Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanavil Kanavugal
Vaanavil Kanavugal
Vaanavil Kanavugal
Ebook92 pages38 minutes

Vaanavil Kanavugal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

G.A. Prabha, an exceptional Tamil novelist, written over 200 novels, 100 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466114
Vaanavil Kanavugal

Read more from G.A.Prabha

Related to Vaanavil Kanavugal

Related ebooks

Reviews for Vaanavil Kanavugal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanavil Kanavugal - G.A.Prabha

    11

    1

    வானம் தெளிவாக இருந்தது.

    நேற்று இரவு முழுதும் பெய்த மழையின் சுவடே இல்லாமல் பளிச் என்று விடியல் வானம் ஒரு ஜில்லிப்புடன் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நட்சத்திரங்கள். காற்று, சில் என்று மண் வாசனையைச் சுமந்து வந்தது. மைத்ரா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.

    சீர்மிகு சிங்காரச் சென்னை வருக, வருக என்று வரவேற்கிறது.

    மைத்ரா கை தட்டினாள்.

    "உறங்கும் மானிடனே, உடனே விழித்துக் கொள்.

    உன்னைச் சுற்றி உள்ள அதிகாலை வெளிச்சம்

    வணக்கம் சொல்வதைக் கேள்...!"

    உஷ் சங்கரி அதட்டினாள். அமைதியா இரு.

    கவிதைம்மா. கவிதை, கவிதை

    எதிர் சீட் வயதான பெரியவர். அதை நாங்க சொல்லணும். என்றார்.

    சொல்ல மாட்டேன்றீங்களே? மைத்ரா.

    சென்னை வந்துருச்சா? மேல் பெர்த். போர்வையை மடித்து வைத்து விட்டு எழுந்தார்.

    ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த பக்கத்துக்கு சீட் பெண்மணி, சென்ட்ரல் வரப் போகுது.

    அதைத்தான் நான் தமிழ்ல சொன்னேன். மைத்ரா.

    ஓ! நீ பேசினது தமிழா? கிள்ளை மொழி பேசறியோன்னு நினைச்சேன்.

    குழந்தை என்று சொன்னதற்கு நன்றி மைத்ரா குனிந்து வணங்கினாள்.

    சென்னைல இப்படி இருக்காதே மைத்ரா பெண்மணி எச்சரித்தார்.

    எந்த நேரமும் ஜாக்கிரதையா இருக்க வேண்டிய இடம் இது. நீ முயன்றால் முன்னேறலாம். ஆனா நிறைய பாதுகாப்புடன் நீ நடமாடணும் யாரையும் எளிதில் நம்பிடாதே எதிலும் விழிப்புணர்வுடன், கவனமா இருக்கணும்

    அவரின் அறிவுரை மகிழ்ச்சியாக இருந்தது சங்கரிக்கு.

    நீங்க எந்த ஊரும்மா? மைத்ரா.

    நான் சென்னைதான்.

    நீங்க நல்லவங்களாத்தானே இருக்கீங்க? எல்லாரும் கெட்டவங்க இல்லையே?

    எல்லாரும் நல்லவங்களும் இல்லை. நான் நல்லவள்னு நீ எப்படிச் சொல்ல முடியும்? ஒரு இரவில் மட்டும் ரயில் பயணத்துல என்னை நீ எடை போட முடியாது மைத்ரா

    அவங்க சொல்றது சரிதான் மைத்ரா சங்கரி மெல்லிய குரலில் பேசினாள்.

    நல்லவங்க, கெட்டவங்க எல்லாப் பக்கமும் உண்டு. சென்னை பெரிய நகரம்கிறதால குற்றங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ள இடம். ஜாக்கிரதையா இருக்கணும்.

    அப்போ பெண் அடிமையா இருக்கணும்னு சொல்றீங்களா? அருகில் இருந்த ஒரு கல்லூரி மாணவி

    அப்படி இல்லை. எந்த ஆபத்தும் பெண்ணுக்குத்தான். ஒரு கேடு நடந்துட்டா. காலம் பூரா வேதனைல அவதான் நிம்மதி இல்லாம வாழணும். ஜாக்கிரதையா, விழிப்புணர்வோடு இருந்தா நமக்குச் சந்தோஷம். அதுக்கு மீறி நடந்தா அதிலிருந்து மீண்டு வர்றது எப்படின்னு பாக்கணும்? நாம மகிழ்ச்சியா இருக்கறது நம்ம உரிமை. மத்தவங்களை நாம் திருத்த முடியாது. நம்மளை நாமே பாதுகாப்பா பாத்துக்கலாமே சங்கரி.

    குட் பெண்மணி பாராட்டினார். உங்க கிட்ட ஒரு அமைதி, தெளிவு இருக்கு சங்கரி. நம்ம நட்பு ரயில் பயணத்தோடு நின்னுடக் கூடாது, தொடரணும்.

    கண்டிப்பா. நான் சென்னைக்குப் புதுசு. உங்களை மாதிரி நல்லவங்க நட்பு கிடைக்கறது இறைவன் செயல் என்ற சங்கரி தன் மொபைல் நம்பர் கொடுத்தாள். அவரும் தன் நம்பர் கொடுத்தார்.

    என் பெயர் ராஜேஸ்வரி. நான் அபிராம புரத்துல இருக்கேன். சென்ட்ரல் பேங்க்ல இருக்கேன். நானும், என் பையனும் மட்டும்தான். ஒருநாள் வீட்டுக்கு வாங்க

    கண்டிப்பாம்மா. மைத்ரா ஃபுட் நியூட்ரிஷியன்ல பி.ஜி பண்ணிட்டு இங்க ஒரு சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்ல வேலை கிடைச்சிருக்கு. இவ அப்பா துபாய்ல இருந்து இங்க இந்தியாவுக்கே வந்துட்டார். நான் கோவை. எல்லாம் ஒண்ணா இருக்கலாம்னு இங்க வந்துட்டோம்.

    ஒரே பொண்ணா?

    ஆமாம். இவளை வளர்க்கறதே ரொம்பக் கஷ்டம்

    நல்ல துறு துறுப்பு. நல்ல புத்திசாலியா இருப்பான்னு நினைக்கிறேன்.

    ஆமாம், கோல்டு மெடலிஸ்ட்

    வெரி குட். கண்டிப்பா, வீட்டுக்கு வரணும்.

    எங்கே வீடு?

    இனிதான் பாக்கணும். இப்போதைக்கு இவ அப்பாவோட நண்பர் வீடு காலியா இருக்கு. அங்க தங்கிட்டு ஒரு வாரத்துக்குள்ள வீடு பாக்கணும்.

    உங்க வீட்டுல அவர் எப்ப வந்தாரு?

    அவர் நேற்று இரவுதான் வந்தார். இவ இன்று டூட்டியில ஜாய்ன் செய்யணும். அதான் கிளம்பி வந்தோம்.

    வேலை எங்கே?

    நாதன் ஹாஸ்பிடல்

    ஓ! சுவாமிநாதனுடைய ஹாஸ்பிடலா? எனக்குத் தெரிந்த ஹாஸ்பிடல்தான், பெரிய மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிடி. என் மகனுக்கும் நாதனுடைய பெண்ணுக்கும்தான் நிச்சயம் நடந்திருக்கு

    அப்படியா? ரொம்ப சந்தோஷமா இருக்கு. சங்கரி மனசாரக் கூறினாள்.

    நான் ஒரு போன் நம்பர் தரேன். என் உறவினர்தான் அவர் வீடு ஒண்ணு காலியா இருக்குன்னு சொன்னார். கேட்டுட்டுப் போய்ப் பாருங்க ஹாஸ்பிடல்லேர்ந்து வாக்கபிள் டிஸ்டன்ஸ்தான்.

    எனக்கு ஒரு சந்தேகம்? மைத்ரா.

    தாராளமா கேளு

    சென்னைல யாரையும் நம்பக் கூடாதுன்னு இப்பத்தான் சொன்னீங்க. நீங்க இப்போ இவ்வளவு உதவி செய்யறீங்க. நம்பலாமா? கூடாதா?

    குட் கொஸ்டின். வீட்டைப் போய்ப் பாரு. பிடிச்சா குடி போ. அதுக்கப்புறம் நம்பு. நீதானே சொன்னே. நல்லவங்களும் இருக்காங்கன்னு ராஜேஸ்வரி சிரித்தார்.

    டன். மீண்டும் சந்திப்போம் மைத்ரா

    ரொம்ப நன்றிம்மா சங்கரி கை கூப்பினாள்.

    மைத்ரா துள்ளிக் குதித்து பெட்டிகளை இறக்கினாள் அவளின் ஒவ்வொரு அணுவும் உற்சாகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. படித்து வேலைக்குப் போகும் குஷி, பல

    Enjoying the preview?
    Page 1 of 1