Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maha Periyavaa - Part 7
Maha Periyavaa - Part 7
Maha Periyavaa - Part 7
Ebook165 pages1 hour

Maha Periyavaa - Part 7

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காஞ்சி ஸ்ரீமடத்தில் ஆச்சார்யர்களாக இருக்கிற பீடாதிபதிகள் நித்தமும் இரு வேளைகளில் சிவ சொரூபமாக விளங்குகிற இந்த ஸ்படிக லிங்கத்துக்கு பூஜை நடத்த வேண்டும். ஆதி சங்கரர் கயிலாயத்தில் சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஸ்படிக லிங்கங்களுள் ஒன்றுதான் இந்த ஸ்ரீசந்திரமவுளீஸ்வரர்.
ஆத்மார்த்தமாக இந்த சிவலிங்க பூஜையை மகா பெரியவா தினமும் நிகழ்த்தும்போது, சாட்சாத் சிவபெருமான் தனக்குத் தானே பூஜையை செய்து கொள்வது போல் இருக்கும் என்று அவரது பக்தகோடிகள் சொல்வார்கள்.
இன்றைக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு செல்கிற பக்தகோடிகள் உள்ளே நுழைந்ததும், அங்கிருக்கிற பிரமாண்டமான பூஜை மண்டபத்தில் இந்த சந்திரமவுளீஸ்வரரைத் தரிசிக்க முடியும்.
மனதுக்குள் மகானைப் பரிபூரணமாகக் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால், உங்கள் உதடுகள் அசைவதே ஒரு மந்திரம்தான்.
‘மகா பெரியவா சரணம்’ என்றோ, ‘ஜய ஜய சங்கர... ஹர ஹர சங்கர’ என்கிற நாமத்தையோ எவ்வளவு முடியுமோ சொல்லுங்கள்! குறைந்த பட்சம் 108 சொல்ல முயற்சியுங்கள்!
அவருக்கு நிவேதனமாக உங்களால் முடிந்ததை வீட்டு பூஜையறையில் சமர்ப்பியுங்கள். மலை வாழைப்பழம், விளாம்பழம், திரட்டுப் பால் (பால்கோவா), சர்க்கரைப் பொங்கல், ரவா கேசரி, நாட்டுச் சர்க்கரை கலந்த அவல், நெல்பொரி - இவை எல்லாம் அந்த மகானுக்கு நிவேதனம் செய்ய உகந்தவை.
கண் கண்ட தெய்வமாக - கலியுக தெய்வமாக காலாகாலத்துக்கும் விளங்கி, தன்னை நம்பிச் சரண் புகுந்த பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து வருகிறார் மகா பெரியவா.
காஞ்சி மகானைப் பற்றி தற்போது க்ஷிமிமி மற்றும் க்ஷிமிமிமி ஆகிய இரு தொகுதிகள் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகின்றன.
Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580138306220
Maha Periyavaa - Part 7

Read more from P. Swaminathan

Related to Maha Periyavaa - Part 7

Related ebooks

Reviews for Maha Periyavaa - Part 7

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maha Periyavaa - Part 7 - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    மகா பெரியவா – தொகுதி 7

    Maha Periyavaa - Part 7

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. 'மகா புருஷனா வருவான்!'

    2. 'மெஷினும் பொய் சொல்றதோ?'

    3. ஆதி சங்கரரின் காலம்

    4. இருக்கின்ற மகனுக்கு திதி?

    5. பேரனைக் காப்பாற்றிய பெரியவா

    6. திருச்சியில் திரும்பிப் போ'கோஷம்

    7. ஜஸ்டிஸுக்குக் கிடைத்த ஆசி

    8. விடிகாலை விஸ்வரூப தரிசனம்

    9. பிரமித்த ரயில்வே அதிகாரி

    10. மாம்பலம் காமகோடி தெரு

    11. ரானடேயும் தண்ணித் தொட்டியும்

    12. அற்புதம் நிகழ்த்திய ஆப்பிள்

    13. தேடி வந்த தெய்வம்

    14. செம்பருத்திப் பூ வைத்தியம்

    மகா பெரியவா - தொகுதி 7

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    இந்தக் கலியுகத்தில் தெய்வத்தை நேருக்கு நேர் தரிசிக்கக் கூடிய பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா? என்று காஞ்சி மகா பெரியவாளை நேரில் தரிசித்த பக்தர்களிடம் கேட்டால், ஆமாம்... அந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மகா பெரியவா திருவடிவத்தில் தெய்வத்தைத் தரிசித்திருக்கிறோம் என்பார்கள், உணர்ச்சிவசப்பட்டு.

    ஆம்! காஞ்சி மகா பெரியவாளை நேருக்கு நேர் தரிசித்த பக்தர்கள் அனைவரும் சாட்சாத் சர்வேஸ்வரனையே கண்களுக்கு நேராகத் தரிசித்தவர்கள். அப்படி என்றால், மகா பெரியவாளை நேரில் தரிசிக்காதவர்கள் துர்பாக்கியசாலிகள் என்று பொருள் கொள்ளக் கூடாது! அந்த மகானை இன்றைக்கு நினைத்தாலும், மறைமுகமாக வந்து அருள் பாலிக்கிறார். அந்த வகையில் நாம் அனைவருமே பாக்கியசாலிகள்தான்.

    அந்த வகையில் நானும் பாக்கியசாலிதான்.

    ஆம்! என் நினைவுக்குத் தெரிந்து மகா பெரியவாளைத் தரிசித்ததில்லை.

    முன்ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறேனோ, என்னவோ... இன்று அவரைப் பற்றிப் பேசவும் எழுதவும் பேறு கிடைத்திருக்கிறது.

    கலியுக தெய்வம், நடமாடும் தெய்வம், கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் இன்றைக்குப் பக்தர்களால் பெரிதும் போற்றி வணங்கப்படுபவர் காஞ்சி மகா பெரியவா.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லப்படக் கூடிய வரிசையில் முதலிடத்திலும் (மாதா), மூன்றாம் இடத்திலும் (குரு) இருக்கிறவர்கள் கொட்டிக் கொடுக்கிறவர்கள்.

    ஒரு குழந்தை தன் தாயிடம் என்ன கேட்டாலும், அன்பின் மிகுதியால் கொடுத்தே விடுவாள். கொடுக்க வேண்டாம் என்று அவள் நினைத்தாலும், தன் குழந்தை மேல் இருக்கிற வாஞ்சையும் கருணையும் கொடுக்க வைத்து விடும்.

    அதுபோல்தான் நாம் வணங்குகிற குருவும். ஒரு குரு மகானின் சந்நிதிக்குச் சென்று அவரிடம் எதை வேண்டிப் பிரார்த்தித்தாலும், தகுதிக்கு உட்பட்டது என்றால், நிச்சயம் தந்து அருளி விடுவார் அவர்.

    எனவேதான், கேட்டதை எல்லாம் கொடுக்கக் கூடிய குரு பக்தியானது உயர்ந்த பக்தியாகப் போற்றப்படுகிறது.

    அப்படி நாம் அனைவரும் கேட்டனவற்றை, வேண்டியவற்றை, பிரார்த்தித்தவற்றை உடனுக்குடன் அருளக் கூடிய - ஒப்பற்ற குருவாக இன்றைக்கும் விளங்கி வருகிறவர் காஞ்சி மகா பெரியவா.

    தன்னை நம்பி வந்து, தனது திருப்பாதங்களில் சரண் புகுகிற பக்தனை எந்த ஒரு காலத்திலும் ஏமாற்றியதில்லை மகா பெரியவா. ஒருவேளை பக்தன் கேட்டது உடனுக்குடன் கிடைக்கவில்லை என்றால், அவனது பக்தியில் போதிய வலிமை இல்லை என்று பொருள்.

    ஷீர்டி பாபா, புட்டபர்த்தி சத்யபாபா போன்ற மகான்களின் வழிபாடு இன்றைக்கு உலகெங்கும் இருந்து வருவதைப் பார்க்கிறோம். அதுபோல் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளுக்கும் உலகெங்கும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.

    எண்ணற்ற யாத்திரைகள் செய்து, பக்தர்களுக்கு நல்வழிகளை உபதேசிப்பதுதான் சந்நியாச தர்மம். அதன்படி பாரத தேசத்தின் பெரும்பாலான ஊர்களில் யாத்திரை செய்து அவர்களுக்கெல்லாம் தன் இன்னருளை வழங்கி இருக்கிறார் மகா பெரியவா.

    காஞ்சி ஸ்ரீசங்கர மடத்திலோ, அல்லது தான் தங்கி இருக்கிற முகாமிலோ நித்தமும் ஸ்ரீசந்திரமவுளீஸ்வர பூஜையை நடத்துவார் மகா பெரியவா.

    காஞ்சி ஸ்ரீமடத்தில் ஆச்சார்யர்களாக இருக்கிற பீடாதிபதிகள் நித்தமும் இரு வேளைகளில் சிவ சொரூபமாக விளங்குகிற இந்த ஸ்படிக லிங்கத்துக்கு பூஜை நடத்த வேண்டும். ஆதி சங்கரர் கயிலாயத்தில் சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஸ்படிக லிங்கங்களுள் ஒன்றுதான் இந்த ஸ்ரீசந்திரமவுளீஸ்வரர்.

    ஆத்மார்த்தமாக இந்த சிவலிங்க பூஜையை மகா பெரியவா தினமும் நிகழ்த்தும்போது, சாட்சாத் சிவபெருமான் தனக்குத் தானே பூஜையை செய்து கொள்வது போல் இருக்கும் என்று அவரது பக்தகோடிகள் சொல்வார்கள்.

    இன்றைக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு செல்கிற பக்தகோடிகள் உள்ளே நுழைந்ததும், அங்கிருக்கிற பிரமாண்டமான பூஜை மண்டபத்தில் இந்த சந்திரமவுளீஸ்வரரைத் தரிசிக்க முடியும்.

    மனதுக்குள் மகானைப் பரிபூரணமாகக் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால், உங்கள் உதடுகள் அசைவதே ஒரு மந்திரம்தான்.

    'மகா பெரியவா சரணம்' என்றோ, 'ஜய ஜய சங்கர... ஹர ஹர சங்கர' என்கிற நாமத்தையோ எவ்வளவு முடியுமோ சொல்லுங்கள்! குறைந்த பட்சம் 108 சொல்ல முயற்சியுங்கள்!

    அவருக்கு நிவேதனமாக உங்களால் முடிந்ததை வீட்டு பூஜையறையில் சமர்ப்பியுங்கள். மலை வாழைப்பழம், விளாம்பழம், திரட்டுப் பால் (பால்கோவா), சர்க்கரைப் பொங்கல், ரவா கேசரி, நாட்டுச் சர்க்கரை கலந்த அவல், நெல்பொரி - இவை எல்லாம் அந்த மகானுக்கு நிவேதனம் செய்ய உகந்தவை.

    கண் கண்ட தெய்வமாக - கலியுக தெய்வமாக காலாகாலத்துக்கும் விளங்கி, தன்னை நம்பிச் சரண் புகுந்த பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து வருகிறார் மகா பெரியவா.

    காஞ்சி மகானைப் பற்றி தற்போது க்ஷிமிமி மற்றும் க்ஷிமிமிமி ஆகிய இரு தொகுதிகள் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகின்றன.

    'மாலை மலர்' நாளிதழில் வெளியானவையே இந்தத் தொகுப்பு. ஒரு சில கட்டுரைகள் 'ராணி', 'தினத் தந்தி' இதழ்களில் வெளியானவை. இத்தகைய நல்வாய்ப்பை எனக்கு வழங்கிய இந்தக் குழுமத்தின் அதிபர் திரு. சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    'பெண்மையைப் போற்றும் மகா பெரியவா' என்ற மினி தொடரை 'மங்கையர் மலர்' இதழில் எழுதினேன். அந்தக் கட்டுரைகளும் இந்த நூல்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

    மகா பெரியவா அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த மகானின் திருவடிகளைப் பணிகின்றேன்.

    மகா பெரியவா சரணம்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    98401 42031

    email: swami1964@gmail.com

    https://www.facebook.com/swami1964

    http://pswaminathan.in

    1. 'மகா புருஷனா வருவான்!'

    கலியுகத்தின் ஒவ்வொரு நாளும் நகர நகர, அதர்மங்களும் அநியாயமும் பெருக்கெடுத்துக் கொண்டே போகும். இந்த அவலங்களில் இருந்து அப்பாவி மக்களை மீட்பதற்கென்று தேசத்தின் பல திக்குகளிலும் மகான்களது அவதாரம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

    தர்மத்தின் வழியில் நடந்து, நியாயத்தை நிலை நாட்டுவதே மகான்களின் தலையாய பணியாக இருக்கும். எவரெவருக்கெல்லாம் பாக்கியமும் கொடுப்பினையும் இருக்கின்றதோ, அவர்களெல்லாம் மகான்களது அறிவுரைகளைக் கேட்டு, அவர்களது வழிகாட்டுதல்படி நடந்து, நற்கதியை அடைவார்கள்.

    அதுபோல்தான் காஞ்சி மகா பெரியவா என்கின்ற கலியுக தெய்வத்தின் அவதாரமும் இந்த பூமியில் நிகழ்ந்தது.

    காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்ய புருஷர்களாக விளங்கிய பீடாதிபதிகளில் ஆதி சங்கரருக்குப் பிறகு கோவிந்தபுரம் ஸ்ரீபோதேந்திரர் ஓரளவு பேசப்பட்டார்.

    அவருக்குப் பின், சமீப காலத்தில் வாழ்ந்த காஞ்சி மகா பெரியவா பெரிதும் பேசப்பட்டார்.

    தான் வாழ்ந்த ஒரு நூறாண்டு முழுக்கத் தன்னலம் கருதாமல், பிறரது நலனை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்த இந்த மகானது கடைக்கண் பார்வை நம் மீது திரும்பினால், வாழ்க்கையில் எத்தனையோ கோடி சூர்யப் பிரகாசங்களைக் காணலாம். காஞ்சி மகா பெரியவரது அருளானது ஒரு பக்தருக்குக் கிடைத்து விட்டால், வாழ்க்கையில் எண்ணிப் பார்க்க முடியாத உயரத்துக்கு இவர் அழைத்துச் செல்வார்.

    இன்றைக்கும் இந்த மகான் பிருந்தாவனம் (ஜீவ சமாதி) கொண்டுள்ள காஞ்சிபுரத்தில், நித்தமும் இவரது திருச்சந்நிதி தேடி வந்து தரிசித்து ஆசி பெறுகின்றனர் பக்தகோடிகள். மகானது கருவறையை பக்திபூர்வமாக வலம் வந்து, கண்ணீர் மல்கத் தங்களது பிரார்த்தனைகளைக் கொட்டுவோர் ஏராளம்.

    காஞ்சிபுரம் நகரத்தில் மத்தியில் புராதனம் வாய்ந்த ஸ்ரீசங்கர மடத்திலேயே மகானது பிருந்தாவனம் அமைந்துள்ளது. நித்தமும் இதற்கு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மகானின் அவதார நட்சத்திரமான அனுஷம், மகான் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நட்சத்திரமான மூலம், மாதம் இருமுறை வரக் கூடிய பிரதோஷம் போன்ற தினங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகின்றன.

    தங்கள் மனதில் இருக்கக் கூடிய கோரிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் இந்த மகானது திருவுருவத்துக்கு முன்னால் நின்று உளமாரச் சொல்கின்றனர் பக்தகோடிகள். அவரது திருச்சந்நிதிக்குத் தங்களால் இயன்ற எளிய காணிக்கைகளை (வில்வ மாலை, துளசி மாலை, மலர்கள், கல்கண்டு போன்றவை) வாங்கிக் கொடுத்து மகானது கடைக்கண் பார்வையைப் பெறுகின்றனர்.

    1994-ஆம் ஆண்டு மகா பெரியவா ஸித்தி (மறைவு) ஆனாலும், இன்றைக்கும் நம்மிடையே நடமாடி வருகிறார்... பக்தர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான அற்புதங்கள் நித்தமும் இவரது திருச்சந்நிதியில் நடந்து கொண்டுதான் வருகின்றன.

    பொய்யின்றி மெய்யோடு எவர் இந்தத் திருச்சந்நிதிக்குச் சென்றாலும், அவர்களைக் காத்து அருள மகான் காத்துக் கொண்டிருக்கிறார்.

    மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல பக்தர்கள் மகா பெரியவா திருச்சந்நிதிக்கு வந்து பிரார்த்தித்து நலம் பெறுவது கண்கூடு.

    தர்மத்தின்

    Enjoying the preview?
    Page 1 of 1