Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu
Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu
Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu
Ebook76 pages27 minutes

Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sabitha Joseph started his career as a journalist in 1989. He has worked in various famous magazines like Kumudham, Kungumam, Rani and Kalki. He has consolidated his 20 years of experience and written various books as series of 100s like 'Periyar 100', 'Anna 100', 'Kamarajar 100' and many more.

He is now writing another series of books as 'Mahatma Manavarkalukku Sonnathu', 'Abdul Kalaam Manavarkalukku Sonnathu' and so on. All these books are written to encourage young generation to aim big and achieve their goals.

His writings are very simple and conveys message to society and young generation and we are very happy to publish his books.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580122802587
Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu

Read more from Sabitha Joseph

Related to Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu

Related ebooks

Reviews for Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu - Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    கிருபானந்த வாரியார் மாணவர்களுக்குச் சொன்னது

    Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu

    Author:

    சபீதாஜோசப்

    Sabitha Joseph

    For more books
    http://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பதிப்புரை

    எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும் - என்பது மகாத்மா காந்தியின் வாக்கு.

    உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்லில் அதைத் தேய்த்துப் பார் - என்பது மகாகவி அல்லாமா இக்பால் வாக்கு

    இவைகளை உறுதிமொழியாகக் கொண்டு தமது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர் சபீதாஜோசப்.

    எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி.

    1989-இல் பத்திரிகையாளராக வாழ்வை தொடங்கினார். தமிழகத்தின் பல முன்னணி இதழ்கள் மூலம் அறியப்பட்டவர். பல ஆண்டு அனுபவத்தை எழுத்தாக்க நக்கீரன் வாசல் திறந்து விட்டது.

    2006-இல் எழுத்தாளராக பெரியார் 100, காமராஜர் 100, அண்ணா 100, கலைஞர் 100, எம்.ஜி.ஆர். 100, சிவாஜி 100, கண்ணதாசன் 100, கலைவாணர் 100, ரஜினி 100, "கமல் 100 என்று நூறுகளில் தமது படைப்பு பணியைத் தொடர்ந்தார்.

    2006-இல் பத்து நூல்கள்.

    2007-இல் இருபது நூல்கள்

    2008-இல் 22 நூல்கள்

    2009-இல் 16 நூல்கள்

    2010-இல் இன்னும் பல அரிய நூல்கள்

    என ஐந்து ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டிருக்கும் எழுத்தாளர் சபீதா ஜோசப்பை விரைவில் சதம் அடிக்க நக்கீரன் பதிப்பகம் வாழ்த்துகிறது.

    கிருபானந்த வாரியார் மாணவர்களுக்குச் சொன்னது எனும் இந்நூலை மிக நேர்த்தியாகத் தொகுத்தளித்துள்ளார் இந்நூலாசிரியர் சபீதாஜோசப்.

    சமர்ப்பணம்

    தமிழ் வள்ளல்

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின்

    பேரன் மயிலப்பன்

    அவர்களுக்கு..

    பெரியோர்கள்

    எந்தக் கூட்டத்திலே பெரியோர்கள் இல்லையோ அது சபையாகாது. எவர்கள் தர்மத்தை சொல்லுகிறதில்லையோ அவர்கள் பெரியோர்கள் ஆகமாட்டார்கள். எதில் உண்மையில்லையோ அது தர்மமாகாது.

    செய்யக்கூடாதவை

    உனது செல்வம் அழியாமல் இருக்க வேண்டுமானால், நீ மூன்று காரியங்களைச் செய்யாமலிருக்கவேண்டும். ஏழைகள் கண்களிலிலிருந்து நீர் வரவிடாமல் நடந்து கொள்ளவேண்டும். பிறருடைய பொருள் உனக்கு வரவேண்டும் என்று கனவிலும் நினைக்காதே, நியாயம் அல்லாத வழிகளில் பொருளைச் சேர்க்காதே.

    தேடிக்கொள்

    இராக் காலத்திற்கு வேண்டியதைப் பகலில் தேடி வைத்துக்கொள். மழைக்காலத்தில் வேண்டியதை மற்றையக் காலத்தில் தேடி வைத்துக்கொள். முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக்கொள். மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்.

    வந்த வேலையை செய்

    நாம் ஏன் பிறந்தோம்? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகவேண்டும்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்ற வினாக்கள் உன் உள்ளத்தில் எழுக. அவற்றை உணர்க. வந்த வேலையைச் செய். வந்த வேலையை மறந்து மயங்கித் திரியாதே.

    தெய்வம் யாருக்குத் தெரியும் ?

    சுருக்கெழுத்தும், கைரேகையும் அவற்றை படித்தவனுக்குத்தான் தெரியும். மற்றவனுக்கு அவைகள் வெறும் கோடாகத்தான் தெரியும். அதுபோல் கோயிலில் இருக்கும் கடவுளின் திருவுருவம் பக்தி உடையவருக்குத்தான் தெரியும். மற்றவனுக்குத் அது வெறும் கல்லாகத் தான் தெரியும்.

    பணிவை விடாதே

    பணிவு என்ற பண்பு உன் வாழ்க்கையில் உயிர் நாடி. பணிவு இன்றி வாழ்பவனுடைய வாழ்க்கைத்தரம் நிச்சயமாக உயர்வடையாது. அடக்கமே உன்னை அமரனாகச் செய்யும். அதுவும் இளமையில் அந்த அடக்கம் தருவது பொன்மலர் வாசனை பெற்றது போலாகும்! எனவே பணிவைக் கைவிடாதே.

    கோபபடாதே

    கோபம் வரும்போது அந்த இடத்தை விட்டுச் சென்று விடவேண்டும். காபி சூடாக இருந்தால்

    Enjoying the preview?
    Page 1 of 1