Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkum Oru Idam Undu
Unakkum Oru Idam Undu
Unakkum Oru Idam Undu
Ebook89 pages29 minutes

Unakkum Oru Idam Undu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த வாழ்க்கையே வெற்றி கொள்ள பயிற்சியும், முயற்சியும் தேவை. இங்கே எண்ணற்ற மனித வளங்கள் கொட்டிக் கிடக்கிறது. மனிதவளத்தை ஒழுங்குபடுத்தி, பயிற்சி அளித்து, பல வெற்றியாளர்களை உருவாக்கலாம். "உனக்கும் ஓர் இடம் உண்டு" என்ற தலைப்பில், இவர் எழுதிய தன்னம்பிக்கைத் தொடரின் 10 பகுதிகளின் தொகுப்பே இந்நூல்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580116508457
Unakkum Oru Idam Undu

Read more from Kavi. Muruga Barathi

Related to Unakkum Oru Idam Undu

Related ebooks

Reviews for Unakkum Oru Idam Undu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkum Oru Idam Undu - Kavi. Muruga Barathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உனக்கும் ஓர் இடம் உண்டு

    Unakkum Oru Idam Undu

    Author:

    கவி. முருகபாரதி

    Kavi. Muruga Barathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavi-muruga-barathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    நன்றி

    அணிந்துரை

    உனக்கும் ஓர் இடம் உண்டு

    முதல் இடம் தாண்டி, முன்னேறுங்கள்...!

    இரண்டாம் இடத்தில் இருந்து இயக்குங்கள்...!

    மூன்றாம் இடத்தில் நின்று முடிவெடுங்கள்...!

    நான்காம் இடத்தைச் சிந்தித்து, நலம் பெறுங்கள்...!

    ஐந்தாம் இடத்தில் கலந்து அணி செய்யுங்கள்...!

    ஆறாம் இடத்தை அறிந்து, அகிலம் வெல்லுங்கள்.!

    ஏழாம் இடத்தைக் கற்று, எதையும் பெற்றிடுங்கள்...!

    எட்டா(ம்) இடம் பயின்று, உயர்வை எட்டுங்கள்...!

    ஒன்பதின் இடம் புரிந்து, ஒன்றாய் நில்லுங்கள்!

    சமர்ப்பணம்

    தங்கள் இல்லங்களில் எனக்கும் ஓர் இடம் தந்து உதவியவர்களுக்கும், தங்கள் உள்ளங்களில் எனக்கும் ஓர் இடம் தந்து உயர்த்தியவர்களுக்கும்...!

    நன்றி

    இந்தக் கட்டுரைகளைத் தொடராக இனிய நந்தவனம் இதழில் வெளியிட்ட திரு. நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும், இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கி என்னைப் பெருமை செய்த மூத்த பயிற்றுநர் முனைவர். பாலசாண்டில்யன் அவர்களுக்கும்...!

    அணிந்துரை

    எனக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் ஒரு தனிராசி உண்டு. என்னுடைய மிக முக்கிய நண்பர்கள் வட்டத்தில் ஐந்து பேர் (இதயமருத்துவர் டாக்டர். கீதா சுப்பிரமணியன், தொழில் ஆலோசகர் லீன் துரைசாமி, எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர்கள் சுரேகா சுந்தர், கிருஷ்ண வரதராஜன் மற்றும் கவி. முருகபாரதி) புதுக்கோட்டையை சார்ந்தவர்கள். இவர்கள் எல்லோருமே மிக அறிவாளிகள். பிரபலமானவர்கள். பிறருக்கு உதவி செய்யக் கூடியவர்கள். உழைப்பால் உயர்ந்தவர்கள்.

    அந்த வகையில் 'உனக்கும் ஓர் இடம் உண்டு' (எனது இதயத்தில் - இந்த வெற்றி உலகத்தில்) எனும் இந்த சிறிய சீரிய நூலின் ஆசிரியர் கவி. முருகபாரதி மிக முக்கியமானவர். இவர் மெத்தப்படித்தவர். சிறுவயதிலேயே அரிய பல சாதனைகள் படைத்தவர். பன்முகத்திறன் கொண்ட இவர் இலக்கிய மற்றும் சமூகத்தொண்டுகள் பல ஆற்றிவருபவர்.

    இனிய நந்தவனம் மாத இதழில், உனக்கும் ஓர் இடம் உண்டு என்ற தலைப்பில், இவர் எழுதிய தன்னம்பிக்கைத் தொடரின் 10 பகுதிகளையும் தொகுத்து, ஒரு நூலாக வெளியிட முனைந்திருப்பதும், அதற்கு ஓர் அணிந்துரை என்னிடம் கேட்டு இருப்பதும் எனக்கு மிகுந்த உவகை அளிக்கிறது. எது செய்தாலும் அதில் ஒரு வித்தியாசம், தனித்தன்மை கொண்ட நண்பர் பாரதி, இந்த நூலிலும் அவ்வண்ணமே செய்துள்ளார்.

    எண்களின் சிறப்புகளோடு, Business & Management Concept-களைப் பொருத்தி 10 பகுதிகளின் தலைப்புகளில் இந்தநூலை எழுதி இருப்பது சாலச்சிறந்த ஒன்றாகும். ஒவ்வொரு பகுதியும் நம்மிடம் பேசுவது போலவே இருக்கிறது. கூர்ந்து கவனித்துப் படித்து அறிந்தால், அற்புதமான பலன்களைப் பெறலாம் என்பது திண்ணம். தனக்குத் தெரிந்த சில நுட்பமான விஷயங்களை, சிலர் பகிர்ந்து கொள்ளத் தயங்குவர். இங்கேதான் நூலாசிரியர் வித்தியாசப்படுகிறார். மனம்திறந்து, நம் எல்லோருடனும் அவற்றைப் பகிர்ந்து மகிழ்கிறார் - "யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக" என்பதுவாக.

    ஒவ்வொன்றும் ஒரு தனிச்சிறப்பு கொண்டது. 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது இந்த நூலுக்கு மிகவும் பொருந்தும்.

    வளர்ச்சி என்பது சுயதேடல் அல்லது கண்டுபிடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். வளர்ச்சியின் பாதையில் நாம் செல்லும் பொழுது, நமக்குள் புதைந்து கிடக்கும் அளப்பரிய ஆற்றலை நாம் கண்டுணர்கிறோம். அதோடு நிற்காமல் முழுத்திறனையும், அந்தத் திறனால் நாம் என்னவாக மாறமுடியும் என்பதையும் நாம் கண்டுபிடிப்போம்.

    புதிய திறன்களை, புதிய விஷயங்களை, புதிய மனப்பான்மைகளை தொடர்ச்சியாக நாம் வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில், கல்லூரியோடு கல்வி கற்றல் முடிந்து விடுவதில்லை. உண்மையில் சொல்லப்போனால் கல்லூரிக்குப் பிறகுதான் கற்றல் என்ற விஷயமே ஆரம்பமாகிறது. தன்னார்வக் கல்வியறிவு மற்றும் தன்னார்வ வளர்ச்சி இல்லாமல், நம் வாழ்க்கை பட்டுப்போன மரத்திற்கே சமமானதாக இருக்கும்.

    வளர்ச்சி என்பது

    Enjoying the preview?
    Page 1 of 1