Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maha Periyavaa - Part 3
Maha Periyavaa - Part 3
Maha Periyavaa - Part 3
Ebook199 pages1 hour

Maha Periyavaa - Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது.
தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், ‘இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல... ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்’ என்கிற எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல், ‘இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே?’ என்கிற நெகட்டிவ் எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது.
நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி!
பரிபூரண சரணாகதிதான் பக்தி.
நம் மனதில் பக்தியை வளர்க்கா விட்டால், இந்த மனம் பாழாகி விடும்.
ஷீர்டி பாபா, பகவான் ரமணர், காஞ்சி பெரியவா போன்ற மகான்கள் வெவ்வேறு காலகட்டத்தில் அவதாரம் செய்து பக்தி மார்க்கத்தின் அவசியம் குறித்து விளக்குவதற்காக நம்முள் நல்ல விதைகளை விதைத்திருக்கிறார்கள்.
அதுதான் ‘பக்தி சிந்தனை’ என்கிற மாபெரும் விருட்சமாக இன்றைக்கு ஒவ்வொருவருக்குள்ளும் வளர்ந்திருக்கிறது.
‘ஒரு மகான் அவதரித்தார்; வாழ்ந்தார்’ என்பதோடு நில்லாமல், இந்த தேசத்துக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லி, புதிய மாற்றங்களையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் மகா பெரியவா என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
‘மகா பெரியவா தொகுதி III’ இன்று உங்கள் கரங்களில் தவழ்வதற்குக் காரணம் - ‘மாலை மலர்’ நாளிதழ். இந்த அனுபவங்கள் அனைத்தும் ‘மகா பெரியவர்’ என்ற தலைப்பில் அதில் வெளிவந்தன. இத்தகைய வாய்ப்பை எனக்கு வழங்கிய இந்தக் குழுமத்தின் அதிபர் திரு. சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுக்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.
இந்தத் தொடரின் வெற்றிக்கு உழைத்த என் அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580138306190
Maha Periyavaa - Part 3

Read more from P. Swaminathan

Related to Maha Periyavaa - Part 3

Related ebooks

Reviews for Maha Periyavaa - Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maha Periyavaa - Part 3 - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    மகா பெரியவா – தொகுதி 3

    Maha Periyavaa - Part 3

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வாழ்விக்க வந்த கலியுக தெய்வம்

    2. வாக்கை மீறினார்... வந்தது சோகம்

    3. 'முத்திரை எல்லாம் போட முடியறதா?'

    4. காத்திருந்த மூதாட்டிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

    5. வெள்ளிக் குடமும் விபரீத சந்தேகமும்

    6. திரிபுரசுந்தரி தந்த தீபாவளி பட்சணம்

    7. 'எங்கே சாப்டே? மடத்லயா? வெளீலயா?'

    8. வேத பாடசாலையும் ஜட்ஜ் கமாலுதீனும்

    9. சிஷ்யர்களுக்குக் கிடைத்த வெரைட்டி ரைஸ்

    10. 'எல்லாரோட கும்பிடும் காமாட்சிக்கே போகணும்!'

    11. 'அந்த பாட்டை ஏன் இங்கே பாடலை?'

    12. சட்டசபையில் வாசித்த இரங்கல் தீர்மானம்

    மகா பெரியவா - தொகுதி 3

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது.

    தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், 'இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல... ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்' என்கிற எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.

    அப்படி இல்லாமல், 'இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே?' என்கிற நெகட்டிவ் எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது.

    நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி!

    பரிபூரண சரணாகதிதான் பக்தி.

    நம் மனதில் பக்தியை வளர்க்கா விட்டால், இந்த மனம் பாழாகி விடும்.

    ஷீர்டி பாபா, பகவான் ரமணர், காஞ்சி பெரியவா போன்ற மகான்கள் வெவ்வேறு காலகட்டத்தில் அவதாரம் செய்து பக்தி மார்க்கத்தின் அவசியம் குறித்து விளக்குவதற்காக நம்முள் நல்ல விதைகளை விதைத்திருக்கிறார்கள்.

    அதுதான் 'பக்தி சிந்தனை' என்கிற மாபெரும் விருட்சமாக இன்றைக்கு ஒவ்வொருவருக்குள்ளும் வளர்ந்திருக்கிறது.

    'ஒரு மகான் அவதரித்தார்; வாழ்ந்தார்' என்பதோடு நில்லாமல், இந்த தேசத்துக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லி, புதிய மாற்றங்களையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் மகா பெரியவா என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

    ஆன்மிக உலகில் புரட்சியாளர் என்று ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் சொல்வோம். அவர்களுக்கு அடுத்து அந்தப் புரட்சியை மிக அமைதியாக நடத்தி, உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர் காஞ்சி மகா பெரியவா.

    எப்படி மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர் தான் மறைந்த பிறகும் 700 வருடங்களுக்கு உடன் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருப்பேன் என்று அருளினாரோ, அதுபோல்தான் எல்லா மகான்களும்!

    மகா பெரியவா இன்றைக்கும் நம்மிடையே இருந்து வருகிறார்; நடமாடி வருகிறார்; உண்மையான பக்தர்களின் குறைகளைக் களைவதற்கு அவர் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறார்.

    இதுதான் உண்மை. சத்தியம். நிதர்சனம்.

    'மகா பெரியவா தொகுதி III' இன்று உங்கள் கரங்களில் தவழ்வதற்குக் காரணம் - 'மாலை மலர்' நாளிதழ். இந்த அனுபவங்கள் அனைத்தும் 'மகா பெரியவர்' என்ற தலைப்பில் அதில் வெளிவந்தன. இத்தகைய வாய்ப்பை எனக்கு வழங்கிய இந்தக் குழுமத்தின் அதிபர் திரு. சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுக்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

    இந்தத் தொடரின் வெற்றிக்கு உழைத்த என் அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    மகா பெரியவா சரணம்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    இல்லம்: 044 - 2239 1788 கைப்பேசி: 98401 42031

    email: swami1964@gmail.com

    facebook: www.facebook.com/swami1964

    Website: http://pswaminathan.in

    youtube channel: www.youtube.com/channel/UCVPS6VyvZW2oJVB3zkzh7Ng

    1. வாழ்விக்க வந்த கலியுக தெய்வம்

    மகா பெரியவா...

    - இன்று உலகமே உச்சரிக்கிற உன்னத மந்திரமாகி விட்டது.

    காஞ்சி மகா ஸ்வாமிகள், காஞ்சி பெரியவா, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சங்கராச்சார்யர், காஞ்சியின் 68-வது பீடாதிபதி, ஜகத்குரு - இப்படி எத்தனையோ திருநாமங்கள் இந்த மகானுக்கு உண்டு என்றாலும், 'மகா பெரியவா' மட்டும் சட்டென்று மனசுக்குள் உட்கார்ந்து விடுகிறது.

    'பெரியவா' என்ற பதமே வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த நிலையில் உள்ளவர்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல். அதிலும் இவரோ 'மகா பெரியவா'...

    ஆஹா! யாருக்குக் கிடைக்கும் இந்த அதி உன்னத பட்டம்!

    1894-ஆம் வருடம் மே மாதம் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ நட்சத்திர தினத்தில் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரம் நகரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் காஞ்சி மகா பெரியவாளின் அவதாரம் நிகழ்ந்தது.

    வசுதேவருக்கும் தேவகிக்கும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு பெற்றோராகும் பாக்கியம் எப்படிக் கிடைத்ததோ, அதுபோல் சுப்ரமண்ய சாஸ்திரிகளுக்கும், மகாலட்சுமி அம்மையாருக்கும் இந்த சுவாமிநாதனுக்குப் பெற்றோராகும் பாக்கியம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஆம்!

    மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம (துவக்க கால) பெயர் சுவாமிநாதன்.

    இந்த நூலில் மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை நாம் பார்க்கப் போவதில்லை.

    வாழ்க்கை வரலாறு என்பது புள்ளி விவரம்.

    வாழ்ந்த விதம் என்பது நீங்கா நினைவு. அனுபவம். பாடம்.

    எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். வளர்கிறார்கள். இறக்கிறார்கள்.

    பிறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை; இறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை.

    பிறக்கும்போது செய்தி ஆகிறோமோ இல்லையோ, இறக்கும்போது செய்தி ஆக வேண்டும். அதுவும் நல்ல விதமாக அந்த செய்தி பதியப்பட வேண்டும்.

    'அடடா... எப்பேர்ப்பட்ட நல்ல மனிதர்... இவர் மறைந்து போனாரே...' என்று இந்த உலகம் கண்ணீர் விட்டால், அவரது நினைவு காலாகாலத்துக்கும் மக்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

    மகா பெரியவா - எத்தனை ஆண்டுகள் போனாலும், எத்தனை யுகங்கள் போனாலும் பக்தகோடிகளின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பார்.

    வாழுகிற வாழ்க்கைதான் ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது.

    நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் முழுக்க நாத்திகம் தலை விரித்து ஆடியபோது, கோயிலுக்குச் செல்லவே பயந்தார்கள்; ஆன்மிகத்தின் அடையாளங்களான திருநீறு, திருமண் போன்றவற்றை உடலில் தரிப்பதற்குத் தயங்கினார்கள்.

    அத்தகைய நேரத்தில் தமிழகத்தின் மூலைமுடுக்கு ஊர்களுக்கு எல்லாம் நடை யாத்திரையாகச் சென்று, 'நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும்?' என்பதற்கான விளக்கத்தை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு பக்தியின் அவசியத்தை உணர்த்தியவர் - இந்த ஆன்மிக குரு.

    மகா பெரியவா -

    மகானா? தெய்வமா?

    குருவாக எண்ணி சரண் புகுந்தவர்களுக்கு இந்த மகான் குருவாக விளங்கி அருளினார்.

    தெய்வமாக எண்ணி தங்களை ஒப்படைத்தவர்களுக்கு தெய்வமாகக் காட்சி தந்தார்.

    காஞ்சி மகா பெரியவாளை திருப்பதி வேங்கடாசலபதியாக - சர்வேஸ்வரனாக - சுவாமிமலை முருகப் பெருமானாக - காஞ்சி காமாட்சியாக - நடராஜப் பெருமானாக - இப்படிப் பக்தர்கள் எந்தத் திருவடிவத்தை மனதில் இறுத்தி மகா பெரியவாளைத் தரிசித்தார்களோ, அதே வடிவில் திருக்காட்சி பெற்றிருக்கிறார்கள்.

    நம் ஆழ் மனதில் என்னென்ன காட்சிகளைப் பெறுகிறோமோ, என்னென்ன எண்ணங்களைக் கொண்டிருக்கிறோமோ... அவற்றையே அடைகிறோம் என்றுதான் தத்துவமும் சொல்கிறது.

    மகா பெரியவாளைப் பார்த்து வியக்காத இந்திய அரசியல்வாதிகள் - ஏன் உலகத் தலைவர்களே இல்லை எனலாம்.

    தனது இறுதிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் மகா பெரியவாளைப் பார்க்க விரும்பி கலவைக்கு வந்து மகானுடன் உரையாடி இருக்கிறார்.

    காமராஜரின் அரசியல் நேர்மையை அறிந்த மகா பெரியவா, 'உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டிருக்கிறார். 'மிஸ்டர் க்ளீன்' என்று பெயர் பெற்றிருந்த காமராஜர், 'தமிழ்நாடு சுபிட்சமா இருக்கணும்... அது போதும் சாமீ' என்று மகா பெரியவாளிடம் நாட்டு மக்களை முன்னிறுத்தி வரம் கேட்டாராம்.

    'கடவுள் மறுப்புக் கொள்கை' உடையவர்களாலும் பாராட்டப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மகான் ஒருவர் உண்டு என்றால், அது மகா பெரியவாதான்.

    காரணம் - எளிமை, நேர்மை, தூய்மை, பரோபகாரம், மனிதநேயம் - இப்படிப்பட்ட நற்குணங்களை மட்டுமே தனது சொத்தாகக் கடைசி வரை வைத்திருந்தவர் மகா பெரியவா.

    கவியரசர் கண்ணதாசனை அறியாதோர் எவரும் இருக்க முடியாது. துவக்க காலத்தில் ஒரு நாத்திகராக இருந்து, மேடைக்கு மேடை... அவ்வளவு ஏன்? காஞ்சிபுரத்திலேயே சங்கர மடத்துக்கு எதிரில் மேடை போட்டு, காஞ்சி ஸ்ரீமடத்தையும், மகா பெரியவாளையும் பல முறை திட்டித் தீர்த்தவர்.

    அப்பேர்ப்பட்ட 'அக்மார்க்' நாத்திகரான கண்ணதாசன் கொடூரமான ஒரு கார் விபத்தில் உருக் குலைந்தார். அனைவருக்கும் இரங்கும் ஆபத்பாந்தவனான காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண அருளாலும் ஆசியாலும் உயிர் மீண்டார்.

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், நேராகக் காஞ்சி போய் மகா பெரியவாளை கண்ணீர் மல்க வணங்கினார் கண்ணதாசன். பெரியவாளின் ஆசியுடன் 'அர்த்தமுள்ள இந்து மதம்' பிறந்தது.

    காஞ்சி மகா பெரியவாளைப் பற்றிப் பின்னாளில் கண்ணதாசன் எழுதினார்:

    'அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் வழங்கும் பேரொளி. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் 'இந்து மதம் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு 'ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

    செஞ்சிக் கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்குராஜா அல்ல. காவி கட்டிய எல்லோரும் மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும்.'

    - பக்தியின் பாதைக்கு முழுக்கத் திரும்பிய கண்ணதாசனின் உணர்ச்சிமிகு வரிகள் இவை.

    'இந்த மகானை முதல் முறையாக நான் காஞ்சியில் பார்த்தபோது இப்படியும் ஒரு எளிய துறவியா என்று வியந்தேன். இவரைப் பார்த்த பின் நானும் ஒரு துறவி என்று சொல்லவே வெட்கப்பட்டேன். பேச்சில் கலப்படம் இல்லாத உண்மை, குரலில் தெறிக்கின்ற ஞானம், தவத்தின்போது தெரிகின்ற அமைதி... யப்பப்பா' என்று வியக்கிறார் புத்த துறவி தலாய்லாமா.

    மகா பெரியவா வாழ்ந்த வாழ்வின் பெரும் பகுதி யாத்திரையிலேயே கழிந்திருக்கிறது. 'சந்நியாசிகள் ஒரே இடத்தில் நிலை கொண்டிருக்கக் கூடாது. பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பலருக்கும் பயனுள்ள உபதேசங்களைச் செய்ய வேண்டும்' என்று ஆன்மிக நூல்கள் சொல்லும்.

    உலகில் வசிக்கின்ற எல்லோரையும் ஈர்த்த ஒரே விஷயம் - மகா பெரியவா வாழ்ந்த எளிமையான வாழ்க்கைதான்!

    உருவத்தில் குள்ளம். உள்ளத்தில் உயரம்.

    பணத்தைக் கையால் தொட்டதில்லை.

    தொலைபேசி பயன்படுத்தியதில்லை.

    உணவில் பற்றில்லை.

    உடையில் நாட்டமில்லை.

    சொத்து சுகத்தில் கவனமில்லை.

    சொந்த பந்தங்களுக்கு சலுகை இல்லை.

    இவரிடம் ஆசி பெற வருபவர்களில் கோடீஸ்வரர்கள் பலரும் உண்டு. ஆனால், இவரோ கட்டாந்தரையில்,

    Enjoying the preview?
    Page 1 of 1