Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sudum Nilavugal
Sudum Nilavugal
Sudum Nilavugal
Ebook130 pages54 minutes

Sudum Nilavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யாருக்குத் தான் நிலவு பிடிக்காது.? நிலா என்றால் குளிர்ச்சி. நிலா என்றால் அழகு..அந்த நிலா போன்றவள் பெண் என்று தானே கதை சொல்வார்கள். ஆனால் இந்தக் கதையில் வரும் பெண் நிலவுகள் சுடுவார்கள். கம்பீரமாக தீமையை எதிர்ப்பார்கள். ஆஷா ஆசையுடன் பெற்ற மகனை தத்து கொடுக்க விருப்பமே இல்லாமல் கொடுக்க முடிவு செய்கிறாள். அதில் ஆரம்பித்து அவள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். அழகும் ஏழ்மையும் சேர்ந்தால் அங்கே ஆபத்துக்கு பஞ்சமில்லை.

அவள் வேலை பார்க்கும் இடத்தில் இன்னல். மின்னல் போல் தப்பிக்கும் ஆஷா ரௌடிகளிடம் மாட்டுகிறாள். வளைந்து நெளிந்து மேகங்கள் இடையே புகுந்து புறப்படும் நிலவு மாதிரி மறைந்து மறைந்து தப்பி ஓடுகிறாள் மகன் நந்தனுடன். அவளுக்கு நிகராக அல்லல்படும் பெண் சிந்து. இரு பிறை நிலவுகள், பௌர்ணமி நிலவாக வரும் லாவண்யாவுடன் சேர்ந்து சமுதாய விரோதிகளை சுட்டு பொசுக்கும் கதை தான் இது.

அந்த வீர விளையாட்டின் கதைக் களம் தான் “சுடும் நிலவுகள்.” திகில், திக் திக் நிமிடங்கள், இருட்டு, சிறை என்று பயணிக்கும் ஆஷா, சிந்து. லாவண்யாவுடன் பயணம் செய்யுங்கள்.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580174610665
Sudum Nilavugal

Read more from Sankari Appan

Related to Sudum Nilavugal

Related ebooks

Related categories

Reviews for Sudum Nilavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sudum Nilavugal - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுடும் நிலவுகள்

    Sudum Nilavugal

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம்11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 1

    ஆஷா மகனுடன் கடை வீதியில் நடந்து கொண்டிருந்தாள். பயந்து பயந்து தான் நடந்து கொண்டிருந்தாள். இரவு ஏழு மணி ஆகிவிட்டது.

    அம்மா... எனக்கு கேக்... என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான் அவள் நாலு வயது மகன் நந்தன். வெளிச்சம் படாத பகுதியில் அவசரமாக நடந்தாள்.

    வாங்கித் தரேண்டா... இந்தக் கடை கேக் நல்லா இருக்காது. வேறு நல்ல கடையில் வாங்கித் தரேன் சரியா?

    நந்தனுக்கு இந்த விளக்கம் பிடிக்கவில்லை. இருந்தாலும் இனி அடம் பிடிதால் அம்மா அவன் தொடையில் ஒரு கிள்ளு கிள்ளிவிடுவாள். அது வலிக்கும். எனவே வாயை மூடிக் கொண்டு லேசாக சிணுங்கிக் கொண்டு நடந்தான். எத்தனையோ பெரிய கேக் கடைகள் தாண்டி போய் கொண்டிருந்தாள் ஆஷா. இந்த கடைம்மா... என்று ஆவலோடு கேட்பான்.

    இது இல்லேடா... நீ பேசாம வா, அம்மாவுக்குத் தெரியும்...

    அவள் நோக்கம் கேக் வாங்குவதில் இல்லை என்று பாவம் நாலு வயசு குழந்தைக்கு எப்படித் தெரியும்? ராஜா பார்லி கடையை தாண்டும்போது நந்தன் மீண்டும் அடம் பிடிப்பதை ஆரம்பித்தான்.

    சும்மா இருக்க மாட்டே? என்று அதட்டினாள் அவள்.

    ராஜா பார்லி மிகப் பெரிய கேக் கடை. விதம் விதமான கேக்குகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. இதை தாண்டினால் பிறகு நகை கடை, ஜவுளிக் கடை, என்று தான் பார்க்க முடியும். எனவே அதை உணர்ந்து தன் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தான் சிறுவன். அவள் காது கேட்காதது போல் நடந்து கொண்டிருந்தாள். இனி மயிலே மயிலே என்று கேட்டால் கிடைக்காது... நந்தன் வீதி என்றும் பாராமல் தரையில் விழுந்து புரண்டு கேக் வாங்கித் தா... கேக் வாங்கித் தா... என்று கத்தினான். சிறு கூட்டம் கூடி விட்டது. எரிச்சல் அடைந்தாள் ஆஷா. முகத்தை துப்பட்டாவால் பெரும்பகுதி மூடி மறைத்தாள். அவன் அழுவதை பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு வரட்டும் நல்ல நாலு சாத்து சாத்தி விடணும் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள்.

    ஏம்மா... புள்ளையை இப்படி அழவிட்டிட்டு இருக்கே? வாங்கி தான் குடேன்ம்மா. என்றாள் ஒருத்தி.

    ஒரு கேக் தானேம்மா கேக்றான். வாங்கிக் கொடேன். உன் சொத்தா அழிந்துவிடும்? என்றாள் வேறு ஒருத்தி.

    தனக்கு ஆதரவு கூடுவதை உணர்ந்த நந்தன் தன் குரலை மேலும் உசத்தினான். இன்று எப்படியும் அம்மாவை வாங்கித் தர வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான். பார்த்திபன் என்ற ரௌடி தன்னை பார்த்துவிடக் கூடாதே என்று பதைத்தாள். அது எப்படி நந்தனுக்குத் தெரியும்? அவனுக்கு இந்தக் கடை கேக் என்றால் ரொம்பப் பிடிக்கும். பஞ்சு போல் இருக்கும். டாப்பிங்க்ஸ் சூப்பராக இருக்கும். அதில் பதிந்திருக்கும் டூட்டி ஃப்ருட்டி டேஸ்டே தனி...

    வாங்கிக் கொடு... வாங்கிக் கொடு... என்று குரல்கள் எழும்பியது.

    அவன் அப்படித்தான் அடம் பிடிப்பான். இதுவரை நாலு கேக் வாங்கித் தந்திட்டேன். சாப்பிட்டிட்டு இப்ப இன்னும் வேணும்னு அடம் பண்றான். என்று ஆஷா சொன்னதும் எல்லோரும் கட்சி மாறினார்கள்.

    கண்ணு சேட்டை பண்ணக் கூடாது. அம்மா சொல்றதை கேளு...

    கூட்டம் கலைந்தது. நந்தன் எழுந்து கொண்டான். அவன் உடையில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணையும் தூசியையும் தட்டி விட்டாள் ஆஷா. அவன் கையை பிடித்துக் கொண்டாள். இனிமே அடம் பண்ணினே என் வாய் பேசாது. கை தான் பேசும்... வர வர உன் சேட்டை தாங்க முடியலை.

    அவள் நாலு அடி கூட நடந்திருக்க மாட்டாள் ஒரு இளைஞன் அருகில் வந்தான்...

    ஏங்க... குழந்தை ஏங்கிப் போயிடும். கொடுங்க... என்று கேக் பொட்டலம் ஒன்றை நீட்டினான் அவன். அம்மாவின் பார்த்தான் நந்தன். நாலு கேக் தின்னதாக அம்மா சொன்ன பொய்யை இந்த அங்கிளிடம் சொல்லிடலாமா, என்று நந்தனின் பிஞ்சு மனசு எண்ணிக் கொண்டிருந்தது.

    இதப் பாருங்க... என் குழந்தைக்கு என்ன வாங்கிக் கொடுக்கணும்? எப்ப வாங்கிக் கொடுக்கணும்னு எனக்குத் தெரியும். நீங்க உங்க வள்ளல் தன்மையை யார்கிட்டவாவது காட்டுங்க... போங்க... என்று ஆஷா விரட்டிவிட்டாள். முகத்தை மறைத்துக் கொண்டே பேசினாள். மேலே நடந்தாள். அந்த இளைஞனின் பக்கத்தில் நின்ற அவன் நண்பன் சொன்னான்

    இந்தம்மா அவனோட சித்தியா இருப்பா போலிருக்குடா... வா நாம போலாம். என்றான். கேக் கொடுத்தவன் சொன்னான்.

    எனக்கு என்னவோ அப்படித் தோனலைடா... அவங்களுக்கு என்னவோ பிரச்சனை போலிருக்கு...

    நமக்கென்ன டா? அவங்க பிரச்சனை அவங்களுக்கு. மூஞ்சியை இப்படி மூடிட்டுப் போறாங்க... என்னெனவோ நடக்கு...

    அவர்கள் அவளைத் தாண்டிப் போனார்கள்.

    ஆஷா ஒரு சந்துக்குள் நுழைந்தாள். அங்கு ஒரு பெண் ஆவலோடு நின்று கொண்டிருந்தாள். நந்தனைப் பார்தததும் அவள் முகம் மலர்ந்தது.

    வந்திட்டியா... ரொம்ப தேங்க்ஸ் ஆஷா... நந்தா வா வா வாவா...

    அந்தப் பெண்ணுக்கு சுமார் முப்பது வயதிருக்கும். களையான முகம். நல்ல ஆடை உடுத்தி இருந்தாள். முகத்தில் செல்வ செழிப்பின் மினுமினுப்பு. நெற்றியில் ஒரு சின்ன குங்குமப் பொட்டு. ஒற்றை சங்கிலி அணிந்திருந்தாள். தாலியாக இருக்கும். வேறு நகை கழுத்தில் இல்லை. கையில் ஒற்றை பிரேஸ்லெட். வைரம் போலும். மறு கையில் வாட்ச். தலைப் பின்னலில் ஒரு இனுக்கு மதுரை மல்லி. வாசமடித்துக் கொண்டிருந்தது. அவள் பெயர் வனிதா

    நந்தன் இவளைப் பார்த்ததே இல்லை. எதுக்கு இவள் அவனை கூப்பிடுகிறாள்? அவன் அம்மாவின் பின்னால் தன்னை மறைத்துக் கொள்ள முயன்றான். நந்தா... ஆன்ட்டிகிட்டே போ... என்றாள் ஆஷா.

    நோ... அம்மா வா வீட்டுக்குப் போலாம்...

    வனிதா அவன் கையை பிடித்து இழுத்தாள்.

    லெட் மீ கோ... என்றான் நந்தன்.

    அடம் பிடிக்கக் கூடாது நந்து. ஒரு வாரம் நீ இவங்க கூடத் தான் இருக்கனும். அம்மா அடுத்த சண்டே வந்து கூட்டிட்டுப் போவேன்...

    அம்மா குரலில் உறுதி இருந்தது. அவனுக்கு அழுகை வந்தது. கதகதவென்று அம்மாவின் மடியில் சுருண்டு அடிக்கடி படுத்துக் கொள்வான்... அவன் தூங்கியதும் அவள் மெல்ல அவனைப் பாயில் இடுவாள். அவனை அணைத்துக் கொண்டு படுப்பாள். மெல்ல பாடுவாள். தென்றல் அடிக்கும் முற்றத்தில் அம்மாவின் இனிய குரலின் ஓசையில் அவன் சுகமாகத் தூங்குவான். அவள் தலை வருடி விடுவாள். பிறகு அவனை உள்ளே வைத்து பூட்டிவிட்டு வேலைக்குச் செல்வாள். அந்த வேலை அவமானமான வேலை. அதான் வனிதாவிடம் தன் மகனை ஒப்படைக்க முடிவு பண்ணி விட்டாள். அவள் மகன் அவமானத்துடன் வாழ வேண்டாம். அந்த வனிதாவிடம் கௌரவமாக வளரட்டும். மனம் கணக்கும் முடிவு தான். வேறு வழி இல்லை.

    சரி நான் கிளம்பறேன்... என்றாள் ஆஷா.

    ஆஷா உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. நீ... நீ... வார்த்தைக்காக அவள் தடுமாறினாள்.

    பரவாயில்லை... பார்த்துக்கோங்க. நான் போனில் சொன்னது போல் அவனை கவனிச்சுக்கோங்க... அவனுக்கு முட்டை எல்லாம் பிடிக்காது. அசைவம் சாப்பிட மாட்டான். பால் பிடிக்கும். தயிர் பிடிக்கும்... பருப்பு ரசம் அவன் ஃபேவரெட். அப்புறம்...

    அவன் தூங்கும் வரை பாட்டு பாடனும்... அதானே? நீ தான் போனில் நிறைய வாட்டி சொல்லிட்டியே. நான் பார்த்துக்றேன்...

    நந்து கண்ணா போலாமா? என்றாள் வனிதா.

    நந்து விசும்பிக் கொண்டே நின்றான்.

    "இம்... போடா. அம்மா அடுத்த வாரம் உன்னைக்

    Enjoying the preview?
    Page 1 of 1