Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruppavai
Thiruppavai
Thiruppavai
Ebook165 pages2 hours

Thiruppavai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாய்ரேணு

தமிழ்பிறந்த பொதிகையின் மடியில் தவழும் தென்காசி இவர் ஊர். இவர் குடும்பமோ தமிழும் வடமொழியும் இருகண்களாய், ஆன்மீகமே உயிராய்க் கொண்டது. இளைய வயதிலேயே தமிழில் ஈடுபாடு வந்தது. மாதவன் கருணையால் மன்னுபுகழ் மஹாபாரதம் ஏழுவயதிலிருந்து தோன்றாத் துணையானது. கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறார். அவை பல பத்திரிகைகளில் வந்துள்ளன.

பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. உபநிடதம், புராணம், இதிகாசங்கள், திருமுறை, திவ்வியப் பிரபந்தம், திருத்தலப் பயணங்கள் இவற்றில் ஆர்வம் அதிகம்.

க்ரைம் நாவல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். இவரின் ஆதரிச எழுத்தாளர்கள் – திரு ரா கணபதி, திரு கல்கி, திரு ராஜேஷ்குமார். ஹாரி பாட்டரின் ரசிகையான இவர் குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதைகளும் எழுதுகிறார். எந்தத் துறையில் எழுதினாலும் தர்மம், இறைநம்பிக்கை ஆகிய இரண்டும் குறையாது இருக்கவேண்டும் என்பது இவர் கொள்கை.

தற்போது தன் தாய், கணவர், மகளுடன் திருநெல்வேலியில் வசிக்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111402934
Thiruppavai

Read more from Sairenu

Related to Thiruppavai

Related ebooks

Reviews for Thiruppavai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruppavai - Sairenu

    http://www.pustaka.co.in

    திருப்பாவை

    Thiruppavai

    Author:

    சாய்ரேணு

    Sairenu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sairenu-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    திருப்பாவை - அறிமுகம்

    திருப்பாவை – முதற் பாசுரம்

    திருப்பாவை – இரண்டாம் பாசுரம்

    திருப்பாவை – மூன்றாம் பாசுரம்

    திருப்பாவை – நான்காம் பாசுரம்

    திருப்பாவை – ஐந்தாம் பாசுரம்

    திருப்பாவை – ஆறாம் பாசுரம்

    திருப்பாவை – ஏழாம் பாசுரம்

    திருப்பாவை – எட்டாம் பாசுரம்

    திருப்பாவை – ஒன்பதாம் பாசுரம்

    திருப்பாவை – பத்தாம் பாசுரம்

    திருப்பாவை – பதினொன்றாம் பாசுரம்

    திருப்பாவை – பன்னிரெண்டாம் பாசுரம்

    திருப்பாவை – பதிமூன்றாம் பாசுரம்

    திருப்பாவை – பதினாலாம் பாசுரம்

    திருப்பாவை – பதினைந்தாம் பாசுரம்

    திருப்பாவை – பதினாறாம் பாசுரம்

    திருப்பாவை – பதினேழாம் பாசுரம்

    திருப்பாவை – பதினெட்டாம் பாசுரம்

    திருப்பாவை – பத்தொன்பதாம் பாசுரம்

    திருப்பாவை – இருபதாம் பாசுரம்

    திருப்பாவை – இருபத்தொன்றாம் பாசுரம்

    திருப்பாவை – இருபத்தி இரண்டாம் பாசுரம்

    திருப்பாவை – இருபத்துமூன்றாம் பாசுரம்

    திருப்பாவை – இருபத்துநான்காம் பாசுரம்

    திருப்பாவை – இருபத்தி ஐந்தாம் பாசுரம்

    திருப்பாவை – இருபத்தி ஆறாம் பாசுரம்

    திருப்பாவை – இருபத்தி ஏழாம் பாசுரம்

    திருப்பாவை – இருபத்தி எட்டாம் பாசுரம்

    திருப்பாவை – இருபத்தி ஒன்பதாம் பாசுரம்

    திருப்பாவை – முப்பதாம் பாசுரம்

    திருப்பாவை - அறிமுகம்

    ஸ்ரீ கணாதிபதயே நம:

    ஸ்ரீ குருப்யோ நம:

    அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

    பன்னு திருப்பாவைப் பல்பதியம்

    இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை

    பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல்பாவை

    பாடி அருளவல்ல பல்வளையாய்

    நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற விம்மாற்றம்

    நாங்கடவா வண்ணமே நல்கு.

    இது மாதவனேயான மார்கழி மாதம். பிரபஞ்சம் விழிக்கும் பொழுது. அகமும் அகிலமும் குளிர்ந்திருக்கும் வேளையில், பக்தியில் குளிரக் குளிர ஈடுபட்டு, அவனைத் தேடி அவனை அடைக என்று நம் பெரியோர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

    ஆண்டவனே நாயகன். நாம் அனைவரும் அவன் சக்தி சொரூபங்களே. உள்ளும் வெளியும் மதுரம் ஊறிக் கிடக்கும் மார்கழியிலே, இந்த மதுர பாவனை வழிபாட்டைக் கடைப்பிடிக்கின்றனர் ஆன்றோர். மாணிக்கவாசகர் முதல் மகான் இராமகிருஷ்ணர் வரை கைக்கொண்ட அற்புத பக்தி பாவனை அல்லவா இது! இந்த மதுர பக்தியே ஒரு உருவெடுத்து வந்தது போல் விளங்குபவள்தான் வில்லிபுத்தூர் பெற்ற தவப்பயனாய்த் திகழும் ஸ்ரீ ஆண்டாள்.

    நாராயணன் சத்தியமாக ஒளிர்கிறான். அவன் தேவி சக்தியாக மிளிர்கிறாள். அவன் அறம் என்றால் அவள் அருள். தொண்டர்குலமான நம்மையெல்லாம் ஆள்வதால் அவன் ஆண்டவன். நம்மொடு சேர்த்து ஆண்டவனையும் ஆள்வதால் அவள் ஆண்டாள். ஆம், ஆண்டாள் தன் கருணையால், அருளால், எளிமையால், கவிதையால், இவை அனைத்திற்கும் உயிரான தாய்மையால் நம்மையும் இறைவனையும் ஆண்டுகொண்டவளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் விளங்குகிறாள்.

    கண்ணன் மீது ஆரா பக்தி கொண்ட ஸ்ரீ ஆண்டாள், அவனையே மணக்க விரும்பி, மானிடர்க்கென்று பேச்சுப் படில் வாழ்கிலேன் என உறுதிபடப் பாடினாள். கண்ணனைக் காண ஏங்கி, குயிலே, வேங்கடவன் வரக் கூவாய், என்று வேண்டினாள். கண்ணனை விரும்பிய ஆயர்குல கோபிகைப் பெண்களைப் பின்பற்றித் தானும் மார்கழி மாதம் பாவை நோன்பிருந்தாள் (கண்ணனையே மணவாளனாகப் பெறவேண்டி, காத்யாயினி அம்பிகையை நோக்கி விரதமிருத்தல்). அப்போது தன்னை ஆயர்குலப் பெண்ணாகவே வரித்து ஸ்ரீ ஆண்டாள் பாடிய பாசுரமே திருப்பாவை. பின் ஆண்டாள் திருவரங்கப் பெருமானை மணந்து, அவனுடனே இரண்டறக் கலந்தாள். திருவாகவே இருந்தாலும் தொண்டர் குலமாகவே இருக்க விரும்பிப் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராகப் போற்றப் படுகிறாள்.

    அந்தப் பாவை பாடிய பாவையோ பிறவிப்பிணி நீக்கும் மருந்தாய் விளங்குவதோடு அல்லாமல் செந்தேனில் குழைத்து மேலும் சுவையமுதம் கூட்டினாற்போல் சொற்சுவையும் பொருட்சுவையும் நிரம்பித் ததும்புகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர், பால்கோவா எனும் இனிப்பிற்கு மிகவும் புகழ்பெற்றது என்று உங்களுக்குத் தெரியும்தானே! ஸ்ரீ ஆண்டாள் பாடிய திருப்பாவையும் இந்தப் பால்கோவாவும் ஒன்று தெரியுமோ!

    ஆம். திரவ வடிவான பாலைக் காய்ச்சித் திடவடிவமாக்கி, சர்க்கரை சேர்ப்பதே பால்கோவா. ஆண்டாளும் பரந்து கிடப்பதான நம் வேத வேதாந்த புராணங்கள் யாவையும் தன் பக்தியால் காய்ச்சி, அதனோடு தமிழெனும் மதுரம் சேர்த்து, பாவை எனும் பால்கோவாவைத் தாயன்போடு வழங்குகிறாள். இந்நூலைப் பாராயணம் செய்பவர் சகல சம்பத்துக்களும் அவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல் நாராயணன் அருளும் கட்டாயம் பெறுவார்கள்.

    திருப்பாவையை அனுஸந்தானம் பண்ணுவோம், செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் நாம் அனைவரும் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம், வாருங்கள்!

    திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே

    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

    பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

    ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே

    உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே

    மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே

    வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியவே.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ***

    திருப்பாவை – முதற் பாசுரம்

    ஸ்ரீ கணாதிபதயே நம:

    ஸ்ரீ குருப்யோ நம:

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

    சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

    ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

    கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

    நாராயணனே நமக்கே பறை தருவான்

    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

    ஸ்ரீ ஆண்டாள் பாவை நோன்பு துவங்குவதற்காக மங்கள நீராடிவர ஆயர்குலப் பெண்களை அறைகூவி அழைக்கிறாள்.

    திருமகள் அருளால் வளம் நிறை ஆயர்பாடியின் செல்வச் சிறுமிகளே, அழகுறு ஆடையணிகளால் அலங்கரிக்கப் பெற்ற அருமைத் தோழியரே! என்று விளிக்கிறாள். முதற்பாசுரத்திலேயே ஆயர்பாடியின் சீரினைச் சுட்டிக் காட்டுகிறாள் ஆண்டாள். ஏன் அப்படிச் செல்வம் கொழிக்கிறதாம் அங்கே?

    கோபர்கள் பசுக்களைப் பேணுபவர்கள். இம்மைக்குத் தேவையான வளம் அனைத்தையும் வழங்குவது எது? என்ற கேள்விக்குப் பசுச் செல்வமே என்று பதிலளிக்கிறான் தர்மராஜன் யக்ஷ ப்ரச்னத்திலே. கோக்களைக் கண்ணும் கருத்துமாய்க் காத்தாலே செல்வம் கொழிக்கும். அத்துடன் திருமார்பன், ஸ்ரீமந் நாராயண மூர்த்தி அங்கு பாலகனாய் வளர்கிறான் என்றால் திருமகள் கடாக்ஷத்திற்குக் கேட்பானேன்?

    "இது மாதவன் வடிவான மார்கழி மாதம். முழுமதி நன்னாள். மதிவளம் அருளும் சந்திரன் ஸ்ரீகிருஷ்ணன் தன் குலத்தில் உதித்ததை எண்ணிக் குதூகலமாய்க் கோகுலத்தில் இன்று நிலவு பெருக்குவான்.

    "நாம் வைகறைத் துயிலெழுந்தோம். இன்று பாவை நோன்பு துவங்க நீராடி வருவோம் வாருங்கள்.

    "இப்பாவை நோன்பிற்குப் பறை என்ற இசைக்கருவி முக்கியமானது. அதனை நமக்கு யார் அளிக்கப் போகிறார்கள் தெரியுமா?

    "கூரிய வேலை ஏந்திக் கொண்டு, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கும் நம் தலைவனாம் நந்தகோபனின் குமரனே அவன்.

    "அழகிய கண்களுடைய யசோதையாம் தேவியின் மனங்கவர் மைந்தனாம் இளஞ்சிங்கப் பெருமானே அவன்.

    "அவனைப் பாலனென்று அலட்சியம் செய்யாதீர், பாவையரே! பாற்கடல் துயில் நாரணனே இந்தப் பாலகன்.

    அவனருளாலே அவன் தாள் பணிந்து அவனையே வரமாகப் பெறும் இந்த நோன்பினை நாம் நோற்க உலகனைத்தும் நம்மைப் புகழாதோ! வாருங்கள், நீராடித் தூயராய் வருவோம்!

    அழகும் எளிமையும் கொஞ்சும் முதற் பாசுரமும் அதன் பொருளும் பாராயணம் செய்தீர்களா? இந்தப் பாசுரத்தின் சிறப்பு நாராயணனே, நமக்கே என்ற சொற்றொடர்.

    காக்கும் தெய்வம் எதுவோ, அதுவே நாராயணன். எந்தப் பெயரும் உருவமும் தெய்வம் தரித்திருந்தாலும் (தெய்வம் ஒன்று தானே, நாம ரூபங்கள் தானே வேறுபடுகின்றன!), அது காக்கும் தொழில் புரிந்தால் அது நாராயணனே.

    நாராயணனே காப்பவன். காப்பவர் எல்லாம் நாராயணனே. உதவும் மனமெல்லாம் உத்தமன் நாரணன் உறையும் கோயிலே.

    நாராயணன் எதை, யாரைக் காக்கிறான்?

    தன் பக்தர்களை, நல்லவர்களை, சாதுக்களை என்று பலபடித்தாகப் பதில் கூறினாலும் ஒரே வார்த்தையில் சொல்வது என்றால், நாராயணன் தர்மத்தைக் காக்கிறான். அதிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1