Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சினேகிதனே...
சினேகிதனே...
சினேகிதனே...
Ebook122 pages42 minutes

சினேகிதனே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளவழகன்...!
பிரபலமான ஓவியன். குறுகிய காலத்தில் பெரிய சாம்ராஜ்ஜியத்தை வளைத்துப் போட்டு ஆட்சி செய்பவன்.
பத்திரிகையுலகில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி ஓவியன். மிகப் பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டவன். அவனுடைய தூரிகையில் தோன்றும் ஒவ்வொரு உருவமும் உயிரோவியம். பல பத்திரிகைகளின் அட்டைப் படத்தை அலங்கரிப்பது அவனுடைய கைவண்ணம்தான்.
கண்களைக் கட்டிப்போட்டு சிந்தனையை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தும் சக்தி அவனுடைய ஓவியங்களுக்கு உண்டு. அவனுடைய கற்பனையில் உருவாகும் ஓவியப் பெண்ணின் அழகைக் கண்டு அதைப் போன்ற பெண் கிடைக்கமாட்டாளா என ஏங்கும் காளையர்கள் அதிகம். பல பத்திரிகைகள் அவனுடைய அட்டைப் படத்திற்காகவே விற்கும்.
புகழின் உச்சியில் இருக்கும் இளவழகனிடமா இவள் அம்மாவின் படத்தை வரையலாம் என்கிறாள்.
யமுனா ஷோபாவை அசைத்தாள்.
“என்னடி... மலைச்சுப் போய் நிக்கறே?”
“ஏய்... இளவழகன்கிட்ட அம்மாவை வரையறதா? நடக்குமாடி இது?”
“ஏன் நடக்காது?” எதிர்க் கேள்வி கேட்டாள் யமுனா.
“இளவழகன் எவ்வளவு பெரிய ஓவியர். புகழின் உச்சியில் இருக்கிறவர். ரொம்ப பிஸியான ஆள். அப்படிப்பட்டவர் இப்படி நம்மை மாதிரி ஆளுங்களுக்கு வரைஞ்சு தருவாரா? அவருக்கு பத்திரிகைகளுக்கு வரையவே நேரம் இருக்காது. நமக்கு வரைஞ்சு தருவாரா?” என்றாள்.
“அதைப்பத்தி நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன்.“இதுக்கு முன்னாடி இளவழகனை நீ சந்திச்சிருக்கியா?”
“இல்லை. நான் அவரோட ரசிகை. அவ்வளவுதான்.”
“நீ அவரோட தீவிர ரசிகைங்கறதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே. இளவழகன் வரைஞ்ச படம் உள்ள காகிதம் ரோட்ல கிடந்தாக்கூட ரசிகை நீ. ஏன்டி... இப்படி செய்தா என்ன?”
“எப்படி?”
“ஊர்ல என்ன ஓவியர்களா இல்லை? நாம ஏன் வீணா அவருக்குத் தொந்தரவு தரணும்? வேற ஒருத்தர்கிட்ட அம்மாவோட படத்தை வரைஞ்சிடுவோம்.”
“நோ! உங்க அம்மா ரொம்ப அழகானவங்க. அவங்களோட அழகை இளவழகனோட தூரிகையில் பார்க்கணும். அதுதான் என் ஆசை. நாம வீட்டுக்குப் போறோம்...” யமுனா உறுதியாகச் சொன்னாள்.
“எனக்கென்னவோ நீ இளவழகனைப் பார்க்கிறதுக்கு இதை ஒரு சாக்கா வைச்சிருக்கிறேன்னு தோணுது” என்றாள் ஷோபா.
யமுனா புருவத்தை உயர்த்தி சிரித்தாள்.
“அப்படித்தான் வைச்சுக்கயேன்.”
“ஏய்... ஏய்... என்னவோ இருக்கு? என்ன காதலா இளவழகனைக் காதலிக்கிறியா?”
“பிரபலமா இருக்கிறவங்க மேல் யாருக்குமே ஒரு ஈர்ப்பு இருக்கும். இது இயற்கை. அதுவும் கலைஞர்கள்ன்னா அவங்க மேலே கொஞ்சம் அதிகமாகவே ஈர்ப்பு இருக்கும். அந்த மாதிரியான ஒரு ஈர்ப்புதான் இது. அதைப் போய் காதல் கீதல்னு...”
“ஏன் இருக்கக்கூடாதா? காதலிச்சா தப்பா? உனக்கு அப்படியெல்லாம் எண்ணம் இல்லைன்னா சொல்லு. நான் வேணும்னா அவரைக் காதலிச்சுட்டுப் போறேன்.”
இதைக் கேட்டு யமுனா வாய்விட்டு சிரித்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
சினேகிதனே...

Read more from ஆர்.சுமதி

Related to சினேகிதனே...

Related ebooks

Reviews for சினேகிதனே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சினேகிதனே... - ஆர்.சுமதி

    1

    மணி எப்பொழுது ஒலிக்கும் வகுப்பு எப்படா முடியும் என அலுத்துக் கொண்டாள் ஷோபா. கடைசி வகுப்பு எப்பொழுதும் போர். அதிலும் இந்த சூர்யா மேடம் வந்துவிட்டால் இன்னும் அறுத்து எடுத்துவிடுவாள்.

    இந்த உலகத்தின் மூலை முடுக்குகளில் கிடைக்கும் கன்னாபின்னா செடிகளின் தாவரவியல் பெயரைக் கேட்டு உயிரை வாங்கிக் கொண்டிருந்தாள். கேட்டுச் சொல்லாத பெண்களை இஷ்டத்திற்கு திட்டிக் கொண்டிருந்தாள். தன்னை ஏதும் கேட்டுவிடக்கூடாதே என மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் ஷோபா.

    அவளுடைய வேண்டுதல் பலித்ததைப்போல் மணி ஒலித்தது. புத்தகங்களை அடுக்கிக் கொண்டு எல்லா மாணவிகளும் எழுந்தனர்.

    சூர்யா மேடம் கையிலிருந்த சாக்பீஸை கடுப்பாகத் தூக்கி போட்டுவிட்டு புத்தகத்தைப் பட்டென்று மூடி விட்டு உயர்த்திப் போட்ட கொண்டையை சரி செய்தபடி வெளியேறினாள்.

    ஷோபா யமுனாவின் பக்கம் திரும்பினாள். பிசாசு போயிட்டு... வந்தமா படத்தை நடத்தினமா போனமான்னு இல்லை. இதை யாரு கேள்வியெல்லாம் கேட்கச் சொன்னது. வாடி முதல்லே. இன்னும் ரெண்டு நிமிடம் உட்கார்ந்திருந்தாகூட எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும்... இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. சீக்கிரம் வாடி என்றாள் ஷோபா.

    ஷோபா அழகாக இருந்தாள். கவர்ச்சியான விழிகள். கனி போன்ற இதழ்கள் முறையாய் செதுக்கிய மூக்கு, முத்துப் பல்வரிசை மொத்தத்தில் முழுமதியாய் முகம், வளர்ந்த கூந்தல் தளர்ந்த தரையைத் தொடட்டுமா எனத் தொங்கியது. அடர்ந்த நீளத்தில் வெள்ளை நூலால் வேலைப்பாடு செய்யப்பட்ட சுடிதார் சிக்கென்றிருந்தது. என்னடி... ரொம்பத்தான் அழுத்துக்கறே? அப்படி என்ன உனக்கு முக்கியமான வேலை இருக்கப் போகுது. ஐஸ்கிரீம் சாப்பிடுவே அதானே...

    இல்லை. வெளியே வா என தோழியை இழுத்துக் கொண்டு நடந்தாள் ஷோபா.

    இருவரும் வெளியே வந்து ‘சில்’லென்ற வெளிக்காற்றை சுவாசித்தனர். கற்பொழுக்கம் கெட்டுப்போன காற்று இரு பெண்களையும் தீண்டி விளையாடியது.

    இருவரும் இணைந்து நடந்தபோது யமுனா ஷோபாவின் அழகைப் பின்னுக்குத் தள்ளினாள். அழகாக வடிவமைக்கப்பட்டதைப் போன்ற தேகம், வெண்ணெயின் வழவழப்பில் செழித்திருந்தது. களையான அந்த முகம் விழியிரண்டும் காதலை ஏற்படுத்தும் வழிகள். இமைக்கும் அவளின் இமைகள் பிறரை இமைக்க மறக்கும். அந்த மூக்கின் அழகு பிறரின் மூச்சை ஒருகணம் திணற வைக்கும்.

    இதழ்கள் எந்த ஆடவனின் இதயத் துடிப்பையும் அதிகப்படுத்தும்.

    இரு மின்னல்கள் வானிலிருந்து இறங்கி நடப்பதைப் போலிருந்தது அவர்கள் நடந்து செல்வது.

    என்னடி... முக்கியமான வேலை?

    நாம ஷாப்பிங் போறோம்?

    என்ன வாங்க?

    நல்ல அழகான பரிசுப் பொருள் ஒண்ணு வாங்கணும்? என்ன வாங்கலாம்னு சொல்லு.

    எதுக்கு? யாருக்காவது கல்யாணமா?

    இல்லை. பிறந்தநாள்.

    யாருக்குன்னு சொல்லு.

    யாருக்குன்னு சொன்னாதான் வாங்குவியா?

    நீ யாருக்குன்னு சொன்னா அவங்களோட டெஸ்டுக்கு தகுந்த மாதிரி நாம செலக்ட் பண்ணலாமே?

    எங்க டாடிக்கு.

    வாவ்! உங்க டாடியோட பிறந்த நாளுக்கா? என்னைக்கு உங்க டாடிக்கு பிறந்த நாள்?

    வர்ற புதன்கிழமை.

    சரியா ஒருவாரம் இருக்கு.

    என்ன பிரசன்ட் பண்ணப் போறே?

    அதைத்தாண்டி உன்கிட்டே கேட்டேன்.

    ம்... உங்கப்பாவுக்கு என்ன பிடிக்கும்? அதைச் சொல்லு.

    இப்படி யமுனா கேட்டதும் ஷோபா திடீரென்று உணர்ச்சிவசப்பட்டதொரு நிலைக்கு சென்றாள். மார்போடு அணைத்திருந்த புத்தகங்களை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

    எங்கப்பாவுக்கு என்னையும் எங்க அம்மாவையும் தன ரொம்ப பிடிக்கு. அவரோட சந்தோசமே நாங்க ரெண்டுபேரும்தான். எங்க ரெண்டு பேர் மேலயும் எங்கப்பா உயிரை வைச்சிருக்கார். இப்ப நான் மட்டும்தான் இருக்கேன். பச்! எங்கம்மா இப்ப இல்லை.

    திடீரென அவர்களுடைய கலகலப்பான பேச்சு தடைபட்டு ஒரு மெல்லிய மவுனம் நிலவியது.

    யமுனா நிமிர்ந்து ஷோபாவின் விழிகளை கவனித்தாள். அழகான அவளுடைய இமைகள் ஈரத்தால் நனைந்திருந்தன.

    ஷோபா... உங்கம்மா சின்ன வயசுலேயே செத்துட்டாங்களா?

    ஆமா! எனக்கு எட்டு வயசாயிருக்கும்போதே எங்கம்மா செத்துட்டாங்க.

    எப்படி?

    எங்கம்மாவுக்கு ரெண்டாவது குழந்தை பிறந்தபோது டெலிவரி பிரச்சினையாகி செத்துட்டாங்க. குழந்தையும் செத்துட்டு, எங்கப்பா எனக்காக இன்னொரு கல்யாணமே செய்துக்கலை.

    யமுனாவின் மனம் நெகிழ்ந்தது.

    "ஷோபா... உங்கப்பா ரொம்ப கிரேட். இந்தக் காலத்துலே கட்டின பொண்டாட்டி இருக்கும்போதே

    இன்னொருத்தியை வைச்சிக்கிறாங்க... பொண்டாட்டி செத்தும் அதுவும் சின்ன வயசுல செத்துப் போயும் உங்க அப்பா இன்னைக்கு வரை இப்படி இருக்கார்னா உண்மையிலேயே உங்கப்பாவைப் பாராட்டணும்."

    யமுனாவின் வாயால் அப்பாவை பற்றிய பாராட்டுரையை கேட்டதும் ஷோபாவின் மனதில் அப்பாவின் மீதிருந்த பாசம் இன்னும் அதிகரித்தது.

    ஆமாண்டி! எங்கப்பா கிரேட்தான். அவரை மாதிரி சில நல்லமனிதர் கிடையாது. என்மேல் அவருக்கு உயிர். அவருக்கு எல்லாமே நான்தான். எனக்காக அவர் தன்னோட வாழ்க்கையை தியாகம் பண்ணியிருக்கார். அதனால் அவரோட பிறந்த நாளுக்கு அவருக்கு பிடிச்ச மாதிரி பிரசன்ட பண்ணனும்.

    ம்... உங்கப்பாவுக்கு நீயும் உன் அம்மாவும்தான் உயிர்ன்னு சொன்னே. நீ அவர் பக்கத்திலேயே இருக்கே. உங்க அம்மாதான் இல்லை. பிறந்தநாள் பரிசா உங்க அம்மாவையே உங்க அப்பாவுக்கு கொடுத்திட்டா?

    என்னடி... கிண்டலா? செத்தவங்களை உயிரா கொண்டுவரப் போறியா?

    உயிரா கொண்டுவர முடியாது. உயிரோவியமா கொண்டுவரப் போறேன்.

    எங்கம்மாவை ஓவியமா வரைஞ்சு அப்பாவுக்கு பரிசளிக்கலாம்கிரியா?

    எஸ்...

    சூப்பர் ஐடியா! அப்பா, அம்மாவை ஓவியமா பார்த்ததும் அப்படியே சொக்கிப் போயிடுவார். ஆமா... யார்கிட்ட அம்மாவை வரையறது?

    பிரபல ஓவியர் இளவழகன்கிட்ட.

    இதைக் கேட்டு திகைத்து விழி விரித்தாள் ஷோபா.

    ‘இளவழகன் கிட்டயா?’

    2

    இளவழகன்...!

    பிரபலமான ஓவியன். குறுகிய காலத்தில் பெரிய சாம்ராஜ்ஜியத்தை வளைத்துப் போட்டு ஆட்சி செய்பவன்.

    பத்திரிகையுலகில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி ஓவியன். மிகப் பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டவன். அவனுடைய தூரிகையில் தோன்றும் ஒவ்வொரு உருவமும் உயிரோவியம். பல பத்திரிகைகளின் அட்டைப் படத்தை அலங்கரிப்பது அவனுடைய கைவண்ணம்தான்.

    கண்களைக் கட்டிப்போட்டு சிந்தனையை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தும் சக்தி அவனுடைய ஓவியங்களுக்கு உண்டு. அவனுடைய கற்பனையில் உருவாகும் ஓவியப் பெண்ணின் அழகைக் கண்டு அதைப் போன்ற பெண் கிடைக்கமாட்டாளா என ஏங்கும் காளையர்கள் அதிகம். பல பத்திரிகைகள் அவனுடைய அட்டைப் படத்திற்காகவே விற்கும்.

    புகழின் உச்சியில் இருக்கும் இளவழகனிடமா

    Enjoying the preview?
    Page 1 of 1