Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devathai
Devathai
Devathai
Ebook85 pages33 minutes

Devathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள். பல்வேறு பத்திரிக்கைகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இன்றைய பிஞ்சுகளுக்கு உபதேசம் செய்வதை விட, கதைகள் மூலம்தான் நல்ல ஒழுக்க நெறிகளைப் புகட்ட முடியும், அன்பு, மரியாதை, கனிவு, கருணை எல்லாமே அவர்களுக்கு கதைகள் மூலம் சொல்ல முடியும். அந்த முயற்சியின் தொகுப்புதான் இந்த தேவதை.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580101010722
Devathai

Read more from Ga Prabha

Related to Devathai

Related ebooks

Reviews for Devathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devathai - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேவதை

    Devathai

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    பொருளடக்கம்

    என்னுரை

    தாய்ப்பொம்மை

    திக்கற்றவர்கள்

    தேவதை

    நட்பு

    பந்தயம்

    அவமானத்திற்கான பதில்

    கருணை

    வலிமை

    புது டிரஸ்

    வண்ண வாழ்வு

    பெயரின் பெருமை

    முதல் மாணவி

    பேரன்பின் பிரியங்களுடன் தமிழ்

    என்னுரை

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். தேவதை என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    இதில் உள்ள சிறுகதைகள் அனைத்தும், தினமலர் பட்டம், மகளிர் மலர், மைமொழி என்ற பத்திரிகைகளில் வெளியானவை. நாவலை விடவும், சிறுகதைகளே நாம் கூற நினைப்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

    புஸ்தகா மூலம் என் கதைகள் தொடர்ந்து தொகுப்பாக வருவதில் மிக்க மகிழ்ச்சி. ஈ புத்தகமாகப் படித்து என்னை நேரிலும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு பாராட்டுபவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அடுத்தடுத்துச் சிறப்பான நாவல்கள், கதைகள், கட்டுரைகள் மூலம் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். எல்லையற்ற சக்தியின் கருணையால் அது நிறைவேறும். தொடர்ந்து எனக்கு ஆதரவு தரும் வாசக நெஞ்சங்களுக்கும், புஸ்தகா நிறுவனத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மீண்டும், மீண்டும்.

    அன்புடன்,

    ஜி ஏ பிரபா

    9486572227

    சமர்ப்பணம்

    என்னை வழி நடத்தும் எழுத்தாளுமுகைளுக்கு

    தாய்ப்பொம்மை

    அந்த அபார்ட்மென்ட்டுக்குள் கார் நுழையும் போது மழை ஆரம்பித்திருந்தது.

    சந்தானம் காரை ஓரமாக நிறுத்தினான். வழக்கமாக வரும் இடம்தான். அவனுடன் வேலை பார்க்கும் ரஹீம் அங்குதான் இருக்கிறான். சந்தானத்துக்கு குழப்பம் வரும் போதெல்லாம் அறிவுரை கேட்க அவன் தந்தையிடம்தான் ஓடி வருவான். இப்போதும் மிகப் பெரிய குழப்பம். வாழ்க்கையின் உண்மைகள், மனசாட்சியுடன் மோதிக் கொண்டிருக்கிறது.

    சந்தானம் இறங்கி காரைப் பூட்டினான். வேகமாக ஓடி வந்து அபார்ட்மென்ட் வாசலில் ஒதுங்குவதற்குள் மழை வலுத்து விட்டது. தரை தளத்திலேயே வீடு. ரஹீமின் அப்பாவுக்கு இரண்டு கால்களும் நடக்க முடியாமல் பக்கவாதம் வந்ததால் சக்கர நாற்காலியில் அவர் நடமாட சௌகர்யம் என்று தரை தளத்தில் அந்த வீட்டை வாங்கி இருந்தான்.

    முன்புறம் கம்பி கேட் போட்டு அவர் அப்பா அமர வசதி இருந்தது. இந்த இடம் முழுதும் வானை எட்டும் கட்டிடங்கள்தான். பிரதான சாலையில் ஒன்பது அடுக்குக் கட்டிடம் இது. அவர் வீட்டிலிருந்து பார்த்தால் வண்டிகள் பறக்கும் சாலைகள் தெரியும்...

    கம்பி கேட்டில் சாய்ந்தபடி ரஹீமின் நாலு வயது பெண் குழந்தை நின்றிருந்தது. அதன் கையில் பார்பி பொம்மை. குழந்தை அழகாய் இருந்தது. பொம்மை அசிங்கமாய் இருந்தது.

    பொம்மை வாங்கிய புதிதில் அழகாய் இருந்திருக்கும். நல்ல பிங்க் நிற பொம்மை, சாயம் போயிருந்தது. குழந்தை கையில் அது படாத பாடு பட்டு நொந்து போய் உயிரை விடும் நிலையில் இருந்தது. நிறம் மங்கி, அதன் தலைமுடி எல்லாம் பிய்த்து குதறப்பட்டு இருந்தது. ஒரு கை காணவில்லை. ஒரு கால் பாதிதான் இருந்தது.

    பொம்மையை இறுக்கி நெஞ்சோடு பிடித்திருந்த சிறுமிக்கு மூன்று வயதுதான் இருக்கும். பொம்மையின் குரல்வளையைப் அழுத்திப் பிடித்து நெஞ்சோடு அனைத்து. அதோடு எதோ பேசியபடி நின்றிருந்தாள். அவ்வப்போது பட் என்று அதன் தலையில் ஒரு அடி விழுந்தது. பொம்மை சிறுமியின் உயரத்தில் பாதி இருந்தது. குழந்தையின் கண்ணில் கோபம். உயிருள்ள ஒரு குழந்தையிடம் பேசுவது போல நடந்தது.

    சந்தானம் அதை ரசித்தபடி உள்ளே வந்தான். குழந்தையின் கோபமும்,அது மழலைக் குரலில் பொம்மையை மிரட்டும் அழகிலும் அவன் தன் பிரச்சினைகளைக் கூட மறந்து விட்டான்.

    வாப்பா சந்தானம் குழந்தைக்குப் பின்புறம் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவர் அவனை வரவேற்றார். அவன் அமர தன் அருகில் இருந்த ஒரு சேரை நகர்த்தினார். சந்தானம் அதில் அமர்ந்தான். குழந்தை அவனை திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் மழையைக் கவனிக்க ஆரம்பித்தது.

    மழைல நனையாதே குட்டிமா.காய்ச்சல் வந்துரும்.- சந்தானம்.

    நான் அதான் சொல்லுதேன். இவ மாட்டேன். வெளாடனும்கறா.- இப்போது மீண்டும் பொம்மையின் தலையில் ஒரு குட்டு விழுந்தது.

    சந்தானம் சிரித்தான். வெயிட் பண்ணு. மழை நின்னுடும்.

    குழந்தை அவனை மௌனமாகப் பார்த்துவிட்டு பொம்மையிடம் திரும்பிக் கொண்டது.

    நல்லாயிருக்கியா சந்தானம். என்ன விஷயம்?- பெரியவர்

    ரஹீம் இல்லையா?

    அம்மாவுக்கு காய்ச்சல். தலைவலி. டாக்டரிடம் கூட்டிப் போயிருக்கான். நானும், குட்டிம்மாவும், மழையின் துணையோடு. மருமகள் கம்பெனியில் ஆடிட். வர நேரமாகும்.

    குட்டி தனியா உங்க கூட இருந்துடுமா?

    அதுக்கென்ன சமத்துக் குட்டி. கூட விளையாட பைஜா குட்டி இருக்கு.

    தனியாக பெரியவர் இருப்பது அவனுக்கு வசதியாக இருந்தது. கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாம்.

    சந்தானம் தன் பிரச்சினைக்குத் தீர்வு தேடித்தான் அவரிடம் வந்திருந்தான். அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1