Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாறியது நெஞ்சம்!
மாறியது நெஞ்சம்!
மாறியது நெஞ்சம்!
Ebook106 pages40 minutes

மாறியது நெஞ்சம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவன் மனைவிக்கிடையே புரிதலும், விட்டுக்கொடுத்து போதலும் இருப்பதே சிறந்த இல்லறமாகும். அவ்வாறின்றி ஒருவருக்கொருவர் ஏட்டிக்கு போட்டியாக செய்தால் கல்யாண வாழ்க்கையே நரகமாகிவிடும். இதில் நாயகனும் நாயகியும் என்ன செய்கிறார்கள் பின் எவ்வாறு மனம் திருந்தி வாழ்கிறார்கள் என்பதே கதையின் ஓட்டம்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 14, 2023
ISBN9798223265986
மாறியது நெஞ்சம்!

Read more from Sundari Murugan

Related to மாறியது நெஞ்சம்!

Related ebooks

Reviews for மாறியது நெஞ்சம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாறியது நெஞ்சம்! - Sundari Murugan

    1

    காரை வீட்டின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான் பார்த்திபன். கூடவே... இருந்த அவனது மனைவி என்னங்க இது...? வீடு தெரியாம வந்துட்டீங்களா...

    ஏன்? பாவனா... அப்படி கேட்கிறே...!

    பின்னே... வீட்டு வாசல்ல பாருங்க... அழகா இரண்டு மயில்கள் தோகையை விரித்து ஆடுது எவ்வளவு தத்ரூபமா... இருக்கு பாருங்க இந்தக் கோலம்

    நீயே ஒரு கோலப் பைத்தியம்... உன்னைப் போலவே... இங்கும் ஒண்ணு இருக்கும் போல என்ற கணவனை அவள் முறைக்கவும்.

    ஆமா... நம்ம வீட்டு வாசல்ல யார் இப்படி கோலம் போட்டிருப்பா... சரி... சரி...! இறங்கு விசாரிக்கலாம் என்ற பார்த்தி - கீழே இறங்கினான்.

    கூடவே ஐந்து வயது சுட்டிக் குழந்தை ஸ்ரீகாவுடன் பாவனா கீழே இறங்கினாள்.

    அந்த தெருவை உற்று நோக்கியவள் சுத்தமாக காட்சி தந்ததை பார்த்து வியந்தாள். ஒவ்வொருவர்... வீட்டின் முன்பும்... ஏதாவது ஒரு மரம் தன் கிளைகளைப் பரப்பியபடி நிற்க குளுமையான காற்றுக்கு பஞ்சமில்லை என்று ஆச்சரியமானாள் பாவனா.

    "ஏங்க... எனக்கு இந்த வீட்டை ரொம்ப பிடிச்சிருக்குங்க... என்ற மனைவியை விழிகள் விரிய பார்த்தவன்.

    என்ன... பாவு வீட்டிற்கு இன்னும் போகலை... அதற்குள்...! வீட்டைப் பிடிச்சிருக்குன்னு சொல்றே...?

    வீட்டிற்கு அழகே முன்னழகுதான் முன்னாடியே... இவளோ அழகா இருக்குன்னா... உள்ளேயும் நல்லாதானே... இருக்கும்!

    சரி... சரி... வா வீட்டிற்குள் போய் பார்க்கலாம் என்று திரும்பவும்.

    நீங்கதான் இந்த வீட்டிற்கு புதுசா குடி வந்திருக்கிற பேங்க் மேனேஜரா என்று கேட்டாள் இளம் பெண் ஒருத்தி.

    ஆமா... நீ

    நானா...! இதோ... இதுதான் என் வீடு... நீங்க என்னோட பக்கத்து வீட்டுக்காரங்களாயிட்டீக! என்று சொல்லி கலகலவென சிரித்த அந்தப் பெண்ணை பார்த்ததுமே... பிடித்துப் போனது பாவனாவிற்கு...

    ஆமா... இப்படி வீட்டு முன்னால பெருக்கி... அழகா கோலம் போட்டது... எல்லாமே நீதானா?"

    ஆமா... சரியா சொல்லிட்டீங்களே என்று பாவனாவை ஆச்சரியமாய் பார்த்தாள் அந்தப் பெண்.

    சரி... உன் பெயர் என்ன?

    என் பெயர் இருக்கட்டும்... முதலில் உங்களோட பெயரை சொல்லுங்கக்கா

    ஓ... என் பெயர் பாவனா. இது... என்னோட குட்டி பாப்பா... இவ பேர் ஸ்ரீகா இவர் என்னோட கணவர்... பேரு .பார்த்திபன் செல்லமா... பார்த்தி... இப்பவாவது உன் பெயரை சொல்லுவியா...?

    நானே சொன்னா நல்லாவா இருக்கும். நீங்களே கண்டுபிடிங்க என்றவள்...

    சரி. உங்க தட்டு முட்டு சாமான்களெல்லாம் எப்ப வரும்?

    ம்ம்... இன்னும் கொஞ்ச நேரத்திலே மினி லாரியில் வந்திடும். எதுக்காக கேட்கிறே?

    வந்தா... அந்த பொருள்களை இறக்கி அந்தந்த இடத்திலே வைக்க உங்களுக்கு உதவி செய்வேனில்ல?

    அடடே...! என்னங்க இந்தப் பெண்? இவ்வளவு நல்லவளா இருக்கிறாளே?

    ம்ம்... கிராமத்தில் உள்ளவங்க இப்படித்தான் வெள்ளெந்தியா இருப்பாங்க

    இப்பவெல்லாம்... கிராமத்திலேயும்... நகரம் போல வாழ ஆரம்பிச்சிட்டாங்க.

    அதுவும் சரிதான்... ஒன்றிரண்டு பேர் இப்படி இருப்பாங்க போல

    சரிங்க... பூட்டை திறங்க வீடு எப்படியிருக்குன்னு பார்க்கலாம்

    சரி என்ற பார்த்தி... தன் கையில் இருந்த பையில் சாவியை தேடியெடுத்து பூட்டை விடுவிக்கவும். ‘நான்தான் முதலில் போவேன்’ என்று ஸ்ரீகா குட்டி கூற... முதலில் அந்த சிறுமியையே உள்ளே போகச் சொல்லி இவர்கள் பின்னால் சென்றனர்.

    முதலில் சின்னதாக ஒரு வராண்டா ஓரமாய் சிறிய படுக்கையறை... ஒரு சிறிய டைனிங் ஹால் அதை ஒட்டி சிறிய கிச்சன் என்று சிறியதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. பாத்ரூம், குளியலறை, தனியாக இருந்தது.

    பரவாயில்லை... இது நமக்கு போதும் என்றாள் பாவனா.

    இந்த கிராமத்திலே... ஓரமாக தனியறை உள்ள வீடு மிகவும் குறைவாம். நமக்கு இப்படி கிடைத்து விட்டது. இன்னும் மூன்று வருடங்கள்... அதாவது அடுத்த ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகும்வரை இதுதான் நம் வீடு என்று பார்த்தி கூறவும்.

    சமாளிச்சுடலாம்... ஊரில் பங்களாவாட்டம் வீடு இருக்கு... ஆனால், மூன்று வருஷத்திற்கு ஒரு முறை மாற்றலாகி ஊரு, ஊராய்... சுற்றுவதுதான் நமது பொழைப்பா போச்சி

    என்ன... பாவனா அலுப்பா இருக்கா?

    ச்சே... ச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க... சொந்த வீட்ல இருந்தா... அந்த ஒரு வீடு மட்டும்தான் நமக்கு சொந்தம் இப்போ... முன்று வருஷத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு ஊராய் போய் எத்தனை... விதமான! வீடுகளில் எல்லாம் வசிக்க முடியுது...! எத்தனை விதமான மனிதர்களிடம் பழக முடியுது!

    என்ன... பாவு... புகழ்ச்சியிலே... பேசுறியா... இல்லை... என்னை வாரிவிடறியா?

    என்னங்க பேசுறீங்க... எனக்கு புடிச்சி போய்தான் பேசறேன்

    சரி... சரி... நமக்குள்ளே சண்டை போடாம முதல்லே... உள்ளே வந்து பால் காய்ச்சும் வேலையை பார்க்கலாமா?

    சரிங்க... நல்ல வேளை காரிலேயே சிலிண்டர்... ஸ்டவ்வை கொண்டு வந்தது நல்லதாப் போச்சி... நீங்க எடுத்துட்டு வாங்க... நான் போய் கிச்சனை க்ளீன் பண்றேன்

    "அடடே... அக்கா... அடுப்பை எடுத்து வந்து, பாலை காய்ச்சும் வேலை மட்டும்தான் உங்களோடது.

    இந்த வீட்டு ஓனர் இன்னொரு சாவியை என்னிடம்தான் தந்திருக்கார். அதனால வீட்டை நான் சுத்தம் பண்ணி வைச்சிட்டேன்" என்று சொன்ன அந்த இளம்பெண்ணை வியப்புடன் பார்த்தாள் பாவனா.

    என்னம்மா... இது...! எங்களை உனக்கு இதற்கு முன்... முன்ன... பின்ன தெரியாது. ஆனாலும் நீ எங்களுக்கு இப்படி வேலை செஞ்சி வைச்சிருக்கியே... வீட்டுக்காரர் இதை செய்யச் சொன்னாரா...?

    ம்கூம்... நீங்க சாவியை மறந்து வைச்சிட்டு வந்துட்டா... ஒரு சாவியை அதான் என்கிட்டே தந்துருக்காரு... என்ற அந்தப் பெண்ணை வியப்புடன் பார்த்தாள் பாவனா.

    பரவாயில்லை. வாங்க அடுப்பை எடுத்து வந்து மாட்டி... இந்தாங்க இங்கே இருக்குது பால் ஊற்றி காய்ச்சுங்க என்ற அந்தப் பெண்ணை சிரிப்புடன் நோக்கினாள் பாவனா.

    "ஆஹா... இந்தப் பெண் ஒரு அன்பான,

    Enjoying the preview?
    Page 1 of 1