Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

யுத்த சத்தம்
யுத்த சத்தம்
யுத்த சத்தம்
Ebook153 pages54 minutes

யுத்த சத்தம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜீப் ஸ்டேஷனை நெருங்கியது.
 ஒட்டுமொத்த ஸ்டேஷனும் அந்த நடுநிசி வேளையில் நிச்பதமாய் இருக்க, இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஜீப்பினின்ரும் குதிக்காத குறையாக இறங்கி உள்ளே போனார்.
 ட்யூட்டியில் இருந்த ஹெட்கான்ஸ்டபிள் மகேந்திரன் இருள் படிந்த முகத்தோடு நாற்காலியில் உட்கார்ந்து இரண்டு செண்ட்ரி கான்ஸ்டபிள்களோடு தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருக்க, இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் மூன்று பேரும் எழுந்தார்கள்.
 சல்யூட் அடித்துவிட்டு மௌனமாய் நின்றார்கள். மெலிதாய் வியர்க்க ஆரம்பித்தார்கள்.
 அவர்களை நெருங்கி நின்றார் சுபாஷ்"இங்கே என்னய்யா பிரச்னை...?"
 ஹெட்கான்ஸ்டபிள் மகேந்திரன் நெற்றியில் மினுமினுக்கும் வியர்வையுடன் கஷ்டப்பட்டு எச்சின் விழுங்கிவிட்டுப் பேசினார்.
 "அது... அது... வந்து ஸார்..."
 "யோவ்... வார்த்தைகளை மென்னு முழுங்காமே பிரச்னை என்னான்னு சொல்லித் தொலை. கமிஷனர் எனக்கு போன் பண்ணி ஸ்டேஷனுக்குப் போய்ப் பாருன்னு கடுப்பேத்துறார். ஸ்டேஷனுக்கு வந்தா நீ இந்த முழி முழிக்கிறே....?"
 "அ... அது வந்து ஸார்... ஸ்டேஷன் வாசல்ல எதிர்பாராத விதமாய் ஒரு மோசமான சம்பவம் நடந்து போச்சு ஸார்..."
 "மோசமான சம்பவம்ன்னா...?"
 "ஒரு கொலை ஸார்."
 "என்னது...? கொலையா...?"
 "ஆமா ஸார்... ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு ஆட்டோவுல வந்தா. ஆட்டோவை வெயிட்டிங்ல போட்டுட்டு ஸ்டேஷனுக்குள்ளே நுழைஞ்சா. நான் அந்தப் பொண்ணைப் பார்த்து 'என்ன விஷயம்'ன்னு கேட்டேன். 'ஒரு கம்ப்ளெயிண்ட் தரணும். இன்ஸ்பெக்டர் இருக்காரா'ன்னு கேட்டா. நான் 'இன்ஸ்பெக்டர் வெளியே போயிருக்கார். சப்-இன்ஸ்பெக்டர் லீவ்ல இருக்காரு. உன்னோட கம்ப்ளெயிண்ட் என்னான்னு எழுதிக் குடு'ன்னேன்.
 அதுக்கு அந்தப் பொண்ணு 'உங்ககிட்டே அதைச் சொல்ல முடியாது. இன்ஸ்பெக்டர் வர்ற வரைக்கும் நான் ஆட்டோவுல வெயிட் பண்றேன்'னு வாசல்ல நின்னுட்டிருந்த ஆட்டோவுல போய் உட்கார்ந்துகிட்டா. பார்க்கிறதுக்கு கொஞ்சம் படிச்ச பொண்ணு மாதிரி இருந்ததால, நாங்களும் அந்தப் பொண்ணுகிட்டேகெடுபிடி காட்டலை. நீங்க எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடுவீங்கன்னு நாங்களும் வெயிட் பண்ணினோம். அப்பத்தான் அந்த சம்பவம் நடந்தது ஸார்..."
 சுபாஷ் கோபத்தில் வெடித்தார்.
 "என்ன நடந்ததுன்னு சொல்லய்யா."
 "ஸார்... நானும் செண்ட்ரி கான்ஸ்டபிள்ஸ் வினோத்தும், முஸ்தபாவும் ஸ்டேஷனுக்குள்ளே உட்கார்ந்து செல்போன்ல ஒரு பாட்டைப் போட்டு கேட்டுகிட்டு இருந்தோம். திடீர்னு அந்தப் பொண்ணோட அலறல் சத்தம் கேட்டது. நாங்க மூணு பேரும் ஓடிப் போய்ப் பார்த்தோம். ஆட்டோவில் உட்கார்ந்திருந்த அந்தப் பொண்ணை ரெண்டு பேர் இழுத்துப் போட்டு கையில் வெச்சிருந்த அரிவாளாலே தாறுமாறாய் வெட்டிகிட்டு இருந்தாங்க. ஒருத்தன் ஆட்டோ டிரைவரை அடிச்சுகிட்டு இருந்தான். செண்ட்ரி கான்ஸ்டபிள் வினோத்தும் முஸ்தபாவும் சுவரில் மாட்டியிருந்த துப்பாக்கிகளை எடுத்துகிட்டு வர்றதுக்குள்ளே அந்தப் பொண்ணையும், ஆட்டோ டிரைவரையும் தாக்கிய மூணு பேரும் இருட்டுல ஓடி, பக்கத்து சந்துக்குள்ளே நுழைஞ்சு தப்பிச்சுட்டாங்க. வினோத்தும் முஸ்தபாவும் கொஞ்ச தூரம் ஓடிப் போய்ப் பார்த்தாங்க. அவங்க பார்வையில தட்டுப்படலை. அப்புறம் வெட்டுப்பட்ட பொண்ணை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் பிழைக்க வைக்க முடியுமான்னு பார்த்தோம். கழுத்துல வெட்டு பலமாய் விழுந்ததால தலை துண்டாகி.....!"
 சுபாஷ் முகம் சிவந்தார்.
 "அந்தப் பொண்ணோட பாடி எங்கேய்யா?"
 "ஸ்டேஷனுக்குப் பின்னாடி பாடியைக் கொண்டு போயிட்டோம் ஸார்! ஸ்டேஷனுக்கு முன்னாடி பாடியைப் போட்டு வெச்சிருந்தா, கொஞ்ச நேரத்துல கூட்டம் கூடி மீடியாவுக்கு நியூஸ் போயிடும்ன்னு பயந்தோம். கண்ட்ரோல் ரூமுக்கும், ஏ.ஸி.க்கும் தகவல் கொடுத்துட்டு, உங்க செல்லுக்கு போன் பண்ணினோம் சார். 'நாட் ரீச்சபிள்'ன்னு ரெக்கார்ட் வாய்ஸ் வந்தது."
 "ஆட்டோ டிரைவர்க்கு என்னாச்சு?""அந்த ஆளுக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை ஸார். அந்தப் பொண்ணை வெட்ட வந்த ஆட்களைத் தடுக்கப் பார்த்து இருக்கான். அடிச்சிருக்காங்க... கையில, கால்ல ரத்தக் காயம் ஏற்பட்டிருக்கு..."
 "இப்ப டிரைவர் எங்கே?"
 "ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்து, பின்னாடி இருக்கிற ரூம்ல உட்கார வெச்சிருக்கோம் ஸார்."
 சுபாஷ் புயல் வேகத்தில் ஸ்டேஷனின் பின்புறத்தை நோக்கிப் போனார். அரையிருட்டில் ஆட்டோ ஒன்று நிறுத்தப்பட்டு இருக்க, மரத்துக்குக் கீழே போர்வையால் போர்த்தப்பட்டு இருந்த அந்த உடல் தெரிந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223569589
யுத்த சத்தம்

Read more from Rajeshkumar

Related to யுத்த சத்தம்

Related ebooks

Related categories

Reviews for யுத்த சத்தம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    யுத்த சத்தம் - Rajeshkumar

    ஏடு இட்டோர் இயல்

    ‘அதிசயம், ஆனால் உண்மை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இனி எங்கும் தேடவேண்டாம். இதோ... ராஜேஷ்குமார் அண்ணன்தான் அதன் அர்த்தம்.

    கடந்த ஐம்பது வருடப் பத்திரிகையுலகில் தவிர்க்க இயலாத ஒரு பெயர்தான் ராஜேஷ்குமார்.

    விற்பனையை உயர்த்த வேண்டும் என்பதற்காக ராஜேஷ்குமாரின் தொடர்கதையைப் போட்ட பிரபல பத்திரிகைகளும் உள்ளன.

    புதியதாகப் பத்திரிகை தொடங்கப்பட்டால் ‘கேக்வாக்’ என்பது போல் ‘ராஜேஷ்குமார் தொடர் போடு’ என்ற எழுதப்படாத சட்டமும் இருக்கு.

    இவ்வளவு பெருமை கொண்டவராக இருந்தாலும், இறுமாப்பு இல்லாதவர் ராஜேஷ்குமார்.

    எழுத்தும், பேச்சும் ஒன்றாக இருக்கும் எழுத்தாளர்கள் சிலர்தான். அதில் ராஜேஷ்குமாரும் ஒருவர். கட்டிய மனைவியைத் தவிர மற்ற பெண்கள் எல்லோரையுமே தாயாகவும், தமக்கையாகவும், தனயையாகவும் (தனயன் என்பதின் பெண்பால்) மட்டும் பார்ப்பவர்.

    தனது எழுத்துலகில் ஒரு பாகுபலியாக இருந்தாலும், இன்னும் ஓர் அறிமுக எழுத்தாளர்போல் அப்படி ஓர் அடக்கம், ஆவல், ஆசை கட்டுக்கடங்காமல் இருக்கிறது.

    நான் முதன்முதலில் ஃபோனில் பேசியபோது என்னை, ‘சார்’ என்றுதான் அழைத்துப் பேசினார். முதன்முறையாக சந்தித்தபோது, ‘மிஸ்டர் அசோகன்...’ என இழுத்தார். அப்போது என் அருகில் இருந்த ‘சுபயோகம்’ பத்திரிகை ஆசிரியர் விவேகா அண்ணன், ‘இவர்தான் தம்பி அசோகன்’ என்றார். ‘என்ன… இவரா? ஒரு... வயதான நபரா இருப்பீங்க என்று நான் நினைத்தேன்... ஆமா, நானும் ‘தம்பி’ என்றே அழைக்கலாமா?’ என்றார். ‘அண்ணே... அது என் பாக்கியம்’ என்றேன்.

    img_1

    அவருடைய ஐம்பதாவது பொன்விழாவை பத்திரிகையுலகம் கொண்டாடத் தொடங்கிவிட்டது.

    ஜூலை மாதம் 14ஆம் தேதி ‘ஒடிசி’ என்ற பதிப்பகத்தார் கோவையில் ஒரு வாசகர் விழாவை நடத்தி விட்டார்கள். விழா, தொழிலதிபர் பி.ஆர். கிருஷ்ணராஜ் வானவராயர், டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத் ஆகியோர் தலைமையில், சுபவீணா அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை ராஜேஷ்குமார் வாசகர் தலைமை மன்ற டி.எஸ்.சிவா, வெங்கடராமன், உதயகுமார், கம்பம் ரமேஷ், குளோபல் பேங்க் ராம்குமார், நாகர்கோவில் கோபாலகிருஷ்ணன், சென்னை கணேஷ் பாலா, ஈரோடு அருண் எனப் பலர் கலந்துகொண்டார்கள். விழா சிறப்பாக இருந்தது.

    அதெல்லாம் இருக்கட்டும். நாம எப்ப விழா எடுக்கப்போறோம் என்றுதானே கேட்கிறீர்கள்? இருங்க, இருங்க... நாம எடுக்காம பின்ன வேற யார் எடுப்பாங்க? சிறப்பான ‘நம்ம விழா’வாக நடத்தலாம். விழாவைப் பற்றி விரைவில் தகவல் தருவேன். நீங்க நாவலைப் படிக்கப் புறப்படுங்க.

    அதே லவ்வுடன்,

    ஜி. அசோகன்

    ராஜேஷ்குமாரின் முகநூல்

    அன்புக்குரிய வாசக உள்ளங்களே! வணக்கம்.

    இன்றைக்கு நான் உங்களிடம் பேசப்போகிற விஷயம் என்னுடைய ‘வாட்ஸ்அப்’ பகுதிக்கு வந்த ஓர் அற்புதமான தகவல்தான். இதோ... அந்தத் தகவல்:

    ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் தீட்டு என்பார்கள். ஆண் பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு. இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டுதானே?

    தீட்டுடைய இந்த உடலை வைத்துக்கொண்டு எப்படி கடவுளை வழிபட முடியும்? யோசித்துப் பாருங்கள்.

    இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதற்கு இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்போதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்று இவற்றைச் சொன்னார்கள்.

    உண்மையில் தீட்டு என்பது ஐந்து வகைப்படும். ஒன்று காமம், இரண்டாவது குரோதம், மூன்றாவது லோபம், நான்காவது மதம், ஐந்தாவது மாச்சர்யம்.

    இதில் காமம் என்பது ஆசை. நாம் எந்த ஒரு பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால் அந்தப் பொருளின் நினைவாகவே மாறிவிடுவோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும் அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சி செய்வதும், அலைவதுமாகவே இருப்போம். அந்தப் பொருள் கிடைத்துவிட்டால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இல்லையென்றால், இடிந்து போய் உட்கார்ந்துவிடுவோம். இப்படிப்பட்ட நேரத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனைகள் வராது. அதற்கு மாறாக, ஆசைப்பட்ட பொருளை அடைவதற்காக தவறான வழிகளைத் தேர்ந்தெடுப்போம். இதன் காரணமாகத்தான் ஆசைக்கு அடிமையாகாதே, அதைத் தீண்டாதே என்று பெரியவர்கள் சொன்னார்கள்.

    இரண்டாவது குரோதம். குரோதம் என்றால் கோபம். ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டால் யாராக இருந்தாலும் சரி, முன்னே பின்னே பாராமல் தாய், தந்தையர், சகோதரர், உறவினர்கள் என்றும் பாராமல் சிந்திக்காமல் கடுமையாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கோபத்தின் காரணமாக கொலைக் குற்றம் புரிந்துவிட்டு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். அதனால்தான், ‘கோபத்தைப் போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை’ என்று சொன்னார்கள். கோபத்தால் அழிந்தவர்கள் கோடானு கோடி பேர். ஒரு மனிதன் கோபம் கொள்ளும்பொழுது நம் உடம்பில் உள்ள எத்தனையோ சுரப்பிகள் தேவையில்லாமல் செயல்படுவதால் உயிரோட்டமான ஜீவ அணுக்கள் சுரக்கும் ஹார்மோன்களின் வீரியத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் செத்து மடிகின்றன. இதன் காரணமாக, அந்த மனிதனின் ஆயுளும் குறைந்துவிடுகிறது. கோபம் என்னும் அரக்கனிடம் சிக்கியவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால்தான், கோபத்துக்கு அடிமையாகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

    மூன்றாவது தீட்டு லோபம். லோபம் என்றால் சுயநலம். பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கமே இல்லாமலும் சுயநலத்துடன் பொருள்களைச் சேர்ப்பது. சுயநலத்திற்கு மூலகாரணம் கஞ்சத்தனம். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீயவழியில் பொருள்களைச் சம்பாதிக்கக்கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து பிறர் பொருளை அபகரித்து தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றியே யோசிப்பது, பாதுகாப்பது ஆகிய எல்லாமே சுயநல வேகமே. இப்படிப்பட்ட நேரங்களிலும் இறைவனைப் பற்றி சிந்தனை செய்ய முடியாது. அதனால்தான் சுயநலத்திற்கு அடிமையாகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள். இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

    நான்காவது தீட்டு மதம். மதம் என்றால் சாதியோடு சம்பந்தப்பட்டது அல்ல. மதம் என்றால் கர்வம், ஆணவம் என்று பொருள். எதையும் என்னால்தான் செய்ய முடியும் என்கிற கர்வமும், தான் என்ற அகந்தையால் திமிர்பிடித்து அலைவதையும் இதற்கு ஒப்பிடலாம். ஆணவம் பிடித்த மனிதன் பெரியவர்கள் உட்பட யாரையும் மதிக்கமாட்டான். மற்றவர்களை புல், பூண்டாக எண்ணி செயல்படுவான். தெய்வத்தை இகழவும் தயங்கமாட்டான். அதனால்தான் இறைவனுக்குப் பிடிக்காத இந்த ‘மதம்’ என்ற ஆணவம் நான்காவது தீட்டாகும்.

    அடுத்த ஐந்தாவது தீட்டு மாச்சர்யம். மாச்சர்யம் என்றால் பொறாமை. எந்த நேரமும் நாம் நன்றாக இல்லையே என்று தன்னையே நொந்துகொள்வது இது. எல்லோரும் சுகமாக இருக்கிறார்களே, நாம் மட்டும் அப்படி இல்லையே என்று நினைப்பதோடு மட்டும் அல்லாமல், மற்றவர்கள் எப்போது கஷ்டப்படுவார்கள், எப்போது செத்துப் போவார்கள் என்பதும் இவர்களின் எண்ணமாய் இருக்கும். பிறர் சந்தோஷமாக இருந்தால், அவர்களைப் பார்த்து தீய எண்ணங்களோடு பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு - நன்றாக வாழ்பவர்கள் யாரைப் பார்த்தாலும் சகித்துக்கொள்ளமுடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களை இறைவன் விரும்புவானா என்ன? எனவே இந்த மாச்சர்யம் எனப்படும் பொறாமையும் தீட்டு.

    சரியா சொன்னீங்க ஸார்...

    லைன்ல யாரு?

    ஸார்... நான் யாழ் சத்யா. ஸ்ரீலங்காவிலிருந்து பேசறேன்.

    ஓ.... சத்யா... நீங்களா? என்னோட செல்ஃபோனின் மெஸெஞ்சர் பாக்ஸுக்கு நீங்க அனுப்பின லெட்டர் வந்து சேர்ந்தது. உங்க அன்புக்கும், புத்தக வாசிப்புக்கும் என் நன்றி.

    நான்தான் ஸார் நன்றி சொல்லணும். என்னுடைய இளமைக் காலத்திலும் சரி, இப்பவும் சரி. என்னுடைய நேரங்கள் பயனுள்ளவையாக மாற உங்களுடைய புத்தகங்கள்தான் காரணம். நீங்க எழுதப்போகிற அடுத்த க்ரைம் நாவலில் நான் ஒரு கதாபாத்திரமாய் வரணும். எழுதுவீங்களா ஸார்...?

    நிச்சயம்.

    தலைப்பு ஸார்...?

    சத்யாவின் சபதம்.

    மிக்க அன்புடன்,

    ராஜேஷ்குமார்

    ராஜேஷ்குமாரிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1