Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumbi Vaa Oliye Thirumbi Vaa...
Thirumbi Vaa Oliye Thirumbi Vaa...
Thirumbi Vaa Oliye Thirumbi Vaa...
Ebook164 pages1 hour

Thirumbi Vaa Oliye Thirumbi Vaa...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாலை மதி வாசகர்களை மகிழ்வித்த நாவல். உங்களையும் கவரும். வெண்ணை போல் வழுக்கிக் கொண்டு போகிற வாழ்க்கை அல்ல, செண்பாவின் குடும்ப வாழ்க்கை. திசை மாறும் கணவன் மோகன். உணர்வு பூர்வமாக துவளும் மகள் விஜி. அவளுக்கு அஞ்சு வயதான போது பிரிந்த அப்பா. அவள் பதினெட்டு வயது ஆன போது, தன்னுடன் வந்து இருக்கும்படி கூப்பிடுகிறார். நான் அப்பாவுடன் ஒரு வருஷம் இருந்துவிட்டு வருகிறேன என்று அம்மாவிடம் சொல்ல. செண்பா சொல்கிறாள் “அங்கே சாந்தி என்ற உன் அப்பாவின் மனைவி இருக்கிறாள். உன்னால் அவளுடன் அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியுமானால் போய்விட்டு வா..உன் விருப்பம் என்கிறாள் செண்பா. மகளை அங்கே அனுப்பியது சரியா?

சாந்தி......அப்பாவின் ரெண்டாவது மனைவி, அவர்கள் குழந்தைகள் ராம்-லக்ஷ்மன். இங்கே பல அதிர்ச்சிகளை சந்திக்கிறாள் விஜி. சாந்தியை பிரிய விரும்பும் அப்பா சாந்தி செய்யும் துரோகம். பிள்ளைகள் பற்றிய மர்மம். ரோஹித் என்ற மனிதனின் தலையீடு

விஜி எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறாள்? அப்பா மோகன் அம்மா செண்பாவிடம் திரும்பி வருக்கிறாரா? விஜி சேர்த்து வைக்க முயல்கிறாளா? சாந்தியின் கதி என்ன? குழந்தைகள் ராம்-லக்ஷ்மன் கதி என்ன? என்பது தான் கதை. விறுவிறு நடையில். .ஒரு நதியின் ஜதி போல் ஓடும் கதை. படித்துப் பாருங்கள்.. முழுவதும் படித்து முடிக்கும்வரை கீழே வைக்க மனம் வராது.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580174611092
Thirumbi Vaa Oliye Thirumbi Vaa...

Read more from Sankari Appan

Related to Thirumbi Vaa Oliye Thirumbi Vaa...

Related ebooks

Reviews for Thirumbi Vaa Oliye Thirumbi Vaa...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumbi Vaa Oliye Thirumbi Vaa... - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திரும்பி வா ஒளியே திரும்பி வா...

    Thirumbi Vaa Oliye Thirumbi Vaa...

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 1

    உச்சி வெயில் சூரியன் ரொம்ப கெட்டவன். தகித்துக் கொண்டிருந்தான்.

    ‘சரிதான் போ... தெரியாதா உன்னைப் பற்றி.’ என்று மனிதர்கள் சூரிய வெப்பத்தை அலட்சியப்படுத்திவிட்டு காய்கறிகளை ஓடி ஓடி பொறுக்கி கட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டிருந்தனர். தக்காளி வாங்கி மேலோடு போட்டுக்குகொண்டு கட்டைப் பையைத் தூக்கினாள் விஜி. சந்தையை விட்டுப்

    புறப்பட தயாரானாள். நாக்கு வறண்டது. அதோ நுங்கு சாப்பிடலாமா? இளநீர்... எலுமிச்சை சர்பத்... எதையாவது குடிக்கலாமா? வேண்டாம்... வெட்டியாக செலவாகும். வீட்டிற்கு போய், வெட்டிவேரால் கமகமக்கும் பானைத் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். நோ... செலவு!

    இருந்தாலும் தொண்டை தா தா என்றது. பொறு பொறு என்று அதனிடம் உபதேசம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, ஒரு கொக்கோ கோலா பாட்டில் அவள் முன் நீண்டது. ஏறிட்டாள்... இவர் இவர்... புரிந்துவிட்டது...

    அப்பா... அவளுக்கு சட்டென்று அடையாளம் தெரிந்துவிட்டது.

    நீ ஞாபகம் வச்சிருக்கியே... அவர் குரலில் ஆச்சரியம் தெரிந்தது.

    என்னோட அஞ்சு வயசில் பிரிஞ்சு போயிட்டீங்க... ஆனாலும் உங்க முகம் மறக்குமா என்ன?... உங்களுக்கு என்னை அடையாளம் எப்படி தெரிஞ்சது?

    நிறைய துப்பறியும் வேலை பார்த்தேன்... கண்டுபிடிச்சேன்...

    விஜி... உன் கூட பேசணும்?

    ஏம்ப்பா... தீடீர்னு? ஏதாவது முக்கியமான பேப்பரில் கையெழுத்து போடணுமா? எனக்கு பதினெட்டு வயசு ஆய்டுச்சு. உங்க சொத்தில் பங்கு கேக்கமாட்டேன்னு... எழுதித் தரணுமா? நான் ரெடிப்பா...

    அவர் வருத்தமுடன் சிரித்தார். பதிமூன்று வருஷங்கள் ஓடிவிட்டது. இப்ப தேடி வந்தால்... அவள் வேறு எப்படி நினைப்பாள்?

    என் சொத்தையே இழந்துட்டேன். திரும்ப கேக்க வந்திருக்கேன்மா...

    அவள் சிரித்தாள். அவளுள் நிறைய கேள்விகள் முட்டி மோதியது. அவள் சிறுமியாக இருந்த போது பார்த்த அதே முகம் தான். வயது சில பல மாற்றங்களை நூலிழையாக செய்துவிட்டிருந்த போதிலும் கண்களின் கூர்ப்பும், சிரிப்பும் அப்படியேதான் இருந்தன. இத்தனை வருடங்கள் எங்கே காணாமல் போனீர்கள்? இப்ப என்ன திடீர் வருகை? இத்தனை கேள்விகளும்

    அவள் முகத்தில் தொக்கி நிற்பதை அவர் புரிந்துகொண்டார்.

    என்கிட்டே கேக்க எந்த சொத்து இருக்கு? அப்பா... நான் ப்ராமிஸ் பண்றேன்... உங்க வாழ்க்கையில் எந்த இடைஞ்சலும் நான் பண்ணமாட்டேன். அவள் அப்பாவுக்காக கோக்கோ கோலாவை குடித்தாள்.

    தாங்க்ஸ்ப்பா... அவள் நகர ஆரம்பித்தாள்.

    நான் சொத்துன்னு சொன்னது உன்னைத்தான்மா. நான் தவறவிட்ட வைரம் நீ... அவள் குடித்துவிட்டு தந்த பாட்டிலை வாங்கி பெட்டிக்கடையில் ஒப்படைத்துவிட்டு வந்தார்.

    நடுத் தெருவில் நின்று எதுக்கு பேசணும்? வா விஜி... உன்னோடு பேசணும்.

    கார் அருகே சென்றார்கள். விஜிக்கு சந்தோஷமாக இருந்தது. ஏறிக் கொண்டாள். கார் டிராபிக்கில் நுழைந்து லாவகமாக மிதந்தது.

    நீ என் மகள்ங்கறது எனக்குப் பெருமையா இருக்கு. உன் அம்மாவின் வீம்பால் உன்னை இழந்தேன். நானே வேண்டாம்கறபோது... என் மகள் இவள், என்று நீங்க சொந்தம் கொண்டாடிக் கொண்டு வரவேண்டாம்னு உங்கம்மா சொல்லிட்டா... இப்ப நீ சுயமா முடிவெடுக்கும் நிலையில் இருக்கே. என் மகள் எனக்கு திரும்ப வேணும்... என்ன சொல்றே விஜி?

    விஜி முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அதே சமயம் அம்மா என்ன நினைப்பாளோ என்ற அச்சம் வந்தது.

    அப்பா... என்னை பொக்கிஷமா நினைக்றீங்ளா? எனக்கு... எனக்கு... அவள் கண்களில் நெகிழ்வு தெரிந்தது. அவருக்கு திருப்தி. அவள் மறுத்துவிடுவாளோ என்று பயந்து கொண்டிருந்தார். தாங்க்ஸ்... விஜி... கண்ணின் ஈரம் துடைத்துக் கொண்டார். கார் ஒரு ரெஸ்டாரென்ட் வாசலில் நின்றது.

    வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். நீ பிளஸ் டூவில் நிறை மார்க் வாங்கி இருக்கே... மெடிசின் படிக்க ஆசைப்படறியா? படிம்மா... நான் படிக்க வைக்கிறேன். செலவு பற்றி கவலைப்பட வேண்டாம்...

    சரிப்பா... அவளுக்கு அந்தக் கடைசி நாள் ஞாபகம் வந்தது. ஐந்து வயது சிறுமியாக அவள் நின்று கொண்டிருகிறாள். கலவரத்துடன் அம்மா அப்பா முகங்களை மாறி மாறி பார்த்துக் கொண்டிருகிறாள்... அது ஒரு மாலை நேரம். அப்பா கோபத்தின் உச்சியில் இருந்தார். அம்மா அதிர்ச்சியில் இருந்தாள். அவள் பேந்தப் பேந்த இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அப்ப நீ ஒத்துக்கமாட்டே இல்லையா? செண்பா... உனக்கு இத்தனை வீம்பு ஆகாது. நான் உன்னையும் நேசிக்கிறேன் தெரியுமா?

    உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தான். எத்தனை பெண்கள் வந்தாலும் உங்க மனதில் இடம் உண்டு... உங்க சாந்தியிடமே நீங்க போகலாம்...

    செண்பகம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அம்மாவின் முகத்தில் தெரிந்த வலி மட்டும் விஜிக்குப் புரிந்தது. ஆனால் என்ன பிரச்சனை என்று புரியவில்லை. அந்த வயதில் அப்பா இனி வரமாட்டார் என்று மட்டும் புரிந்தது. அம்மா மேல் கோபமாக வந்தது. அப்பா போய்விட்டார். அவள் அப்பா இல்லாமல் வளர்ந்தாள். பள்ளியில் பிள்ளைகள் அப்பா பற்றி சொல்லும் போது அவளுக்கு தொண்டை அடைக்கும். ஏக்கமாக இருக்கும். அம்மாவின் வீம்பால் அவள் தந்தை அன்பை இழந்தாளா? தினம் அம்மாவுக்குத் தெரியாமல் அப்பாவுக்கு கடிதம் எழுதுவாள் விஜி தன்

    டைரியில். அது அவளுக்கு ஆறுதலாக இருக்கும்.

    அப்பா... நீ எப்ப வருவே? நான் உன்னை வரைஞ்சிருக்கேன் தெரியுமா?

    அப்பா... எனக்கு நீ சைக்கிள் கத்துத் தர்ற மாதிரி கனவு கண்டேன்...

    "அப்பா... இன்னிக்கு என் பிறந்த நாள். எனக்கு சாக்லேட்ஸ் வாங்கிக் கொடுக்க

    யாருமே இல்லை... அம்மா என் பிறந்த நாளை மறந்துட்டாங்க..."

    இப்படி அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவள் எழுதி வைத்திருந்தாள். ஐந்து வயதில் எழுதியதை பத்து வயதில் படித்துப் பார்த்தாள். அவளுக்கு அழுகை வந்தது. பத்து வயதில் அவள் எழுதினாள்.

    "வீட்டில் நாங்க ரெண்டு பேர் தான். அப்பப்ப பாட்டி தாத்தா சித்தி வருவாங்க.

    அவங்க எல்லாம் விருந்தினர் மாதிரி, ரெண்டு நாள் இருந்திட்டுப் போயிடுவாங்க. அப்பா... நீயும் விருந்தினர் மாதிரியாவது வந்திட்டுப் போயேன்... எங்க அப்பா வந்தாங்களேன்னு ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லணும்."

    என் தோழி ராஜியோட அப்பா அவளை ஊட்டி கூட்டிட்டுப் போகப் போறாராம். ராணியோட அப்பா அவளை சிம்லா கூட்டிட்டுப் போகப் போறாராம். நீ என்னை ஷாப்பிங் மாலுக்காவது கூட்டிட்டுப் போனாக் கூட போதும்... அப்பா. அப்பாவின் அன்புக்காக ஏங்கினாள். ஒற்றைச் சிறகில் பறக்கும் குஞ்சுப் பறவை அவள்.

    விஜிக்கு அப்பா ஏக்கம் இருப்பதை சென்பாவும் உணர்ந்தாள்.

    விஜி... லீவுக்கு தாத்தா வீட்துக்குப் போறியா? தாத்தா தான் உனக்கு அப்பா.

    அந்த யோசனை ஒரு தற்காலிக சந்தோஷத்தைக் கொடுத்தது. தாத்தாவோடு பேசுவது... விளையாடுவது... வெளியே போவது என்று இருந்த போதும் தாத்தா தாத்தா தான். அப்பாவாக முடியாது என்று அவளுக்குப் புரிந்தது. லீவு முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு வெறுமையாக இருக்கும். அம்மா அவளை அன்பாகப் பார்த்துக் கொண்டாள் தான். தன்னால் முடிந்தவரை மகளின் ஏக்கத்தை தீர்க்கப் பார்த்தாள். ஆபிஸ் பங்க்ஷன்... சினேகிதிகள் வீடு, சினிமா... என்று மகளை செண்பா கூட்டிக் கொண்டு போவாள். விஜிக்கு இன்னும் ஏக்கம் அதிகமாகும். காரணம் அங்கு அவள் வயது ஒத்த பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் தங்கள் அப்பாவோடு சிரித்து விளையாடுவது கண்டு மனசு இன்னும் ஏங்கும்.

    ரதி சித்தி அவளை கொஞ்சுவாள். படம் வரைந்து தருவாள். அவளுடன் ஸ்கிப்பிங் விளையாடுவாள். கேரம் விளையாடுவாள்.

    விஜி... உனக்கு அப்பா பக்கத்தில் இல்லையேன்னு வருத்தமா?

    அதெல்லாம் இல்லே... அம்மா தான் அப்பா மாதிரியும் பார்த்துக்கறாங்களே.

    எனக்குத் தெரியும். ஆறு வயசு தான் ஆகுது. பெரிய மனுஷி மாதிரி பேசறியே. இல்லாததுக்காக ஏங்கக் கூடாது. இருக்கறத வச்சு சந்தோஷப்படணும்... அறிவுரைகள் அறிவைத் தொடும் மனசை தொடாது.

    சித்தி ஊருக்குக் கிளம்பி போனதும் அவள் சோகமாக கொஞ்ச நாள் அலைவாள். ரதி சித்தி கல்யாணம் ஆகிப் போனதும் அவளுக்கு ஏக்கம் அதிகமாகிவிட்டது. அவள் முதல் முதலாக தாவணி போட்ட போது சித்தி தன் கணவரோடு வந்திருந்தாள். சடங்கு நடத்தினாள் அம்மா. தாத்தா பாட்டி, அம்மாவின் அண்ணன் ராகவன் எல்லோரும் வந்திருந்தார்கள். விஜிக்கு வீடு நிறைய மனுஷாள் இருப்பது பிடித்தது. அந்த வீடு சிரிப்பு சத்தத்தால் நிரம்பி வழிந்தது. பாட்டி அவளுக்கு ஜடைபில்லை வாங்கி வந்திருந்தாள்.

    என்னம்மா நீ... இந்த காலத்திலே போய் ஜடைபில்லை அது இதுன்னு ப்ரசன்ட் பண்ணிக்கிட்டு. அழகா ஒரு ஜோடி தொங்கட்டான் வாங்கி இருக்கலாமே, விஜிக்கு நல்லாயிருக்கும். என்றான் ராகவன்.

    சும்மா இருடா... உனக்கென்ன தெரியும்? பொண்ணலங்காரத்துக்கு இதெல்லாம் வேணுமில்லே. கில்ட் கடையிலே போய் வாங்கி போட்டுக்லாம் தான். அது இது மாதிரி அழகாயிருக்குமா? என்றாள் கோகிலா.

    அம்மா... ரொம்ப அழகா இருக்குமா. இது பாட்டி வாங்கிக் கொடுத்ததுன்னு காலம் பூரா பார்த்து ரசிபாள் என் மகள். இல்லையா விஜி? நீ சும்மா இரு அண்ணா... அம்மா நல்ல ப்ரசன்ட் தான் வாங்கி இருக்காங்க... என்று செண்பா சொன்னதும் கோகிலா முகம் பிரகாசமடைந்தது. ராகவன் தங்கை மகளுக்காக ஐயாயிரம் ருபாய் செலவில் ஒரு கருநீல பட்டுப் புடவை வாங்கி வந்திருந்தான். ரதியும் அவள் கணவன் செல்வகுமாரும் பெரிய பெரிய பூ போட்ட சுடிதார் வாங்கி வந்திருந்தார்கள். கண்ணாடி வேலைப்பாடும் ஜரிகை புள்ளிகளும் நிரம்பிய உடை கண்ணைக் கவர்ந்தது. அதோடு ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1