Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன்னைக் கண்ட நாள் முதல்...
உன்னைக் கண்ட நாள் முதல்...
உன்னைக் கண்ட நாள் முதல்...
Ebook176 pages1 hour

உன்னைக் கண்ட நாள் முதல்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும்... மீண்டும் அந்த இளைஞன் மானசாதேவியின் அருகில் வந்து நின்று, மன்மதனாய்ச் சிரித்தான்.

சட்டென்று மானசா கழுத்தை வெட்டி வேறுபுறம் திரும்பினாள்.

"ஹலோ... பிறந்த நாள் அதுவுமா எதுக்கு இவ்வளவு கோபம்? கூல்... கூல் பேபி!" என்று அவன் சொல்லவும், இவனுக்கு எப்படி இன்று எனக்குப் பிறந்த நாள் என்று தெரிந்தது என அவளுள் கேள்வி எழுந்தது.

அவனைத் திரும்பி ஒரு முறை முறைத்தாள்.

"அப்பா... எவ்வளவு பெரிய கரிய விழிகள்!" என்று அவன் வியந்தான்.

"மிஸ்டர்..." என்று சுள்ளென்று சொல்லவும்,

"உங்கள் முகத்திற்குப் பேரழகைத் தரும் கண்கள்! நீங்கள் முறைக்கும் முறைப்பில் தெறித்து விழுந்து விடும் போல! வேண்டாம்! அந்தக் கருவண்டுக் கண்கள் என்ன பாவம் செய்தன?" என்று கேலி பேசியவன்,

"ஹேப்பி பர்த் டே, பெண்ணே! உங்கள் பிறந்த நாள் எப்படித் தெரியும்னு யோசிக்கிறீங்களா? உங்கள் பிரண்ட்ஸ் வாழ்த்திய போது அருகில்தான் இருந்தேன்! காதில் விழுந்தது!" என்றான்.

"உங்க வாழ்த்தை நான் கேட்டேனா?" என்று சட்டென்று நெஞ்சை நிமிர்த்திச் சண்டைக்கு வந்தவள், சுடிதாரின் மேல்தாவணி இல்லாதது உணர வெட்கினாள். தளர்ந்து நின்றாள். பின்...

"என்ன வம்பு செய்யறீங்களா?"

"வாழ்த்துச் சொல்வது வம்பா?"

"ஆமாம்! முன்னே பின்னே பார்க்காத பெண்ணுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வது வம்புதானே?"

அவனோ கண்களைப் பெரிதாக்கி அவள் முன் புறமும், அவள் முன்பு ஓரடி எட்டி வைத்து எக்கிப் பின்புறமும் பார்த்து...

"அதெல்லாம் முன்னே பின்னே பார்த்த பெண் தான், நீங்கள்!" என்று குறும்புடன் கூறிக் கண் சிமிட்டவும்,

"ஏய்... ஏய்... இடியட்!!" என்றாள் மானசா.

"கிவ் ரெஸ்பெக்ட்!" என்றான் அவன்.

"யூ... யூ... கிவ் ரெஸ்பெக்ட்... டேக் ரெஸ்பெக்ட்...!" என்றாள் கோபத்துடன்.

"சரி... சரி. கோபம் வேண்டாம். நீங்க இந்த அளவு கோபப்படறாப்போல நான் என்ன அவமரியாதை செய்தேன்?" அவன் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும்,

"முன்னே பின்னே... ச்சே... யாருன்னே தெரியாத பெண்ணுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுவதும், இப்படி ஆடை உரித்துப் பார்ப்பதும் மரியாதையான செயலா?"

"உங்க ஆடையை எப்போம்மா உரித்துப் பார்த்தேன்? இதுயென்ன புதுக்கதையா இருக்கு!" என்று கேட்டு அவன் சிரிக்கவும்,

"மிஸ்டர்... திஸ் ஈஸ் டூ மச்."

"சரி. சண்டையை விட்டுவிடலாம். பிரண்ட்ஸாயிடலாம்."

"பிரண்ட்ஸாவதா? இனிவரும் ஏழேழு ஜென்மத்துக்கும் நடக்காது!" என்றவள், அவனிடம் மல்லுக் கட்டுவதை விட்டுவிட்டு நடக்கவும்,

"ஹலோ... ஹலோ... எதுக்கு இந்தக் கோபம்? ஓவர் கோபம் பெரும் நோயை இழுத்து விட்டுவிடும். ஆமாம். உங்க பேரு... உங்க பேரு... மானசா... மானசா... கரெக்ட்...!" என்று கூறிப் பின்னாடியே வரவும்,

"திஸ் ஈஸ் யுவர் லிமிட் மிஸ்டர்."

"லிமிட்டை மீறினால்?"

"அப்புறம் உங்க பேர்ல ஈவ் டீசிங் கேஸ் கொடுத்து... உங்களை உள்ளே தள்ளி விடுவேன்!" என்று அவள் சுட்டு விரல் நீட்டி எச்சரித்து மிரட்டவும்,

"ஐயோ... வேண்டாம், மிஸ். பயமா இருக்கே!" என்று பயப்படுபவன்போல நடித்துக் குறும்புடன் சிரிக்கவும்,

மானசாவோ நெற்றியில் ஒரு அடி அடித்துக் கொண்டு, தன் தோழிகளைத் தேடிப் பின்புறத் தோட்டத்திற்கு ஓடினாள்.

நடராஜன், நாகராஜன் இருவரும் அண்ணன் - தம்பிகள்! விழுப்புரத்திலிருந்து வடக்கே இருபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமம் 'பச்சை மலையூர்!' பேரில் மட்டும்தான் பசுமை இருக்கும். மற்றப்படி எங்கும் பொட்டல் காடாய்க் காட்சியளிக்கும் பூமியது! வானம் பார்த்து விவசாயம் நடக்கும் பூமி அது! மழை பெய்தால் அங்கே விவசாயம் நடக்கும். அப்போது விளையும் விளைச்சலை வைத்துக் கொண்டு... அடுத்த விவசாயம் நடைபெறும்வரை... சிக்கனமாய்ப் பிழைப்பு நடத்தும்... மக்கள் வசிக்கும் கிராமம் அது.

அங்கேதான் அந்த இரு அன்பான, பாசமான அண்ணன் - தம்பிகள் வசித்தனர். நடராஜனின் மனைவி தாயம்மாள். அவர்களுக்கு அசோகன், சீதா என்று இரு பிள்ளைகள்! நாகராஜனின் மனைவி மகாலட்சுமி. அரிச்சந்திரன் என்று ஒரே ஒரு மகன் மட்டும்தான். பெண் பிள்ளை இல்லை. அதனால் இரு குடும்பத்திற்கும் பெண் வாரிசு சீதா மட்டும் தான்.

ரொம்ப செல்லமாய்ச் சீராட்டி வளர்த்ததால், படிப்பு ஏறவில்லை. பத்தாம் வகுப்போடு நின்று, வீட்டு வேலைகளைப் பழகிக் கொண்டு, சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.

 

Languageதமிழ்
Release dateFeb 28, 2024
ISBN9798224788224
உன்னைக் கண்ட நாள் முதல்...

Read more from R.Maheswari

Related to உன்னைக் கண்ட நாள் முதல்...

Related ebooks

Reviews for உன்னைக் கண்ட நாள் முதல்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன்னைக் கண்ட நாள் முதல்... - R.Maheswari

    1

    "பிறந்த நாள் வாழ்த்துகள், மானசா!" என்று வாழ்த்திய சீதா... மகளை இறுகக் கட்டியணைத்து... நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டாள்.

    நன்றி, அம்மா! என்ற மானசா தனது தாயின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

    குளித்து உடுத்திக் கொண்டு வா மானசா! என்றதும், மானசா குளியலறைக்குள் நுழைந்து தலையோடு குளித்துவிட்டு வந்தாள்.

    ஆகாய வண்ணப் புதுச் சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள். கறுகறுவென நீண்டு அடர்ந்து இடுப்புக்குக் கீழே தொங்கிய நீள முடியைத் தளரத் தளரப் பின்னினாள். பவுடர் பூசி ஆகாய வண்ண டிசைன் ஒட்டுப் பொட்டை நெற்றியில் ஒட்டினாள். அந்தப் பெரிய நீளக் கண்களுக்கு அளவாய் மையெழுதினாள். காதோரம் அழகான வெள்ளை ரோஜாவைச் செருகினாள்.

    மொத்த அலங்காரத்தையும் சேர்த்துக் கண்ணாடி | யில் பார்க்கத் திருப்தியாய் இருந்தது.

    மானசாதேவி இருபத்து இரண்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் இளம்புயல்!

    நல்ல சிவந்த நிறம்! சந்தனச் சிற்பம் போன்ற அழகு மேனி! அசாத்தியமான நெடுநெடு 5.5 அடி உயரம்! நிலவு போன்ற மாசு மருவற்ற வட்ட முகம்! மீன் குஞ்சுகளாய் இரு நீளக்கண்கள்! கூர்மையான நாசி! தாமரை இதழ்கள்! சங்குக் கழுத்து!

    கொடியிடையாள்! அந்தக் கொடியிடை அசைய... நீண்ட ஜடை நாட்டியமாட அவள் நடந்து சென்றால்... எதிரில் வரும் எந்த ஆண்மகனும் கிறுகிறுத்துத் தலைசுற்றி மயங்கித்தான் கடந்து போவான்!

    அவளை மயக்கக் கங்கணம் கட்டிப் பின்னாடியே வந்த பல பேர் மண்ணைக் கவ்வி மீசையில் ஒட்டிய மண்ணை எவருக்கும் தெரியாமல் தட்டிவிட்டுச் சென்று விடுவார்கள்.

    மானசா தேவியின் இதயத்தை எந்த ஆணுடைய மன்மதன் அம்பும் துளைத்ததில்லை!

    மானசா... இந்த சுடிதார் செம அம்சம்! அழகு அள்ளுது, மானசா! தேவதை போல ரொம்ப அழகா இருக்கே! என் கண்ணே பட்டுவிடும் போலடி! என்று சீதா சொல்லவும்,

    நிஜமாவாம்மா? என்ற மானசா சிப்பி இமைகளை அழகாய் விரித்து, முத்துப் பற்கள் ஒளிரச் சின்னச் சிரிப்புடன் கேட்டாள்.

    அம்மா பரிமாற உணவு உண்டாள்.

    நான் கிளம்பறேம்மா, என்றாள் மானசா.

    எங்கே மானசா?

    சர்ச்சை சுத்தப்படுத்தப் போறேம்மா.

    பிறந்த நாள் அதுவுமா வீட்டுல இருக்க மாட்டியா? இப்படித்தான் சமூக சேவைன்னு போவியா?

    என் தோழிகள் காத்திருப்பாங்கம்மா. வாரத்துல ஆறு நாட்களும் வேலை வேலைன்னு பறக்கறேன்.

    பெரிய பொல்லாத வேலை. உழைப்புதான் அதிகம். சம்பளம் சொற்பம்தானே...? அந்த வேலையை விடுன்னா கேட்கறியா?

    அம்மா... நல்ல வேலையைத் தேடிகிட்டு இருக்கிறேன், கிடைச்சதும் விட்டுவிடுகிறேன். ஞாயிறு மட்டும்தானே நேரம் கிடைக்குது. இந்த ஒருநாள் சமூக சேவை செய்யப் போறது உனக்குப் பிடிக்கவில்லையா?

    ஒரு ஞாயிறுகூட நீ வீட்டில் இருப்பதில்லை. போலியோ சொட்டு மருந்து போடப் போறேன். இரத்த தான முகாமுக்குப் போறேன். முதியோர் இல்லத்துக்குப் போறேன். எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமுக்குப் போறேன்னு ஒரு ஞாயிறுகூட வீட்டில் இருக்காமல் கிளம்பிவிடறே, மானசா! என்று சீதா மகளிடம் குறைப்பட்டாள்.

    அது தப்பாம்மா?

    இல்லைதான்.

    பெரிய புண்ணியம்தானே?

    ஆமாம்.

    அப்புறம் ஏன் சலிச்சுக்கிறே? எதைச் செய்தாலும் நல்ல மனசோட செய்தாதாம்மா... அந்த வேலையால் கிடைக்கும் புண்ணியத்தின் பலன் முழுமையா நம்மை வந்து சேரும், என்று அழகாய் உதட்டைச் சுழித்து மானசா சொல்லவும்,

    எனக்கே பாடம் நடத்தறியா? என்ற சீதா, மகளின் காதைப் பிடித்துத் திருகியவள், பின் கண்ணீர் பொங்கச் சொன்னாள்.

    இப்படி நல்ல அழகோடும்... அறிவோடும்... வளர்ந்து நிற்கிற உன்னைப் பார்த்துச் சந்தோஷப்பட அந்த மனுஷனுக்குக் கொடுத்து வைக்கலையே. அல்ப ஆயுசுல பொட்டுன்னு போயிட்டாரே. நம்மையெல்லாம் அநாதையா விட்டுவிட்டுப் போயிட்டாரே.

    சீதா அழவும், மானசா தாயின் கண்களைப் பரிவுடன் துடைத்து விட்டாள்.

    அம்மா... அப்பா இறந்து போனாலும் அவரோட உடலுக்குதான் இறப்பு நேர்ந்திருக்கு. அவருடைய ஆன்மாவுக்கு இறப்பு ஏற்படவில்லை. அவரோட ஆன்மா என்றும் எப்போதும் நமக்குப் பாதுகாப்பா நம்மையே சுற்றிக் கொண்டிருக்கும். நீ பத்தாவது வரைதான் படித்தவள். வெளியுலகம் தெரியாமல் வீட்டுக்குள்ளே ஹவுஸ் வொய்ப்பா இருந்த நீ, அவர் இறந்த பின்பு எவ்வளவு துணிச்சல்காரியா மாறிப்போனே! அவரோட ஆன்மா உன் மனசுக்குள்ள புகுந்து நீ வெளியே வந்து, கார்மெண்ட் கம்பெனிக்கு வேலைக்குப் போய்ச் சம்பாதித்து என்னைப் படிக்க வைத்துக் காப்பாத்தினே. அப்பாவுக்கு உன் துணிச்சலும், என் வளர்ச்சியும் தெரியும்மா.

    மானசாதேவி சீதாவை அணைத்து ஆறுதல் படுத்தினாள்.

    அம்மா... ஈவினிங் என் பிரண்ட்ஸுங்களுக்கு ஹோட்டல் நிலாச்சோறில் ட்ரீட் கொடுக்கறேன்னு ப்ராமிஸ் செய்து இருக்கேன்.

    சரி. செய்.

    நான் கிளம்பறேம்மா! என்று விடைபெற்றுக் கிளம்பினாள்.

    சர்ச்சில் அவளுக்காகச் சிவசக்தி, மீனு, கிரிஷ்மா, ப்ரியா, கௌசல்யா என ஐவரும் முன்னரே வந்து காத்திருந்தனர்.

    ஐவரும் சேர்ந்து அழகான தோடும், தொங்கலும் பவுனில் வாங்கியிருந்தனர். அதை அவளிடம் கொடுத்தனர்.

    ஹாப்பி பர்த்டே, மானு! என்று ஆளாளுக்குக் கூறி... அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டனர்.

    எதுக்குப்பா இவ்வளவு விலையுயர்ந்த பரிசு?

    இருக்கட்டும் மானசா, என்றனர். அவள் காதில் இருந்த தோட்டைக் கழற்றிவிட்டுப் புதுத் தோடை அணிவித்தனர். அவளின் அழகு பன்மடங்கு கூடித் தெரிந்தது.

    போன வாரமே குழுவாய் வந்து சர்ச்சின் பாதரிடம் தோட்டத்தைச் சுத்தப்படுத்தித் தருவதாய்க் கூறி, அவரின் அனுமதியையும் வாங்கியிருந்தனர்.

    சர்ச்சின் முன்புறமும், பின்புறமும் இருந்த அந்தப் பெரிய பரந்த தோட்டத்தில் முளைத்திருந்த புற்களையும், தேவையில்லாமல் வளர்ந்து நின்ற பூஞ்செடிகளின் கிளைகளையும், தண்டுகளையும் வெட்டிச் சீர் செய்யும் வேலை செய்யத்தான் வந்திருக்கின்றனர்.

    சர்ச்சின் உள்ளே சென்று ஏசுவையும், மரியையும் வணங்கிவிட்டு... அங்கேயே தங்களின் பையை வைத்துவிட்டு, வெளியே வந்தனர்.

    மானசா... நீ புல்லைக் களையெடுக்கும் வேலையைச் செய்ய வேண்டாம். உன் புது உடை பாழாகிவிடும்! என்று கிரிஷ்மா கூறவும்,

    என்னை என்ன நிழலில் உட்கார்ந்திருக்கச் சொல்றீயா? என்றாள்.

    இல்லை, மானு. நீ நின்று கொண்டே செடிகளின் கிளையை அறுத்துச் சீர் செய்யும் வேலையைச் செய்யுப்பா.

    அதெல்லாம் வேண்டாம். நாம் எல்லோரும் சேர்ந்து களையெடுப்போம். பிறகு இங்கே வந்து அந்த வேலையைச் செய்யலாம்.

    ம்கூம்! சொன்னால் கேளு, மானு. நாங்க சர்ச்சின் பின்புறம் போய்க் களையெடுத்துவிட்டு வருகிறோம்! நீ அதுவரை முன்புறத் தோட்டத்துச் செடிகளின் தண்டுகளை, கிளைகளைக் கட் செய்து கொண்டிரு! என்றனர்.

    பின் அவர்கள் மண்வெட்டி, களைக் கொத்தியோடு பின்புறம் சென்றனர். மானசா... மனசே இல்லாமல் பெரிய கத்தரியோடு... முன்புறத் தோட்டத்திற்குள் தனியே நுழைந்தாள். தேவையில்லாமல் வளர்ந்து நீண்டிருக்கும் தண்டுப் பகுதிகளை வெட்டிச் சீர் செய்வதில் மும்முரமானாள்.

    கொஞ்ச நேரத்தில் பக்கத்தில் அரவம் கேட்கத் திரும்பிப் பார்த்தாள்.

    ஆறடிக்கும் மேலான உயரத்தில் நெடுநெடுவென வளர்ந்து, பரந்து விரிந்த மார்பும், கட்டுடலுமாய் இருபத்து ஏழுக்குமேல் மதிக்கத்தக்க இளைஞன் கையில் கத்தரியோடு செடியை வெட்டிச் சீர் செய்து கொண்டிருந்தான்.

    நல்ல சிவந்த நிறம். களையான முகம். கூர்நாசி. ஆராயும் கண்கள். அழுத்தமான உதடுகளுக்கு மேல் அடர்ந்த கறுகறு மீசை வெகு அம்சம். கூடுதல் கவர்ச்சியைத் தந்தது.

    கன்னங்கள் கண்ணாடியாய்ப் பளபளத்தன. முகவாயில் சிறிய குழி. அவனைப் பார்க்கும் பெண்கள் அத்தனை பேரும் அக்குழியின் அழகில் விழுந்து விடுவர். அவன் சின்னதாய் இதழ் விரித்து, கண்ணோரங்கள் லேசாய்ச் சுருங்க அவன் சிரித்தால் நோக்கும் பெண்கள் அத்தனை பேரும் அவனின் அழகில் மயங்கி, தலைசுற்றிப் பொத்தென்று விழுந்து விடுவர்.

    கறுப்பு பேண்ட்... கை யில்லாத வெள்ளைப் பனியனில் நின்றவனைப் பார்க்க... பனியன் விளம்பரத்திற்கு வரும் ஆணழகனைப்போல வெகு கவர்ச்சியாய் இருந்தான். அவர்களைப்போலச் சேவை செய்ய வந்திருப்பவன்.

    கைகள் செடியை வெட்டிக் கொண்டிருந்தாலும், அவன் விழிகள் அவளை வைத்த விழி எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தன.

    அவனுடைய துளைக்கும் பார்வையில், பெரும் கோபம் கொண்டாள், மானசாதேவி. அதன் விளைவாய்...

    ஹலோ இங்கென்ன பார்வை? கையைச் சுண்டி அவனைப் பார்த்துக் கேட்கவும்...

    என்னையா கேட்டீங்க? என்றவன், அவள் கேட்டதைச் சாக்காக வைத்து அருகில் வந்து நின்றான்.

    இல்லை... உங்க பாட்டனைக் கேட்டேன்! என்று சீறினாள். பின்...

    ஹலோ... உங்களைத்தான். நீங்க முன்னே பின்னே பெண்ணையே பார்த்ததில்லையா? என்ன வேற்றுக் கிரகத்துல இருந்து வர்றீங்களா? உங்க கிரகத்துல பெண்களே இல்லையா என்ன? பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையை முறைப்பது போல இந்த முறை முறைக்கறீங்க? என்று மானசா இழிவாய் உதட்டைச் சுழிக்கவும், அந்த உதட்டில் பூத்த பேரழகைக் கூர்மையுடன் கண்ணிமைக்காமல் நோக்கியவன்,

    நான் முன்னே பின்னே பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்களைப் பார்த்ததில்லை... இல்லையா? என்றவன் அவளின் முன்புறம் ஆழமாய் நோக்கவும்,

    வேலை செய்யும்போது சுடிதாரின் மேல் தாவணி இடைஞ்சலாய் இருக்கும் என நினைத்துக் கழற்றிப் பையில் வைத்துவிட்டு வந்திருந்தாள், மானசா.

    ஷால் இல்லாத மார்பை அவன் நோக்கி இப்படிச் சொல்லவும், சட்டென்று மார்பைக் கைகளால் பெருக்கல் குறிபோல வைத்து மறைத்தாள். கண்மண் தெரியாமல் கோபம் வரவும்,

    மிஸ்டர்... மரியாதை கெட்டுவிடும். என்னை எந்த மாதிரிப் பெண் என்று நினைத்தீங்க? நான் அந்த மாதிரியான பெண்ணில்லை, தெரியுமா? என்று சீறினாள்.

    எந்த மாதிரிப் பெண்ணென்று நினைத்தேன்? சொன்னால் தெரிந்து கொள்கிறேன்! என்று அலட்சியமாய்ச் சொல்லவும்,

    அழகான ஆண் வந்து பேசினால் கடைவாயில் எச்சில் ஒழுக, அதை ஒரு வரமா நினைத்து... பல்லை இளிக்கிற பெண்ணில்லை, நான். அநாவசியமாக வந்து வழிகிற ஆம்பளையையும்... வேண்டுமென்றே எருமை கணக்காய் வந்து உரசுகிற பொறுக்கிகளையும் கொஞ்சம்கூட வைத்துப் பார்க்க மாட்டேன். செருப்பு பிய்ந்து போகும் அளவு அடிக்கிறவள், நான். ஆமாம் தெரிஞ்சுக்கங்க.

    ஆள்காட்டி விரலை அசைத்து எச்சரித்த மானசா... அந்தச் செடியை அப்படியே

    Enjoying the preview?
    Page 1 of 1