Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Paarvaiyil Ramayanam
Puthiya Paarvaiyil Ramayanam
Puthiya Paarvaiyil Ramayanam
Ebook388 pages2 hours

Puthiya Paarvaiyil Ramayanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராமாயணம் –

கடவுள் மனிதனாக அவதரித்து, மனிதனாக வாழ்ந்து, மனித நேயத்தை வளர்த்ததை விவரிக்கும் அற்புத காவியம். வால்மீகி, கம்பர், இடையே துளசிதாசர், கபீர்தாசர் ஈறாக, கவிஞர் வாலிவரை ஆயிரக்கணக்கானோர் அந்த ராமாயணக் கதையைத் தத்தமது நோக்கில், தத்தமது புரிதலுக்குட்பட்டு, பலவாறாகத் தந்திருக்கிறார்கள்.

புராணக் காலந்தொட்டு எத்தனையோ உபந்யாசகர்கள் இந்த ராமாயணத்துக்கு இசை கூட்டி, மெருகேற்றி, தமது சொந்த, ஆக்கபூர்வமான திரிபுகளுடன் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த கதைகளைக் கேட்கும் அன்பர்களின் கூட்டமும் அரங்கு நிறைந்ததாகவே இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இருக்கப் போகின்றன. காரணம், எல்லோருக்கும் தெரிந்த ராமாயணக் கதையை இவர் எப்படிச் சொல்லப் போகிறார் என்று கேட்டறியும் ஆவல்தான்.

அந்த வகையில் என் கற்பனைக்குத் தோன்றிய சில புதுமை விளக்கங்களை இந்த ‘புதிய பார்வையில் ராமாயணம்’ புத்தகத்தில் விவரித்திருக்கிறேன். இது ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது, அது ஏன் அப்படி இருந்திருக்கக்கூடாது என்றெல்லாம் சிந்தித்ததன் விளைவு, இந்தப் புத்தகம். ராமயணத்தில் அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களையும் மானசீகமாக சந்தித்து அப்படி நடந்ததாமே, இப்படி நடந்து கொண்டீர்களாமே என்று அவர்களிடம் நான் கேட்டபோது, அவர்கள் தந்த பதில்கள்தான் இங்கே பல அத்தியாயங்களாக விரிந்திருக்கின்றன.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580130606725
Puthiya Paarvaiyil Ramayanam

Read more from Prabhu Shankar

Related to Puthiya Paarvaiyil Ramayanam

Related ebooks

Reviews for Puthiya Paarvaiyil Ramayanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Paarvaiyil Ramayanam - Prabhu Shankar

    https://www.pustaka.co.in

    புதிய பார்வையில் ராமாயணம்

    Puthiya Paarvaiyil Ramayanam

    Author:

    பிரபு சங்கர்

    Prabhu Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.கௌசல்யை மகனே கண்வளராய்!

    2.நோக்கியதன் நோக்கமென்ன?

    3.கண்ணுக்குள் நுழைந்தவனே கணவனுமானான்!

    4.யார் அது, சீதன வெள்ளாட்டி?

    5.கானகப் பயணத்துக்குக் கட்டுசாதம்!

    6.முதியோர் சொல் மகோன்னதம் தரும்!

    7.ராமன் அண்ணாவுக்குப் பிடிக்காது!

    8.ஆரண்ய வாழ்க்கையிலும் ஆனந்தம்!

    9.‘நம் இருவர் தொழிலும் ஒன்றுதானே!’

    10.பாதத்தால் பரிபாலித்தவன்!

    11.ராமப்பண்பு விமரிசிக்கப்படலாமா?

    12.உடனிருந்து உதவிய குறுமுனி!

    13.அரக்ககுணம் மாறாத ஆரணங்கு!

    14.மோகம் என்ற மாயப் பிசாசு

    15.சூழ்நிலையால் முரண்படும் மனது!

    16.மோகத்தின் மோசமான பின்விளைவுகள்!

    17.சந்தேகம் எனும் ஆட்கொல்லி

    18.பசி போக்கிய பாயசம்

    19.‘நீ இங்கு நலம், நான் அங்கு நலமா?’

    20.இது ராம (பாதுகை) ராஜ்யம்!

    21.தன் பலம் தானறியா பாராக்கிரமன்!

    22.அனுமனின் தந்திரம்!

    23.அனுமனுக்கு தண்டனை ஏன்?

    24. ஆன்மாவுக்கு விடுதலை கொடு, விபீஷணா!

    25.ராவணனுக்கு அயோத்தி!

    26.ராமனின் உள்நோக்கம் என்ன?

    27.உறங்கியவளும், உறங்காதவனும்!

    28.காவல் தெய்வங்கள்

    29.பாதம் தாங்கி பெருமை கொண்ட பாதுகைகள்!

    30.ராவணனின் மகிமை!

    31.நினைத்த வரமும், கிடைத்த சாபமும்!

    32.பற்களுக்கிடையே நாக்கு போல!

    33.அடுத்த அவதாரத்துக்கான ஒத்திகை?

    34.தானே முறிந்த தனுசு!

    35.ராமனின் சகோதரி!

    36.மானுடம் வெல்லும்!

    37.அழகுக்கு அழகு செய்த அணிகலன்கள்

    38.அண்ணன் வாக்கைக் காத்த தம்பி!

    39.ஓர் அணுவில்கூட இருந்துவிடக் கூடாது!

    40.கொடியவனே ஆனாலும்

    41.முன்பே இறந்துவிட்டான் ராவணன்

    42.ஸ்ரீராம ஜெயம்!

    43.அரசனின் அனுமதி பெற்றுச் செல்

    44.தாய்மையைப் போற்று, விபீஷணா!

    45.நாள் கணக்கு தப்பியதோ?

    46.நற்பண்புக்கு நல்லதோர் முன்னோடி

    47.கைகேயி செய்த நன்மை

    48.பாத தரிசனம்

    49.சிரஞ்சீவி என்றதால் வருத்தமா?

    50.படகிலேயே கண்ட பட்டாபிஷேகம்!

    51.கூனி நிமிர்ந்தாள்

    52.தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்!

    முன்னுரை

    ராமாயணம் –

    கடவுள் மனிதனாக அவதரித்து, மனிதனாக வாழ்ந்து, மனித நேயத்தை வளர்த்ததை விவரிக்கும் அற்புத காவியம். வால்மீகி, கம்பர், இடையே துளசிதாசர், கபீர்தாசர் ஈறாக, கவிஞர் வாலிவரை ஆயிரக்கணக்கானோர் அந்த ராமாயணக் கதையைத் தத்தமது நோக்கில், தத்தமது புரிதலுக்குட்பட்டு, பலவாறாகத் தந்திருக்கிறார்கள்.

    புராணக் காலந்தொட்டு எத்தனையோ உபந்யாசகர்கள் இந்த ராமாயணத்துக்கு இசை கூட்டி, மெருகேற்றி, தமது சொந்த, ஆக்கபூர்வமான திரிபுகளுடன் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த கதைகளைக் கேட்கும் அன்பர்களின் கூட்டமும் அரங்கு நிறைந்ததாகவே இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இருக்கப் போகின்றன. காரணம், எல்லோருக்கும் தெரிந்த ராமாயணக் கதையை இவர் எப்படிச் சொல்லப் போகிறார் என்று கேட்டறியும் ஆவல்தான்.

    அந்த வகையில் என் கற்பனைக்குத் தோன்றிய சில புதுமை விளக்கங்களை இந்த ‘புதிய பார்வையில் ராமாயணம்’  புத்தகத்தில் விவரித்திருக்கிறேன். இது ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது, அது ஏன் அப்படி இருந்திருக்கக்கூடாது என்றெல்லாம் சிந்தித்ததன் விளைவு, இந்தப் புத்தகம். ராமயணத்தில் அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களையும் மானசீகமாக சந்தித்து அப்படி நடந்ததாமே, இப்படி நடந்து கொண்டீர்களாமே என்று அவர்களிடம் நான் கேட்டபோது, அவர்கள் தந்த பதில்கள்தான் இங்கே பல அத்தியாயங்களாக விரிந்திருக்கின்றன.

    என் இனிய நண்பர் நல்லாத்தூர் திரு வெங்கடசாமி ரெட்டியார் அவர்கள் என்னுடைய வித்தியாசமான ராமாயண சிந்தனைகளை பெரிதும் பாராட்டி ஊக்குவித்தவர். அவருடைய உந்துதலாலேயே இந்தத் தொடர் சாத்தியமாயிற்று. இதற்காக என் உளமார்ந்த நன்றியை அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்.

    "வென்றிசேர் இலங்கையானை வென்ற மால்வீரன் ஓத

    நின்ற ராமாயணத்தின் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்

    ஒன்றினைப் படித்தோர் தாமும், உரைத்திடக் கேட்டோர் தாமும்,

    நன்று இது என்றோர் தாமும் நரகமது எய்திடாரே"

    1.கௌசல்யை மகனே கண்வளராய்!

    உன் கண்கள் இரண்டையும், இப்போதே பிடுங்கிக் கொடு, என்று கேட்டதைப் போலத் திடுக்கிட்டார் தசரதர். அவருக்கு உடம்பே நடுங்கியது. ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டவர்போல தன் காதுகளைப் பொத்திக் கொண்டார். கண்களில் நீர் தளும்பிவிட்டது.

    எதிரே விஸ்வாமித்திரர் கம்பீரமாக நின்றிருந்தார். அவருடைய கூரிய பார்வை தசரதனை, ‘ராம, லட்சுமணரை என்னுடன் அனுப்பி வைப்பாயா, மாட்டாயா?’ என்று கேட்டபடி ஊடுருவியது.

    முனிவர் கானகத்தில் பர்ணசாலை அமைத்துக் கொண்டு, அங்கே யாகமும் இயற்றப் போகிறார். பொதுவாகவே எந்த முனிவராவது யாகம் இயற்றினால் மூக்கில் வியர்த்ததுபோல எங்கிருந்தோ அசுரர்கள் வந்துவிடுவார்கள். தம் முரட்டு பலத்தால் அந்த யாகசாலையையே நிர்மூலமாக்கிவிட்டு அதில் கலந்து கொண்டவர்களைத் தாக்கவும் செய்வார்கள் அவர்கள்.

    இந்தக் குழந்தைகளை எப்படி அசுரர்களுக்கு எதிராகக் களம் இறக்க முடியும்?

    தனக்கு யாராவது ஆதரவாகப் பேசமாட்டார்களா என்று தசரதர் சுற்றுமுற்றும் பார்த்தார். ‘பட்டு மஞ்சத்தில் துயில் பயின்ற இந்தக் குழந்தைகள், ஆசிரமத்தின் எங்கே துயில்வார்கள்? இனிப்பு வகைகளுடன் டாம்பீகமான உணவு உட்கொண்ட இவர்கள் அங்கே வெறும் காயையும், கனியையும்தானே சாப்பிடுவார்கள்! ராஜ உடையலங்காரத்தில் நளினமாகத் தோற்றமளிக்கும் என் குழந்தைகள் அங்கே மாற்றுடைக்கு எங்கே போவார்கள்…’

    வசிஷ்டர் எந்த சலனமும் இல்லாமல் விஸ்வாமித்திரரையும், தசரதரையும் பார்த்துக் கொண்டிருந்தார். தன்னிடம் பயின்ற இந்த ராஜகுமாரர்களின் ஆற்றல் நிரூபிக்கப்பட ஒரு நல்வாய்ப்பு அமைந்திருக்கிறது. இவர்களின் திறமையை யாராலும் சந்தேகப்பட முடியாது. அத்தனை அப்பழுக்கற்ற, திடமான பயிற்சியை மேற்கொண்டிருப்பவர்கள் இவர்கள்…. ஒரு நல்ல ஆசான் என்ற முறையில் வசிஷ்டர் இவ்வாறு விஸ்வாமித்திரருடன் ராம-லட்சுமணர் செல்வதில் பெருமைதான் கொண்டிருந்தாரே தவிர, பதைபதைக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு இவர்களுடைய ஆற்றல் தெரியும்.

    அவையிலிருந்த எல்லோரையும் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தார் விஸ்வாமித்திரர்.

    ‘இவர் கோபக்கார முனிவர். தான் கேட்டுக்கொண்டபடி சகோதரர்களை அனுப்பி வைக்காவிட்டால், ஏடாகூடமாக சபித்துவிடுவாரோ’ என்று அவர்கள் எல்லோர் மனதிலும் கொஞ்சம் பயம் தேங்கியிருந்தது.

    அனைவரையும் பார்த்துக்கொண்டே வந்த விஸ்வாமித்திரர் ராமனுடைய அன்னையான கௌசல்யையிடம் வந்து பார்வையை நிறுத்தினார். அவர் கண்களில் ஓர் ஏக்கம். ‘அம்மா, நீ மறுத்து விடாதே, நீ மறுத்தாயானால், தசரதன் உடனே அதுதான் சாக்கு என்று, உன்னைக் காரணம் காட்டியே ராம-லட்சுமணரை அனுப்பிவைக்க மறுத்து விடுவான். ஒரு நல்ல நோக்கம் ஈடேற வேண்டித்தான் உன் பிள்ளையை என்னுடன் அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன், தயவுசெய்து மறுப்பு சொல்லி விடாதே,’ என்று கண்களாலேயே கெஞ்சினார்.

    கௌசல்யை மெல்ல முறுவலித்தாள். அவள் மனதில் உறுதி இருந்தது. ராமன் கண்டதெல்லாம், பெற்றதெல்லாம் வெற்றிதான். ஆகவே அவனுடைய பாதுகாப்பு பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கூடவே விஸ்வாமித்திரர் என்ற சிங்கம் இருக்கும்போது அதற்கு அர்த்தமே இல்லை. குழந்தைக்கு சிலசமயம் தான் பாசமிகுதியால் உணவு ஊட்டியதெல்லாம் உண்டுதான். கானகத்தில் அந்த வசதி, பாசமெல்லாம் கிடைக்காதுதான். ஆனாலும் முனிவர் அழைக்கிறார் என்றால்அதில் நிச்சயம் ஏதேனும் நல்ல உள்காரணம் இருக்கும்…..

    கௌசல்யையின் பார்வையிலேயே அவளுடைய சம்மதத்தைப் பெற்றுக்கொண்ட விஸ்வாமித்திரர், இனி தனக்குத் தடையாக யாரும் இருக்க முடியாது என்று நிம்மதி அடைந்தார்.

    தசரதனை நெருங்கினார். மகன் என்ற உறவுக்கும் அப்பால், அவன் அனைவருக்கும் பொதுவானவன், அனைவரது நல்வாழ்வுக்கும் வழிவகுக்கவல்லவன் என்பதை நீ உணர்ந்து கொள்ளவேண்டும் தசரதா. உனக்குப் பிறகு அரியணை ஏறப்போகும் அவனுக்கு இதெல்லாம் கூடுதல் அனுபவங்கள்தான். நகரத்திலேயே, அதுவும் அரண்மனைக்குள்ளேயே பொத்திப் பொத்தி அவனை வளர்த்தால், வெளிஉலகமும், அங்கே நிலவும் அசாதாரணங்களும் எப்படித் தெரியும்? உனக்குப் பிறகு உன் மக்களை மேன்மையாக நிர்வகிக்கும் பக்குவம் அவனுக்கு இதுபோன்ற அனுபவங்களால்தான் கிடைக்கும். தடை சொல்லாதே, இப்போதே என்னுடன் உன் புத்திரர்களை அனுப்பி வை, என்றுகேட்டுக் கொண்டார்.

    அவருடைய குரலில் தொனித்த உறுதியைக் கண்டு நெஞ்சம் நிமிர்ந்தார் தசரதர். கூடவே வசிஷ்டரும் தடை ஏதும் சொல்லாமல் அந்தத் திட்டத்தை ஆமோதிக்கிறார். இவருக்கு, தன் மாணவன் பராக்கிரமானவன் என்று புகழப்படுவதில் ஆசிரிய கர்வம் இருக்கலாம். ஆனால், கௌசல்யை? ஒரு தாய், அவள் எப்படி கண்களால் மௌனமாக சம்மதிக்கிறாள்? துஷ்டர்களை எதிர்கொள்ளப் போகும் தன் மகனுடைய உடல்நலம் பற்றி அவளுக்குக் கவலையில்லையா? ஒருவேளை அவளும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்க விழைகிறாளோ?

    தசரதன் தலையைச் சிலுப்பி விட்டுக்கொண்டார். சுற்றிலும் இருப்பவர்களின் கண்களில் கவலையை விட, மகிழ்ச்சி ஒளிர்வதைக் கண்டு மனத்தெம்பு கொண்டார். விஸ்வாமித்திரரின் கரங்களைப் பற்றிக் கொண்டார்.ஆனாலும் பந்தத்தால் பிணைக்கபட்டிருந்த அவர், குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முனிவரே! என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அவருடைய முதுகில் தட்டி, ஆறுதல் அளித்துவிட்டு ராம-லட்சுமணரைப் பார்த்தார் விஸ்வாமித்திரர்.

    அவர்கள் ஏற்கெனவே வில், அம்பறாத்தூணிகளுடன் மலர்ந்த முகத்துடன், புது அனுபவம் காணப்போகும் பரவசத்துடன் காத்திருந்தார்கள். முனிவர், அவர்களைத் தன் பக்கத்துக்கு ஒருவராக, அவர்கள் தோள்மீது கைகள் போட்டபடி மெல்ல அழைத்துச் சென்றார். இங்கே கேவல் வெடித்தது தசரதன் நெஞ்சிலிருந்து.

    கானகத்தில் ஓரிடத்தில் பர்ணசாலை அமைத்தார் முனிவர். சகோதரர்கள் இருவரும் வெகுவாக அவருக்கு உதவினார்கள். முனிவர் வியந்து போனார். ராஜகுமாரர்களான இவர்கள் எங்கிருந்து இந்த சூட்சுமங்களையும் கற்றுக் கொண்டார்கள்! பர்ணசாலை அமைப்பதில் தன்னுடைய சீடர்களும், சகமுனிவர்களும் தம் ஒத்துழைப்பை நல்கினாலும், தசரத புத்திரர்கள் தாங்களாகவே முன்வந்து கட்டமைப்பைப் பரிசோதித்து, தங்கள் உழைப்பையும் செலவிட்டார்களே, இந்த வித்தையை அவர்கள் யாரிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்?

    விஸ்வாமித்திரர் மனசுக்குள் சொல்லிக் கொண்டார்: ‘தெய்வமே மனிதரூபம் கொண்டு வந்தபிறகு, இதுபோன்ற சந்தேகத்துக்கோ, வியப்புக்கோ ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்ன!’

    பர்ணசாலைக்குள் யாககுண்டம் அமைத்தார் விஸ்வாமித்திரர். இன்னும் இரண்டொரு நாளில் யாகத்தை ஆரம்பித்து விடலாம்.

    அந்த நாலைந்து நாட்களாகவே லட்சுமணன், விஸ்வாமித்திரரின் நடவடிக்கைகளை கவனித்து வந்தான். தங்களை அவர் மிகுந்த பாசத்துடன் நடத்திய விதம், பொதுவாகவே ‘கோபமுனி’ என்று பெயர் வாங்கிய அவரிடமிருந்து ஒரு சுடுசொல்லும் வராதது, எல்லாவற்றையும்விட முக்கியமானது, தன்னையும், ராமனையும் அவர் காலையில் துயில் எழுப்புவது….

    துயில் எழுப்புவதில் என்ன சிறப்புஇருந்தது?

    பொதுவாகவே உறக்கம் கொள்வதில் ஆர்வம் இல்லாத லட்சுமணன், அதிகாலையில், தானும் ராமனும் படுத்திருக்கும் கோரைப்பாய் படுக்கையருகில் கேட்ட மென்மையான ஒரு சந்தடியை கவனித்தான். பளிச்சென்று உறக்கம் கலைந்த லட்சுமணன், கண்களைத் திறவாமல் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துவான்.

    விஸ்வாமித்திரர், ராமனருகே வந்து, ‘கௌசல்யா சுப்ரஜா, ராமா…’ என்று மெலிதான குரலில் சங்கீதமாக அவனை எழுப்புவார்.

    பல நாட்கள் இந்த எழுப்புதலை கவனித்த லட்சுமணனுக்கு ஒரு சந்தேகம்: ராமனையும், தன்னையும் முனிவருடன் அனுப்பி வைத்தவர் தசரதர் அல்லவா? அப்படியிருக்க அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் ‘தசரத சுப்ரஜா..’ என்றல்லவா அழைக்க வேண்டும்? ஆனாலும் அவன் தயக்கம் காரணமாக அந்த சந்தேகத்தை முனிவரிடமும் கேட்கவில்லை, ராமனிடமும் கேட்கவில்லை.

    ஆனால் எல்லாம் தெரிந்த முனிவர், லட்சுமணனிடம், உன் சந்தேகம் நியாயமானதுதான். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளைத் துயில் எழுப்புவது தாயாரின் பொறுப்பாகவும், கடமையாகவும் இருக்கிறது. அந்த வகையில் இதுநாள்வரை ராமனை, கௌசல்யாதான் துயிலெழச் செய்திருப்பாள். அதனால்தான் நான் ‘கௌசல்யையின் மகனே’ என்றழைத்து எழுப்புகிறேன்…

    ஆனாலும் லட்சுமணனின் கண்களில் சந்தேகம் முழுமையாகத் தீரவில்லை. அதைப் படித்துவிட்ட முனிவர், மெல்லச் சிரித்தார். உண்மைதான். தசரதனுக்கு உங்களை என்னுடன் அனுப்பிவைக்கக் கொஞ்சமும் விருப்பமில்லை. அதேசமயம், கௌசல்யையும் அவ்வறு மறுப்பு சொல்லியிருந்தாளானால், நிச்சயம் நீங்கள் இருவரும் அயோத்தியைவிட்டு வந்திருக்கவே முடியாது. அந்த நன்றியறிதல் காரணமாகவும், நான் கௌசல்யையை தினமும் பெருமைபடுத்தினேன்.

    லட்சுமணன் மன நிறைவுற்றான்.

    வெகுவிரைவில் ராமனும், லட்சுமணனும், முனிவரைப் பெரிதும் துன்புறுத்திக் கொண்டிருந்த அரக்கி தாடகையையும் அவளது பரிவாரங்களையும் வதம் செய்து விஸ்வாமித்திரரின் யாகம் ஈடேற சேவையாற்றினார்கள்.

    2.நோக்கியதன் நோக்கமென்ன?

    தாடகை வதம் முடிந்தது. விஸ்வாமித்திரர் பெருத்த நிம்மதியுடன் தன் யாகங்களைச் செவ்வனே நிறைவேற்றி முடித்தார். அவர் கண்களில் தெரிந்த பளபளப்பு, ராம-லட்சுமணரின் சேவையைப் பாராட்டும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

    தன் ஆசிரமப் பகுதியில் தான் எண்ணியது நிறைவேறியதும், ராம-லட்சுமணரை அங்கிருந்து மிதிலைக்கு அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திரர். ‘எங்கே, ஏன், எதற்கு, எப்படி….’ என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் அவரை மௌனமாகப் பின்தொடர்ந்தார்கள் சகோதரர்கள்.

    வழியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சில குடில்களில் தங்கி, மிக எளிமையான ஆகாரங்களை உட்கொண்டு, இளைப்பாறிவிட்டு மூவரும் சென்று கொண்டிருந்தார்கள். முதலில் முனிவர் செல்ல, அவருக்குப் பின்னால் ராமன், அவனுக்குப் பின்னால் லட்சுமணன் என்று அவர்களுடைய நெடிய நடைப்பயணம் அமைந்தது. பயணக் களைப்புத் தெரியாமலிருக்க பலவித உபதேசங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார் விஸ்வாமித்திரர்.

    ஒருநாள் காலை அவ்வாறு பயணம் தொடக்கியபோது, சிறிது நேரத்திலேயே நறுமணம் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றது. ஏதோ ஓர் ஊரை நெருங்குகிறோம் என்று மூவருக்குமே புரிந்தது. அந்தக் காலைவேளையில், அந்த சுகந்தம், ஒரேசமயத்தில் பல வீடுகளில் மேற்கொண்ட பூஜைகளுக்குரிய மணமாகத் தெரிந்தது. அதோடு அன்றைய உணவு தயாரிக்கப்படும் சமையல் மணமாகவும் தெரிந்தது. எதிர்ப்படும் ஊரில் மக்கள் ஆரோக்கியமாகவும், பக்தி மேலிட்டு சந்தோஷமாகவும் வாழ்வதை விளக்குவதுபோல, இந்த வாசனைகள் கட்டியம் கூறின.

    மிதிலையை நெருங்கிவிட்டோம், என்றார் விஸ்வாமித்திரர். ஊருக்குள் நுழைந்தார்கள் மூவரும். இவர்களைப் பார்த்த மக்களின் விழிகளில் வியப்பு மேலோங்கியது. ஒரு சந்நியாசியின் பின்னால் வரும் இந்தப் பேரழகர்கள் யார்? அவருக்கும் இந்தப் பிள்ளைகளுக்கும் ரத்த சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லையே! ஒரு கரியமேகத்துக்குப் பின்னால் சூரியனும், சந்திரனும் போல பிரகாசித்துவரும் இந்த இளைஞர்கள் யார்? கண்களில் அவர்கள் யாரென அறியும் ஆவல் பொங்கினாலும், அனைவராலும் இரு கரங்கள் கூப்பி அவர்களைத் தொழாமலிருக்க முடியவில்லை.

    விஸ்வாமித்திரர் கம்பீரமாகப் புன்னகைத்தபடி, தன் வலது கரத்தால் அம்மக்களை ஆசிர்வதித்தபடி முன்னே சென்றார். பின்னால் வந்த இருவரும் சாந்த உருவினராக, மலர்ந்த முகத்துடன், கருணை பொழியும் கண்களுடன் பின்தொடர்ந்தார்கள். முனிவருக்குச் சமமாக இவ்விருவரையும் தொழ விரும்பினார்கள் அங்கே எதிர்ப்பட்ட மக்கள்.

    ஆனால், சகோதரர்கள் நடை நிமிர்ந்தும், பார்வை நேர்கொண்டும் இருந்தனவே தவிர, யாரையும் எந்த மாற்று உணர்வுடனும் நோக்கவில்லை. அந்த மக்களிடையே பேரழகிகள் இருந்தார்கள். அந்தக் காலை நேரத்தில் நீராடி, மணம் கமழும் மலர்களைச் சூடி, தகதகவென மின்னும் தங்க ஆபரணங்களை அணிந்து. ஒருமுறை பார்ப்பவரை மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அழகு மிளிர அவர்கள் காட்சி தந்தார்கள்.

    ஆனால் ராமனோ, லட்சுமணனோ அவர்களைப் பார்த்தார்கள் என்றாலும், அந்தப் பார்வைக்கு முன்னால் தற்காப்புத் திரையையும் போட்டிருந்தார்கள் என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியவில்லை.

    ஆயிரம்கோடி சூரியப் பிரகாசனாக ஒளிர்ந்தபடி மெல்ல நடந்து சென்ற ராமன் தன்னைப் பார்த்த அனைத்துப் பெண்களின் பார்வைக்குள்ளும் ஊடுருவி அவர்கள் மனதினுள் சென்று அவர்களைக் கலங்க வைத்தான். ஆனால் அவர்களுடைய எந்தவகைப் பார்வையையும் அவன் எந்தச் சலனமுமற்றே எதிர்கொண்டான்.

    பெருமூச்சிட்டக் கன்னிப் பெண்கள் பலர். அந்தப் பெருமூச்சில் தங்கள் ஏக்கத்தை வெளியிட்டோர் அதிகம். ‘தன் மகளுக்கு இவன் மாப்பிள்ளையாக வரமாட்டானா!’ என்று ஒரு தாய் ஏங்குகிறாள் என்றால், தனக்கு இவன் மணாளனாக அமையமாட்டானா என்று ஏங்கினர் பல பெண்கள்.

    முன்னே சென்ற விஸ்வாமித்திரர் சுற்றி நடக்கும் மௌனப் போராட்டத்தை கவனித்தபடிதான் சென்றார். தலையைத் திருப்பாமலேயே ராமன் அந்தப் பார்வைகளை நாசுக்காகத் தவிர்ப்பதையும் கவனித்தார்.

    அதோ, ஜனகரின் அரண்மனை நெருங்கிவிட்டது. அந்தப் பகலிலும் பளிச்சென்று ஒரு மின்னல், அரண்மனை உப்பரிகையில் உதித்தது. தவிர்க்க முடியாத ஈர்ப்பில் ராமன் சற்றே கண்களை மேலே உயர்த்த, அந்த ஒளியின் காந்தத்தால் ஈர்க்கப்பட்டான். உப்பரிகைக்கு அப்போதுதான் வந்துசேர்ந்த மின்னல்கொடியான சீதையும் அதே ஈர்ப்பு உணர்வை அடைந்தாள். காந்தமே, காந்தத்தை ஈர்க்கும் முரணான இயற்கை!

    ராமனின் விழிகள் நிலைக்குத்தின. கால்கள் தொடர்ந்து இயங்க மறுத்தன. ஒரு கணம்தான். உடனே சுதாரித்துக்கொண்ட அவன், நடையை பழைய வேகத்துக்குக் கொண்டுவந்தான்.

    விஸ்வாமித்திரர் இதையும் கவனிக்கத் தவறவில்லை. ராமன் தன்னருகே வருமளவுக்கு வேகம் குறைத்தார். என்ன ராமா, இத்தனை நேரம் இல்லாத தடுமாற்றம்? என்று மெல்லக் கேட்டார்.

    கொஞ்சம் தயங்கினாலும், குற்ற உணர்வுடன் சொன்னான் ராமன்: ஐயனே, என்னை மன்னித்துவிடுங்கள். சட்டென்று புத்தி பேதலித்துவிட்டேன். அந்தப் பெண் யார் என்று தெரியவில்லை. இதுவரை நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்தபடி வந்த நான் இவளைப் பார்த்த உடன் என்னை இழந்துவிட்டேன். ஆனால் அது எத்தகைய தவறு! அந்தப் பெண் திருமணமானவளாக இருந்தால், என் பார்வைதான் எத்தனை பாவம் மிகுந்தது! நான் தவறிழைத்துவிட்டேன். வாருங்கள், திரும்பப் போய்விடலாம். இனி முன்னே நடக்க எனக்கு மனத்தெம்பு இல்லை…

    கவலைப்படாதே ராமா, அந்தப் பெண் திருமணமானவள் இல்லை. ஏனென்றால் உன் பார்வை பரிசுத்தமானது. அது தவறிழைக்காது. அதன் கோணம் எப்போதும் நேர்மையானது. அது கல்மிஷம் அறியாதது. ஆமாம், அந்தப் பெண்தான் சீதை. ஜனக மகாராஜாவின் மகள். அவளுக்கு உன்னை மணமுடிக்கத்தான் நான் உன்னை இங்கே அழைத்து வந்தேன்…. என்று பேரனந்தத் தென்றலை அவன் மனசுக்குள் வீசச் செய்தார்.

    ராமன் வெட்கத்தால் பூரித்தான். ஆனால் அவளைக் கரம்பிடிக்க ஒரு சோதனைக்குத்தான் உட்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது அவனுக்கு அப்போதைக்குத் தெரியாது.

    3.கண்ணுக்குள் நுழைந்தவனே கணவனுமானான்!

    ராமனுக்கு மணமுடிக்கத்தான் விஸ்வாமித்திரர், மிதிலைக்குத் தங்களைஅழைத்து வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்ட லட்சுமணன் பெரிதும் மகிழ்ந்தான். இதுநாள்வரை அண்ணனுடனேயே இருந்து அவனுக்கு அனைத்துச் சேவைகளையும் செய்த தான், இனிமேல் அண்ணியாருக்கும் சேர்த்து சேவை செய்யக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொண்டான்.

    மிதிலை அரண்மனையில் ஜனகர், முனிவரையும் இளவல்களையும் உள்ளம் பூரிக்க வரவேற்றார். இளைஞர்களின் கம்பீரம் அவரை பிரமிக்க வைத்தது. அவ்விருவருமே தன்னுடைய மருமகன்களாக ஆவார்களா என்ற ஏக்கம் அவர் உள்ளத்துள் படர்ந்தது. ஆனாலும் ராஜரிஷியான ஜனகர் தன் உள்ளத்தை வெளிக்காட்டாமல் மூவரையும் உபசரித்தார்.

    ஜனகரே, இந்தப் பிள்ளைகள் அயோத்தி மாமன்னர் தசரதனின் புதல்வர்கள். என் யாகத்தைக் காக்கும் பொருட்டு எனக்கு உதவியாக இவர்களை நான் அவரிடமிருந்து அழைத்து வந்தேன். இவர்கள் எனக்குப் பெரிதும் துணையாக இருந்து, யாகம் நிறைவாக ஈடேற உதவினார்கள். இவர்களை உன்னுடைய மருமகன்களாக ஏற்றுக் கொள்ளவேண்டும்… என்று கோரினார்.

    தாங்கள் சொல்லிவிட்ட பிறகு எனக்கு ஏது ஆட்சேபணை? அயோத்தி மன்னருடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதில் எனக்குப் பூரண திருப்திதான். ஆனால்…. என்று சற்றுத் தயங்கினார் ஜனகர்.

    சொல், ஜனகரே, தயக்கம் ஏன்? விஸ்வாமித்திரர் கேட்டார்.

    தங்களுக்குத் தெரியாததா? என்னிடம் இருக்கும் ‘திரியம்பகம்’ என்ற வில்லிற்கு நற்கதி கிட்டப் போகிறது. நான் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, இந்த தனுசை வளைப்பவர், என் மகள் சீதையை மணக்கத் தகுதியாவார்….

    தெரியும், என்று புன்முறுவலுடன் சொன்னார் விஸ்வாமித்திரர்.

    பிறகு ராம-லட்சுமணரிடம், அந்த சிவதனுசு ஜனகருக்கு வந்த சம்பவத்தை விளக்கினார்: சிவபெருமானை அழைக்காமல் யாகம் இயற்றினான், அவருடைய மாமனாரான தட்சன். அதனால் கோபம் கொண்ட ஈசன் அந்த யாகத்தையும், அதில் கலந்து கொண்டவர்களையும் அழிக்க, தன்னிடம் இருந்த சக்தி வாய்ந்த மிகப்பெரிய தனுசை எடுத்துக்கொண்டு யாகசாலைக்குச் சென்றார். அங்கே அனைவரையும் அம்புகளால் மாய்த்தார். பிறகு சினம் தணிந்த அவர், அவர்களை உயிர்ப்பிக்கவும் செய்தார். அப்போது தனக்கு ஆதரவாக இருந்த ஜனகரின் முன்னோர் ஒருவரிடம் அந்த தனுசைத் தன்னுடைய அன்பளிப்பாக வழங்கினார் சிவபெருமான். அது பல தலைமுறைகளாக வெறுமே ஒரு பொன்பேழையில் வைத்துப் பூட்டப்பட்டுக் கிடந்தது. இப்போது ஜனகரின் ஆட்சி காலத்தில் வெளியே எடுக்கப்பட்டு போட்டியில் ஈடுபடுத்தப்படுகிறது.

    சிவன் அல்லது மஹாவிஷ்ணு இருவரின் அம்சங்கள் நிறையப் பெற்றவரால்தான் அந்த வில்லை எடுக்கவும், வளைக்கவும் முடியும். ஆகவே தன் மகள் சீதையை மணக்க அத்தகைய மணாளன் வரவேண்டுமே என்று ஜனகர் காத்திருந்தார். இடையில், சீதையின் அழகையும், ஜனகரின் பரந்து விரிந்த ராஜ்ய சொத்துகளையும் அடைய விரும்பிய பல மன்னர்கள் அந்த தனுசை வளைக்க முயற்சித்துத் தோல்வியுற்றனர்.

    திரயம்பகம் என்ற திருப்பெயர் கொண்ட அந்த சிவதனுசை, ஜனகர் வைத்திருந்த இடத்திற்குப் பெயர் கார்முகசாலை. எட்டுச் சக்கரங்கள் கொண்ட பெரிய இரும்புப் பேழையில் அந்த தனுசு வைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சுமந்து வருமளவுக்கு எடை மிகுந்தது.

    சம்பிரதாய உபசரிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு, விஸ்வாமித்திரர், ராமன் அந்த வில்லை வளைக்கத் தயார், என்று அறிவித்தார். கூடவே ராமரிடம் அந்த தனுசின் பராக்கிரமத்தைக் கூறி, இதனை வளைப்பதால் அவன் சீதையை மணக்கவும் இயலும் என்றும் விவரித்தார்.

    உடனே ராமனின் மனதில் லேசாகத் தயக்கம் இழையோடியது. வில்லை வளைப்பதில் அவன் அசரவில்லை, ஆனால், தான் இந்த அரண்மனைக்கு வந்தபோது உப்பரிகையில் கண்ட அந்தப் பெண்ணே சீதையாக இருக்கவேண்டுமே என்பதுதான் அந்தத் தயக்கம். ஆனாலும் விஸ்வாமித்திரர் தனக்கு நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கையில் வில்லை வளைக்கத் தயாரானான்.

    அதேசமயம் உப்பரிகையிலிருந்து மாளிகைக்குள் நுழைந்த சீதையிடம் அவளுடைய தோழிகள் ராமன் வருகையையும், அவன் வில்லை வளைக்கப் போவதையும் சொன்னார்கள். பளிச்சென்று சீதைக்கு ஏக்கம் பற்றிக் கொண்டது. தான் உப்பரிகையிலிருந்து கண்ணோடு கண் நோக்கிய நாயகனே ராமனாக இருக்க வேண்டும் என்றுவேண்டிக் கொண்டாள்.

    மிக பிரமாண்டமான அந்த தனுசு, ஜனகரின் உத்தரவின் பேரில் அரங்கத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அதைத் தொலைவிலிருந்தே பார்த்த சீதை, ‘சிவதனுசே,

    Enjoying the preview?
    Page 1 of 1