Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சத்யாவின் சபதம்!
சத்யாவின் சபதம்!
சத்யாவின் சபதம்!
Ebook166 pages59 minutes

சத்யாவின் சபதம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்குள் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் நுழைந்த போது சரியாய் சாயந்தரம் ஐந்து மணி.
 இருபத்தேழு வயது நிரம்பிய பத்ரி, ஏ.ஸி. கோச்சிலிருந்து ஒரு சிறிய சூட்கேஸோடு வெளிப்பட்டு அந்த நீளமான ப்ளாட்பாரத்தில் நடைபோட்டான். சில வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரி ஜங்க்‌ஷன் இப்போது இல்லை. நிறைய மாறியிருந்தது. ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் நாற்காலிகளில் மக்கள் செல்போன்களை தடவியபடி தங்களுடைய ரயில்களுக்காக காத்திருந்தார்கள்.
 பத்ரி ஸ்டேஷனில் இருந்த வெயிட்டிங் ரூமுக்குள் - குளியலறைக்குப் பக்கத்தில் இருந்த மறைவான பகுதிக்குப் போய் சூட்கேஸைத் திறந்தான். அடர்த்தியான நீல வண்ணத்தில் இருந்த பேண்ட் சர்ட்டுக்கு மாறி - அருகில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தான். அடர்த்தியான தலைமுடியை வாரிக் கொண்டபின் சூட்கேஸை லாக் செய்து கொண்டு வெயிட்டிங் ரூமிலிருந்து வெளிப்பட்டான்.
 சர்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வைபரேஷனில் உறுமியது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்சென்னையிலிருந்து அவனுடைய நண்பன் சக்திவேல். பத்ரி செல்போனை காதுக்கு ஏற்றி ''சொல்லு சக்தி'' என்றான்.
 ''என்ன... சேலம் ரீச்டா...?''
 ''ம்... இப்பத்தான் வெஸ்ட்கோஸ்ட் உதிர்த்துட்டுப் போறான். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே ஸ்டேஷனுக்கு வெளியே போய் ஒரு டாக்ஸியைப் பிடிச்சுடுவேன்.''
 ''ப... ப... பத்ரி...!''
 ''என்ன சக்தி... குரல் நடுங்குது...?''
 ''எதுக்கும் ஒரு தடவைக்கு இன்னொரு தடவை யோசனை பண்ணிக்க...''
 ''என்னடா... பேக் அடிக்கிறே? ராத்திரி பூராவும் வண்டி வண்டியா தைரியம் சொன்னது நீதான்டா.''
 ''நான் இல்லைன்னு சொல்லலை... இருந்தாலும் மனசுக்குள்ளே சின்னதாய் ஒரு பயம்.''
 ''அந்த பயத்தோட தலையில் ஒரு குட்டு வெச்சு வெளியே துரத்து... நான் என்னோட முடிவிலிருந்து மாறப் போறது இல்லை.''
 ''சரி... சரி... பார்த்து...! உன்னோட போனை எதிர்பார்த்து காத்திட்டிருப்பேன்.''
 ''எப்படியும் ரெண்டு மணி நேரத்துக்குள்ளே என்கிட்டயிருந்து உனக்கு போன் வரும். 'வாவ்'ன்னு சொல்லி கத்த தயாராய் இரு.''
 ''இட்ஸ்... ஓ.கே... ஆல் த பெஸ்ட்...''
 பத்ரி செல்போனை அணைத்துவிட்டு, உற்சாக நடைபோட்டு பிளாட்பாரத்தை முழுமையாய் கடந்து ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான். வரிசையாய் காத்திருந்த டாக்ஸிகளில் ஒன்றை நெருங்கினான். பக்கத்தில் யார்கூடவோ நின்று பேசிக் கொண்டிருந்த அந்த டிரைவர் வேகவேகமாய் பக்கத்தில் வந்தார்.
 '

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224079032
சத்யாவின் சபதம்!

Read more from Rajeshkumar

Related to சத்யாவின் சபதம்!

Related ebooks

Related categories

Reviews for சத்யாவின் சபதம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சத்யாவின் சபதம்! - Rajeshkumar

    ஏடு இட்டோர் இயல்

    என் இனிய வாசக நெஞ்சங்களே!

    ஜி.அசோகனின் அன்பு வணக்கங்கள்! ‘சத்யாவின் சபதம்’ கதையை அண்ணன் ஏகாந்தமாக எழுதினார் என்று ‘கடப்பாரத்தனமாக’ (எத்தனை நாளைக்குத்தான் ‘ஆணித்தரமாக’ என்று சொல்வது) சொல்வேன். அதற்குப் பல காரணம் இருக்கு.

    முதல் காரணம்: இந்த நாவலை டைப் செய்யும் மதுரைக்காரர் ஸ்ரீதர் டைப் செய்ததும் அவரது துணைவியார் (அண்ணன் ராஜேஷ்குமாரின் தீவிர வாசகி என்பது சிறப்பு தகவல்) படிப்பாராம்.

    அவர் படித்தது எப்படி தெரிந்தது தெரியுமா...? ஸ்ரீதர் டைப் செய்வார், அனுப்புவார்... ஆனால் இந்த முறை அண்ணன் அப்பப்ப எழுதியனுப்புவார்... கொஞ்சம் தாமதமானால்... ‘சார்... ஸ்ரீதர் பேசறேன், நாவலின் மீதிப்பக்கங்கள் எப்ப அனுப்புறீங்க?’ எப்ப அனுப்புறீங்க எனக் கேட்டு வாங்கிடைப் அடித்து வந்தவர் ஒரு நாள் அவரை மறந்து, ‘சார்... சத்யா இப்படித்தானே செய்யப் போகிறார்’ எனக் கேட்டுள்ளார்.

    அண்ணன் ராஜேஷ்க்கு ( ராஜேஷ் குமாரை செல்லமாக ராஜேஷ்) ஒரே ஆச்சர்யமும் வியப்பும். உடனே கேட்டார், ‘ஸ்ரீதர் இதுவரை நீங்க இப்படி கதையின் முடிவையோ, அடுத்த பகுதிகளையோ கேட்க மாட்டீங்க. இப்ப என்ன ஆச்சர்யமா...’ - என இழுக்க...

    சாரி சார்... நான் டைப் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். இந்த முறை என் வீட்டம்மா... படித்தவர். முடிவு என்ன என்று தெரிந்து கொள்ள ஒரே ஆவல். அதான் சார்...

    மகிழ்ச்சி ஸ்ரீதர்... சகோதரிக்கு என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிங்க... அப்புறம் என் கதையின் முடிவை மற்றவர்கள் கண்டுபிடித்து விட்டால் அது நல்லா இருக்குமா? ஒரு நாவலை நிறைவு செய்யும் வரை என்ன முடிவு என எனக்கே தெரியாது. கடைசி நேரத்தில் யோசிப்பேன்! இதில் எப்படி முடிவை எழுதலாம் என்று. இதுவும் என் வெற்றிக்கு ஒரு காரணம் -

    அடுத்து மார்தட்டிய... சாரி மாட்டியது நான். ஆமா. எப்பவும் க்ரைம் நாவல் 96 பக்கம் வரும். அதிகபட்சமாக 128 பக்கம் வரும். அதை மனதில் வைத்து அட்டையை அடித்து விட்டேன் - அப்புறம் பார்த்தா கடைசி ஓவரில் 6 சிக்சர், இதுதவிர ‘நோ பால்’ மூலமாக இரண்டு எக்ஸ்ட்ரா சிக்ஷர் கிடைத்த மாதிரி 96+48+ ஆக 144 வந்து விட்டது. சரி... இவ்வளவு சிறப்பாக நாவல் வந்திருக்கு. நாமளும் இன்னும் சிறப்பா தரணும் என தந்திருக்கேன்.

    அடுத்து ஒரு முக்கிய செய்தி... நம்ம அண்ணன் ராஜேஷ்குமாருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த மகன் கார்த்திக்குமார். இவர் ஆர்.கே. பப்ளிசிங் என்ற பதிப்பகம் தொடங்கியுள்ளார். அதில் அண்ணனின் புத்தகங்களை உலகத்தரத்தில் கொண்டுவரவுள்ளார். கடந்த மாதம் இரண்டு புத்தகங்கள் - ஃபைவ் ஸ்டார் துரோகம், ஒரு துளி கடல் வெளிவந்துள்ளது.

    புதிய முயற்சியைத் தொடங்கும் கார்த்திக்குமாரை நமது ‘க்ரைம் நாவல்’ சார்பாக வாழ்த்துவோம். வாசகர்களும் ஊக்கப்படுத்துங்கள்.

    சரி வாசகர்களே! புத்தாண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் என்ன சாதித்தீர்கள் என யோசித்துப் பாருங்கள்! ஒரு வேளை சாதித்திருந்தால் என் சார்பில் உங்களுக்கு ஒரு சபாஷ்!

    ஒருவேளை சாதிக்கத் தாமதமாகியிருந்தால், கவலைப்படாதீங்க...

    பிறக்கும் புது வருடம் சாதனைக்குரிய ஆண்டாக இருக்க நான்தாம் முயற்சிக்க வேண்டும். முயற்சிப்போம். சாதிப்போம்!

    காலத்தைக் காதலிக்கும்...

    அன்புடன், ஜி.அசோகன்.

    ராஜேஷ்குமாரின் முகநூல்

    பாசத்துக்குரிய வாசகர்களே!

    வணக்கம். இன்றைக்கு நான் உங்களிடம் பேசப் போகிற விஷயம் நம்முடைய க்ரைம் நாவலுக்கு சம்பந்தமில்லாதது என்றாலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம். ‘அட... அப்படியா?’ என்று ஆச்சர்யப்பட வைக்கிற ஒரு விஷயம்.

    பொதுவாக முகநூல் என்று சொன்னாலே நம்மில் பலர் அதை நேரத்தை வீண் செய்கிற தளம் என்று நினைப்பார்கள். ஆனால், முகநூலில் மூழ்கினால் சில முத்துக்களும் நம் பார்வைக்குத் தட்டுப்படும் என்பது வெகு சிலரே அறிந்த ஒன்று.

    அப்படி அண்மையில் நான் முகநூலில் மூழ்கிய போது என்னுடைய பார்வைக்குத் தட்டுப்பட்ட ஓர் அரிய பதிவு இது. அந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும் மனதளவில் ஒரு நிறைவும் அடைகிறேன். இதோ அந்தப் பதிவு:

    பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் எண்பது சதவீத ஆண்கள் இறந்து விட்டனர் என்பதை அறிந்து பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருசேத்ரத்திற்கு சென்று பார்த்தேன்.

    கௌரவர்களும், பாண்டவர்களும் போரிட்ட பூமியின் மீது நாம் நிற்கிறோமா? கிருஷ்ண பரமாத்மா இங்கேதான் அர்ஜுனனுக்கு பார்த்தசாரதியாக இருந்து தேர் ஓட்டினாரா?

    பல்வேறு சந்தேகங்கள் எனக்குள் எழுந்தன. அந்த மண்ணையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘‘உன்னால் ஒருபோதும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது மகனே’’ என்கிற குரல் கேட்டது.

    குரல் வந்த திசையைப் பார்த்தேன். புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே காவி உடை அணிந்த ஓர் உருவம் தென்பட்டது - பேசியது.

    ‘‘மகாபாரதப் போரைப் பற்றி தெரிந்து கொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால், அந்தப் போர் உண்மையில் யார் யார்க்கு இடையே, எதன் பொருட்டு நடைபெற்றது என்று அறிந்து கொள்ளாமல் நீ அந்தப் போரைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. மகாபாரதம் ஒரு காவியம் என்பதைவிட அது ஒரு தத்துவம்.’’

    நான் கேட்டேன் - ‘‘அது என்ன தத்துவம் ஐயா?’’

    அவர் சொன்னார் - ‘‘பஞ்ச பாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம்முடைய ஐம்புலன்கள்தான்.’’

    ‘‘அப்படியானால் கௌரவர்கள்?’’

    ‘‘அந்த ஐந்து புலன்களையும் தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள்தான் கௌரவர்கள். எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து பாண்டவர்கள் (ஐம்புலன்கள்) போரிட முடியுமா? முடியும். அது எப்போது என்றால் கிருஷ்ணரை தேரோட்டியாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டு அவரிடம் தஞ்சம் அடைந்தால் மட்டுமே அது சாத்தியம்.’’

    நான் பெரியவரை ஏறிட்டு ‘‘ஒரு சந்தேகம்’’ என்றேன்.

    ‘‘என்ன?’’

    ‘‘கௌரவர்கள் தீயவர்கள் என்றால் துரோணரும், பீஷ்மரும், அவர்கள் பக்கம் நின்று போரிட்டது ஏன்?’’

    ‘‘அது வேறு ஒன்றுமில்லை. நாம் வளர வளர நம்முடைய மூத்தவர்கள் குறித்த கண்ணோட்டம் மாறுகிறது. அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை மறந்துவிட்டு தவறுகளை மட்டும் கண்டுபிடிக்கிறோம். அதுதவிர அவர்கள் நமக்கு சாதகமாக போராட வேண்டும் என்றும் விரும்புகிறோம். அவர்களும் போராடி தோற்றுப் போகிறார்கள்.’’

    ‘‘அப்படியென்றால் கர்ணன்?’’

    ‘‘நம்முடைய ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர்தான் ஆசை, மோகம். அவன் இந்திரியங்களின் ஒரு பகுதி. அவன் தீமைகளின் பக்கம்தான் நிற்பான். தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் அதை நியாயப்படுத்த பிடிவாதம் பிடிப்பான். தான் அழியும் போது மட்டுமே உண்மையை உணர்வான்.’’

    எனக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தேன். பெரியவர் மர்மாய் புன்முறுவல் பூத்தார்.

    ‘‘இப்போது சொல்! மகாபாரதம் காப்பியமா தத்துவமா?’’

    ‘‘தத்துவம்!’’

    பெரியவர் திருத்தினார்.

    ‘‘முதலில் அது காப்பியம். பிறகு அது தத்துவமாக மாறிவிட்டது. என்றைக்கோ நடந்த ஒரு மகாபாரதப் போர் இன்றைக்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடக்கும் ஒரு தத்துவமாக மாறிவிட்டது. எவன் ஒருவன் தன்னை நோக்கி வரும் தீயசக்திகளை இறையருளின் உதவியோடு ஐம்புலன்களால் வெற்றி கொள்கிறானோ அவன் ஒரு மகாபாரத காப்பியமாக மாறுகிறான்.’’

    ‘‘சூப்பர் ஸார்.’’

    ‘‘யாரது க்ராஸ் டாக்ல?’’

    ‘‘ஸார்... நான் பாலகுமார், சென்னை. நீங்க சொன்ன இந்த மகாபாரத விளக்கம் அற்புதம்! அந்த மாபெரும் காப்பியத்துக்குள்ளே இப்படி ஒரு தத்துவமா? அப்படீன்னா ஒவ்வொரு மனிதனும் மகாபாரதம்தான்.’’

    ‘‘சரியா புரிஞ்சுகிட்டீங்க.’’

    ‘‘ஸார்... இந்த தத்துவத்தை அடிப்படையாய் வெச்சு உங்களால ஒரு க்ரைம் நாவல் எழுத முடியுமா?’’

    ‘‘முடியுமே!’’

    ‘‘நாவலுக்கு என்ன தலைப்பு ஸார்?’’

    ‘‘எதற்கும் ஒரு விலை.’’

    ‘‘ஆஹா!’’

    மிக்க அன்புடன்,

    ராஜேஷ்குமார்.

    ராஜேஷ்குமாரிடம் கேளுங்கள்

    * முகநூலில் எப்படி இவ்வளவு பிஸியாக

    இருக்கிறீர்கள்?

    எழுத்துப்பணி பாதிக்காதா?

    (செ.அசோக்ராஜ், திருப்பதி)

    ** சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

    நான் ஒரு நாளில் சீரான இடைவெளியில் ஒரு மணி நேரம் மட்டுமே முகநூலுக்காக ஒதுக்குகிறேன்.

    முகநூல் என்பது இன்றைய இளைய தலைமுறையின் ஜாதகம்.

    இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், எப்படி இருக்கப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே நான் முகநூலில் இருக்கிறேன். விஞ்ஞானம் எந்த வடிவத்தில் வந்தாலும் வரவேற்பவன் நான்.

    அது அமிர்தமே என்றாலும் ஒரே ஒரு ஸ்பூன் மட்டுமே.

    * வைரம் அணிவது நல்லதா?

    (எம். கலைச்செல்வி, தொண்டாமுத்தூர்)

    ** இது பற்றி ‘ஜெகலோக

    Enjoying the preview?
    Page 1 of 1