Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arockiya Vazhvu Arulum Malai Koyilgal
Arockiya Vazhvu Arulum Malai Koyilgal
Arockiya Vazhvu Arulum Malai Koyilgal
Ebook146 pages34 minutes

Arockiya Vazhvu Arulum Malai Koyilgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம். “ஆரோக்கிய வாழ்வு அருளும் மலைக்கோயில்கள்” என்ற இந்த நூலினை எழுதியதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்த நூலில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபட்டு பின் அத்தலங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து இந்த நூலினை உருவாக்கியுள்ளேன். மலைக்கோயில்களுக்குச் சென்று திரும்பிய பின்னர் மனதில் ஒரு புத்துணர்ச்சி எழுவதை நான் உணர்ந்திருக்கிறேன். மாதத்திற்கொரு முறை அருகில் உள்ள ஏதேனும் ஒரு மலைக்கோயிலுக்குச் சென்று வழக்கத்தைக் கடை பிடியுங்கள். மனதில் நிம்மதி பிறக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும். இந்த நூலினை மின்னூலாக வெளியிட்டுள்ள புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580138807185
Arockiya Vazhvu Arulum Malai Koyilgal

Read more from R.V.Pathy

Related to Arockiya Vazhvu Arulum Malai Koyilgal

Related ebooks

Reviews for Arockiya Vazhvu Arulum Malai Koyilgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arockiya Vazhvu Arulum Malai Koyilgal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    ஆரோக்கிய வாழ்வு அருளும் மலைக்கோயில்கள்

    Arockiya Vazhvu Arulum Malai Koyilgal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பெருந்தண்டலம் ஸ்ரீ பெருராம ஆஞ்சநேயர் திருக்கோயில்

    திருக்கழுக்குன்றம் ஸ்ரீ திருமலைச் சொக்கம்மன் திருக்கோயில்

    மருங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

    திருமலைவையாவூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்

    ஒரகடம் ஸ்ரீ வாடாமல்லீஸ்வரர் திருக்கோயில்

    வல்லம் ஸ்ரீவேதாந்தீஸ்வரர், ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்கள்

    ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மஸ்வாமி திருக்கோயில்

    திருப்போரூர் ஸ்ரீபாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்

    மருதமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

    ஏலகிரி ஸ்ரீவேலவன் திருக்கோயில்

    குன்றக்குடி முருகன் திருக்கோயில்

    நடுபழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில்

    சித்திரவாடி ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயில்

    புதுப்பாக்கம் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் திருக்கோயில்

    திருக்கழுக்குன்றம் ஸ்ரீ வேதகிரிஸ்வரர் திருக்கோயில்

    குன்றத்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

    சிங்கிரி ஸ்ரீலட்சுமிநரசிம்மஸ்வாமி திருக்கோயில்

    குமரன்குன்றம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயில்

    சிம்மாச்சலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

    போர்ட்பிளேயர் – அந்தமான் ஸ்ரீ வெற்றிமலை முருகன் திருக்கோயில்

    ஆன்மிக அன்பர்களுக்கு,

    வணக்கம். ஆரோக்கிய வாழ்வு அருளும் மலைக்கோயில்கள் என்ற இந்த நூலினை எழுதியதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்த நூலில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபட்டு பின் அத்தலங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து இந்த நூலினை உருவாக்கியுள்ளேன். மலைக்கோயில்களுக்குச் சென்று திரும்பிய பின்னர் மனதில் ஒரு புத்துணர்ச்சி எழுவதை நான் உணர்ந்திருக்கிறேன். மாதத்திற்கொரு முறை அருகில் உள்ள ஏதேனும் ஒரு மலைக்கோயிலுக்குச் சென்று வழக்கத்தைக் கடை பிடியுங்கள். மனதில் நிம்மதி பிறக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும். இந்த நூலினை மின்னூலாக வெளியிட்டுள்ள புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    ஜீன் 2021

    பெருந்தண்டலம் ஸ்ரீ பெருராம ஆஞ்சநேயர் திருக்கோயில்

    E:\All Bakthi Articles\Kumudham Bakthi Special\Perurama Anjaneyar\Perurama anjaneyar moolavar.jpg

    செங்கற்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் தாலுக்காவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், காடுகள், ஏரி, பச்சைப்பசேல் பயிர்கள் இவை அனைத்தும் அமையப் பெற்ற ஒரு கிராமம் பெருந்தண்டலம். ஆஞ்சநேயர் பல திருத்தலங்களில் பால ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், யோக ஆஞ்சநேயர், சஞ்சீவி ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், கணையாழி ஆஞ்சநேயர் என பல திருப்பெயர்களோடு எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இத்தலத்தில் பெருராம ஆஞ்சநேயர் என்ற வித்தியாசமான பெயரில் எழுந்தருளி பக்தர்களைக் காத்து வருகிறார்.

    தலவரலாறு

    E:\All Bakthi Articles\Kumudham Bakthi Special\Perurama Anjaneyar\Perurama anjaneyar steps.jpg

    ஒரு சிறிய குன்றில் அமைந்த படவேட்டம்மன் கோயில் நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக வழிபாட்டில் இருந்தது. இந்த அம்மன் கோயில் நாளடைவில் மெல்ல மெல்ல சிதிலமடைந்தது. அம்மன் கோயிலை புதுப்பிக்க விரும்பிய கிராம மக்கள் ஒருநாள் கூடி விவாதித்தனர். இந்த விவாதத்தின் போது அனைவரும் ஒருமித்த மனதோடு அம்மன் கோயிலை சரி செய்ய வேண்டும் என்றும் மேலும் இந்த குன்றில் ஒரு ஆஞ்சநேயர் சிலையினை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்கள். இது ஆஞ்சநேயரின் விருப்பம் எனக் கருதிய ஊர் மக்கள் அமையவிருக்கும் ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ பெருராம ஆஞ்சநேயர் என்ற திருப்பெயரினைச் சூட்டி கோயில் அமைக்கும் பணிகளைத் துவக்கினார்கள்.

    முதலில் 23 பிப்ரவரி 2013 அன்று பாலஆஞ்சநேயர் சிலை ஒரு சிறிய சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 21 அடி உயரத்தில் ஸ்ரீ பெருராம ஆஞ்சநேயருக்கு ஒரே கல்லில் சிலை வடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவக்கப்பட்டன. ஆறு அடி உயரமுடைய பீடத்தில் இந்த சிலையை வைக்க 19 ஆகஸ்ட் 2013 அன்று முடிவு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.

    E:\All Bakthi Articles\Kumudham Bakthi Special\Perurama Anjaneyar\Bala Anjaneyar.jpg

    இருபத்தியோரு அடி உயரத்தில் அமைந்த பெருராம ஆஞ்சநேயரின் திருவுருவச்சிலை பெருந்தண்டலம் கிராமத்தில் குன்றில் ஆறு அடி உயரமுடைய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 17 ஆகஸ்டு 2014 அன்று மகாகும்பாபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு 04 அக்டோபர் 2014 ல் மண்டல பூஜை நிறைவு பெற்றது.

    கோயில் அமைப்பு

    E:\All Bakthi Articles\Kumudham Bakthi Special\Perurama Anjaneyar\Padavettamman Perurama temple.jpgE:\All Bakthi Articles\Kumudham Bakthi Special\Perurama Anjaneyar\anantha vinayagar.jpg

    ஸ்ரீபெருராம ஆஞ்சநேயரை தரிசிக்க குன்றின் மீது அமைந்த படிக்கட்டுகளில்

    Enjoying the preview?
    Page 1 of 1