Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இதயவீணை தூங்கும்போது…!
இதயவீணை தூங்கும்போது…!
இதயவீணை தூங்கும்போது…!
Ebook121 pages46 minutes

இதயவீணை தூங்கும்போது…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்தி சாயும் அந்த வேளையில் கடற்கரையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சொற்பமான கூட்டமே இருந்தது. 

பாலு என்ற பாலசுந்தரம், குரு என்ற சிவகுரு, கதிர் என்ற கதிர்வேல் இந்த மூவரும் நண்பர்கள். எல்.கே.ஜி.யிலிருந்து கல்லூரியில் பட்டப்படிப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். 

கதிர் கல்லூரி விரிவுரையாளராகவும், குரு ஒரு வங்கி அதிகாரியாகவும் இருக்க, பாலு ஆன்லைன் வர்த்தகம் மூலம் மாதம் ஒன்றுக்கு லட்சத்திற்கு பக்கம் வருமானம் ஈட்டுபவன். 

மூவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும் தேவையான நேரம் அலைபேசி மூலம் தகவல் பரிமாறி இந்தக் கடற்கரையில் சந்தித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

"டேய்... நாம சந்திச்சு மூன்று மாதமும் பத்து நாளும் ஆச்சு" என்றான் குரு. 

"எப்படிடா... இவ்வளவு கரெக்டா கணக்கு சொல்றே..." என்றான் கதிர். 

"எப்படின்னு கண்டுபுடி" என்றான் குரு தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி... 

"ம்... அவனோட திருமணத்திற்கு பிறகு இன்று தானே நேரில் சந்திக்கிறோம்... திருமண நாளிலிருந்து கணக்கு பார்த்திருப்பான் சரிதானே..." என்றான் கதிர். 

"எக்ஸாட்லி... யூ... ஆர்... ரைட்..." 

"சாரிடா... இன்று எனக்கு அரைநாள்தான் விடுமுறை. அதுவும் இங்கே வந்தாச்சு... நாளை ஒரு நாள் தான் பாக்கி இருக்கு... வொய்ப்பை அவளோட பிறந்த வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகணும் ஸோ... நாளைக்கு எங்கேயும் என்னால வர முடியாது டா." என்றான் குரு. 

"நானுந்தான் காலையில் என்னோட மனைவியையும், குழந்தையையும் அவங்க அக்கா வீட்ல கொண்டு விட்டுட்டு வந்தேன். நாளைக்குப் போய் திரும்ப அழைச்சிட்டு வரணும்." 

"அப்ப இருவருமே நான் கூப்பிடற இடத்திற்கு வர மாட்டீங்க அப்படித்தானே?" 

"போன்லயே என்ன விஷயம்னு கேட்டோம் நேர்ல வாங்கன்னு சொல்லிட்டே. அப்படி எங்கடா எங்களை கூப்பிடறே?" 

"ம்... எனக்கு பெண் பார்க்கத்தான்!" 

"என்னடா பாலு உண்மையாவா?" என்றனர் இருவரும் கோரஸாக.

"ம்ம்..." 

"டேய்... எந்தப் பொண்ணையும் காதலிக்க மாட்டேன், வீட்ல பார்த்துச் சொல்ற பொண்ணைத்தான் மணப்பேன். அதுவும் முதலில் எந்தப் பொண்ணைப் பார்க்கப் போகிறேனோ அந்தப் பொண்ணைத்தான் மணம் முடிப்பேன் என்று சொல்லியே வயது முப்பத்தி ஒன்றாகுது. இப்பதானே! முதன் முதலா பெண் பார்க்கப்போறே!" 

"அதுமட்டுமில்லைடா கல்யாணம்னு நடந்தா அதுவும் இந்தப் பெண்ணோடதான்." 

"சரி நீ பார்க்கப்போகிற இந்தப் பெண் வேறு யாரையாவது காதலிக்கிறதா சொல்லிட்டா... அப்பறம் கல்யாணமே கட்டிக்கமாட்டியா...?" 

"அடப்பாவி... நல்லதா யோசியேன்டா!" 

"டேய்... தீர விசாரிச்சாச்சு! அப்படி எதுவும் இருக்கற மாதிரி தெரியலை." 

"தீர விசாரிச்சியா எப்படி" என்றான் குரு. 

"டேய்... என் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஜெயான்னு ஒரு பெண். அதே பள்ளியில் தான் வேலை பார்க்கிறா அவகிட்டே எங்க அம்மாவை விட்டு விசாரிச்சேன். பெண் பத்தரை மாற்றுத் தங்கம்னு அந்த அம்மா நற்சான்றிதழ் தந்துட்டாங்க!" 

"என்னடா இது, அம்மா சொன்னாங்க... அடுத்த வீட்டு ஜெயா சொன்னாங்கங்கறே நீயே போய் நேர்ல அந்தப் பெண்ணைப் பார்த்து கேட்டியா?" 

"ம்கூம்..." என்று உதட்டை பிதுக்கியவனைப் பார்த்த குரு "பின்னே எப்படிடா... அந்தப் பெண் யாரையும் காதலிக்கலைன்னு உறுதியா சொல்றே."

"அந்தப் பெண்ணோட பக்கத்து வீட்டுக்காரரு எங்க தோப்புலதான் தேங்காய் பறிக்க வருவாரு அவர்கிட்டேயும் விசாரிச்சேன்." 

"என்னடா பேத்தல் இது? அவருக்கெல்லாம் தெரியுமாடா ஒரு பொண்ணோட மனசு?" என்றான் கதிர். 

"டேய் அந்தப் பெண்ணை நேர்ல பார்த்து பேசுடா?" 

"அது பள்ளிக்கூடம் விட்டதும் வெளியே வருமில்ல அப்போ உன்னை அறிமுகப்படுத்திக்கொண்டே பேசு! உன்னை அவளுக்கு பிடிச்சிருக்கிறதா தெரிஞ்சா பெண் பார்க்கப் போ!" 

"ஆமாடா... நீங்க சொல்றது தான் சரின்னு படுது!" 

"சரிடா... ஆல் த பெஸ்ட்! உன் குடும்பத்தோடு பெண் பார்த்து கல்யாண தேதி பிக்ஸ் ஆனதும் தகவல் சொல்லு!" என்று இருவரும் கிளம்பினர். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223251095
இதயவீணை தூங்கும்போது…!

Read more from Sundari Murugan

Related to இதயவீணை தூங்கும்போது…!

Related ebooks

Reviews for இதயவீணை தூங்கும்போது…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இதயவீணை தூங்கும்போது…! - Sundari Murugan

    1

    அந்தி சாயும் அந்த வேளையில் கடற்கரையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சொற்பமான கூட்டமே இருந்தது.

    பாலு என்ற பாலசுந்தரம், குரு என்ற சிவகுரு, கதிர் என்ற கதிர்வேல் இந்த மூவரும் நண்பர்கள். எல்.கே.ஜி.யிலிருந்து கல்லூரியில் பட்டப்படிப்பு வரை ஒன்றாக படித்தவர்கள்.

    கதிர் கல்லூரி விரிவுரையாளராகவும், குரு ஒரு வங்கி அதிகாரியாகவும் இருக்க, பாலு ஆன்லைன் வர்த்தகம் மூலம் மாதம் ஒன்றுக்கு லட்சத்திற்கு பக்கம் வருமானம் ஈட்டுபவன்.

    மூவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும் தேவையான நேரம் அலைபேசி மூலம் தகவல் பரிமாறி இந்தக் கடற்கரையில் சந்தித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    டேய்... நாம சந்திச்சு மூன்று மாதமும் பத்து நாளும் ஆச்சு என்றான் குரு.

    எப்படிடா... இவ்வளவு கரெக்டா கணக்கு சொல்றே... என்றான் கதிர்.

    எப்படின்னு கண்டுபுடி என்றான் குரு தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி...

    ம்... அவனோட திருமணத்திற்கு பிறகு இன்று தானே நேரில் சந்திக்கிறோம்... திருமண நாளிலிருந்து கணக்கு பார்த்திருப்பான் சரிதானே... என்றான் கதிர்.

    எக்ஸாட்லி... யூ... ஆர்... ரைட்...

    சாரிடா... இன்று எனக்கு அரைநாள்தான் விடுமுறை. அதுவும் இங்கே வந்தாச்சு... நாளை ஒரு நாள் தான் பாக்கி இருக்கு... வொய்ப்பை அவளோட பிறந்த வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகணும் ஸோ... நாளைக்கு எங்கேயும் என்னால வர முடியாது டா. என்றான் குரு.

    நானுந்தான் காலையில் என்னோட மனைவியையும், குழந்தையையும் அவங்க அக்கா வீட்ல கொண்டு விட்டுட்டு வந்தேன். நாளைக்குப் போய் திரும்ப அழைச்சிட்டு வரணும்.

    அப்ப இருவருமே நான் கூப்பிடற இடத்திற்கு வர மாட்டீங்க அப்படித்தானே?

    போன்லயே என்ன விஷயம்னு கேட்டோம் நேர்ல வாங்கன்னு சொல்லிட்டே. அப்படி எங்கடா எங்களை கூப்பிடறே?

    ம்... எனக்கு பெண் பார்க்கத்தான்!

    என்னடா பாலு உண்மையாவா? என்றனர் இருவரும் கோரஸாக.

    ம்ம்...

    டேய்... எந்தப் பொண்ணையும் காதலிக்க மாட்டேன், வீட்ல பார்த்துச் சொல்ற பொண்ணைத்தான் மணப்பேன். அதுவும் முதலில் எந்தப் பொண்ணைப் பார்க்கப் போகிறேனோ அந்தப் பொண்ணைத்தான் மணம் முடிப்பேன் என்று சொல்லியே வயது முப்பத்தி ஒன்றாகுது. இப்பதானே! முதன் முதலா பெண் பார்க்கப்போறே!

    அதுமட்டுமில்லைடா கல்யாணம்னு நடந்தா அதுவும் இந்தப் பெண்ணோடதான்.

    சரி நீ பார்க்கப்போகிற இந்தப் பெண் வேறு யாரையாவது காதலிக்கிறதா சொல்லிட்டா... அப்பறம் கல்யாணமே கட்டிக்கமாட்டியா...?

    அடப்பாவி... நல்லதா யோசியேன்டா!

    டேய்... தீர விசாரிச்சாச்சு! அப்படி எதுவும் இருக்கற மாதிரி தெரியலை.

    தீர விசாரிச்சியா எப்படி என்றான் குரு.

    டேய்... என் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஜெயான்னு ஒரு பெண். அதே பள்ளியில் தான் வேலை பார்க்கிறா அவகிட்டே எங்க அம்மாவை விட்டு விசாரிச்சேன். பெண் பத்தரை மாற்றுத் தங்கம்னு அந்த அம்மா நற்சான்றிதழ் தந்துட்டாங்க!

    என்னடா இது, அம்மா சொன்னாங்க... அடுத்த வீட்டு ஜெயா சொன்னாங்கங்கறே நீயே போய் நேர்ல அந்தப் பெண்ணைப் பார்த்து கேட்டியா?

    ம்கூம்... என்று உதட்டை பிதுக்கியவனைப் பார்த்த குரு பின்னே எப்படிடா... அந்தப் பெண் யாரையும் காதலிக்கலைன்னு உறுதியா சொல்றே.

    அந்தப் பெண்ணோட பக்கத்து வீட்டுக்காரரு எங்க தோப்புலதான் தேங்காய் பறிக்க வருவாரு அவர்கிட்டேயும் விசாரிச்சேன்.

    என்னடா பேத்தல் இது? அவருக்கெல்லாம் தெரியுமாடா ஒரு பொண்ணோட மனசு? என்றான் கதிர்.

    டேய் அந்தப் பெண்ணை நேர்ல பார்த்து பேசுடா?

    அது பள்ளிக்கூடம் விட்டதும் வெளியே வருமில்ல அப்போ உன்னை அறிமுகப்படுத்திக்கொண்டே பேசு! உன்னை அவளுக்கு பிடிச்சிருக்கிறதா தெரிஞ்சா பெண் பார்க்கப் போ!

    ஆமாடா... நீங்க சொல்றது தான் சரின்னு படுது!

    சரிடா... ஆல் த பெஸ்ட்! உன் குடும்பத்தோடு பெண் பார்த்து கல்யாண தேதி பிக்ஸ் ஆனதும் தகவல் சொல்லு! என்று இருவரும் கிளம்பினர்.

    2

    ஆட்டோவில் வந்து இறங்கியது பானு. அவர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு தன் வாசலைப் பார்த்து வியந்தாள்.

    தெருவை அடைத்து ரங்கோலிக் கோலம் போட்டு அதற்கு அழகாக கலர் கொடுத்து காண்போரை கண் பதிக்க வைத்தது அந்தக்கோலம்.

    அம்மா... அம்மா... என்று செருப்பை வெளியே உதறியவள் வீட்டுக்குள் நுழைந்தாள்.

    பானும்மா... வந்துட்டியா? வா... வா... என்று சமையற்கட்டில் இருந்து வந்தாள் கோமதி.

    ஏம்மா... நான் இங்கே இருந்தப்போ தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி என்னைத்தான் கோலம் போடச் சொல்வே... உனக்கு இவ்ளோ அழகா கோலம் போடத்தெரியும்னு எனக்கு கூட தெரியாதே! ஆனா இப்போ எப்படி பறிக்குது கோலம் எல்லாம்?

    என்னடி சொல்றே?

    நம்ம வீட்டு வாசலைப் பார்த்துதான் சொல்றேன்.

    ஓ... நான் எங்கேடி போட்டேன். எல்லாம் உன் அண்ணாவோட கை வண்ணம்தான்.

    என்னது அண்ணனா... என்று வாயைப் பிளந்த பானு... ஏம்மா! வர்றவ குடுத்து வைச்ச மகராசிதான்.

    அது சரி! நீ மட்டும் தனியா வந்திருக்கே மாப்பிள்ளை, குழந்தை நிறைமதி இவங்களை கூட அழைச்சிட்டு வரலை?

    ஐந்து மணிக்கு தானே பெண் பார்க்க போறோம்? குழந்தைக்கு ஸ்கூல் விட்டதும் அவளையும் அழைச்சிட்டு உன் மாப்பிள்ளை நான்கு மணிக்குள்ள வந்துடுவாங்க. உனக்கு ஒத்தாசையா இருக்குமேன்னுதான் நான் முதல்ல வந்துட்டேன்... ஆமா... அண்ணன், அப்பாவை என்ன இன்னும் காணோம்.?

    அப்பா நண்பர் வீட்டுக்கும் பாலு கடை வீதிக்கும் போயிருக்காங்க. வர்ற நேரம்தான்

    எத்தனை மணிக்கு போறோம்...?

    ஐந்திலிருந்து ஆறரைக்குள் நல்ல நேரமாம்.

    பஜ்ஜி, எதுவும் செய்யணுமா? என்றாள் பானு.

    அடியேய்! நாம தான் பெண் பார்க்கப் போறோம் நாம எதுவும் பட்சணம் செய்ய வேணாம். பூ, பழம், தாம்பூலம் வாங்கிட்டுப் போனா. போதும். போற இடத்திலும் பஜ்ஜி சொஜ்ஜி எதுவும் கிடையாது

    என்னம்மா அதையும் அண்ணா வேணாம்னு சொல்லிடுச்சா

    கோவில்ல வைச்சுதானே பெண்ணும், மாப்பிள்ளையும் பார்த்துக்கப் போறாங்க.

    ம்... இதுவும் அண்ணனோட ஏற்பாடா... அண்ணன் மாதிரியே ஒவ்வொரு ஆணும் இருந்துட்டா பெண்ணா பிறந்தவங்களுக்கும், பெண்ணை பெற்றவங்களுக்கும் ரொம்ப நிம்மதி

    ஆளைவிடு! உன் கிட்டே பேச நேரமில்லை! நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்.

    சரிம்மா நானும் என் தோழி பூவிழியை பார்த்திட்டு வந்திடறேன்.

    யேய்... பானு! அங்கே போனா உனக்கு நேரம் போறதே தெரியாதே!

    இல்லைம்மா எப்படியும் நான்கு மணிக்குள்ள வந்திடுவேன். பூவிழி குழந்தை பிறந்து இங்கே அம்மா வீட்ல இருக்கா இல்ல? அதான் போய் பார்த்துட்டு வந்திடறேன். என்றவள் தான் கொண்டு வந்த பையிலிருந்து கொஞ்சம் பழங்களை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு செருப்பணிந்து தெருவின் கோடியில் உள்ள தன் தோழி வீட்டை நோக்கி நடந்தாள்.

    பானுவைக் கண்டதும் பூவிழியின் முகம் பூவாய்

    Enjoying the preview?
    Page 1 of 1