Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalai Thendral
Kaalai Thendral
Kaalai Thendral
Ebook133 pages1 hour

Kaalai Thendral

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

G.A. Prabha, an exceptional Tamil novelist, written over 200 novels, 100 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466107
Kaalai Thendral

Read more from G.A.Prabha

Related to Kaalai Thendral

Related ebooks

Reviews for Kaalai Thendral

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalai Thendral - G.A.Prabha

    19

    1

    "சீலமாய் வாழ சீர் அருள் புரியும்

    ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி"

    கண்மூடித் தியானித்தாள் வைதேகி. தகதகவென்று மின்னும் தங்கச் சூரியனை கண் அகலப் பார்த்தாள். அதிகாலைச் சூரிய ஒளி, பூங்குழந்தையின் கைகளாய் வருடிச் சென்றது.

    இதமான காற்று. முழுத் தகடாய் எழும்பும் சூரியனுடன், சற்று தொலைவில் தெரிந்த மலைக்கோட்டையும் பரவசத்தை அள்ளித்தந்தது.

    சூரிய வெளிச்சத்தில் மின்னியது மலைக்கோட்டை. பெரிய யானையாய் அதன் கற்களும், உச்சிப் பிள்ளையார் கோவிலும் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை. ஏதேதோ கற்பனைகளை, கலை உணர்வுகளைக் கிளறியது. எத்தனை யுகங்களாய் இருக்கிறது? இந்தப் பிரபஞ்சத்தில் அழிந்து போகும் அத்தனை மனிதர்களின் ஆர்ப்பாட்டங்களை, அழியாத சாட்சியாக நின்று பார்த்திருக்கிறது. மவுனப் பொக்கிஷம்.

    அமைதியாய் போதிக்கிறது. ஆடாதே. சாட்சியாய் நில். ஒரு பார்வையாளனாய் அமர்ந்து, வாழ்க்கை மைதானத்தில் நடைபெறும் ஆட்டங்களைப் பார்.

    வைதேகி ஒரு சிலிர்ப்புடன் நின்றிருந்தாள். நகரத் தோன்றவில்லை. இதமான காலைத் தென்றல், பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் குருவியின் குரல். அந்தக் காலை நேரத்திலேயே ஒரு காகம் மாடிக் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்து கரைந்தது.

    இதென்ன ஓட்டலா?- என்றபடி சித்தி படியேறி வந்தார்.

    காலைக் காப்பிக்கு வந்துட்டார் என் மாமனார்.

    இறந்துபோன தன் மாமனார், காக்கை உருவில் வருவதாக நம்பிக்கை சித்திக்கு.

    இன்னும் பால் வரலை. பொறுங்க - என்றாள்.

    ‘சரி’ என்பது போல் பார்த்தது காகம். நம்பிக்கைகள்தான் வாழ்க்கைக்கு சுவாரசியம் கூட்டுகிறதோ- வியப்புடன் காகத்தை ரசித்தாள் வைதேகி.

    சூரிய தரிசனம் ஆச்சா?

    ஆச்சு சித்தி

    இது யார் சொல்லித் தந்தது உனக்கு?

    உங்க மாமனார்தான்- சிரித்தாள் வைதேகி.

    உங்க தாத்தான்னு சொல்லேன்.

    தாத்தாதான் சொல்லித் தந்தார். அதிகாலையில எழுந்து சூரியனை தரிசனம் பண்ணும்மா. கண்ணொளி பிரகாசமா இருக்கும். தோலுக்கும் வைட்டமின் சக்தி கிடைக்கும். பெரியவர்கள் ஏற்படுத்தின பல விஷயங்கள் விஞ்ஞான பூர்வமானது. சொன்னா... ‘சரிதான் போ. வேற வேலை இல்லை’ன்னு சொல்வீங்க. அதனாலதான் ஆன்மீகத்தை கலந்து தர்றோம் - என்பார்.

    எண்பத்து ஐந்து வயதுக்கு மேல் கண்ணாடி இல்லாமல் படிப்பார். எந்த உணவையும் தின்று ஜீரணித்தார்.

    ‘இது எங்க வாழ்க்கை முறைம்மா’ - பெருமை அடித்துக்கொள்வார்.

    ‘நீங்கெல்லாம் ரசாயன உரங்களைத்தானே திங்றீங்க’ என்று சிரிப்பார்.

    தாத்தா இருந்திருந்தால் தன் வாழ்க்கை முறையும் மாறி இருக்குமோ? ஏக்கப் பெருமூச்சு எழுந்தது. சித்தி ஆறுதலாய் தோளைத் தட்டித் தந்தாள்.

    எதையும் மனசுல வச்சுப் புழுங்காதே வைதேகி. எல்லாத்தையும் மறந்துடு. இன்னைலேருந்து காலேஜ் போறே. படிக்கணும். அதான் முக்கியம். கீழ இறங்கி வா. காப்பி குடிச்சிட்டு, குளிச்சு தயாராகு.

    சித்தி பின்னால் இறங்கி வந்தாள்.

    கீழே வீடு விழித்திருந்தது. சித்திக்கு ஒரே பையன். ஏழாவது படிக்கிறான். முதல்நாள் மாலை வரை விளையாடிவிட்டு, பள்ளிக்கு கிளம்பும்போதுதான் வீட்டுப் பாடங்களைச் செய்வான்.

    அவனை திட்டிக்கொண்டிருந்தார் சித்தப்பா.

    யோசிச்சு பேசுன்னு எத்தனை தடவை சொல்றேன்.

    ஏம்ப்பா?

    பேசற ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் இருக்குடா. ‘ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்தன’வென்று சொல்றார்.

    யாருப்பா?

    தொல்காப்பியர். அவர் யாருன்னு தெரியுமா?

    ஓ! தெரியுமே? - பையன் முகத்தில் பெருமிதம்.

    நான் பெற்ற செல்வமே... சொல்லு.

    கோலங்கள் அபியோட தோழன்.

    ஈஸ்வரா! - சித்தப்பா அலறினார்.

    என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா?

    வைதேகி அடக்க முடியாமல் சிரித்தாள். தொலைக்காட்சி, அதில் வரும் தொடர்கள் எந்த அளவுக்கு சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. திகைப்பாகத்தான் இருந்தது. எத்தகைய ஒரு வலுவான ஊடகம். அதில் ஏன் மூளைச் சலவை செய்யும் புளித்த விஷயங்களே தொடர்களாக வருகின்றன?

    பையனின் அருகில் அமர்ந்து என்ன வினய்? என்றாள் வைதேகி.

    கணக்கே ஏற மாட்டேங்குது- சித்தப்பா சலித்துக்கொண்டார். ஏழாம் வகுப்புக்கு அல்ஜீப்ரா.

    கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணு வினய். அல்ஜீப்ரா எளிதுதான். விருப்பத்தோடு போட்டா கணக்கு கசக்காது.

    நம்ம மூளைல பத்து சதவீதம்தான் நாம் பயன்படுத்தறோம்.

    சித்தி காப்பியை நீட்டினாள். மீதியெல்லாம் வீண்தானே. அதை பயன்படுத்தி யோசி.

    டாக்டர்கிட்ட போலாம்ப்பா- வினய்.

    ஏண்டா?

    மூளையை எப்படி யூஸ் பண்ணுறதுன்னு கேக்கலாமே?

    முதல்ல உனக்கு மூளை இருக்கான்னு ‘டெஸ்ட்’ செய்யணும்.

    போப்பா - வினய் சிணுங்கினான்.

    ஏன் சித்தப்பா குழந்தையை வம்பு பண்றீங்க?

    பாரேன் இவன் பேசறதை. நான் திட்டுறதுல கொஞ்சமாச்சும் ரோஷம் வருதா?

    வந்தா படிக்கணுமேப்பா - வினய்.

    சித்தப்பாவே ‘பக்’ என்று சிரித்தார். போடா... உனக்கு சொல்லித்தர என்னால முடியாது.

    நான் சொல்லித்தரேன் சித்தப்பா - வைதேகி அமர்ந்தாள்.

    நீ காலேஜ் கிளம்பணும்மா. நேரமாயிடப் போகுது.

    மணி ஏழுதானே சித்தப்பா -புத்தகத்தைப் பிரித்து உட்கார்ந்தாள் வைதேகி. அவள் நிதானமாக, பொறுமையாக சொல்லித்தர மளமளவென்று கணக்கைப் போட்டு முடித்தான். வினய்.

    எல்லாக் குழந்தைகளும் புத்திசாலிகள்தான். அவர்களின் அளவுக்கு இறங்கி வந்தால் எல்லாமே புலிதான். வைதேகிக்கு கணக்கு பிடித்த பாடம். ‘பிளஸ் டூ’வில் அவள் நூற்றுக்கு நூறு வாங்கி இருந்தாள். இஞ்சினீயராக வேண்டும் என்பது அவளுடைய ஆசை.

    ஆனால், குக்கிராமத்து கோவில் குருக்களான அப்பாவால் பள்ளிக்கூடம் வரைதான் படிக்க வைக்க முடிந்தது. வாழ்க்கையில் வைதேகிக்கு விழுந்த அடிதான் அவளை இன்று கல்லூரிப் படிப்பிற்குத் துரத்தி வந்திருக்கிறது.

    வக்கீல் குமாஸ்தாவான சித்தப்பாவின் வற்புறுத்தலும் இதற்கு ஒரு காரணம். தம்பி சொன்னதை தட்டமாட்டார் அப்பா. சித்தப்பாவுக்கு வைதேகி மேல் தனிப்பட்ட பிரியம் உண்டு. சித்திக்கும் வைதேகி என்றால் அதிக இஸ்டம். பொறுமையாய் நடப்பதும், பாசமாக சித்தி, சித்தி என்று ஒத்தாசையாய் நடப்பதும் சித்தியை - சமத்துப் பொண்ணு... எங்க வைதேகி என்று சொல்ல வைத்தது.

    என்றாலும் அப்பா தயங்கினார்.

    இங்கே இருப்பீயாம்மா? - என்று கேட்டார்.

    இருக்கேம்ப்பா- வைதேகிக்கு ஆதியூரைவிட்டு வந்தால் போதும் என்றிருந்தது. நாலு சுவருக்குள் முடங்கி, நாலு பேரின் பார்வைக்கேலி கேள்விகளுக்கு பதில் சொல்லி பூஞ்சை பிடித்துவிடுவோம் என்றிருந்தது.

    பாழடைந்த சிவன் கோயில், இடிந்து ஓடுகள் தொங்கும் அக்ரஹாரத்து வீடுகள். பழமையில் மூழ்கிய வைதீக கிராமம். பதினேழு வயது வரைக்கும் சுவாரசியமாகத்தான் இருந்தது.

    பதினெட்டு வயதில் அடியெடுத்து வைத்தாள். ஊராரின் கேள்விக் கணைகள் முளைத்தன.

    அழுகையே முழுநேரத்தை ஆக்கிரமித்துக்கொள்ள - அதில் மூழ்கிவிடுவோமோ என்று பயந்துதான் போனாள்.

    தெய்வமாய் சித்தப்பா வந்தார்.

    திருச்சி கல்லூரியில் பி.எஸ்ஸி. கணிதம் கிடைத்தது.

    அவ்வப்போது வந்து போகும் இடம்தான் சித்தப்பா வீடு. இன்னொரு சித்தப்பா சென்னையில் இருந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. ‘சாமியாரா போகப் போறேன்’

    Enjoying the preview?
    Page 1 of 1