Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Zainthavi
Zainthavi
Zainthavi
Ebook85 pages30 minutes

Zainthavi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Zaindhavi is Pavithra’s daughter. Soon after the birth of Zaindhavi, Pavithra’s husband Rajasekar dies in a road accident. The office colleges of Pavithra try to console her to their level best. Amongst them Karthik is different. He is prepared to marry Pavithra. Pavithra, considering her daughter’s future, does not approve his proposal, whereas all other colleagues persuade Pavithra to accept him as her husband. Pavithra finally agrees, after coming to know the great sacrifice that Karthik does for the sake of Zaindhavi. Yes he undergoes vasectomy operation so that his child won’t be sharing love and affection of both Pavithra and that of his.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580130605700
Zainthavi

Read more from Prabhu Shankar

Related to Zainthavi

Related ebooks

Reviews for Zainthavi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Zainthavi - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    ஸைந்தவி

    Zaindhavi

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டபோதே உற்சாகம் பவித்ராவைத் தொற்றிக் கொண்டது. ஸைந்தவி இப்போது என்ன பண்ணிக் கொண்டிருக்கும்?

    வாசலையே பார்த்துக் கொண்டிருக்கும். சுட்டும் அதன் சுடர் விழிகளில் சூரிய, சந்திரன் மின்ன தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

    வீட்டினுள் தனக்கேற்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாலும், பவித்ரா வாசல் கதவைத் திறந்தால், வந்திருப்பது அவள்தான் என்று தெரிந்து கொண்டு தலையை வாசல் நோக்கித் திருப்பும் புத்திசாலித்தனத்தை அம்மா வியந்து வியந்து பாராட்டுவாள்.

    அந்த வாசல் கதவு தபால்கரர், பால்காரர், சேல்ஸ்மேன் என்று எத்தனையோ பேர்களால் திறக்கபட்டாலும் அவள் திறக்கும்போது மட்டும் எப்படிச் சரியாக ஊகித்து வாசலை நோக்கி அவளுக்குத் தவழத் தெரிகிறது!

    சிலசமயம் பஸ் லேட்டானாலும் நேரம் தப்பாத கச்சிதமாக அடிக்கடி வாசலை நோக்கும் பழக்கம் அந்தப் பிஞ்சு மனசிலே மட்டும் எப்படிப் பதிந்தது?

    பத்து மாத ஆரோக்கிய குழந்தை ஸைந்தவி. சுற்று வட்டாரங்களையெல்லாம் அதற்கும் புரிந்து கொண்டுவிடும் ஆற்றல்...

    ஆனால்...

    ஓர் உண்மை மட்டும் அந்தப் பிஞ்சுக்குத் தெரியாது.

    பஸ்ஸில் வந்து கொண்டிருந்த பவித்ராவின் கண்களில் திடீரென்று நீர் திரையிட்டது. இமைகளால் படபடத்து நீர்த்திவிலையை உள்ளுக்குள் வாங்க முயற்சித்தாள். ஆனால், ஒரு துளி வெளியே தெறித்து விழுந்து அவளுடைய வேதனைய ஊருக்கெல்லாம் தெரிவிக்க முயன்று, தோற்று, ஆவியாகி மறைந்தது.

    இன்றைக்கு மனசு ஏன் இவ்வளவு சஞ்சலப்படுகிறது? பவித்ரா தன்னையே கேட்டுக் கொண்டாள். அடிக்கடி அடி மனசிலிருந்து மேலெழும்பும் வேதனையா?

    அந்த உணர்வால் அவள் எப்போதுமே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறாள் என்றாலும், இன்றைய சஞ்சலம் சற்று பயத்தையே கொடுத்தது.

    மூன்று மாதங்களுக்கு முன்னால் கிட்டத்தட்ட இதே அளவில் அவள் இந்த மனக்குழப்பத்தை அடைந்திருக்கிறாள்.

    அந்தக் குழப்பத்திற்குக் காரணம், ஒரு பேரிழப்புக்குப் பிறகுதான் அவளுக்குப் புரிந்தது.

    அந்த சோகம் நிரந்தரமாகிவிட்டது.

    இன்றும் அதே மாதிரியான உணர்வு.

    எத்தகைய இன்னொரு இழப்புக்கு இன்று தான் தயாராக் இருக்க வேண்டும்? அவளுக்கு புரியவில்லை.

    உருண்டு விழுந்த காண்ணீர்த் துளியும் அதைத்தான் சொன்னதா?

    மனசு படபடத்தது.

    'கடவுளே, என்னுடைய உள்ளுணர்வு சொல்லும் செய்தி என்னை மேலும் வேதனைக்குள்ளாக்கக் கூடாதே' என்று வேண்டிக் கொண்டாள்.

    வழக்கமான வேகத்தில் போய்க் கொண்டிருந்த பஸ் ரொம்பவும் மெதுவாகப் போவது போலத் தோன்றியது அவளுக்கு. ஜன்னல் வழியாக குதித்து ஓடிவிடலாம என்றுகூட யோசித்தது அவள் மனம்.

    அல்லது அடுத்த ஸ்டப்பில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு விரையலாமா?

    'யாருக்கும் ஒண்ணும் ஆகியிருக்கது. சும்ம மனசைப் போட்டுப் படுத்திக்காதே' என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்ல முயற்சித்தாள் அவள். ஆனால், இந்த ஆறுதலையும் மீறி ஆக்ரோஷமான அலையாக ஆர்ப்பரித்தது உள்மனசு.

    இன்னும் இருபது நிமிடம் பயணித்தாக வேண்டும்.

    அம்மாவுக்கு ஏதேனும் ஆகியிருக்குமா? தெருவோர பம்ப்பில் தண்ணீர் எடுத்து வரும்போது கால் இடறி... சே! இருக்காது.

    அப்பாவுக்கு?

    அறுபதைத் தாண்டிய அவர் அஜாக்கிரதையாக இருக்க மாட்டார். தான் ஆபீஸுக்குப் போன நாளில்கூட சாலை ஓரமாகவே போய் வந்தவர். தன்னை ரொம்பவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வார். தன் கவனக் குறைவால் பிறருக்கு எந்தத் துன்பமும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் விழிப்புடன் இருப்பவர் அப்பா.

    அப்படியானால்... அப்படியானால்...

    ஸைந்தவி... குழந்தைக்கு ஏதாவது...

    எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருப்பாளோ? பெரியவர்கள் கவனிக்காமல் விட்டிருப்பார்களோ? குழந்தைக்கு சீரியஸாகி போன பிறகு என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாமல் தவித்து மருகிக்

    Enjoying the preview?
    Page 1 of 1