Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

108 Divya Desa Ulaa – Part 4
108 Divya Desa Ulaa – Part 4
108 Divya Desa Ulaa – Part 4
Ebook593 pages2 hours

108 Divya Desa Ulaa – Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதற்கு முந்தைய மூன்று பாகங்களில் மொத்தம் 84 திவ்ய தேசத் திருத்தலங்களை நாம் தரிசித்தோம். இப்போது இந்த நிறைவான 4ம் பாகத்தில், கேரளம், ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களில் கோவில் கொண்டிருக்கும் பெருமாள்களை 22 கோவில்களில் நாம் தரிசிக்கப் போகிறோம்.

ஆக மொத்தம் 106 திருத்தலத் தரிசனங்களாக நிறைவு செய்திருக்கிறோம்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130606081
108 Divya Desa Ulaa – Part 4

Read more from Prabhu Shankar

Related to 108 Divya Desa Ulaa – Part 4

Related ebooks

Reviews for 108 Divya Desa Ulaa – Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    108 Divya Desa Ulaa – Part 4 - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    108 திவ்ய தேச உலா - பாகம் 4

    108 Divya Desa Ulaa - Part 4

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    மலைநாட்டு திவ்ய தேசங்கள் - முன்னுரை

    83. திருவெண்பரிசாரம்

    84.1. திருவட்டாறு

    84.2. திருவட்டாறு

    85. திருவனந்தபுரம்

    86. திருப்புலியூர்

    87. திருச்செங்குன்றூர்

    88. திருவண்வண்டூர்

    89. திருவல்லவாழ்

    90. திருவாரண்முளா

    91.1. திருக்கடித்தானம்

    91.2. திருக்கடித்தானம்

    92. திருகாட்கரா

    93. திருமூழிக்களம்

    94. திருவித்துவக்கோடு

    95. திருநாவாய்

    96.1. அஹோபிலம்

    96.2. அஹோபிலம்

    96.3. அஹோபிலம்

    96.4. அஹோபிலம்

    97.1 திருமலை

    97.2. திருமலை

    97.3. திருமலை

    97.4. திருமலை

    98.1. துவாரகை

    98.2. துவாரகை

    98.3. துவாரகை

    99.1. அயோத்தி

    99.2. அயோத்தி

    100. நைமிசாரண்யம்

    101.1. வடமதுரை

    101.2. வடமதுரை

    101.3. வடமதுரை

    102.1. கோகுலம் திருஆய்ப்பாடி

    102.2. கோகுலம்

    103. தேவப்ரயாகை

    104. திருப்ரீதி

    105.1. பத்ரிநாத்

    105.2. பத்ரிநாத்

    105.3. பத்ரிநாத்

    105.4. பத்ரிநாத்

    106.1. சாளக்கிராமம்

    106.2. சாளக்கிராமம்

    107. திருப்பாற்கடல்

    108. திருப்பரமபதம்

    *****

    மலைநாட்டு திவ்ய தேசங்கள் - முன்னுரை

    மலைநாட்டு திவ்ய தேசங்களாக ஆழ்வார் பெருமக்கள் மங்களாசாசனம் செய்து நமக்கெல்லாம் அறிவித்திருப்பது மொத்தம் 13 பெருமாள் கோயில்களை.

    பொதுவாகவே இந்த திவ்ய தேசங்கள் என்றில்லாமல், கேரளத்திலுள்ள எல்லா கோயில்களும் மிகவும் எளிமையாகவும், அதேசமயம் தூய்மையாகவும் விளங்குவது கண்களுக்கு முதல் குளிர்ச்சி. அதற்குப் பிறகு இறை தரிசனம், கண்களோடு, மனதுக்கும், அறிவுக்கும், ஆரோக்கியமான ஆன்மிக ஆகாரம். நிரந்தரமான பசுமைச் சூழலும், அங்கே வீசி வரும் தென்றல் சுமந்துவரும் திருக்குளத்துத் தண்மையும், மனதை அங்கெங்கென்று திரும்பிவிடாதபடி கட்டி வைப்பது நிஜம்; அனுபவத்தால் மட்டுமே அதை உணரமுடியும்.

    ராஜகோபுர கம்பீரமெல்லாம் இல்லை, ஆனால், கோயிலை முற்றிலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கண்ணியம் இந்தக் கோயிலைப் பயன்படுத்துபவர்களிடம் நிறைவாக இருப்பது உண்மை.

    திருவண்பரிசாரம்

    திருவனந்தபுரம்

    திருவட்டாறு

    திருச்செங்குன்றூர்

    திருப்புலியூர்

    திருவல்லவாழ்

    திருக்கோடித்தனம்

    திருவண்வண்டூர்

    திருவாறன்விளை

    திருமூழித்தானம்

    திருநாவாய்

    திருவித்துவக்கோடு

    *****

    83. திருவெண்பரிசாரம்

    ஏழு ரிஷிகளின் ஏக்கம் தீர்த்த எம்பெருமான்!

    திருவண்பரிசாரம் என்ற இத்திருத்தலம், மலைநாடு என்ற அந்நாளைய பூகோள அமைப்பில் கேரளத்துக் கோயிலாகத் திகழ்ந்தாலும், இப்போது தமிழ்நாட்டு எல்லைக்குட்பட்ட நாகர்கோவிலிலிருந்து நான்கு கி.மீ. தொலைவிலுள்ளது. ஆகவே இப்போதைய மாநில எல்லை வரையறைக்குட்பட்டு இக்கோயில் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகிறது!

    வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என்

    திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் செய்வதென்

    உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு

    ஒருபாடுழல்வான் ஓரடியாணுமுள னென்றே

    - என்று நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் திருவண்பரிசாரம். (ஆனால், திருப்பதிசாரம் என்றே அங்குள்ளவர்களால் எளிதில் அடையாளம் காணப்படும் தலம் இது. திருவண்பரிசாரம் என்றால் பொதுவாக அங்கே யாருக்கும் புரிவதில்லை.)

    நம்மாழ்வார் பாடிய இந்த ஒரே பாசுரமும் அவரது ஏக்கத்தையே வெளிப்படுத்துகிறது. ஆழ்வார்திருநகரி திருத்தலத்தில் ஒரு புளிய மரப் பொந்துக்குள் பத்மாசனத்தில், யோக முத்திரையுடன் திகழ்ந்த இந்த ஆழ்வார், திருவண்பரிசாரத்திலிருந்து வரும் பக்தர்களோ அல்லது இங்கிருந்து அங்கே செல்லும் பக்தர்களோ யாரும் அங்குள்ள திருவாழ் மார்பனிடம் என்னைப் பற்றி சொல்ல மாட்டேன் என்கிறீர்களே, ஏன்? என்று ஏங்கிக் கேட்கிறார். பேரழகு மிக்க திருச்சக்கரம், சங்கைத் தலையில் சுமந்தபடி, உன்னைக் காண ஏங்கி, அலைந்து, வருந்தி நான் நிற்கிறேன் என்பதை அந்தப் பெருமாளிடம் சொல்ல யாருமில்லையே, என் மனவருத்தம் அவன் அறிவானா? என்றும் கேட்டு ஆதங்கப்படுகிறார்.

    நம்மாழ்வார் இப்படி ஆதங்கப்பட காரணம் உண்டு. இவருடைய தாயார் உடையநங்கை பிறந்த இந்தத் திருவண்பரிசாரம். ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த காரி என்ற வைணவப் பெருமானை மணந்து கொண்டு புகுந்த வீடு சென்றவர் உடையநங்கை. தனக்குப் புத்திரப் பேறு அருளுமாறு நாற்பத்தொரு நாட்கள் விரதமிருந்து, ஆழ்வார் திருநகரி தலத்துப் பெருமாள் ஆதிநாதனை வேண்டிக்கொண்டார் அவர். அதன் பிறகு திருவண்பரிசாரத்துக்கு வந்து 41 நாட்கள் திருவாழ்மார்பனை எண்ணி தவமிருந்தார். அதன் பயனாக அவதரித்தவர்தான் நம்மாழ்வார். பிறந்தது முதல் எந்த இயக்கமும் இல்லாமல், பெற்றோருக்குப் பெருந்தவிப்பைத் தந்தவர் இவர். ஆனால், மழலை வயதில் மெல்ல நகர்ந்து, நகர்ந்து பக்கத்திலிருந்த ஒரு புளியமரப் பொந்தினுள் சென்று அமர்ந்து கொண்டார். இப்படி இவர் வாசம் செய்தது பதினாறு ஆண்டுகள்! மதுரகவியாழ்வார் இத்தலத்துக்கு வந்து நம்மாழ்வார் என்ற இந்த மகானை அடையாளம் கண்டுகொண்டு, அவரது இறை மதிப்பை உணர்ந்து, குருவாக ஏற்றுக் கொண்டார். எந்தப் பெருமாளையும் பாடாமல், குருநாதரைப் பற்றி மட்டுமே பாக்கள் இயற்றிய அரும்பெரும் சீடர், மதுரகவியாழ்வார்.

    திருவாழ்மார்பன்

    பெருமாள் பெரிதும் வியந்தார். தன்னைப் போற்றி ஒரு பாடல் கூட இயற்றாத மதுரகவி தன் குருநாதரை மட்டுமே போற்றிப் பாடல்கள் ஆக்கியிருக்கிறார் என்பதால்தான் அந்த வியப்பு! அதோடு, அத்தகைய நம்மாழ்வார் எத்துணை புலமை வளம் நிரம்பப்பெற்றிருப்பார் என்பதையும் கணித்தார். பல்வேறு திவ்யதேசங்களில் கோயில் கொண்டிருந்த பெருமாள்கள் எல்லோரும் நம்மாழ்வாரிடம் வந்து தன்னைப் பற்றி பாடல் இயற்றுமாறு கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்று புராணம் சொல்லி அறியும்போது நம்மாழ்வாரின் பெருமையை என்னென்று வியப்பது! தன் நடக்க இயலாத தன்மையை உணர்ந்து, இப்படி எல்லா பெருமாள்களும் தன்னை வந்துப் பார்த்து, பாசுரம் எழுதிக்கொண்டு போன அருளைக் கண்டு நெகிழ்ந்து உருகினார் நம்மாழ்வார். ஆனாலும், திருவண் பரிசாரம் என்ற தன் தாயாரின் பிறந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் திருவாழ்மார்பன் மீது இவருக்கு ஏதோ வருத்தம் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் யாராவது அந்தப் பெருமாளிடம் என்னைப் பற்றிச் சொல்ல மாட்டீர்களா என்று ஏக்கமாகக் கேட்கிறார்.

    பிரதான வளைவைக் கடந்து கோயிலுக்குள் செல்வோம். நேரே தோன்றும் கருவறை விமானத்தை பிராகாரச் சுற்றாக தரிசிக்கலாம். இடப்புறம் மூலவர், பின்புறம் சாந்த யோக நரசிம்மர், வலப்புறம் தட்சிணாமூர்த்தி ஆகியோர் அந்த விமானத்தில் காட்சி தருகிறார்கள்.

    அனுமர் - லட்சுமணன் - சீதை

    திருவாழ்மார்பன் பெருமாள் கருவறைக்கு வலது பக்கம் ராமர்-சீதை-லட்சுமணர்-அனுமன் தனிச் சந்நதியில் கொலுவிருக்கிறார்கள். இவர்களுடன் விபீஷ்ணர், அனுமன், குலசேகர ஆழ்வார், அகத்தியரையும் சேர்த்து தரிசிக்கலாம். பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார்.

    சோமலட்சுமி தீர்த்தம்

    கருவறைச் சுற்றில் கன்னிமூல விநாயகர் தரிசனமளிக்கிறார். அருகிலுள்ள சொர்க்க வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5.30 முதல் பகல் 1 மணிவரைதான் திறந்திருக்கும் என்கிறார்கள்; மாலையில் திறப்பதில்லையாம். இங்கு பகல் பத்து கிடையாது என்றும், ராப்பத்து மட்டும்தான் அனுஷ்டிக்கப்படுகிறது என்றும் தகவல் கிடைத்தது. வெள்ளிக்கிழமைகளில் கருட சேவை விசேஷம்.

    அகத்தியர் – குலசேகர ஆழ்வார்

    இங்கே ஒரு நடராஜர் விக்ரகத்தைப் பார்த்த போது வியப்பாக இருந்தது. மைனர் ஜடயாபுரம் என்ற தலத்தில் உள்ள கோயிலிலிருந்த இச்சிலை இங்கே பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுவதாகச் சொன்னார்கள்.

    கருவறையில் திருவாழ்மார்பன், நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரதாரியாக, அமர்ந்த கோலத்தில், நெடிதுயர்ந்த தோற்றமாகக் காட்சியளிக்கிறார். அவரைச் சுற்றிலும் சப்த ரிஷிகள். இங்கே ரிஷிகள் எப்படி வந்தார்கள்?

    இந்த ஏழு ரிஷிகளும் திருமாலை தரிசிக்க வேண்டி தவமிருந்தார்கள். மலய பர்வதத்தின் தெற்குப் பகுதியில், ஞானாரண்யம் என்ற வனத்தில், பிரக்ஞா நதிக்கரையில் அத்ரி முனிவரின் தவச்சாலை ஒன்று இருந்தது. அங்கேதான் இவர்கள் தவம் மேற்கொண்டிருந்தார்கள். அப்போது ஓர் அசரீரி கேட்டது: இங்கிருந்து வடமேற்கு திசையில் சென்றால், விஷ்ணு பாதம் என்று சொல்லப்படும் சோமதீர்த்தம் ஒன்று உள்ளது. அந்தக் கரையில், அரசமரத்தடியில் ஓர் உயரிய தலம் அமைந்திருக்கிறது. அங்கு சென்று தவமியற்றினீர்களானால் உங்கள் எண்ணம் ஈடேறும்.

    உடனே முனிவர்கள் அந்தத் தலத்துக்குச் சென்றார்கள்; தவமிருந்தார்கள்; அசரீரி பலிக்கக் கண்டார்கள். ஆமாம், அங்கே அவர்கள் எதிர்பார்த்த மஹாவிஷ்ணு நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் அவர்களுக்கு தரிசனம் வழங்கினார். இந்தப் பெருமாள் திருவாழ்மார்பன் என்று அழைக்கப்படுவதையும் அறிந்து கொண்ட அவர்கள், தங்களுக்குக் காட்சி கொடுத்ததைப் போலவே அனைத்து பக்தர்களுக்கும் இதே திருவாழ்மார்பனாக அவர் காட்சியளித்து அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு சாட்சியாக இப்போதும் அவர்கள் அவருடைய கருவறையில் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்.

    உடையநங்கை - உற்சவர்

    ஹிரண்ய சம்ஹாரத்துக்குப் பிறகு நரசிம்ம மூர்த்தியின் அடங்காத கோபம் அவரைப் பல இடங்களுக்கும் அலைக்கழிக்க, அப்படி இந்தத் தலத்துக்கு வந்த அவரை மஹாலட்சுமி எதிர்கொண்டாள். உடனேயே சாந்தமானார் நரசிம்மர். அதுமட்டுமல்ல, இதே தலத்தில் அந்தத் திருமகளைத் தன் மார்பகத்தில் ஏந்திக்கொண்டார். அதனாலேயே திருவாழ்மார்பன் என்ற பெயரும் கொண்டார். இப்படி பெருமாளோடு ஒன்றி விட்டதால், இக்கோயிலில் தாயாருக்கென்று தனிச் சந்நதி இல்லை.

    இந்தக் கருவறைக்கு வலது பக்கத்தில், ராமன் சந்நதி கொண்டிருப்பதற்கு விபீஷணன்தான் காரணம். அரங்கனை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்காக விபீஷணன் முயன்றபோது ஸ்ரீரங்கத்திலேயே அவர் நிரந்தரமாகப் பள்ளி கொண்டுவிட, ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடனும் அவன் இத்தலம் வழியாக வந்தான். அப்போது அவனுக்குக் காட்சி கொடுத்தார் திருவாழ்மார்பன். 'உன் முக-அக வாட்டத்தைப் போக்க நான் உதவலாமா?' என்று பரிவுடன் வினவினார்.

    தன் குறையை யாரிடம் கொட்டித் தீர்ப்பது என்று காத்திருந்த விபீஷணன், 'என்னால் ராமபிரானை மறக்க முடியவில்லை. இங்கே அவரை மீண்டும் தரிசிக்க விரும்புகிறேன். தங்களால் உதவ முடியுமா?' என்று யாசித்தான்.

    உடனே அங்கே வில்-அம்புடன் ராமர் தோன்றினார். உடன் சீதை, லட்சுமணன், அனுமன்! என்ன திவ்யத் திருக்காட்சி இது என்று புளங்காகிதம் அடைந்தான் விபீஷணன். அவனுக்கு இவ்வாறு காட்சியளித்த ராமன்தான் இப்போது நம்மையும் பார்த்துப் புன்முறுவல் பூக்கிறார்.

    இங்கே அகத்தியரும் நமக்கு தரிசனம் தருவதற்கு நாம் ஆஞ்சநேயருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஆமாம், அனுமனுடைய அன்பான வேண்டுகோளுக்கிணங்க, அகத்தியர் இங்கே ராமாயண மகாகாவியத்தை அருளினார்!

    குலசேகர ராஜன் என்ற குலசேகர ஆழ்வார், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்தக் கோயிலைப் புனரமைத்திருக்கிறார். மதில் சுவர்கள் எழுப்பி, வாகனங்களை உருவாக்கி, கொடிக்கம்பம் நிர்மாணித்து, கும்பாபிஷேகமும் செய்வித்து மகிழ்ந்திருக்கிறார். இந்த நன்றியை மறவாமல், அவருக்கும் ஒரு சிலை உருவாக்கி அகத்தியருக்குப் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

    கோயிலுக்கு வெளியே வந்தால் எதிரே சோமதீர்த்தம். அதற்கு இடப்புறம் ஒரு அரசமரம், அதனடியில் கட்டப்பட்ட மேடையில் விநாயகர் மற்றும் நாகர்கள் அமைந்திருக்கிறார்கள். சோமதீர்த்தக் கட்டத்திற்குள் சூரியநாராயணன் தனியே சிறு சந்நதியில் நின்றிருக்கிறார். பக்கத்தில் சுதைச் சிற்பமாக அக்னிமாடன்.

    உடையநங்கை - மூலவர்

    கோயில் மதில் சுவரைச் சுற்றி வந்தால் வடக்கே உடையநங்கையார் அவதரித்தப் பகுதியைக் காணலாம். நம்மாழ்வாரின் தாயாரின் இந்த 'வீடு', இப்போது ஒரு பஜனை மடமாகத் தன் பணியை ஆற்றி வருகிறது. 'நம்மாழ்வார் தாயகம்' என்றழைக்கப்படும் இத்தலத்தில் உடையநங்கை மூலவராகவும், உற்சவராகவும் வழிபடப்படுகிறார். நாலாயிர திவ்ய பிரபந்தங்களையே மீட்டுக் கொடுத்தப் பேரருளாளன் நம்மாழ்வாரின் தாய் இவர் என்று நினைக்கும்போது எத்தகைய பேறு பெற்றிருக்கிறார் இவர் என்ற நெகிழ்ச்சி கண்களில் நீர் சுரக்கச் செய்கிறது.

    நாகர்கோவில்-திருநெல்வேலி பாதையில் நாகர்கோவிலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருவண்பரிசாரம் என்ற திருப்பதிசாரம்.

    திருவண்பரிசாரம் சென்று திருவாழ்மார்பனை தரிசிக்கும் வரையில் அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:

    விக்யாதே ஸிதவாஜிஸார நகரே ஐந்த்ரே விமோநோத்தமே

    ஸ்ரீ வக்ஷாஸ்த்தவதுலோஹரி: கமலயா லக்ஷ்மீ ஸரஸ்தீரக:

    ஆஸீநோ விநதா ஸுதார்ச்சித பதத்வந்த்வ: புரஸ்தாந்முகோ

    யஸ்தஸ் யாங்க்ரி ஸரோரு ஹஸ்ய மதுபோ பூயாந் மநோ மேஸதா

    - ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்

    பொதுப் பொருள்: திருவண்பரிசாரம் என்னும் இத்திவ்யதேசத்தில் விளங்கும் திருவாழ்மார்பனே நமஸ்காரம். கமலவல்லித் தாயாருடன், இந்திர கல்யாண விமான நிழலில், சோமலக்ஷ்மி தீர்த்தக்கரையில், கிழக்கு நோக்கிய அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் எம்பெருமானே நமஸ்காரம். விநதையின் மைந்தனான கருடனால் அர்ச்சிக்கப் பெற்றவனே, திருவாழ்மார்பா, நமஸ்காரம்.

    கடன் நிவாரண (ருண விமோசன) ஸ்தோத்திரம்

    108 திவ்யதேச உலா-'தஞ்சை மாமணிக்கோயில் தொடர்ச்சி' அத்தியாயத்தில், கடன் தொல்லை நீக்கும் நரசிம்மர் ஸ்தோத்திரத்தைப் பிரசுரித்திருந்தோம். அந்த கல்வெட்டு வரிகள் தெளிவாகப் புரியவில்லை என்றும், எளிதாகப் படிக்கும் வகையில் மீண்டும் வெளியிடுமாறும் பல வாசகர்கள் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்காக இதோ அந்த ஸ்தோத்திரம்:

    தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்|

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே||

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்|

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே||

    ஆந்த்ரமாலாதரம் ஸங்க சக்ராப்ஜாயுத தாரிணம்|

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே||

    ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாஸனம்|

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே||

    ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாஸனம்|

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே||

    ப்ரஹலாத வரதம்ஸ்ரீஸம் தைத்யேஸ்வர விதாரினம்|

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே||

    க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்|

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே||

    வேதவேதாந்த யக்ஞேஸம் ப்ரஹமருத்ராதிவந்திதம்|

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே||

    ய இதம் படதே நித்யம் ருணமோசந ஸம்ஸ்ஞிதம்|

    அந்ருணி ஜாயதே ஸத்யோ தனம் ஸீக்ரமவாப்நுயாத்|

    ***

    எப்படிப் போவது?

    திருநெல்வேலி-நாகர்கோயில் பாதையில் நாகர்கோயிலுக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாழ்மார்பன் திருக்கோயில்.

    எங்கே தங்குவது?

    நாகர்கோயிலில் தங்கிக்கொள்ளலாம். அவரவர் தேவைக்கேற்ப தங்கும் விடுதிகள் உள்ளன. உணவு வழங்கவும் உணவு விடுதிகள் உள்ளன.

    கோயில் திறந்திருக்கும் நேரம்?

    காலை 5.00 முதல் 10.30 மணிவரையிலும், மாலை 5.30 முதல் 18.00 மணிவரையிலும்.

    முகவரி:

    திருவாழ்மர்பான் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர்கோயில் வழி, கன்னியாகுமரி மாவட்டம் -629901

    கோயில் தொடர்புக்கு:

    9442427710

    *****

    84.1. திருவட்டாறு

    ஆனந்த வாழ்வளிக்கும் ஆதிகேசவப் பெருமாள்!

    இந்த திருவட்டாறு திவ்ய தேசமும் இப்போதைய மாவட்ட எல்லைப் பிரிப்பால் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், புராதன சம்பிரதாயப்படி மலைநாட்டு திவ்ய தேசமாகத்தான் கருதப்பட்டு வருகிறது. நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் இது.

    என் நெஞ்சத்து உள்இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவைமொழிந்து

    வன் நெஞ்சத்து இரணியனை மார்பு இடந்த வாட்டாற்றன்

    மன் அஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காய் படைதொட்டான்

    நல் நெஞ்சே! நம்பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே

    - என்பது இத்தலப் பெருமானைப் புகழ்ந்த அவருடைய பத்துப் பாசுரங்களில் ஒன்று. 'எல்லையற்ற தன் புகழைப் பாடும் இப்பாசுரங்களை இயற்ற உந்தியவன், என் இதயத்துள் நிலையாய் நின்றிடும் எம்பெருமான்தான். கொடிய அரக்கனான ஹிரண்யனின் நெஞ்சைப் பிளந்த பராக்கிரமன் அவன். தன் சபதத்தையும் கைவிட்டு, தர்மவான்களாகிய பாண்டவர்களைக் காக்கும் பொருட்டு தன் சக்கரப் படையைக் கையிலெடுத் தவன். அந்தப் பேரருள் பெருமாள், திருவட்டாறு என்ற தலத்தைத் தன் வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறான். அடியவர்களாகிய நமக்கு அந்த அருளாளன் பெரும்பேறு அளிப்பான்' என்கிறார் ஆழ்வார்.

    பிரம்மன் ஒரு நெடிய யாகம் மேற்கொண்டான். திருவனந்தபுரத்துக்கு அருகே பொன்பரணை என்ற இடத்தில் நடைபெற்ற இந்த யாகத்துக்கு கேசி என்ற அரக்கன் பெரும் இடையூறு தந்தான்; துன்பம் விளைவித்தான். பிரம்மனை நோக்கி தவமிருந்து பிரம்மனிடமே வரங்கள் பெற்று, இப்போது அதே பிரம்மனுக்கே கேடு விளைவிக்கத் துணிந்தான் அந்த அரக்கன். தான் மட்டுமல்லாமல், பிற எல்லா தேவர்களும் அவனால் கொடுமைப் படுத்தப்படுவதைக் காணச் சகியாத பிரம்மன், மஹாவிஷ்ணுவை சரணடைந்தான்.

    ஆதிகேசவப் பெருமாள்

    உடனே மஹாவிஷ்ணு உதவிக்கு வந்தார். கேசி பெற்றிருந்த வரங்களில் முக்கியமான ஒன்று, அவன் உடலிலிருந்து சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் அதே ஆற்றலுள்ள ஒவ்வொரு கேசி தோன்றுவான் என்பதுதான். ஆகவே அவனை ஆயுதத்தால் தாக்கிப் போரிட முடியாது. வேறு உத்தியைத்தான் கையாளவேண்டும். இதற்கு பெருமாள் தேர்ந்தெடுத்த போர்முறை, மல்யுத்தம். அவனுடன் மோதிய அவர், அவனைக் கீழே தள்ளி, அவன் கொஞ்சமும் அசைய முடியாத படி அவன் மீது சயனித்துவிட்டார். இதைக் கண்டு பதறிய கேசியின் மனைவி அசூரி, கங்கை நதியை வேண்டிக்கொண்டாள். கங்கை வெள்ளமாகப் பெருகி வந்தால், அதில் அலைக்கழிக்கப்பட்டு மஹாவிஷ்ணு தன் கணவனை விடுதலை செய்துவிடுவார் என்று நம்பினாள் அவள். அவளுக்குக் கொடுத்த வாக்குப்படி பாய்ந்தோடி வந்தாள் கங்கை. கூடவே துணைக்கு தாமிரபரணி ஆற்றையும் அழைத்துக் கொண்டாள். இருவருமாக, கேசியைக் காப்பாற்ற ஓடோடி வந்தார்கள். இதைப் பார்த்த நிலமகள் கேசிக்கு மட்டுமல்லாமல், தன் நாயகனுக்கும் ஆபத்து வருமோ என்று அஞ்சினாள். உடனே அவ்விருவருமிருந்த பூமிப் பகுதியை மட்டும் அப்படியே உயர்த்தினாள். அந்த மேட்டைத் தாண்ட முடியாமல் திகைத்தன இரு நதிகளும். எம்பெருமானின் சக்திக்கு முன்னால் தம் முயற்சிகள் - தவறான வழிகாட்டலால் மேற்கொண்ட முயற்சிகள் - வீண்தான் என்று புரிந்துகொண்டு, நதிகள் இரண்டும் பிரிந்து அந்த மேட்டை சுற்றி ஒரு மாலைபோல வட்டமிட்டு பாய்ந்து சென்றன. இதனாலேயே இந்தத் தலம் திருவட்ட ஆறு என்றழைக்கப்படுகிறது. பிறகு இந்த நதிகள் வேண்டிக் கொண்டதற்கிணங்க, இங்கே நிலை கொண்ட பெருமாளும் ஆண்டிற்கு ஒருமுறை இந்நதிகளில் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.

    இப்படி அரக்கன்மீது எத்தனை நாள்தான் அவன் தப்பித்துவிடாதபடி சயனித்திருப்பது! தான் இங்கே அர்ச்சாவதாரமாக நிலை கொள்ள, ஆதிசேஷன், கேசியை எங்கும் சென்றுவிடாதபடி காவல் காக்குமாறு பணித்தார். ஏற்கெனவே பெருமாளை முழுமையாகத் தாங்கிக்கொண்டிருந்ததால், தன் அரக்க குணமெல்லாம் முற்றிலும் அழிந்து, மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்துவிட்ட சந்தோஷத்தில் அப்படியே ஆழ்ந்திருந்தான் கேசி. எம்பெருமானோடு கேசியையும் சேர்ந்து சுமக்க வேண்டியிருந்தாலும், அது தன் நாயகன் இட்ட கட்டளை என்பதால், முழுமனதோடு அப்பணியை ஆதிசேஷன் ஏற்றதாலும், கேசியின் அரக்க மனதை வீழ்த்திய பெருமாள் என்பதாலும், இத்தல மூலவர் ஆதிகேசவன் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

    உமையம்மை ராணி என்ற அரசி ஒருகாலத்தில் இப்பகுதியை ஆண்டவள். முகில்கான் என்ற முகமதியன், பெரும்படையுடன் தன்னுடன் போரிட வருகிறான் என்ற தகவல் கேள்விப்பட்டவுடன், கோட்டயம் பகுதியைப் பாதுகாத்துவரும் கேரளவர்மன் என்ற தன் படைத்தளபதியை அவனுடைய படைகளுடன் வந்து தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டாள் அரசி. அவனும் முகில்கானை எதிர்க்கும் அரசிக்கு உதவுவதற்காக உடனே வந்தான். ஆனால், எதிரிப் படை மிகப் பெரியதாக இருந்ததைக் கண்ட அவன், இந்த திவ்யதேசப் பெருமாளை சரணடைந்து, அருள்பாலிக்குமாறு வேண்டினான். சாதாரண வேண்டுதல் இல்லை அது, 'படை சங்கீர்த்தனம்' என்ற பாடல்களால் இறைவனைப் பாடி மனமுருக அர்ப்பணித்த வேண்டுதல் அது. பெருமாளும் மனம் கசிந்தார். விளைவாக கேரளவர்மனுக்கும் அவனுடைய படைகளுக்கும் பேராற்றல் உள்ளே ஊறியது. அதோடு, எம்பெருமான் கதண்ட வண்டு உருவெடுத்தார். இது ஆயிரக்கணக்கில் பெருகி எதிரிகளை சின்னாபின்னப்படுத்தின. இந்த வெற்றி இன்றளவும் இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. ஆமாம், இப்போது தினமும், மாலை வழிபாட்டில், இந்தப் பாடல்கள் பாடப்பெறுகின்றன. அதுமட்டுமல்ல, முகில்கானை வெற்றிகொண்ட நாளில், இப்போது, ஒவ்வொரு வருடமும், பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. வீரகேரள பாயசம் நிவேதனம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    எம்பெருமான் தானே விரும்பி எழுந்தருளியுள்ள தலம் இது என்பதால், இதனை 'சேர நாட்டு ஸ்ரீரங்கம்' என்றும் அழைக்கிறார்கள். அதோடு, திருவனந்தபுரம் திவ்யதேசத்துக்கும் முற்பட்டது என்பதால், 'ஆதி அனந்தஸ்தானம்', 'ஆத்யனந்த ஸ்தானம்' என்றும் குறிப்பிடுகிறார்கள். தினமும் மாலை வேளையில் சூரியனின் பொற்கிரணங்கள் எம்பெருமானின் திருமேனியைத் தீண்டி, அர்ச்சித்து மகிழ்கிறது.

    வேறொரு காலத்தில் ஆற்காடு நவாப் இப்பகுதி மீது படையெடுத்தான். இக்கோயிலைக் கொள்ளையடித்த அவன், இங்கிருந்த உற்சவர் சிலையைக் கண்டு பிரமித்தான். அதன் பளபளப்பைப் பார்த்து அது முற்றிலும் தங்கத்தால் ஆனது என்று வியந்து நம்பினான். உடனே அதனை அபகரித்துக்கொண்டு சென்றான். அவன் போன பிறகு, பக்தர்கள் வேறொரு உற்சவர் சிலையை பிரதிஷ்டை செய்து அதற்கு ஆராதனை செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் ஆழாதி என்ற பக்தர், உற்சவர் சிலையை நவாப் தூக்கிச் சென்றதை எண்ணி, ஊனின்றி, உறக்கமின்றி பெருந்துயருற்றார். அவருடைய கனவில் தோன்றிய எம்பெருமான், நவாபுக்கு ஏராளமான பொருள் கொடுத்தால் அந்த விக்ரகத்தை மீட்டுவிடலாம் என்று யோசனை சொன்னார்.

    ஆழாதி அத்தனை பணத்துக்கு எங்கே போவார்? தன்னிடமிருந்த தொகை, மற்றும் பல பக்தர்களிடமிருந்து வசூலித்த தொகை எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு நவாப் இருப்பிடத்துக்குச் சென்றார். அதற்குள்ளாக, தான் விக்ரகத்தைப் பறித்து வந்த நாளிலிருந்து அடுத்தடுத்து பல சோதனைக்குள்ளானான் நவாப். இதேசமயம், ஆழாதியும் தான் சேகரித்து வந்த தொகையை அவனுக்கு அளித்து, பதிலுக்கு அந்த விக்ரகத்தைக் கேட்க, பெரிதும் மகிழ்ந்த நவாப் உடனே தொகையைப் பெற்றுக்கொண்டு, விக்ரகத்தைக் கொடுத்தான். அதுமுதல் தன் சோதனைகள் முற்றுபெற்றுவிடும்; எதிர்பாராத வகையில் பெருந்தொகையும் கிடைத்தது என்று நினைத்துக்கொண்டான் அவன். ஆனால், அவனுக்கு ஆத்ம சோதனை அப்போதுதான் ஆரம்பித்தது. ஆமாம், இந்தப் பெருமாள் எத்தனை உயர்ந்தவராக இருந்தால், என்னிடமே பொருள் கொடுத்துவிட்டு அவரை மீட்டுச் சென்றிருப்பார்கள்! அதேபோல அவர் என்னை விட்டு நீங்கியதும் என் துயரங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனவே! அவர் இருக்க வேண்டிய இடம் என் அரண்மனை அல்ல என்பதை அவர்தான் எவ்வளவு அழகாக, குறிப்பால் உணர்த்திவிட்டார்! இத்தகைய பேரருளாளனை நான் அபகரித்து வந்ததே குற்றம்; அதைவிட, அவரது பக்தர்கள் தம்மைப் பெரிதும் வருத்திக்கொண்டு வசூலித்து வந்த தொகையைப் பெற்றுக்கொண்டு அவரைத் திரும்பக் கொடுத்தது பெருங்குற்றம். இந்த இழிசெயலுக்கு தனக்கு பகவானின் மன்னிப்பு கிடைக்குமா என்று பெரிதும் வருந்தி நின்றான் ஆற்காடு நவாப்.

    இதற்கிடையில் நவாபிடமிருந்து மீட்டு வந்த விக்ரகத்தை வழியில் ஓரிடத்தில் வைத்து நீராட்டி, வழிபட்டு, பிறகு அதை திருவட்டாறுக்குக் கொண்டு செல்லலாம் என்று தீர்மானித்திருந்தபோது, இந்த விக்ரகம் இங்கேயே நிலைகொண்டுவிட்டது! சரி, பெருமாளின் சித்தம் இதுதான் போலிருக்கிறது என்று சமாதானம் செய்துகொண்ட பக்தர்கள் அதேபோன்று இன்னொரு விக்ரகம் தயாரித்து அதை திருவட்டாறுக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால், நவாப் அபகரித்துச் சென்றுவிட்டதால், திருவட்டாறு மக்கள் மாற்று விக்ரகம் ஒன்றை

    Enjoying the preview?
    Page 1 of 1