Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ippadiyor Thaalattu Paadava?
Ippadiyor Thaalattu Paadava?
Ippadiyor Thaalattu Paadava?
Ebook81 pages27 minutes

Ippadiyor Thaalattu Paadava?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி - இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.

வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு
காட்சியோ, மின்னல் போன்ற
நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ,
சூறாவளியின் சுழற்சியோ,
நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு
அணுவின் சலனமோ சிறுகதையாக
இடமுண்டு.
அத்தகைய சிறு கதைகளை ஒரு
பூங்கொத்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580178311027
Ippadiyor Thaalattu Paadava?

Read more from Rajakai Nilavan

Related to Ippadiyor Thaalattu Paadava?

Related ebooks

Reviews for Ippadiyor Thaalattu Paadava?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ippadiyor Thaalattu Paadava? - Rajakai Nilavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இப்படியோர் தாலாட்டுப் பாடவா?

    (சிறுகதைப் பூங்கா)

    Ippadiyor Thaalattu Paadava?

    Author:

    இரஜகை நிலவன்

    Rajakai Nilavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajakai-nilavan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என் வாசிப்பின் நேசத்திற்கு...

    நூலை எழுதியவரைப்பற்றி...

    வாழ்க்கையின் இரண்டாவது கவிதை

    மனதின் மடல்

    என் பல்வலியும் அரசு பல் மருத்துவமனையும்

    இப்படியோர் தாலாட்டுப் பாடவா?

    நட்பின்மேன்மை

    அமெரிக்கப் பறவை

    தண்டனை

    அந்த அரபிக் கடரோரம்...

    நதி

    இது கடிதமல்ல...

    அம்மா என்றால் அன்பு

    வசந்தங்கள் வரும் நேரம்

    மலரஞ்சலி...

    என்

    தந்தை. காம்ரேட். மா.பிலிப்,

    அவர்களின்

    பாதங்களுக்கு

    மலரஞ்சலி

    அணிந்துரை

    இரஜகை நிலவன் ஒரு நல்ல கவிஞர் என்று அறிவேன்,

    இன்பம் பயந்து இனிமை சொரிந்து

    துன்பம் விலக்கி தூய்மை வளர்த்து

    அன்பைப் பெருக்கி அளவிற்பெருகி

    இன்பமாய் எழுந்துள்ள...

    இந்த அழகின் விடியல் புத்தகம் ஒரு சிறந்த படைப்பு,...

    வணக்கம்.

    தமிழ்மகள்வாசுகி

    பத்திரிகையாளர்

    பெங்களூர் 560005.

    Ph: 97 402 102 87

    என் வாசிப்பின் நேசத்திற்கு...

    என் கவிதைகளை வாசிப்பதற்காக...என் இப்படியோர் தாலாட்டுப் பாடவா? (சிறுகதைப் பூங்கா) என்னும் சிறுகதை நூலைத் தேடிய அன்பு வாசகருக்கு... என் கனவுகளைத் தேடிய நேசத்திற்கு... தேர்ந்தெடுத்த சிறு கதைகளை உங்களிடம் கொடுத்துள்ளேன்.

    ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது.

    ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி - இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.

    வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு.

    சிறுகதைக்கு இலக்கணமோ, வரைமுறையோ, பண்போ கிடையாது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சிறுகதைக்கு, பண்போ தனி இலக்கணமோ இல்லை என்று கூறிவிட முடியாது என்போரும் உண்டு. சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய மரபு தோன்றிவிட்டது

    இக்கதைகளை வாசித்து விட்டு எனக்கு கடும் விமர்சனம் தந்தாலும்... இல்லையெனில் எனக்கு முதுகில் ஒரு தட்டு தந்தாலும்... அல்லது எனக்கு சாமரம் வீசும் வாழ்த்து தந்திடினும்... இல்லையெனில் தலை மீது வீங்குமளவிற்கு குட்டுக் கொடுத்தாலும்... கண்டிப்பாக... மிகக்கண்டிப்பாக... மகிழ்வேன்...

    ஆம்... நாமெல்லாம் முதலில் வாழக்கற்றுக்கொள்வோம்...

    ஆனால் நான் கற்றுத்தர வரவில்லை...

    உங்களுக்குத் தெரிந்த நதியின் கரை வழியே...முதலில் வாழ்க்கற்றுக்கொள்ளுங்கள்... எனச்சொல்லி்க்கொண்டே...

    மேலும் உங்கள் கைகளில் இப்புத்தகம் இத்துணை அழகாக தவழ, நட்புடன் உதவிய என் மூத்த தலைமுறை திரு.பிலிப் வினிங்ஸ்டன் (பொறியாளர்) அவர்களுக்கும் கோடி கோடி நன்றிகள்.

    உங்கள் நாள் நல்ல நாளாக மாறிட...

    வாழ்த்துக்கள்... மகிழ்ச்சிகள்... சிறப்புக்கள்... இறைவனுக்கு நன்றிகள்...

    என்றென்றும் நேசங்களுடன்,

    உங்கள்

    கவிமாமணி

    இரஜகை நிலவன்

    (பிலிப் ஜார்ஜ் சந்திரன்)

    உதவித்தலைவர்.,

    மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்.

    அலைபேசி : +91 9920454827

    ஈ மெயில்: George.chandran@nilavanlpl.com

    George.chandran1@gmail.com

    நூலை எழுதியவரைப்பற்றி...

    பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M.,

    புனைப்பெயர்: இரஜகை நிலவன்

    ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி)

    எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் இரஜகையாக சுருங்கி உதயம் சந்திரன் நிலவனாக மாறிட புனைப்பெயர் உதயமானது

    விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி

    பணி: தனியார் அலுவலில் இயக்குனராக...

    வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை)

    துணைவி: மேரி ராஜேஸ்வரி

    அடுத்த: பிலிப் வினிங்ஸ்டன்

    தலைமுறைகள்: பிலிப் விஜய்ங்ஸ்டன்.

    பிடித்தவை: தேடல்கள்..., வாசிப்புகள்..., அளவளாவுதல்கள்..., எழுதுதல்..., இரசிக்கின்றவைகள்..., இன்னும்... இன்னும்...

    வாழ்க்கையின் இரண்டாவது கவிதை

    Enjoying the preview?
    Page 1 of 1