Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jaya Jaya Shankara
Jaya Jaya Shankara
Jaya Jaya Shankara
Ebook474 pages3 hours

Jaya Jaya Shankara

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீ ஆதிசங்கரருக்கு பகவத்பாதர் என்ற பெயரும் உண்டு. பகவத்பாதர் என்னும் சொல்லுக்குப் பகவானின் காலடி என்பது பொருள். ‘ஜயஜய சங்கர’ என்ற தலைப்புடனும், தீமையை அகற்றிச் சுகத்தைக் கொடுக்கும் ‘ஹரஹர சங்கர’ என்ற திருநாமத்துடனும் ஆதிசங்கரரின் வரலாற்றை அண்மையில் ‘ ரா. கணபதி அவர்கள் கட்டுரைத் தொடராக எழுதியதை இப்பொழுது புத்தக உருவத்தில் இதோ உங்கள் கையில்

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580151507938
Jaya Jaya Shankara

Read more from Ra. Ganapati

Related to Jaya Jaya Shankara

Related ebooks

Reviews for Jaya Jaya Shankara

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jaya Jaya Shankara - Ra. Ganapati

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜய ஜய சங்கர

    Jaya Jaya Shankara

    Author:

    ரா. கணபதி

    Ra. Ganapati

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ra-ganapati

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஸமர்ப்பணம்

    அணிந்துரை

    முதற் பதிப்பின் முகவுரை (1963)

    நான்காம் பதிப்பின் முகவுரை (1988)

    ஐந்தாம் பதிப்பின் முகவுரை (1998)

    இப்பதிப்பின் முகவுரை (2017)

    1. பேரின்பம் பெற்ற பிறவி!

    2. மலை உருகியது!

    3. பிள்ளைப் பிராயத்திலே...

    4. காலம் நெருங்கிவிட்டது

    5. உலகுக்கு ஒரு குழந்தை

    6. குருவைக் கண்டார்!

    7. வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்

    8. ஸத்திய தத்துவம்

    9. இதுவே என் உறுதி!

    10. துரோகமும் தண்டனையும்

    11. சோதனை!

    12. இல்லற நாடகம்

    13. உடலை ஈந்தார்!

    14. வேதியனிற் சிறந்த வேடன்

    15. அன்னை அன்பு அழைத்தது!

    16. துறவும் உறவும்

    17. வேங்கடகிரி முதல் வெள்ளியங்கிரி வரை

    18. காமகோடி

    ஸ்ரீமுகம்

    (1962 இறுதியில் முதற்பதிப்புக்கு அருளப்பட்டது)

    ஸ்ரீ ஆதிசங்கரருக்கு பகவத்பாதர் என்ற பெயரும் உண்டு. பகவத்பாதர் என்னும் சொல்லுக்குப் பகவானின் காலடி என்பது பொருள். ‘ஜயஜய சங்கர’ என்ற தலைப்புடனும், தீமையை அகற்றிச் சுகத்தைக் கொடுக்கும் ‘ஹரஹர சங்கர’ என்ற திருநாமத்துடனும் ஆதிசங்கரரின் வரலாற்றை அண்மையில் ‘கல்கி’ பத்திரிகையில் ரா. கணபதி அவர்கள் கட்டுரைத் தொடராக எழுதியதை இப்பொழுது புத்தக உருவத்தில் கொணரக் ‘கலைமகள்’ காரியாலயத்தார் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி எல்லா வகையிலும் கைகூடுவதாக. நமது ஆதி பகவத்பாதரது புண்ணிய வரலாற்றை யாவரும் படித்துப் பயன் பெறுவார்களாக.

    இளையாத்தங்குடி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி

    ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீமடம்

    ஸமர்ப்பணம்

    சம்போ! சம்சாரச் சுழலால் உண்டாகும் வேக்காட்டைத் தணிப்பது உனது சரிதாமுத நதி. பாப தூசுக்களைக் கழுவித் தள்ளும் அந்த நன்னீரை என் அறிவென்னும் வாய்க்கால் வழியாக மனஸிலே மடுவாகத் தேக்கிக் கொள்கிறேன். அதனால் நான் துய்க்கும் சிவானந்த வெள்ளம் என்றும் சிறப்புற விளங்குமாக!

    விசுவநாத! உன் சரிதக்கடலின் திவ்ய நீரை அறிவென்னும் சகடை மூலம் வாக்கென்னும் குடத்தில் நிரப்பிக் காவியக் கால்வாய்களில் இறைத்துக்கொள்கிறேன். ஆத்ம ஞானப்பயிரின் விளைச்சலில் எனக்குத் துர்பிட்சம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட இனி இடமேது?

    - ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய

    ‘சிவாநந்த லஹரி’யிலிருந்து

    அணிந்துரை

    (முதற் பதிப்புக்கு அளிக்கப்பட்டது)

    ஸ்ரீபகவானுடைய உபதேசங்களே வேதங்களாகும். சிருஷ்டித் தத்துவத்தைக் களங்கமறப் பரிசீலிப்பவை வேதங்கள். இம்மையில் சகல ஸம்பத்துகளையும் பெற்று பத்கர்மாக்களைச் செய்துவருவதற்கும் மறுமையில் நித்யமான ஆனந்தாநுபவத்தை அடைவதற்கும் வேதங்கள் வழி வகுத்துள்ளன. வேதங்களில் கூறப்பட்டுள்ள கர்ம மார்க்கங்களுக்கும் உபாஸனா மார்க்கங்களுக்கும் ஞானமார்க்கங்களுக்கும் நாஸ்திக வாதங்களால் தடைகள் உண்டாகாமல் இருக்க அவ்வப்போது மஹான்கள் தோன்றி வேதங்களை ரக்ஷித்து வந்திருக்கிறார்கள். அத்தகைய மஹான்களில் சிறந்து விளங்கும் ஸ்ரீசங்கரர், ஸ்ரீபரமசிவனுடைய அவதாரம். காலடியில் அவதரித்த ஸ்ரீசங்கரர் பூத உடலில் நடமாடிய காலம் முப்பத்திரண்டு வருஷங்களே. குழந்தைப்பருவம் நீங்கியபின் எட்டு வயது வரையில் குருகுல வாஸம் செய்த ஸ்ரீசங்கரர், பதினாறு வயதிற்குள் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தி விருந்து உபநிஷத்துக்கள், பிரம்ம ஸூத்திரங்கள் வரையில் பாஷ்யங்களையும் பல ஸ்தோத்திரங்களையும் இயற்றி விட்டார். மீதிப் பதினாறு ஆண்டுகளில் ஸ்ரீசங்கரர் தம் சிஷ்யர்களுடன் சேது முதல் இமயம் வரை பாதயாத்திரை செய்து அத்வைத வித்யோபதேசம் செய்தார்கள். இவ்வாறு குறுகிய காலத்தில் மஹத்தான சாதனைகள் பல புரிந்து அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ள ஸ்ரீசங்கரரின் சரித்திரத்தைப் பல பெரியோர்கள் கூறியுள்ளனர். அன்று ஸ்ரீசங்கரர் அவதரித்து வேதங்களைப் பாதுகாத்ததால்தான் பின்பு பல ஆசாரியர்கள் வேதங்களுக்குப் பலவிதமான பாஷ்பங்களைச் செய்ய முடிந்தது.

    ஸ்ரீ சங்கரர் அவதரித்த காரணம் வேதோக்தமான கர்மாக்களான யாகம் முதலியவற்றை ரக்ஷிப்பதற்கே ஆகும் ‘யாக’ என்ற இரண்டு அக்ஷரங்களைக்கூடக் கேட்க மனமில்லாமல் நாஸ்திகர்கள் தங்கள் காதுகளை மூடிக்கொண்ட தருணத்தில் தேவர்கள் கைலாஸத்திற்குச் சென்று ஸ்ரீ பரமசிவனிடம் முறையிட்டார்கள். யாகத்தில் கொடுக்கும் பொருள்களையே உட்கொள்ளும் தேவர்கள் யாகங்கள் நடை பெறாவிட்டால் எவ்வாறு ஜீவிக்க முடியும்? எனவே வேதங்களையும் வேதோக்த கர்மாக்களையும் ரக்ஷிப்பதற்காக என்றே ஸ்ரீ பரமசிவன், ஸ்ரீ சங்கரராகக் காலடியில் அவதரித்தார் என்று சங்கர விஜயம் கூறுகிறது. ‘ஜபஹோமங்கள் செய்யும் பெரியோர்கள் இருக்கும் வரையில் உலகிற்கு ஒருவிதமான தீங்கும் ஏற்படாது’ என்று மனுவும் கூறியுள்ளார்.

    ஸ்ரீ சங்கரர் அந்த அந்த அதிகாரிகளுக்குத் தக்கவாறு பல ஸ்தோத்திரங்களையும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலிய ஸ்தோத்திரங்களுக்கு பாஷ்யங்களையும் செய்துள்ளார். இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் விஷயிகளுக்கும், உலக வாழ்விலிருந்து விலக வேண்டுமென நினைக்கின்ற முமுக்ஷூகளுக்கும், உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்ட முக்தர்களுக்கும் ஒருங்கே ஸ்ரீ சங்கரரின் உபதேசங்கள் உதவுகின்றன.

    கர்ம மார்க்கத்தின் அவசியத்தை அறிவுறுத்திய ஸ்ரீ சங்கரர் ஞானமார்க்கத்தின் இறுதி நிலையாகிய அத்வைத சித்தாந்தத்தை ஸ்தாபித்துப் பிரம்ம வித்தையை விளக்கியுள்ளார்.

    ‘உலகம் ஒரு மாயை அல்லது பொய்த்தோற்றம். பிரம்மமே நித்யம், ஸத்யம். ஜீவனே பிரம்மம், அது வேறல்ல’.

    ப்ரஹ்ம ஸத்யம் ஜகந்மித்யா - ஜீவோ ப்ரஹ்மைவ நாபர

    இதுவே அத்வைத சித்தாந்தத்தின் ஸாரம். விவகாரத்தில் உலகம் தோன்றினாலும் அது நிஜமல்ல. தோன்றுவது எப்படிப் பொய்யாகும் என்று நினைக்கலாம்.

    நவராத்திரிக்கொலுவில் வைக்கப்பட்ட பழவகைகளைக் குழந்தைகள் உண்மையான பழங்கள் என்றே நினைத்து அவற்றைச் சுவைக்க விரும்புகின்றன. பெரியோர்கள் அவை உண்மையான பழங்கள் அல்ல என்று உணர்ந்து கூறுகின்றனர். இதேபோல் ஞானிகள் இவ்வுலகத்தையும் மாயை என்கிறார்கள்.

    ஜீவனும் பிரம்மமும் ஒன்று என்றால் ஜீவபேதங்கள் எப்படித் தோன்றுகின்றன என்று நினைக்கலாம். சமுத்திரத்தில் தோன்றும் அலைகளும் நுரைகளும் நீர்த்துளிகளும் வியவகார ரீதியில் தனித்தனியாகத் தோன்றினாலும் அவையனைத்தும் சமுத்திரம்தானே? அதுபோல் உலகில் தோன்றும் அத்தனை ஜீவர்களும் பிரம்மமே என ஞானிகள் உணர்கிறார்கள். உபாதியின் காரணமாகப் பிரம்மம் ஜீவனாகின்றான். சரீர, இந்திரிய சம்பந்தத்தால் ஜீவன் எனப்படுகிறான். சரீரம், இந்திரியம் இவற்றிலிருந்து ஜீவனைப் பிரித்து அறியும்போது அதுவே பிரம்மமாகி விடுகிறது.

    இந்தப் பேருண்மையை ஸ்ரீசுகரும் ஸ்ரீமத் பாகவதத்தில் ஓர் அழகான உதாரணத்தால் விளக்குகிறார். தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரிந்தவன் தங்க வயலிலிருந்து முதலில் மண்ணைத்தான் எடுக்கிறான். சாதாரண மனிதனுக்கு அது வெறும் மண்தான். அந்த மண்ணில் திராவகத்தை விட்டுச் சுத்தி செய்தால் மண் விலகி, சுத்தத் தங்கம் தனித்து வந்து விடுகிறது. அதேபோல் மேலான ஞானத்தால் தேகம் முதலியவற்றிலிருந்து பிரித்தெடுத்து ஜீவனைக் காணும் போது அதுவே பிரம்மம் என்கிறார் ஸ்ரீசுகர்.

    இப்படிப்பட்ட தத்துவங்களை நாம் எளிதில் அறிந்து கொள்வதற்காகவே ஸ்ரீ ஆதிசங்ரரரின் அவதாரம், பஜகோவிந்தம் போன்ற பக்திக் கிரந்தங்களிலிருந்து உபநிஷத் ஸூத்ர பாஷ்யங்கள் வரையில் ஸ்ரீ சங்கரரின் அத்வைத சிந்தாந்ததைப் பற்றிய நுணுக்கமான உண்மைத் தத்துவங்கள் நிறைந்து காணக்கிடைக்கின்றன. ஸ்ரீ சங்கரர் அன்று பல அரிய நூல்களை எழுதி வைத்ததாலேயே நாம் உயர்ந்த தத்துவங்களை இன்றும் உணர்ந்து அனுபவிக்க முடிகிறது.

    ஸ்ரீ சங்கரரின் பல நூல்களிலிருந்து படித்து அறிய வேண்டியதைச் சுருங்கச் சொல்லி விளங்கக் கூறியிருக்கிறார் ஸ்ரீ கணபதி அவர்கள்.

    ஸ்ரீ கணபதி அவர்கள் ஸ்ரீ சங்கரரின் அவதாரத்தையும் அவர்கள் ஸந்யாஸம் வாங்கிக் கொள்ளும் கட்டத்தையும் வெகு உருக்கமாக எழுதியிருக்கிறார். சங்கரருக்கும் அவர் தாய்க்கும் நடந்த ஸம்வாதத்தைப் படிக்கும்போது கல்லும் கரையும். கல்யாணம், குடும்பம், பிள்ளை குட்டிகள் ஏற்பட்டு விட்டால் வீட்டுக் கவலையோடு வாழ்வு முடிந்து விடும். எல்லோருமே அப்படி ஆகிவிட்டால் உலகுக்காகக் கவலைப்படுவது யார்? என்று ஸ்ரீ சங்கரர் தாயைக் கேட்கும் பகுதியைப் படிக்கும்போது உலகுக்காகக் கவலைப் படுபவன் துறவி என்பதும், துறவியே உலகுக்காகக் கவலை கொள்வான் என்பதும் தெரியவரும். ஒவ்வொரு வரும் துறவியாகிவிட வேண்டும் என்ற துடிப்பும் ஏற்படும். தாயின் பெருமை, ஸ்ரீ சங்கரரின் திக்விஜயங்கள், மண்டனமிச்ரர் ஸம்வாதம், ஷண்மத ஸ்தாபனம், அத்வைத சித்தாந்தம் முதலிய விஷயங்களை ஆசிரியர் ஸ்ரீ கணபதி அவர்கள் வெகு லளிதமாகவும் தெளிவாகவும் கையாண்டு எழுதியிருக்கிறார். இவற்றைப் படித்தால் நாஸ்திகர்களும் மனம் மாறிப் பக்தர்களாகிவிடுவர் என்பதில் சந்தேக மில்லை. சரித்திரம், தத்துவம் இரண்டையும் பிணைத்துக் கூறுவது மிகவும் சிரமமானது. இவ்விரண்டையும் அநுபவத்திற்கு ஒட்டி ஆசிரியர் எழுதியிருப்பதை யாவரும் போற்றுகின்றனர். ஸ்ரீ ஆசார்யனைத் தெய்வமாக நினைப்பவர்களால் தான் இம்மாதிரி உணரவோ எழுதவோ முடியும். ஆசாரியரைத் தெய்வமாகக் கொண்டவனுக்குத் தத்துவமெல்லாம் தானாகவே தெரியும் என்ற சாஸ்திரத்தின் பொருளை ஸ்ரீ கணபதியவர்கள் தம் எழுத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். ‘கல்கி’ பத்திரிகையில் இந்தச் சரித்திரம் தொடராக வெளிவந்து கொண்டிருந்த போதே லக்ஷக்கணக்கான மக்கள் இதைப்படித்து ஆனந்த முற்றனர். அப்போதே பலர் என்னிடம் நேரிலும் கடிதத்தின் மூலமும் இதைப் புஸ்தகமாக வெளியிடவேண்டுமென்று மிகுந்த ஆர்வத்துடன் தெரிவித்தார்கள். ‘கலைமகள்’ நிர்வாகிகள் தாமதமின்றி இந்நூலைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட வந்துள்ளது பாராட்டுக்குரியது.

    சிறு குழந்தைகளும் கூட இந்நூலை அவசியம் படிக்க வேண்டும். இதைப் படிப்பதாலேயே தாய் தந்தையர்களிடத்தில் நிஜமான பக்தியும் ஸ்ரீ பகவானிடத்தில் ஆழ்ந்த அன்பும் நிச்சயம் ஏற்படும். சகல பாபங்களும் விலகி ஸர்வ மங்களங்களும் உண்டாகும்.

    இந்நூலைத் தம் பத்திரிகை வாயிலாக அறிமுகம் செய்து நமது தேசம் முழுவதிலும் ‘ஜயஜய சங்கர, ஹரஹர சங்கர’ கோஷத்தை ஒலிக்கச் செய்துவிட்ட ‘கல்கி’ அதிபருக்கும், ஆசிரியர் ஸ்ரீ கணபதி அவர்களுக்கும், இதைப்புத்தக வடிவில் பிரசுரம் செய்ய முன் வந்துள்ள கலைமகள் நிர்வாகிகளுக்கும் ஸ்ரீ பகவான் சகல கோமங்களையும் கொடுத்து அருள் புரிய வேண்டுகிறேன்.

    சேங்காலிபுரம்

    அனந்தராம தீக்ஷிதர்

    முதற் பதிப்பின் முகவுரை (1963)

    ஆன்மாவின் போதமருள் ஆசானாம் சங்கரன் அவ்

    ஆன்மாவுக்(கு) அந்நியன் ஆவானோ?- ஆன்மாவா

    என்னகத் தேயிருந்து இன்று தமிழ்ச் சொல்வானும்

    அன்னவன் அன்றிமற் றார்?

    -‘ஆன்ம போத’த்தில் ஸ்ரீ ரமண பகவான்

    ‘செயலும் கிடையாது, செய்பவனும் கிடையாது’ என்று உணரும் அத்வைத நிலைக்கும் நமக்கும் தொலைத் தூரம். அந்த அத்வைத அநுபூதி கைகூடும் வரையில் செயலும் உண்டு; செய்பவனும் உண்டு.

    இந்த நிலையில் நாம் உள்ளவரை, செயல்கள் யாவற்றையும் செய்வது பரம்பொருளே என்று பார்ப்பதற்கு நம்மைப் பழக்குகிறார்கள் பெரியோர்கள். ‘எல்லாம் ஈசன் செயல்’ என்கிறார்கள். ஆனால் இத்தகைய மனநிலையும் நமக்கு அநுபவ சாத்தியமாக இல்லை. எனவேதான் தயை மிகுந்த பெரியோர்கள் எல்லாச் செயல்களையும் ஆண்டவனுடையனவாகக் காண முடியாவிடினும் எல்லா நல்ல செயல்களையுமேனும் அவனுடையனவாக பாவிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி நல்லனவையே செய்யும் கோலத்தில் தோன்றும் பரம்பொருள்தான் சம் - கரர். ‘சம்’ என்றால் நன்மை. ‘கரர்’ என்றால் செய்பவர்.

    ஆசாரிய சங்கர பகவத்பாதரின் தனிப்பெருமை சகல ஜீவராசிகளின் மனோபாவங்களையும் ஒப்புக்கொள்ளும் அவரது விசாலமான உளப்பாங்குதான். உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்த உன்னத அத்வைத தத்துவத்தைவிண்டு கூறி விளக்கிய அவர், இழிந்தவற்றிலெல்லாம் இழிந்த மனநிலை பெற்றவர்களையுங்கூட அவரவர் பிடிப்பாகக் கொண்டுள்ள கொள்கைகளின் வழியாகவே அமர நிலைக்கு இட்டுச் செல்கிறார். அவரது திருநாமமே இதற்கு ஒரு சான்றாகும். செயலற்ற சாக்ஷாத்காரத்துக்கு வழிவகுத்த அவர், சங்கரர் - மங்களங்களைச் செய்பவர் என்ற திவ்விய நாமத்தைத் தாங்குகிறார்! எங்கே எந்த சுபகாரியம் திகழ்ந்தாலும் அதனைச் செய்பவர் சங்கரரே எனக் காண்போம். இப்படி நல்லனவற்றில் எல்லாம் நாதனைக் காணப் பயின்றால் பின்னர் என்றோ ஒருநாள் அல்லது என்றோ ஒரு ஜன்மத்திலேனும் நல்லதோடு தீயதிலும் அவனைக் காணும் பக்குவம் ஏற்படும். அதன்பின் நல்லது, அல்லது என்ற பேதமும் நீங்கி உய்யும் வழி பெறுவோம்.

    இங்கே இந்தப் பூர்வ பீடிகை போடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அந்தக் காரணத்தை எடுத்த எடுப்பில் கூறத் தயக்கமாக இருப்பதனால் ஏதேதோ சொல்லிச் சுதாரித்துக் கொள்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக நான் எழுதுவதை அவையடக்கம் என்று எண்ணி விடுவீர்களோ எனத் தயங்குகிறேன். அந்த உண்மை, ‘ஜயஜய சங்கர’ நூல் என் செயலல்ல, ஈசனுடையதே என்பதுதான். எல்லாச் செயலும் ஈசனுடையதாயினும் சிலவற்றை மட்டும் அவன் ஸ்வச்சமாகவே தனதாகக் காட்டிக்கொள்வான் போலும்! என்னைப் பொறுத்தவரையில் ‘ஜயஜய சங்கர’ இந்த உணர்வைத்தான் தந்திருக்கிறது.

    இது நான் திட்டமிட்டு எழுதிய நூல் இல்லை. ‘திடுதிப்’பென்று ஸ்ரீ ‘கல்கி’ ஸதாசிவம் அவர்கள் தாமாகவே இந்த மாபெரும் புனிதப் பணியை என்னிடம் ஒப்புவித்தார். என்னுடைய தகுதியை, அதாவது தகுதியின்மையைப் பற்றிச் சரியாக அறியும் முன்பே இவ்வளவு பெரிய காரியத்தை அவர் என்னிடம் கொடுத்தது அதிசயமாகும். அதற்கு முன் நான் ஒரு வரி எழுதி அச்சானதில்லை. நான் படித்த படிப்புக்கும் இந்தப் புத்தகத்தின் விஷயத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. வயதோ அநுபவமோ போதாதவன் நான். இப்படி இருக்க, எவ்வளவோ பண்டிதர்களையும் வித்வான்களையும் பக்திமான்களையும் கிரந்தகர்த்தாக்களையும் விட்டுவிட்டு, என்னிடம் ஏன் ஸ்ரீ ஸதாசிவம் அவர்கள் இந்தப் பணியை ஒப்புவித்தார்? அதனால்தான் இது ‘ஈசன் செயல்’ என்றேன்.

    அவர்தாம் ஒப்புவிக்கட்டும்; நான் எந்தத் தைரியத்தில் இந்த ஆழம் காண முடியாத சாகரத்தில் இறங்கி நீந்த இணங்கினேன்? அவ்வளவு துணிச்சல் எனக்கு எங்கிருந்து வந்தது? ஈசனிடமிருந்து என்றேதான் சொல்லவேண்டும்.

    போகட்டும்; ஆசாரிய சரிதம் எழுதும் காரியத்தைத் தான் எடுத்துக்கொண்டேனே, அதன் பின்னராவது அந்த மகானின் பாவன சரிதத்தைக் கூறும் நூல்களையெல்லாம்

    * நான் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் ஆழ்ந்து படித்திருக்க வேண்டாமோ? நான் அவ்வாறெல்லாம் சிரமப்படவே இல்லை. ஏதோ கிடைத்த மட்டும் சிலவற்றையே படித்தேன். 1932ஆம் ஆண்டில் சென்னைக்கு எழுந்தருளிய போது, ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீ பாதர்கள், சங்கர சரிதத்தை ஓர் உபந்நியாசத் தொடராகத் திருவாய் மலர்ந்தார்கள் அல்லவா? ‘ஆதி சங்கரரே மீண்டும் தோன்றித் தமது சுயசரிதத்தைச் சொல்லி விட்டபின் மூலக் கிரந்தங்களின் ஆராய்ச்சியில் மூளையைக் குழப்புவானேன்?’ என்று அதனைப் பின்பற்றியே ‘ஜய ஜய சங்கர’ எழுதத் தொடங்கிவிட்டேன். ஸ்ரீ என். ராமேசன் அவர்கள் எழுதிய

    * பற்பல அடியார்கள் சங்கர விஜய காப்பியங்கள் இயற்றி உள்ளனர். ஆனந்தகிரீய சங்கர விஜயம், வியாஸாசலீயம், கோவிந்தநாதீயம் எனப்படும் கேரளீயம், சித்விலாஸியம், சங்கராப்யுதயம், மாதவீயம் எனப்படும் ஒரு சரிதம் ஆகியன இவற்றில் சில. ஸ்ரீ பிருஹத் சங்கர விஜயம் என்ற நூலிலும் பெரும் பகுதி கிடைத்துள்ளது. ஸ்ரீ ராமபத்திர தீக்ஷிதர் இயற்றிய பதஞ்ஜலி சரித்திரத்தில் ஆசாரியர்களின் குரு, பரமகுரு இவர்களின் வரலாறுகளோடு ஆசாரியரவர்களின் சரிதமும் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கிறது. மேலும் சிவரஹஸ்யம் என்ற இதிஹாஸத்திலும் மார்க்கண்டேய ஸம்ஹிதையிலும் சங்கரரின் வாழ்க்கை குறிப்பிடப்படுகிறது. இவை ஒவ்வொன்றுக்குள்ளும் ஓரளவு கதாபேதம் இருக்கும்.

    ‘ஸ்ரீ சங்கராசார்யா’ என்னும் ஆங்கில நூலும், ‘காமகோடி ப்ரதீபத்தில் சாஸ்திர ரத்னாகர போலகம் பிரம்மஸ்ரீ ராம சாஸ்திரிகள் எழுதிய கட்டுரைகளும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. சில கர்ண பரம்பரைக் கதைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஆசாரியரது சரிதத்தைக் கூறும் நூல்களில் பல மாறுபாடுகள் இருக்கும்போது அவற்றில் எது ஆதாரமாகக் கொள்ள வேண்டியது என்பதில் எவ்வளவோ ஆராய்ச்சி தேவை. இந்த ஆராய்ச்சியில் நான் பெருமளவுக்கு ஈடுபடவில்லை என்பதை ஒளிக்காமல் தெரிவித்துக்கொள்கிறேன்.’

    இன்னொரு பிரச்னையும் ஆசாரியரைக் குறித்து உண்டு. அதுதான் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியதாகும். ஆசாரியரின் ஜனனத்தை கி.மு. ஆறாம் நூற்றாண்டிறுதியிலிருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டிறுதி வரை பலர் பலவிதமாகக் கணக்கிட்டுள்ளார்கள். கி.மு. முதலாம் நாற்றாண்டே அவரது காலம் என்று ஒருவாறு உறுதிகொள்ள நிறைய ஆதாரங்கள் உள்ளன என்கிறார்கள். காலம் எதுவானால் என்ன? நமக்கு அநுக்கிரகந்தான் முக்கியம்’ என்கிறார்கள் ஸ்ரீ காமகோடிப் பெரியவர்கள். சத்தியமும் சாந்தமும் சீலமும் நித்திய வஸ்துக்கள். தங்கள் தொன்மையினாலன்றி என்றும் மாறாத தன்மையாலேயே அவை போற்றப் பெறுகின்றன. எனவே இந்தத் தத்துவங்களின் உருவகமாக வாழ்ந்து காலத்தைக் கடந்த குருவரரின் கதையில் மட்டுமே மனத்தைச் செலுத்துவது தான் சரி என்று கொண்டு, சரித்திர ரீதியான கால ஆராய்ச்சிகளின் பக்கமே நான் தலை வைக்கவில்லை.

    ‘சங்கர விஜய’ நூல்கள் ஆசாரிய சரிதத்தை எப்படி வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும்; ஈர்த்திரம் அவர் காலத்தை எப்படி வேண்டுமானாலும் நிர்ணயித்து விட்டுப் போகட்டும், என்னைப் பொறுத்தவரை, என் மனோதர்மத்துக்கு (மனோ அதர்மம் என்று நீங்கள் கருதுவீர்களோ என்னவோ?) எது பொருந்துகிறதோ அதுவே ஆசாரியரின் உண்மை வரலாறு என்று திடம் கொண்டேன். எனக்காக ஆசாரியர் தம் வாழ்வை மீண்டும் நடத்திக் காட்டும் அளவுக்கு நான் பக்திமான் அல்லதான். அற்பமனம் புனைந்த கற்பனைகளை ஆசாரியரின் மீது சுமத்துவதாகவும் நீங்கள் எண்ணலாம். இருந்தாலும் இதுதான் என் நம்பிக்கை.

    எப்படியாயினும் சரி, ஆசார்ய சரித கிரந்தங்கள் அனைத்தையும் முறைப்படி நுணுகிப்படிக்காமல், வரலாற்று நிபுணர்களின் வாதங்களிலும் அதிகக் கவனம் செலுத்தாமல் இந்த நூலை எழுதியதற்கு எவ்வளவு எதிர்ப்புக்கள் எழுந்திருக்க வேண்டும்? அப்படி நேராமல் வெகு சில ஆட்சேபங்கள் தவிர, ஏகமாக ஜயஜய கோஷமே இது பெற்றதை நீங்கள் அதிசயம் என்பீர்கள். நான் ஈசன் செயல் என்கிறேன்.

    ஆசாரிய பகவத்பாதரின் சரித்திரத்தையும் உபதேசத்தையும் பொருளுக்குத் தக்க கௌரவத்துடன் கூற வேண்டுமானால் அதற்கு வேத, வேதாந்த, சதுஃசாஸ்திர, புராணங்களில் ஆழ்ந்த பாண்டித்தியம் தேவை வடமொழியில் தேர்ந்த புலமை தேவை. இந்த அம்சங்களில் என்னுடைய தகுதி வெகுவெகு சொற்பமாகும். ‘கல்கி’யில் ஜயஜய சங்கர தொடராக வெளிவந்தபோது நூல் ஆசிரியருடைய ‘வித்வத்தைப் பாராட்டிப் பல கடிதங்கள் வரும். அவற்றைப் படிக்கும்போது என் நெஞ்சம் நெகிழும். ‘அம்பிகை எதற்காக என்னை இப்படிக் கட்டிக்காத்து அருள்கிறாள்? ஏன் சமயத்துக்குப் பொருத்தமான மேற் கோள்களை நான்கை வைத்த நூல்களிலெல்லாம் காட்டி இந்தச் சரிதம் முழுவதிலும் விரவி வைத்திருக்கிறாள்?’ என்று எண்ணுவேன். மேற்கோள்கள் மட்டுமே இல்லை. சம்பவ வர்ணனை, சம்பாஷணை இவை குறித்தும் நான் பரிசிரமப்பட்டதாகவும், அதே சிந்தனையாக இருந்ததாகவும் யாரும் எண்ண வேண்டாம். எல்லாமே தாமாக - தாமாக என்று நான் சொல்லும்போது, ‘அம்பிகை அளித்ததாக’ என்றே பொருள் கொள்கிறேன் வந்து விழுந்தன. அதனால் தான் இது எல்லாம் ஈசன் (ஈசனானால் என்ன, அம்பிகையானால் என்ன?) செயல் என்கிறேன்.

    ‘I lisped in numbers, for the numbers came’ ஆங்கிலக் கவி கூறியதுபோல் நான் பெரிய விஷயங்களை எழுதியிருப்பதற்குக் காரணம் அந்தப் பெரிய விஷயங்களாக என்னிடம் வந்து சேர்ந்ததுதான். இப்படி நான் எழுதியிருப்பதால் என் ஆழ்ந்த பக்திக்காக ஈசன் எனக்கு அருளியதாக யாரும் எண்ணி விடவேண்டாம். என்னைப் பற்றி நல்லதாகப் பல தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டிருப்பது போல் இப்படியும் ஒன்று ஏற்பட வேண்டாம்! ‘She showed me Grace for the Grace came’ என்றுதான் சொல்ல வேண்டும்! காரணமில்லாமலே கருணை காட்டுபவள் (அவ்யாஜ கருணாமூர்த்தி) என்று அன்னை காமாக்ஷிக்கு ஒரு நாமம் உண்டல்லவா?

    உணவு சமைக்க உதவும் பாத்திரமோ பரிமாற உதவும் அகப்பையோ எப்படி அந்த உணவு தயாரித்த பெருமைக்கு உரிமை கோர முடியாதோ அதேபோல இப்புத்தகத்தை எழுதிய பெருமை எதையும் நான் கோரமுடியாது. ‘சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?’ என்று சித்தர் பாடியது என் விஷயத்தில் பிரத்யக்ஷ உண்மையாகும்.

    ‘புத்தகம் எழுதிய பெருமை’ பற்றிக் கூறினேன். இதில் குற்றம் குறைகள் நிறைய இருப்பதாகவும் இதன் ஆசிரியர் பெருமை கொள்ள அவசியமில்லை என்றும் சிலர் நினைக்கலாம். என்னிடம் நல்லெண்ணம் தவிர வேறெதுவும் இருக்க முடியாத ஒருவர், இதில் சில இடங்கள் பானைக் குறைவாக இருப்பதாகவும் (cheap), பாமரர்களைக் கவர வேண்டும் என்றே எழுதியது போலத் தோன்றுவதாகவும் (catchy) சொல்லியிருக்கிறார். இன்னோர் அன்பர், இதில் வார்த்தை ஜாலம் அதிகம் என்பதைப் பலமுறை மறைமுகமாகக் கூறியிருக்கிறார். இன்னும் பல பிழைகளை அறிஞர் காணக்கூடும். இச்சரிதத்துக்கு ஈசுவரனை ஆசிரியனாக்கி, நான் பழியைக் கழித்துக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு ரஸனை குறைவாக இருந்தால் அதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என்றாலும் மக்களைக் கவர்வதற்கென்றே நான் catchy-ஆக எழுதியிருப்பதாக ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனெனில் இந்த நூலை யார் படிக்கப் போகிறார்கள் என்பதை நான் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததில்லை. எனவே யாரையும் ஆகர்ஷிக்க வேண்டிய வசிய உபாயங்களும் எனக்கு அவசியப்படவில்லை. சொல் ஜோடனை அதிகம் இருப்பினும் அது என் ரஸனைக் குறைவால் ஏற்பட்டதென்று எண்ணலாமே ஒழிய, மக்களைக் கவரவென்றே சப்தப்பந்தர் போட்டதாக யாரும் நினைக்கலாகாது.

    ஆகையால், என்னைப் பொறுத்தமட்டில், இந்நூல் முழுவதையுமே ஈசன் செயலாக எண்ணியபோதிலும் உங்களால் அப்படி எண்ண முடியாவிட்டால், இந்த முகவுரையின் தொடக்கத்தில் சொன்னது போல், இதிலுள்ள நல்ல அம்சங்களை மட்டுமாவது ஈசனுடைய தென மதிக்கக் கோருகிறேன். அகப்பை உணவை ருசிக்காது எனினும் அகப்பையால் உணவின் ருசி மாறக்கூடும். பித்தளைக் கரண்டியால் சுத்தமான தயிரைப் பரிமாறினால் தயிரின் நல்ல சுவையும் கெட்டுக் கைத்துப் போய் விடுமல்லவா? அதேபோல ஜயஜய சங்கரரை நான் பரிமாறியதால் குறைபாடுகள் சேர்ந்திருப்பதாகக் கொண்டு அவற்றுக்கு என்னையே பொறுப்பாக்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வளவு காலமாகப் பலர் பலவிதமாகப் பாராட்டியதை எல்லாம் மறுக்காமல் ஏற்றது ஒரு குற்றமாக என் உள்ளத்தை உறுத்தி வந்தது. யாருக்கோ உரிய சொத்தை நான் ஸ்வீகரித்துக் கொண்டாற்போல ஓர் உணர்ச்சி. அதனைக் கழித்துக்கொள்ளவே இங்கே இவ்வளவு சொல்ல நேர்ந்தது. சுய புராணம் நீண்டு விட்டதற்கு நாணுகிறேன்.

    ***

    என்னைக் கருவியாகக் கொண்டு ஜயஜய சங்கர நூல் உருவானதற்காகப் பலருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    முதலில்,

    எழுதவே கூச்சமாகத்தான் இருக்கிறது. தாயையும் தந்தையையும் யாராவது ‘தாங்க்’ செய்வார்களோ? அதேபோல், ‘எனக்கு நல்லது செய்வதே இவருடைய கடமை’ என்று நான் எண்ணுமளவுக்கு என்னிடம் உள்ளன்பு காட்டி, ‘அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி’ விட்டவர் ஸ்ரீ ஸதாசிவம் அவர்கள். ஜயஜய சங்கர நூலுக்கு அவர்தாம் மூலகாரணம். அவருமே இந்தச் சொற்சிலம்ப வந்தனோபசாரத்தைப் படிக்கக் கூச்சப்படுவார். நிறுத்திக் கொள்கிறேன்.

    இரண்டாவதாக,

    என்னை நேரில் கண்டறியு முன்பே உபந்நியாசம் தோறும் ஜயஜய சங்கரவைச் சிலாகித்துவந்த சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்களுக்குச் சிரம் தாழ்த்தி அஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன். எல்லாவற்றையும் நல்லதாகக் காண்பதும், நல்லதாகக் காண்பதை நாலு பேரிடையே நாவாரப் பாராட்டுவதும் நற்பண்பாளருக்குத் தான் இயலும். எல்லையற்ற பாண்டித்யத்தோடு இந்தப் பண்புச் செல்வத்தையும் குறைவறப் பெற்றுள்ள தீக்ஷிதரவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை அருளியிருப்பது என் பாக்கியம்.

    நன்னூல் பலவற்றை முக்கியமாக ஆசார்ய ஸ்வாமிகளின் உபந்நியாசங்கள் அடங்கிய தொகுப்புகளை வெளியிட முன்வந்தமைக்கு என் நன்றி.

    இந்தப் புத்தகம் வெளி வருமுன், ‘கல்கி’யில் வெளியான தொடரைத் தாமாகவே முன் வந்து தமது பற்பல அலுவல்களிடையே பெருத்த சிரத்தையுடன் பரிசீலித்துச் சில திருத்தங்கள் செய்துதவிய ஸ்ரீ சா. கணேசன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி உரித்தாகிறது.

    ***

    ராமாயணத்தின் தனிச்சிறப்பு, காவிய நாயகனான ராமபிரானே அதனை லவ குசர் கானம் செய்யும்போது செவிமடுத்து அங்கீகரித்ததுதான். அத்தகைய மாபெரும் பேறு இந்த ஜயஜய சங்கர நூலுக்கும் கிட்டியதை என்னென்பது? அம்மையப்பனின் அவதாரம் ஆதி சங்கரர் என்றால், அந்த ஆதி ஆசாரியரின் புனர் அவதாரமே ஸ்ரீ காமகோடி பீடத்தை இன்று அலங்கரிக்கும் யதீசுவரர்கள். அவர்கள் அங்கீகரித்துத் திருவருள் செய்து, ஸ்ரீ முகம் அநுக்கிரகித்த நூல் இது. அவர்களது தன்னருளை மீண்டும் மீண்டும் வணங்கி, உங்கள் கரங்களில் இதை அர்ப்பணம் செய்கிறேன்.

    ரா. கணபதி

    சென்னை -10,

    சுபகிருது, மார்கழி 18உ

    (2-1-1963)

    நான்காம் பதிப்பின் முகவுரை (1988)

    கால் நூற்றாண்டுக்கு மூன்றாண்டு முன்பு, எனக்குக் கால் நூறாண்டு வயதும் முடியாதபோது எழுதியது ஜயஜய சங்கர. ஓராண்டுக்குப் பின் ‘கல்கி’யில் தொடராக வெளியாகிப் பிறகு ‘கலைமகள்’ காரியாலயத்தினர் நூலாக மூன்று பதிப்புகள் வெளியிட்டபின் இப்போது ‘நான்காம் பதிப்பு வெளியாகிறது.

    பின்னாண்டுகளில் இந்நூல் குறித்து எனக்குக் கேள்வி எழுவதுண்டு. வெகுவாக ஜனங்களை ஈர்த்த நூலாயினும் இதுபற்றி ஐயப்பாடான கேள்வி என்னுள்ளே எழும்பிருந்தது. வெகு ஜன விசேஷ ஈர்ப்பினாலேயே கேள்வி என்று கூடச் சொல்லலாம்! நூலில் வார்த்தை ஜோடனையே அதிகமாயிருந்து, ஆழ்ந்து பார்க்கில் தரம் போதாததாக இருந்திருக்குமோ என்றே கேள்வி. அக்காலத்தில் என் சாஸ்திரப் படிப்பு, அநுஷ்டானம், அநுபவம் யாவும் இன்றை விடவும் மிகக் குறைவாயிற்றே! அப்படியிருக்க மஹத்தான பொருளைப் பற்றிய இந்நூலை நான் எப்படி உரியபடிக் கையாண்டு உருவாக்கியிருக்க முடியும் என்று ஐயம். ஆலையில்லா ஊரின் இலுப்பைப் பூச் சர்க்கரையாகவே இது புகழ் பெற்றிருக்குமோ என்று எண்ணம்.

    இப்படி எண்ணியதால் ஏதோ ஓர் அருட்சக்தி நாலெழுதுவதில் எனக்குக் கை கொடுத்ததை நான் மறந்து விட்டதாக அர்த்தமில்லை. சாமானிய மக்கள் மாத்திர மின்றி அநுபவிகளான மகா பெரியோர்களும், வித்வத் சரேஷ்டர்களுங்கூட இதனை சிலாகித்ததையும் நான் மறந்து விடவில்லை. ஆயினும், ‘ஏதோ ஒரு சிறிய அளவுக்கு அநுக்ரஹ சக்தி செயற்பட்டிருக்கும். முற்றுணர்ந்தோரும் கற்றுணர்ந்தோரும் இந்த அளவு அருளின் அளாவலையே அன்பினால் பெரிதாகக் கருதி, ஆசார்ய சரிதம் என்ற நல்ல விஷயம் பரவுகிறதென்ற நோக்கில் மகிழ்ந்து தட்டிக் கொடுத்திருக்கக்கூடும்’ என்றே எண்ணினேன். அருள் வேகம் ஆழ்ந்து அகன்று நூல் முழுதும் விரவிப் பரவி யிருப்பதற்கில்லை என்றே எண்ணினேன் - இப்படிப்பட்ட பேரருளுக்குப் பாத்திரமாகும்படியான யோக்கிய தாம்சம் இல்லாததால்.

    நூலைப்பற்றி இவ்வாறு குறையுணர்ச்சி தோன்றிவிட்டதால் அதன் இரண்டாவது, மூன்றாவது பதிப்புகளின்போது அதைப் படித்துப் பார்த்துப் பரிசீலனை செய்து தரக்கூடக் கூச்சமாயிருந்தது. இரண்டாவது பதிப்பில் ஓரிரு புதுப்பகுதிகள் சேர்த்துக் கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டேன். மூன்றாவது பதிப்போ என் ஸம்பந்தம் அடியோடு இல்லாமலேயே பிரசுரித்துக் கொள்ளச் சொல்லி விட்டேன்! பண்டித - பாமரர் ஏராளமானவர் நூலை மெச்சியிருப்பதால் மறுபதிப்புக்கள் வந்துவிட்டுப் போகட்டுமென்று ‘பெரிய மனசு பண்ணி’ அநுமதித்துவிட்டேன்!

    ஆனால் அப்புறம், ஏனென்று சொல்லத் தெரியவில்லை, எதனாலோ இம்முறை நூலை நன்று மறுபரிசீலனை செய்து ஸாங்கோபாங்கமாகத் திருத்தியும் புதுக்கியுமே அச்சுக்குத் தரவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. ‘விஷயம் தெரியாத நாளில் என்னவோ எழுதியது. அம்பாளின் பரம கிருபையால் ஊரெல்லாம் நல்ல பேர் வாங்கிவிட்டாலும், எழுதியவனுக்கே ஆத்ம திருப்தி தராதவிதத்திலா, அவதார புருஷரின் மஹா சரிதையைத் தருவது? ஆகையால், ரொம்பவும் சள்ளை பிடித்த கார்யமாகத்தான் இருக்கப் போகிறதென்றாலும், பொறுமையாக அடியோடு நுனி சரிப்பண்ணித்தான் இம்முறை நூலை அச்சேற்ற வேண்டும்’ என முடிவு செய்தேன். ‘ஆசார்யாள் வரலாறு என்றால் அதில் இன்னின்ன கருத்துக்களும், விளக்கங்களும் இருந்தால்தான் கௌரவம். சம்பவங்களும் இப்படியிப்படி உருவாக்கப்பட்டு அவற்றின் உட்பொருட்கள் இன்னபடி உணர்த்தப்பட்டிருந்தால்தான் இதிஹாஸப் பெருமைக்குரிய சரிதைக்கு நீதி செய்ததாகும். இவற்றை நம்முடைய பழைய படைப்பில் எதிர்பார்ப்பதற்கில்லை. எனவே ‘ரீ-ரைட்’ செய்யுமளவுக்குப் பரிசிரமப்பட்டுப் புனரமைக்க வேண்டியிருக்கும். இருக்கட்டும். மனசாட்சியை அமுக்காமல் காரியத்தை ஏற்று முடித்துக் குறையுணர்ச்சியிலிருந்து விடுதலை பெறுவோம்’ என்ற எண்ணத்துடன் பழைய பதிப்பைப் படிக்கலானேன்.

    என்ன ஆச்சரியம்! நான் பயந்து, கூசி எண்ணியது போல் நூல் இருக்கவேல்லை! அந்தச் சுமார் முப்பதாண்டுகளுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1