Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theeyinil Valarjothiye
Theeyinil Valarjothiye
Theeyinil Valarjothiye
Ebook77 pages29 minutes

Theeyinil Valarjothiye

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவலின் நாயகி கங்கா பாரதியாரின் பரம ரசிகை மட்டுமல்ல, அவர் சொற்படி வாழ்ந்து காட்டும் ஒரு புதுமைப் பெண். இந்த சமுதாயத்தில் பூமிக்குப் பாரமாகத் திரியும் சில புல்லுருவிகளால் பல்வேறு விதமாக சீரழிந்து வரும் அபலைப் பெண்களின் வாழ்வைச் சீரமைத்து அவர்களுக்குப் புது வாழ்வை அமைத்துத் தரப் போராடும் ஒரு போராளி. இவள் எதற்காகத் தான், தன் சுகம் என்றிருக்காமல் இப்படிப் போராட வேண்டும்? நாவலைப் படித்தால் காரணம் தன்னால் விளங்கிடுமே!

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580152210472
Theeyinil Valarjothiye

Read more from Viji Sampath

Related to Theeyinil Valarjothiye

Related ebooks

Reviews for Theeyinil Valarjothiye

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theeyinil Valarjothiye - Viji Sampath

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தீயினில் வளர்சோதியே

    Theeyinil Valarjothiye

    Author:

    விஜி சம்பத்

    Viji Sampath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-sampath

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 1

    ஓம் ஜெய் கங்கே மாதா... ஸ்ரீ ஜெய் கங்கே மாதா

    டி.வியில் புண்ணிய நதியாம் கங்கை அன்னையின் ஆரத்தி நிகழ்ச்சி ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது. என்ன ஒரு அற்புதமான, மெய் சிலிர்க்க வைக்கும் பரவசக் காட்சி.

    கங்கை நதி, தான் கடலுக்குச் செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப் பட்ட ஜீவராசிகளுக்கு குளிர்ச்சியளித்து, புதுக் கிளர்ச்சியூட்டி பயிர்களுக்கும் மரங்களுக்கும் உயிரையளித்து பலரின் தாகத்தையும் தணிக்கிறது. இதைப் போல பூமியில் அவதரித்திருக்கும் புண்ணியாத்மாக்கள் தங்கள் வாழ்நாளில் அனைவருக்கும் துயராற்றி ஆறுதல் நல்குகிறார்கள். நம் நாட்டில் உள்ளது போல நதிகளை தெய்வமாக வழிபடும் வழக்கம் பாரில் எங்குமே இல்லை.

    புத்தகத்தில் நான் படித்த இந்த வரிகள் எனக்கு கங்கா அக்காவைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

    இதோ கங்கா அக்காவின் கணீரென்ற குரலில் பாரதியாரின் பாடலையும் அக்காவின் நேற்றைய மேடைப் பேச்சையும் மொபைலில் பதிவு செய்ததை போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் பவானி,

    வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,

    மாநிலங் காக்கும் மதியே சக்தி,

    தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி

    சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,

    வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,

    விண்ணை யளக்கும் விரிவே சக்தி,

    ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,

    உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.

    பெண்களை பலவீனமானவர்கள்னு சொல்லியே அவங்களை ஒடுக்கின காலம் மலையேறிப் போய் விட்டது. பெண்ணோட சக்திங்கறது பெண்ணின் ஆன்ம ஆற்றல், அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் வலிமை ஆகியவற்றைக் குறிப்பதாகும். பெரும்பாலும், பெண் சக்தி என்பது அவர்களின் தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதையே சுட்டுகிறது எனலாம். ஆனால் அவர்களுக்குள்ளிருக்கும் சக்தியைப் பெரும்பாலான பெண்கள் உணர்வதில்லை.

    எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைந்து விடுகிறதா? இல்லையே!

    பெண்களுக்கான வாழ்க்கை சிக்கல்கள் அவர்கள் பிறக்கும் போதே ஏன் அவர்கள் கருவில் உருவாகும்போதே ஆரம்பித்து விடுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் பேதை, பெதும்பை,, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என ஏழு பருவங்களைக் கடந்து வருகிறார்கள். அதுவும் இந்த இன்டெர்னெட் யுகத்தில் பெண்களைக் குறி வைத்து எய்யப்படும் அம்புகள் ஏராளம்.

    ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் எதிர்நோக்கும் மனச்சிக்கல்களில் இருந்து அவர்களின் அறிவுத்திறனாலும், மனோபலத்தாலும் அவர்களே மீண்டு வர முடியும். அதற்கு அவர்களது குடும்பத்தாரின் அன்பும், அனுசரணையும் பக்கபலமாக இருப்பது அவசியம். இல்லையேல் நட்பு வட்டத்திலாவது யாராவது அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். சிலருக்கு அவர்களுக்குள்ளிருக்கும் சக்தியைத் தூண்டிவிட யாராவது இருக்க வேண்டும். அப்படி யாரும் இல்லாத போதுதான் அவர்களின் குழம்பிப் போன மனது கோழைத்தனமாகத் தற்கொலையை நாடுகிறது.

    ஆஹா...! அக்கா சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. உதாரணத்துக்கு என்னையே சொல்லலாமே! எனக்குள் இருந்த சக்தியை, தன்னம்பிக்கையை நான் உணர கங்கா என்னும் தூண்டுகோல் எனக்குக் கிடைச்சது என் பாக்கியம். எனக்கு மட்டுமல்ல என்னைப் போல இன்னும் பல பெண்கள் பேதைப் பருவம் முதல் பேரிளம் பெண்கள் வரை கங்கா அக்காவால் புத்துயிர் பெற்று மறு பிறவி எடுத்திருக்காங்க. அவங்களுக்குள்ள ஊறிப் போன பயத்தைத் தெளிவிச்சு, தற்கொலைங்கிற கோழைத்தனமான முடிவிலிருந்து அவங்களை மீட்டு... ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுத்திருக்காங்க.

    கங்கா அக்கா பாரதியார் பாடின... தேடின புதுமைப் பெண்களில் ஒருத்தர்.

    என்னடா இது? ஒரே பாரதியார் புராணமா இருக்கேன்னு நீங்க நினைக்கிறது சரிதான். உடம்பாலும், மனசாலும் ஒடுக்கபட்டு, அடக்கப்பட்டு அனாதரவா நிக்கிற பெண்களுக்கு அவங்களோட எதிர்காலத்துக்கு ஒரு வழியையும்... அவங்க மனசுல ஒரு எழுச்சியையும் உண்டாக்க பாரதியாரோட கவிதைகளைத் தவிர வேறு மார்க்கம் ஏதாவது உண்டா? கங்கா அக்காதான் எங்களுக்குப் பாரதியாரை அறிமுகப்படுத்தினாங்க. பாரதியார் கவிதைகளுக்குத் தன்னையே அர்ப்பணம்

    Enjoying the preview?
    Page 1 of 1