Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanmeega Payanangal
Aanmeega Payanangal
Aanmeega Payanangal
Ebook206 pages1 hour

Aanmeega Payanangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது எனது நீண்டநாள் கனவு, இந்த புத்தகம். இயற்கை எழில் கொஞ்சும் அஹோபிலம் மற்றும் காசி கயா அலகாபாத் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு போக விரும்புவர்களுக்கான விரிவான வழிகாட்டி.

மேலும் கும்பகோணத்திற்கு அருகிலும், சென்னைக்கு அருகிலும் அதிகம் வெளியே தெரியாத மிகப் பழமை வாய்ந்த கோவில்களைப் பற்றியும் இதுவரை எங்கும் வெளிவராத தகவல்களுடனும் எழுத்தாளர் தானே நேரில் சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த புத்தகத்தை படிக்கும்போது ஒவ்வொரு கோவிலுக்கும் நேரே சென்று வந்த அனுபவம் கிடைக்கும்.

Languageதமிழ்
Release dateApr 9, 2022
ISBN6580152308316
Aanmeega Payanangal

Related to Aanmeega Payanangal

Related ebooks

Reviews for Aanmeega Payanangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanmeega Payanangal - Kamala Krishnamoorthy

    https://www.pustaka.co.in

    ஆன்மீகப் பயணங்கள்

    Aanmeega Payanangal

    Author:

    கமலா கிருஷ்ணமூர்த்தி

    Kamala Krishnamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-krishnamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. அஹோபிலம் - 1

    2. அஹோபிலம் - 2

    3. அஹோபிலம் – 3

    1. ஜ்வாலா நரசிம்மர்

    2. உக்கிர நரசிம்மர்

    3. மாலோல நரசிம்மர்

    4. வராஹ நரசிம்மர் (குரோத நரசிம்மர்)

    5. காரஞ்ச நரசிம்மர்

    6. பார்கவ நரசிம்மர்

    7. யோகானந்த நரசிம்மர்

    8. சத்திரவட நரசிம்மர்

    9. பாவன நரசிம்மர்

    10. கோதண்ட ராமஸ்வாமி கோவில்

    4. வாரணாசி / காசி சுற்றுலா - 1

    5. வாரணாசி / காசி சுற்றுலா - 2

    1. சங்கட மோட்ச ஹனுமான் கோவில்

    6. வாரணாசி / காசி சுற்றுலா - 3

    2. அன்னபூரணி

    7. வாரணாசி / காசி சுற்றுலா - 4

    3. கயா

    8. வாரணாசி / காசி சுற்றுலா - 5

    4. புத்த கயா

    9. வாரணாசி / காசி சுற்றுலா - 6

    5. திரிவேணி சங்கமம்

    10. வாரணாசி / காசி சுற்றுலா - 7

    6. டெல்லி

    11. வாரணாசி / காசி சுற்றுலா - 8

    7. மதுரா

    12. வாரணாசி / காசி சுற்றுலா - 9

    8. சாரநாத்

    13. தமிழகத்திற்கு அருகே உள்ள கோவில்கள்

    1. நாகலாபுரம்

    2. ராமகிரி

    3. நாராயண வனம்

    4. அப்பளாய குண்டா

    5. ஸ்ரீனிவாச மங்காபுரம்

    6. வரசித்தி சுயம்பு விநாயகர்

    7. அரகொண்டா ஆஞ்சநேயர்

    14. தமிழகத்தில் உள்ள கோவில்கள்

    1. சிங்கப் பெருமாள் கோவில்

    2. பைரவர் கோவில்

    3. தேவி கருமாரி அம்மன் கோவில்

    4. திருவடிசூலம் வெங்கடாஜலபதி

    உத்திரமேரூர்

    5. சுந்தர வரதராஜ பெருமாள் கோவில்

    உத்திரமேரூர்

    6. முருகன்

    7. இலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் நரசிங்கபுரம்.

    பூங்கா நகர்

    8. ஜலநாராயணப்பெருமாள்

    திருவாலங்காட்டில் உள்ள

    9. அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோவில்

    திரிபுரசுந்தரி சமேத

    10. திரிபுராந்தகேஸ்வரர் சுவாமி திருக்கோயில்

    11. அருள்மிகு ஸ்ரீ கிரி ராஜ கன்னிகாம்பாள்

    சமேத ஸ்ரீ ஜலநாத ஈஸ்வரன் கோவில்

    தக்கோலம்.

    15. கும்பகோணத்தை சுற்றியுள்ள மிகப் பழமையும் சக்தியும் வாய்ந்த கோவில்கள்

    1. திருநாகேஸ்வரம்

    2. ஒப்பிலியப்பன் கோவில்

    தேப்பெருமா நல்லூர்

    3. சிவன் ஆலயம்

    4. கோவிந்தபுரம் போதேந்திரர் சன்னதி

    5. சூரியனார் கோவில்

    6. திருமங்கலக்குடியில் பிராண நாதேஸ்வரர் கோவில்

    16. ஈச்சங்குடி, காஞ்சி மஹா பெரியவா

    17. தென் குடி திட்டை தட்சிணா மூர்த்தி சொரூபமாம் ஆலங்குடி குரு

    18. மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்

    வேப்பத்தூர்

    19. திருவெள்ளியங்குடி திருவிடை மருதூர்

    20. திருமீயச்சூர் மேக நாத சுவாமி ஆலயம்

    21. திருவிசநல்லூரிலிருந்து இருந்து வேப்பத்தூர் சிவயோக நாதர் ஆலயம்

    22. கற்கடேஸ்வரர் திருக்கோவில் திருத்தேவன்குடி

    என்னுரை

    இது எனது நீண்டநாள் கனவு, இந்த புத்தகம். இயற்கை எழில் கொஞ்சும் அஹோபிலம் மற்றும் காசி கயா அலகாபாத் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு போக விரும்புவர்களுக்கான விரிவான வழிகாட்டி.

    மேலும் கும்பகோணத்திற்கு அருகிலும், சென்னைக்கு அருகிலும் அதிகம் வெளியே தெரியாத மிகப் பழமை வாய்ந்த கோவில்களைப் பற்றியும் இதுவரை எங்கும் வெளிவராத தகவல்களுடனும் எழுத்தாளர் தானே நேரில் சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

    இந்த புத்தகத்தை படிக்கும்போது ஒவ்வொரு கோவிலுக்கும் நேரே சென்று வந்த அனுபவம் கிடைக்கும்.

    சமீபத்தில் மறைந்த எனது தாயார் விஜயலெஷ்மி அம்மாள் அவர்களுக்கு இந்த புத்தகத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.

    கமலா கிருஷ்ணமூர்த்தி

    1.3.2022

    கைபேசி 8072580858

    kamlawanu@yahoo.com

    வளசரவாக்கம்,

    சென்னை.

    1. அஹோபிலம் - 1

    சென்னைக்கு அடுத்த மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் உள்ள திவ்ய தேசமான அஹோபிலம் பற்றி விரிவாக பார்க்கலாம். காலையிலேயே ஒரு ஐந்து மணிவாக்கில் கிளம்பினால் வழியில் ஒரு இடத்தில் காலை டிபன் முடித்து பயணம் தொடங்கலாம்.

    சென்னையில் இருந்து கிளம்பினால் திருத்தனி, ரேணி குண்டா, கடப்பா பிறகு அஹோபிலம் மதியம் ஒரு மணிக்கு வந்து சேரலாம். ஊர் ஒன்றும் பெரிய ஊர் இல்லை. நாம் நினைக்கும்படி பெரிய ஹோட்டல் எல்லாம் கிடையாது. தங்குவதற்கு கூட பெரிய லாட்ஜ்ம் கிடையாது. ஆந்திராவில் திருப்பதியும் அஹோபிலமும் இரண்டு சக்தி வாய்ந்த முக்கியமான திவ்ய தேச திருத்தலங்கள்.

    இந்த அஹோபிலம் ஒரு பரிகாரஸ்தல திவ்ய தேசம். மிக மிக சக்தி வாய்ந்த கோவில். மலைச் சார்ந்த பகுதி சகல பாவமும் தோஷமும் நிவர்த்தி ஆகும் ஸ்தலம். இது ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது. அஹோ என்றால் சிங்கம் பிலம் என்றால் குகை. சிங்க குகை என்று பொருள். கருப்பு கற்களால் ஆன குகை.

    மூலவர் பிரகலாத வரதன். நரசிம்மன் பிரகாலதனுக்காக வெளிப்பட்ட தூண் உக்கிர ஸ்தம்பம் இன்னும் இப்பவும் அப்படியே இங்கே இருக்கிறது. திருமாலை நரசிம்ம அவதாரத்தில் பார்க்க விரும்புவதாக கருடன் கேட்க அவரும் அவ்வாறே,

    நவ நரசிம்மராக அவதரித்த இடமே அஹோபிலம். வைணவ மடங்களிலேயே அஹோபில மடமே பெரியது.

    இங்கே இரு நிலைகளில் நரசிம்மர் ஆலயம் உள்ளது.

    கீழ் நிலையில் பிரகலாத வரதர் மேல் நிலையில் அகோர நரசிம்மர்.

    கீழேயிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் 3000 அடி உயரத்தில் உள்ளதே அஹோபிலம். நவ நரசிம்மரும் இம்மலையின் மீதும் மலையை சுற்றியுமே வீற்றிருக்கிறார்கள்.

    இங்கே வருவதற்கும் இந்த நவ நரசிம்மரை தரிசிக்கவும் நிச்சியம் மூன்று விஷயங்கள் கண்டிப்பாகத் தேவை.

    1. எப்படியும் இவரை பார்த்தே தீர வேண்டும் என்கிற மன உறுதி.

    2. உடல் வலிமை.

    3. கொடுப்பினையும் சேர்த்துக்கலாம்.

    ஏன் என்றால் யாராகயிருந்தாலும் நடந்தே தீரவேண்டும். மலை ஏறியே ஆகவேண்டும். நாம் எவ்வளவோ கோவில்களுக்கு போயிருக்கலாம் ஆனால் இங்கே மட்டும் இவரை பார்க்க கொடுப்பினை வேண்டும். இவரை பார்த்தே தீரவேண்டும் என்கிற உண்மையான ஆர்வமும் பக்தியும் உடல் நிலையும் வேண்டும்.

    நரசிம்மர் அவதாரம் எடுத்த தூணும் பிரஹல்லாதன் வழிபட்ட நரசிம்மனும் இன்னும் அங்கே உள்ளன. இவர் தூணில் இருந்து வெளிப்பட்டு ஹிரண்ய கசிபுவை வதம் செய்த பின் கையை அலம்பிய சிறு குட்டை அருகிலேயே உள்ளது. அதற்கு ரத்த குண்டு என்ற பெயர். இதில் தண்ணீர் சிவப்பாக இருக்கும். 3000 அடி உயர மலை மீது எப்படி சிறு தொட்டி போன்று பாறை குடைந்து தண்ணீர் இருக்கும். எல்லாமே தானே உருவானதுதான். எல்லாமே நடந்ததுக்கு சாட்சியும் இதெல்லாம்தான்.

    அதிகமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் அப்படியே இயல்பாக இருக்கிறது. அப்படியும் கம்பி வேலி போட்டு உள்ளார்கள். இந்த ரத்த குண்டின் தண்ணீர் அருகிலேயே சற்று கீழே வடிந்து சொட்டுகிறது. அதை பாட்டிலில் பிடித்து வீட்டில் வைத்துக்கொண்டு வீட்டில் தெளித்தாலோ வீட்டை சுற்றி தெளித்தாலோ எந்தவித தீய சக்தியும் நம்மையும் நம் வீட்டையும் அண்டாது. இந்த புனித நீரை சிறிது பருகினால் போதும் அனைத்து வியாதிகளும் பஞ்சாகப் பறந்துவிடும்.

    உனக்கு எப்போது சிக்கல் வந்தாலும் உன் மனது சொல்வதை மட்டுமே கேள். ஏன் என்றால் உன் அறிவு எப்படி வேண்டுமானாலும் யோசிக்கும். ஆனால் உன் மனது உண்மையை மட்டுமே நேசிக்கும்.

    2. அஹோபிலம் - 2

    அஹோபிலத்தில் அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கண்கள் விரிய வாய் பிளக்க வழியெங்கும் ஆச்சர்யமும், அதிசயமும்தான்.

    கீழே உள்ள லெஷ்மி நரசிம்மர் ஆலயம் முன்னால் ஒரு 85 அடி உயர ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று இருக்கிறது. இதற்கு ஜெய ஸ்தம்பம் அதாவது வெற்றித் தூண் என்றே அழைக்கிறார்கள். இத்தூண் பூமிக்கு அடியில் 30 அடி ஆழத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை.

    மேலும் நாம் இந்தத் தூணின் முன் நின்றோ அமர்ந்தோ மனமுருக வேண்டினால் நாம் நினைத்தது வேண்டியது உடனே நிறைவேறுமாம். ராமன் சீதை காணாமல் போனபோது இந்த தூணின் முன்

    Enjoying the preview?
    Page 1 of 1