Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Pisase
Kaadhal Pisase
Kaadhal Pisase
Ebook67 pages25 minutes

Kaadhal Pisase

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

It is a romance-crime story. Suja and Ramanan are lovers. Yogeshwar is the villain, who wants to marry Suja. But she rejects him totally. Hence he plans to kill Ramanan. But the person whom he appoints for this project, kills not only Ramanan but Suja also!

Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580130605416
Kaadhal Pisase

Read more from Prabhu Shankar

Related to Kaadhal Pisase

Related ebooks

Related categories

Reviews for Kaadhal Pisase

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Pisase - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    காதல் பிசாசே

    Kaadhal Pisase

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அந்த எண்ணம் தனக்குத் தோன்றியது சரிதான் என்று மனதில் உறுதி கொண்டான் யோகேஷ்வர். பாவ-புண்ணிய கணக்கு பார்க்கும் நிலையையெல்லாம் அவன் கடந்திருந்தான். இனிமேலும் விட்டு வைத்தால், அந்த மன அழுத்தத்தில் தான் தற்கொலை செய்து கொண்டுவிடும் நிலைமைக்கும் தள்ளப்படுவோம் என்பதாக அவன் ஊகித்திருந்தான்.

    ஆகவே எடுத்த முடிவு சரியானதுதான்.

    சரி, எப்படி அதை நிறைவேற்றுவது?

    நேரடியாகக் களத்தில் இறங்கினால் பின்விளைவுச் சிக்கலில் தனக்குதான் மூச்சுத் திணறும் என்பதையும் அவன் ஊகித்தான். ஆகவே தான் பட்டுக் கொள்ளாமல், இன்னொருவர் தயவில்தான் தன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

    அந்த இன்னொருவர் யார்?

    யாரேனும் நண்பனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுக்கலாமா?

    வேண்டாம். நண்பன் என்பவன் தான் அளிக்கும் பொறுப்பையே அள்ளிச் சென்று அவனே அனுபவிக்கவும் ஆரம்பித்து விடுவான். அது மாதிரியான வேதனையைத்தான் இப்போது பட்டுக் கொண்டிருக்கிறோமே.

    வேறே யாராவது...

    சூழ்நிலை, சந்தர்ப்பங்களை உருவாக்கலாமா? தற்செயலாக நிகழ்ந்ததாகக் கதை கட்ட முடியுமா?

    இந்த யோசனையில் வெற்றி தோல்வி ஃபிஃப்டி-ஃபிஃப்டிதான்.

    அடியாட்கள்?

    கரெக்ட். சரியான யோசனை. அவர்கள் தான் வாங்கும் கூலிக்குக் கச்சிதமாகக் காரியத்தை முடிப்பவர்கள். போலிஸ் மோப்பத்துக்கு ஒருவேளை அகப்பட வேண்டியிருந்தாலும் யாரையும் காட்டிக் கொடுக்காமல், தான் தண்டனையை ஏற்பார்கள்... என்ன இதற்காகக் கூடுதலாக சில லட்சங்கள் செலவாகும்...

    ஆகட்டும். தனக்கு இருக்கும் கோடானு கோடி சொத்தில் ஒரு சிறு விள்ளல் தானே இந்தச் செலவு. போகட்டும், பெரிய நஷ்டமில்லை.

    தன் சொத்து, செல்வாக்கைப் பார்க்கும் அந்த அடியாள் தன்னையே பிளாக்மெயில் செய்ய முயல்வானோ?

    அதையெல்லாம் முன்கூட்டியே பேசி தீர்மானித்துக் கொள்ளலாம். தான் அவனுடன் சம்பந்தப் படாதபடி சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டால் போகிறது. அதாவது தன் தடயம் எதுவும் அடையாளம் காண முடியாதபடி செய்து விட்டால் போகிறது...

    அதுதான் சரி. அவளைப் பழி வாங்குவது என்பது இப்படித்தான் சாத்தியம். பழி வாங்குவதென்றால் கொஞ்ச நேரம், அல்லது கொஞ்ச நாள் அவளைத் துன்புறுத்திப் பார்த்து சந்தோஷப்படுவதல்ல, யாருக்காக என்னை மறுத்து, வெறுத்து ஒதுக்குகிறாளோ, அவனை மொத்தமாகத் தீர்த்து விடுவது, அவனே போய்விட்ட பிறகு, அவள் மனம் மாறக் கூடும். ஓர் ஆறுதலுக்காக, இனிவரும் நாளின் துணைக்காக என்னை வந்தடையக் கூடும்.

    அவளுடைய அழகு தான் அவள் காலடியில் என்னைக் கட்டிப் போட்டது. அந்த அழகு என்னைத் தவிர வேறு யாராலும் அனுபவிக்க விடக் கூடாது.

    யோகேஷ்வரின் கை இறுக, அவன் பிடித்திருந்த விஸ்கி கோப்பை, தன் மெல்லிய சுவரால் அந்த இறுக்கத்தைத் தாங்க இயலாமல் கலீரென்று உடைந்து சிதறியது. அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1