Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesamana Thooralgal
Nesamana Thooralgal
Nesamana Thooralgal
Ebook153 pages1 hour

Nesamana Thooralgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நந்தினியும் எழிலியும் ஆத்மார்த்தமான தோழிகள். பாரியும் அவர்கள் தோழன் எழிலி சிறு வயதிலேயே இறந்து விட, அவளை நேசித்த பாரி காணாமல் போக, நந்தினி டிக மயமாகிறாள். பல வருஷம் கழித்து நந்தினி எழிலியை திரும்ப பார்க்கிறாள். இறந்தவ எப்படி? குழம்புகிறாள்... இவர்களின் நட்பு, பிரிவு, மர்மம் என்று சுற்றி வருகிறது நாவல்... படித்துப் பாருங்கள். அவர்களுடன் ஒன்றிப் போவீர்கள்...

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580174610662
Nesamana Thooralgal

Read more from Sankari Appan

Related to Nesamana Thooralgal

Related ebooks

Reviews for Nesamana Thooralgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesamana Thooralgal - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நேசமான தூறல்கள்

    Nesamana Thooralgal

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம்...1

    அத்தியாயம்...2

    அத்தியாயம்...3

    அத்தியாயம்...4

    அத்தியாயம்...5

    அத்தியாயம்...6

    அத்தியாயம்...7

    அத்தியாயம்...8

    அத்தியாயம்...9

    அத்தியாயம்...10

    அத்தியாயம்...11

    அத்தியாயம்...12

    அத்தியாயம்...13

    அத்தியாயம்...14

    அத்தியாயம்...1

    கால் டாக்ஸியிலிருந்து இறங்கி வீட்டினுள் நுழைந்தாள் வித்யா. அவள் தன் ரெண்டு கையிலும் ஜவுளிக் கடை கட்டைப் பையை சுமந்து வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் புன்னகை.

    என்னடி ஜவுளிக் கடையவே விலைக்கு வாங்கிட்டு வந்திட்டே போல... என்று வியப்பும் கலவரமுமாக கேட்டாள் கெளரி.

    ஆமா அத்த... எனக்கு பிறந்த நாள் வருதில்லே. அதான் எல்லோருக்கும் துணி எடுத்திட்டு வந்திருக்கேன்... என்று சொல்லிவிட்டு சோபாவில் உட்கார்ந்தாள் வித்யா.

    அது சரி... உன் பிறந்த நாளுக்கு உன் புருஷனை இன்வைட் பண்ணியிருக்கியா? அவருக்கும் துணி எடுத்திருக்கியா?

    அந்தாளுக்கு நான் ஏன் எடுக்கணும்? சம்பாதிக்கிறார். நான் வேறு அங்கு இல்லே. காசு மிச்சம். அவரே வாங்கிக்கட்டும்... நான் என்ன குறுக்கே விழுந்து தடுக்கிறேனா என்ன?...

    இருந்தாலும் உனக்கு இந்த ஆகாத்தியம் ஆகாது வித்யா. நல்ல மனுஷனை விட்டிட்டு இப்படி அசால்ட்டா பேசறயே... பாவம் சாப்பாட்டுக்கு என்ன செய்றாரோ?

    கட கடவென்று சிரித்தாள் வித்யா. வித்யாவும் கௌரியும் தோழிகள் போல் பழகுவார்கள். இருவருக்கும் ரெண்டு வயசு தானே வித்தியாசம்.

    என்னடி சிரிப்பு வேண்டியிருக்கு? சின்ன சண்டைக்கெல்லாம் இப்படியா புருஷனை விட்டிட்டு ஓடி வருவே? என்னவர் சாப்பிட்ட பிறகு தான் நான் சாப்பிடுவன்... பயமும் பக்தியும் எனக்கு என் கணவன் மேல் இருக்கு... நீ... என்று ஆரம்பித்தாள் கெளரி.

    அத்த... ஓவரா ஃபில் பண்ணாதே... வேணும்னா நீ அந்தாளுக்கு சமச்சிப் போடப் போயேன்... போன் பண்ணி நீ வரேன்னு சொல்லவா? உன்னை உன் புருஷன் துரத்திட்டு வேறு ஒரு பொன்னோட குடித்தனம் பண்றான். நீ புருஷனுக்கு பணிவடை செய்றதைப் பத்திப் பேசறே. பரிஞ்சுக்கிட்டு வரே. உங்களை மாதிரி பெண்களாலே தான் நாங்க சஃபர் பண்றோம். ஆம்பளை ஜாதியை நல்ல கொம்பு சீவி வளர்த்து விட்டிருக்கேங்க. அவங்க அதையே தான் எல்லார் கிட்டயும் எதிர்பார்க்கிறாங்க... நீ சலாம் போட்டும் உனக்கும் அதே கதி தானே? உனக்கு ஜோடியா நானும் வந்திட்டேன். காரணம் வேறு வேறா இருக்கலாம். எல்லாம் ஆண் ஆதிக்க உலகம்.

    கெளரி கண்களில் நீர் கட்டி நின்றது. கையில் பால்கோவாவும் மிக்ஸ்சரும் எடுத்துக் கொண்டு வந்த ராதா மகளை கண்டித்தாள்.

    ஏய் வித்யா... எதுக்கு அத்தையோட வம்பு பண்ணிட்டு இருக்கே? மாப்பிள்ளை போன் பண்ணினார். உன்னை உடனே புறப்பட்டு வரச் சொன்னார். பிறந்த நாளை அங்கு போய் கொண்டாடு...

    வித்யா கிண்டலாக அம்மாவைப் பார்த்தாள்.

    உனக்கும் அத்தையோட வியாதி ஒட்டிக்கிச்சா கணவனே கண் கண்ட தெய்வம். இப்படி நீங்க செல்லம் கொடுத்து கொடுத்து தான் இந்த ஆம்பளை ஜென்மங்கள் பொம்பளையை அடிமையா வச்சிருக்கு... நான் இதுக்கெல்லாம் அசர மாட்டேன்... வித்யா தலையை உலுக்கிக் கொண்டே சொன்னாள்.

    சரியா சொன்னேம்மா வித்யா... மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை. பொண்டாட்டியை கண்கலங்காம வச்சிருக்க துப்பில்லை. மாப்பிள்ளை பட்டம் கேக்குதோ.? என்று என்ட்ரி கொடுத்தார் கதிரேசன். அவர் கையில் ஒரு கிஃப்ட் பார்சல். அப்பா எனக்கா அது? வித்யா துள்ளி வந்து அதை பிரிக்கப் போனாள்.

    நோ பேபி... ராத்திரி பன்னிரண்டு மணிக்குத்தான் பிரிக்கணும். கேண்டில் ஏத்தி கேக் வெட்டி உனக்கு ஊட்டிவிட்டு தான் நான் இந்த கிஃப்ட்டை தருவேன்... அப்ப தான் பிரிக்கணும்...

    .நல்லாயிருக்கு அப்பாவும் பெண்ணும் அடிக்கிற கூத்து. அவளை புருஷன் வீட்டுக்கு போன்னு சொல்றதை விட்டிட்டு கூட சேர்ந்து ஜால்ரா அடிக்றீங்க. அக்கம் பக்கம் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? என்று அழுத்தமாக எடுத்துச் சொன்னாள் ராதா.

    என்ன சொல்வாங்க தெரியுமே நான் சொல்லட்டா? அந்தப் பொண்ணு வாழா வெட்டியா அம்மா வீட்டில் வந்து உட்கார்ந்திருக்கு. புருஷனோட அனுசரித்து போகத் தெரியலை. மகளை ஆம்பளை மாதிரி வளர்த்து வச்சிருக்கார் கதிரேசன்... சட்டம் பேசுது ரூல்ஸ் போடுது. குடும்பத்துக்கே ஒத்து வராத பொண்ணு... இப்படித்தானே சொல்றாங்க... இந்த முடிவுக்கு அவங்க எப்படி வந்தாங்க? எல்லாம் என் மாமியார் வீடு வீடா போய் செய்த பொய்பிரசாரம் தான் காரணம்... அதுக்காக நானும் வீடு வீடா போய் நான் அப்படியில்லை அது இதுன்னு சொல்லி என்னை நியாயப்படுத்திக்கனுமா? அதெல்லாம் என்னாலே முடியாது. உங்களாலும் முடியாது. அப்புறம் அவங்களுக்கும் நமக்கு என்ன வித்தியாசம் இருக்கப் போவுது?... என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும்... நாய் துரத்த தான் செய்யும். ஓடக் கூடாது. திரும்பி ஒரு கல்லை எடுக்க அது ஓடிடும்... அப்பா அதை விடுங்கப்பா. உங்களுக்கு என்ன டிரஸ் வாங்கியிருக்கேன் பாருங்கப்பா...

    கதிரேசன் உற்சாகமா பார்சலை பிரித்தார்.

    வாவ்... ஜரிகை கரை வேஷ்ட்டி. பாக்கெட் இருக்கு. பிரமாதமான லைட் பிங்க் கலர் ஷர்ட்... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா. அம்மாவுக்கும் என் தங்கச்சி கெளரிக்கும் என்ன வாங்கி வந்திருக்கே? என்றார் கதிரேசன்.

    உங்க தங்கச்சிக்கு நான் எதுக்கு வாங்கணும்? நீங்க வாங்கிக் கொடுங்க. அம்மா உனக்கு இது பிடிச்சிருக்கா? காட்டன் கோரா பட்டுப் புடவை. பச்சைக் கலர். டிசைன் புது விதமாக இருந்தது. அதை அம்மாவிடம் நீட்டினாள். ராதா அதை எடுத்துப் பார்க்கவில்லை.

    கௌரிக்கு எடுக்காமல் எனக்கு மட்டும் எடுத்திருக்கியா? வேண்டாம் வித்யா. அத்தை மனசை நோகடிக்காதே. வீட்டுப் பெண் கண் கலங்கினா அது வீட்டுக்கு நல்லதில்லே... ராதா கண்டிக்கும் குரலில் சொன்னாள்.

    அப்பா... பார்த்தீங்களா? நாத்தனாரும் மதனியும் கூட்டு... என்று கிசுகிசுத்தாள் வித்யா.

    அது அப்படித்தான் மா. கௌரி எனக்கு தங்கச்சியா இல்லே அவளுக்கு தங்கச்சியான்னு எனக்கு பல நேரம் சந்தேகம் வந்திடும்னா பார்த்துக் கோயேன். என்று அங்கலாய்த்தார் கதிரேசன்.

    அத்த கோவிச்சிக்காத. உனக்கு எடுக்காம இருப்பேனா? உனக்கு ஜார்ஜெட் புடவை. லேட்டஸ்ட் டிசைன். பாரு...

    கெளரி பிரித்துப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.

    அதானே பார்த்தேன் நீ எனக்கு வாங்காம வருவியா? என் செல்ல மருமகளாச்சே... கௌரிக்கு புடவை பிடித்துப் போயிற்று.

    என்னை விட நீ ரெண்டு வயசு தான் பெரியவ. கொஞ்சம் பெரியவளா இருந்து ஒரு மகனை பெத்து என்னை மருமகளா ஆக்கியிருந்தா நல்லா இருந்திருக்கும் அத்த. நானும் அந்தாளோட மல்லுக்கு நின்னிட்டிருக்க வேணாம்... எல்லாம் தலை எழுத்து... என்று சூள் கொட்டினாள் வித்யா.

    புருஷனை அந்தாள் இந்தாள்ன்னு சொல்லிக்கிட்டு... என்ன வித்யா இது?

    சரி சரி... ஜவுளி எல்லாம் எடுத்து வச்சிட்டு எல்லோரும் சாப்பிட வாங்க. என்று ராதா அறவிப்பு செய்ய... எல்லோரும் டைனிங் டேபிள் முன் அமர்ந்தனர். கௌரியும் ராதாவும் பரிமாறினார்கள்.

    வாவ்... சப்ஜி ரொம்ப ரொம்ப ஜோர். அத்த நீ தானே பண்ணினே?. உன் கை மணமே மணம்... உன்னை விட்டிட்டு போக அந்தாளுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ? என்று வித்யா சொல்ல...

    ப்ளீஸ் வித்யா என் புருஷனை அந்தாள் இந்தாளுன்னு சொல்லாதே. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்... என்றாள் கெளரி.

    ஸாரி அத்த மன்னிச்சிடுங்க... இனிமே சொல்ல மாட்டேன்...

    இட்ஸ் ஒ.கே... என்று கெளரி சாப்பிடாமல் யோசணையில் ஆழ்ந்தாள். அவளுக்கு அவள் கணவன் முரளி நியாபகம் வந்தது. அவருக்கு இந்த சப்ஜி ரொம்பப் பிடிக்கும்... ரெண்டு வருஷமா என்னை விட்டு இருக்கார். எப்படி இருக்காறோ?

    சாப்பிடு கெளரி... என்று கூறி கௌரியை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தாள் ராதா. அவளுக்குத் தெரியும் கெளரி மனதில் என்ன ஓடுகிறது என்று. கௌரியை கொண்டு வந்து விட்டுவிட்டுப் போன அவள் மாமியார் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு இன்னமும் நினைவுக்கு வந்து கோபப்படுத்தியது.

    பொண்ணு தான் கறுப்பு. சொன்ன நகையை கூட போட முடியாதா? ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே பத்து பவுன் குறையுது. போட்டு அனுப்புங்க. ஏமாத்து குடும்பம். மனசெல்லாம் கருப்பு... சொல்லிவிட்டு வேகமாக காரில் சென்றுவிட்டாள் அந்த அருமை அம்மையார்.

    கதிரேசன் அதிர்ச்சி அடைந்தார். அவர் அப்படி ஏமாற்றுபவர் இல்லையே! மூன்று வயது தங்கையை அவர் தான் வளர்த்து ஆளாக்கி கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறார். எந்த குறையும் வைக்கக் கூடாதுன்னு தானே அறுபது பவுன் பேசி செய்து போட்டார். எப்படி குறையும்? ராதா ஒரு வேளை நகையை பதுக்கி வைத்துவிட்டு நகையை குறைத்து போட்டு விட்டாளோ அப்படி செய்பவள் இல்லையே அவள்.

    ராதா என்ன இதெல்லாம்? நகை எப்படி குறையும்? நீ கண்டா பத்து பவுன் எடுத்துகிட்டு குறச்சிப் போட்டுவிட்டியா? எதுக்கு அந்தம்மா இப்படி சொல்லிட்டுப் போறாங்க?

    என்னையே சந்தேகப்படுறீங்கள? எனக்கு அந்த திருட்டுப் புத்தி எல்லாம் கிடையாது. உங்களுக்கு தெரயும்லே என்னைப் பத்தி?. இப்படி கேட்டிட்டீங்களே. கூட ரெண்டு பவுன் அதிகமா தான் போட்டு தான் அனுப்பினேன். என்று வருத்தமும் கோபமுமாக சொன்னாள் ராதா.

    பின்னே எதுக்கு அந்தம்மா இப்படி சொல்லிட்டுப் போகுது? எனக்கு அவமானமா இருக்கு. என் பேரை கெடுக்கும்படி அப்படி என்னடி செஞ்சே? என்று மனைவியை மேலும் சந்தேகித்தார்.

    ராதாவுக்கு அழுகை வந்தது. புருஷனே அபாண்டமாக பேசினால் எந்த பெண் தங்குவாள்?

    Enjoying the preview?
    Page 1 of 1