Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aada Marantha Oonjal
Aada Marantha Oonjal
Aada Marantha Oonjal
Ebook254 pages1 hour

Aada Marantha Oonjal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு என்ற ஊஞ்சல் ஆடினால் குடும்பம் நன்றாக இருக்கும். அதுவே ஆணவம் என்ற ஊஞ்சல் ஆடினால்? குடும்பம் ஆடிவிடும். பிரிவும் பகையும்... போராட்டமும் தான் மிஞ்சும். அப்பாவின் ஆணவமும் அறியாமையும் அவர் முத்த பெண் சுபாவிடம். அம்மாவின் அடக்கமும் அன்பும் இளைய பெண் ஆர்தியிடம். சந்திரசேகர் என்ற மகன் விபத்தில் இறந்துவிட, அதுக்கு காரணமே ஆர்த்தி தான் என்று அவளை வெறுக்கும் அப்பா. சந்திரசேகர் மரணத்தில் மர்மம் உள்ளதாக கருதும் அப்பா. குழப்பங்கள் வருத்தங்கள், பகை எல்லாம் முடிவுக்கு வர அப்பாவின் மன ஊஞ்சல் அன்பால் ஆடனும். ஆடியதா? படித்துப் பாருங்கள்... ஒரு புதிய கோணத்தில் வாழ்க்கையை பார்ப்பீர்கள்.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580174610918
Aada Marantha Oonjal

Read more from Sankari Appan

Related to Aada Marantha Oonjal

Related ebooks

Reviews for Aada Marantha Oonjal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aada Marantha Oonjal - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆட மறந்த ஊஞ்சல்

    Aada Marantha Oonjal

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்—6

    அத்தியாயம்—7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்—12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15

    அத்தியாயம்-16

    அத்தியாயம்-17

    அத்தியாயம்-18

    அத்தியாயம்-19

    அத்தியாயம்-20

    அத்தியாயம்—21

    அத்தியாயம்-22

    அத்தியாயம்-1

    ஆர்த்தி இன்று மஞ்சள் பூசி குளித்திருந்தாள். அபூர்வமான விஷயம். கண்ணாடியில் பார்த்தபோது முகமே ஒரு அலாதி ஆழகுடன் பளிச்சிட்டதை உணரமுடிந்தது. குங்குமப் பொட்டு இட்டு ஆத்துக் கட்டலில் கட்டுண்ட விரிந்த அடர்த்தி கூந்தலில் கிளிப் போட்டு மல்லிகைச் சரம் தொங்கவிட்டிருந்தாள். பெண்மையின் அழகு இந்த அலங்காரத்தால் ஒரு லட்சுமீகரத்தை பெற்றுவிட்டது உண்மை.

    ஆர்த்தி... என்ன இன்று உடையலங்காரம் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கு? எங்கே உன் மாடர்ன் கெட்டப்?... இந்த அலங்காரம் கூட உனக்கு கச்சிதமா பொருத்தமா இருக்கு... என் பெண் அழகு என்றால் அழகுதான்.

    என்றபடி வந்த அம்மா நளினா மகளின் கன்னமிரெண்டையும் வழித்து தன் நெற்றிப் பொட்டுக்களில் சொடுக்கிக் கொண்டாள். மனசுக்கு நிறைவாக இருந்தது. ஆர்த்தி சிரித்துக் கொண்டாள்.

    அம்மா... உனக்கும் அப்பாவுக்கும் சஷ்டியப்தபூர்த்தி. அதை நான்தான் முன்னே நின்று நடத்தப் போறேன். இன்று உங்களுக்கு உடைகள் எடுக்கப் போறேன். அதான் சென்டிமென்ட்டலா இப்படி உனக்குப் பிடித்த மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டேன். எப்படி? உன் மனசுக்குள்ளே இருக்கேனா?

    அதிலே உனக்கு என்ன சந்தேகம்? நீ எப்பவும் என் மனசிலே உக்காந்துக்கிட்டு போக மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றே. எனக்கும் உன்னை விடுவிக்கிற எண்ணம் இல்லை. சரி... உன் கிட்டே ஒரு வேண்டுகோள். ரொம்ப விலை உயர்ந்த புடவை எல்லாம் வாங்கிடாதே ஆர்த்தி. உங்கப்பா உன்னுடன் பேசுவதில்லை. உங்கண்ணா வேற...

    அம்மா நிறுத்திக் கொண்டாள். அவள் கண்களில் சின்ன முத்துக்கள் போல் கண்ணீர் ஒரு பெரிய துக்கத்தை திரட்டி வைத்திருந்தது. அண்ணன் சந்திரசேகரின் படம் பெரிதுபடுத்தப்பட்டு கூடத்தில் மாட்டப்பட்டிருந்தது. ரோஜா மாலை சாத்தப்பட்டிருந்தது. ஆர்த்தி அம்மாவின் கண்ணீர் துடைத்தாள். இந்தக் கண்ணீர் எவ்வளவு விலை மதிப்பு பெற்றவை! ஒரு தாயின் பாசத்தின் அடையாளம். ஒரு சோகக் கதையின் நிழல்.

    புரியுதும்மா. உன் வலி புரியுது. அண்ணன் இறந்து பத்து வருடம் ஓடிவிட்டது. ஆனாலும் நீ உன் ஒரே மகனை இழந்தது எவ்வளவு வருத்தமான விஷயம்ன்னு எனக்குத் தெரியாதா? அண்ணா இறந்ததற்கு நான்தான் காரணம்னு அப்பா என் கூட பேசறதில்லை. ஆனாலும் உன் புருஷன் ஒரு வைராக்கிய பயித்தியம். பெத்த பொண்ணுக்கிட்டே பாசமே இல்லாம மரக்கட்டை மாதிரி நடந்துக்கறார். எல்லாம் வேஷம். உள்ளே பாசம் பொங்கி வழியுது... எதுக்கு இந்த நாடகம்.?

    அப்பொழுது அங்கு வந்தார் அவள் தந்தை சந்தானம்.

    வேஷம் போடறது உன் பொண்ணு தான். நாடகம் நடத்தறது அவதான். நம்ம எல்லார் மேலயும் அக்கறை இருப்பது போல் காட்டிக்கிறா. அவளை முதல்லே போகச் சொல்லு... என்று எரிந்து விழுந்தார்.

    அம்மா உன் புருஷன் கிட்டே சொல்லி வை. நான் தான் உங்க அறுபதாம் கல்யாணத்தை நடத்தி வைக்கப் போறேன். அண்ணன் ஸ்தானத்திலே நான் இருக்கேன் அம்மா.

    நளினா நிலைமையை சமாளிக்க வேண்டி உதட்டில் ஒரு புன்னகையை படரவிட்டுச் சொன்னாள்.

    ஆர்த்தி சந்தர் இல்லாத குறையை நீ இட்டு நிரப்பிட்டே. அப்பா வாய்விட்டு சொல்லாட்டியும் உன்னைப் பற்றி அவர் பெருமையாத் தான் நினச்சிட்டிருக்கார். எல்லாம் ஈகோ தான். அவரால் வெளிப்படையா ஒத்துக்க முடியாது. நீ கவலைப் படாதே... நான் பார்த்துக்கிறேன்.

    என்னைப் பற்றி பெருமையா நினச்சிட்டிருக்காரா? நிஜமாவா அம்மா?

    நிஜமாத்தான். இதில் என்ன சந்தேகம்? உனக்கு ஒரு கல்யாணமாகி, நீயும் உன் கணவரும் சேர்ந்து இந்த விழாவை நடத்தினா எவ்வளவு நல்லா இருக்கும்? நீ தான் பிடி கொடுத்து சம்மதம் தெரிவிக்க மாட்டேங்கறே. உனக்கும் இருபத்தேழு வயசாச்சு. எப்ப உன் மனசு மாறுமோ?

    "நளினா... அவ கிட்டே என்ன பேச்சு? அவ எதுக்கு இங்கே வந்திருக்கா? அவ எடுத்து நடத்தப் போற இந்த விழாவில் எனக்கு எந்த ஆர்வமுமில்லை. நீ வருத்தப்படுவியேன்னு தான் பேசாம இருக்கேன். அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டா. நீ ஏன் ஆசையை வளர்த்துக்கிட்டு இருக்கே? அந்தக் கொலைகாரப்

    பாவியை நினைச்சுக்கிட்டு இருக்கா. எல்லாம் நம் தலை எழுத்து. முதலே அவளைப் போகச் சொல்லு. அவளைப் பார்க்கவே எரிச்சலா இருக்கு."

    வழக்கம் போல் சுடு சொற்களை வீசினார். ஆர்த்தி பதிலேதும் சொல்லாமல் வெளியேறினாள். குத்திக் காட்டும் அப்பா... அவர் மாறவே மாட்டாரா?

    ஏன் இப்படி பேசறீங்க? அவ மனசு வருத்தப்படாதா? நல்ல காரியமா வந்திருக்கா... அவ மனசை நோகடிச்சு அனுப்ரீங்களே. அவ நம்ம பொண்ணு. பத்து வருஷம் ஓடிப் போச்சு. இன்னுமா உங்க மனசு இளகலை.?

    எப்படி இளகும்? இருபத்தஞ்சு வயசு மகனைப் பறிகொடுத்துட்டேன். எல்லாம் இவளால்தானே.? அவ மூஞ்சியப் பார்த்தாலே மனசு கொதிக்குது.

    மன்னிக்க கத்துக்கோங்க. பெத்த பொண்ணுக்கிட்ட என்ன வீம்பு? அவனுக்கு நேரம் வந்திடுத்து போயிட்டான். இருக்கிற இவக்கிட்டே பகை பாராட்டினா அவன் வந்திடுவானா? பத்து வருஷம் முந்தி பேசின மாதிரியே இப்பவும் பேசினா எப்படி? வயசு ஆக அக மனம் பக்குவப் படவேண்டாமா?

    அம்மா சமாதானப்டுத்துகிறாள். ஆர்த்தி அதை காதில் வாங்கிக் கொண்டே தன் காரை ஸ்டார்ட் செய்கிறாள்.

    எவ்வளவு உற்சாகமாக டிரஸ் வாங்கக் கிளம்பினாள்... இப்பொழுது மனசு விட்டுப் போகிறது. இந்தப் பத்து வருஷமாக தான் செய்த தவறுக்காக வருந்தி, அப்பாவை திருப்திப்படுத்த அவளும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறாள். உம்ஹும்... அவர் மனசு இம்மி அளவு கூட மாறவில்லை. இன்னும் கூட மோசமாகிவிட்டது. பிடிச்ச ஒரே பிடிதான். பிடிவாதக்காரர்கள் எல்லோரும் முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடிப்பார்கள் என்றால் இவர் முயலுக்கு காலே இல்லை என்று பிடிவாதம் பிடிப்பார். அவளை எதிரியாகவே நினைக்கிறார். கார் ஓடிக் கொண்டிருப்பது போல் அவள் கண்ணீரும் கன்னம் தாண்டி ஓடி, அவள் மடியை நனைத்தது.

    எல்லாம் அந்த வருண்பிரசாத்தால் வந்த வினைதான். வருண்... இனிப்பான பெயர்! மனதை கொள்ளை கொள்ளும் உருவம்! பொங்கி வரும் பெருநிலவு போல் உற்சாகம்!... ஆனால் இவன் கொலைகாரன்! என்ன ஒரு பேதம்? நம்பத்தான் முடியவில்லை. ஆனால் அதுதானே நிஜம்! லேசாக தூர ஆரம்பித்தது. காரின் வைப்பரைப் போட்டாள். உடனே அது டக் டக்கென்று ஆடி மழைத் துளிகளை அகற்றி பாதையை தெளிவுபடுத்திற்று. இப்படி ஒரு வைப்பர் மனசை துடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! மழை மேகங்களை காற்று விரட்டுவது போல, நடந்த துக்க நிகழ்ச்சியை விவேகமான எண்ணங்களால் விரட்ட முயற்சிக்கிறாள். நடக்கவில்லை. அவள் தெளிவு பெற, தெளிவு பெற, அப்பாவின் குத்திக் காட்டும் பேச்சுக்களால் துக்க மேகங்கள் மீண்டும் வந்து சூழ்ந்து கொள்கின்றன. வலித்தது. இந்த வலியோடவே வாழ்வது எவ்வளவு கஷ்டமான காரியம்!

    என்ன மகாராணி மேக்-அப் பண்ணிக்கிட்டு ஊர் சுத்தக் கிளம்பிட்டிருக்கா? அண்ணன் செத்துப் போனது கூட உறுத்தலை போல...

    ஹோட்டெல்லே சாப்பிட்டுட்டாளா? அவளால் முடியுதே... ஆச்சர்யம் தான். அந்தக் கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கறா... எவ்வளவு நெஞ்சழுத்தம்?

    திட்டமிட்டு தான் அந்த வருண் கொலையை செய்தான்னு ஒத்துக்கறாளா பார். அவள் வீட்டை விட்டுப் போனால் தான் நிம்மதி. போயேண்டி...

    இப்படி விதம் விதமாக சித்திரவதை பண்ண சந்தானத்தால் தான் முடியும். இரண்டு வருஷம் இந்த சித்திரவதையை தாங்கிக் கொண்டாள் ஆர்த்தி. அதுக்கு மேல் முடியவில்லை. அதன் பிறகு தான் ஒரு முடிவுக்கு வந்தாள்... அம்மாவிடம் சொன்னாள்.

    "அம்மா... அப்பா சொன்னது போல் நான் வீட்டை விட்டுப் போறேன். நம்ம ஷோரூம் பக்கத்திலே வீடு பார்த்துப் போயிடறேன். அப்பா கண்ணில் படாமல் இருந்தால் அவருக்கும் நல்லது. எனக்கும் நல்லது.

    நான் அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்."

    அம்மாவிற்கும் அது சரி என்றே பட்டது. பின்னே பொழுதன்னைக்கும் குற்றப் பத்திரிகை வாசித்துக் கொண்டு இருந்தால் எவ்வளவு திட மனம் கொண்டவர்கள் ஆனாலும் பயித்தியம் ஆகாமல் இருக்க முடியாது. மனம் என்ன இரும்பால் செய்திருக்கிறதா என்ன? புரிந்து கொள்ள மறுக்கும் ஒருவரிடம் எவ்வளவு நாள் தான் குப்பைக் கொட்ட முடியும்?

    அது தான் சரி ஆர்த்தி. உன் மனசை ஊனமாக்கிடுவார். தாராளமா போ.

    என்று அம்மா பச்சைக் கொடி காட்டின பிறகு ஆர்த்தி பெருத்த நிம்மதியுடன் தனியாகப் போய்விட்டாள். வேலை... தோழியர்... நூலகம் என்று ஆர்த்தியின் உலகம் அழகாகிவிட்டது. அப்பாவை பார்க்க வரும் போதெல்லாம் அவள் தைரியத்தை கடவுளிடம் கடனாக வாங்கிக் கொண்டு தான் வருவாள். அவர் பார்த்துக் கொண்டிருந்த பர்னிச்சர் பிசினஸ்சைத் தான் அவள் எடுத்து நடத்துகிறாள். மகன் இறந்த போது அவருக்கு வந்த ஹார்ட் அட்டாக்கால் அவர் அதிகம் பாதிக்கப்பட்டதால் பாதி பொறுப்பை ஆர்த்தி ஏற்றுக் கொண்டாள். அண்ணன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் படித்துக் கொண்டிருந்தாள். சந்திரசேகர் மறைந்ததும் அந்தத் தொழிலை இவள் குறைவின்றி செய்து வருகிறாள்.

    என் வயதான காலத்தில் மகன் பக்க பலமாக இருந்திருப்பான்... எல்லாம் இவளால்... பொக்கிஷம் மாதிரி மகனை முழுசா வாரிக் கொடுத்திட்டேனே!

    இந்தப் புலம்பல் அவரை ஒரு மன நோயாளி போல் ஆக்கிவிட்டது. சுபாஷினி அவள் பங்குக்கு தங்கையை திட்டித் தீர்ப்பாள். அவள் கல்யாணம் ஆகி போன பின்தான் ஓரளவு ஆர்த்தி நிம்மதி என்றால் என்னவென்று உணர்ந்தாள்.

    சுபாவும் அப்பாவும் எப்பொழுதம் ஒரே கட்சி. ஜாடிக்கு ஏத்த மூடி. இரட்டை நாணயம்... இல்லை இரட்டை குழல் துப்பாக்கி. தோட்டா போல் வார்த்தைகள் படார் படார் என்று வெளி வரும். அதுவும் சுபா, நெஞ்சில் ஈரமின்றி தங்கையை சாடுவாள். முதல் பிரசவத்துக்கு அவள் அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள். அப்போது எப்படி பொரிந்து தள்ளினாள்!.

    ஆர்த்தி... பிரசவம் முடிந்து மூன்று மாதத்தில் நான் குழந்தையை எடுத்துக் கொண்டு புகுந்த வீட்டுக்குப் போயிடுவேன். அப்புறம் அப்பா அம்மாவிற்கு யார் துணை? நீ பாட்டிலே வீடு பார்த்து தனியாப் போறேங்கற? அம்மாவும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க. பொறுப்பில்லாம பேசற? சந்தர் அண்ணா உயிரோடு இருந்திருந்தா உன்னை யார் சட்டை செய்யப் போறாங்க? அப்பா ஹார்ட் பேஷன்ட்டுங்கறதை மறந்திட்டியா? நீ சுயநலமானவன்னு தெரியும்... ஆனா இரக்கம் இல்லாத அரக்கின்னு இப்ப தான் புரியுது. படித்த திமிர். வேலை பார்க்கிற திமிர்.

    எனக்கு எந்த திமிரும் இல்லேக்கா. நான் அப்பா இதய நோயாளிங்கறதை மறக்கவும் இல்லை. அப்பாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கலை. என் முகத்தைப் பார்த்தா அட்டாக் திரும்ப வந்திடுமோங்கற நிலைமை. என்னை என்ன செய்யச் சொல்றே? அவர் மன நிம்மதிக்காகத் தான் போறேன்... உனக்கு குழந்தை பிறந்ததும் இந்தச் சித்தி அவனைப் பார்க்க ஓடி வந்திடுவா.

    ஆகா... பேசக் கத்துக்கிட்டே. போ போ. அப்பா ஒரு பிள்ளையை பறிகொடுத்தார். ஒரு பிள்ளையை உயிரோடு பறிகொடுக்கிறார். நான் முடிந்தால் இங்கேயே இருப்பேன். ஆனால் நான் புகுந்த வீடு போக கடமைப் பட்டவள்... எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை...

    சுபா... விடுமா. அவ போட்டும். என்னைக்குமே அவ சுயநலவாதி தானே.

    என்று சந்தானம் சொல்லி முடித்தார். சுபா தங்கையை எரித்துவிடுவது போல் பார்த்தாள். ஆர்த்திக்கு மனசே ஆகலை. எப்படி இப்படியெல்லாம் இவளால் பேச முடிகிறது? சிறு வயது முதல் ஆர்த்தி அக்காவுக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்திருக்கிறாள்! எவ்வளவு பாசம் காட்டியிருக்கிறாள்! எல்லாம் நீர் மேல் எழுத்து போல் காணாமல் போவிட்டது.

    அக்கா எனக்கும் அக்கறை இருக்கிறது. வாய்க்கு வந்தபடி பேசாதே. ஐந்து வருடம் ஓடிப் போய்விட்டது. இன்னும் அப்பாவின் காயம் ஆறலை... அதான்.

    நிறுத்துடி... ஆரக்கூடிய காயமா அது? உன்னுடைய சுயநலத்துக்கு ஒரு அளவே இல்லையா? உன்னாலே அண்ணன் உயிரை விட்டுச்சு. நீ பி.பி.ஏ படிச்சே. இன்டீரியர் டிசைனிங் படிச்சே. எம்.பி.ஏ படிச்சே. காரியம் முடிஞ்சிடுச்சு. உன் காரியம் முடிஞ்சுத்துன்னு கடமையை உதறிட்டு தனியா ஓடறே. சபாஷ்டீ... பொழச்சுக்குவே...

    நளினா பேசவேண்டாம் என்று பார்த்தாள். ஆனால் பேசாவிட்டால் ஆர்த்தியை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் என்று தெரிந்ததும் குறுக்கிட்டாள்.

    போதும் சுபா. உனக்கு பிரசவம் இப்பவோ அப்பவோன்னு இருக்கு. ஸ்டிரேன் பண்ணிக்காதே. அவள் என்னைக் கேட்டு தான் இந்த முடிவுக்கு வந்தாள். நான் தான் போகச் சொன்னேன். அப்பா தான் தினம் ஒரு தரம் அவளை வீட்டை விட்டுப் போ, வீட்டை விட்டுப் போ என்று பாட்டு பாடிக்கிட்டேயிருக்காரே. வெளிநாட்டுக்கா போகப் போறா? இங்கே தானே... எப்ப வேணா வரலாம். கார் இருக்கு. அவள் அங்கே போய் நிம்மதியா இருக்கட்டும்... பிஸினஸ் ஒழுங்கா நடக்க வேண்டாமா? சும்மா அவளை படுத்தாதீங்க ரெண்டு பேரும்.

    நாங்க படுத்றோமா? அவளை கெடுக்கறதே நீ தான். இப்படி இடுக்கிக் கொண்டு வந்தால் அவள் தலை மேல் ஏறத்தான் செய்வாள்.

    சுபா போதும். பொழுது விடிஞ்சா பொழுது போனா அவளை கரிச்சுக் கொட்டறதே உங்க ரெண்டு பேரோட வேலையாப் போச்சு. அவளுக்கும் அவன் அண்ணன் தான். எதிர்பாராமல் நடந்ததுக்கு இப்ப என்ன செய்யலாம்கற? ஆர்த்தி இவங்க இப்படித்தான் பேசிட்டே இருப்பாங்க. நீ சட்டை பண்ணாதே. நீ போய் செட்டிலாகு. இந்த ராட்சசி போன பிறகு வா... என்றாள் அம்மா சலிப்புடன். இரண்டு பெண்களிடையே எப்பொழுதும் சண்டை தான். அதுவும் சண்டைக்குக் காரணம் சுபா தான்.

    சண்டை போடுவதற்கு காரணங்கள் தேடுவாள் சுபா. நளினாவுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் அப்பாவிடம் ஓடுவாள். ஆர்த்தியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவரை ஏற்றிவிடுவாள். அவருக்கு சுபா என்றால் உயிர். அவள் தப்பே செய்யமாட்டாள் என்பது அவர் எண்ணம். அவள் தன் அம்மாவின் ஜாடையில் இருக்கிறாள் என்பதால் அவளை அம்மா, அம்மாடி என்று தான் கூப்பிடுவார்.

    அப்படியே எங்கம்மா மாதிரி நடை உடை பாவனை. என்று நெகிழ்ந்து போவார். நளினாவிடம் சுபா சாப்பிட்டாளா? சுபா தூங்கிட்டாளா? சுபா பள்ளிக்கு போய்விட்டாளா? என்று அவளைப் பற்றியே கேட்பார்.

    ஏன் இப்படி ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்றீங்க? நாம பெற்ற பிள்ளகளிலேயே என்ன பேதம்? இது நல்லா இல்லை.ஆர்த்தி சாப்பிட்டாளா என்று ஒரு நாளாவது கேட்டிருக்கீங்களா? என்று எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.

    இப்பவும் நிறை மாத கர்ப்பிணியாக பிரசவத்துக்கு வந்த சுபா அப்பாவிடம் புகார் கூறினாள்.

    அப்பா... அவளுக்குப் பொறாமை. நான் குழந்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன். அவளுக்கு தடி மாடு மாதிரி வயசாச்சு இன்னும் கல்யாணமே ஆகலை. அவ கண் பொல்லாததுப்பா. நேத்து பாருங்க அம்மா எனக்காக பார்லி கஞ்சி போட்டிருந்தாங்க. பாதம் வீங்கிக் கெடக்கு. பார்லி கஞ்சி குடிச்சா வத்திடும்னு போட்டு வச்சாங்க. நான் குளிச்சிட்டு வந்து பாக்றேன் கஞ்சியைக் காணலை. கேட்டா அவ தெரியாம ஏதோ தண்ணின்னு கொட்டிட்டாளாம்... நான் கஷ்டப்படணும்னே அவ கொட்டி இருக்கா.

    "சுபா... ஏதாவது உளறாதே. கை தவறி ஆர்த்தி கொட்டிட்டா. வேணுமுன்னு கொட்டுவாளா? அவள் சித்தியாகப்

    Enjoying the preview?
    Page 1 of 1