Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கை அருகில் வானம்..!
கை அருகில் வானம்..!
கை அருகில் வானம்..!
Ebook96 pages31 minutes

கை அருகில் வானம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அதே வங்கக் கடல்தான்.
 ஆனால், அந்தி மயங்கிக் கொண்டிருக்கும் வேளை, அது.
 வேகமாக வந்து கவியும் சாயங்காலத்திற்காக சூரியன் தன் ஆட்சியின் வேகத்தைக் குறைத்திருந்தான்.
 கரை திரும்பிக் கொண்டிருந்தன, சில கட்டுமரங்கள்.
 மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அவர்தம் பெற்றோர் கைப்பிடித்து அழைத்துத் திரும்பிப் போகத் தொடங்கினார்கள்.
 ஒரு அவசரக் குடுக்கை நட்சத்திரம் அவசரத்துடன் தன்னை வெளிப்படுத்தியபடி கண் சிமிட்டியது.
 திலீபன், நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான்.
 சிட்டிபாபு, சேகர், ஆதி மூன்று பேரும் அந்தப் பழைய கட்டு மரத்தின் மேல் சாய்ந்தபடி உட்கார்ந்து கடலைப் பார்த்தபடி இருந்தார்கள்.
 யாரோ வேகமாக நடந்து வரும் சத்தம் கேட்டது.
 திரும்பிப் பார்த்தார்கள்.
 ரவிகுமார்தான் வந்து கொண்டிருந்தான்.
 முகத்தில் பரபரப்பு தெரிந்தது.
 வேகவேகமாக நடைபோட்டு வந்தான்.
 நண்பர்களைக் கண்டதும் முகத்தில் மேலும் படபடப்பும் பரவசமும் கூடின.
 திடீரென தொப்பென்று உட்கார்ந்தான்திலீபனின் இரண்டு கைகளையும் பற்றிக் குலுக்கினான்.
 "பாராட்டுகள்டா திலீபா... உன் ஆராய்ச்சிக் கட்டுரையை பல்கலைக்கழகம் ஏத்துக்குச்சுடா. முதல் முயற்சியிலேயே ஜெயிச்சுட்டேடா. வாழ்த்துக்கள்" என்பதற்குள் உணர்ச்சி வசப்பட்டு கரகரத்து விட்டான், அவன்.
 நண்பர்களின் முகங்கள் மலர்ந்தன.
 திலீபனைச் சற்று பிரமிப்புடன் பார்த்தார்கள்.
 கைப்பற்றி குலுக்கினார்கள்.
 மனமாரப் பாராட்டினார்கள்.
 "உண்மையிலேயே பெரிய விஷயம்ப்பா, இது" சிட்டிபாபு தோள் தட்டினான்.
 ஆதி, சிரித்தபடி "என்னையெல்லாம் விட்டா சீனாதானா பாட்டு பற்றி வேணா கட்டுரை எழுதலாம். திலீபன் மாதிரியெல்லாம் வரணும்ன்னா மறுபடி பொறந்துதான் வரணும்."
 அனைவரும் திலீபனையே பார்த்தார்கள்.
 அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.
 கண்கள் வெறுமையாகத் தொலைதூரத்து கப்பலின் மேல் நங்கூரமிட்டு நின்றன.
 "டேய் திலீப்... என்னடா?" என்று சேகர் வியந்தான்.
 "இது சாதாரணம் இல்லே... என்னடா கம்முன்னு இருக்கிறே?"
 பதில் சொல்லாமல் திலீபன் திரும்பி நண்பர்களைப் பார்த்தான். பெருமூச்சு ஒன்று அவன் நாசியிலிருந்து நீண்டதாகப் புறப்பட்டது.
 ரவிகுமார் மென்மையாகக் கேட்டான் - "சந்தோஷமாக இல்லையாப்பா, திலீபா? உன் அப்பா கனவில்லையா இது? ஏன்டா பேசாம இருக்கே? குறைந்தபட்சம் கொஞ்சம் சிரியேன்டா."
 திலீபனின் உதடுகள் அசைந்தன"நீங்க சொல்றது ரொம்ப சரிதான். ஆனா, இது என் கடமைக்கான செயல்... அவ்வளவுதான். மனசுக்கு திருப்தி தரக்கூடிய செயல் இல்லே."
 பேச்சு நின்றது.
 மவுனமும் இருளும் சூழ்ந்து கொண்டன

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223956518
கை அருகில் வானம்..!

Read more from V.Usha

Related to கை அருகில் வானம்..!

Related ebooks

Reviews for கை அருகில் வானம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கை அருகில் வானம்..! - V.Usha

    1

    வங்கக் கடல் உற்சாகத்துடன் அலை அடித்துக் கொண்டிருந்தது.

    ‘ஓ’வென்ற இரைச்சலுடன் நான்கு கட்டுமரங்கள் உள்ளே பாய்ந்தன.

    சுனாமியின் சுருட்டலில் சிதைந்து விடாமல் கலங்கரை விளக்கம் நிமிர்ந்து நின்றது.

    நேர் எதிரே, கம்பீரமாகக் காட்சி அளித்தது அந்தப் பெண்கள் கல்லூரி.

    தன்யா, இரண்டாவது தளத்தில் முதுகலை வகுப்பில் இருந்தாள். அவளைச் சுற்றி தோழிகள்.

    வழக்கமான சிரிப்பும், பேச்சும், குறும்பும், கும்மாளமும் இன்று இல்லை. அவர்களின் முகங்கள் வாடிப்போயிருந்தன.

    இதழ்கள் வறண்டு போய் ஈரப்பசையின்றி தெரிந்தன. கன்னம் கறுத்துக் கிடந்தன.

    வாசற்படியில் நிழல் ஆடியது.

    பேராசிரியை சொர்ணவதி வந்துவிட்டார்.

    மாணவிகள் எழுந்து நின்றார்கள்.

    ‘வணக்கம்’ என்றபோது குரல்கள் ஓய்ந்திருந்தன.

    சொர்ணவதி வியப்புடன் மாணவிகளைப் பார்த்தார்.

    எல்லோருக்கும் என்ன ஆச்சு? ஏன் இப்படி கப்பல் கவிழ்ந்த மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சினையா? என்றார், யோசனையுடன்.

    எல்லோரும் மவுனமாக இருந்தார்கள்.

    ஏய் லலி... வாயாடிப் பொண்ணு... நீ கூட அமைதி ஆகிட்டியே? சொல்லு லலி... என்ன விஷயம்?

    லலிதா மெல்ல நிமிர்ந்து வகுப்பில் இது எங்க கடைசி நாள்... ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம் என்றாள், குரல் கரகரக்க.

    ஆமா.

    சொர்ணவதி உட்கார்ந்தார். கண்ணாடியைக் கழற்றி வைத்தார். விழிகள் நிமிர்ந்து, மாணவிகளை வலம் வந்தன.

    நேற்று வரை சிறகில்லாமல் பறந்த வண்ணத்துப் பூச்சிகளா இவை? தரையில் கால் பாவாமல் காற்றைப் பிடித்தபடி மிதந்து கொண்டிருந்த தட்டாரப் பூச்சிகளா?

    நின்றால் சிரிப்பு, நடந்தால் குறும்பு, பேசினால் கிண்டல், உட்கார்ந்தால் அரட்டை என்று மரத்தடிகளிலும் மைதானத்திலும் கலகலப்பை தூவி, கல்லூரியையே கல்யாண மண்டபம் போல ஆக்கி வைத்திருந்த அந்தச் சிட்டுக் குருவிகளா?

    ஒரே நாளில் எத்தனை பிரளய மாற்றம்!

    ஆனால் –

    இதுதான் இயற்கை!

    இதுதான் வாழ்க்கை!!

    எல்லா வசந்தங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். பருவங்கள் மாறும். கடும் குளிர், கோடை என்று சூழல் மாறும்.

    மாற்றம் நிறைந்ததுதான் வாழ்க்கை. மாற்றம் இல்லாவிட்டால் உலகம் இல்லை. மார்க்ஸ் சொன்னது போல மாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாமே மாறிக் கொண்டிருக்கும்.

    இவர்களுக்கும் கல்லூரி என்ற வசந்த காலம் முடிவுக்கு வருகிறது. துள்ளித் திரிந்த காலம் இதோ விடைபெறப் போகிறது. இந்தா பிடி என்று சுமைகளையும் பொறுப்புகளையும் வைத்துக்கொண்டு வெளியில் காத்திருக்கிறது ஒரு யதார்த்த வாழ்க்கை.

    சொர்ணவதி செருமிக் கொண்டார்.

    கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார்.

    எனக்கு உங்க உணர்வுகள் புரியுது. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. அழகு, வயசு, பேச்சு, சிரிப்பு எதுவும் நிரந்தரம் கிடையாது. ஆனா, நாம முயற்சி செஞ்சா, சில விஷயங்களை நிரந்தரம் ஆக்கிக்க முடியும். உதாரணமா, நட்பு... என்று நிறுத்தினார்.

    மாணவிகள் நிமிர்ந்தார்கள்.

    இமைகள் படபடத்தன.

    ஆமா... நட்புதான் நிரந்தரமாக்கத் தகுந்தது என்றபோது சொர்ணவதி முகம் நெகிழ்ந்திருந்தது.

    நினைவுகளுக்கு நிரந்தரத் தன்மை உண்டு. அந்த நினைவுகள் நட்பை அடிப்படையா வைச்சிருந்தா இன்னும் ஆழமா நிலைக்கிற தன்மை வந்துடும்... இங்கே இருக்கிற முப்பத்திரண்டு பேருக்கும் முப்பத்திரண்டு விதங்களில் வாழ்க்கை காத்துகிட்டிருக்கு... ஆனா, ஒரே நட்புதான் அந்த வாழ்க்கைகளை இணைக்க முடியும், இல்லையா?

    கவிதா நிமிர்ந்தாள்.

    நீங்க சொல்றது ரொம்ப சரி மேடம்

    ஜலஜாவின் தொண்டை வழுவழுத்தது.

    நல்ல... சின்னச் சின்ன விஷயங்கள்தான் நம்ம நாட்களை சுவாரசியமாக்கும். இல்லேன்னா சாப்பிட்டுகிட்டே வாழுறது, வாழ்ந்துகிட்டே சாப்பிடுறதுன்னு ரெண்டே ரெண்டு வட்டத்துல வாழ்க்கை குறுகிடும். நட்பு ஒரு உற்சாக ‘டானிக்’ குறைந்த பட்சம் உங்களில் அஞ்சு பேராவது கடைசிவரை தோழிகளா இருங்க. என் அன்பான அறிவுரை இது

    சொர்ணவதி சிரித்தார்.

    திடீரென்று ஒரு விசும்பல் கேட்டது.

    திடுக்கிட்டுப் போய் பார்த்தார்கள்.

    நளினி அழுது கொண்டிருந்தாள்.

    மற்றவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    சொர்ணவதி, நகர்ந்து நளினியிடம் வந்தார்.

    நளினி... என்னம்மா ஆச்சு? ஏன் அழுறே? என்றபடி தலையைத் தொட்டார்.

    நளினியின் விசும்பல் இன்னும் கூடியது.

    என்னம்மா ஆச்சு அப்படி? ஏன் இவ்வளவு வருத்தம் உனக்கு? சொல்லு.

    நளினி மெல்ல தலை உயர்த்தினாள்.

    வார்த்தைகளில் மெல்லிய நடுக்கம்.

    நீங்க சொன்னீங்களே மேடம்... நட்பு! அடுத்த மாசம் எனக்குக் கல்யாணம்... அமெரிக்கா போகணும். எப்படி நான் நட்பு வைச்சுக்குவேன்? என்றபோது, சொர்ணவதி சிரித்தார்.

    மற்ற முகங்களும் மலர்ந்தன.

    இறுக்கம் குறைந்து புன்னகைத்தன.

    "இந்த உலகத்துல முடியாதுன்னு எதுவுமே இல்லே, நளினி புரியுதா? மனசு

    Enjoying the preview?
    Page 1 of 1