Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Minnal Devathaigal
Minnal Devathaigal
Minnal Devathaigal
Ebook144 pages1 hour

Minnal Devathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351487
Minnal Devathaigal

Read more from Ga Prabha

Related to Minnal Devathaigal

Related ebooks

Reviews for Minnal Devathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Minnal Devathaigal - GA Prabha

    http://www.pustaka.co.in

    மின்னல் தேவதைகள்

    Minnal Devathaigal

    Author:

    ஜி.ஏ.பிரபா

    G.A.Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    மலைக்கோட்டை கம்பீரமாக ஜொலித்தது.

    அதிகாலைப் பனியின் நடுவில், மின்னும் நட்சத்திரங்களுகம் நிலவும் சிரிக்க, உச்சிப்பிள்ளையார் கோவிலில் மின்னும் குழல் விளக்கு, அம்ருத கன்யாவிற்குள் ஒரு பரவசத்தையும், உடலில் ஒரு மின் அதிர்வையும் தந்தது.

    தடதடவென்று காவிரிப் பாலத்தை ரெயில் கடக்கும் போது வெள்ளம் சூழ்ந்த காவிரி, குளிர்காற்றை ரெயிலுக்குள் வீசியது. சமீபத்தில் பெய்த மழையால் இருகரை தொட்டு ஓடியது காவிரி. கூடவே நகர்ந்தது மலைக்கோட்டை.

    கன்யா தன் மனதை ஒருமுகப்படுத்தினாள். உச்சிப்பிள்ளையாரை நோக்கி தன் இரு கரம் குவித்து எண்ணங்களை ஒரு புள்ளியில் குவித்தாள். நினைவு தெரிந்த நாள் முதலாய் தன் சிந்தனை, செயல்களில் கடைபிடிக்கும் பிரார்த்தனையில் கண்மூடி ஈடுபட்டாள்.

    ‘இறைவா செல்லும் இடமெல்லாம் என்னால் நன்மையே நடக்க அருள்புரி. என்சொல், செயல், எண்ணம் இவற்றில் நேர்மையற்றவை புகச் செய்து விடாதே. ஊடன் துணையாய் நின்று, என்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்க என்னால் முடிந்ததைச் செய்ய துணையாக நில்!’

    மனம் ஒன்றி வேண்டி, விழி திறக்கையில் உள்ளே ஒரு குளுமைப் படர்ந்தது. மனம் நிர்மலமாக இருந்தது. தாகத்துடன் தவிப்பனின் வேட்கையோடு பார்வை சுற்றுப்புறங்களின் அழகைப் பருகியது. அதன் கம்பீரத்தை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை.

    எத்தனை காலம்? யுகங்களாக இது நிற்கிறது. எல்லா சம்பவங்களும் ஒரு மவுன சாட்சியாக, அமைதியான புன்னகையோடு ரசித்து கொண்டிருக்கிறது.

    இருபது வருடங்களுக்கு முன் பெற்ற குழந்தையோடு தீராத பழியை சுமந்து கொண்டு இங்கிருந்து வெளியேறிய ராஜத்தையும் இந்தக் கோட்டை பார்த்திருக்கும். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகி, தன் அம்மாவிற்கு ஏற்பட்ட பழியைத் துடைக்கும் வைராக்கியத்துடன் இதே திருச்சிக்கு திரும்புவதையும் இந்தக் கோட்டை பார்க்கிறது.

    என்ன நடக்கும்.

    நடந்ததே மீண்டும் நன்றாக நடக்கும்.

    ஒரு பூரணத்துவத்தை நோக்கிதான் எல்லா நிகழ்வுகளும் திரும்பத் திரும்ப நிகழ்கிறது. ஏற்கனவே நடந்ததுதான் இப்போது நடக்கிறது. இதுவே மீண்டும் நடக்கும். வாழ்க்கை தத்துவம். கீதை சொன்ன பாடம்.

    நன்றாக நடந்திருந்தால் நல்லதே நடக்கும்.

    நம்பிக்கையோடு கிளம்பினாள் கன்யா.

    ராஜம் மட்டும் கவலைப்பட்டாள்.

    திருச்சிக்கு போகணுமா கன்யா? இங்கேயே வேற நல்ல பெரிய ஹாஸ்பிட்டலா பாரேன்

    ஆர்.வி.ஹாஸ்பிடல் பெரிசும்மா. பாலிகிளினிக். நிறைய கேஸ் பார்க்கலாம். அனுபவம் கிடைக்கும்.

    இதுதான் காரணமா?

    இதுவும் ஒரு காரணம். ஏன் திருச்சிக்கு போனா என்ன?

    உங்கப்பா அங்கே இருக்கார்

    கரெக்ட். அதுதான் மெயின் காரணம்

    நீ யாருன்னு தெரிஞ்சா… ஏதானும் இடைஞ்சல் செய்தா

    தெரியட்டுமே!செய்யட்டுமே

    ஏன் இந்த பிடிவாதம் கன்யா?

    உன் மேல சுமத்துன பழி பொய்னு நிரூபிக்க வேண்டாமா

    பொய்னு நிரூபிக்க என்கிட்ட ஆதாரம் இல்லையே?

    உண்மைன்னு நிரூபிக்க அவர்கிட்ட மட்டும் ஆதாரம் இருக்கா?

    ஆம்மா வேதனையோடு நின்றது கன்யாவை உறுத்தியது. இந்த வேதனை, அவமானத்துடன் இவள் வாழ வேண்டுமா? தாய்க்கு ஏற்பட்ட பழியை துடைக்க வேண்டியது குழந்தைகளின் கடமைதானே.

    தான் சுமத்தியது வீண் பழின்னு அவருக்கே தெரியும் கன்யா

    அதாம்மா ஆதாரம் அவருடைய மனசாட்சி. அதை தட்டி எழுப்பறது மட்டும்தான் என் வேலை. என்னை தன் குழந்தை இல்லைன்னு சொன்ன அவரே, இவ என் மகள்னு பெருமையா சொல்லணும்

    ப்சு… வீண் கன்யா

    அம்மா பழி சுமத்தறதை விட அதை ஏத்துக்கிட்டு அமைதியா இருக்கிறது அதைவிடக் கேவலம். நீ அமைதியா இருந்தா அதை உண்மைன்னு ஏத்துக்கறேன்னு அர்த்தம் கன்யா உறுதியாக பேசினாள்.

    அதன் பிறகே ராஜம் சம்மதித்தாள்.

    பி.எஸ்.சி. நர்சிங் முடித்ததும் சென்னையில் ஒரு மருத்துவமனையில் தான் கன்யா வேலை பார்த்தாள். அந்த டாக்டர் மூலம்தான் ஆர்.வி. ஹாஸ்பிடலில் வேலை கிடைத்தது. அதன் உரிமையாளர் டாக்டர் வேலாயுதம் சென்னை வந்தபோது அங்கேயே இண்டர்வியூ நடத்தி திருப்தியுடன் வேலைக்கான உத்தரவையும் தந்துவிட்டார்.

    எண்ணி வருவது ஈடேறுமா?

    திருச்சி நெருங்க, நெருங்க ஒரு பரபரப்பு தொற்றியது. மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோபுரம், காவிரி எல்லாம் ஒவ்வொரு அணுவையும் சிலிர்க்க வைத்தது.

    திருச்சியோட அழகே மலைக்கோட்டை தான் கன்யா. ஒவ்வொரு மனிதனும் அந்தக் கோட்டை மாதிரி இருக்கணும். அதன் உறுதி, கம்பீரம் எல்லாம் அவனுக்கு வேணும் ராஜம் சொல்லிச் சொல்லி உருவேற்றிய திருச்சி.

    மின்ஒளியில் ஜொலித்தது திருச்சி. விழித்தவர்கள் அங்கங்கே ரெயில் நின்ற இடத்தில் இறங்க, ஸ்டேஷன் வரும்போது பாதிப்பெட்டி காலியாக இருந்தது.

    கன்யாதன் தோள்பையை இழுத்து சீட்டின் மேல் வைத்தாள். எதிர் பெர்த்தில் ஒரு பையன் இழுத்து போர்த்தி படுத்திருந்தான்.

    "தம்பி… கன்யா அவனை தட்டி எழுப்பினாள். போர்வை சுட்டது. பரபரப்புடன் போர்வையை விலக்கி நெற்றியில் கை வைத்து பார்த்தாள். கொதித்தது. பையன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

    கடவுளே! கன்யா அவசரமாக அவனை தட்டி எழுப்பினாள். கைப்பிடித்து கீழே இறக்கி உட்கார வைத்தாள். அவன் பற்கள் தந்தி அடித்தது. உடல் தூக்கி தூக்கிப் போட்டது.

    ஏன் தம்பி, ஃபீவர் இப்படி அடிக்கிறதே. இதுல கிளம்பி வரணுமா?

    இல்லீங்க. என் பிரண்டோட அக்காவுக்கு கல்யாணம்னு நாங்க நாலு பிரண்ட்ஸ் போகணும்னு போனோம். இன்னைக்கு எங்க அக்காவுக்கு மேரேஜ் நிச்சயம் செய்யறாங்க. அதான் நான் மட்டும் கிளம்பிட்டேன். நேத்து லேசாத் தான் ஃபீவர் இருந்தது. நைட்தான் ஜாஸ்தியாயிருச்சு பையன் இயல்பாய் பேசினாலும் பற்களும், உடலும் நடுங்க வார்த்தைகள் ஏறி இறங்கியது..

    இப்போ எப்படி வீட்டுக்கு போவே

    ஆட்டோ பிடிச்சு போயிடுவேன்

    வீட்டுக்கு போன் பண்ணிடலாமா?

    ஓ!காட்… வேண்டாம். வீட்ல எல்லாரும் நிச்சயதார்த்த பிஸியில் இருப்பாங்க. இந்த மாதிரின்னா பதறிடுவாங்க. ஏற்கனவே நான் சென்னை போனதுல அப்பாவுக்கு இஷ்டமில்லை பையன் பதறினான்.

    படிக்கிறியா?

    ம்… பி.ஈ. பர்ஸ்ட் இயர்

    அப்பா பயந்த மாதிரியே ஆச்சு பார்த்தியா. எங்கே பார்த்தாலும் மழை, வெள்ளம், தொற்று நோய்னு இருக்கு கன்யா தன் கைப்பையை எடுத்து காய்ச்சலுக்கான மாத்திரையை நீட்டி, தண்ணீர் பாட்டிலும் தந்தாள்.

    வே… வேண்டாங்க. வீட்டுக்கு போயிடறேன்

    நானும் நர்ஸ்தான் தம்பி… சாப்பிடு. ஃபீவர் கண்ட்ரோல் ஆகும். ஹாஸ்பிடல் போயிடலாம்

    அவன் மாத்திரையை வாங்கி வாயில் போட்ட அடுத்த நிமிடம் கொட கொடவென்று வாந்தி எடுத்தான். மாத்திரையும் இரவு சாப்பிட்டதும் அப்படியே வெளியில் வந்தது. அஜீரணக் கோளாறுடன் கிருமித் தொற்றுதலும் ஏற்பட்டிருக்கிறது என்று கன்யாவுக்கு புரிந்தது.

    பையன் மீண்டும், மீண்டும் ஓங்காரித்து வாந்தி எடுக்க கன்யாவுக்கு அவசரம் புரிந்தது. ஓடிப்போய் இரண்டு போர்ட்டர்களை அழைத்து வந்து, அவர்கள் உதவியுடன் வெளியில் வந்தாள்.

    பையன் துவண்டு போயிருந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1