Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இதயம் தேடும் என்னுயிரே..!
இதயம் தேடும் என்னுயிரே..!
இதயம் தேடும் என்னுயிரே..!
Ebook110 pages39 minutes

இதயம் தேடும் என்னுயிரே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்தப் பொறியியல் கல்லூரியின் வகுப்பறை நிறைவடைந்ததற்கான மணி ஒலிக்க மாணவ, மாணவியர் கால் முளைத்த பட்டாம் பூச்சிகளாய் வெளியில் வந்தனர். 

"ஏய்... ஆராதி அங்கே பண்றே...? வகுப்பறையே காலியாச்சு பாரு...!" 

"ஹாங்... வாடி போகலாம்" என்றவாறு தன் தோழியுடன் வெளியில் வந்தாள் ஆராதி. இருவரும் கணிப்பொறியியல் 3-ம் ஆண்டு மாணவிகள். 

ஆராதி ஐந்தரையடி 'அழகுப்புயல்' அவளது கண்கள் அங்கு மிங்கும் அலைபாய்ந்தன. 

"ஏய்... ஆரா யாரைத் தேடறே..." என்றாள் கீதா...!

"ம்ம்... இஷாலைத்தான் வேற யாரை..."

"யாருக்கிட்டேயும் அதிகம் பழகாத டைப் நீ...! எப்படிடி...? அவன் வலையிலே விழுந்தே...!" 

"வலையில விழறதுக்கு நான் என்ன மீனா...? பிடிச்சிருக்கு 'லவ்' பண்றேன்." 

"உன்னைவிடு...! அவன் எப்படி உன்கிட்டே கவிழ்ந்தான்."

"கவிழ்றதுக்கு அவர் என்ன படகா... என்னைப் பிடிசச்சிருக்கு அதான் லவ் பன்றார்." 

"சரிம்மா தாயே...! உன்னோடு வாயாட என்னால ஆகாது உன் நாயகனே வர்றான்" என்று கூறி கழன்று கொண்டாள் கீதா. 

"பெரிய வேப்பமரத்தை சுற்றி கட்டியிருந்த திண்னையில் அமர்ந்திருந்தான் இஷால். பார்க்க அப்படியே நடிகர் சித்தார்த்தை நினைவு படுத்தினான். பைனல் இயர் மாணவன். 

"ஹாய், இஷால்...!" என்றவாறு அருகில் வந்தமர்ந்தாள். "ஹாய்" என்றவன்.

"ஏய் உனக்கு கிளாசை விட்டு வர மனசே இல்லையா...? இவ்ளோ லேட்டா வர்றே...?" 

"இல்லையே...! பெல் அடிச்சதும், புக்ஸை எடுத்திட்டு வர்றேன்..." என்றாள் தன் இரு தோள்களையும் குலுக்கியப்படி... 

"ஓ.கே...ஓ.கே... புறப்படு..." என்றான். 

"எங்கே...?" 

"போச்சுடா... அதற்குள் மறந்திட்டியா இன்றைக்கு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதா சொன்னேனே...!" 

"ஆங்... ஆமா இல்லே" 

"ஆமாவா..., இல்லையா...?" 

"அப்படி, இல்லப்பா இன்றைக்கு சித்தி என்னை உடனே வரச் சொன்னாங்க. அதான்" மென்று விழுங்கினாள். 

"அப்படீன்னா இங்க ஏன் வந்தே...? அப்படியே போக வேண்டியதுதானே...?" என்றவன் தன் பைக் நிற்கும் இடத்தை நோக்கி கோபமாக நடந்தான்... 

"இஷால், இரு... வர்றேன்" என்றவாறு அவன் பின்னால் ஓடினாள். 

"டேய்...! என்னமா கோபப்படறே...?" என்றவளை முறைத்தான்.

"பின்னே...! அம்மாவிற்கு சின்னதா ஆக்ஸிடெண்ட் அவளைப் பார்க்க நானும் ஒரு வாரமா கூப்பிடறேன் நீயும் நாளைக்குன்னு சொல்லிடறே...? நாளை, தினந்தோறும் வருது ஆனா நீ மட்டும் வர்றதா இல்லை." 

"கூல்ப்பா... சித்தி திட்டினாலும், பரவாயில்லை வர்றேன்." என்று ஏறி இரு கைகளையும் சுற்றி அவனை இறுக்கிக்கொண்டு அவன் கோபத்தை தனித்தாள். 

விர்ரென்ற மூச்சுக்காற்றுடன் பறந்த பைக் பதினைந்து நிமிடத்தில் அவனது வீட்டின் முன் உறுமிக்கொண்டு நின்றது. 

"அட என்ன ஆரா...! உள்ளே வர்றதுக்கு இப்படி தயங்குறே...?"

"இல்லப்பா... முதன் முதலா வர்றேனா அதான்..." 

"அதற்காக ஆரத்தி எடுக்கச்சொல்லணுமா? என்றான் கிண்டலுடன். "கமான்யா..." என்றவாறு அவள் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிக்குள் நுழைந்தான். 

"மம்மி, டாடி..., யாரு வந்திருக்கான்னு பாருங்க..." என்றவாறே தன் அறைக்குள் நுழைந்தான். அங்கே அவள் கண்ட காட்சியினால் ஆச்சரியமானாள் ஆராதி. 

ஏனெனில் இஷாலின் அம்மா வித்யாவின் கால்களுக்கு தைலம் தடவிக்கொண்டிருந்தார் விஷ்ணு. தன் தாய் தந்தை நினைவு வந்தது ஆராதிக்கு... 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223125143
இதயம் தேடும் என்னுயிரே..!

Read more from Sundari Murugan

Related to இதயம் தேடும் என்னுயிரே..!

Related ebooks

Reviews for இதயம் தேடும் என்னுயிரே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இதயம் தேடும் என்னுயிரே..! - Sundari Murugan

    1

    அந்தப் பொறியியல் கல்லூரியின் வகுப்பறை நிறைவடைந்ததற்கான மணி ஒலிக்க மாணவ, மாணவியர் கால் முளைத்த பட்டாம் பூச்சிகளாய் வெளியில் வந்தனர்.

    ஏய்... ஆராதி அங்கே பண்றே...? வகுப்பறையே காலியாச்சு பாரு...!

    ஹாங்... வாடி போகலாம் என்றவாறு தன் தோழியுடன் வெளியில் வந்தாள் ஆராதி. இருவரும் கணிப்பொறியியல் 3-ம் ஆண்டு மாணவிகள்.

    ஆராதி ஐந்தரையடி ‘அழகுப்புயல்’ அவளது கண்கள் அங்கு மிங்கும் அலைபாய்ந்தன.

    ஏய்... ஆரா யாரைத் தேடறே... என்றாள் கீதா...!

    ம்ம்... இஷாலைத்தான் வேற யாரை...

    யாருக்கிட்டேயும் அதிகம் பழகாத டைப் நீ...! எப்படிடி...? அவன் வலையிலே விழுந்தே...!

    வலையில விழறதுக்கு நான் என்ன மீனா...? பிடிச்சிருக்கு ‘லவ்’ பண்றேன்.

    உன்னைவிடு...! அவன் எப்படி உன்கிட்டே கவிழ்ந்தான்.

    கவிழ்றதுக்கு அவர் என்ன படகா... என்னைப் பிடிசச்சிருக்கு அதான் லவ் பன்றார்.

    சரிம்மா தாயே...! உன்னோடு வாயாட என்னால ஆகாது உன் நாயகனே வர்றான் என்று கூறி கழன்று கொண்டாள் கீதா.

    "பெரிய வேப்பமரத்தை சுற்றி கட்டியிருந்த திண்னையில் அமர்ந்திருந்தான் இஷால். பார்க்க அப்படியே நடிகர் சித்தார்த்தை நினைவு படுத்தினான். பைனல் இயர் மாணவன்.

    ஹாய், இஷால்...! என்றவாறு அருகில் வந்தமர்ந்தாள். ஹாய் என்றவன்.

    ஏய் உனக்கு கிளாசை விட்டு வர மனசே இல்லையா...? இவ்ளோ லேட்டா வர்றே...?

    இல்லையே...! பெல் அடிச்சதும், புக்ஸை எடுத்திட்டு வர்றேன்... என்றாள் தன் இரு தோள்களையும் குலுக்கியப்படி...

    ஓ.கே...ஓ.கே... புறப்படு... என்றான்.

    எங்கே...?

    போச்சுடா... அதற்குள் மறந்திட்டியா இன்றைக்கு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதா சொன்னேனே...!

    ஆங்... ஆமா இல்லே

    ஆமாவா..., இல்லையா...?

    அப்படி, இல்லப்பா இன்றைக்கு சித்தி என்னை உடனே வரச் சொன்னாங்க. அதான் மென்று விழுங்கினாள்.

    அப்படீன்னா இங்க ஏன் வந்தே...? அப்படியே போக வேண்டியதுதானே...? என்றவன் தன் பைக் நிற்கும் இடத்தை நோக்கி கோபமாக நடந்தான்...

    இஷால், இரு... வர்றேன் என்றவாறு அவன் பின்னால் ஓடினாள்.

    டேய்...! என்னமா கோபப்படறே...? என்றவளை முறைத்தான்.

    பின்னே...! அம்மாவிற்கு சின்னதா ஆக்ஸிடெண்ட் அவளைப் பார்க்க நானும் ஒரு வாரமா கூப்பிடறேன் நீயும் நாளைக்குன்னு சொல்லிடறே...? நாளை, தினந்தோறும் வருது ஆனா நீ மட்டும் வர்றதா இல்லை.

    கூல்ப்பா... சித்தி திட்டினாலும், பரவாயில்லை வர்றேன். என்று ஏறி இரு கைகளையும் சுற்றி அவனை இறுக்கிக்கொண்டு அவன் கோபத்தை தனித்தாள்.

    விர்ரென்ற மூச்சுக்காற்றுடன் பறந்த பைக் பதினைந்து நிமிடத்தில் அவனது வீட்டின் முன் உறுமிக்கொண்டு நின்றது.

    அட என்ன ஆரா...! உள்ளே வர்றதுக்கு இப்படி தயங்குறே...?

    இல்லப்பா... முதன் முதலா வர்றேனா அதான்...

    அதற்காக ஆரத்தி எடுக்கச்சொல்லணுமா? என்றான் கிண்டலுடன். கமான்யா..." என்றவாறு அவள் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிக்குள் நுழைந்தான்.

    மம்மி, டாடி..., யாரு வந்திருக்கான்னு பாருங்க... என்றவாறே தன் அறைக்குள் நுழைந்தான். அங்கே அவள் கண்ட காட்சியினால் ஆச்சரியமானாள் ஆராதி.

    ஏனெனில் இஷாலின் அம்மா வித்யாவின் கால்களுக்கு தைலம் தடவிக்கொண்டிருந்தார் விஷ்ணு. தன் தாய் தந்தை நினைவு வந்தது ஆராதிக்கு...

    2

    ஆராதியின் தாய் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது அவள் தந்தை குடிவெறியில் அவளது தாயை எட்டி உதைக்க...! சுருண்டு விழுந்து துடித்த தாயை பாட்டி ஹாஸ்பிடல் கொண்டுபோக அன்று தன் பிறந்த தினமே தன் தாயாரின் இறந்த தினமாக மாறியக் கதையை சொல்லிக்கேட்டிருக்கிறாள்.

    "இப்போது அன்புத் தாய் இல்லை. அப்பாவின் கோபத்திற்கு ஈடு கொடுக்க வந்த சித்தியின் முன்பு அப்பா பெட்டிப் பாம்மாய் எப்படி மாறினாரோ...?

    ஏய்...ஆரா... என்ன அங்கே நிக்கறே... உள்ளே வா...! என்றவன் அருகில் வர அவள் கண் கலங்குவதைப் பார்த்து பதறினான்...

    வாட்... என்னாச்சு... என்று பிடித்து உலுக்க சுயநினைவிற்கு வந்தாள் ஆரா.

    ஆர்...யூ...ஓகே...!

    யா...ஐ... ஆம் பைன் என்றவள் இல்லை என் அம்மா ஞாபகம் என்று முறுவலித்தாள். தன் தந்தை விஷ்ணு பிரசாத் தாய் வித்யாவதியை அறிமுகப் படுத்தினான்.

    அவள் பெரியவர்களின் கால்களையும் தொட்டு வணங்கினாள்.

    பரவாயில்லை உட்காரும்மா என்றார் இஷாலின் தாயார் வித்யா.

    நீங்க படுத்துக்கோங்க... ஆன்ட்டி...! இப்ப பரவாயில்லையா...? என்றவாறு அவரது கைகளை பற்றினாள் ஆரா...!

    பரவாயில்லைம்மா... ஆனா இஷாலோட அப்பாதான் என்னை விட ரொம்ப துடித்து போயிட்டாரு அதுவுமில்லாம பத்து நாளா லீவ் போட்டு என்னை குழந்தை மாதிரி கவனிச்சுக்கிறாரு அவங்களைப் பார்க்கத்தான் பாவமா இருக்கு...

    நீங்க... ரொம்ப லக்கி ஆன்ட்டி இப்படி ஒரு அங்கிள் கிடைக்க...

    நெக்குறுகி இருந்த தாய் இன்னும் ஒரு வாரத்திலே கொஞ்சம், கொஞ்சமா நடக்கலாம்னு டாக்டர் சொன்னாருப்பா... முதன்முதலா நம்ம வீட்டிற்கு வந்திருக்கிற மருமகளை. என்னால எழுந்து நின்று வரவேற்று ஒரு காபி கூட...

    பரவாயில்லை ஆன்ட்டி... நானே காபி கலந்து தர்றேன் என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் டொட்டோ டொய்ங்... காபி ரெடி...!" என்றவாறு காபி டிரேயுடன் வந்த தந்தையை வியந்து பெருமையுடன் பார்த்தான் இஷால்.

    அங்கிள்...! நீங்களா...? காபி போட்டு எடுத்துட்டு வர்றீங்க என்று வியந்தாள் ஆரா...?

    ஒரு கப்பை எடுத்து பருகியவள்... ரொம்ப நல்லா இருக்கு என்றாள். உங்க காப்பிக்கு தாங்க்ஸ் அங்கிள் வீட்டிற்கு நான் சீக்கிரம் போக வேண்டும். இன்றைக்கு சித்திகிட்டே செமத்தியா வாங்கிக் கட்டிக்கப்போறேன்."

    ஆரா... என்னோட பேரன்ட்ஸ் எப்படி...?

    யு...ஆர்... வெரி வெரி லக்கி...! இப்படிபட்ட பேரண்ஸ் கிடைக்க... அதுவும் ஒருவர் மீது, ஒருவர் உயிரையே வைச்சிருங்காங்க...! பார்க்கவே சந்தோஷமாக இருக்கு என்றாள்.

    "ஆனா கல்யாணமான புதுசுல மம்மி பட்ட கஷ்டம் ஒரு பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1