அழைக்கப் பெற்ற பெரும் சிறப்பையுடையவர் காரைக்காலம்மையார் ஒருவரே!

    காரைக்கால்!

    நிறைந்த வளங்கள் பெருகத் திகழும் பதி காரைக்கால். இது துறைமுகப்பட்டினம். இந்நகரில் பெருவணிகர்கள் குடிகள் நெருங்கி வாழ்ந்தனர். இவர்கள் குறைவில்லாத செல்வமும், சீரும் உடையவர்கள். மரக்கலங்கள் வந்து அயல்நாட்டுப் பொருள்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக வாணிபத்தில் உயர்ந்து சிறப்புடைய இந்நகரில் வாழ்கின்ற வணிகர்களின் தலைவர் தனதத்தர்.

    நற்குணங்கள் நிரம்பப் பெற்ற தனதத்தர் தம்பதியர்க்கு மகப்பேறு இல்லை. ஆனால் இவர்களின் அருங்குணங்களினால் புரிந்த அருந்தவப் பயனாய் திருமகளாக பெண் மகவு அவதரித்தது. அவளுக்குப் புனிதவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    புனிதவதி தளர்நடை புரியும் காலத்திலேயே பாம்பணிந்த பரமனிடம் தணியாத காதலுடன் சிவநாமமே உச்சரித்து வந்தார். அழகுக் கொழுந்தாக வளர்ந்த புனிதவதி திருத் தொண்டர்கள் வந்தால் அன்புடன் தொழுவார். புனிதவதி மங்கைப் பருவம் அடைந்தார்.

    வணிகர் குலத்தில் புகழ் பெற்ற நீதிபதி என்பவர் நாகைப்பட்டினத்தில் வாழ்ந்து வந்தார். இவருடைய அருந்தவப் புதல்வன் பரமதத்தன். நீதிபதி புனிதவதியாரின் குண நலன்களைக் கேள்விப்பட்டு அவரைத் தன் மகன் பரமதத்தனுக்குத் திருமணம் செய்ய விரும்பினார். புனிதவதியாரை மணம் பேசும் பொருட்டு அறிஞர்களைக் காரைக்காலுக்கு அனுப்பி வைத்தார்.

    அச்சான்றோர்கள் தனதத்தரிடம் முறைப்படி பெண் கேட்டுப் போய் பேசினார்கள் மாப்பிள்ளையின் குலம், குடி, கோத்திரம் என்று எல்லாமே ஒத்துப் போனபடியால் தனதத்தன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். திருமண நாளும் குறிக்கப்பட்டது. மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் சுற்றத்தார்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களும் திருமண அழைப்பு அனுப்பினார்கள்

    புனிதவதியார்க்கும் - பரமதத்தனுக்கும் மிகமிக சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. மணப்பெண் புனிதவதியை மணமகன் வீட்டிற்கு அனுப்புவதுதானே முறை? தன் ஒரே புதல்வி புனிதவதியாரை புகுந்த வீடான நாகைக்கு அனுப்ப மனமின்றி தவித்தார் தனதத்தர். தன் அருமை சம்பந்தியாகிய நீதிபதியிடம் அனுமதி பெற்று தன் மாளிகையின் அருகாமையிலேயே அழகிய மாளிகை ஒன்றைக் கட்டுவித்து தன் மகள், மருமகனைக் காரைக்காலிலேயே தங்க வைத்துக் கொண்டார்.

    மாமனார் தந்த செல்வத்தைக் கொண்டு மருமகனான பரமதத்தன் வாணிபம் செய்து இளம் மனைவி புனிதவதியுடன் இன்பமாக வாழலானான்.

    வளப்பமான வாழ்வு கொண்டதினாலோ என்னவோ புனிதவதியார் தம்முடைய மனையை நாடி வரும் சிவனடித் தொண்டர்களுக்கு அன்ன தானமும் ஆடைகளும் வாரி வழங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

    ஒரு நாள்...

    பரமதத்தன் தன் வாணிபம் செய்யும் இருப்பிடத்தில் இருந்தான். அவனுடைய நண்பர் ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மாங்கனிகள் இரண்டும் அன்று தன் வாழ்க்கையின் போக்கையே மாற்றப் போகிறது என்று அறியாத பரமதத்தன் ஏவலாள் மூலம் வீட்டிற்குச் சென்று கொடுத்து விட்டு வரச் சொன்னான்.

    புனிதவதியார் அக்கனிகளை வாங்கி வைத்துக் கொண்டார். தமக்கு ஒரு சோதனை வரப் போவதை அறியாமலேயே. சற்று நேரத்தில் ஒரு சிவனடியார் வயிற்றில் வடவாக்கினியைப் புகுத்திக் கொண்டவராக புனிதவதியார் வீட்டின் முன்பு வந்து நின்றார். சிவனடியாரைக் கண்டதும் புனிதவதியார் முகமலர்ந்து போனார்.

    தாயே, எனக்கு பசியாக இருக்கிறது. என்ன இருக்கிறதோ அதை எனக்கு உணவிடு என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டார்.

    சிவனடியாரின் அகோரப் பசியைப் புரிந்து கொண்ட புனிதவதியார் பதைபதைத்தார். சமையலறையில் வெறும் சாதம் மட்டும்தான் தயாராகி இருந்தது.

    ஐயனே, அமுது மட்டும் தானே தயாராக இருக்கிறது என்று புனிதவதியார் கூற -

    அம்மா, அதுவே எனக்குப் போதும். பெருங்குடலை சிறுகுடல் தின்பது போல இருக்கிறது. உடனே எனக்கு உணவளியுங்கள் தாயே என்று சிவனடியார் பரபரத்துப் போனார்.

    புனிதவதியார் அவசரமாக இலையைப் போட்டு சிவனடியாரை அமர்த்தி அன்னமிட்டார். அவரோ வெறும் அன்னத்தை அள்ளி அள்ளி உண்டார். பிக்ஷை கேட்கும் பிக்ஷாடனர் அல்லவா? கலத்தில் உள்ள பிக்ஷையை அள்ளி உண்டதைப் பார்த்த புனிதவதிக்கு கணவன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகள் நினைவுக்கு வந்தன. இரண்டில் தன் பங்கிற்கு ஒரு மாங்கனி உண்டல்லவா? இந்த நினைப்பில் ஒரு மாங்கனியை வெறும் அன்னத்தை அள்ளி உண்ணும் சிவனடியாரின் கலத்தில் கொண்டு பரிமாறினாள்.

    மிக்க நல்லது என்று கனியை உண்ட அடியார் புனிதவதியாரை வாழ்த்தி விட்டுச் சென்றார்.

    உச்சி வேளையில் உணவு உண்ண வீட்டிற்கு வந்தான் பரமதத்தன். கணவருக்கு இலை போட்டு அறுசுவை அமுதைப் படைத்த புனிதவதியார் அவன் கொண்டு வந்த மாங்கனியை கலத்தில் வைத்தார். அக்கனியின் ருசியோ பரமதத்தனை இன்னொரு பழத்தையும் தானே உண்ண வேண்டும் என்ற வேட்கையைத் தந்தது என்றும் எண்ணலாம்.

    இது இறைவன் செய்யப் போகும் திருவிளையாடலின் ஆரம்பம். இல்லாவிட்டால் மனைவி புனிதவதிக்கு ஒன்று இருக்கட்டும் என்று எண்ண மாட்டானா!

    புனிதவதி கனி மிகவும் சுவையாக இருக்கிறதே, இன்னொன்றையும் கொண்டு வந்து போடு என்று கட்டளை இட்டான்.

    ஒரு வேளை பரமதத்தன் கோபக்காரனாக இருப்பானோ என்னவோ? இல்லாவிட்டால் அம்மையார் ஏன் அஞ்ச வேண்டும்? இங்கு பெண்மையின் குணநலன்களை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

    சிவனடியார்க்குக் கொடுத்து விட்டேன் என்றால் அவன் கோபிப்பான். ஏன் இரண்டில் ஒன்றை நான் தின்று விட்டேன். இரண்டு பழங்களில் ஒன்று எனக்கும் பங்கு உண்டல்லவா என்றும் புனிதவதியார் கூறியிருக்கலாம்.

    பொய்மை கலவாத பெண்மை நலம் மிக்கவர் புனிதவதியார். இது பெண்மையின் அருங்குணங்களில் ஒன்று. சட்டென்று பொய் கூற வராத பெருங்குடிப் பிறப்பின் பெருந்தகையான மாண்பு. அதனால் பழத்தை எடுத்து வருபவர் போல உள்ளே சென்றார். பழம் இருந்தால் தானே வெளியே வர முடியும்?

    மனம் தளர்ந்தார். உமைபாகனை உளமார துதித்தார்.

    தேவ தேவா, கங்காதரா, உம் அடியார்க்கு ஒரு கனியைப் படைத்து விட்டேன். என் கணவரோ இன்னொரு கனியைக் கேட்கிறார். என் அல்லலை நீர்தான் தீர்க்க வேண்டும் என்று உள்ளம் உருக வேண்டினார்.

    கருணை வள்ளலான கண்ணுதற் கடவுள் அவளிடம் ஒரு மாங்கனியை ஈந்தார். அதைக் கொண்டு வந்து கணவனின் கலத்தில் வைத்தார் புனிதவதியார். கணவனோ அக்கனியைச் சுவைத்து முகம் மாறினான்.

    புனிதா, இக்கனி நான் கொண்டு வந்த கனியைவிட சுவை அதிகம் உள்ளதாக இருக்கிறது. இக்கனியை எங்கு பெற்றாய்? என்று கேட்டான்.

    இக்கேள்வியினால் புனிதவதியார் மனம் கலங்கினார். இறைவனின் திருவருளை வெளிப்படுத்தவும் கூடாது. அதே சமயம் பொய் கூறவும் கூடாது. இனியும் பேசாமல் இருத்தல் கூடாது.

    சுவாமி, தாங்கள் அளித்த கனிகளில் ஒன்றை மிகுந்த பசியுடன் வந்த சிவனடியார்க்கு அளித்து விட்டேன். தாங்கள் இன்னொரு கனியைக் கேட்டதும், நான் பயந்து போய் சிவபெருமானிடம் கேட்டதும் கனியொன்றைத் தந்தருளினார்.

    புனிதவதியார் கூறியதை பரமதத்தன் சிறிதும் நம்பினான் இல்லை. புனிதவதி, நீ சொல்லுவதை நான் நம்புகிறேன் என்று வைத்துக் கொள். அவர் உனக்குக் கனி தந்தருளியது உண்மை என்றால் என் கண்ணெதிரேயே இன்னொரு கனியைத் தருவித்துக் காட்டு பார்க்கலாம் என்றான்.

    புனிதவதி இறைவனை மனமுருகி வேண்டினார். என்ன ஆச்சர்யம்! மீண்டும் ஒரு கனி வந்தது. அதனை பரமதத்தன் கையில் கொடுத்தார். பரமதத்தன் கையில் வாங்கிப் பார்த்த மறுகணமே அக்கனி மாயமாய் மறைந்தது. திருவருளின் திருச்சக்தியை கண்டதும் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. அவன் உள்ளம் நடுங்கியது.

    ‘புனிதவதியின் பெருமையை அறியாது நடந்து கொண்டு விட்டேனோ? இவள் மனித உடம்பெடுத்து நடமாடும் பெண் தெய்வமா? திருவருளை நம்பாது மறுபடியும் கனி கேட்டுத் துன்பப்படுத்தியது தவறே...' என்று வருந்தினான். இனியும் புனிதவதியார் தமக்குப் பணிவிடை செய்வது தவறு. அவரை விட்டு விலகி வாழ்வதே சிறப்பு என்று எண்ணினான்.

    காரைக்கால் அம்மையாரின் பெருமையை உணர்த்த வேண்டி இறைவன் திருவருள் சுவையுள்ள கனி மனைவியும் உண்ணட்டுமே என்று எண்ணாமல், இன்னொரு கனியையும் கொண்டு வா என்று கூறும்படி பரமதத்தனைத் தூண்டியது.

    புனிதவதியார் தொண்டு செய்யாமல் சிறிது காலம் ஒதுங்கிய பரமதத்தன், வாணிப நிமித்தம் அயல்நாடு சென்று வருவதாகக் கூறிச் சென்றான். எங்கு சென்றாலும் மனைவியை மனத்தால் வழிபட்டான். அயல்நாடு சென்று நிரம்ப பணம் ஈட்டினான். அங்கிருக்கும் பொருட்களை மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு தாய்நாடு திரும்பினான்.

    ஆனால் காரைக்காலுக்குத் திரும்பாமல் பாண்டிய நாட்டில் தங்கினான். அங்கேயும் தன் வியாபாரத்தைப் பெருக்கி நல்ல லாபம் சம்பாதித்தான். அவ்வூரில் உள்ள வணிகர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்து கொண்டான். பரமதத்தன் புது மனைவியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தாலும் காரைக்காலில் உள்ள தன் முதல் மனைவி புனிதவதியாரை எண்ணி அச்சம் கொண்டான்.

    புது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு மனத்தில் வைத்து வழிபடும் தெய்வமான புனிதவதியாரின் பெயரையே சூட்டினான்.

    புனிதவதியார் காரைக்காலில் சிவபக்தியுடன் வாழும் பொழுது, கணவன் பரமதத்தன் ஒரு பெண்ணுடன் வாழ்கிறான் என்பதை அறிந்தார். உற்றார் உறவினர்களுடன் மதுரை சென்று ஒரு சோலையில் தங்கி கணவனை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்.

    பரமதத்தனோ தன் மனைவி குழந்தையுடன் வந்தவன், தடாலென புனிதவதியாரின் கால்களில் விழுந்தான். புனிதவதியார் அச்சம் கொண்டு உறவினர்கள் பக்கம் ஒதுங்கினார்.

    பரமதத்தா, இது என்ன புதுமை? புனிதவதி யாரின் கால்களில் விழுகிறாயே? கணவன் மனைவியின் கால்களில் விழுவது சரியல்ல என்றார்கள்.

    பரமதத்தன் மாம்பழச் சம்பவத்தை விவரித்தான். இவர் மனைவி என்று கூறுவது அச்சத்தைத் தந்தது. புனிதவதியார் தெய்வீகப் பெண்மணி என்றான்.

    கணவன் தன்னை தெய்வீகப் பெண்மணி என்று கூறி ஒதுக்குவதைக் கண்ட புனிதவதியார் கணவனுக்குப் பணிவிடை செய்யாத இந்த வாழ்வு தனக்கு எதற்கு? என்று எண்ணினார். தன்னுடைய உடல் வனப்பைப் போக்கிப் பேயுரு தருமாறு இறைவனை வேண்டி அங்கேயே பேயுரு பெற்றார்.

    அக்கணம் மலர் மழை பொழிந்தது. வான துந்துபிகளின் ஒலி உலகெல்லாம் நிறைத்தது. சுற்றார்கள் வானளாவி நிற்கும் பேயுருக் கண்டு அஞ்சி ஓடினார்கள்.

    அம்மையார் காலால் கயிலையை மிதிக்க அஞ்சி தலையால் பேயுருவுடன் கயிலை மலைக்குப் பயணப்பட்டார்.

    தாம் அடைந்த சிவானுபவத்தை 'திருவந்தாதி' என்னும் நூலாகப் பாடினார். 'பொற்பாதம் போற்றும் நற்கணங்களில் நானும் ஒருவன் ஆனேன்' என்று துதித்துப் பாடினார்.

    முதன் முதலில் திருவந்தாதி பாடியவர் காரைக்கால் அம்மையார் தான் என்று கூறுவார்கள்.

    இரட்டை மணிமாலை என்னும் திருப் பிரபந்தத்தைப் பாடியருளினார்.

    சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண் நாயன்மார்கள் மூன்று பேர்கள். இயல் இசையில் - இரு தமிழிலும் வல்லவர் காரைக்கால் அம்மையார். இவர் பாடிய பதிகத்தை மூத்த திருப்பதிகம் என்பார்கள்.

    காரைக்கால் அம்மையார் பேயுருவுடன் தலையால் நடந்து வருவதைக் கண்டு மலைமகள் அச்சப்பட்டாளாம். அருகே வந்த அம்மையாரைக் கண்ட சிவனார் அம்மையே வருக என்று அழைத்தார்.

    இறைவனாலேயே 'அம்மையே வருக' என்று பெருமைபடுத்தப்பட்டவர் புனிதவதியார். அதற்கு அம்மையார் அப்பா என்று அழைத்துப் பணிந்தார்.

    என்ன வரம் வேண்டுமோ கேள் என்று சொன்னார் கயிலைமலையான்.

    அம்மையாரின் பாடலை இங்கு பார்க்கலாம்.

    "இறவாத இன்ப அன்பு

    வேண்டிப்பின் வேண்டுகின்றார்

    பிறவாமை வேண்டும்; மீண்டும்

    பிறப்புண்டேல் உன்னை என்றும்

    மறவாமை வேண்டும்; இன்னும்

    வேண்டுநான் மகிழ்ந்து பாடி

    அறவாநீ ஆடும் போதுன்

    அடியின் கீழ் இருக்க" என்றார்.

    'உம்மிடம் என்றும் நீங்காத அன்பு வேண்டும். பிறவாமை வேண்டும். ஒருகால் பிறப்பு உண்டேல் உம்மை ஒரு போதும் மறவாமை வேண்டும். நீர் ஆனந்தத் தாண்டவம் ஆடும் பொழுது உன் திருவடியின் கீழ் மகிழ்ந்து பாடிக் கொண்டு இருக்க வேண்டும்' என்று பொருள்பட மேற்படி பாடலைப் பாடினார் அம்மையார்.

    இறைவனும் தொண்டை வள நாட்டிலே இருக்கும் பழையனூர் அருகில் திருவாலங்காட்டில் தமது திருநடனத்தைக் கண்டு இன்புற்று எப்பொழுதும் தம்மைப் பாடிக் கொண்டிருக்கும் கருணையைக் கொடுத்தார். இறைவனின் ஆசியைப் பெற்ற அம்மையார் அப்பதியைக் காலால் மிதிக்க அஞ்சித் தலையால் நடந்து சார்ந்தார்.

    இன்றும் காரைக்கால் பதியில் ஆனி மாதத்தில் மாம்பழத் திருவிழா அற்புதமாக நடைபெறுகிறது. புனிதவதியாரிடம் மாம்பழம் வாங்கும் பிட்சாடனராக சிவபெருமான் வீதி வலம் வரும் பொழுது அனைவரும் அவர் மீது மாம்பழங்களை வர்ஷிக்கிறார்கள்.

    பிட்சாடனர் மீது மாம்பழங்கள் குவிகின்றன. வழிய வழியக் குவியும் மாம்பழங்களை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். தெருவெங்கும் மாம்பழங்கள் - மாம்பழச் சாலையாகத் தெரிகிறது.

    இறைவனாக வந்த சிவனடியாருக்கு மாம்பழம் அளித்து அழியாப் புகழ்பெற்ற அம்மையார் காரைக்கால் அம்மையாராக திருவீதி உலா வருகிறார். அம்மையார் பெற்ற பேறுதான் என்ன?

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த வண்ணம் காட்சி தருபவர்தான் காரைக்கால் அம்மையார்!

    *****

    கனக துர்க்கா

    அம்பாளுக்கு அருமையாக ஆயிரம் பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் துர்க்கை என்பது. துர்க்கை என்பது வீரத்தைக் குறிக்கும். இவள் ஒரு முகத்தையுடையவள். ஜ்வாலையை உடைய சிரஸை உடையவள். சிவந்த கண்களையும், எட்டுக் கைகளையும், கருமையான சரீரத்தையும், கோரமான பற்களையும் உடையவள். பலவகையான ஆபரணங்களை அணிந்தவள்.

    வில், அம்பு, கபாலம், கத்தி, சூலம், சக்கரம், கதை முதலியவற்றை ஆயுதங்களாக வைத்திருப்பவள். காலின் கீழ் - ஒரு காலை மகிஷாசுரனின் மத்தகத்தில் ஊன்றிக் கொண்டிருப்பவள். என்றாலும் பக்தர்களுக்கு அருள்புரிய மந்தஹாஸ வதனமாக சதா புன்னகை புரிந்து கொண்டிருப்பவள்.

    இவளை சதா எந்த நேரத்திலும் பூஜிக்கலாம். என்றாலும் ராகு காலத்தில் பெண்கள் எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, சிவப்பு வண்ணப் பூக்கள் அணிவித்து பூஜிப்பார்கள். இதனால் நினைத்த காரியம் கைகூடும். ராகு தேவனின் பூஜையை ஏற்ற இவள் ராகு காலத்தில் விளக்கேற்றி பூஜிக்கும் பெண்களின் குறைகளை நிவர்த்திக்கிறாள்.

    இது ராகு தேவன் பெற்ற வரம். இதனால் ராகு கால துர்க்கை என்றும் அழைக்கப்படுகிறாள்.

    துர்க்கை என்றால் துன்பங்களைத் தீர்ப்பவள் என்று பொருள். எல்லா ஆலயங்களிலும் பிரகாரங்களில் துர்க்கை சந்நிதியைப் பார்க்கலாம். இவளே விஷ்ணு துர்க்கை என்றும் அழைக்கப்படுகிறாள்.

    நவராத்திரியில் விஜயதசமி அன்று அம்பாளை துர்க்கையாகவே வழிபடுகிறோம். பிரபஞ்சம் முழுதும் வியாபித்திருப்பதால் பூரணியாகிறாள். மகிஷனை அழித்து மௌட்டிகத்தைப் போக்கி மகிஷாசுர மர்த்தினியாக மண்ணுலகத்தைக் காக்கிறாள்.

    துர்க்கா மகிஷாசூரனை துவம்சம் செய்த கதையைக் காணலாம்.

    ரம்பன், கரம்பன் என்று இரு அசுரர்கள் இருந்தார்கள். கரம்பன் பெரிய நதியில் நின்று தவம் புரிந்தான். ரம்பன் பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தான். கரம்பனின் தவத்தைக் கலைக்க எண்ணினான் தேவேந்திரன். நீரடியில் முதலையாக வந்து கரம்பனைக் கொன்று விட்டான். இதையறிந்த ரம்பன் கடுமையான தவத்தைச் செய்து தன் தலையையே கொய்து பஞ்சாக்னியில் போட முயன்றான்.

    இதைக் கண்ட அக்னி தேவன் மனம் மகிழ்ந்தான்.

    ரம்பா, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றான் அக்னி தேவன்.

    ரம்பனுக்கு தேவர்கள் மீது மிகுந்த கோபம் அல்லவா ஏற்பட்டிருந்தது. அவர்களை அழிக்கும் ஆத்திரம் ஏற்பட்டிருந்ததால் ஒப்புயர்வற்ற மகன் வேண்டும் என்று வரம் கேட்டான்.

    தூங்கி விழித்து எழுந்து வந்ததும் யாரை முதலில் பார்க்கிறாயோ அவளே உன் மனைவியாவாள் என்று வரம் பெற்றான்.

    விதி என்ற ஒன்று இருக்கிறதே. அதை யாரால் மாற்ற இயலும்? முதன் முதலில் பெண் எருமை ஒன்றை விழித்து எழுந்த ரம்பன் கண்டு, அதன் மீது காதல் கொண்டான். இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அந்த எருமை கரு தரித்தது. இந்த நிலையில் ஒரு எருமைக் கடா அந்தப் பெண் எருமை மீது காதல் கொண்டது.

    இது இயற்கை. ரம்பனோ தன்னுடைய எருமையைக் காப்பாற்ற எருமையுடன் பாதாள லோகம் புகுந்தான். அந்த எருமைக் கடாவோ விடாமல் பாதாள லோகம் புகுந்து ரம்பனுடன் போரிட்டது. போரில் ரம்பன் இறந்து விட்டான்.

    ரம்பன் இறந்ததைக் கேட்ட பெண் எருமை ரம்பனுடன் உடன்கட்டை ஏறத் தொடங்கியது. ஆனால் அது முடியாமல் அச்சமயம் அதற்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனே மகிஷன் என்னும் அசுரன் ஆவான். அவன் தேவர்களிடம் பகைமை பாராட்டினான். அவர்களை அழிக்க பிரம்மாவைக் குறித்துத் தவம் புரிந்தான்.

    மகிஷா, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று பிரம்மா கேட்டார்.

    நான்முகனே, பெண்ணைத் தவிர எனக்கு யாராலும் மரணம் உண்டாகக் கூடாது என்று வரம் கேட்டான்.

    பெண்களை சர்வசாதாரணமாக நினைத்தது மகிஷனின் தவறு. பின்னால் என்ன நடைபெறும் என்பதை உணர்ந்த பிரம்மா, மகிஷனுக்கு வரத்தை அளித்தார். மகிஷன் கர்வம் கொண்டு இந்திரனை ஓட ஓட விரட்டினான். இந்திரன் ஓடி ஒளிந்து கொண்டான். தேவர்கள் மகிஷனுக்கு அடிமையானார்கள். மகிஷனோ தேவேந்திரனின் பட்டத்து யானையான ஐராவதத்தின் மீது ஏறிக் கொண்டு தன் நகரம் வந்தான்.

    மகிஷனை எப்படி அடக்குவது என்று தேவ சபை கூடி ஆலோசித்தது. அவனுக்குப் பெண்ணால் தானே மரணம் உண்டாகும்? அப்படிப்பட்ட பெண் யாராக இருக்க முடியும்? மகா சக்தியான பராசக்தியாகத் தானே இருக்க முடியும்? பரமேஸ்வரனைக் குறித்துத் தவம் புரிந்து பராசக்தியை போரிடச் செய்ய சம்மதம் வாங்கினார்கள்.

    அன்னை பராசக்தியும் சம்மதித்தாள். சிங்க வாகனத்தில் ஏறிக் கொண்டாள். பராசக்தியின் பேரழகில் மயங்கிய மகிஷன் தன்னை மணக்கும்படி தன் மந்திரியை தூது அனுப்பினான். இதைக் கேட்ட பராசக்தி எள்ளி நகையாடினாள்.

    அருமையான தத்துவத்தைக் கூறினாள். ஏ மூடனே, நான் பரமேஸ்வரனின் பத்தினி. அவருக்குள் நானும், எனக்குள் அவருமாக இருக்கிறோம். மற்றவர்களுக்குத் தான் நாங்கள் தனித்தனியாகக் காட்சி அளிக்கிறோம். நாங்கள் இருவரும் ஒன்றே என்று உன் மகிஷனிடம் போய் சொல்லு என்று சக்தி கூற, பயந்து போன மூட மந்திரி ஓடிப் போய் மகிஷனிடம் கூறினான்.

    மூர்க்கமான கோபத்துடன் வருபவள் அகில உலகங்களையும் காக்கும் அன்னை ஆதி பராசக்தி என்று அறியாமல் மகிஷன் ஆக்ரோஷத்துடன் போரிட வருகிறான். அவனை கீழே தள்ளி அம்பாள் மூர்ச்சிக்கச் செய்கிறாள். மூர்ச்சை தெளிந்து மகிஷன் மேலும் ஆக்ரோஷமாக சினந்து அம்பாளை நோக்கிப் பாய்கிறான்.

    அம்பாள் அவனைத் தன் சக்ராயுதத்தால் தலையை வெட்டி வீழ்த்துகிறாள். இப்படி அசுரர்களைக் கொல்ல அம்பாள் அம்பு போட்ட தினத்தையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். சிங்கத்தின் மீது நின்று மகிஷனை வதம் செய்ததால் கனக துர்க்கா என்று அழைக்கப்படுகிறாள்.

    இவள் மஞ்சள் மேனியை உடையவள். சிவப்பு ஆடை அணிந்திருக்கிறாள். இவளைக் கண்டு தரிசிக்க விஜயவாடா செல்லுவோமா?

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜயவாடாவிற்கு, மங்களகிரியில் கோவில் கொண்டுள்ள பானக நரசிம்மராலும், கனக துர்க்காவாலும் பெருமைகள் அதிகம். கனக துர்க்காவைக் காண வேண்டுமானால் முதலில் அங்கே பிரவாகிக்கும் கிருஷ்ணா நதியின் பெருமைகளைப் பார்க்க வேண்டுமே!

    விஜயவாடாவிற்கு பெஜவாடா என்ற பெயரும் உண்டு. 'பெஜ்ஜம்' என்றால் தெலுங்கில் குகை, பிளவு, ஓட்டை என்று பொருள். கிருஷ்ணா நதியின் ஒவ்வொரு துளியும் விஜயவாடாவில் புனிதமாகக் கருதப்படுகிறது.

    கிருஷ்ணா நதிக்குப் பெருமையான வரலாறு உண்டு.

    மராட்டிய மாநிலத்தில் மகாபலேஷ்வர் குன்றுகள் நீண்ட தொடர்களாக உள்ளன. சதாரா, ஜவோலி பகுதிகளில் காணப்படும் இக்குன்று தொடர்களில் கிருஷ்ணா நதி உற்பத்தியாகிறது. (மகா பெரியவர் தங்கியிருந்த அதே சதாரா தான்). பஞ்ச கங்கா ஆலயத்தின் பின்புறம் இதன் உற்பத்தி ஸ்தானம் உள்ளது.

    மகாபலேஷ்வர் குன்றுகளிலேயே உற்பத்தியாகும் வேண்யா நதி, சதாராவிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் கிருஷ்ணாவுடன் இணைகிறது. அதன் பின் 'கிருஷ்ணவேணி' என்ற பெயரை இந்நதி பெறுகிறது.

    மற்றவர்களின் பாவ மூட்டைகளைச் சுமந்து அவதிப்படும் கங்கா மாதா, ஒவ்வோர் இரவும் அண்டங் காக்கை உருவில் கிருஷ்ணா நதிக்கு வந்து நீராடி, அதிகாலையில் வெள்ளை ராஜஹம்சமாகத் திரும்பிச் செல்லுகிறாள் என்று ஆந்திர மக்கள் கூறுகிறார்கள்.

    பூலோகத்தில் பாவிகள் அதிகமானதால் நரகம் நிரம்பி வழிந்ததாம். மக்களின் பாவத்திற்குப் பரிகாரம் தேவையென பிரம்மா மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்.

    கருணா மூர்த்தியான ஸ்ரீமந் நாராயண மூர்த்தி தன் தேஜோ ரூபத்திலிருந்து (நீலவண்ணம்) ஒரு நதியை உருவாக்கி 'கிருஷ்ணா' என்று தன் வண்ணத்தையே பெயரிட்டு ஸஹ்யாத்ரி மலையிலிருந்து ஓடச் செய்தாராம்.

    கிருஷ்ணா, விஷ்ணுவின் தேஜோ ரூபத்திலிருந்து உண்டானவள். அதனால் கங்கையை விட மேன்மையானவள். இங்கு குளிக்கும் மக்களைப் பாவங்கள் அண்டுவதில்லை. இது மற்ற நதிகளுக்கெல்லாம் கிட்டாத பெருமை. கிருஷ்ணா நதியைப் பார்க்கிறவர்கள், நினைப்பவர்கள், ஸ்நானம் செய்கிறவர்கள், துதிப்பவர்கள் நிச்சயம் புண்ணியம் அடைவார்கள் என்பது உண்மையான சத்தியமாகும்.

    பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் கன்யா ராசியில் நுழையும் பொழுது 'கிருஷ்ண புஷ்கரம்' என்று கொண்டாடுகிறார்கள்.

    பெரும் புனலாகப் பல நதிகளைத் தன்னுள் இணைத்துக் கொண்டு பிரவாகித்து வந்த கிருஷ்ணா நதியின் வேகத்தைக் கிழக்குக் தொடர்ச்சி மலைகள் தடுத்து விடுகின்றன. விளைவு இந்தப் பிரதேசமே சதுப்பு நிலக் காடாகி விட்டது.

    மக்களும், முனிவர்களும் இறைவனை வேண்ட இறைவன் அருள்பாலித்தார். மலையிலேயே பிலம் (பெஜ்ஜம்) உண்டாக்கினார். அந்தப் பிளவின் வழியே சீறிப் பாய்ந்து தன் நாயகன் - ரத்னாகரம் என்கிற வங்கக் கடலை அடைகிறாள் கிருஷ்ணா.

    அன்னை கிருஷ்ணவேணி இங்கு லோகமாதா கனக துர்க்காவையும் - மல்லேஸ்வரரையும் ஜலாபிஷேகம் செய்வதாகவே மக்கள் கருதுகிறார்கள். விஜயலட்சுமி வாழும் விஜயவாடாவாக புகழ், வெற்றியில் சிறந்து விளங்குகிறது.

    ஸ்காந்த புராணம் கூறும் வரலாறு இதோ.

    இந்திர நீலன் என்ற தவமுனிவர் மலைமகளான பார்வதியைத் தன் மகளாக அடைய விரும்பினார். தான் மலைமகளானதால் முனிவர் மலையானால், தான் அவர் மகளாவதாக அன்னை சொல்கிறாள்.

    இந்திர நீல முனிவர் தாமே இந்திர நீல மலையாகி விடுகிறார். மகிஷனைக் கொன்றுவிட்டு வந்த தேவி, கனக துர்க்காவாக இந்திர நீல மலையில் தங்கி விடுகிறாள்.

    பஞ்ச பாண்டவர்கள் போரில் பீஷ்மரையும், துரோணரையும், கிருபரையும், கர்ணனையும் வெல்ல வேண்டும் என்றால் பரமசிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற வேண்டும் என்று வேத வியாசர் சொல்லுகிறார்.

    தேவேந்திரனின் ஆலோசனைப் படி அர்ஜுனன் இந்திர நீல பர்வதத்தில் தவம் செய்கிறான். சிவனார் பாமர வேடன் வடிவில் வந்து பன்றி ஒன்றிற்காக அர்ஜுனனுடன் யுத்தம் செய்து அருள் பாலிக்கிறார். அர்ஜுனனுக்கு அருள்பாலித்த ஈஸ்வரன் மல்லிகார்ஜுனராகி விடுகிறார். இவரே மல்லேஸ்வரர்.

    ஸ்காந்த புராணத்தில் பிரம்மா மல்லிகைப் பூக்களால் பரமனை பூஜை செய்ததால் இறைவன் மல்லேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

    மொகல்ராஜபுரம் என்ற குகைக் கோவிலும் இங்கு இருக்கிறது.

    சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ள கனக துர்க்காவை தரிசிக்க எத்தனை எத்தனை பக்தர்கள் வருகிறார்கள். ஜெயத்தைப் பெற நாமும் அங்கு விஜயம் செய்யலாமே.

    *****

    சோலைமலை குமரன்

    ‘வள்ளி தெய்வானையுடன் அமர்சோலை - தங்க மயில் விளையாடும் பழமுதிர் சோலை...' சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் ஆறுபடை வீடுகளின் அழகைக் கண்டு களிக்காத உள்ளங்கள் தான் உண்டா?

    ஆறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. ஒவ்வொரு படை வீட்டிற்கும் ஒவ்வொரு செயலைக் காணலாம்.

    திருப்பரங்குன்றம் - தெய்வயானையைத் திருமணம் புரிந்து கொண்டார்.

    திருச்செந்தூர் - சூரனை வென்ற இடம்.

    பழனி - பழத்திற்காக ஞானப் பழமாக நின்ற இடம்.

    சுவாமிமலை - தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடம்.

    திருத்தணி - க்ஷணத்தில் பக்தர்களின் துயர் தீர்க்கும் திருத்தணி, வள்ளியை மணம் புரிந்து கொண்ட இடம்.

    பழமுதிர்சோலை - பழுத்த பழங்கள் தானாகவே உதிரும் சோலை. பக்தர்களுக்கு தேவியர் இருவருடனும் அருள்புரியும் சோலை.

    'சூரர்கிளை மாள வென்ற கதிரேசா

    சோலை மலை மேவி நின்ற பெருமாளே' என்று திருப்புகழில் பாடுகிறார் அருணகிரிநாதர்.

    மதுரைக்குப் பன்னிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அழகர் கோவில். இங்குதான் பழமுதிர்சோலை என்ற ஆறாவது படை வீடு இருக்கிறது. மலையடிவாரத்தில் முருக பெருமானின் மாமனான அழகர் கோவில் கொண்டுள்ளார்.

    முருகன் கோவில் கொண்டுள்ள இடமே பழமுதிர்சோலை என்று சொல்லப்படும் சோலை மலையாகும்.

    'திருமாலிருஞ்சோலை' என்று வைணவப் பாடல்கள் போற்றித் துதிக்கின்றன.

    ஆயிரம் அடி உயரமும், பத்து மைல் நீளமும் உள்ள இந்த மலை என்று வைணவப் பெரியவரான பெரியாழ்வார் அழைத்து மகிழ்கிறார். அருணகிரி நாத பெருமானோ 'குலகிரி' என்று அழைத்து மகிழ்கிறார்.

    சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாகத் திகழும் மலை. மாமன் கண்ணனும், மருகன் கந்தனும் இருவருமே அழகர்தானே?

    பேருந்திலிருந்து இறங்கி அழகர் கோவிலை நோக்கி நடந்தால் இரண்டு கோட்டைகளின் இடையில் பிரம்மாண்டமான மதிற்சுவர் எழும்பி நிற்கிறது. பெரிய கோவில் தெரிகிறது. இந்த இரு கோட்டைகளுக்கும் அழகாபுரி கோட்டை, இரண்யன் கோட்டை என்றும் பெயர். மூன்று அழகிய கோபுரங்கள், இரண்டு பிரகாரங்கள் உள்ள கோவில்.

    கோவிலின் பிரதான வாயில் அடைக்கப்பட்டுள்ளது. இதன் கதவுகளில் இத்தல காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி வீற்றிருப்பதாக கருதப்படுகிறது. இங்கு அந்தக் கதவுகளுக்கே பூஜை செய்கிறார்கள்.

    இந்தக் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பான பல குணங்கள் உண்டு. இவர் பெரிய வரப்பிரசாதி. பொய் சொன்னால் பொறுக்க மாட்டார் இந்தக் கருப்பண்ண சுவாமி. பல வழக்குகளை நீதி மன்றத்திற்குச் செல்லாமலேயே - சந்நிதி முன்பு சத்தியப்பிரமாணம் செய்யப்படுவதன் மூலம் தீர்த்து வைக்கிறார். அமாவாசை தினத்தன்று இவருக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன.

    கருப்பண்ண சுவாமியின் சந்நிதிக்கு வடக்குப் பக்கத்தில் உள்ள பண்டித வாசல் வழியே அழகர் கோவிலுக்குள் நுழைய வேண்டும். உள்ளே நுழைந்ததும் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கல்யாண மண்டபம். இங்கு விஷ்ணு, வராகர், லட்சுமி வராகர், ஆஞ்சநேயர், மன்மதன், இரண்ய நரசிம்ம யுத்தம், இரண்ய வதம், அஷ்டபுஜ வேணுகோபாலர் ஆகியவர்களின் அற்புதச் சிற்பங்களை காணலாம்.

    இங்கிருந்து தொண்டைமான் கோபுரம் வழியாக இரண்டாவது பிரகாரத்தை அடையலாம். இங்கு தெற்கே கல்யாண சுந்தரவல்லித் தாயார், சுதர்சனர், மேற்கே யோக நரசிம்மர், வடக்கே ஆண்டாள் என்று நமக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி தங்கன்குன்றம் என்னும் பிரணவ வாகனமான பிரகாரம் ஒன்று இருக்கிறது. இந்தப் பிரகாரத்தில் நின்று தான் தேவர்கள் அனைவரும் பெருமாளைச் சேவித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இங்கு தேவர்களின்

    Enjoying the preview?
    Page 1 of 1