Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Poovithu Poothathu
Puthiya Poovithu Poothathu
Puthiya Poovithu Poothathu
Ebook118 pages52 minutes

Puthiya Poovithu Poothathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நந்தினியும் எழிலியும் ஆத்மார்த்தமான தோழிகள். பாரியும் அவர்கள் தோழன் எழிலி சிறு வயதிலேயே இறந்து விட, அவளை நேசித்த பாரி காணாமல் போக, நந்தினி டிக மயமாகிறாள். பல வருஷம் கழித்து நந்தினி எழிலியை திரும்ப பார்க்கிறாள். இறந்தவ எப்படி? குழம்புகிறாள்... இவர்களின் நட்பு, பிரிவு, மர்மம் என்று சுற்றி வருகிறது நாவல்... படித்துப் பாருங்கள். அவர்களுடன் ஒன்றிப் போவீர்கள்...

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580174610664
Puthiya Poovithu Poothathu

Read more from Sankari Appan

Related to Puthiya Poovithu Poothathu

Related ebooks

Reviews for Puthiya Poovithu Poothathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Poovithu Poothathu - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புதிய பூவிது பூத்தது

    Puthiya Poovithu Poothathu

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம்—1

    அத்தியாயம்—2

    அத்தியாயம்—3

    அத்தியாயம்—4

    அத்தியாயம்—5

    அத்தியாயம்—6

    அத்தியாயம்—7

    அத்தியாயம்—8

    அத்தியாயம்—9

    அத்தியாயம்—10

    அத்தியாயம்—11

    அத்தியாயம்—12

    அத்தியாயம்—13

    அத்தியாயம்—14

    அத்தியாயம்—1

    ஹாய் ஃபிரெண்ட்ஸ்

    இது என்னைப் பற்றிய கதை. நான் செய்த நல்லது. நான் செய்த கெட்டது... என்னை பாதித்த விஷயங்கள். என் நட்பு... என்னை மாற்றிய நிமிடங்கள்—இப்படி என் அருமை பெருமைகளை... சிறுமைகளை எல்லாம் சொல்லப் போறேன். யாருக்கும் சொல்லாத என் காதலைப் பற்றியும் சொல்லப் போறேன். நீங்க என்னை விமர்சனம் பண்ணலாம்... என்னைத் திட்டலாம்... ஆனால் மை டியர் ஃபிரெண்ட்ஸ் என்னை மட்டும் வெறுத்து விடாதீர்கள்... சரி போலாமா என் கதைக்குள்? என் பாணியில் சொல்வேன்... நீங்க புருஞ்சுக்கணும் என்ற வேண்டுகோளோடு ஆரம்பிக்கிறேன். என் பெயர் நந்தினி. எனக்கு மலர்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

    மலர்களை யாருக்குத் தான் பிடிக்காது.? முகநூலில் சிலர் எந்தெந்த நாட்டிலோ பூக்கும் மலர்களை எல்லாம் படம் பிடித்து போடுவார்கள். அதுக்கு லட்சத்துக்கும் மேல் லைக்ஸ் வரும். எனக்கும் மலர்கள் பிடிக்கும். சின்னச் சின்ன குண்டுமல்லி மலர்கள் எவ்வளவு வாசனை! புத்தம் புது ரோஜாக்கள் பனியின் முத்துக்கள் தாங்கிய இதழோடு எத்தனை அழகு! குளத்தையே அழகு படுத்தும் தாமரையை விரும்பாம இருக்க முடியுமா? ஆங்கில பேர் தாங்கி வரும் மலர்கள் வாசனை இல்லாவிட்டாலும் கண்ணுக்கு விருந்து தானே? டுலிப்ஸ்... டேஃபோடில்ஸ்... கிரிசந்தம்மஸ் இன்னும் எத்தனையோ!

    ஆனால் சில சமயம் நான் மலர்களை வெறுக்கிறேன். எழிலி படுக்க வைக்கப்பட்டிருக்கிறாள். அவள் மேல் மலர்கள் மலர்கள் மலர்கள்... எனக்கு அதை படம் பிடித்து அனுப்பியவன் மேல் கோபம் வருகிறது. அவளை அலங்கரித்த மலர்கள் மேல் கோபம் வருகிறது. அந்த நாளின் மேல் கோபம்... கடவுளின் மேல் கோபம்...

    அந்த படத்தை ஒளித்து வைத்துவிட்டேன். என் கண்ணில் படாமல் பார்த்துக் கொண்டேன். மனசில் எவ்வளவு வன்மம் இருந்தால் எனக்கு அந்த போட்டோவை அனுப்பியிருப்பான்?. அவன் மட்டும் என் கையில் கிடைத்தால்... அந்த போட்டோ என் மனசுக்குள் தாண்டவம் ஆடுது. அந்தக் காட்சியை என் கண் முன் கொண்டு வருது. என் மனசை பீஸ் பீஸ் ஆகுது. அது தானே அதை அனுப்பியவனுக்கு தேவை...

    எழிலி இறக்கும்போது நீ அருகில் இல்லையா நந்தினி? ன்னு கேக்றா ராஜி.

    இல்லே... நான் ஆஸ்திரேலியாவில் அல்லவா இருந்தேன். அவள் ஊட்டியில் செத்துப் போனாள்... சோகமாக சொல்றேன் நான். ஆனாலும் அவளைப் பற்றிய நினைவில் அன்பும் வெறுப்பும் சேர்ந்தே வருது. அவள் எனக்குத் தோழி இல்லை... என் தங்கை என்று நினைத்த நாட்கள் நினைவில் ஆடுகிறது.

    நந்தினி... உன்னால் என்னை வரைய முடியுமா? என்று ஒரு நாள் கேட்டாள். ‘முடியுமே எழிலி... வரையட்டுமா? திமிறிய படி முன்னங்கால்களை தூக்கிக் கொண்டு சிலிர்த்து ஃப்ரௌடாக நிற்கும் குதிரையை வரைந்து காட்றேன். அவள் உற்றுப் பார்க்கிறாள்... வரைந்த தாளை தூக்கிப் போட்டுவிட்டு ஓடறா.

    ஏய் எழிலி ஓடாதே... நான் அவள் பின்னே ஓடறேன். பறந்து சென்ற தாள் ஒரு மரத்தின் மேல் பட்டு, அங்கு படபடத்துக் கொண்டிருந்தது. அதை எடுத்துக் கொண்டேன். மரங்கள் அடர்ந்த ஊட்டி மலைக் காடு... ரெண்டு புள்ளிகளாக, மலைகளின் நடுவே சிறு பறவைகள் போல் நிக்றோம். குளிர் காத்து வீசுது. இதமான இயற்கை சூழல். காப்பி தோட்டங்களின் வரிசை தூரத்தில் மலைச் சரிவில் தெரியறது... அவள் நீர் வீழ்ச்சியாய் என் முன் நிற்கிறாள். அது என்னை கஷ்டப்படுத்துகிறது.

    நான் குதிரை மாதிரியா இருக்கேன்.? அவள் கண்ணில் நீர்.

    அசடு... நீ குதிரை மாதிரி கம்பீரம்ன்னு காட்டத் தான் அப்படி வரஞ்சேன்டீ... சிம்பாலிசம். உன் குணத்தைக் காட்டும் சிம்பல். புரியுதா.?

    அவள் குபீரென்று சிரிக்கிறா. அது தான் எழிலி. நெருப்பு ஒரு கணம். அருவி அடுத்த கணம். அணைத்துக் கொள்கிறாள்.

    அது சரிடீ. ஆனா என்னை மனுஷியா வரையேன். நான் பார்க்கணும். உன் மெல்லிசான குணம் அதில் தெரியனும். என் முரட்டு குணம் அதில் தெரிய வேண்டாம்... வெட்கி சிரிக்கிறா.

    சரி எழிலி. உன் பதினாறாவது பிறந்த நாள் பரிசா அதை உனக்கு கொடுப்பேன். அது வரை நீ காத்திருக்கணும்... என்றேன்.

    நந்தினி திஸ் இஸ் டூ பேட். என் பிறந்த நாளைக்கு ரெண்டு மாசம் இருக்கே? என்று வருந்துகிறாள்... அதுவரை காத்திருக்கணுமா.?

    என் மென்மையை உன் உருவத்தில் கொண்டு வரணும்ன்னு சொன்னியே... எனக்கு டைம் வேணாமா? அவசரபட்டா எப்படி? நந்தினி மாதிரி டச் அப்படீன்னா சும்மாவா? என்றேன். கை கோர்த்துக் கொண்டு அந்த மலைச் சரிவில் அன்று நாங்கள் ஓடியது எனக்கு மறக்கலை.

    கல்யாணம் பண்ணலை. குழந்தை பெதுக்கலை... குடும்பம் நடத்தலை... அவள் செத்துப் போயிட்டா. மனசுக்குள் கோடாரி கொண்டு யாரோ வெட்டுவது போல் வலிக்குது. ஆனா கடைசியா நாங்க பிரிஞ்ச போது, அசிங்கமா நாராசமா சண்டை போட்டு, கண்கள் கொதிக்க... ஒருத்தரை ஒருத்தர் தள்ளிவிட்டு பிரிஞ்சது ஞாபகம் வர என்னுள் வெறுப்பும், அதே சமயம் அய்யோ அப்படி நடந்துகிட்டோமே என்ற அவமானமும் மண்டியது...

    அந்தக் கடைசி நாள் நினைவுகள் தான் இப்ப அதிகம் மனசில் ஓடறது. அவளை அடிக்கடி நினைச்சிட்டு இருக்கேன். நான் வேணுமுன்னே செய்யலைடீன்னு அவ கிட்டே சொல்லணும்... அதுக்கு அவ திரும்ப வரணும் என்று குழந்தை போல் நினைக்கறேன். செத்தவ எப்படி வருவா.?

    நான் பிறந்து, வளர்ந்து, ஸ்கூல் ஃபைனல் படிச்சு முடிச்ச. ஊட்டிக்கு திரும்ப வரேன். ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பு படிச்சிட்டு, அங்கேயே வேலை பார்த்து வந்தேன். எழிலி இறந்த சேதி கேட்ட போது என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. உடனே போக முடியலை என் வேலை அப்படி. போகவும் பிடிக்கலை. எழிலியை பறிகொடுத்தாச்சு. இனி அங்கு என்ன வேலன்னு தோணுச்சு...

    எழிலி இறந்து பதினெட்டு வருஷம் ஓடிப் போயிடுச்சு. பதினெட்டு வருஷம் கழிச்சு இப்ப வந்திருக்கேன், ஏனோ எனக்கு நாங்க சின்ன வயதில் தோழிகளாக பதினெட்டு வயது வரை திரிந்த இடத்தை எல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சு. எழிலியை கடைசியா பார்த்த இடத்தில் வந்து நிக்கறேன். அது தோடர்கள் வாழும் இடம். இங்கு தான் எங்க சண்டை ஆரம்பிச்சுது. அதன் பிறகு நான் எழிலியையும் பாரியையும் பார்க்கவே இல்லை. பாரி என்ன ஆனான் என்றே தெரியவில்லை. அதற்கான விடைகளை இந்த மலைகளில், காடுகளில் பூக்களில், மேலும் அவள் வீட்டின் அருகில் நின்னு தேடறேன். கிடைக்குமா? அந்த அழகான ஊட்டி நாட்கள் திரும்ப வராது.

    ஊட்டி ரோஜாக்களை பார்க்கும் போது விருப்பு—வெறுப்பு ரெண்டும் வருது. மீண்டும் மீண்டும் சிம்ஸ் பார்க்கில் பூக்களை பார்க்க ஓடறேன். இங்கே தான் நான் பாரியுடன் கடைசியா பேசியது. என்ன மனுஷப் பிறவி? சிந்திக்கத் தெரிந்த பெருமை படைத்த ஆறறிவு இருந்து என்ன பயன்? சிரிக்கத் தெரிந்த ஒரே உயிரினம் என்ற பெருமையால் என்ன பயன்?... சில சமயம் பூக்களை பார்த்துக் கொண்டே முள்ளைப் பத்தி நினைத்து வெதும்பும் மனம் என்ன மனம்? இது தேவையா? யாரிடம் பஞ்சாயத்துக்குப் போக?

    நந்தினி சாப்பிட வா... அம்மா கூப்பிடறாங்க.

    "இல்லேமா...

    Enjoying the preview?
    Page 1 of 1