Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neengatha Ninaivugal...
Neengatha Ninaivugal...
Neengatha Ninaivugal...
Ebook240 pages2 hours

Neengatha Ninaivugal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கஸ்தூரி என்ற பெயருடன் ஆசிரியராக பணியாற்ற சோனாச்சலத்தின் எதிர் வீட்டில் தங்கி இருக்கிறாள். உண்மையில் யார் இவள்? இவள் உண்மை கதை என்ன? இவள் பெயர் என்ன? சந்தோஷை எப்படி இவள் சந்திக்கிறாள்? இவர்களிடம் காதல் எவ்வாறு மலர்கிறது? இன்னும் பல சுவாரசியங்கள் நிறைந்த நீங்காத நினைவுகளை வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580133810099
Neengatha Ninaivugal...

Read more from Muthulakshmi Raghavan

Related to Neengatha Ninaivugal...

Related ebooks

Reviews for Neengatha Ninaivugal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neengatha Ninaivugal... - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீங்காத நினைவுகள்...

    Neengatha Ninaivugal...

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    ஒரு மரத்துப் பூக்களிலே...

    ஒருபூவே... நீ உதிர்ந்ததையே...

    மலர்மனமே மறக்கவில்லை...

    மறப்பதற்கும் விருப்பமில்லை...

    நீங்காத என் நினைவுகள்

    காலை வெயிலின் இதமான சூட்டில் அந்தப் பெரிய பள்ளிக்கூடத்தின் பரந்த மைதானத்தில் மாணவர்கள் வரிசையாக அணிவகுத்து நின்றனர்... கொடிமரத்தின் அடியிலிருந்த மேடையில் பள்ளித் தலைமை ஆசிரியர் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவரது உரை முடிந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆரம்பித்தது... மைக்கில்,

    "நீராறும் கடலுடுத்த...

    நிலமடந்தைக் கெழிலொழுகும்..." என்று கோரஸாகக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது... பள்ளியின் மெயின் கேட்டருகே இருந்த வாட்ச்மேனைக் கடந்து உள்ளே செல்லப் போனாள் கஸ்தூரி...

    நில்லுங்கம்மா... யார் நீங்க... வாட்ச்மேன் தடுத்தார்...

    நான் இந்த ஸ்கூலில் புதிதாக ஜாயின் பண்ணப் போகும் டீச்சர்...

    அப்படிங்களாம்மா... பிரேயர் நடந்துக்கிட்டிருக்கு... அது முடிந்ததும் நீங்க உள்ளே போங்க... பிரேயருக்கு நடுவில் யார் போனாலும் ஹெட் மாஸ்டர் ஐயாவுக்குப் பிடிக்காது...

    சரிப்பா... நான் வெயிட் பண்ணியே போகிறேன்...

    அம்மா பெயர் என்ன...?

    கஸ்தூரி...

    சொந்த ஊர் எதுங்கம்மா...?

    காரைக்குடி...

    அப்படிங்களா... பிரேயர் முடிந்துருச்சு... நீங்க உள்ளே போங்க...

    கஸ்தூரி வாட்ச்மேனிடம் சிறு புன்சிரிப்புடன் தலை அசைத்தவாறு அந்த மேல்நிலைப் பள்ளிக்குள் நடந்தாள்...

    நீண்டு சென்ற வராண்டாவில் நடந்து, அதன் மறு கோடியில் இருந்த தலைமை ஆசிரியரின் அறை வாசலில் இருந்த பியூனிடம் தன் பெயரைச் சொல்லி அனுப்பி விட்டுக் காத்திருந்தாள்...

    ஹெச்.எம் சார்... உங்களை வரச் சொல்கிறார் மேடம்...

    கஸ்தூரி... ஹெட்மாஸ்டர் பொன்னுரங்கத்தின் அறைக்குள் சென்றாள்... மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு அவளை அவர் ஊன்றிப் பார்த்தார்... கஸ்தூரி அவர் முகம் பார்த்தாள்...

    சார்... நான் கஸ்தூரி...

    ம்ம்... தகவல் வந்தது...

    சார்... நான் இன்றைக்கே என் வேலையை ஆரம்பிக்கலாமா...?

    அதற்காகத்தானே வந்திருக்கிறீங்க... ஆரம்பியுங்க... வீடு எங்கே பார்த்திருக்கிறீங்க...

    வ.உ.சி நகரில்... இரண்டாம் தெருவில் வீடு பார்த்திருக்கிறார்கள்... இன்றைக்கு காலையிலேயே வந்து விட்டோம்...

    ஐ ஸீ... ரஞ்சன் வீட்டுக்கு... எதிர் வீடு...

    ஆமாம் சார்...

    பார்த்து இருங்கம்மா... ரஞ்சனின் அப்பா சோணாச்சலம் இந்த ஊரில் மட்டுமல்ல... புதுக்கோட்டை ஜில்லாவிலேயே பெயர் பெற்ற ஆள்...? அவர் வீட்டுக்கு எதிர் வீடு...

    கஸ்தூரி... அவரை நிமிர்ந்து பார்த்தாள்... அவளது பார்வையில் தெரிந்த கூர்மையில் அவரது பேச்சு நின்றது.

    என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும் சார்... எதையும் சந்திக்கும் துணிவு இல்லாமலா ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறேன்...? நான் என்னைப் பார்த்துக் கொள்வேன்... டோன்ட் வொர்ரி...

    ‘நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன்... கேட்டால் கேள்... கேட்காவிட்டால் போ... எனக்கென்ன ஆச்சு...’ என்ற பாவனையில் தோளைக் குலுக்கிக் கொண்டார் ஹெட்மாஸ்டர்...

    நான் எந்த வகுப்பு எடுக்க வேண்டும்ன்னு சொல்ல முடியுமா...?

    இது என்னம்மா கேள்வி... எம்.எஸ்ஸி பாட்டனி படித்துவிட்டு எம்.எட். முடித்திருக்கிறீங்க... பிளஸ் ஒன்... பிளஸ் டூவிற்கு பாட்டனி கிளாஸ் எடுக்க வேண்டும்... நீங்கள் இப்போது டீச்சர்ஸ் ரெஸ்ட் ரூமிற்கு போய் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்... நான் பியூனிடம்... நீங்கள் எடுக்க வேண்டிய வகுப்புகளின் நேரம் பற்றிய சார்ட்டைக் கொடுத்து விடுகிறேன்... பேசிக் கொண்டே எதிரே நின்றிருந்தவளின் தோற்றத்தை எடை போட்டார் பொன்னுரங்கம்...

    ஐந்தரை அடிக்கும் மேல் உயரம்... அளவான உடல்வாகு... நீண்ட பின்னல்... சந்தன நிறம்... வட்ட வடிவ முகத்தில் நீண்ட கருவிழிகள்... அதில் தெரிந்த தீட்சண்யம்...

    பொன்னுரங்கம் அவளது பார்வையின் ஜ்வாலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டார்...

    ‘என்ன மாதிரியான பார்வை இது...? எதிரே இருப்பதை ஊடுருவி சுட்டெரிக்கும் அனல் பார்வை... இவளது அழகு தீயைப் போன்று பிரகாசிக்கிறது... அதன் ஆகர்ஷண சக்தியில் ஈர்க்கப்பட்டுக் கிட்டே நெருங்கினால் விளக்கின் ஜோதியில் விழுந்து கருகும் விட்டில் பூச்சிகளின் நிலைமைதான் ஏற்படும்...’ என்று நினைத்துக் கொண்டார் அவர்...

    நான் போகலாமா சார்...?

    ‘இன்னுமா இங்கே நிற்கிறாய்...’ என்ற கேள்வியுடன் அவளைப் பார்த்தவர்...

    அப்போதே போகச் சொல்லி விட்டேனே மேடம்... என்றார்...

    ஏதோ யோசனையாய் இருந்தீங்க... அதனால் ஏதேனும் சொல்ல நினைக்கிறீர்களோன்னு வெயிட் பண்ணினேன்...

    ‘நினைப்பதையெல்லாம் உன்னிடம் சொல்ல முடியுமா...’ என்று அதையும் நினைத்துக் கொண்டவர்,

    ஒன்றும் இல்லை மேடம்... யு கேன் கோ... என்றார்...

    கஸ்தூரி... ‘நீ என்ன நினைத்தாய் என்று எனக்குத் தெரியும்...’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தபடி அறையை விட்டு வெளியேறினாள்...

    ‘அப்பாடி...’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட பொன்னுரங்கம்... பியூனை அழைத்தார்...

    மாணிக்கம்...

    சார்... அவன் அவசரமாய் உள்ளே வந்தான்...

    அந்த அம்மாவிற்கு டீச்சர்ஸ் ரெஸ்ட் ரூமைக் காட்டு...

    புதிதாய்ச் சேர்ந்த டீச்சரா சார்...

    ஆமாம்...

    பெயர் என்ன...?

    கஸ்தூரி...

    எங்கே குடியிருக்கிறாங்களாம்...?

    பொன்னுரங்கம் பியூனை முறைத்த முறைப்பில் அவன் கேள்விகளை நிறுத்திவிட்டு கஸ்தூரியின் பின்னால் ஓடினான்...

    மேடம்... மேடம்...

    கஸ்தூரி நடந்து கொண்டே திரும்பி மாணிக்கத்தைப் பார்த்து புருவம் உயர்த்தினாள்...

    ‘இந்தம்மா என்ன இந்த மாதிரி தெனாவெட்டாய் பார்க்குது... டீச்சரம்மா பார்வை போலவே இது பார்வை இல்லையே... ஏதோ போலீஸ்காரி போல இல்ல முறைக்குது...’

    என்ன வேண்டும்...

    நீங்கள் நிற்க வேண்டும்...

    எதற்கு...?

    டீச்சர்ஸ் ரெஸ்ட் ரூம் இந்தப் பக்கம் இருக்கு... நீங்க அந்தப் பக்கம் போகிறீங்களே...

    ஓ...

    கஸ்தூரி திரும்பி நடந்தாள்... மாணிக்கம் அவளுடன் பேச்சுக் கொடுத்தவாறே தொடர்ந்தான்...

    என்ன பாடம் எடுக்கப் போறீங்க மேடம்...

    பாட்டனி...

    இன்றைக்குத்தான் சேர்ந்திருக்கிறீங்களா...?

    ஆமாம்...

    இந்த ஊரா... வெளியூரா...?

    வெளியூர்...

    இங்கே எங்கே தங்கியிருக்கிறீங்க...?

    வீட்டில்...

    வீடு எங்கே இருக்கு...?

    மாணிக்கத்தின் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டே வந்தவள் கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் முறைத்தாள்...

    இதுதான் டீச்சர்ஸ் ரெஸ்ட் ரூம்... மேடம்... அவளது முறைப்பிலிருந்து தப்பிக்க வழி தேடியவன் கூறினான்...

    ‘பிழைத்துப் போ...’ என்ற பார்வையுடன் உள்ளே சென்றவளைக் கண்டதும் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சு நின்றது...

    ‘யார் இவள்...?’ என்ற கேள்வியுடன் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மாணிக்கம் வாயெல்லாம் பல்லாக,

    இவங்கதான் புது பாட்டனி டீச்சர்... என்று அறிமுகப் படுத்தி வைத்தான்.

    ஓ... வெல்கம் டீச்சர்... இப்படி உட்காருங்க... என்றபடி எழுந்து இடம் கொடுத்தான் அந்த வாலிபன்...

    தேங்கஸ்... என்றபடி அமர்ந்து கொண்டாள் கஸ்தூரி...

    ஐ ஆம் ரமேஷ்... மேத்ஸ் டீச்சர்... இவங்க காருண்யா... ஜியாகரபி டீச்சர்... இவர் பவித்ரன் தமிழ் டீச்சர்... அவங்க ரமீலா... ஜுவாலஜி எடுக்கிறாங்க... இவர் மார்ட்டின் இங்கிலீஷ் டீச்சர்...

    ரமேஷ் அறிமுகப்படுத்த கஸ்தூரி சின்னச் சிரிப்புடன் தலை அசைத்தாள்...

    என் பெயர் கஸ்தூரி...

    புது பாட்டனி டீச்சர் வரப் போகிறதாகச் சொன்னாங்க... ஆனால் இவ்வளவு அழகான டீச்சர் வரப் போகிறாங்கன்னு சொல்லவில்லை... மார்ட்டின் கூறினான்.

    மற்ற பெண் ஆசிரியைகளின் முகத்தில் லேசான பொறாமையின் சாயல் தோன்றியது... கஸ்தூரி அவர்களைப் பார்த்து நட்புடன் சிரித்தாள்...

    அழகுன்னு முகத்தைப் பார்த்துச் சொல்லி விடுவதா... எல்லோரிடமும் அழகு இருக்கத்தான் செய்கிறது... அழகில்லாதவங்கன்னு யாருமே இல்லை...

    காருண்யா முகமும்... ரமீலாவின் முகமும் மலர்ந்து விட்டது...

    நீங்க எந்த ஊர்...? என்று காருண்யா வினவினாள்.

    காரைக்குடி...

    கூடப் பிறந்தவங்க...?

    நான் ஒருத்திதான்...

    காரைக்குடின்னா...? இப்போது எங்கே தங்கியிருக்கிறீங்கள்...?

    இங்கே வீடு பார்த்து குடி வந்து விட்டோம்...

    ஓஹோ... நீங்கள்... அப்புறம் யார் யார் பேமிலியில் இருக்கிறாங்க...

    நான்... அப்பா... அம்மா...

    வீடு எங்கே...?

    வ.உ.சி நகர்... செகன்ட் ஸ்ட்ரீட்...

    என்னது...? மிரண்டு போய் கேட்ட காருண்யா ரமேஷின் முகத்தைப் பார்த்தாள்... அவன் முகத்தில் கவலைக் குறி தோன்றியது...

    ஏன் டீச்சர்... அவசரப்பட்டு அந்த ஏரியாவில் வீடு பார்த்தீங்க...? நிதானமாய் வீடு பார்த்திருக்கலாமே...

    ஏன்... அந்த ஏரியாவுக்கு என்ன குறை...?

    நீங்க இவ்வளவு அழகாக... இளம் வயதாக இருப்பது தான் குறை...

    புரியவில்லை சார்...

    நீங்கள் முதலில் வேலையில் ஜாயின் பண்ணிவிட்டு நிதானமாக வீடு பார்த்திருக்கலாமே... முதலில் ஒரு ஊரைப் பற்றி விசாரித்துவிட்டு எந்த ஏரியா டீஸன்டானதுன்னு தெரிந்துக்கிட்டு நீங்கள் வீடு பார்த்திருக்கனும்... நீங்கள் என்னடான்னா அபாயகரமான ஏரியாவில் முதலில் வீடு பார்த்துக் குடியேறிவிட்டு அப்புறமாய் வந்து ஜாயின் பண்ணுகிறீங்கள்...

    அபாயகரமான ஏரியான்னு எதை வைத்துச் சொல்கிறீங்கள்...? அது வி.ஜ.பிக்கள் இருக்கின்ற ஏரியா போல இருக்கிறதே...

    வி.ஜ.பி இருக்கின்ற ஏரியாதான்... அதுவும் உங்க தெருவிலேயே மிகப்பெரிய வி.ஜ.பி. ஒருவர் குடியிருக் கிறாரே...

    யாரைச் சொல்கிறீங்கள்...?

    நீங்க அன்னவாசலுக்கு இன்றுதானே வந்திருக் கிறீங்க... போகப் போக அவரைப் பற்றித் தெரிந்து கொள்வீங்கள்...

    போகப் போகத் தெரிந்து கொள்ளா விட்டால் என்ன... இன்றைக்கே தெரிந்து கொள்கிறேனே... நீங்க சொல்லுங்க...

    வேறு யார்... சோணாச்சலம்தான்... அவரும்... அவருடைய மகனும் இந்த அன்னவாசலுக்கே ஹீரோக்கள் ஆச்சே... அவங்க பெயரைக் கேட்டால் அழுத பிள்ளையும் வாய் மூடும்...

    குழந்தையின் அழுகை நின்று விடுமா...? அந்த அளவிற்கு நல்லவங்களா...?

    கதையை மாற்றுகிறீங்களே... எதனால் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீங்க...?

    அழுகிற குழந்தையை யார் சிரிக்க வைப்பாங்க...? நல்லவர்கள்தானே சிரிக்க வைக்க முடியும்...?

    சரியாப் போச்சு போங்க... அழுகிற குழந்தை வாய் மூடும்ன்னுதான் நான் சொன்னேன்... அழுகிற குழந்தை சிரிக்கும்ன்னா சொன்னேன்... அழுகிற குழந்தை கூட அவர்களைப் பார்த்து பயந்து போய் வாயைத் திறக்காமல் இறுக மூடிக்கும்ன்னு சொன்னேன்...

    மற்றவர்கள் சிரிக்க கஸ்தூரி சிரிக்கவில்லை... அவளது முகம் இறுகி... கல்லைப்போல் கடினமாக மாறியிருந்தது...

    2

    பாரதத்தில் பல பாத்திரங்கள்...

    பார்த்தன் முதல் விகர்ணன் வரை...

    என் ஆவியினில் நிறைந்ததுவோ...

    அந்த அர்ஜுனனின் மகன்தானே...

    நீங்காத என் நினைவுகள்

    டவுன் பஸ்ஸில் கிராமத்து ஜனங்களின் கூட்டம் நிறைந்திருந்தது... வியர்வை வழியும் முகத்துடன்... மக்கள் வெள்ளத்தின் மத்தியில்... வெப்பக் காற்றை சுவாசித்தபடி வந்த கண்டக்டர்... அவளிடம் டிக்கெட் வாங்கச் சொன்னார்...

    வ.உ.சி. நகர்...

    இந்த பஸ் அந்த ஏரியாவுக்குள் போகாதுங்க...

    தெரியும் சார்... நான் எங்கே இறங்க வேண்டுமோ... அந்த ஸ்டாப்பில் என்னை இறக்கி விட்டு விடுங்க...

    அக்சயா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கிக்கங்க... அங்கேயிருந்து கொஞ்ச தூரம் நடக்கனும்...

    சரி...

    டிக்கெட்... டிக்கெட்... என்றபடி கண்டக்டர் நகர்ந்து விட்டார்... அன்னவாசலுக்கு அருகிலிருக்கும் கிராமத்திற்கு போகும் பஸ் அது... வ.உ.சி. நகருக்குப் போக இந்த

    பஸ்ஸில் ஏறிக் கொள்ள வேண்டும் என்று பள்ளியில் கூறியிருந்ததால்... இவள் இந்த பஸ்ஸில் ஏறியிருந்தாள்... காலையில் ஆட்டோவில் வந்ததுபோல்... இப்போதும் ஆட்டோவிலேயே திரும்பிப் போயிருக்கலாம்...

    ஆனால்... அது சரி வராது... அவள் மனதிற்குள் கூறிக்கொண்டாள்...

    ‘நடக்க வேண்டும்... பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடக்க வேண்டும்... நான்கு பேர் பார்வையில் பட வேண்டும்... தினமும் இவ்வழியில் போய் வந்தால் ‘யாரிவள்...’ என்ற கேள்வி எழுந்து என்னைப் பற்றி விசாரிக்கத் தோன்றும்... அதுதான் எனக்கு வேண்டும்...’

    கஸ்தூரி இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது... இறங்கி நடந்தாள்... தெருமுனை காபி ஷாப்பில் இவளைப் பார்த்துக் கொண்டே காபியை ஆற்றினான் ஷாப் ஓனர்... கஸ்தூரி கண்டு கொள்ளாமல் நடந்தாள்... அவளது வீடு இருந்த தெருவில் திரும்பியபோது தெருமுனை வீட்டுக் காம்பவுண்டிற்குள் இருந்து சாலையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வயதான அம்மாள் ஒருத்தி அவளைப் பார்த்து சிநேகிதமாய் சிரித்தாள்... பதிலுக்கு அவளைவிட அகலமாய் புன்னகைத்தாள் கஸ்தூரி...

    ‘அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் பழகிக் கொள்ள வேண்டும்...’

    இவளது சிரிப்பைக் கண்ட அந்த அம்மாள் கேட்டைத்

    Enjoying the preview?
    Page 1 of 1