Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thithikkum Thiruppugazh Nayagan
Thithikkum Thiruppugazh Nayagan
Thithikkum Thiruppugazh Nayagan
Ebook106 pages34 minutes

Thithikkum Thiruppugazh Nayagan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகத்து உயிர்களை எல்லாம் தனக்குள் ஒன்றிடச் செய்பவன். நினைக்கும்போதே உயிர் உருகச் செய்யும் ஆனந்த வடிவினன். நெஞ்சு இனிக்க, வாய் மணக்க, சொல்லச் சொல்ல இனிக்கும் நாமம் "முருகா"

முருகனின் புகழைப் பற்றிக் கூறிக் கொண்டே இருக்கலாம். முடிவில்லாத அமுதக் கடல். அந்தக் கடலிலிருந்து ஒரு சில அமுதத் துளிகளை அவன் அருளால் எடுத்துத் தருகிறேன். அவன் புகழை அவனே என் மூலம் எழுதிக் கொள்கிறான் என்பதே உண்மை. நம்மை இயக்கம் சக்தி அவன் அல்லவா?அனைவரும் அவன் அருள் பெற்று, வாழ்வில் சகல வளங்களுடன், நலங்களுடன் வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580101010322
Thithikkum Thiruppugazh Nayagan

Read more from Ga Prabha

Related to Thithikkum Thiruppugazh Nayagan

Related ebooks

Reviews for Thithikkum Thiruppugazh Nayagan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thithikkum Thiruppugazh Nayagan - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தித்திக்கும் திருப்புகழ் நாயகன்

    Thithikkum Thiruppugazh Nayagan

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    பொருளடக்கம்

    முன்னுரை - என்னுரை

    1. திருவண்ணாமலை

    2. வயலூர்

    3. திருப்புகழ் நாயகன் விராலி மலை

    4. தித்திக்கும் திருப்புகழ் நாயகன் திருபரங்குன்றம்

    5. திருச்செந்தூர்

    6. பழனி

    7. தித்திக்கும் திருப்புகழ் நாயகன் திருவீழிமிழமை

    8. சிறுவாபுரி

    9. மனக்கவலை தீர்க்கும் மாலோன் மருகன் திருவொற்றியூர்

    10. சீரான வாழ்வருளும் சிரகிரி வேலவன் சென்னிமலை

    11. தித்திக்கும் திருப்புகழ் நாயகன் மன மகிழ்ச்சி தரும் மயிலம்

    12. தித்திக்கும் திருப்புகழ் நாயகன் ஸ்வாமிநாதனாய் அருளும் சுவாமிமலை

    13. முன்னின்று காக்கும் முத்துக்குமாரஸ்வாமி வைத்தீஸ்வரன் கோயில்

    14. திருவருள் தரும் திருப்போரூர்

    15. தித்திக்கும் திருப்புகழ் நாயகன் திருவருள் தரும் திருவானைக்காவல்

    16. கந்தபுராணம் தந்த கந்தன் காஞ்சிபுரம்

    17. நினைத்ததை நிறைவேற்றும் நிகரற்ற முருகன் திருத்தணி

    18. சங்கடங்கள் தீர்க்கும் சண்முக நாதர் குன்றக்குடி

    19. சிக்கல்களைத் தீர்க்கும் சிங்கார வேலவன் சிக்கல்.

    20. சுகம் பல தரும் சுப்ரமணியர் திருவிடைக்கழி

    21. சகல நலன்கள் அளிக்கும் சண்முகன் கருவூர்

    22. மாலவன் மருகோன் மயில்வாகனன் திருவேங்கடம்

    23. சுட்ட பழம் தந்த சுப்ரமணியன் பழமுதிர்ச் சோலை

    சமர்ப்பணம்

    பிரபஞ்ச நாயகனாம், பரம்பொருளாய் விளங்கும்

    திருப்புகழ் நாயகன் திருமுருகன் பாதங்களுக்கு

    முன்னுரை - என்னுரை

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.

    முருகா

    மூவினகளையும் தீர்க்கும் முத்தமிழ் நாமம்.

    உடலாக, உயிராக, அதை இயக்கும் சக்தியாகத் திகழ்பவன் முருகன். வாடிய பயிருக்கு வற்றாது நீர் ஊற்றுபவன். அமிர்தமாய் உயிர் மூச்சு அருளும் மும்மூர்த்திகளின் வடிவமானவன்.

    உலகத்து உயிர்களை எல்லாம் தனக்குள் ஒன்றிடச் செய்பவன். நினைக்கும்போதே உயிர் உருகச் செய்யும் ஆனந்த வடிவினன். நெஞ்சு இனிக்க, வாய் மணக்க, சொல்லச் சொல்ல இனிக்கும் நாமம் முருகா.

    அவனைப் பாடிக் களித்திடவே பற்பல ஞானிகள் பூமியில் அவதாரமெடுத்தனர். அவனை மெய் சிலிர்க்கப் பாடி, தன்னைப் பூரணமாக ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்து, தான் அனுபவித்த ஆனந்தத் தேனை இசை வடிவாகப் பலர் இயற்றித் தந்திருந்தாலும், அதில் தன்னிகரில்லாமல் ஜொலிப்பது அருணகிரிநாதரின் திருப்புகழ்.

    முருகனின் பெருமையும், பண்பு நலன்களையும், அவனின் அருளைப் பெரும் வழியையும் தன் பாடல்கள் மூலம் காட்டித் தந்தருளினார். கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி திருப்புகழ் போன்றவை நமக்கு முழுமையாக கந்தனின் கருணையை பெற்றுத் தருபவை.

    அன்றாட வாழ்வின் சலனங்களில் அல்லலுற்றுத் தவிக்கும் மக்களின் வேதனைகள், குழப்பங்கள், சலனங்களை நீக்கி, அவர்கள் மன அமைதியுடன், தூய்மையான வாழ்க்கை வாழ வழி காட்டுவது திருப்புகழ்.

    தலங்கள் தோறும் சென்று முருகனைத் தரிசித்து அங்கு திருப்புகழ் பாடி அருளினார் அருணகிரி நாதர். இந்த உலகம் இறைவனுடையது. அதில் வாழும் உயிர்கள் அவனின் திருக்கோயில். அவன் இதய வாசனாக, உடலை இயக்கும் உயிராக பக்தர்கள் உள்ளே குடி இருக்கிறான். அவன் அருளால் பக்தன் தன்னை உயர்த்திக் கொள்வதோடு, அறியாமையில் சிக்கி வாடும் ஜீவன்களையும் உயர்த்த வேண்டும்.

    அருணகிரி நாதர் இறைவனின் பக்தர்கள் நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். செய்யும் செயல்களை முருகனுக்கே அர்ப்பணித்து, அவன் நினைவுடனேயே காரியங்கள் செய்ய வேண்டும் என்கிறார்.

    மலை ஆறு கூறெழ வேல் வாங்கினானை

    வணங்கி அன்பின் நிலையான மாதவம் செய்குவேனோ

    இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே

    என்கிறார். ஒவ்வொரு தலங்களும் சென்று அவனின் வீரத்தையும், புகழையும் தன பாடல்கள் மூலம் விளக்குகிறார்.

    திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும் தினசரி பாராயணம் செய்கிறார்கள் பக்தர்கள். இதில் உள்ள இசைத் தாளங்கள் எந்த ஒரு இசை நூலிலும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றவை. இதில் 1334, இசைப் பாடல்கள் உள்ளன. அவற்றில் 1088 சந்த வேறுபாடுகள் உள்ளன. முருகன் அருளாலேயே அருணகிரி நாதர் இப்படி அற்புதமான பாடல்களை இயற்ற முடிந்தது.

    தவறான பாதையில் சென்று பல தீய செயல்கள் செய்த அருணகிரிநாதர், கடைசியில் உலகை வெறுத்து, உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து திருவண்ணாமலை கோபுர உச்சியிலிருந்து குதிக்கிறார். அப்போது கார்த்திகேயன் கனிவுடன் தன் கரங்களால் அவரைத் தாங்கிப் பிடிக்கிறான். தன் கருணைப் பாதங்களைக் காட்டி அவரை ஆட்கொள்கிறான் முருகன்.

    முருகன் அருணகிரி நாதரிடம் சும்மா இரு சொல்லற என்று மௌன உபதேசம் அருளுகிறார். நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்கும் அவர் முன் மயில் மீது தோன்றி உலகம் உய்யத் திருப்புகழ் பாடு என்று கட்டளை இடுகிறான் கந்தன்.

    வேதங்களாலும் போற்றுதற்கு அறிய உன் புகழை, படிப்பறிவில்லாத என்னால் எப்படி எழுத முடியும்? என்று அருணகிரியார் திகைக்க அவர் நாவில் தன் வேலின் நுனியால் ஓம் என்னும் மந்திரத்தை எழுதினான் முருகன். செந்தமிழ் நாதனான முருகன் முத்தைத் திரு என்று அடி எடுத்துக் கொடுக்க கடல் மடை திறந்த வெள்ளம் போல் திருப்புகழ் பொங்கிப்

    Enjoying the preview?
    Page 1 of 1