Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் இனிய இளமானே
என் இனிய இளமானே
என் இனிய இளமானே
Ebook125 pages42 minutes

என் இனிய இளமானே

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல்லவி துணிகளுக்கு சோப்பு போட்டுக் கொண் டிருந்தபோது அழைப்பு மணி ஒலித்தது.
எழுந்து சோப்பு நுரையுடன் இருந்த கைகளை கழுவிக் கொண்டு சேலைத் தலைப்பால் துடைத்தவாறே வந்தாள்.
கதவைத் திறந்து பார்த்தாள்.
“வரதன் புன்னகையுடன் நின்றிருந்தான்.
அண்ணனைக் கண்டதும் அவளுடைய முகம் பூவாய் மலர்ந்த து.
“அண்ணா... வாண்ணா” ஆவலுடன் வரவேற்றாள்.
வரதன் உள்ளே வந்தான்.
உள்ளே வந்த பல்லவி, “உட்காருண்ணா” என இருக்கையை எடுத்துப் போட்டாள்.
“எப்படிம்மா இருக்கே?” நலம் விசாரித்தபடியே அமர்ந்தான் வரதன்.
“ம்... நல்லா இருக்கேண்ணா’ நீ எப்படி இருக்கே? தேவசேனா எப்படி இருக்கா?”
“எங்களுக்கு என்ன நல்லாத்தான் இருக்கோம். இந்தா... தேவசேனா உனக்காக ஜாதிமல்லி கொடுத்தனுப்பினா...” பையிலிருந்து ஜாதிமல்லி சரத்தையும், வாங்கி வந்த பழங்களையும் எடுத்து நீட்டினான். ஆசையுடன் வாங்கிக் கொண்டாள்.
“எங்க மாப்பிள்ளையைக் காணோம்? கடைக்குப் போயிருக்காரா?” என்றான்.
“அவர் எங்கே கடைக்குப் போறார்? எங்கயாவது சாராயக்கடையில் போய் உட்கார்ந்துக்கிட்டிருப்பார்.”
“இப்படியே இருந்தா என்னம்மா அர்த்தம்? நீ திருத்தக்கூடாதா?”ஜென்மத்துல பொறந்ததை செருப்பால அடிச்சாக்கூட போகாதுண்ணா...”
“என்னமோ போ... உன் கொழுந்தன் கண்ணும் கருத்துமா கடையைப் பார்க்குறார். நாளைக்கு பங்கு பாகம்னு வரும்போதுதானே தெரியும். நான்தானே பாடுபட்டேன். எனக்குத்தான் எல்லாம்னு எல்லாத்தையும் அவரே எடுத்துக்கப் போறார்.”
“என்னை என்னண்ணாபண்ணச் சொல்றே? எல்லாம் என் தலையெழுத்து. நல்ல மாப்பிள்ளைன்னுதான் பார்த்துக் கொடுத்தே. இங்க உள்ளே இத்தனை ஓட்டை இருக்கறது அப்புறம்தானே தெரியுது” என்றாள். சில நிமிடங்கள் மவுனமாக இருந்துவிட்டு நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
“ம்... என்னமோ என் தலையெழுத்துத்தான் இப்படி ஆயிட்டு. தேவசேனாவையாவது நல்லா விசாரிச்சு நல்ல பையனுக்கு கொடுண்ணா...”
“அதைப்பத்திதாம்மா பேச வந்தேன். தேவசேனாவை போன வாரம் பொண்ணு பார்த்துட்டு போனாங்க.”
‘‘அப்படியா? எந்த ஊரு?”
“மெட்ராஸ்தாம்மா.”
“நல்லதா போச்சு. மாப்பிள்ளை என்ன பண்றார்?”
“பிஸினஸ்தாம்மா. அப்பாவும் பையனுமா சேர்ந்து ஜவுளிக்கடை வச்சிருக்காங்க. ஒரே பையன். வசதியான இடம்தான். பையன் பேரு சுதாகர். ஆள் நல்லா இருக்கார்.
“அப்படியா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்க அண்ணா...”
“வர்ற வெள்ளிக்கிழமை நிச்சயம் செய்துக்கலாம்னு சொல்லிட்டுப் போனாங்க. அதான் சொல்ல வந்தேன்.”
“அப்படியா ரொம்ப சந்தோஷம். அண்ணர் நிச்சயதார்த்தம் யார் செய்யறா?”
“நாமதான்.’’
“வசதியான இடம்னு சொல்றே. நிறைய கேட்பாங்களே...” என்றாள்“நம்ம சக்திக்கு மீறி நம்மால எப்படி செய்ய முடியும்? பதினைஞ்சு பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னேன். ஒத்துக்கிட்டாங்க” என்றான்.
“பணத்துக்கெல்லாம் என்னண்ணா பண்ணப் பொறே?”
“என்னம்மா செய்யறது? கடனை உடனை வாங்கி செய்ய வேண்டியதுதான்” என்றான்.
“நான் பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன். இருண்ணா காபி போட்டு எடுத்து வர்றேன்” என்றபடி உள்ளே சென்றாள் பல்லவி.
வரதனுக்கு மனம் வேறு சிந்தனையில் ஆழ்ந்தது. யார் பாரிடம் கடன் வாங்குவது என யோசிக்கத் தொடங்கினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
என் இனிய இளமானே

Read more from ஆர்.சுமதி

Related to என் இனிய இளமானே

Related ebooks

Reviews for என் இனிய இளமானே

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் இனிய இளமானே - ஆர்.சுமதி

    1

    வரதன் நீட்டிய கோப்பினை வாங்கிப் பிரித்தார் மேலாளர் பூதலிங்கம்.

    பார்வையை அதில் ஓட்டியபடியே கேட்டார்.

    என்ன வரதன்... உன் தங்கையை பெண் பார்த்துட்டுப் போனாங்களே... என்ன ஆச்சு? ஏதாவது நல்ல சேதி உண்டா? வரதனின் முகம் மலர்ந்தது.

    ஆமா சார்... அதைப் பத்தி நானே உங்கக்கிட்ட சொல்லணும்னுதான் சார் வந்தேன். என் தங்கை தேவசேனாவை பெண் பார்த்துட்டு போனவங்க அவளை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. வர்ற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிச்சிருக்காங்க.

    அவர் புன்னகையுடன் நிமிர்ந்தார்.

    வெரிகுட்... வெரிகுட்... நல்ல செய்திதான் மாப்பிள்ளை எப்படி?... நல்ல பையனா?

    ஆமா சார். நல்ல பையனாத்தான் தெரியறார். நல்லா விசாரிச்சுட்டேன். எல்லாரும் நல்லபடியாத்தான் சொல்றாங்க. அமைதியானவரா தெரியறார்.

    இந்த காலத்துல நல்ல பையன் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். என்னமோ நீ தனிக்கட்டையா இருந்து ரெண்டு தங்கச்சிகளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கற கடமையை சுமந்துக்கிட்டு இருந்தே. மூத்தவளை நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டே. சின்னவளுக்கும் இப்ப முடிக்கப் போறே. ஒரு வழியா பாரம் குறைஞ்சா நீயும் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு நிம்மதியாக இருந்துடு. ஆமா... மாப்பிள்ளை எந்த ஊர். அதை சொல்ல மறந்துட்டே... என்ன வேலை செய்யறார்.

    பையனுக்கு சொந்த ஊர் சென்னைதான். சொந்தமா பிசினஸ் பண்றார். கொஞ்சம் வசதியான இடம்தான்.

    அப்படியா...

    இன்னிக்கு மதியம் எனக்கு அரை நாள் லீவு வேணும். வெள்ளிக்கிழமைக்கு இன்னும் மூணுநாள்தானே இருக்கு. உறவுக்காரர்களுக்கு எல்லாம் சொல்லணும். நான் ஒண்டிக்கட்டை. எல்லாத்துக்கும் நான்தானே அலையணும்.

    ‘‘வாஸ்தவம்தான். தாராளமா லீவு எடுத்துக்க."

    தாங்க்யூ சார்...

    சேனா... அம்மா தேவசேனா... என்ற குரல் கேட்டு அடுக்களையில் வேலையாக இருந்த தேவசேனா ‘அவசரமாக வெளியே வந்தாள்.

    தேவசேனா மிகவும் அழகாக இருந்தாள். மாலை வெயில் போன்றதொரு நிறம். சிவந்த இதழ்கள். சிக்கென்ற இடை. சிரிக்கும் விரிந்த விழிகள். வழவழவென்று பின்னிப்போட்ட நீண்ட சடை.

    வாண்ணா என வரதனைப் பார்த்து சொன்ன வாறே அருகே வந்தவள், "சாப்பாடு எடுத்து வைக்கட்டாண்ணா என்றாள்.

    "வைம்மா’... சீக்கிரம் வை…’’

    கலகலவென சிரித்தாள், தேவசேனா.

    என்னண்ணா’. இன்னைக்கு பயங்கர பசியா? வந்ததும் பறக்குறே? என்றாள்.

    பசி இல்லைம்மா... வெளியில வேலை இருக்கு வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம். மறந்துட்டியா எல்லோருக்கும் சொல்ல வேண்டாமா? கூடமாட ஒத்தாசை பண்ண யார் இருக்கா? இல்லே... அண்ணன் தம்பிங்கதான் இருக்காங்களா? நான் தனியாத்தானே அலைஞ்சாகணும்" வரதன் அலுத்துக் கொண்டான்.

    தேவசேனா சிரித்தபடியே அண்ணனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள்.

    கைக்கழுவிக் கொண்டு சாப்பிட வந்தான். உணவை பிசைந்து வாயில் வைத்தவனின் கண்கள் கலங்கின.

    என்னண்ணா’. கண் கலங்கிக்கிட்டு?

    ஒண்ணுமில்லைம்மா! வேலை செய்து அலுப்பு சலுப்போட வந்தா மணக்க மணக்க சோறு ஆக்கி வச்சு இப்படி பறிமாறுறே... நீ போயிட்டா. நான் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படணும்... தொண்டைதழுதழுக்க அவன் சொன்னதும் தேவசேனா சிரித்தாள்.

    என்னண்ணா நீ? எத்தனை அக்கா தங்கச்சிங்களோட பிறந்தாலும் ஆம்பளைங்களுக்கு கடைசி வரை செய்யப் போறவ பொண்டாட்டிதான். நீயும் சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டின்னா சாப்பாட்டுக்கு என்ன கஷ்டம். வர்றவ என்னை விட நல்லாருசியா சமைச்சு போடுவா.

    தங்கை சொன்னதும் வரதன் சிரித்தான்.

    முதல்ல உன் கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும். அப்புறம் மத்ததைப் பேசிக்கலாம்.

    வாழைக்காய் வறுவலை எடுத்து அவனுக்கு வைத்தவாறே கேட்டாள்.

    முதல்ல யார் வீட்டுக்கு சொல்லப் போறே?

    இதென்னம்மா கேள்வி? அக்காவுக்குத்தான் சொல்லப் போறேன்.

    அப்படியா! அப்படின்னா அக்காவுக்கு பிடிச்ச ஜாதிமல்லி தொடுத்து வச்சிருக்கேன். கொடுத்துடறியா?

    எடுத்துவை. ம்... என்னமோ அவளை கொண்டு போய்த்தான் உருப்படாத பயலுக்கு கொடுத்துட்டேன். குடிகார பய. நல்லவேளை உனக்காவது நல்ல புள்ளையா அமைஞ்சது. சுதாகர் நல்லா படிச்ச புள்ளை’ எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. உன்னைக் கண்கலங்காம வச்சு காப்பாத்துவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

    தேவசேனாவின் மனதில் சுதாகர் வந்து நின்றான். கவர்ச்சியாக சிரித்தான்.

    நெஞ்சுக்குள் அவன் சிரித்தது அவளுடைய முகத்தில் நாணமாக பிரதிபலித்தது.

    தலையைக் கவிழ்த்துக் கொண்டு தன் நாணத்தை அண்ணன் காணாதவாறு மறைத்தாள்.

    தங்கையின் நாணத்தைக் கவனிக்காத வரதன் நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றினான்.

    "ம்... உன் அக்காவைப் பத்தித்தான் எனக்கு கவலை குடிகாரனுக்கு கட்டி வச்சுட்டமேன்னு குற்ற உணர்வா இருக்கு. நீதான் அவளை அடிக்கடி போய் பார்த்துக்கணும் என்றான். சாப்பிட்டு முடித்து கிளம்பினான்.

    சரிம்மா நான் போயிட்டு வர்றேன். நீ பத்திரமா இரு

    சரிண்ணா , சீக்கிரம் வந்திடு. பையில் ஜாதிமல்லி எடுத்து வச்சிருக்கேன். மறக்காம கொடு.

    அண்ணனை வழியனுப்பிவிட்டு அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேவசேனா.

    2

    பல்லவி துணிகளுக்கு சோப்பு போட்டுக் கொண் டிருந்தபோது அழைப்பு மணி ஒலித்தது.

    எழுந்து சோப்பு நுரையுடன் இருந்த கைகளை கழுவிக் கொண்டு சேலைத் தலைப்பால் துடைத்தவாறே வந்தாள்.

    கதவைத் திறந்து பார்த்தாள்.

    "வரதன் புன்னகையுடன் நின்றிருந்தான்.

    அண்ணனைக் கண்டதும் அவளுடைய முகம் பூவாய் மலர்ந்த து.

    அண்ணா... வாண்ணா ஆவலுடன் வரவேற்றாள்.

    வரதன் உள்ளே வந்தான்.

    உள்ளே வந்த பல்லவி, உட்காருண்ணா என இருக்கையை எடுத்துப் போட்டாள்.

    எப்படிம்மா இருக்கே? நலம் விசாரித்தபடியே அமர்ந்தான் வரதன்.

    ம்... நல்லா இருக்கேண்ணா’ நீ எப்படி இருக்கே? தேவசேனா எப்படி இருக்கா?

    எங்களுக்கு என்ன நல்லாத்தான் இருக்கோம். இந்தா... தேவசேனா உனக்காக ஜாதிமல்லி கொடுத்தனுப்பினா... பையிலிருந்து ஜாதிமல்லி சரத்தையும், வாங்கி வந்த பழங்களையும் எடுத்து நீட்டினான். ஆசையுடன் வாங்கிக் கொண்டாள்.

    எங்க மாப்பிள்ளையைக் காணோம்? கடைக்குப் போயிருக்காரா? என்றான்.

    அவர் எங்கே கடைக்குப் போறார்? எங்கயாவது சாராயக்கடையில் போய் உட்கார்ந்துக்கிட்டிருப்பார்.

    இப்படியே இருந்தா என்னம்மா அர்த்தம்? நீ திருத்தக்கூடாதா?

    ஜென்மத்துல பொறந்ததை செருப்பால அடிச்சாக்கூட போகாதுண்ணா...

    என்னமோ போ... உன் கொழுந்தன் கண்ணும் கருத்துமா கடையைப் பார்க்குறார். நாளைக்கு பங்கு பாகம்னு வரும்போதுதானே தெரியும். நான்தானே பாடுபட்டேன். எனக்குத்தான் எல்லாம்னு எல்லாத்தையும் அவரே எடுத்துக்கப் போறார்.

    "என்னை என்னண்ணாபண்ணச் சொல்றே? எல்லாம் என் தலையெழுத்து. நல்ல மாப்பிள்ளைன்னுதான்

    Enjoying the preview?
    Page 1 of 1