Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yugam Yugamaai..!
Yugam Yugamaai..!
Yugam Yugamaai..!
Ebook128 pages3 hours

Yugam Yugamaai..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து, சிலிகான் வேலியில் உள்ள ஒரு ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் மென் பொருள் தயாரிப்பு கம்பெனிக்குப் பணியில் சேர வரும் இந்திய வம்சாவளிப் பெண், அழகுத் தேவதை வர்ஷா மயங்கி விழுகிறாள். வர்ஷாவுக்குள் என்ன நடக்கிறது? ஏன் மயங்கி விழுகிறாள்? காதலா? கனவா? யுகம் யுகமாய் அவளைத் தொடர்வது என்ன? பகையா? பந்தமா?

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580152210501
Yugam Yugamaai..!

Read more from Viji Sampath

Related to Yugam Yugamaai..!

Related ebooks

Reviews for Yugam Yugamaai..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yugam Yugamaai..! - Viji Sampath

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    யுகம் யுகமாய்..!

    Yugam Yugamaai..!

    Author:

    விஜி சம்பத்

    Viji Sampath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-sampath

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    யுகம் யுகமாய்! -6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    யுகம் யுகமாய் என்னும் இந்த நாவல். பஞ்சமுகி என்று அழைக்கப்படும் ஐந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது.

    பஞ்சமுகி அறிமுகம்

    எழுத்தாளர் G.A. பிரபா அவர்களின் ஊக்குவிப்பால் மாலா மாதவன், விஜி சம்பத், செல்லம் ஜரீனா, மதுரா மற்றும் சாய்ரேணு என்ற ஐந்து பெண்கள் இணைந்து பஞ்சமுகி என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள்.

    மாலா மாதவன்:

    சென்னையைச் சேர்ந்த MCA பட்டதாரி. தமிழில் கவிதைகள், கதைகள் எனப் பயணிக்கிறார். இவரது கதை கவிதைகள் கல்கி, குமுதம் சிநேகிதி, ராணி போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. வெண்பா எழுதுவதில் விருப்பம் அதிகம்.

    விஜி சம்பத்:

    சேலத்தில் வசிக்கும் முதுகலைப் பட்டதாரி. தினமணி கதிர், தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள் அனைத்து முன்னணி வார,மாத இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. தினத்தந்தியில் சில கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. ஆன்மீகப் பாடல் எழுதுவதில் வல்லவர்.

    செல்லம் ஜரீனா:

    சென்னையைச் சேர்ந்தவர். பல முன்னணி பத்திரிக்கைகளில் இவரது கதை வந்துள்ளது. இவருடைய சிறுகதைகள் சில ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகமாகவும் வந்துள்ளன. வரலாற்று நாவல் படைப்பதில் சிறந்தவர்.

    மதுரா:

    தேன்மொழி ராஜகோபால் என்ற இவர் படித்தது ஆங்கில இலக்கியம்.மரபு நவீனக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பிரபல இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் மின்னிதழ்களிலும் படைப்புகள் வெளியாகி உள்ளன

    சாய் ரேணு:

    தென்காசியில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி. ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. துப்பறியும் நாவல் எழுதுவதில் திறம் மிக்கவர்.

    அத்தியாயம் 1

    அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ ஏர்போர்ட்டிலிருந்து சான் ஜோஸ் நகரை நோக்கிச் செல்லும் ஹைவேயில், டாக்ஸி ஒன்றின் பின்னிருக்கையில், ஒயிலாக சாய்ந்து கொண்டிருக்கும் வர்ஷா ஓர் இருபத்தி ஐந்து வயது அழகுப் புயல்.

    காண்போர் கண்ணையும்,கருத்தையும் கவர்ந்திழுக்கும் இளமைச் சூறாவளி. அவளைக் கண்டவர்கள்தான் காதல் கிறுக்கு பிடித்து அவள் பின்னே சுற்றுவார்களே தவிர, இதுவரைக்கும் அவளை எந்த ஆண்மகனும் வசீகரித்ததில்லை.

    முப்பது வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வேலை நிமித்தம் சென்று அங்கேயே செட்டிலாகி விட்ட ராஜசேகர், வந்தனா தம்பதியினரின் ஒரே செல்ல மகள்தான் வர்ஷா. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்து வளர்ந்து. உயர்கல்வி முடித்தவளுக்கு சிலிகான் வேலியில் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்) நிறுவனமான தாம்ஸன் க்ரூப் ஆஃப் மென்பொருள் தயாரிப்பு கம்பெனியில் கிடைத்தது எக்கச்சக்க சம்பளத்துடன் கூடிய உயர்பதவி ஒன்று.

    நல்ல திறமையும்,தைரியமும் நிறைந்த ஆரோக்கியமான பெண்ணான வர்ஷாவுக்கு, புதிய கம்பெனியில் அடியெடுத்து வைத்ததுமே ஏதோவொரு தடுமாற்றம். தேகமெங்கும் ஒரு பரபரப்பு. விவரிக்கவியலாத ஒரு சிலிர்ப்பு.

    நித்தம் தவறாமல் ஒர்க் அவுட், ஸ்விம்மிங், ஏரோபிக்ஸ் எல்லாம் செய்து ஸ்லிம் ப்யூட்டியாக வலம் வருபவள்,உணவு விஷயத்திலும் ஏகக் கட்டுப்பாடுகளை அனுசரித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்பவள். எந்தவொரு செயலையும் ஜஸ்ட் லைக் தட் செய்து முடிக்கும் அறிவாற்றல் உடையவள்...!

    இன்று என்னாயிற்று எனக்கு? அவளுக்கே ஆச்சர்யம் தான்.

    மேற்கொண்டு யோசிக்க நேரமில்லாமல் சமாளித்துக் கொண்டவள், வேலையில் சேர வேண்டிய ஃபார்மாலிடீஸ்களை முடித்தாள்.

    வர்ஷா...! உனக்கு நம்ம கலீக்ஸை எல்லாம் அறிமுகப் படுத்தறேன் என்னோட வா

    அழைத்தாள் டெய்ஸி, வர்ஷாவுக்குப் பெர்சனல் செக்ரடரியாக நியமிக்கப் பட்டிருக்கும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண்.

    வித் ப்ளஷர்

    தோளைக் குலுக்கிக் கொண்டபடி அவளுடன் சென்றாள் வர்ஷா. இயல்பாக இருப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளூறப் படபடப்பு அடங்காமல் இம்சிக்க, காலையில் ஏர்போர்ட் வரும் அவசரத்தில் வழக்கமாகக் குடிக்கும் காஃபியைக் குடிக்காமல் விட்டதால் இருக்குமோவென்று தோன்றியது.?

    அவளுடைய முழுநாள் வேலைக்குமான ஆதார சக்தியான காஃபியை குடிக்காததுதான் தன்னுடைய இப்போதைய படபடப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தாள்.

    ஒவ்வொரு ஸ்டாஃபாக டெய்ஸி அறிமுகப் படுத்த, எப்போது முடியும் இந்த அறிமுகப் படலம்? எப்போது கேண்டீனுக்குச் சென்று சூடாக ஒரு கப் காஃபியைக் குடிப்போம்? என்று உள்ளூறத் தவித்துப் போய் விட்டாள் வர்ஷா.

    இனி ஒரே ஒருத்தர்தான்...

    டெய்ஸி சொல்லி முடிப்பதற்குள்...

    அவரைக் கொஞ்ச நேரம் கழித்து சந்திக்கிறேனே

    நீ பாக்கணும்னு நெனச்சாலும் இப்போ முடியாது. அவர் இப்போ முக்கியமான மீட்டிங்கில் இருக்கார்.

    வா... உனக்கு உன்னோட கேபினைக் காட்டறேன்

    அச்சச்சோ...! டெய்ஸி மொதல்ல எனக்கு கேண்டீனைக் காட்டு. ஒரு கப் காஃபி உள்ளே எறங்கினாதான் எனக்கு உடம்பும் மனசும் ஆக்டிவா இருக்கும்...வா...வா

    ஐ ஆம் வெரி ஸாரி வர்ஷா. இன்னைக்கு முதல் நாள், உன்னை எங்களோட கெஸ்ட்டா நான் ட்ரீட் பண்ணியிருக்கணும். நீ ப்ரேக்ஃபாஸ்ட் சாப்ட்டியான்னு கூட நான் கேக்க மறந்துட்டேன். எனக்கு இப்பல்லாம் சென்ஸ் ஆஃப் ஹாஸ்பிடாலிடி கொறஞ்சுகிட்டே வருது போல...

    தன் மீதே குறைப்பட்டுக் கொண்டவள் வர்ஷாவை அழைத்துக் கொண்டு கேண்டீனுக்குச் சென்றாள்.

    கேண்டீனில் நல்ல சூடான காஃபியை மிடறு,மிடறாக ருசித்துக் குடித்தவள்

    ஹேய்... இப்போ சொல்லு! இன்னும் யாரையோ நான் மீட் பண்ணணும்னு சொன்னியே...! காட்டு பாக்கலாம்

    டெய்ஸியின் கரங்களைப் பிடித்திழுத்தாள். சமவயது என்பதாலோ...இல்லை, இருவருக்கும் அலைவரிசை ஒத்துப் போனாலோ, சந்தித்த சில மணித்துளிகளுக்குள்ளாகவே, இருவருக்குள்ளும் நெருக்கமான நட்புணர்வு பூக்கத் தொடங்கியது.

    ம்ம்...பரவாயில்லையே! இந்த காஃபி உனக்குள்ள ஒரு பெரிய மாயத்தை உருவாக்கிடுச்சே. உனக்கு கேஃபின் அடிக்ஷன் இருக்கோ?

    நோ...நோ...! தினமும் காலைல ஒரு கப் காஃபி அவ்வளவுதான். அதுவும் எங்கம்மா பழக்கி விட்டதுதான்.

    இருவரும் பேசியபடி கேண்டீனிலிருந்து வர்ஷாவின் கேபினை நோக்கி நடக்க, திரும்பவும் அதே படபடப்பு வர்ஷாவுக்குள் ஊடுருவியது.

    ச்சே என்னதிது இன்னைக்குப் புதுசா?

    டெய்சிக்குத் தன்னுடைய டென்ஷன் தெரிந்து விடாமல் சமாளித்தபடி

    Enjoying the preview?
    Page 1 of 1