Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தலை இல்லாத சிலை!
தலை இல்லாத சிலை!
தலை இல்லாத சிலை!
Ebook162 pages57 minutes

தலை இல்லாத சிலை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்து அறநிலையத் துறை அமைச்சர் செவ்வாணன் அந்தப் பயணியர் விடுதியின் ஏ.ஸி. அறையில் இரண்டு தலையணைகளை முதுகுக்குக் கொடுத்துச் சாய்ந்திருந்தார். இடது கையில் இருந்த கண்ணாடி டம்ளரில் பொன்னிற விஸ்கி தங்கத்தை உருக்கி வார்த்தாற் போல் பளபளத்தது. வலது கையில் மிளகுத் தூளில் வறுபட்ட சிக்கன் லெக்பீஸ் எண்ணெயின் மினுமினுப்போடும் மசாலா வாசனையோடும் ஏ.ஸி. காற்றில் மணத்தது.
 விஸ்கியை ஒரு வாய் அருந்திவிட்டு, தனக்கு முன்பாய் பவ்யமாய் நின்றிருந்த உதவியாளரிடம் செவ்வாணன் கேட்டார்.
 "சிக்கன் நல்லாயிருக்கு. எந்தக் கடை...?"
 "கதிர் பிரியாணி ஸ்டால் ஸார்."
 "இப்ப மணி எத்தினி...?"
 "பத்தாகப் போகுது ஸார்."
 "டி.ஐ.ஜி. ராஜமாணிக்கம் எத்தனை மணிக்கு இங்கே வர்றதாய்ச் சொல்லியிருக்கார்...?"பத்து மணிக்கு ஸார்."
 "இன்னும் வரலையே...?"
 "வந்துட்டிருப்பார் ஸார். ராத்திரி நேரம். தூரமும் அதிகம். நான் வேணும்னா போன் பண்ணி விசாரிக்கட்டுமா ஸார்...?"
 "வேண்டாம்... வேண்டாம்... வயசான மனுஷன். கொஞ்சம் மெதுவாவே வரட்டும்..."
 செவ்வாணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவு மெலிதாய்த் தட்டப்பட்டது.
 "அவர்தான் வந்துட்டார்ன்னு நினைக்கிறேன் ஸார்."
 "போய்ப் பார்த்து உள்ளே அனுப்பி வை."
 செயலாளர் தலையாட்டிவிட்டுப் போன அடுத்த சில வினாடிகளில் டி.ஐ.ஜி. ராஜ மாணிக்கம் க்ரே நிற சபாரியில் அசாத்தியமான உயரத்தோடு உள்ளே வந்து ஒரு சல்யூட்டைக் கொடுத்துவிட்டு நின்றார்.
 அந்த மரியாதையைத் தலையசைப்பால் ஏற்றுக் கொண்ட செவ்வாணன், கோப்பையில் இருந்த விஸ்கியை ஒரே மூச்சில் குடித்துவிட்டு சிக்கன் பீஸை சுவைத்துக் கொண்டே எதிரில் இருந்த சோபாவைக் காட்டினார்.
 "உட்கார்ங்க ராஜமாணிக்கம்..."
 அவர் தயக்கமாய் உட்கார்ந்ததும் கேட்டார் செவ்வாணன்.
 "பினாக்கிள் பிராண்ட் விஸ்கி... ஒரு ஸ்மால் சாப்பிடறீங்களா...?"
 "வேண்டாம் ஸார். பழக்கம் இல்லை."
 "எப்பவுமே சாப்பிட்டதில்லையா...?"
 "தொட்டதேயில்லை."
 "நான் தெரியாத்தனமாய் தொட்டுட்டேன். ராத்திரியானாப் போதும், உடம்பு கேட்குது. ஆனா ஒரு ஸ்மால், லார்ஜோடு நிறுத்திக்கிறேன்."அளவா சாப்பிட்டா லிவர்க்கு பிரச்னை இல்லை ஸார்."
 "இதையேதான் என்னோட ஃபேமிலி டாக்டரும் சொன்னார். இந்த பினாக்கிள் பிராண்ட் சரக்கு சிங்கப்பூரிலிருந்து வருது. பத்து வருஷமா சாப்பிடறேன். உடம்பு எந்த தப்பும் பண்ணலை."
 சொன்ன செவ்வாணன், கையில் இருந்த லெக் பீஸை சாப்பிட்டுவிட்டு வாஷ்பேசினுக்குப் போய்க் கையைக் கழுவிக் கொண்டு வந்து, ஒரு ஏப்பத்தோடு சோபாவுக்குச் சாய்ந்தார்.
 "அப்புறம் ராஜமாணிக்கம்... விஷயம் எல்லாம் கேள்விப்பட்டேன். நீங்க ரொம்பவும் பிடிவாதமாய் இருக்கீங்க போலிருக்கு...?"
 "ஸாரி ஸார்."
 "எதுக்கு ஸாரி...?"
 "நான் என்னோட டியூட்டியைப் பண்ணினா அதை சிலபேர் பிடிவாதம்ன்னு சொல்றாங்க. அதுக்கு நான் என்ன ஸார் பண்ணட்டும்...?"
 "இதோ பாருங்க ராஜமாணிக்கம்... நீங்க ஒரு போலீஸ் அதிகாரியாய் இருந்து சட்டத்துக்கு உட்பட்டு சில வேலைகளைப் பண்ணும்போது எங்களை மாதிரியான அரசியல்வாதிகளுக்கு அது தொந்தரவாய் இருக்கும்பட்சத்துல நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்."
 "நான் அப்படி விட்டுக் கொடுக்க முடியாது ஸார்."
 "ஏன்...?"
 "சென்ட்ரல் கவர்மெண்ட் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டிலிருந்து வாரம் ஒரு லெட்டர் எனக்கு வருது ஸார்."
 "அப்படியா... என்னன்னு வருது...?"
 "சிலைத் திருட்டுகள் தமிழ்நாட்லதான் அதிகமாக நடக்குது. அங்கே போலீஸ் டிபார்ட்மெண்ட் உயிரோடு இருக்கா இல்லையான்னு கேள்வி கேட்டு சிலைக் கடத்தல் தடுப்பு அதிகாரியாய் இருக்கிற என்னைக் கேள்விமேல் கேள்வி கேட்கிறாங்க ஸார்... இன்னிக்குக்கூட ஒரு லெட்டர் வந்தது." என்று சொன்ன ராஜமாணிக்கம் தன் சட்டைப் பையில் வைத்திருந்த பழுப்பு நிறக் கவர் ஒன்றை எடுத்து நீட்டினார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223906353
தலை இல்லாத சிலை!

Read more from Rajeshkumar

Related to தலை இல்லாத சிலை!

Related ebooks

Related categories

Reviews for தலை இல்லாத சிலை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தலை இல்லாத சிலை! - Rajeshkumar

    img_0img_1

    வாசக வசந்தங்களுக்கு... இந்த நேசப் பறவையின் பண்பு வணக்கங்கள்.

    காதலிக்குத்தான் தெரியும் காத்திருப்பின் வேதனை என்னவென்று. ஆம்! ஒரு க்ரைம் நாவலுக்கும் அடுத்த க்ரைம் நாவலுக்கும் இடையே உள்ள கால தாமதம். உண்மையில் காதலனுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. அவன் கெட்ட நேரம், ஏதாவது ஒரு வகையில் தடங்கல் வந்துடும்.

    நச்... பச்... கும்... கும்...

    அம்மா... அய்யோ... இந்தப் பச்சமண்ண இப்படி கும்மாங்குத்து குத்துறாரே... ஏண்ணே இந்தக் கொலைவெறி...?

    பின்ன... நான் இதுவரைக்கும் க்ரைம் கதைதான் எழுதறேன். நீ க்ரைமே பண்ண வச்சுடுவே போல... சொல்ல வேண்டியத நேரா சொல்லாம, நீ என்னமோ காதல் மன்னன் ஜெமினி கணேசன் மாதிரியும் நாங்கல்லாம் நயன்தாரா, தமன்னா மாதிரியும் நினைச்சு காயப் போடற...?

    அண்ணே... உங்க பிரச்சனைய அப்புறம் பாக்கலாம். முதல்ல நீங்க இப்ப சொன்ன வார்த்தைய தயவுசெய்து வாபஸ் வாங்குங்க. இது என் மானப் பிரச்சனை.

    ஓ... உனக்குக் கூட மானப் பிரச்சனையா...?

    அண்ணே, மண்புழுவா இருந்தாலும் அதுசக்திக்கு அதுக்கு மானப் பிரச்சனை. அதனாலதான் அத வெட்டிப் போட்டாலும் உயிர்த்தெழுது. அதுக்குக் காரணம், வாழவேண்டும் என்ற வெறி.

    இப்ப என்ன உன் பிரச்சனை...? சொல்லு...

    பின்ன என்ன... சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டறத பாத்துருக்கேன். நீங்க அதுல லாரியவே ஓட்டிட்டீங்க. ஆமா... உங்களையும் வாசகர்களையும் நயன்தாரா, தமன்னா என்று சொன்ன நீங்க, என்னை ஒரு அஜித், இல்ல விஜய் என்று சொல்ல வேண்டாம்... ஒரு கமல் இல்ல ரஜினி என்று சொல்லியிருக்கலாமே. ஆனா நீங்க எங்க அப்பா காலத்து கதாநாயகர் ஜெமினிகணேசனை உதாரணமா சொன்னது ரொம்ப ரொம்ப தப்பு. ரொம்ப வேணாம், என்னை ஒரு விக்ரம் ரேஞ்சுக்காவது வைங்க. அப்பதான் அடுத்த டாக்...

    சரி... சரி... விடு தம்பி... நீ எத்தனை நாளைக்குத்தான் இப்படி சின்னப்பையன் வேஷம் போடுவியோ தெரியல...

    என்னமோ நீங்கதான் என்னை ப்யூட்டி பார்லருக்கு அழைத்துப் போய் அலங்காரம் பண்ற மாதிரி சொல்றீங்க... ஐ’யாம் ஆல்வேஸ் யூத்! அண்ணே... இந்த பஞ்சாயத்தில் பிராதை நம்ம ரெண்டு பேருக்கும்தான் தந்திருக்காங்க.

    உண்மைதான். ஏன் க்ரைம் நாவலை தாமதமா தர்றீங்க...? க்ரைம் நாவலை வாங்க நடையா நடந்து செருப்புக்கூட தேய்ந்து விட்டது என்கிறார் திருநெல்வேலி மகாதேவன்.

    img_2

    சார், நான்தான் கோபாலகிருஷ்ணன். என் பைக் டயரே தேய்ந்து விட்டது.

    சார், நான் நாகர்கோயில் பாபுராஜ். மீனாட்சிபுரம் பொட்டிக்கடை பாலு அண்ணன் கடைக்கு நடந்து நடந்து எங்க தெருவே தேய்ஞ்சி போச்சு...

    அண்ணே... நாம என்னமோ சுப்ரீம் கோர்ட் வாசல்ல வக்காலத்து போட காத்திருக்கறா மாதிரி நினைத்து பார்ட்டிங்க கிளம்பிட்டாங்க. அப்புறம்... நம்ம மாயவரம் முரட்டு வாசகன் க்ரைம் நாவல் வாங்க போய் வந்ததால எங்க வீட்டு வாசக் கதவு தேய்ஞ்சுட்டு என்று சொல்லிடுவாப்புல... சரி, சரி, விடுங்கண்ணே... நாம வரும் க்ரைம் நாவல்களை தாமதமில்லாம கொண்டு வந்துருவோம். அண்ணே... எனக்கு ஒரு குவார்ட்டர்...

    என்ன...? குவார்ட்டரா...?

    அண்ணே... ஏன் அண்ணே தப்பா எடுத்துக்கறீங்க. நான் கேட்டது குவார்ட்டர் பிரியாணிய.

    அதான பாத்தேன்... நல்ல தம்பியாச்சே...

    இந்த சர்ட்டிபிகேட் போதும்.

    சரி வாசகர்களே... அடுத்த க்ரைம் நாவலை விரைவில் கொண்டுவருவோம்.

    அன்புடன்

    ஜி.அசோகன்

    img_3

    அன்பான வாசக உள்ளங்களுக்கு,

    வணக்கம்.

    இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்த போது எனக்குத் தெரிந்த ஜோதிடர் ஒருவர் இது பெண்களுக்குரிய ஆண்டு என்று சொன்னார்.

    நான் காரணம் கேட்டபோது ஜோதிட ரீதியாக ஏதேதோ கணக்குப் போட்டு சொன்னார். எனக்கு புரியவில்லை... இருந்தாலும் அவர் சொன்னதை ஒப்புக் கொண்டேன்.

    நான் அப்படி ஒப்புக் கொண்டதற்கு காரணம் இருக்கிறது. பெண்களுக்கு இந்த ஆண்டு மட்டும் அல்ல, எல்லா ஆண்டுகளுமே சிறப்பு வாய்ந்தவைதான்.

    ஏனென்றால்...

    நான் சில வருஷங்களுக்கு முன்பு ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது.

    அந்த புத்தகத்தின் பெயர் ‘காலடியில் இருக்கிறது புதையல்’. அந்த புத்தகத்திலிருந்த வைர வரிகளைத்தான் நான் இப்போது குறிப்பிடப் போகிறேன்.

    img_4

    "ஆண்களை விட பெண்கள்தான் மன வலிமை மிக்கவர்கள். அதனால் தான் அவர்களால் பிரசவ வலியை பொறுத்துக் கொண்டு, மரணத்தின் விளிம்புவரை போய் விட்டு, பழைய நிலைமைக்கு இயல்பாய் திரும்ப முடிகிறது. இப்படி வலி தாங்கி... வலி தாங்கி வலிமையை பெற்றவர்கள்தான் பெண்கள். அதனால்தான் பாரதி பெண்ணை சக்தி என்று போற்றினான்.

    புராண காலத்திலிருந்தே பெண் ஒரு மாபெரும் சக்தி என்பதை பார்த்து வருகிறோம்.

    பொறுமையின் சின்னமாய் போற்றப்படும் சீதை, கால் சிலம்பை கையில் எடுத்துக் கொண்டு பாண்டிய மன்னனிடம் நீதி கேட்ட புரட்சிக்காரி கண்ணகி, தன் அழகை வெறுத்து, இளமையை வென்று சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றிய மணிமேகலை,

    பலரும் பார்த்து பயப்படும் எமனை எதிர்த்து வாதிட்டு தன் கணவனை மரணத்திலிருந்து மீட்ட சாவித்திரி, கணவன் பார்க்காத இந்த உலகத்தை நானும் பார்க்க மாட்டேன் என்று தீர்மானமாக முடிவு எடுத்து கண்களை கட்டிக் கொண்ட காந்தாரி, இறைவனை தீவிரமாய் காதலித்து கடைசி வரை கன்னியாகவே வாழ்ந்து உயிர் நீத்த மீராபாய், இசையால் காற்றை சுத்தம் செய்து இன்னிசைக் குயிலாய் பாடி வாழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி,

    சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் பீரங்கியை தன் வாளால் நொறுக்கிய வீராங்கனை ஜான்சிராணி, இமயத்தை தொட்ட முதல் பெண் பச்சேந்திரி பால், விமானம் ஓட்டிய முதல் பெண் துர்கா பேனர்ஜி, விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண் கல்பனா சாவ்லா, மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவிலேயே சிறந்த சமூக சேவைக்காக விருது பெற்ற மதுரையை சேர்ந்த விவசாய மூதாட்டி சின்னப்பிள்ளை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவப்படையில் தன்னை ஒரு போர் வீராங்கனையாக இணைத்துக்கொண்ட செல்வந்தர் வீட்டுப் பெண்மணி லட்சுமி சேகல்...

    இப்படி எத்தனையோ திறமையான, வலிமையான பெண்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

    பெண் என்ற இந்த இரண்டு எழுத்துகளுக்குள்தான் எத்தனை உறவுகள் இருக்கின்றன .

    அம்மா, மனைவி, காதலி, சகோதரி, மாமியார், மருமகள், பேத்தி என்று எத்தனை பரிமாணங்கள்!

    பெண் என்பவள் எந்த பரிமாணத்தில் இருந்தாலும் சரி அவள் அதில் சக்திமிக்க மிக்கவளாகவே விளங்குகிறாள். அதனால் தான் நம் நாட்டைக்கூட தந்தைநாடு என்று அழைக்காமல் தாய்நாடு என்று அழைக்கிறோம்.

    பெண்ணின் இந்த அருமை, பெருமைகளை உணராத சிலர் தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை.

    சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவரை நான் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது அவர் கண்களில் நீரோடு சொன்ன வார்த்தைகள் இவை.

    என்னுடைய மகன் அவனுக்கு கல்யாணம் ஆகும் வரை எனக்கு மகனாக இருந்தான். ஆனால் என்னுடைய மகள் அவளுக்கு கல்யாணம் ஆன பின்பும் எனக்கு இன்னமும் மகளாகவே இருக்கிறாள்.

    சூப்பர்... ஸார்

    யாரு... லைன்ல...?

    நான்தான் ஸார்... சேலம் சீனிவாசன்.

    பாராட்டுக்கள் சீனிவாசன்.

    எனக்கு எதுக்கு ஸார் பாராட்டு?

    நீங்க எழுதிய தறியின் மொழி புத்தகம் படித்தேன். மிகவும் அருமை.

    ரொம்பவும் நன்றி ஸார்... நீங்க இப்படி பாராட்டறது சந்தோஷமா இருக்கு.

    சந்தோஷத்தோடு சந்தோஷமாய் அடுத்த மாச க்ரைம் நாவல் தலைப்பையும் சொல்லிடறேன்.

    சொல்லுங்க...சார்... அதுக்காகத்தானே... அயாம்... வெயிட்டிங்!

    கருநாகபுர கிராமம்.

    மிக்க அன்புடன்

    ராஜேஷ்குமார்.

    img_5

    இன்றைய குழந்தைகளை பெற்றோர் நல்ல முறையில் வளர்க்கத் தவறிவிடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு சரியா?

    (அ.ஞானேஷ், வாணியம்பாடி)

    இணையதளத்தில் நான் படித்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது...

    பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை - கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன்.

    எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து

    Enjoying the preview?
    Page 1 of 1