Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhal Yutham
Nizhal Yutham
Nizhal Yutham
Ebook137 pages57 minutes

Nizhal Yutham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனுவுக்கு அவள் காதலனுடன் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போது அவளின் அம்மா இறந்துவிட கல்யாணம் தற்காலியமாக நின்று போய்விடுகிறது. வாசன் அவளுக்கு ஃபோன் செய்து எப்போ கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கேட்கிறான்.

அனு "நான் கல்யாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை. அம்மா இல்லாததால் நான் என் தங்கைகள். தம்பிக்கு அம்மா ஆகிவிட்டேன்." என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விடுகிறாள். தங்கை ரூபா சண்டை போட்டுக் கொண்டு ஹாஸ்டலில் போய் தங்குகிறாள். அப்பா பொறுபில்லாதவர். தம்பி தங்கை பள்ளி படிப்பில் இருக்கும் சிறுவர்கள்.

மாமாவின் குடும்பத்தில் உள்ளவர்களின் நெருக்கடி தொடர்கிறது. பல குழப்பங்கள்.. பிரச்சனைகள் சுற்றி அடிக்க அனு எப்படி அதை சமாளிக்கிறாள்.... நிழல் யுத்தம் தரும் பாடம் என்ன.? படித்துப் பாருங்கள். ஸ்வாரஸ்யமான திருப்பங்களும், அழகான காதல் காற்றும், தாயின் அன்பும் கொண்ட நல்லதோர் வாசிப்பாக இருக்கும் குடும்ப நாவல் இது.

Languageதமிழ்
Release dateMay 25, 2024
ISBN6580174611151
Nizhal Yutham

Read more from Sankari Appan

Related to Nizhal Yutham

Related ebooks

Reviews for Nizhal Yutham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhal Yutham - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிழல் யுத்தம்

    Nizhal Yutham

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம்—1

    அத்தியாயம்—2

    அத்தியாயம்—3

    அத்தியாயம்—4

    அத்தியாயம்—5

    அத்தியாயம்—6

    அத்தியாயம்—7

    அத்தியாயம்—8

    அத்தியாயம்—9

    அத்தியாயம்—10

    அத்தியாயம்—11

    அத்தியாயம்—12

    அத்தியாயம்—13

    அத்தியாயம்—14

    அத்தியாயம்—15

    அத்தியாயம்—1

    அனுவின் செல் சிணுங்கிற்று. பார்த்தாள். வாசன் தான். அப்பா, டி.வி யில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு காது கேட்கும் திறன்

    குறைந்து விட்டதால் சப்தமாக வைத்திருந்தார். கிட்டத்தட்ட அலறிக் கொண்டிருந்தது.

    அப்பா... டி.வி வால்யூமை குறைங்க... என்றாள். செய்தி கேட்கும் போது அவர் எந்த சமரசம் பண்ணிக் கொள்ளமாட்டார். அனு எழுந்து போய் தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

    சொல்லுங்க வாசன்...

    "கல்யாண தேதியை முடிவு பண்ணலாம். அடுத்த மாதம் இருபதாம் தேதி நாள் நல்லாயிருக்காம், ஜோசியர் சொன்னதா அம்மா சொல்றாங்க. உனக்கு ஒ.கே தானே?

    இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வருது?

    அனு... விளையாடாதே. உங்கம்மா இறந்தது மிகப் பெரிய துக்கம் தான். நமக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் போது உயிரோடு நல்லாத்தானே இருந்தாங்க. தீடீர்ன்னு இப்படி ஆகும்னு யார் நினைப்பாங்க? விதி... கல்யாண தேதியை தள்ளிப் போட்டோம். இப்ப நாள் குறிச்சு காலா காலத்திலே நடக்கிறது தானே முறை.

    வாசன்... கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையில் நான் முதல்ல இல்லை.

    அப்ப என்ன செய்யலாம்கறே? இன்னும் மூணு மாசம் தள்ளிப் போடலாமா? அதுக்குள்ளே உன் துக்கம் கொஞ்சம் ஆறிடும் தானே.

    இதப் பாருங்க... நானே இது விஷயமா உங்ககிட்டே பேசணும்னு இருந்தேன். எப்படி சொல்றதுன்னு தவிச்சிட்டிருந்தேன்...

    என்ன பிரச்சனை அனு உனக்கு?

    நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை. நீங்க வேறு நல்லப் பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க.

    வாசன் அதிர்ந்து, வேகமாக முச்சு முட்டி திணறினான். என்ன சொல்கிறாள் இவள்? அவனுக்கு மட்டும் வருத்தமில்லையா என்ன?

    என்னாச்சு அனு உனக்கு? ஐந்து வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து... இப்பதான் அவரவர் பெற்றோரிடம் வாதாடி கெஞ்சி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்து கல்யாண தேதி குறித்து... உனக்கு முகூர்த்தப்பட்டு கூட வாங்கியாகிவிட்டது... நீ இப்படி பேசறே. உங்கம்மா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முந்தி இறந்தது வேதனையான விஷயம் தான். அதற்காக இப்படி கல்யாணமே வேண்டாம்னு சொல்றது என்ன நியாயம் அனு?

    நியாயமான கேள்வி தான். அனு கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். சொல்ல நினைத்ததை சொல்லிவிட வேண்டும்.

    துக்கத்தினாலே மட்டும் நான் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லலை வாசன். இப்ப நான் இந்தக் குடும்பத்துக்கு அம்மாவாகிவிட்டேன். இரண்டு தங்கைகள், ஒரு தம்பி... பொறுப்புகளை புரிந்து செயல் படத் தெரியாத தந்தை. சொல்லுங்க இந்த நிலையில் உங்களைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு உங்க வீட்டுக்கு ஓடி வந்துவிட முடியுமா? உங்க நல்ல எதிர்கால வாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள் வாசன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ரொம்ப ஸாரி... குட் பை. செல் துண்டிக்கப்பட்டுவிட்டது. வாசன் சுய நினைவு இழந்தது போல் உணர்ந்தான். சுத்தமாக நொறுங்கிப் போய்விட்டான். முகமெல்லாம் சந்தோஷமாக கல்யாண நாள் குறித்து போன் பேசிய மகன்... கல் போல் நிற்பதை கண்ட தாய் சுசீலா அவன் தோளை ஆதரவுடன் தட்டினாள்.

    என்னாச்சுடா? ஏன் இப்படி பேய் அறஞ்சா மாதிரி முழிக்கிறே? எனக்கு பயமா இருக்குடா... கலக்கத்துடன் பார்த்தாள். வாசன் பதில் பேச முடியாமல் வாய் அடைத்து நின்றான். பூக்களை எதிர்பார்த்தவன் சேற்றை பூசிக் கொண்டான்.

    சுசி... அவனை விடு. மெல்ல சொல்லட்டும். நீ உன் அறைக்குப் போய் ஓய்வு எடு வாசன். என்றார் கமலநாதன். வாசன் சென்று விட்டான். பெற்றோர் ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.

    ஹாஸ்டல் அறையை பூட்டிக் கொண்டு இருபது வயது இளமைத் துள்ளலுடன் ரூபா படிகளில் இறங்கினாள். செண்டின் மணம் காற்றில் கலந்தது. படபடக்கும் உயிர் துடிப்பான கண்கள்... அழகான கருப்பு வெல்வெட் பூக்கள் போட்ட மஞ்சள் செல்வார்... சற்றே குதி உயர்ந்த செருப்பு. ஈரமான தாமரையாக புன்னகை ததும்ப தன் டிபன் பாக்ஸை சரோவிடமிருந்து பெற்றுக் கொண்டு கிளம்பினாள். விடுதித் தலைவி கல்யாணி கூப்பிட்டாள்.

    ரூபா...

    மேடம்...

    நீ ஒரு அநாதைன்னு சொல்லித்தானே இந்த வர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில் சேர்ந்தே...

    ஆமா மேடம்.

    பொய் இல்லையே...

    நான் எதுக்கு பொய் சொல்லணும்? போக எத்தனித்தாள்.

    அப்ப இந்த லெட்டர் உனக்கு யார் எழுதி இருக்காங்க?

    லெட்டரா? இப்ப யார் மேடம் லெட்டர் எழுதறாங்க? எல்லாம் ஈமெயில் தான். கடித்தத்தை வாங்கிக் கொண்டாள்.

    பார்த்தா அவீசியல் லெட்டர் மாதிரி தெரியலையே.?

    என் தோழி பல்லவி எழுதி இருக்கா மேடம்... பொய் சொன்னாள்.

    ஒ. அத்துடன் விசாரணையை முடித்துக் கொண்டாள் கல்யாணி. அவள் கண்களில் சந்தேகம் நிழலாக படர்ந்ததை ரூபா கண்டு கொண்டாள். கவனிக்காதது போல் ஸ்கூட்டியை உருட்டிக் கொண்டு வீதிக்கு வந்தாள். ஹாஸ்டல் வார்டன்னா இப்படியா? துளைத்து துளைத்து துப்பாக்கி குண்டு போல் கேள்வி கேட்பதும்... கண் குத்தி பாம்பு போல் கொத்திக் கொத்தி பார்க்கிறதும்... ச்சே என்று அலுத்துக் கொண்டாள் ருபா. ஒ... இந்த லெட்டர்! கையெழுத்தைப் பார்த்தவுடனே அது அனு அக்காவிடமிருந்துதான்னு புரிந்து விட்டது. விடமாட்டேன்னு துரத்தி துரத்தி உபதேசம் பண்ணுவாளே! ஐந்து வயது பெரியவளாம். இப்போ அம்மா ஸ்தானத்தில் இருக்காளாம். அதற்காக மூச்சு விடுவது கூட இவளிடம் கேட்டுத்தான் விட வேண்டுமா என்ன? கடித்தத்தைப் பிரித்துப் பார்த்தாள்.

    அன்புள்ள தங்கை ருப்பா

    பெயருக்கு ஏத்தா மாதிரி ரூபவதியா இருக்கே. இப்படி தனியாப் போய் தங்கலாமா? அம்மாவின் ஆன்மா சாந்தி அடையுமா? தயவுசெய்து வீட்டுக்கு வந்து விடு. நீ இல்லாமே வீடே களை இழந்து கிடக்கிறது. சுமா... பிரபு உன்னைத் தேடுகிறார்கள். அப்பா ரொம்ப வருத்தப்படறார். இதை தந்தி போல் பாவித்து உடனே வா...

    அன்பு அக்கா அனு.

    அப்பா வருத்தப்படறாராம். அவருக்கு அவளைக் கண்டாலே பிடிக்காது. அவர் தானே ஒழுங்கா இருக்கறதானா இரு. இல்லேன்னா வீட்டை விட்டு ஓடிடு. அதான் சம்பாதிக்கிறே இல்லை... என்று கத்தினவர். அவரா வருத்தப்படப் போகிறார்! கடித்தத்தை சின்னச் சின்னதாக கிழித்துப் போட்டாள். ஒவ்வொரு துண்டும் பரிதாபமாக தெருவில் சிதறிற்று. அப்பாவையே தள்ளி விட்டது போல் உணர்ந்தாள். ஸ்கூட்டியை கிளப்பினாள்.

    ஹலோ மிஸ்... இதே சிங்கப்பூரா இருந்தா நீங்க பைன் கட்டணும். நம்மூர்ன்னா அவ்வளவு இளக்காரமா? கேட்டபடி தன் பைக்கை அவள் அருகில் நிறுத்தினான் அந்த வாலிபன். ரூபா முறைத்தாள்.

    அவ்வளவு சுத்தம் பார்க்கிற ஆளா இருந்தா நீங்களே பொறுக்கிக் கொண்டு போய்... அதோ அந்த டஸ்ட் பின்னில் போடுங்க. வந்திட்டாங்க காலங் கார்த்தாலே... இடியட்...

    அவன் வொய் நாட்... என்று கூறி காகிதத் துகள்களை ஒன்று விடாமல் பொறுக்கி குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்தான்.

    அழகான பெண்களுக்கு திமிர் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் ஓவர் தான்... ஸீ யூ... பைக் தட தடக்க கிளம்பிப் போனவன் பை த பை ஐ ஆம் பிரசன்னன்... என்று விட்டுப் போனான்.ரூபாவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. சென்னையின் மிஸ்டர் கிளீன் என்று சொல்லி சிரித்துக் கொண்டாள். வேடிக்கையான பிரகிருதி தான்...

    மணி நான்கைத் தாண்டிவிட்டது. மாலை நேரக் காற்று சிறு நாய் குட்டி விளையாடுவது போல் மைதானத்தை சுற்றி அடித்தது. பள்ளி முடிந்து வந்த பிள்ளைகள் அலை அலையாக மிதந்து வந்தார்கள். சுமா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அது ஒரு தனியார் பள்ளி. மெட்ரிக் படிக்கும் மாணவி சுமா. மன்த்லி டெஸ்டில் எல்லா பாடத்திலும் முதல் மார்க் வாங்கி இருந்தாள். அவள் கண்களில் பெருமிதம். அவள் தோழி சொன்னாள் சுமா... பயமா இருக்குடி. இரண்டு பாடத்தில் கம்மி மார்க். எப்படி அப்பாக் கிட்டே கையெழுத்து வாங்கப் போறேன் தெரியலை.

    போனிலே கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருந்தே. பரீட்சை சமயம் முதல் நாள் முக்கி முக்கிப் படிச்சா நியாபகம் இருக்குமா? அன்று நடத்திய பாடத்தை அன்றே படிக்கணும் ப்ரீத்தா... என்றாள்

    Enjoying the preview?
    Page 1 of 1