Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul!
Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul!
Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul!
Ebook353 pages1 hour

Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

It is about realising God by one self. This phenomenon can't be explained by words and totally impossible to show by means of any picture. It is to be experienced personally. It is to be felt by heart. It is being, it is becoming and it is the total realisation.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580130605699
Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul!

Read more from Prabhu Shankar

Related to Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul!

Related ebooks

Reviews for Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul! - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    காண முடியாததில் உணரப்படுபவரே கடவுள்!

    Kaana Mudiyathathil Unarapadubavare Kadavul!

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கடவுளை உணர்வதே சுகம்தான்!

    2. ச்ரவண பக்தி!

    3. காத்திருப்பதிலும் நன்மையே!

    4. தேங்காயில் இறை-மனிதாபிமானம்

    5. ஏன்...ஏன்...ஏன்..?

    6. கல்கி அவதரித்துவிட்டார்!

    7. நின்னைச் சரணடைந்தேன்...

    8. ஆன்மிகத்தையும் இளமையிலேயே கல்!

    9. பக்தியும் நட்புதான்

    10. ‘இறைச் சேவை’ என்றால் என்ன?

    11. ஆண்டவனுடன் ஆன்ம உணர்வு கொள்வது எப்படி?

    12. யார், யாரை ஏமாற்றுவது!

    13. அவனன்றி அசையாத அணுக்கள்

    14. கடவுளின் கொடை

    15. கடவுளின் முன்னேற்பாடு

    16. துன்பமில்லாப் பெருவாழ்வு!

    17. எல்லா ஆன்மாக்களும் சாந்தி அடையட்டும்!

    18. அனுபவிக்க வேண்டிய மூன்று பருவங்கள்

    19. சுழலும் சிவப்பு விளக்கு

    20. அண்ணாமலையானுக்கு அரோகரா...

    21. இறைவன் அமைத்து தரும் ராஜபாட்டை

    22. விரல்களின் ஒற்றுமை தத்துவம்!

    23. ஆன்மிகப் பயிற்சி என்ற அடிப்படை ஒழுக்கம்

    24. சும்மா இருக்காதீர்கள்

    25. எதை இழந்தோம் ஏங்குவதற்கு?

    26. அன்பை வலுப்படுத்தும் அருள்

    27. பிறந்த நாள் எச்சரிக்கை!

    28. ஒழுக்கம் நிலைக்க ஆன்மிகப் பயிற்சி தேவை

    29. பூர்வ ஜன்மத்து பந்தம்

    30. மெல்லப் பேசுவோம், இறையருள் பெறுவோம்!

    31. மறக்கக்கூடாதவர்கள்

    32. கடவுள் எப்போது வந்து உதவுவார்?

    33. அமைதி, நிதானமே மனசுக்கு நிம்மதி!

    34. நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும்

    35. நம்பிக்கையின் பரிமாணம்

    36. இதுவும் கடந்து போகும்

    37. உதவி என்ற சேவை

    38. அக்கறை கொள்ளவேண்டியது அவசியம்!

    39. விளையாட்டிற்குப் பின்?

    40. யார் தாயுமானவன்?

    41. கடவுள் பதிலளிப்பார்

    42. இறை வழிபாட்டால் ஏற்படும் இழப்புகள்

    43. பிரச்னைகள் எப்படி நிரந்தரமாகும்?

    44. கடந்து போகும் எல்லாம் மறந்தும் போகட்டும்!

    45. நடுவில் கொஞ்சம் பக்தியைக் காணோம்!

    46. நன்றி தெரிவிக்கும் நாகரிகம்

    47. நிதானம் பழக்கும் நல்லதொரு பயிற்சி

    48. தூங்கவிடாமல் துரத்துவதே கனவு

    49. ஆன்மிக மலர்ச்சரம்!

    50. கஷ்டம் என்று எதுவுமே இல்லை!

    51. ‘ஏ மனமே, சும்மா இரு!’

    52. முதுமைக்குப் பயனாகும் ஓர் இளமைப் பயிற்சி!

    53. இன்றும், நாளையும்!

    54. எடுத்து வைப்போம் முதல் அடியை!

    55. நான்கில் ஒன்று நம்மைக் காக்கும்

    56. மனம் பக்குவம் பெற ஒரு பயிற்சி!

    57. அருளாமல் அன்பு செய்த ஆண்டவன்

    58. இறைவன் கொடுத்திருக்கும் பொக்கிஷம்

    59. யார் அவர்?

    60. ஏன் கவலைப்பட வேண்டும்?

    61. பக்தி வெளிச்சத்தில், பகவானின் நிழல், துணையாக வரும்!

    62. தண்ணீர் தங்காத பிரம்புக்கூடை

    63. பேச்சு பேச்சா இருக்கணும்!

    64. நினைக்கத் தெரிந்த மனம் அளித்த இறைவனுக்கு நன்றி!

    65. புரிந்து கொள்வது எதனால், பிரிந்து செல்வது எதனால்?

    66. சந்தோஷம், கோபம், சோகம், இறைவன்!

    67. மரியாதையா, பயமா?

    68. வலி மறக்கச் செய்யும் இறையருள்!

    69. மென்மையாகச் சுட்டிக் காட்டுவோம்

    70. இறைவனுடன் பேசிக்கொண்டிருப்போம்!

    71. இறைவனிடம் கோள் சொல்லுங்கள்!

    72. கடந்தகால இளைஞர்களும், எதிர்கால முதியவர்களும்!

    73. சொர்க்கமும் நரகமும் இரண்டும் இங்கேயே!

    74. தொடர்ந்து தவறுகள் செய்வதேன்?

    75. கலியுக இறைவன் அவதாரங்கள்

    76. அகமும், முகமும் மலர ஒரு பயிற்சி!

    77. விவாதத்தை விடுவோம், உரையாடுவோம்!

    78. திறமையை அறிந்துகொள்ளவும் இறையருள் தேவை

    79. தோப்பாகும் தனித்தனி மரங்கள்

    80. இறைவன் என்ற மூன்றாம் நபர்

    81. ஆன்மிகக் கடமைகளில் அலட்சியம் ஏன்?

    82. மருத்துவமும், இறைத்துவமும்!

    83. ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு

    84. ஏமாற்றத்திலிருந்து மீள்வது எப்படி?

    85. பிறருடைய பிரார்த்தனை பட்டியலில் இடம் பெறுவோம்

    86. இயலாமையை இல்லாததாக்கும் இறையருள்

    87. அடையாளம் காண்போம்

    88. எதிர்காலம் என்ற புதிர்

    89. இதயத் துடிப்பும் இறைவன் கவனிப்பும்

    90. மேன்மக்களே, மேன்மக்களே...!

    91. சலுகை தர மறுப்பதற்கும் காரணம் வேண்டும்!

    92. தோல்வி என்ற ஏணிப்படி

    93. சோதனையே வா, வா, வா!

    94. தினமும் கடவுளுடன் பேசுவோம்!

    95. வீணே வருந்தி என்ன பயன்?

    96. சற்றே பொறும், பிள்ளாய்!

    97. போதி மரம்!

    98. விருப்பமும், தேவையும்!

    99. நமக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

    100. நன்றி சொல்லி நல்வாழ்வு பெறுவோம்!

    101. கடவுளின் முன்னேற்பாடு

    102. ஒரு செயலாக்கத்தில் எங்கே தடுமாறுகிறோம்?

    103. அந்த மெல்லியக் கோடு

    104. இறைவன் விதித்திருக்கும் சஸ்பென்ஸ்

    105. சமுதாயத்துக்கு நன்றிக் கடன் செலுத்துவோம்

    106. கடவுள் அருளால் களைகளைக் களைவோம்

    107. சுயநல பிரார்த்தனை, தப்பில்லை!

    108. நல்லவர் யார், கெட்டவர் யார்?

    109. சூழ்நிலை வாய்ப்புகள்

    110. நாம் நாமாகவே விளங்குவோம்

    111. பிரார்த்தனையின் நோக்கம்

    112. இறைவனே சொல்லித் தருவார்

    113. உள்ளே ஒலிக்கும் குரல்

    114. பிரார்த்திப்போம், வித்தியாசமாக!

    115. இரண்டு கொம்புகள்!

    116. இறைவனுக்கு நன்றி!

    நூலாசிரியர் பற்றிய குறிப்பு

    முகநூலுக்கு அனுப்பிய கட்டுரைகள் (90)

    அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.

    டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.

    சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.

    *****

    1. கடவுளை உணர்வதே சுகம்தான்!

    கடவுள் உன்னுடனேயே இருக்கிறார்.

    நான் விழித்திருக்கும்போது, நடக்கும்போது, பேசும்போது, ஏன் உறங்கும்போதுகூட கடவுள் என்னுடனேயே இருக்கிறாரா?

    "உன்னுடனேயே இருக்கிறார். இந்த உண்மையை உணர, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கண், காது, மூக்கு, கை, கால் ஆகிய வெளியே தெரியும் உறுப்புகளின் இயக்கத்தை நம்மால் உணர முடிகிறது. ஆனால் உடலுக்குள் மூளை, இதயம், கல்லீரல், குடல், சிறுநீரகம் இவையும் இயங்குகின்றனவே, இவற்றின் இயக்கங்களை நீயா கட்டுப்படுத்துகிறாய்? யார் ஆணைப்படி அவை இயங்குகின்றன?

    அதுதானே, யார் ஆணை அது?

    சரி, ஒரு தம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கு. இப்போது நீரில், சர்க்கரை தனியே தெரிகிறதா?

    இல்லையே. சர்க்கரையைக் காணோமே!

    நீதானே கலக்கினாய், இப்போது காணோம் என்கிறாயே? சரி, இந்த நீர்க்கரைசலில் மேல் பகுதியிலிருந்து சிறிதளவு நீர் எடுத்துக் குடி. எப்படியிருக்கிறது?

    இனிப்பாக இருக்கிறது.

    நடுவிலிருந்து எடுத்துக் குடி. இப்போது எப்படி இருக்கிறது?

    இனிப்பாகத்தான் இருக்கிறது

    அடியிலிருந்து எடுத்துக் குடித்தால்?

    இப்போதும் அதே இனிப்புதான்.

    நீரில் நீ கரைத்த சர்க்கரையை உன்னால் காண முடியவில்லை. ஆனால் அந்தக் கரைசலில் எந்தப் பகுதியும் இனிப்பாகத்தான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சர்க்கரையை இனிப்பாக உணர்வதுதான் கடவுளை அறிதல். அவர் உனக்கு வெளியே இருக்கிறார்; உனக்குள் இருக்கிறார்; உன்னுடனேயே இருக்கிறார். இறந்துவிட்ட தன் தந்தையைப் பார்த்து, ‘இதுவரை என்னுடன் தந்தையாக இருந்தவர் இப்போது இறந்து கிடக்கும் இந்த உடலா அல்லது வேறு ஏதாவதா? இவர் நடமாடிக் கொண்டிருந்தபோது நான் இவரை ‘அப்பா’ என்றழைத்தேன். அப்போது என் அழைப்புக்கு பதில் சொன்னவர் இப்போது மௌனமாக இருக்கிறார் என்பதால் இவர் அப்பா இல்லை என்றாகிவிடுமா?’ என்று ரமண மகரிஷி யோசிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் உறவுகளும், நட்புகளும், உடல் உயிருடன் இருக்கும் வரையிலான உணர்வுகள்தான் என்பதையும், ஆத்மா சில நாட்கள் வாடகைக்கு இருக்கும் கூடுதான் உடல் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். கடவுளும் அப்படி உணரப்பட வேண்டியவர்தான்.

    "கண்ணுக்குத் தெரியாத காற்றில் கொடி அசைவது மாதிரி’

    கொடி அசைவது இருக்கட்டும், உன் இயக்கமே அந்தக் காற்றைப் பொறுத்துதான் இருக்கிறது. அதில் பிராணவாயு இல்லையென்றால், உன் உடலில் பிராணன் இருக்காது. இந்தக் காற்றை உனக்காக அனுப்புபவர் யார்? இதோ இந்தப் பழத்தை எடுத்து நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை உடைத்துப் பார். உள்ளே என்ன இருக்கிறது?

    ஒன்றுமில்லை.

    உள்ளீடு ஏதுமில்லாத இதுபோன்ற ஒரு கொட்டைதான் மிகப் பெரிய மரம் ஒன்று உயர்ந்தோங்கி வளர ஆதாரமாக இருக்கிறது. இப்படி இல்லாததிலிருந்து எல்லாமும் எப்படி உருவாகின்றன? இதுதானே இறைசக்தி?

    உண்மைதான். கடவுளை உணர்வதே ஒரு சுகம்தான்.

    *****

    2. ச்ரவண பக்தி!

    கண்கள் பார்க்கின்றன, வாய் (நாக்கு) ருசிக்கிறது; பேசுகிறது; மூக்கு நுகர்கிறது; காதுகள் கேட்கின்றன. மெய் (உடல்) ஸ்பரிசிக்கிறது. இந்த ஐம்புலன்களில் நம் இச்சையாகக் கண்களை மூடிக்கொள்ளலாம்; வாயை மூடிக்கொள்ளலாம், உடலை ஆடைகள், போர்வைகளால் மூடிக்கொள்ளலாம்.

    ஆனால் மூக்கையும், காதுகளையும் மட்டும் நம் விருப்பம்போல மூடிக்கொள்ள முடியாது. இது இறைவனின் கருணை. மூக்கு, வாசனையை நுகர்வது மட்டுமல்லாமல், தன்னுடைய சுவாசிக்கும் இயக்கத்தால், உயிரை உடலில் தங்க வைக்கிறது. பார்க்காமலிருக்கக் கண்களை மூடிக்கொள்ளலாம்; பேசாமலிருக்க வாயையும் மூடிக்கொள்ளலாம். ஆனால் சுவாசிக்காமல் இருக்க மூக்கை மூடிக்கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே இறைவன் இப்படி ஒரு அமைப்பை நமக்கு அளித்திருக்கிறார்.

    இதே மூக்குக்கு ஒப்பானதுதான் காதுகளும். காதுகள் எப்போதும் நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க வேண்டும். என்றென்றும் சிரஞ்சீவியாக ராமநாமம் ஜபித்துக் கொண்டிருக்கும் அனுமன்கூட, பிறர் அதே ராமநாமத்தைச் சொல்ல, தான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஸ்ரீராமனிடம் கோரினான். அதனால்தான் அந்த சிரஞ்சீவி, இப்போதும், எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் எந்த வகையிலாவது அமானுஷ்யமாக ஆஜராகியிருப்பான் என்று சொல்வார்கள். பக்தியின் பத்து வகைகளில் ஒன்றாக, ச்ரவண பக்தி மிகவும் சிறப்பாகப் பேசப்படுகிறது. பஜனை கோஷங்களும் இதையே வலியுறுத்துகின்றன.

    ஆகவே காதுகளை நம்மால் மூடிக்கொள்ள முடியாததை நமக்கு இறைவன் அளித்த பாக்கியம் என்றே கருத வேண்டும். ‘செவியின் சுவையுணரா மாக்கள்’ என்று சொன்ன திருவள்ளுவரும், ‘கேள்வி ஞானம்’ விரும்பாதோரை ஐந்தறிவு கொண்ட மாக்கள் என்று சாடவில்லையா? இன்னும் ஆழமாக சிந்தித்தோமானால், கேள்வி ஞானம் மட்டுமல்ல, வேண்டாததைக் கேட்பவர்களும் மாக்களே என்று அவர் இடித்துரைக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. அப்படி தேவையில்லாததையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டு, அந்த சூழ்நிலைக்கேற்ப தேவையில்லாத சந்தேகங்களையும் வளர்த்துக்கொண்டு, மனதையும் மாசுபடுத்திக் கொள்கிறோமே, அந்த அறியாமையைத்தான் இப்படி சாடியிருப்பாரோ! செவியில் சுவையுணர வேண்டுமானால் அது தேனையொத்த சொற்களையன்றி வேறென்ன? தேன் தடவிய ‘விஷ’யங்களைக் கேட்கும்போதே தவிர்த்துவிட வேண்டும் என்ற அறிவுறுத்தல்தானே! இப்படி கேட்கும்போதே வேண்டாததை வடிகட்டும் ஆற்றல் நமக்குக் கைவரவேண்டுமென்றால், அது நல்லனவற்றை மட்டுமே கேட்டுப் பழகினால்தானே வரும்!

    ஒருமுறை, திருமுருக கிருபானந்த வாரியார், செவி மடுப்பதின் மகிமையை, அதாவது காதுகளின் இன்றியமையாமையை இப்படி விளக்கினார்: பார்த்துக்கொண்டே இருந்தால் கண்கள் வலிக்கும்; பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும்; ஒவ்வாமை நுகர்வால் மூக்கும் வலிக்கும்; ஏதேனும் உபாதையால் மெய்யும் (உடலும்) வலிக்கும். ஆனால் கேட்டுக்கொண்டே இருந்தால் காது வலிக்காது. இரு காது & வலி இருக்காது!

    *****

    3. காத்திருப்பதிலும் நன்மையே!

    நண்பர் ஒருவர் சற்றே முகவாட்டத்துடன் வந்தார். எனக்கு எந்த நற்பலனுமே உரிய நேரத்தில் கிடைக்க மாட்டேனென்கிறது. இவ்வளவு ஏன், என் வீட்டுத் தோட்டத்தில் நான் வளர்த்து வரும் டிசம்பர் பூச்செடிகூட ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில்தான் பூக்கிறது! என்றார்.

    அவருடைய விரக்தி எனக்கு நியாயமாகவேபட்டது. ஆனாலும், டிசம்பரில் பூக்காவிட்டால் என்ன, அடுத்த இரண்டு மாதங்களிலாவது பூக்கிறதே. பூக்காமலேயே போய்விடவில்லையே! என்று ஆறுதலாகச் சொன்னேன். இன்னொரு சிறப்பையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மற்றவர்களெல்லாம் டிசம்பர் மாதத்தில் அந்தப் பூவைப் பயன்படுத்தும்போது நீங்கள் ஒதுக்கப்பட்டாலும், பிறர் யாரும் பயன்படுத்தமுடியாத காலத்தில் அந்தப் பூவை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்; தனித்து அடையாளம் காணப்படுகிறீர்கள், என்று மேலும் ஆறுதலளித்தேன்.

    கடவுளுக்கு எதை, யாருக்கு, எப்போது தரவேண்டும் என்பது தெரியும். கிடைக்கும் வாய்ப்புகளுக்கும், கடந்துபோகும் வயதுக்கும் சில பேரால், சில சமயங்களில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாதுதான். ஆனால், சரியான தகுதியிருப்பவர்கள், அவசரப்படும்போது இழப்புகளை சந்திப்பதும், பொறுமை காக்கும்போது கூடுதல் லாபங்களை ஈட்டுவதும் நடைமுறையில் காணமுடிகிறது. காத்திருத்தலால் ஏற்படும் அமைதியின்மையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமானால், சற்றே காலம் தாழ்ந்தாவது சாதிப்பது எளிதாகும்.

    இரண்டு பேர் கடவுளைக் காண கடுந்தவம் இருந்தார்கள். அதைக் கண்ட நாரதர், அவர்களுக்காக சிபாரிசு செய்ய வைகுந்தம்போய் நாராயணனிடம், அந்த இரு பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடாதா? என்று கேட்டார்.

    வழக்கம்போல நாராயணன் மெல்லச் சிரித்தார். பிறகு, சரி, அவர்களிடம் போய், நான் ஒரு ஊசி காதுக்குள் யானையை நுழைத்து கொண்டிருப்பதாகவும், அந்த வேலை முடிந்ததும் அவர்கள் முன் காட்சி தருகிறேன் என்றும் சொல், என்று நாரதரிடம் சொன்னார்.

    அவர்களிடம் சென்ற நாரதர் இறைவன் தெரிவித்ததைச் சொன்னார். அவ்வளவுதான், முதலாமவர் பெரிதாக சிரித்தார். ஊசி காதுக்குள் யானையை நுழைப்பதா? ஆகக்கூடிய வேலையா இது? தரிசனம் கொடுக்காமல் தவிர்ப்பதற்காகவே திருமால் அப்படிச் சொல்லியிருக்கிறார்; சே! என்று அலுத்துக்கொண்ட அவர், தன் தவத்தை அந்த அளவிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து அகன்றார்.

    இரண்டாமவரோ, அடடா, எப்பேர்பட்ட அரிய வேலையை பகவான் செய்து கொண்டிருக்கிறார்! அவரால் மட்டுமே அதைச் செய்யமுடியும், நான் நம்புகிறேன்; பொறுமையாகவே காத்திருக்கிறேன். அதோடு அவர் வரும்வரை தொடர்ந்து தவத்தை மேற்கொள்கிறேன், என்று இறைவனின் பராக்கிரமத்தை வியந்து பாராட்டினார்.

    உடனே அங்கே ஒரு பேரொளி தோன்றியது. இறைவன் இரண்டாமவருக்கு தரிசனம் தந்தார்.

    ஆகவே, பொறுத்திருப்பதிலும் நன்மை விளையத்தான் செய்கிறது. நியாயமான பொறுமை அந்த நன்மையைச் சற்று காலதாமதமாக அளிக்கலாமே தவிர, முற்றிலும் இல்லாமல் செய்துவிடாது

    பிப்ரவரியில் பூக்கும் டிசம்பர் பூக்களைப் போல!

    *****

    4. தேங்காயில் இறை-மனிதாபிமானம்

    சமீபத்தில் நான் சென்றிருந்த ஒரு கோயிலில் ஏகப்பட்ட பக்தர்கள். கருவறையிலிருந்து வெளியே வந்த அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டுகளை பக்தர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, கணீரென்ற குரலில் இறைவனுக்கு அர்ச்சனை செய்தபடி உள்ளே சென்றார். அர்ச்சனை முடித்து, தீபாராதனை காட்டி, கற்பூரத் தட்டுடன் அர்ச்சகர் வெளியே வந்தார். அனைவரும் அந்த ஒளி வெம்மையை உள்ளங்கைகளால் ஒற்றி கண்களிலும் உச்சந்தலையிலும் பதித்துக் கொண்டார்கள். அடுத்து விபூதி குங்கும பிரசாதம். அதற்குப் பிறகு அர்ச்சனை செய்தவர்களுக்கு மிகச் சரியாக அந்தந்த நபருக்கு அவரவருக்கு உரிய தட்டு அல்லது பாலிதின் பை அல்லது துணிப்பை என்று பார்த்துப் பார்த்துக் கொடுத்தார்.

    அப்போது, சாமி, ஒரு நிமிஷம் என்று ஒரு பக்தர் அர்ச்சகரை அழைத்தார்.

    சொல்லுங்க என்று அவரருகே வந்தார் அர்ச்சகர்.

    இந்தாங்க என்று சொல்லி, இருபது ரூபாய் தாள் ஒன்றை அவரிடம் நீட்டினார் பக்தர்.

    அதான் நீங்க ஏற்கெனவே தட்டோடேயே தட்சணையைக் கொடுத்திட்டீங்களே என்று சொன்னபடி அர்ச்சகர் தயங்கினார்.

    எனக்குத் தெரியும் சாமி, நான் பார்த்திட்டேன் பக்தர் கண்களில் சற்றே நீர்

    Enjoying the preview?
    Page 1 of 1