Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maya Poigai
Maya Poigai
Maya Poigai
Ebook135 pages53 minutes

Maya Poigai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகா பாரதமே கர்ம வினையைப் போதிக்கும் இதிகாசம். நடந்த எதுவும் நம்மால் நடக்கவில்லை. அவரவர் கர்ம வினைப்படியே என்று ஒவ்வொருவரின் முன் வினையைக் குறிக்கிறது மாயப் பொய்கை.
பீஷ்மர். அஷ்ட வசுக்களில் ஒருவர்,அவரை அழிக்கப் பிறந்த வராங்கி என்பவளே அம்பை. 16 வருஷமே வாழ்வேன் என்று சத்தியம் செய்து பூமிக்கு வந்த சோமனின் மகன் அபிமன்யு என்று அவர்களின் முற்பிறவி பற்றிக் கூறுகிறது மாயப் பொய்கை.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580101006567
Maya Poigai

Read more from Ga Prabha

Related to Maya Poigai

Related ebooks

Related categories

Reviews for Maya Poigai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maya Poigai - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாயப் பொய்கை

    Maya Poigai

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மாயப் பொய்கை

    1. மேனகை

    2. ரத்னதாரை

    3. சகுந்தலை

    4. தேவர்ஷனி

    5. புஷ்கரணி

    6. தபதி

    7. வாஹினி

    8. தேவகங்கா

    9. ஞான கங்கை

    10. விஷ்ணு ரூபை

    11. அச்சோதை

    12. கிருதை

    13. அத்ரிகை

    14. யோகசித்தை

    15. ஜாலவதி

    16. கிருதாசி

    17. அரிஷ்டை

    18. சித்தி தேவி

    19. த்ருதி தேவி

    20. வராங்கி

    21. மதி எனும் ஞான தேவதை

    22. நளாயணி

    23. மனோஹரி

    24. தாரை

    25. மகாலஷ்மி

    மாயப் பொய்கை

    இந்த உலகம் ஒரு மாயப் பொய்கை. இதில் மூழ்கி எழும் ஒவ்வொருவரும் தங்கள் முன்ஜென்ம வினையைக் கழிக்கவும், முக்தி பெறவுமே வருகிறார்கள். தங்கள் வினைகளுக்கு ஏற்ப பிறப்பு, இறப்பு எனும் மாயச் சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறார்கள். மகாபாரதம் அதை முழுமையாகக் காட்டும் இதிகாசம். இதில் ஒவ்வொருவரும் தங்கள் முன்ஜென்ம விதிப்படியே பிறக்கிறார்கள் செயல் புரிகிறார்கள். விதி அவர்களைச் செலுத்துகிறது. காலம் அவர்கள் கை பிடித்து அழைத்துச் செல்கிறது. அவர்களில் சிலரைப் பற்றிய கதைகளே மாயப் பொய்கை.

    1. மேனகை

    மாலினி நதி அமைதியாக ஓடியது.

    அதிக ஆழம் இல்லாமல் அகன்று கிடந்த அந்த நதியில் மான்கள் நீர் அருந்திக் கொண்டிருந்தது. அதன் கரைகளில் அடர்ந்த காடு, மரங்கள் நிறைந்து, அவ்வப்போது வன விலங்குகளின் அச்சமூட்டும் சப்தம் மட்டும் கேட்டது.

    விஸ்வாமித்திரர் மீண்டும் தவம் செய்யத் தயாராக கிளம்பி நின்றார். அடைத்து வைத்த காற்று பீறிட்டுக் கிளம்பிவிட்டது. அதைத் தடுக்க முடியாது.

    நாம் பிரியத்தான் வேண்டுமா முனிவரே? ஏக்கத்துடன் கேட்டாள் மேனகை.

    அவள் இதயம் வெடித்து விடும் போல் பொங்கி குமுறியது. கண்கள் நிறைந்து வழிந்தது. பிரபஞ்ச எல்லை தாண்டி பரந்த அன்பு அவருடையது. அதில் நனைந்து, உருகி, கரைந்து மகிழ்ச்சியில் திளைத்த அவளை உதறி மீண்டும் தவம் செய்யக் கானகம் கிளம்பிவிட்டார் முனிவர்.

    அள்ளி அள்ளி வழங்கிய அன்பு நிரந்தரம் கிடையாதா மகரிஷே?

    இங்கு யாரும், எதுவும் நிரந்தரம் இல்லை கண்மணி

    கண்மணி என்ற வார்த்தை அவளை மீண்டும் உலுக்கியது.

    யார் இட்ட கட்டளை இது பிரபோ? ஆவேசத்துடன் கேட்டாள் மேனகை.

    காலத்தின் கட்டளை.

    காலம் நம் கைக்குள் அல்லவா உள்ளது?

    இல்லை. அது விதியின் சேவகன். நாம் அதன் கைப்பொம்மைகள்.

    பின் ஏன் அது நம்மை சேர்த்து வைத்தது?

    அது எழுதப்பட்டது மேனகை. எத்தனையோ தேவகன்னிகைகள் இருக்கையில் உன்னை என் இந்திரன் என்னிடம் அனுப்ப வேண்டும்?

    கேள்வியுடன் பார்த்தாள்.

    இந்திரன் உன் ஆழ்மனதின் ஆசைக்குக் கருணை புரிந்திருக்கிறான். ஒருமுறை நான் அவன் சபைக்கு வருகை புரிந்தபோது அங்கு என்னைப் பார்த்த உன்னிடம் ஒரு சலனம். என்னுடன் வாழ்ந்து மகிழ வேண்டும் என்று உன் உள்ளுணர்வு விரும்பியது. எனவேதான் நீ வந்தாய். புலன்களை அடக்கி, கடுமையான தவம் புரியும் நான் பெண் சபலத்தில் அதை கைவிடுவேன் என்று நினைத்தாயா?

    பின்? திகைப்புடன் கேட்டாள் மேனகை.

    ஒரு மிகப்பெரிய விஷயத்திற்கான விதை ஊனப்படுகிறது. இந்த யுகம் முடியும்போது மிகப்பெரிய போர் ஒன்று மூளப் போகிறது. நம் பரம்பரையில் சொந்த சகோதரர்கள் ஒற்றுமையின்றி தமக்குள் சண்டையிட்டு மடியப் போகிறார்கள்… தீமை நிறைந்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் பல பாவங்களின் உற்பத்தி இடமாக பூமி மாறப் போகிறது. பரம்பொருள் தர்மத்தை நிலைநாட்ட அவதரிக்கப் போகிறார்.

    மேனகை அமைதியாக நின்றாள்.

    இந்த பூமி ஒரு மாயப்பொய்கை. இதில் அன்பு, பிரியம், மகிழ்ச்சி, பாசம், இன்பம் என்று மனதை நெகிழ வைக்கும் விஷயங்களுடன் பொறாமை, வஞ்சகம், காமம், துரோகம் என்று நன்மையையும் தீமையும் நிறைந்தே இருக்கிறது. இதில் மனிதனாகப் பிறப்பவர்கள் மூழ்கியே ஆக வேண்டும். அதை ஒட்டியே நீயும் நானும் சேர்ந்தது. இந்தப் பொய்கையே நம் இன்ப, துன்பத்திற்கு வழி அமைத்து பிறப்பு, இறப்பு என்ற சூழலில் தள்ளுகிறது. ஆனால் உன் அன்பில் நான் இது மாய வாழ்வு என்பதை மறந்துவிட்டேன்.

    அமைதியாக நின்றாள் மேனகை. அவர் போல் அவள் கிளம்ப முடியாது. கையில் பிறந்த பெண் குழந்தை இருக்கிறது. ஒரு தாயாக அதை விட்டு விலக முடியாது.

    இது என்ன மாயம்? தேவலோக மங்கையாகப் பிறந்து விசுவாமித்திர முனிவரை மயக்க வந்து, அவருடன் வாழ்ந்து இன்று ஒரு குழந்தைக்குத் தாயாக மனம் முழுதும் காதல் ஏக்கத்துடன் நிற்கிறாள். அவரைப் பிரிந்து அவள் எப்படி வாழ முடியும்?

    முனிவரின் மன சாம்ராஜ்ஜியம் வானத்தைவிட அகன்றது. மழைபோல் குளுமையும், இனிமையும் நிறைந்தது. அதைப் பிரிய முடியாமல் தவிக்கிறது மனம்.

    ஆனால் அவளும் கிளம்பித்தான் ஆக வேண்டும். இந்தக் குழந்தையை எங்கு விடுவது?

    வழி கிடைக்கும்? முனிவர் கனிவோடு அவளை இறுகத் தழுவி அவரின் அன்பை எல்லாம் அவளுக்குள் செலுத்தினார். மனமும் மனமும் ஒன்று கலக்க உடல் சிலிர்க்க மெய்மறந்து கண்மூடி நின்றாள். அந்த நிமிடம் அவளுக்குள் இருந்த பற்று அகன்றது. வருகிறேன் கண்மணி - முனிவர் சென்று விட்டார்.

    கண்ணீரின் ஈரம் காயாமல் குழந்தைக்கு ஒரு வழி காட்டும் இந்தப் பிரபஞ்ச சக்தி என்று நம்பிக்கையுடன் மலைச்சரிவில் இறங்கிய மேனகை சட்டென்று நின்றாள்.

    அடர்ந்த மரத்தின் கீழ் மான் ஒன்று பிரசவ வலி எடுத்து தளர்ந்து படுத்திருந்தது. தொலைவில் புலி ஒன்று அதை தாக்க பாய்ந்து வருவதோ, வேடன் அதைக் குறி வைப்பதோ கவனம் இல்லாமல் தன் குழந்தையைப் பெற்றெடுப்பதில் மட்டுமே கவனத்துடன் இருந்தது மான். பதறினாள் மேனகை.

    ஆனால் அங்கு விதி வேறு எழுதியது.

    வானில் பரந்த வல்லூறு ஒன்றின் வாயிலிருந்து மாமிசத்துண்டு வேடன் கைமேல் விழ அம்பு குறி மாறி புலியின் மேல் பாய்ந்து அது இறந்து வீழ்ந்தது. வேடன் சென்று விட்டான். மான் அழகான குட்டி ஒன்றை ஈன்று நிதானமாக எழுந்து ஓடியது.

    பிரமித்து நின்றாள் மேனகை. எழுதிச் செல்லும் விதியின் கை என்ன வேண்டுமானாலும் சாதிக்கும். குழந்தையையும் அது பார்த்துக் கொள்ளும்.

    மேனகையின் உள்ளம் பண்பட்டது. உலகம் மாயை. வருவதும் போவதுமே வாழ்வு. இதில் கடந்தவற்றை மறந்து நடக்கப்போவதை எதிர்பாராமல், நிகழ் காலத்தில் வாழ் என்ற இந்தப் பொய்கை வாழ்வு கூறுகிறது.

    மேனகை குழந்தையை மான் குட்டி ஈன்ற இடத்தில் சாகுந்தல இலையில் சுற்றிக் கிடத்தினாள். தேவகன்னிகையாக மாறி தேவலோகம் சென்றாள்.

    சகுந்தலையின் மகன் பரதன். பரதனின் மகன் குரு. குருவின் மகன் பிரதீப் பிரதீப்பின் மகனே சாந்தனு.

    2. ரத்னதாரை

    அது ஒரு பூங்கனவு.

    கனவு கூட அல்ல. நினைவு நழுவுகிறது.

    மெல்ல நழுவும் நினைவு, அவளை வேறு ஒரு புது உலகிற்குக் கொண்டு சென்றது. எதிரே விளக்குகளால் ஜொலித்த ஹஸ்தினாபுர அரண்மனை, கங்கை

    Enjoying the preview?
    Page 1 of 1