Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எங்கேயோ உன் முகம்...
எங்கேயோ உன் முகம்...
எங்கேயோ உன் முகம்...
Ebook96 pages34 minutes

எங்கேயோ உன் முகம்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரசுப் பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் இடைப்பட்ட புதுவித அமைப்பில், அந்த கஸ்தூரி திலகம் உயர்நிலைப் பள்ளி கொஞ்சம் கம்பீரமாகவேதான் இருந்தது. வலது பக்கம் குன்னூர் வரையில் நல்ல பள்ளி வேறெதுவும் இல்லை இதைவிட்டால், என்பது தான் உண்மையாக இருந்தது. ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை இருபாலினரும் கல்வி கற்கிற பள்ளிக்கூடம். பெரும்பான்மை மாணவர்கள் அடித்தட்டு பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள்தாம். விசாலமான மூன்றடுக்கு கட்டடம், 'ப' வடிவத்தில் உயர்ந்து நின்றது. ஆசிரியர்களுக்குத் தனியறை, நூலகம், ஆராய்ச்சிக் கூடம், மைதானம், கொடிக்கம்பம் என்று எல்லாமே இருந்தும் ஏதோ பெரியதாக ஒன்று குறைவதாகத்தான் அவளுக்குத் தோன்றியது.
 அது என்ன என்று மெல்ல மெல்ல தெரிய வந்தும் விட்டது.
 அக்கறையின்மை அதுதான் அடிப்படை. மல்லிகா, சரசா, சாருலதா, மரியபுஷ்பம், தேவநாதன், செண்பகராமன், பால்ராஜ் என்று ஆசிரியர்கள் இருந்தார்களே தவிர, அர்ப்பணிப்பு உணர்வு என்பதை அவர்களிடம் பார்க்கவே முடியவில்லை. வந்தார்கள், சொன்னார்கள், சென்றார்கள். அவ்வளவுதான். ஆசான் என்கிற - கற்பிக்கும் - உயர்ந்த பீடத்தில் இருக்கிறோம் என்கிற எண்ணம் கொஞ்சம் கூட அவர்களிடத்தில் இல்லை என்பதே அதிர்ச்சியாக இருந்தது. இது சம்பளம் வாங்கும் வேலையல்ல, சமுதாயத் தொண்டு என்கிற சேவை மனப்பான்மை நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை அந்த அனைவரிடமும் என்பதே வேதனையளித்தது அவளுக்கு.
 தானும் அப்படி ஆகிவிடக் கூடாது என்று மட்டும் தீவிரமாக நினைத்துக் கொண்டாள். அறுபது குழந்தைகளின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது அவளிடம். வெறும் களிமண்ணைத்தான் கொடுத்திருக்கிறார்கள். நீர் வார்த்து, இளக்கி, இளம் சூட்டில் ஆட்டி, நல்ல மண் சிற்பமாகவோ, மண்பாண்டமாகவோ ஆக்குவது அவள் பொறுப்பு. அதை அவள் திறம்படவே செய்வாள்.
 "டீச்சர்... டீச்சர்..." என்று திடீரென்று ஒரு குரல் காதருகில் கேட்டது.திரும்பிப் பார்த்த பொழுது சாமந்தி நின்றாள். முகம் கலங்கியிருந்தது. எட்டாம் வகுப்பு படிக்கிற சிறுமி என்று சொல்லிவிட முடியாமல் குறுகிய உடல்வாகு.
 "என்ன சாமந்தி? அல்ஜிப்ரா புரியலையா?" என்றாள். மென்மையாக.
 "இல்லே டீச்சர்..."
 "ஏம்மா... சொல்லு என்ன விஷயம்?"
 "கணக்கே புடிக்கலே டீச்சர்."
 "ஏன்... கடினமா இருக்கா?"
 "அப்படி இல்லே..."
 "வேற?"
 "வீட்ல பிரச்சினை டீச்சர்... படிச்சது போதும்னு நிப்பாட்ட பாக்குறாங்க டீச்சர் எனக்கும் வீட்டுல இருக்கத்தான் புடிக்குது டீச்சர்."
 "ஓ..." அவள் சிரித்தாள்.
 "வெரிகுட்... உண்மையைச் சொன்னதுக்கு ரொம் மகிழ்ச்சி... சரி வீட்டுல இருந்து என்ன செய்யப் போறே?"
 "அம்மாவுக்கு ஒத்தாசையா இருப்பேன் டீச்சர்... மாட்டுக்கு தண்ணி காட்டுறது, தம்பிகளுக்கு சோறு ஊட்டுறது, களை புடுங்கப் போவுறதுன்னு நேரம் ஓடிடும் டீச்சர்" சாமந்தியும் மகிழ்ச்சியாகவே சொன்னாள்.
 "அம்மா எப்படி இருக்குறாங்க சாமந்தி?"
 "எப்படின்னா?"
 "அவங்க சந்தோஷமா இருக்குறாங்களா? வீடு அன்பும் ஆனந்தமுமா இருக்குதா? அப்பா எப்பவும் அம்மாகிட்ட பாசமா நடந்துக்குறாரா?"
 சாமந்தியின் முகம் ஒரே கணத்தில் வாடிப் போனது. இதுவரை இருந்த மலர்ச்சியை ஏதோ ஒரு அசுரக் கை வந்து மொத்தமாக அள்ளிக் கொண்டு பறந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223629870
எங்கேயோ உன் முகம்...

Read more from V.Usha

Related to எங்கேயோ உன் முகம்...

Related ebooks

Related categories

Reviews for எங்கேயோ உன் முகம்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எங்கேயோ உன் முகம்... - V.Usha

    1

    ‘மழையை விரும்பாத

    மனிதர்கள்தாம் உண்டா?

    மண்ணுக்கு வரும் மழை

    மனிதர்களுக்காகத்தானே?’

    சிலுசிலுவென்று விழுகிற மழைத் துளிகளைப் பார்த்தபடி நின்ற மைவிழியின் உள்ளே, வாசித்த கவிதை ஓடியது. இதழ்களில் மலர்ச்சி பரவ, அவள் அப்படியே திரைச் சீலையை நன்கு விலக்கி மழையைப் பார்த்தபடி நிந்றாள்.

    கூப்பிடு தூரத்தில் ஊட்டி. கண் பார்வை எட்டும் தூரத்தில் நீலகிரி மலைத் தொடர். கிராமத்தின் சாயல்கள் விடாமலும், நகரத்தின் பரபரப்பு தொடாமலும், இரண்டிற்கும் இடையில் இனிமையாக தத்தளித்துக் கொண்டிருந்த வளைமாட்டி ஊர்.

    இரண்டு மாதங்களுக்கு முன்னால் கூட வாழ்க்கை வெகு கடினமாகத்தான் இருந்தது என்று இப்போது நினைக்கையில் நம்பத்தான் முடியவில்லை. வாய் திறக்க முடியாத அண்ணனுக்கும் வாயே மூடாத அண்ணிக்கும் இடையில் அவள் தவியாய்த் தவித்த அந்த நான்கு வருடங்களை ஆயுளுக்கும் மறக்க முடியுமா? நல்லவேளையாக, பட்டம் பெற்று, பட்டதாரி ஆசிரியைப் பள்ளியில் படித்து முடித்தவுடன் அரசுப் பள்ளியில் வேலை கிடைத்து இதோ உதகமண்டலத்திற்கு வந்து விட்டாள்.

    கல்லூரித் தோழி உதயாவின் உதவியால் அவளுடைய தூரத்து சித்தியின் பழைய சின்னஞ்சிறு வீடு வாடகைக்குக் கிடைத்ததே, அதைத்தான் அதிர்ஷ்டம் என்று அழைக்க வேண்டும். இல்லையா?

    செல்பேசி அழைக்க, அவள் மழையிலிருந்து விலகி வர மனமின்றியே கைநீட்டி எடுத்தாள்.

    மைவிழி... என்றபடியே எண்களைப் பார்த்த போது அவை புதியதாகத் தெரிந்தன.

    கிருபா பேசறேம்மா... எப்படி இருக்கே? என்ற அண்ணனின் குரலில் எடுத்ததுமே வழுவழுப்பு தெரிந்தது.

    ஹலோ அண்ணா... என்றாள் உற்சாகத்துடன்.

    ரொம்ப நல்லா இருக்கேண்ணா... நீ எப்படி, அண்ணி எப்படி? அர்விந்த் கிரிக்கெட், படிப்பு எல்லாம் எப்படி போயிகிட்டிருக்கு? இதென்ன புது நம்பர் அண்ணா?

    செல்லுல பிரச்சினை மைவிழி... ரிப்பேர் பார்க்க குடுத்திருக்கேன். இங்க எல்லாம், எப்பவும் போல போயிகிட்டிருக்கு... நீ சொல்லு, எப்படிம்மா இருக்கே? ஊரு, உன் ஸ்கூல், வீடு... ரெண்டே நாள்ல கிளம்பி வந்துட்டேனே உன்னை விட்டுடுட்டு... கிருபாவின் தொண்டை இப்போது இறங்கியிருந்தது.

    மனம் விட்டு சொல்றேன் அண்ணா... எல்லாமே பிரமாதம் இங்கே... தமிழ்நாட்டு ஸ்விட்சார்லாந்துல வாழணும்னா அதிர்ஷ்டம்தான் பண்ணியிருக்கணும்... இல்லையைா? நல்ல, பெரிய ஸ்கூல் அண்ணா. கவர்மெண்ட் சப்சிடி கொடுத்து நடத்தப்படற மானேஜ்மென்ட் ஸ்கூல். கொஞ்சம் பிரச்சினை இருக்குதான்... பட், கவலைப்படற அளவுக்கு இல்லே... அண்ணி எப்படி இருக்காங்க?

    சர்வாதிகாரிகளுக்கு என்ன கவலை மைவிழி? நினைச்சதை பேசிக்கிட்டு, நினைச்சபடி நடந்துக்கிட்டு அவ பிரமாதமாகத்தான் இருக்கா...

    ஓ அண்ணா... அவள் குரலில் இதத்தை வரவழைத்துக் கொண்டு மென்மையாக அவனை அழைத்தாள்.

    ஒற்றைக் குழந்தையா வளர்ந்தவள் அண்ணி... ஏகப்பட்ட செல்லம் கொடுத்து, அதன் காரணமாகவே முரட்டுக்குதிரை ஆகிவிட்ட குழந்தை அண்ணி... நாம் அப்படி இல்லையே அண்ணா. பகிர்தல், உணர்தல், பாசம், துன்பம்னு பல்வேறு உணர்வுகள் ஆக்கிரமிக்கப்பட்ட சூழல்ல வளர்ந்தவங்க... நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். ப்ளீஸ் அண்ணா, விஷமக்காரக் குழந்தையைப் பாதுகாக்கற தாயைப்போல பொறுப்புடன் நீதான் இருக்கணும்ண்ணா...

    மைவிழி மைவிழி... அண்ணன் உருகினான்.

    எவ்வளவு எல்லாம் சிரமப்பட்டே? எத்தனை அவமானம், எவ்வளவு வலி? மவுனமான சாட்சியா நான்! என் முகத்தைப் பார்க்கக்கூட விரும்ப மாட்டே நீன்னு நினைச்சேன் மைவிழி. இப்படி புதையலைப் போல இருக்கியே? எப்படிம்மா? எப்படி வந்தது இந்த பக்குவம்?

    அய்யோ பக்குவமாவது ஒண்ணாவது... வாழ்க்கை தன் போக்குல நமக்கு சொல்லிக் கொடுக்கிற பாடங்கள்ல ஒண்ணு இது... சரிண்ணா, நீ கிளம்பு வேலைக்கு நேரமாச்சில்ல? |

    எப்பம்மா வரே?

    இப்பத்தானே ஜாயின் பண்ணியிருக்கேன்? கொஞ்சம் போகட்டும்ண்ணா... உன்னைப் பார்க்காம என்னால மட்டும் இருக்க முடியுமாண்ணா? சரி சரி... வெச்சுடவா?

    டேக் கேர்மா... பை...

    மழை இப்போது துள்ளிக் கொண்டு பெய்தது. விட்டேனா பார் என்று சொல்லாமல் சொல்லியபடி மரத்தின் ஒவ்வொரு கிளையையும் ஒவ்வொரு இலையையும் தேடித்தேடி குளிப்பாட்டியது. ஒரே ஒரு வெள்ளையாடு, ஆனந்தமாக நனைந்தபடி ஒயிலாக மழையில் நனைந்து நடக்கும் காட்சி அவள் இதழ்களைப் புன்சிரிக்க வைத்தது.

    அண்ணனின் வார்த்தைகள் இன்னும் செவிகளின் அறைக்குள்ளேயே இருந்தன. பாவம் அண்ணன். நல்லவன். கொஞ்சம் வெகுளியும் கூட. நெளிவு சுளிவோ அதிகப்படி சாமர்த்தியமோ இல்லாத இயல்பான மனிதன். ஆனால், அவனுக்கு இயற்கை ஒரு சண்டிராணியைத்தான் சேர்த்து வைத்தது. விட்டுக் கொடுக்கவோ, பொறுமை காக்கவோ, பொறுப்புணர்ந்து நடக்கவோ கொஞ்சம்கூட தெரியாத மஞ்சரியை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவது என்பது முழுக்க குருஷேத்திரப் போர் நடத்துவது போலத்தான்... உம்.

    எட்டு மணி ஆகிக் கொண்டிருப்பதை உணர்ந்து அவள் குளியலை முடித்து சமையலறைக்கு வந்தாள். அழகான சின்ன குக்கரில், மணக்கிற பொங்கலும், பாட்டிலில் தக்காளி சட்னியும் இருந்தன. தயாராக, தட்டில் ஆறப் போட்டிருந்த இரண்டு குவளை அன்னத்தில் சிறிது பாலையும் தயிரையும் விட்டு பிசைந்து கொண்டு, சிறிய டிபன் டப்பாவில் வைத்துக் கொண்டாள். பொங்கலை விண்டு வாயில் போட்டுக் கொள்ளும் போது மஞ்சரி தன் பக்கம் தள்ளி

    Enjoying the preview?
    Page 1 of 1